• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

NN-5

Messages
37
Reaction score
20
Points
8
விழாவிற்கு வருகை தந்த அனைவரின் பார்வையும் ஒரு நிமிடம் இமைக்காமல் அவனை கவனித்தது.

ராஜதேவ் தனது கையில் இருந்த பூங்கொத்தை விழாவின் நாயகனாக வந்திருக்கும் ஆருத்ரனுக்கு வழங்கி இன் முகத்துடன் வரவேர்த்தார் .

அவரது வரவேற்பை இதழ் பிரியாமல் சிறு புன்னகையுடன் வாங்கிக் கொண்டான்.

வேதாச்சலம் நடக்கும் அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் நின்றார் ஆனால் அவரின் முகத்தில் எந்த உணர்வும் தெரியவில்லை ஏனென்றால் தங்களது நிறுவனம் மற்றொரு நிறுவனத்தின் உதவியை நாடியது அவருக்கு மிகவும் வருத்தத்தை தந்தது அவருக்கு.

விளிம்பில் நிற்கும் நிறுவனங்களை தனது கட்டுக்குள் கொண்டு வந்து தனது திறமையை நிரூபிக்கும் குணம் உடையவன் ருத்ரன் .அதனாலேயே அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் வேதாச்சலத்திற்கு ஏனோ பிடிக்கவே இல்லை.

இதே சமயத்தில் விழா எப்பொழுது முடியும் என்று தனது கன்னங்களில் கையை ஊன்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் மிருதாலினி.

அவள் எதிரில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களின் குதூகலத்தை பார்த்துக் கொண்டு நேரத்தை கடத்திக் கொண்டிருந்தாள் .அப்பொழுது சிவகாமி வந்து " என்ன பதில் சொல்ல போற உனக்கு ஓகேவா" என்று அவர் ஆரம்பிக்கும் முன்பே "அம்மா இத பத்தி எல்லாம் இப்போதைக்கு பேசாதீங்க வீட்ல போய் பேசிக்கலாம் "என்று தனது எண்ணத்தை வெளிப் படுத்தினாள்.

அவ்வளவு பதிலிலிருந்து அவளுடைய எண்ணம் என்னவென்று அறிந்து கொண்டார் சிவகாமி .

அவளது அம்மாவாயிற்றே இதை கூடவா தெரிந்து கொள்ள முடியாது.
ஏனோ அவள் சொன்ன பதில் இருந்து அவருக்கு மன ஆறுதலாக இருந்தது ஏனென்றால் அவரது கணக்கு வேறு.

அவளது பதிலைக் கேட்டேன் திருப்தியில் அவ்விடம் நீங்கி உணவு இருக்கும் இடத்திற்கு சென்றார் சிவகாமி.

இதே சமயத்தில் நிறுவனங்களை சார்ந்த பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருந்தது ஒரு பக்கம் அங்கு ஆருத்ரன் தனது திறமையான பேச்சாள் அனைவரையும் கவரும் வண்ணம் ஆளுமையுடனும் பேசிக்கொண்டிருந்தான் அப்பொழுது அவனது தொலைபேசி அலற அனைவரிடமும் விடை பெற்று தனித்து வந்து அவன் தொலைபேசியை எடுக்கும் பொழுது அவன் கையில் இருந்து தொலைபேசி நழுவி கீழே விழ செல்ல சற்றென்று அதை கீழே விழாமல் பிடித்தான்.

திடீரென்று ஏன் இந்த பதற்றம் என்று அவன் சிந்திக்கும் முன் அவன் இதயம் வலித்ததை உணர்ந்தான் சற்றென்று திரும்பி பார்க்கும் பொழுது அவனது விழிகளில் ஒரு காட்சி படிந்ததை உணர்ந்தான்.

நொடியே அவ்விடத்தை விட்டு நீங்க வேண்டுமென்று நடக்க முற்பட்டான் ஆனாலும் ஏதோ ஒன்று அவனை நில் என்று சொல்லும் குரல் கேட்பது போல் இருக்க உடனடியாக அவ்விடத்தை விட்டு அவன் தான் அனைவரிடத்தும் தனது மன்னிப்பை கூறிவிட்டு தான் விடை பெறுவதாக அனைவரிடமும் சொல்லிவிட்டு விழாவை விட்டு வெளியேறினான்.

அப்பொழுது வேதாச்சலம் தனது மனைவியை தேடி வந்து உணவு உண்ணும் இடத்தை அடைந்த பொழுது அவர் கண்களில் தெரிந்த கோபத்தை அவரால் உணர முடிந்தது.

"ஏங்க இந்த விழாவிற்கு கெஸ்ட் ஆருத்ரன் என்கிட்ட முன்னாடியே சொல்லவே இல்ல என்கிட்ட சொல்லாம இருப்பீங்க உங்களுக்கு அவ்வளவு நான் தள்ளி போயிட்டனா"

"அப்படி இல்ல சிவகாமி எனக்கு அவன் வரவே பிடிக்கல இருந்தாலும் நான் பொறுத்துக்கிட்டேன் ஆனா உன்கிட்ட சொல்லாத காரணம் வேற ஒன்னு இருக்கு அதனால தான் உன் கிட்ட சொல்லல உனக்கே தெரியும் இல்ல நம்ம கம்பெனி வந்து லாஸ்ட்ல போயிட்டு இருக்கு நம்ம கம்பெனிய வந்து டேக் ஓவர் பண்றது அவன்தான் அதுவே எனக்கு சுத்தமா பிடிக்கல நான் எப்படி அவனைப் பத்தி உன்கிட்ட வந்து பேசுவேன் அதனாலதான் சொல்லல".

"அதுக்கு சொல்லாம இருப்பீங்களா" என்று தனது கோபத்தை வெளிப்படுத்திய சிவகாமி அவர்களிடத்தை அவர் மீது கோபித்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு சென்றார்.

விழாவின் நாயகன் சென்றதால் விழா விரைவில் முடிவடைந்தது அனைவரும் தங்களது பயணத்தை தங்களது வீட்டை நோக்கி புறப்பட்டனர்

ராஜதேவ் குடும்பம் வேதாச்சலம் குடும்பத்திடம் விடை பெற்று செல்ல.

வேதாச்சலம் சிவகாமி மற்றும் மிருதாளனி தங்களது வாகனத்தில் புறப்பட்டனர் வீடு செல்லும் வரை சிவகாமியின் கோபம் குறையவே இல்லை அதை உணர்ந்தும் தான் வந்தார் வேதாச்சலம் இருப்பினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தங்களது பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர் வீட்டிற்கு.

வந்தவுடன் அனைவரும் பிரஷ் ஆகிவிட்டு ஹாலுக்கு வந்தனர். இருவரின்
பார்வையும் மிருதாளனி இன் பக்கம் .
 
Top