Member
- Messages
- 60
- Reaction score
- 2
- Points
- 8
மூச்சிறைத்தபடி தண்ணீரில் இருந்து கையில் மித்ராவுடன் எழுந்து தன் விழிகள் விரித்தபடி ஆற்றின் கரையை பார்த்து கொண்டு இருந்தாள் வள்ளி.
"சீக்கிரம்... ஆம்புலன்ஸ் கூப்பிடுங்க...."என கத்தியபடி கையை சந்தீப்பின் நெஞ்சில் வைத்து அழுத்தியபடி கரையில் இருந்த சுரேஷ் சந்தீப்பின் இறந்த உடலிற்கு இயக்கம் கொடுக்க முயற்ச்சி செய்து கொண்டு இருந்தான்.
ஆற்றில் நின்று பார்த்து கொண்டு இருந்த வள்ளியை பார்த்தபடி முகில் வள்ளி பார்க்கும் திசையை நோக்கி பார்த்தான்.
"சுதா....போ....போய் யாராவது உதவிக்கு ஆள் இருந்தா கூட்டிட்டு வா..."என கூற,
சுரேஷின் அக்காவான சுதா "சரி "என கூறி கொண்டே ஓடுகிறாள்.
அவர்களை முகில் பார்த்து கொண்டு இருக்கும் பொழுதே, திடீரென கண்கள் இருள் சூழ "சந்தீப்... ப்... ப்...."என கத்தியபடி பக்கத்தில் கண்ணாடி அணிந்து இருந்த ஒரு பெண்ணின் மீது சாய்கிறான் முகில்.
நிமிர்ந்த முகிலை அந்த பெண் பளார் என்று அரைகிறாள்.
"ஐ ஆம் சாரி..."என முகில் கன்னத்தில் கை வைத்தபடி கூற,
"எதுக்கு சாஞ்சீங்க...எதுவும் கெட்ட கனவா...?"என அவள் கேட்க,
"கனவா...??"என முகில் கேட்டுகொண்டே அவள் முகத்தை பார்க்க, கோவில் காட்டிற்குள் துப்பாக்கி குண்டடி பட்டு உயிரிற்கு போராடி கொண்டு இருந்த அவளின் முகம் நினைவிற்கு வருகிறது.
"ம்ம்...ஒன்னு கேட்கவா...இதுக்கு முன்னாடி நீங்க துப்பாக்கில சுடு வாங்கிருக்கீங்களா...?"என முகில் கேட்க,
"என்னது..?அடிச்சதுல ஏதாச்சும் மூளை குழம்பிருச்சா...??"என அவள் கேட்க,
"ஆ...இல்லை...இல்லை...ஒன்னுமில்ல..."என முகில் கூறுகின்றான்.
"இந்த பொண்ணு இதுக்கு முன்னாடி என்னை அடிச்ச மாதிரியே இருக்கு..."என யோசித்து கொண்டு,"இல்லை...இல்லை...ஏதோ கெட்ட கனவு போல..."என எழுந்து தன் கையில் உள்ள கைபேசி எடுத்து பார்க்க அதில் டிசம்பர் 22 காலை 8:12 என இருந்தது.
"டிசம்பர் 22..?? இங்க என்ன நடக்குது....நானும் வள்ளியும் 23 தேதி கோவிலுக்கு போனோம்...வள்ளி கொலை செய்யப்பட்டா...அதுவும் இன்னொரு வள்ளியால...இல்லை...இல்லை... பைத்த்தியம் மாதிரி யோசிக்காத...அது ஏதாச்சும் கனவா இருக்கும்..."என மனதினில் நினைத்தபடி, தனது கைபேசியில் உள்ள கண்மணி என்னும் புத்தக பிடிஎப் திறக்கிறான்.
