• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Time - 1

Member
Messages
60
Reaction score
2
Points
8
இரவு பொழிந்த பனித்துளிகள் எல்லாம் புல்லின் நுனியில் நீர் திவலைகளாக மாறி கொண்டு இருந்த காலை வேளையில் ஒரு பேருந்து ஒன்று ஈரோடு மாவட்டத்தில் இருந்து கோபிச்செட்டிப்பாளையத்தை நோக்கி விரைந்து கொண்டு இருந்தது.
பேருந்து இருக்கையில் அமர்ந்தபடி தனது கையில் உள்ள கைபேசியில் தற்பொழுது நேரம் என்ன என பார்க்க டிசம்பர் 22 காலை 8:07 என காட்ட அதை பார்த்து கொண்டு நிமிர்ந்தான் முகில்.
"டேய் முகில்..."என பக்கத்தில் உள்ள சந்தீப் கூற,
"என்ன..."என பார்க்க,
"உன் கண்ணை ஒரு நிமிஷம் மூடு..."என சந்தீப் கூறி கொண்டே முகிலின் கண்களை மூடுகிறான்.
"டேய் என்னடா பண்ற..."என முகில் கூற,
"ம்ம்...இப்போ திற..."என சந்தீப் கூற,
"என்னடா ஒன்னும் புரியல..." என முகில் விழிக்க,
"இதுதான் உன்னோட கிஃப்ட்..."என சந்தீப் கூறி கொண்டே எழுகிறான்.
"நீ எப்போ இங்க கடைசியாக வந்தே..."என சந்தீப் கேட்க,
"காலேஜ் முடிச்சுட்டு வந்தேன்...ஒரு ரெண்டு வருசம் இருக்கும்..."என முகில் கூற,
"நீ லீவ் நாளுல கூட வரல..."என சந்தீப் முறைக்க,
"ஓஹ்.... ஐ ஆம் சாரி..."என முகில் கூறுகிறான்.
"நம்ம ஃப்ரெண்ட்ஸ் எல்லார்கிட்டயும் பேசு வீட்டுக்கு போகும் போது..."என சந்தீப் கூறி கொண்டே நடக்க,
"என்னடா பேசிட்டு இருக்கே.. சந்தீப் நீயும் என்கூட வரேதானே..."என முகில் சந்தீப்பை பார்த்து கொண்டு இருக்கும் போதே,
"இல்லை முகில் என்னால உன்கூட வர முடியாது...முகில் நீ என்னை கண்டுபிடிச்சாகனும் சரியா..? மறந்து விடாதே...."என சந்தீப் கூறி கொண்டு அவன் கண் முன்னே இருந்து மறைய,
"என்ன....என்னை விட்டு போகாத...."என முகில் அலற,
"வள்ளியை பார்த்துக்கோ..."என சந்தீப் கூறிவிட்டு மறைகிறான்.
"இருடா போகாத....சந்தீப்.. ப்... ப்...."என முகில் அலறி கொண்டே இருக்கையில் இருந்து பக்கத்தில் நின்று கொண்டு இருந்த கண்ணாடி அணிந்து இருந்த ஒரு பெண்ணின் மீது சாய்கிறான்.
தூக்கத்தில் இருந்து எழுந்த முகில் அந்த பெண்ணிடம்,"அய்யோ...சாரி...தெரியாம விழுந்துட்டேன்..."என கூற,
கோவத்தில் இருந்த அந்த பெண் பளார் என்று முகிலின் கன்னத்தில் ஒன்று கொடுக்கிறாள்.
பேருந்து விரைந்து கோபியை நோக்கி சென்று கொண்டு இருந்தது.
"ஷோ....என்ன வித்யாசமான கனவு...இந்நேரம் இந்த கனவு என்னை பெரிய பிரச்சினைல மாட்டி விட்டு இருக்கும்..."என நினைத்து கொண்டே தன் கன்னத்தில் கை வைத்து கொண்டு இருக்கிறான் முகில்.
"அமைதியா இரு முகில்....அதுவும் இந்த டைம்ல அமைதியா இரு...இதுதான் ஒரு பொண்ணுகிட்ட முதல் முதலாக அடி வாங்கறது.."என நினைத்து கொண்டு இருக்கும் போதே,
அந்த பேருந்து கோபிச்செட்டிப்பாளையம் பேருந்து நிலையம் உள்ளே செல்கிறது.
