Member
- Messages
- 60
- Reaction score
- 2
- Points
- 8
"நான் சொல்றது கொஞ்சம் நம்ப முடியாத மாதிரிதான் இருக்கும்...ஒரு தடவ நம்ம நிழலை பார்த்துவிட்டால் நம்ம இறந்து போறதுக்கு சமம்...."என முகில் கூற,
"நம்ம உடனே மித்ராவை எச்சரிக்கனும்....நிழல் ஒரு வேளை கட்டுக்கதை இல்லாம உண்மையா நம்மள கொல்ல வரும்னா அவ இப்போ ஆபத்துல இருக்கா....அவ அவளோட நிழலை பார்த்து இருக்கா....அன்னைக்கு சொன்னா....நாங்க நம்பல.... ஆனால் இப்போ இந்த வீடியோ பார்த்த பின்னாடி நம்பிக்கை வருது....வா அவ வீட்டுக்கு போகலாம்..."என வள்ளி பதற்றத்துடன் கூறி முகிலின் கையை பிடித்து இழுக்க,
முகில் நடக்கமால் நிற்கிறான்.
"ஆனால்....இப்போ நம்ம அங்க போனால் வள்ளி ஆபத்துல மாட்டிக்குவா....முதல் தடவை இவளை இவளோட நிழல் கொண்ணுச்சு...."என முகில் மனதினுள் நினைத்து கொண்டு ஏதோ ஒரு முடிவு எடுத்தவனாய் நிமிர்ந்து வள்ளியின் முகத்தை பார்த்து,
"நான் மட்டும் தனியா போறேன்...அது ரொம்ப ஆபத்து..."என முகில் கூறுகிறான்.
முகில் அங்கே இருந்து கிளம்பி மித்ரா மளிகை கடைக்கு சென்று பார்க்கிறான். கடையின் கதவினை பார்த்து கொண்டு தன் நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்தபடி தன் கையில் உள்ள கைகடிகாரத்தில் மணியை பார்த்து விட்டு,"கடை இன்னும் திறக்கவில்லை...இது சரியா தோணலை....எதுவும் மாறாதது மாதிரி எனக்கு தோணுது...."என முகில் யோசிக்க,
"ஹேய் முகில்...."என ஒரு குரல் கேட்க, முகில் திரும்பி பார்க்க அந்த ஊரில் உள்ள ஒரு வயதான பெண்மணி நிற்கிறாள்.
"ஓ....சந்தீப் இறந்தது என்னால இன்னும் நம்ப முடியல..."என அந்த பெண்மணி கூற,
"ஆமா...."என முகில் கூற,
"இங்க எந்த கடையும் இல்லை....மித்ரா கடை எப்போதும் சீக்கிரம் திறப்பாங்க...இன்னைக்கு நேரம் ஆகியும் இன்னும் திறக்கல...."என அவர்கள் கூற,
"நான் இங்க பொருள் வாங்க வந்தேன்..."என முகில் கூற,
"சரி மேல போய் வீட்டை பார்ப்போம்..."என அந்த பெண் கூறி கொண்டு மாடிப்படி ஏறி வீடு கதவின் முன் நின்று காலிங் பெல்லை அழுத்துகிறாள்.
"ஹே...யாராச்சும் இருக்கீங்களா..."என அவள் அழுத்தியபடி கதவை தட்ட கதவு திறந்து கொள்கிறது.
"வீட்டு கதவு கூட மூடாமல் எங்கே போய்ட்டாங்க..."என முணுமுணுத்தபடி உள்ளே நுழைய,
"உள்ளே போலமா...யாரும் ஒன்னும் சொல்லமாட்டாங்களா...."என முகில் கேட்க,
"இல்லை....அது ஒன்னும் பிரச்சினை இல்லை..."என உள்ளே சென்று பார்க்க ஒரு மேசையின் மீது உணவு சாப்பிட்டு கொண்டு இருப்பது போல பொருள்கள் இருக்க பக்கத்தில் ஒரு ஓரத்தில் டீவி ஓடி கொண்டு இருந்தது.
"பாரு டீவி கூட ஆஃப் பண்ணல..."என கூறி கொண்டே அந்த பெண் உள்ளே சென்று ஆட்களை தேட,
முகில் வெளியே நின்று சுற்றும் முற்றும் பார்த்து கொண்டு இருக்கிறான்.