"கண்மணி எழுதிய கண்மணி என்னும் புத்தகம்...திகில் கதை இந்த கோபில நடக்கற மாதிரி... இதோட கை என்னன்னா ஒரு சின்ன பொண்ணு விசித்திரமாக நடந்து கொள்கிறாள்...அவளோட குடும்பத்துல இருக்கவங்க அவங்கள மாதிரி இருக்க தீய சக்தியா மாறுகிறார்கள்...நான் துங்கறதுக்கு முன்னாடி இத படிச்சேன்...அதுதான் கெட்ட கனவா வந்திருக்கும் போல..."என மனதினில் நினைத்தபடி பேருந்தில் இருந்து முகில் இறங்குகிறான்.
"ஆமா..."என தனது கைபேசியில் பேசி கொண்டே கண்ணாடி அணிந்த அந்த பெண் முகிலின் முன்னே நடந்து செல்கிறாள்.
"அமைதியா இரு முகில்...நான் என்னோட சொந்த ஊருக்கு ரெண்டு வருஷம் கழிச்சு வந்திருக்கேன் என் ஃப்ரெண்ட் சந்தீப் இழவுக்கு...எனக்கு என்னன்னு தெரியலை... ஏன்னு புரியல...இது எல்லாம் நேத்து நடந்த மாதிரி இருக்கு..."என நினைத்தபடி பேருந்து நிலையத்தில் நிற்க,
"ஹே....வாடா முகில்....இப்போதான் வர்றியா...."என வள்ளி பழைய ஸ்கூட்டியில் வருகிறாள்.
"வாய்ப்பே இல்லை....இது என்ன தேஜாவூ வா....??? என்ன நடக்குது இங்க..."என அதிர்ச்சியில் முகில் பார்த்து கொண்டு இருக்க,
"பயணம் எல்லாம் எப்டி இருந்துச்சு...??"என கேட்டுகொண்டே வேகமாக வந்து ப்ரேக் வேலை செய்யாமல் கீழே விழுகிறாள் வள்ளி.
"வள்ளி...அடுத்த தடவை ப்ரேக் போடு..."என கீழே விழுந்து கிடந்த வள்ளியை எழுப்பி அவளது ஸ்கூட்டியை எடுத்து நிறுத்துகிறான்.
"நான் ப்ரேக் போட்டேன்...ஆனா பிடிக்கல..."என எழுந்து வள்ளி நிற்க,
அவளது ஸ்கூட்டியை உற்று பார்க்க அவளது ஸ்கூட்டியை கையில் உள்ள ப்ரேக் அறுந்து இருப்பதை கவனிக்கிறான் முகில்.
அவர்கள் இருவரும் ஸ்கூட்டியில் இழவு வீட்டிற்கு செல்கிறார்கள்.
"எல்லாமே எனக்கு திரும்ப நடக்கிற மாதிரி இருக்கு...எல்லாருமே என் கனவுல வந்த மாதிரி இருக்காங்க..அவங்க பேசற வார்த்தைகள் கூட மாறல...."என மனதினில் நினைத்தபடி முகில் வீட்டிற்குள் நுழைகிறான்.
உள்ளே சென்று சந்தீப்பின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து கொண்டு இருப்பதை பார்த்ததும்,"இது தேஜாவூ இல்லை ஏதோ கனவு இல்லை....நான் மறுபடியும் எப்படியோ டிசம்பர் 22 வந்திருக்கேன்....என் தலையே வலிக்குது....என் கண்ணை என்னால நம்ப முடியல...இங்க என்ன நடக்குது சந்தீப்..."என முகில் புகைப்படத்தை பார்த்து யோசித்து கொண்டு இருக்க,
"அவன் கழுத்துல காயங்களை கண்டு பிடிச்சாங்க....யாரோ கழுத்தை நெரிச்சு கொன்ன மாதிரி..."என சுரேஷ் கூறிய வார்த்தைகள் முகிலின் மனதை ஆட்கொள்கிறது.
"உனக்கு உண்மைல என்ன நடந்துச்சு சந்தீப்...?"என முகில் மனதினில் நினைத்தபடி பார்க்க,
"உனக்கு ஒன்னு தெரியுமா டாக்டர் விமல்தான் சந்தீப்பை போஸ்ட்மொடர்ம் பன்னார்ரு..."