"ஒரு வழியா வந்தாச்சு... ஈரோடுல இருந்து பஸ் பிடிச்சு வரதுக்குள்ள எவ்ளோ கஷ்டம்...எப்படியும் இங்க ஒரு 3000 பேர் மட்டும்தான் இருப்பாங்க...நான் பிறந்த ஊரு...வயல் மற்றும் விவசாயத்தை நம்பி இருக்கும் ஊரு...நான் இந்த ஊரை விட்டு போய் ரெண்டு வருசம் கழிச்சு இப்போதான் முதன் முறையாக வரேன்..."என நினைத்து கொண்டு பேருந்தில் இருந்து கீழே இறங்கி சுற்றும் முற்றும் பார்க்கிறான் முகில்.
"ஒரு வழியாக வந்தாச்சு...ரொம்ப நாள் கழிச்சு...என்னோட பெஸ்ட் பிரண்ட் சந்திப்பின் இழவுக்கு..."என முகில் முகத்தில் சோகத்துடன் பார்க்கிறான்.
தனது பையுடன் முகில் முன்னே நடக்க, "ஹே...."என ஒரு பெண்ணின் குரல் எங்கிருந்தோ கேட்க திரும்பி பார்க்கிறான் முகில்.
"ஹே....வாடா முகில்....இப்போதான் வர்றியா..."என பழைய ஸ்கூட்டியில் வருகிறாள் வள்ளி.
"வள்ளி...??"என முகில் குழப்பத்துடன் பார்க்க,
"பயணம் எல்லாம் எப்டி இருந்துச்சு..."என கேட்டு கொண்டு வேகமாக வந்து ப்ரேக் வேலை செய்யாமல் கீழே விழுகிறாள் வள்ளி.
"ஹே....என்னாச்சு வள்ளி உனக்கு..."என முகில் அவள் அருகே வந்து அவளை எழுப்பி ஸ்கூட்டியை எடுத்து நிறுத்துகிறான்.
"வள்ளி....சந்திப்பின் தங்கை...எனக்கு புரியுது... இவளால் சாதாரணமாக இருக்க முடியாது...இவளோட அன்ணன் இறந்து போய்ட்டான்....வள்ளியை பார்த்துக்கோ...."என கனவில் சந்தீப் கூறியது நினைவிற்கு வர,
"உனக்கு ஒன்னும் ஆகலைல..."என முகில் கேட்க,
வள்ளி நிமிர்ந்து,"இல்லை..."என கூறி கொண்டு எழுந்து ஸ்கூட்டியை அவனிடம் கொடுக்க,
முகில் அவள் ஸ்கூட்டியை வாங்கி ஓட்டுகிறான்...
"சென்னை எப்டி இருக்கு..."என வள்ளி கேட்க,
"அப்படியேதான் இருக்கு...நான் வெளிய எங்கேயும் போகமாட்டேன்..."என முகில் கூறுகிறான்.
"கடை எப்டி போகுது..."என முகில் கேட்க,
"இப்போல்லாம் கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருக்கு..."என வள்ளி திரும்பி பார்க்க,
அங்கே பேருந்தில் முகிலை அறைந்த பெண் தனது கைப்பேசியில்,"ஆமாம் நான் சரியாகத்தான் சொல்றேன்...அதை உங்க கூட எடுத்துட்டு வாங்க..."என யாரிடமோ பேசி கொண்டு இருக்கிறாள்.
அதை கவனிக்காமல் முகில் வண்டியை ஓட்ட,"ஆமா இப்போ ஹோட்டல் எல்லாம் கொஞ்சம் கூட்டமா இருக்கும்..."என முகில் கூற,
"அப்படி இல்லை...இப்போ எல்லாம் நிறைய வெளி ஆளுங்க வர்றாங்க...எல்லாமே புது முகங்களா இருக்கு...அது மட்டுமில்லாம இப்போ எல்லாம் நல்லா பேசி பழகுன ஆட்கள் எல்லாமே புது ஆட்கள் மாறி தோணுது..."என வள்ளி கூற,
"அப்படி இல்லை...இந்த தடவை மே பீ நிறைய பேர் வெளியூர்ல இருந்து சுத்தி பார்க்க வந்து இருக்கலாம்..."என முகில் கூறுகிறான்.
வள்ளியும் முகிலும் பேசி கொண்டே இழவு வீட்டிற்கு செல்கிறார்கள்.
