• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

வேந்தன் 38

Member
Messages
60
Reaction score
1
Points
8
அத்தியாயம் 38

சின்ன அத்தியாயம்தான் 🙈

சொல்லாமல் சொன்ன காதல் கதைக்கான கரு நெஞ்சுக்குள் முட்டி நிற்க, அதன் கணம் தாளாது போனான்.

பார்த்த நாள் முதல் தன்னை ஆட்சி செய்தவள் இப்பொழுது இன்னொருவன் அதுவும் தன் கூடப்பிறந்தவனின் சொந்தம்?

ஆத்மாவும் ரவிக் இருவரும் சிபினின் காதல் பற்றி சொல்லும் பொழுது, அருகில் இருந்த துருவ்க்கு முகமெல்லாம் வெளிரிப் போனது. அப்போதைக்கு தன்னை சந்தோஷமாக காட்டிக்கொண்டவன், அங்கேயிருந்து காரில் கிளம்பிவிட்டான்.

நவீன ரக கார், வேகத்திற்கு கேட்கனுமா, பறந்தது அவன் கையில். அருகில் உள்ள சீட்டில் காலி மது பாட்டில்கள் கிடக்க, எதிரில் வரும் வாகனம் கூட கண்களுக்கு மங்கலாகத் தெரிந்தது அவனுக்கு.

நெஞ்சுக்குள் முட்டி நின்ற வார்த்தைகளைக் கொட்டிடத் தவித்தவனுக்கு எப்படி என்னவென்று ஒன்றும் புரியவில்லை.

நளிராவின் மலர் முகம், தன்னைக் கண்டு அப்பாவியாய் விழி விரித்துப் பார்த்தவளின் உருவம் எல்லாம் அவனை எந்த அளவிற்கு உயிர்ப்பை தந்ததோ அந்த அளவிற்கு இன்று கொன்று தீர்த்தது.

வாகனத்தை ஓரமாக நிப்பாட்டியவன், போனை எடுத்து, வாய்ஸ் நோட் பேச ஆரம்பித்தான். “அவ அவளோட பேர் கூட தெரியாதுடா எனக்கு. பட் என்னோட இதயம் அவளோட பெயரைத்தான் சொல்லும். என்னோட டார்லிங் அவ. துரோகிடா நீ. என்னோட டார்லிங்கை என்கிட்டே இருந்து பறிச்சுக்கிட்ட பாவிடா” வார்த்தைகள் குளர அவன் பேசுவது அத்தனையும் அதில் பதிவானது.

“அவளை முதல் முறையா பார்த்தப்ப அவ பார்த்தாளே ஒரு பார்வை. சும்மா சொல்லக்கூடாதுடா டேய் துரோகி. அப்பவே விழுந்துட்டேன்” காதலுடன் சொன்னவன்,

“என்னடா இவன் அண்ணா சொல்லாம துரோகின்னு சொன்னேன்னு பாக்குரியா. இனிமேல் உன்னோட பேர் சிபின் இல்ல துரோகி” ஒரு வேகத்தில் காரை ஸ்டார்ட் பண்ணியவன்.

“என்னால முடியலைடா. அவளை உனக்குக் குடுக்கவே முடியாதே” அவனது குரல் ஆவேசமாய் ஒலிக்கும் போதே எதிரே வந்த வாகனத்தின் மீது கார் மோத, மெசேஜ் தானாக ஆரியன் மிரா சிபின் துருவ் நால்வருக்கு மட்டுமேயான வாட்சப் குருப்பில் பதிவானது.

அதை கேட்டவர் மூவருக்கும் உயிரே போன நிலைதான்.

இதோ ஆறுமாதங்கள் சென்றுவிட்டது, கோமாவில் இருக்கிறான். எப்போது விழிப்பான் என்று தெரியாது. அவன் கண் விழித்தால்தான் எதுவும் தெரியும்.
 
Top