• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

NN-6

Messages
37
Reaction score
20
Points
8
-"அப்பா எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லப்பா"

-" ஏன் என்ன காரணம் பயணி பிடிக்கலையா இல்ல வேற ஏதும் " என்று கரகரத்த குரலில் வெளிவந்தது.

வார்த்தைகள் வேதாச்சலம் கடுமையானவர் அல்ல அதே சமயத்தில் தன் மகள் மீது தான் வைத்துள்ள அன்பின்
காரணமாக அவள் கேட்கும் அனைத்திற்கும் சம்மதம் சொல்லி தவறாக போய்விடுமோ என்னும் கவலை அவருக்கு அப்பாவாயிற்றே இருக்காத என்ன இவர் மட்டும் விதிவிலக்கல்லவா.

தன் அப்பாவின் கோபம் கண்ட வேறு இவர் வேலை விஷயத்தில் கோபம் கொண்டதை பார்த்திருக்கின்றாள் ஆனால் தன் மீது கோபம் கொள்ளும் தந்தை இன்று தான் அவளுக்கு அறிமுகம் இல்லப்பா என்று நிறுத்தியவள் இருவரையும் ஒரு கணம் பார்த்தவள் மனதை சமன் செய்து

-"அப்பா நான் ஒரு பையன லவ் பண்றேன் அவன் பெயர் கார்த்திக்"

என்று தயக்கத்துடன் சொல்லி முடித்தால் . வேதாச்சலத்திற்கு கோபம் வர

-" சிவகாமி வா போய் தூங்கலாம் "

என்று எதுவும் பேசாமல் சென்று விட்டார். ஏதேனும் பேசிவிட்டு சென்று இருந்தால் கூட வலி குறைவு ஆனால் இப்படி மௌனம் மூலம் பேசுவதோ கோபம் கொள்வதோ வலியை விட வேதனையை அதிகம் தரும் அதேதான் இப்பொழுது மிருதாளினி அனுபவித்துக் கொண்டு இருந்தாள் தங்களது அறைக்கு வந்த சிவகாமியும்

-" உங்ககிட்ட நம்ம பொண்ணு என்ன சொல்லிட்டா இந்த வயசுல வரது தானே"

என்று மகளுக்காக தாயாக கோபம் கொள்ளாமல் அவளது தந்தையிடம் அவளுக்காக பேச வாய் எடுத்தார்.

-" ஏன் நாம கூட அப்படித்தானே இருந்தோம்".

அவர் சொல்லி முடிப்பதற்குள்.

-" இப்ப அதுக்கு தானே தண்டனை அனுபவிச்சிட்டு இருக்கோம் ".

என்று சொல்லிவிட்டு படுத்துக்கொண்டார்.

சிவகாமிக்கு ஒரு நிமிடம் ஒரு வழி . தன் மனதை ஒருவர் தேற்றிக்கொண்டு
-" நம்ம பொண்ணு சந்தோஷம்தான் நமக்கு முக்கியம் அதை பத்தி கொஞ்சம் யோசிச்சீங்களா" .

-"எதுக்கு நீங்க எதுவுமே பேசாம வந்தீங்க" என்று தன் மகளுக்காக வாதாடினார்.

-"அத பத்தி பேசாத அத பத்தி பேசுறதா இருந்தா என்கிட்ட பேசாத சிவகாமி "

என்று ஒற்றை வரியில் முடித்துக் கொண்டார் .அவரது கோபத்தை உணர்ந்த சிவகாமி மகனிடம் பேசிவிட்டு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணிக்கொண்டு மகள் இப்பொழுது என்ன செய்கிறாள் எங்கிருக்கே என்ன செய்யப் போகிறார் என்ற மன வேதனையுடன் மகளை தேடி அவ்விடத்தை விட்டு நகர்ந்தார் வீடு முழுவதையும் தேடியவர் கடைசியாக அவளுக்கு பிடித்த இடமாக தோட்டத்தில் தான் இருப்பாள் என்று நினைவிற்கு வர அவளை தேடி தோட்டம் பக்கம் சென்றார் அவர் எண்ணம் பொய்த்துப் போகவில்லை அவள் செடிகளுக்கு நடுவில் அமர்ந்து கொண்டு வானத்தை ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தாள் .

சிறிது நேரம் அவளைப் பார்த்து பின்னால் நின்றிருந்தார் . விட்டத்தை பார்த்துக் கொண்டு கண்ணீர் வழிய அமர்ந்திருந்த மகளை கண்ட தாய்க்கு தன்னால் என்ன செய்ய முடியுமோ அனைத்தையும் செய்து அவளை பழையபடி சிரிப்போடு பார்க்க வேண்டும் என்று மனம் ஏங்கியது.
 
Top