உள்ளே சென்ற முகில் பார்க்க வீட்டின் உள்ளே சந்திப்பின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து கொண்டு இருக்கின்றார்கள்.
"என்னோட அப்பா அம்மா பத்து வருசத்துக்கு முன்னாடி இறந்த பிறகு, சந்தீப் அப்பாதான் என்னை எடுத்து வளத்தாங்க..அப்படி பார்த்தா சந்தீப் என்னோட நெருங்கிய நண்பர் அது மட்டுமில்லாம என்னோட அண்ணா மாறி... நான் இந்த ஊரை விட்டுட்டு போறதுக்கு முன்னாடி சந்தீப் நாள் சந்தீப் என்கிட்ட பிரியாணி செஞ்சு குடுக்க சொன்னான்...ஆனால் நான்தான் அடுத்த தடவை செஞ்சு தரேன்னு சொன்னேன்...ஆனால் அடுத்த தடவைன்னு இப்போ ஒன்னு இல்லை..."என சந்தீப்பின் புகைப்படத்தை முகில் பார்த்து கொண்டு இருக்க,
"இது அவனுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும்..."
"உனக்கு ஒன்னு தெரியுமா...டாக்டர் விமல்தான் சந்தீப்பை போஸ்ட்மொடர்ம் செஞ்சாரு..."
"போஸ்ட்மொடர்ம்...? ஏன்...?" என பக்கத்தில் பேசி கொண்டு இருப்பது முகிலின் செவியில் விழுந்தது.
அந்த நேரம் புகைப்படம் எடுப்பது போல் ஒளி திடீர் என வர முகில் திரும்பி பார்க்கிறான்.
"எக்ஸ்கூஸ் மீ....யார் அது...இங்க ஃபோட்டோ எல்லாம் எடுக்க கூடாது..."என அங்கே இருந்த ஒருவர் கூற,
"ஃபிளாஷ்...."என முகில் குழப்பத்துடன் பார்க்க, திடீர் என ஒருவர் முகிலின் மீது பாய்ந்து கட்டிபிடித்து அழுகிறார்.

"முகில்....ஒருவழியா நீ வந்துட்டயா..."என அவர் கூற,
"சுரேஷ்... நீயா..."என முகில் பார்க்க,
"சந்தீப் ஒரு குழந்தை தண்ணில முழ்க விடமா காப்பாத்த போனான்...அப்படியே இறந்துட்டான்....நான் அங்கேதான் இருந்தேன்... ஆனா....ஆனா... என்னால....என்னை மன்னிச்சிடு முகில்...அடி முகில் என்னை எவ்ளோ வேணாலும் அடி முகில்..."என கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வடிய எதிரில் சுரேஷ் நிற்கிறான்.
"நான் உன்னை ஒன்னும் பண்ண போறது இல்லை...உன்னை அடிச்சா அவன் உயிரோட வரமாட்டான்..."என சுரேஷின் தோள்களின் மேல் முகில் கை வைக்க,
"சுரேஷ்....உங்க அப்பா விமல்தான் சந்தீப் போஸ்ட்மொடர்ம் பண்ணார்னு கேள்விப்பட்டேன்...ஆனால் இது வெறும் விபத்துதானே...?"என முகில் கேட்க,
"அங்க பாரு அந்த பொண்ணை..."என சுரேஷ் காட்ட,
எதிரில் கூட்டத்தில் நின்று கொண்டு இருந்த ஒரு பத்து வயது பெண்ணை பார்க்கிறான் முகில்.
"மித்ரா...அந்த பொண்ணு பேரு...நியாபகம் இருக்கா...நம்ம கூட மளிகை கடைக்கு "என சுரேஷ் கூற,
"ஆமா...பெருசா ஆகிட்டா போல..."என முகில் பார்க்க,
"அவதான் கடைசியாக நம்ம சந்தீப் காப்பாத்தின பொண்ணு..."என சுரேஷ் கூற,
"ம்ம்...இந்த பொண்ணுதானா..."என முகில் பார்க்க,
"ஆமா...பாவம்...அதுக்கப்புறம் அவ பயத்துல பேசவே இல்லை..."என சுரேஷ் கூறி கொண்டு இருக்கும் போதே,
"வாங்க எல்லாரும்..."என ஒருவர் கூற, அனைவரும் ஒன்று கூடி சந்தீப்பின் இறந்த உடலினை சுற்றி நிற்கிறார்கள்.