பார்த்து கொண்டு இருந்த முகில் திடீரென டீவியை பார்த்து அதிர்ச்சி அடைகிறான்.
டீவி யின் முன்னே மனித உருவத்தில் எதையோ எரித்தது போன்ற அச்சு இருக்க,
"நிழல்....இதை நிழல்தான் செஞ்சு இருக்கணும்....விஜயின் நிழல் விஜய்க்கு இதுதான் செஞ்சது...."என மனதினுள் நினைத்தபடி திரும்பி சோபாவை பார்க்க, அமரும் சோபா மீதும் ஏதோ மனிதனை எரித்தது போன்ற கருப்பு நிற அச்சு அதில் இருந்தது.
"இதுங்க எல்லாம் என்னது...எப்படி உருவாச்சு....ஒன்னும் தெரியல....மறுபடியும் நான் இதுங்க கிட்ட மாட்ட கூடாது...நான் இப்போ இது சம்மந்தபட்ட எல்லாரையும் எச்சரிச்சு என்ன நடக்குதுன்னு பாக்கணும்...."என முகில் மனதினும் நினைத்தபடி உணவு பாத்திரத்தின் மீது கை வைக்க அது இன்னும் சூடாக இருந்தது.
"சாப்பாடு இன்னும் லேசா சூடா இருக்கு....நேத்து நைட்டு இல்லன்னா இன்னைக்கு விடியற்காலைல தாக்கப்பட்டு இருக்கணும்..."என முகில் யோசித்தபடி கீழே குனிந்து பார்க்க, அந்த அச்சு சற்று லேசாக ஆழமாக இருந்தது.
"யாரோ ரொம்ப பலமா தாக்கி இருக்காங்க..."என சுற்றி இருந்த சிறு சிறு மீறல்களை கவனிக்கிறான் முகில்.
"இங்க என்ன நடந்தது ஒன்னும் தெரியலை...."என எண்ணி கொண்டே,"நான் மாடிக்கு போய் பார்க்கிறேன்..."என முகில் கூறி கொண்டு படியின் மீது ஏற,"சரி பாரு..."என அந்த பெண் கூறுகிறாள்.
முகில் மாடிப்படி ஏறி கொண்டு இருக்க,"அந்த ரெண்டு அச்சு சைஸ் பார்க்கும் போது அது கண்டிப்பா பெரியவங்களோட அச்சு மாதிரி இருக்கு...ஒருவேளை மித்ராவோட அப்பா அம்மாவா இருக்கலாம்...அப்படி இருந்தா இப்போ மித்ரா எங்க..."என நினைத்தபடி முகில் மாடியின் மீது ஏறி சுற்றும் முற்றும் பார்க்க சட்டென கேமரா ஒளி போல வர முகில் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறான்.
"ஹே..."என மித்ராவின் குரல் கேட்க,
"அப்போ இதுதான் நடந்து இருக்கும் போல...இந்த தடவை சந்தீப் இழவு அப்போ மித்ராகிட்ட உன்னை மாதிரியே யாரையும் பார்த்தியான்னு கேட்டோம்..."என முகில் நினைத்தபடி நிற்க,
"எதுக்கு நேத்து என்கிட்ட அப்படி கேட்டீங்க...?"என மித்ரா கேட்க முகில் மெதுவாக திரும்பி மித்ராவை பார்க்கிறான்.