"போஸ்ட்மொடர்ம்...?? ஏன்...??"என பக்கத்தில் இருப்பவர்கள் பேசிக் கொள்வது முகிலின் செவியை எட்டியது.
அந்த நேரம் புகைப்படம் எடுப்பது போல் திடீர் என ஒளி வர முகில் திரும்பி பார்க்கிறான்.
"என்ன... மறுபடியுமா..??"என முகில் திரும்ப,
"எக்ஸ்யுஸ் மீ.... யார் அது....இங்க ஃபோட்டோ எல்லாம் எடுக்க கூடாது..."என அங்கே இருந்த ஒருவர் கூற,
முகில் திரும்பிய இடம் மித்ரா நின்று கொண்டு இருந்தாள்.
மித்ரா முகிலை வெறித்து பார்க்க,
"இது....மித்ரா.... சந்தீப் தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய சிறுமி...ஒருவேளை நான் உண்மையில் காலத்தில் பின்னோக்கி வந்து இருந்தா இவளோட மொத்த குடும்பமும் நாளைக்கு காணாமல் போய் இருக்கும்...இதே மாதிரி எல்லாம் நடந்துட்டே போனால்...."என முகில் அவளை பார்த்தபடி யோசித்து கொண்டு இருக்க,
"முகில்....ஒரு வழியா நீ வந்துட்டாயா..."என சுரேஷ் அவனை கட்டிபிடித்து அழுகிறான்.
"அப்படின்னா உண்மையில் நிழல்ன்னு சொல்ற அந்த ஒரு விஷயம் இருக்கும்..."என முகில் மனதினில் நினைத்தபடி சுரேஷை பார்க்கிறான்.
இரவு 7:45 மணி கடிகாரம் காட்ட சந்தீப்பின் உடலை நெருப்பிலிட்டுவிட்டு வீட்டிற்கு வந்து வள்ளி சமைக்க முகிலும் சந்தீப்பின் தந்தையான வரதனும் உணவருந்த அமர்ந்து இருக்கிறார்கள்.
"நீ ஒருவேளை நிழலை பார்த்தால் இறந்து போய்விடுவே...அப்படின்னு அந்த ராமு பெரியவர் சொன்னாரு....ஒருவேளை சந்தீப் நிழல் பார்த்ததால் இறந்து போய்ட்டானா...?"என முகில் யோசிக்க,
"முகில்..."என வரதன் கூப்பிடுகிறார்.
"என்னாச்சு முகில்...."என வள்ளி கேட்க,
"ஸாரி....ஒன்னும் ஆகலை...எனக்கு பசி இல்லை..."என கூறிவிட்டு அங்கிருந்து எழுந்து வீட்டின் மாடிக்கு செல்கிறான் முகில்.
"இன்னைக்கு காலைல வள்ளியோட ஸ்கூட்டி ப்ரேக் கட் ஆகி இருக்கு....யாரோ வேணும்னே கட் பண்ண மாதிரி....அதை யாராச்சும் வேணும்னே கட் பண்ணி இருந்தா....அவங்க வள்ளி சாகனும்னு நினைக்கிறாங்க....முடியல...ஒரே குழப்பமா இருக்கு...."என முகில் மனதினில் நினைத்தபடி மாடியில் உள்ள கம்பியின் மீது சாய்ந்து கீழே பார்க்க,
கீழே போலீஸ் அதிகாரி விஜய் நின்று கொண்டு இருக்கிறார்.
"என்னாச்சு வள்ளி....? உன்னோட வீட்டை நீயே எதுக்கு இப்படி உத்து பாத்துட்டு இருக்கே...?என்னாச்சு ஏதாச்சும் சண்டையா...?"என எதிரில் கல்லூரி உடையில் இருக்கும் வள்ளியை பார்த்தபடி விஜய் கேட்க, திரும்பி மர்மமாக சிரிக்கிறாள் வள்ளி.
"வள்ளி...."என மாடியின் மீது நின்று கொண்டு இருந்த முகில் அதிர்ச்சியடைகிறான்.