அனைவரும் அழுது கொண்டு இருக்க, சந்தீப்பின் உடல் எடுக்கப்படுகிறது.
"நான் இன்னைக்கு நைட்டு உனக்கு கால் பண்றேன் மீதி அப்போ சொல்றேன்..."என சுரேஷ் கூறி கொண்டு அங்கிருந்து செல்கிறான்.
சந்தீப்பின் உடலை நெருப்பிற்கு கொடுத்துவிட்டு அனைவரும் வீட்டிற்கு செல்கிறார்கள்.
இரவு வீட்டில் வள்ளி சமைத்து கொண்டு இருக்க,
"சாரி....நான் வரதுக்கு கொஞ்ச நேரம் ஆயிருச்சு முகில்..."என கூறி கொண்டு அங்கே வந்தார் சந்தீப்பின் அப்பா வரதன்.
"வாங்க... சாப்பாடு ரெடி...."என வள்ளி கூற,
"சரி"என கூறி கொண்டு வருகிறார் வரதன்.
முகில் நான்கு தட்டுகளை எடுத்து அதில் சாப்பாடு வைக்கிறான்.
மூன்று பேரும் உள்ளே சாப்பிட்டு கொண்டு இருக்க, வெளியே அந்த வீட்டை பார்த்தபடி வள்ளி தனது கல்லூரி உடையில் நின்று கொண்டு இருக்கிறாள்.
அதே நேரம் தனது வாகனத்தில் அந்த வழியாக வந்து கொண்டு இருந்தார் காவல் அதிகாரி விஜய்.
அவளை பார்த்த விஜய்,"என்னாச்சு வள்ளி...? உன்னோட வீட்டை நீயே எதுக்கு இப்படி உத்து பார்த்துட்டு இருக்கே...?என்னாச்சு ஏதாச்சும் சண்டையா...?"என விஜய் கேட்க, திரும்பி மர்மமாக சிரிக்கிறாள் வள்ளி.
அதே சமயம் சாப்பிட்டு முடித்துவிட்டு முகில் தனது அறைக்கு சென்று சுரேஷை தொடர்பு கொண்டு பேசிக்கொண்டு இருக்கிறான்.
"சரி....இப்போ சொல்லு.... ஏன் போஸ்ட்மொடர்ம் பண்ணாங்க....?"என முகில் அலைபேசியில் பேச,
"அதுவா....அது ஒரு வதந்தி...என் அப்பா போலீஸுக்கு உதவி பண்ண இது பண்ணாரு....அவங்கதான் கேட்டாங்க...அது என்னனா நம்ம சந்தீப் உடம்புல கழுத்துல சில இடங்களில் காயங்கள் இருந்தது....எப்படின்னா யாரோ ஒருத்தங்க அவன் கழுத்துல ஏதோ வச்சு இறுக்குன மாறி.... யார்க்கு தெரியும் இது ஒரு கொலையா கூட இருக்கலாம்...."என சுரேஷ் கைப்பேசியில் கூற, முகிலிற்கு வியர்க்க துடங்கியது.
"அந்த நாள் நாங்க எல்லாரும் ஆத்துக்கு போனோம்....யாரும் அந்த இடத்துக்கு போக கூடாதுன்னு சொல்லி இருந்தும் போனோம்....அங்கேதான் மித்ரா தண்ணில தத்தளிச்சத சந்தீப் பார்த்தான்....அதுக்கு அப்புறம் தண்ணில குதிச்சான்...அவன் குதிச்ச பின்னாடியே நானும் வள்ளியும் குதிச்சோம்...அப்போ எங்களுக்கு எதுவும் தப்பா தெரியல...."என சுரேஷ் கூற,
"இந்த காயங்கள் பத்தி வேற யாராச்சும் தெரியுமா...?"என முகில் பதற்றத்துடன் கேட்க,
"இல்லை....அது எப்படி தெரியும்...வள்ளி,போலீஸ் அப்புறம் என் அப்பாவுக்கு மட்டும்தான் தெரியும்....ஆனால் அங்க இருந்த சூழ்நிலையை பார்த்திட்டு போலீஸ் இது கொலையா இருக்க வாய்ப்பு இல்லைனு சொல்லிட்டாங்க...இது ஒரு விபத்துன்னு சொல்லி கேஸ் கிளாஸ் பண்ணிட்டாங்க..."என சுரேஷ் கூற,
"சரி"என முகில் பேசிக்கொண்டு இருக்கும் போது அவனது அறையை யாரோ தட்டும் சப்தம் கேட்க, எழுந்து கதவை திறக்க எதிரில் வள்ளி நின்று கொண்டு இருந்தாள்.