"என் முகத்துல ஏதாச்சும் வித்தியாசம் தெரியுதா....இல்லை என் உடம்புல ஏதாச்சும் வித்தியாசம் தெரியுதா...??"என மித்ரா கேட்க,
"இதுல சந்தேகமே இல்லை....இது கண்டிப்பா மித்ரா இல்லை...அவளோட நிழக்தான்....அன்னைக்கு சந்தீப் இழவுக்கு வந்தது கூட மித்ரா இல்லை.... நிழல்தான்..."என முகில் மனதினுள் நினைத்தபடி,
"உன்னோட.... வாய்ஸ்....மறுபடியும் கேட்குது.....இப்போ உனக்கு பரவால்லையா....?"என முகில் சமாளித்தபடி கேட்க,
"என்னடா கேள்வி இது இப்படி கேக்கறே..."என முகில் மனதினுள் நினைத்தபடி பார்க்க,
"ம்ம்....அம்மாவும் அப்பாவும் எதை பத்தியும் யார்கிட்டேயும் சொல்ல கூடாதுன்னு சொல்லி இருக்காங்க...அதுனால் நான் பதில் சொல்ல மாட்டேன்..."என மித்ரா கூற கூற அவளின் முகம் திடீரென மாறி கருமையான உருவத்திற்கு மாறி உயரமாக மாறுகிறாள். 10 அடி கொண்ட ஒரு விகாரமான கருமை தோற்றத்தில் மித்ரா முகில் முன்னே நிற்க,
"போச்சு....எனக்கு இப்போ நிழல் நோய் வர போகுது....இல்லை இது நேத்து இழவுல இருக்கும் போது வந்த ஒளி அதுவும் மித்ராதான்..."என முகில் அதிர்ச்சியில் பார்த்து கொண்டு இருக்க,
"முகில்...."என அழைத்தபடி கீழே இருந்து அந்த பெண்மணி மேழே வர,
மித்ராவின் நிழல் மறைகிறது.
"யாராச்சும் இருந்தாங்களா...."என அவள் கேட்க,
முகில் திரும்பி பார்க்க மித்ரா அங்கே இல்லை ஒரு கதவு மட்டும் லேசாக திறந்து காற்றில் ஆடி கொண்டு இருந்தது. முகில் பயத்துடன் அந்த கதவை எட்டி பார்க்க ஜன்னல் திறந்து இருந்தது.
"என்னாச்சு....ஏதாச்சும் பிரச்சினையா..."என அவள் கேட்க,
"இல்லை...."என முகில் கூற,"நல்ல வேளை பிழைத்தோம்..."என முகில் மனதினுள் எண்ணி கொள்கிறான்.
முகில் தனது முகத்தில் வடிந்த வியர்வையை துடைத்தபடி அந்த வீட்டை விட்டு வெளிய நடந்து வருகிறான். அந்த பெண்மணி காவல் துறையிடம் சென்று மித்ரா வீட்டில் யாரும் இல்லை என்பதை கூறுகிறாள்.
"இப்போ நம்ம ஒன்னும் பண்ணாம விட்டால் முதல் தடவை நடந்தது மாதிரி வள்ளியை கொல்லுவாங்க...அன்னைக்கு நான் காட்டுக்குள்ள பார்த்த அந்த பொண்ணுக்கு ஏதாச்சும் தெரியும் இதை பத்தி....அந்த பொண்ணுதான் பஸ்ல வரப்போ என்னை அடிச்ச பொன்னு...முதல் தடவை கோயில் போகும் போது அவதான் இறக்கர மாதிரி உயிருக்கு போரடிட்டு இருந்தா....இப்போ நம்ம அவளை காப்பாத்தினால் ஏதாச்சும் நமக்கு தெரிய வரும்...ஆனால் அவ இப்போ எங்க இருப்பா...நான் இங்க வந்ததுல இருந்து அவளை பார்க்கலை...கடைசியாக பஸ் விட்டு இறங்கி வரும் பொது பார்த்தேன்...அவ பெரிய சூட்கேஸ் வச்சு இருந்தா....கண்டிப்பா அவ ரொம்ப நாள் தங்கற மாறி இருப்பா...இந்த ஊருல இருக்க எல்லா ஹோட்டல் செக் பண்ணி பார்க்கணும்..."என முகில் மனதினுள் எண்ணி கொண்டே அந்த ஊரில் உள்ள எல்லா ஹோட்டல் செல்கிறான்.
"பொண்ணா..."
"ஆமா....அவ கண்ணாடி போட்டு இருந்தா..."என முகில் விசாரிக்க,
"அந்த பொண்ணா....ஆமா இங்க வந்தா...."என அந்த ஹோட்டல் மேனேஜர் கூற,
முதல் முறை வந்த போது இவர் முகிலிடன் முகில் விசாரித்ததாக கூறியது நினைவிற்கு வருகிறது.
"ஆனால் அந்த பொண்ணு நைட்டு எல்லாம் தங்கல...காலைல வந்தா...அப்புறம் அப்போவே கிளம்பிட்டா...எங்க போனா ஒன்னும் தெரியல..."என அவர் கூற,
முகில் வேறு வழியின்றி வெளியே வருகிறான்.