"இவ... உள்ளேதானே இருந்தா... எப்போ வெளிய வந்தா....அதுவும் காலேஜ் ட்ரெஸ்ல..."என முகில் பார்த்து கொண்டு இருக்கும் பொழுதே,
கல்லூரி உடை அணிந்து இருந்த வள்ளி விஜயின் அருகில் வந்து தன் கையில் உள்ள கத்தியை வைத்து விஜயின் கழுத்து பகுதியில் குத்தி வெட்டுகிறாள்.
கழுத்து பகுதியில் குத்தியதால் விஜயால் கத்த முடியாமல் போக, மேலும் கத்தியை எடுத்து சரமாரியாக குத்துகிறாள்.
மேலே இருந்து பார்த்து கொண்டு இருந்த முகில்,"இல்லை...இல்லை..."என மனதில் நினைத்தபடி பார்த்து கொண்டு இருக்க, குத்திய கத்தியை எடுத்து விஜயை பார்க்கிறாள் வள்ளி.
"இல்லை....இது வள்ளி இல்லை... வள்ளி உருவத்தில் இருக்கும் நிழல்..."என நினைத்தபடி முகில் மாடிகம்பியின் கீழே உள்ள தடுப்பு சுவரின் கீழே குனிந்து கொண்டு அவளை பார்க்கிறான்.
வள்ளி சிரித்தபடி திரும்பி வீட்டை பார்க்க முகில் அவள் பார்ப்பதற்கு முன்பே குனிந்து கொள்கிறான். அப்பொழுது ஃபோட்டோ எடுப்பது போன்ற ஒளி பளீரென வருகிறது ஒரு மணி துளிக்கு.
"என்ன...இது....அன்னைக்கு பார்த்த அதே வெளிச்சம்..."என முகில் மீண்டும் எட்டி பார்க்க, வள்ளியின் நிழலில் இருந்து ஒரு கருப்பு உருவம் எழுந்து மெதுவாக நிற்கிறது.
"என்னது...இது..."என மனதினில் நினைத்தபடி முகில் பார்க்க, அந்த கருப்பு உருவம் விலகி விஜயின் முகம் உருமாற்றம் அடைகிறது.
"இது...என்ன....இதுதான்....எல்லாரும் சொல்ற அந்த நிழலா....??"என பயத்தில் முகில் பார்க்க,
"சரி....வேலையை பார்ப்போம்.."என உருமாறிய விஜய் உருவம் இறந்து கிடக்கும் விஜயின் தலையில் கை வைத்து பார்க்க மீண்டும் வெளிச்சம் பரவுகிறது. அங்கே இருந்த விஜயின் இறந்த உடல் காணாமல் போகிறது.
"இனி நீதான் போலீஸ் விஜய்..."என கல்லூரி உடையில் இருக்கும் வள்ளி கூற,
"என் பெயர் விஜய்...34 வயது...இன்னும் கல்யாணம் ஆகலை...இன்னும் புரொமோஷன் கூட வரலை....சரியா....நீ பார்க்க ரொம்ப அழகா இருக்கே வள்ளி....."என விஜயின் நிழல் கூற,
"உன்னோட துப்பாக்கியை குடு..."என வள்ளி கேட்கிறாள்.
"என்ன..நீ இன்னும் வள்ளியோட இடத்துக்கு போகலையா....?"என விஜயின் நிழல் கேட்க,
"இல்லை...இன்னைக்கு காலைல முயற்ச்சி பண்ணேன்...ஆனால் தோத்துட்டேன்...ஒருவேளை அவ ஏதாச்சும் அடிபட்டு ஹாஸ்பிடல் அட்மிட் ஆனால் ஈஸியா இருக்கும்..."என வள்ளியின் நிழல் அவர்கள் இருக்கும் வீட்டை பார்த்தபடி கூறுகிறது.
"சரி... இந்தா நீ கேட்ட துப்பாக்கி..."என விஜயின் நிழல் கூறி அவளது கையில் துப்பாக்கியை கொடுக்கிறான்.