"வள்ளி....?"என முகில் கேட்க,
"இதுதான் அந்த அன்னைக்கு சந்தீப் போட்டு இருந்த செயின்"என தன் கையில் உள்ள செயினை காட்டுகிறாள்.
முத்து சிப்பி டாலர் கொண்ட அந்த செயினை முகிலிடம் கொடுக்கிறாள் வள்ளி.
"இது நீ வச்சுக்கோ...."என கூறி கொண்டு வள்ளி முகில் தோள் மேல் கை வைத்து அழ தொடங்குகிறாள்.
"என்னால இனி அவனை பார்க்க முடியாது...இப்படி இருக்கறது நான் வெறுக்கிறேன்..."என அழுது கொண்டே நிமிர்ந்து அவனை பார்த்து,
"அவனை கொன்னவனை நான் மன்னிக்கவே மாட்டேன்..."என வள்ளி கூறி அழ,
"ஏய்....வள்ளி உனக்கு ஏதாச்சும் தெரியுமா...?"என முகில் கேட்க,
"இல்ல...இல்ல..நான் அப்புறம் வர்றேன்.... அண்ணன் நான் அழுவதை பார்த்தால் கோவப்படுவான்.... நாளைல இருந்து அழமாட்டேன்..."என கூறி வள்ளி நடந்து செல்ல,
முகில் சந்தீப்பின் செயினை பார்க்கிறான்.
"இது.... ம்ம்ம்...இது நான் அவனுக்கு கொடுத்த கிஃப்ட்... இவளோ நாளா அவன் இதை வச்சு இருந்திருக்கிறான்..."என அதை பார்த்து கொண்டே முகில் அழுகிறான்.
டிசம்பர் 23 மணி காலை 7:23 என கடிகாரம் காட்ட பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தது சந்தீப் ஹோட்டல்.
"எல்லாம் முடிந்து மறக்க முயற்சி செஞ்சிட்டு இருக்காங்க....ஆமா...என்னையும் சேர்த்துதான் நானும் மறக்க முயற்சி செஞ்சிட்டு இருக்கேன்..."என மனதினில் எண்ணி கொண்டே வேலை செய்து கொண்டு இருந்தான் முகில்.
"ஹே முகில்....நீ என்ன இப்போ யோசிச்சிட்டு இருக்கேன்னு நா சொல்லவா..."என ஒரு நபர் கேட்க,
"சொல்றது இருக்கட்டும் நீங்க என்ன காலையிலேயே செம்ம குடி போல...இது வரைக்கும் வாசம் வருது...."என முகில் கூற,
"அட அத விடுப்பா...நீ கண்ணாடி போட்ட ஒரு பொண்ண பத்தி காலைல என்கிட்ட கேட்டே...என்ன அந்த பொண்ண பாத்துட்டயா..."என அவர் கூற,
"என்ன போதை தலைக்கு ஏறிருச்சா...நான் எங்கே கேட்டேன்..."என முகில் கூற,
அப்பொழுது போலீஸ் அதிகாரி விஜய் ஹோட்டல் உள்ளே நுழைகிறார்.
"எப்பா....என்ன குளிர்....வெளிய வரவே முடியல....எப்போவும் போல எனக்கு சாப்பிட பொங்கல் குடுங்க.."என கூறி கொண்டே சாப்பிட அமருகிறார்.
"சரி..."என முகில் கூற,
"ஹே....முகில்.... ம்ம்....சந்தீப்....சாரி...."என விஜய் கூற,
"விஜய் சார்....வாங்க...."என வள்ளி கூற,
"ஹே வள்ளி.... எப்போதும் போல அழகாக இருக்கே..."என விஜய் கூற,
"என்னாச்சு இன்னைக்கு உங்களுக்கு ரொம்ப சோர்வா இருக்க மாறி இருக்கீங்க...."என வள்ளி கேட்க,
"ஆமாம்...எல்லாம் தலையெழுத்து....உங்க அண்ணன் சந்தீப் காப்பாத்துன மித்ரா குடும்பம் மொத்தமும் தீடீர்ன்னு காணாம போய்ட்டாங்க..."என விஜய் கூற, வள்ளியும் முகிலும் அதிர்ச்சியில் பார்க்கிறார்கள்.