"கடைசில எங்க தேடியும் அந்த பொண்ணை காணோம்...ஒருவேளை தனியா என்னால தேட முடியல போல..."என முகில் நினைத்தபடி தனது உணவு விடுதிக்கு செல்கிறான்.
"முகில்...."என வள்ளி பார்க்க முகில் சோர்வுடன் நிற்கிறான்.
"முகில் மித்ரா எப்படி இருக்கா....அவளுக்கு என்னாச்சு...."என வள்ளி கேட்க,
"அதுவா...."என முகில் கூற,
"ஸ்ஹாப்பா...."என சலிப்புடன் காவல் அதிகாரி விஜய் வருகிறார்.
"என்ன குளிர் இந்த நேரத்தில கூட...."என விஜய் திரும்ப முகில் நிற்க,
"ஆ....முகில்....நீ நேத்து நைட் எனக்கு ஃபோன் பண்ணி எதுக்கு பொய் சொன்ன.... ஏதோ சண்டை அது இதுன்னு...."என விஜய் கேட்க,
"இல்லை....அது ஒன்னுமில்லை..."என சமாளித்து விடுகிறான் முகில்.
"உங்களுக்கு ஒன்னு சொல்லவா...நம்ம சந்தீப் காப்பத்துன பொண்ணு மித்ரா இருக்கால்ல அவ குடும்பத்தோட காணாம போய்ட்டா..."என விஜய் கூற,
"அது உண்மையா முகில்"என பதற்றத்துடன் வள்ளி கேட்க,
"ஆமா....இரு....நீ அவங்க வீட்டுக்கு உள்ள போனதா அங்க போன பொம்பள சொன்னாங்க...."என விஜய் கேட்க,
"ஆமா..."என முகில் கூறுகிறான்.
"சரி அது பத்தி எனக்கு அப்புறமா சொல்லு..."என விஜய் கூற,
"அடடா நேத்து கூட நான் மித்ரா அப்பாகிட்ட பேசினேன்..."என வரதன் கூற,
"ஆமா கண்டுபிடிக்கனும்...."என விஜய் கூறுகிறார்.
"நல்ல வேளை விஜய் விஜய் மாதிரிதான் பேசறாரு...இவரை கொல்றதுல இருந்து ஒரு வழியா நம்ம இவரை காப்பாத்திட்டோம்..."என முகில் மனதினுள் எண்ணியபடி பார்க்க,
"முகில்....உனக்காக ஒன்னு கொண்டு வந்து இருக்கேன்..."என விஜய் தன் பேண்ட் பாக்கெட்டில் கை விட்டு ஒரு கைபேசியை எடுக்கிறார்.
"இந்தா....இதுதா சந்தீப் மொபைல்...சந்தீப் இறந்து போறதுக்கு முன்னாடி நாள் என்கிட்ட வந்து இதை என்னை வச்சுக்க சொன்னான்...அவனுக்கு ஏதாச்சும் ஆனா இதை உன்கிட்ட கொடுக்க சொன்னான்..."என விஜய் கூற,
"சந்தீப் கொடுக்க சொண்ணானா..."என முகில் அதை வாங்கி பார்க்க,
"ஒருவேளை சந்தீப் சாக போறான்னு அவனுக்கு முன்னாடியே தெரிஞ்சு இருக்கும் போல..."என விஜய் கூற,
முகில் கைபேசியை பார்த்தபடி,"இது இன்னும் குழப்பமா இருக்கு..."என எண்ணி கொள்கிறான்.
அப்பொழுது கதவை திறந்து கொண்டு ஒரு உருவம் முன்னே வர அனைவரும் திரும்பி பார்க்க சுரேஷ் வந்து நிற்கிறான்.
"என்னாச்சு முகில் திருதிருண்ணு முழிச்சிட்டு இருக்கீங்க...என்ன என்னை காலைல வர சொல்லி மெசேஜ் பண்ணி இருந்தே நேத்து மறந்துட்டாயா..."என சுரேஷ் கேட்க,
"இல்லை...."என முகில் கூறுகிறான்.
"இப்போ நான் நம்பற ஒரே ஆள் சுரேஷ்தான்...நடக்கிற எல்லா விஷயத்தையும் இவங்கிட்ட சொல்லலாம்"என முகில் மனதினுள் நினைக்கிறான்.
(தொடரும்.....)