"இது இரவு நேரம்...இப்போ துப்பாக்கி சத்தம் கேட்டா எல்லாருக்கும் எல்லா விஷயமும் தெரிஞ்சுரும்....இது ஒன்னும் பாரின் இல்லை..."என வள்ளியின் நிழல் துப்பாக்கியை வாங்கியபடி கூற,
"அதுவும் சரிதான்..."என விஜயின் நிழல் கூற,
"நான் இப்போ எல்லாம் எப்படி போகுதுன்னு பாக்கறேன்..."என வீட்டை உற்று பார்க்கிறாள்.
முகில் அதை பார்த்துவிட்டு திரும்பி பெருமூச்சு விட்டபடி பயத்துடன்,"இல்லை...இது உண்மையா என்ன...?"என முகில் யோசிக்க அவனது கைபேசி திடீரென சத்தத்தை எழுப்புகிறது.
"ஓ....என்னோட ஃபோன்..."என எடுத்து பார்க்க, அதில் சுரேஷ் என திரையில் காட்டுகிறது. இரவு அழைப்பதாக இழவு வீட்டில் கூறியது நினைவிற்கு வர,
"இப்போ இல்லை...இப்போ வேணாம்..."என எண்ணியபடி முகில் திரும்ப, கீழே நின்று கொண்டு இருந்த வள்ளியின் நிழல் வேகமாக தாவி குத்தித்து கையில் கத்தியுடன் முகிலை நோக்கி வந்து தன் கையில் உள்ள கத்தியை வைத்து சிறிதும் தாமதிக்காமல் முகிலின் குரல்வளையை நோக்கி இறங்குகிறாள். முகில் திணறி தன் கையில் உள்ள கைபேசியை கீழே போட கத்தியை மீண்டும் வெளியே எடுத்து சரமாரியாக குத்துகிறாள்.
"நீ இங்க ஒளிஞ்சு எல்லாத்தையும் பார்த்துட்டயா முகில்..."என வள்ளியின் நிழல் பேச, வலி தாங்காமல் கழுத்தை பிடித்தபடி இரத்த வெள்ளத்தில் முகில் துடிதுடிக்கிறான்.
"பாவம்...இப்படி ஒளிந்து இருக்கும் போது ரொம்ப அமைதியா இருக்கணும் தெரியாதா முகில் உனக்கு...அதுக்கு இதுதான் உனக்கு தண்டனை..."என விஜயின் நிழல் கூறி கொண்டு, "இவனையும் நான் காபி பண்ணிக்கவா...?"என வள்ளியின் நிழலை பார்த்து விஜயின் நிழல் கேட்க,
"இல்லை...இல்லை...வேணாம்...இப்போ வேணாம்..."என வள்ளியின் நிழல் கூறுகிறது.
"இது என்னோட இரத்தமா....?? நான் சாக போறேனா....?? என்னால் என்னையே இப்போ பார்க்க முடியுது...."என முகில் உடலை விட்டு பிரிந்து அவனை பார்க்கிறான்.
"என்னது இது...?"என முகில் பார்க்க முகிலை ஏதோ ஒன்று இழுக்கிறது.
"முகில்..."என சந்தீப் குரல் கேட்க,
"சந்தீப்..."என முகில் கத்த,
"கவனமா இரு...அடுத்த....முறை...கண்டிப்பா....சத்தியம்...நிழல்...."என சந்தீப் குரல் சற்று விட்டு விட்டு கேட்க,
"எனக்கு கேக்கல..."என முகில் கூறுகிறான்.
"வள்ளியை பார்த்துக்கோ...."என சந்தீப்பின் உருவம் தெரிய திடீரென இருள் சூழ கண் விழிக்கிறான் முகில்.
தன் கையை எடுத்து தன் கழுத்தை தொட்டு பார்த்து கொண்டு வியர்க்க எங்கே இருக்கிறோம் என திரும்பிப் பார்க்கிறான் முகில்.
கோபி பேருந்து நிலையத்தில் நிற்க சுற்றும் முற்றும் பார்த்து விட்டு தன் கைபேசியை எடுத்து பார்க்க டிசம்பர் 22 காலை 8:30 என காட்டியது.
(தொடரும்......)