"ஆமா...அவங்க கடை கூட இன்னும் திறக்கல...எப்போவும் 5 மணிக்கே திறப்பாங்க...அதுனால பக்கத்தில் இருக்கவங்க அவங்க வீட்டுல எட்டி பார்த்தாங்க...உள்ளே ஒன்னும் இல்ல... ம்ம்...அந்த கடை மேல ஏற்கனவே நிறைய கடன் இருந்தது...அவங்க கடன்காரங்ககிட்ட இருந்து தப்பிக்க இப்படி பண்ணி இருக்கலாம்..."என விஜய் கூற, வள்ளி ஏதோ யோசித்தபடி வேகமாக ஹோட்டல் வெளியே ஓடுகிறாள்.
"ஹே....வள்ளி எங்கே ஓடறே...."என முகில் கத்துகிறான்.
முகில் வெளிய வர அதற்குள் வள்ளி எங்கே சென்றாள் என தெரியவில்லை.
முகில் உடனே மித்ராவின் மளிகை கடைக்கு சென்று பார்க்க அது திறக்கப்படாமல் பூட்டி இருந்தது.
எதிரே வள்ளி சோகத்துடன் அமர்திருக்க,
"அவங்க நேத்து இழவுக்கு வந்தாங்க..."என கூறி கொண்டே அவள் அருகே அமர,
"ஸாரி....சொல்லாம கொள்ளாம வந்ததுக்கு...மித்ரா வர வர வித்தியாசமா நடந்துகிட்டா..."என வள்ளி கூற,
"ஆமா...நானும் கேள்விப்பட்டேன் அந்த சம்பவத்துக்கு அப்புறம் அவ பேசவே இல்லைன்னு..."என முகில் கூற,
"நான் அதை சொல்லல...இது அதுக்கும் மேல...ஒரு வாரத்துக்கு முன்னாடி...அவ ஒன்னு சொன்னா....அவ நம்ம ஊரு பக்கத்துல இருக்க மலைக்கு விளையாட போகும் போது அவ ஏதோ விநோதமாக பார்த்தான்னு சொன்னா..."என வள்ளி கூற,
"என்ன பார்த்தா...?"என முகில் கூற,
"அவ அவள மாதிரியே ஒரு உருவத்த பார்த்தா... அதுக்கு அப்புறம் எங்க போனாலும் அவளை யாரோ பார்க்கற மாதிரி யாரோ கவனிக்கர மாறி உணர்ந்தா..."என வள்ளி கூற,
"என்ன சொல்றே...இதுக்கு என்ன அர்த்தம்...உலகத்துல ஒரே மாறி ஏழு பேர் இருப்பாங்க அது மாறியா..."என முகில் கேட்க,
"இது கேட்கும் போது நிழல் மாறி இருக்கு..."என இவர்கள் பேசுவதை கேட்ட பெரியவர் ஒருவர் எதிரில் நின்று சொல்லி கொண்டு இருந்தார்.
நரைத்த முடி மற்றும் மீசையுடன் வெள்ளை வேஷ்டி சட்டையில் இருந்தார் அவர்.
"யார் இது..."என மெதுவாக முகில் கேட்க,
"இவர் பேர் ராமு...இவர் விவசாயம் பண்ணுறார்..."என வள்ளி கூற,
"இதை நிழல் நோய்ன்னு சொல்லுவாங்க இங்க...இது ஒரு சாபம் மாறி இந்த ஊருல இருக்கு...இங்க இருக்க வதந்தி எல்லாம் நீங்க கேட்டது இல்லையா...நிறைய பேர் இது மாறி நிழல்கள் பார்த்து இருக்காங்க...இது முன்னாடி பொதுவாக இந்த ஊர்ருல எல்லாருக்கும் இருந்தது...உங்களுக்கு அந்த நோய் வந்ததுன்னா உங்களோட நிழலை பார்க்க வாய்ப்பு உங்களுக்கு இருக்கு...இதுல என்ன பிரச்சினைன்னா அவங்க நிழலை பார்க்கற எல்லாரும் இறந்து போயிருவாங்க...அவங்க இறந்த பிறகு அவங்களாவே அந்த நிழல் மாறிடும்...அவங்க குடும்பத்தில் இருக்க எல்லாரையும் கொல்லும்...இது கொஞ்சம் வதந்தி மாறி .... கொள்ளிவாய் பிசாசுகள் மற்றும் இரத்த காட்டேரி மாறி...யாரெல்லாம் அந்த நோய்க்கு பாதிக்கப்படறாங்களோ அவங்க எல்லாம் அந்த கடவுள்தான் காப்பத்தனும்...அப்படிதான் எங்க தாத்தா சொன்னாரு..."என கூறி கொண்டே அவர் நடந்து செல்ல வள்ளியின் முகம் வாடுகிறது.
"ஹே...முகில்...நான் சின்ன வயசா இருக்கும் போது...என் பாட்டியும் இதேதான் சொன்னாங்க...உனக்கு நிழல்கள் பத்தி ஏதாச்சும் தெரியுமா...?"என வள்ளி கேட்க,
"இல்லை...ஏதாச்சும் மூடநம்பிக்கையா இருக்கும்..."என முகில் கூற,
"இருக்கலாம்...ஆனா நான் சந்தீப்போட நிழலை ஒரு முறை பார்த்தேன்...அவன் இறந்து போறதுக்கு மூணு நாள் முன்னாடி அதை பார்த்தேன்.."என அதிர்ச்சியுடன் தொடர்கிறாள்.
"நாங்க ஆத்துக்கு துணி துவைக்க போனோம்... அப்போதான் நாங்க அதை பார்த்தோம்...அவன்தான் என்னை கூப்பிட்டு காட்டினான்...ஒரு பாறை மேல அவனை மாறியே கொஞ்சம் மங்கலா இருந்தது..."என வள்ளி கூற,
"என்ன சொல்றே...இது ஒன்னும் விளையாட்டு இல்ல..."என அதிர்ச்சியில் முகில் கத்த,
"இல்ல இது உண்மை...எங்க கண்ணு முன்னாடி இருந்தது... திடீர்னு காத்தோட காத்தா மறைஞ்சு போயிருச்சு...அப்புறம் மூணு நாள் கழிச்சு...அண்ணன்...அன்னான்..."என வள்ளி தேம்பி அழ,
"எனக்கு மித்ராவை நினச்சு பாயமா இருக்கு..."என வள்ளி அழ,
"அமைதியா இரு முகில்..."என மனதினில் எண்ணி கொண்டே முகில் ,"வள்ளி...இதை பத்தி வேற யாருக்காவது தெரியுமா...?"என கேட்க,
இல்லை என்பது போல் வள்ளி அழுகையுடன் தலையை ஆட்டுகிறாள்.
"நேத்துல இருந்து அழமாட்டேனு சொன்னே மறந்துட்டயா..."என முகில் அவளை சமாதானம் செய்கிறான்.
"சரி வா நம்ம மழைக்கு மேல இருக்க கோவில் பக்கம் போவோம்... கடவுளால் காப்பாத்த முடியும் சொன்னாங்க...வா...போலாம்..."என முகில் அவளை அழைக்க,
"சரி "என வள்ளி கூற இருவரும் அந்த ஊரில் உள்ள மலைகோவிலுக்கு செல்கிறார்கள்.
சிவனை மூலவராக கொண்ட அந்த கோவில் மிகவும் பழைமை வாய்ந்த கோவில்.வேண்டியது நடக்கும் கோவில்.அந்த கோவிலுக்கு என தனி ரோடு வசதி இல்லை மலையில் ஏறி செல்ல வேண்டும்.
முகில் மற்றும் வள்ளி இருவரும் மலையின் அடிவாரத்தில் இருந்து ஏற துவங்க, வள்ளி ஒரு திசையை நோக்கி வெறித்து பார்த்து கொண்டு இருக்கிறாள்.
"வள்ளி என்னாச்சு...?"என முகில் கேட்க, அவள் பார்க்கும் திசையில் பார்க்க, அங்கே ஏதோ ஒரு உருவம் அவர்களை பார்த்து காட்டிற்குள் வேகமாக ஓடுகிறது.
"நீ அதை பார்த்தியா...??"என வள்ளி அதிர்ச்சியில் கூற,
"இல்லை... சரியா பார்க்கலை...."என முகில் கூற,
"அது...மித்ரா மாறி இருக்கு...நாம அதை பின்தொடர்ந்து போகனும்..."என வள்ளி கூறி கொண்டு அவளும் காட்டிற்குள் வேகமாக ஓடுகிறாள்.
இருவரும் வேகமாக ஓட நடுக்காட்டிற்குள் சென்று விடுகின்றனர்.
"அவளை காணோம்...நம்ம அவளை மிஸ் பண்ணிட்டோம்..."என வள்ளி கூற,
"நீ பார்த்தது அவளைதானா... மித்ராவா இருந்தா ஏண் நம்மள பார்த்து ஓட போறா..."என முகில் பேசி கொண்டு இருக்கும் போதே, டம்.....என ஒரு சப்தம் கேட்கிறது.
"இது...துப்பாக்கி சுடும் சப்தம்...யார் இந்த காட்டில்..."என இருவரும் அந்த சப்தம் கேட்ட திசையை நோக்கி செல்ல அங்கே இரத்த வெள்ளத்தில் வயிற்றில் துப்பாக்கி சூடு காயத்துடன் ஒரு மரத்தில் சாய்ந்தபடி கண்ணாடி அணிந்து முகில் நேற்று பேருந்தில் சாய்ந்த பெண் இருக்கிறாள்.
"இவ பஸ்ல பார்த்த பொண்ணுதான்..."என முகில் பார்க்க,
"முகில்...நின்னுட்டு இருக்கே...பாரு... எவ்ளோ இரத்தம் போய்ட்டு இருக்கு...இப்போ என்ன பண்றது..."என வள்ளி பதற்றத்துடன் கேட்க,
"நான் எல்லாத்தையும் சொதப்பிட்டேன்..."என அந்த பெண் இரத்த வெள்ளத்தில் இருக்கும் போது கூற,
"இருங்க நான் போய் ஏதாச்சும் உதவிக்கு ஆளுங்கள கூட்டிட்டு வர்றேன்..."என வள்ளி அங்கே இருந்து கிளம்ப,
நின்று கொண்டு இருந்த முகில் கையை இழுத்து,"நான் சொல்றதை நல்லா கேளுங்க...அது..."என அந்த பெண் எதோ கூற முயல,
சட்டென்று வந்த துப்பாக்கியின் தோட்டா அவளது தலையை துளைத்தது. முகில் முன்னே அவள் துடிதுடித்து இறக்க
"உனக்கு நியாபகம் இருக்கா...அப்பா அடிக்கடி என்ன சொல்வார்ன்னு"என வள்ளியின் குரல் பின்னே கேட்க,
அதிர்ச்சியில் முகில் திரும்ப, பின்னே வள்ளியின் தலையில் துப்பாக்கியை கல்லூரி உடையில் இருக்கும் வள்ளி வைத்து கொண்டு இருந்தாள்.
"முகில்...."என வள்ளி பயத்துடன் இருக்க,
"தட்டு கழுவி டேபிள் துடைச்ச பின்னாடிதான் எப்போவும் சமையல் முடிந்ததுன்னு அர்த்தம்..."என கூறி கொண்டே வள்ளியை கல்லூரி உடையில் இருக்கும் வள்ளி சுட வள்ளியின் தலையில் இருந்து இரத்தம் வழிகிறது.
முகில் கண் முன்னே வள்ளியும் இறக்க, துப்பாக்கி முனையை முகில் பக்கம் நீட்டி கல்லூரி உடையில் இருக்கும் வள்ளி முகிலின் நெற்றியில் சுடுகிறாள்.
முகிலின் கண்கள் இருண்டு போக, தலை வலிக்க "சந்தீப்.... ப்... ப்...."என அலறி கொண்டே இருக்கையில் இருந்து பக்கத்தில் நின்று கொண்டு இருந்த கண்ணாடி அணிந்து இருந்த ஒரு பெண்ணின் மீது சாய்கிறான்.

"என்னாச்சு..."என முகில் எழுந்து சுற்றும் முற்றும் பார்க்க, பேருந்தில் பயணம் செய்து கொண்டு இருக்கிறான் முகில்.


- தொடரும்....
 

Attachments

  • 106299b0e0783c6b14dcb767a817356f.jpg
    106299b0e0783c6b14dcb767a817356f.jpg
    76.8 KB · Views: 0
  • high-contrast-image-broken-glasses-600nw-629617226.jpg
    high-contrast-image-broken-glasses-600nw-629617226.jpg
    16.2 KB · Views: 0
  • 084df66d49ea1fc5e077d79cbf486940.jpg
    084df66d49ea1fc5e077d79cbf486940.jpg
    8.7 KB · Views: 0
Top