• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

வேந்தன்... 3

New member
Messages
21
Reaction score
1
Points
3
அத்தியாயம் 3

“ரெண்டு கைக்கும் இப்பவே வைக்கா. ப்ளீஸ்க்கா” ஆர்த்தி கால்களை தரையில் உதைத்து அடம்பிடிக்க.

“ஒரு கைக்கு முதல்ல வைக்கலாம்டி. காய்ஞ்ச பிறகு பாதம் முதற்கொண்டு வைக்கறேன். சித்த அடங்கி அமருடி” சைத்ரா தங்கையை அதட்டியவாரு நளிரா கையில் மருதானியை வைக்க. ஆர்த்தி தனக்கு முதல்ல வைக்கலையேன்னு நளிராவை முறைத்தாள்.

“வெவ்வேவே! பாத்தியா நான்னாத்தான் அக்காவுக்கு உசுரு. இப்பவாவது புரிஞ்சுக்கடி மக்குபுள்ள” நளிரா தங்கைக்கு கண்களை சிமிட்டி உதட்டை துருத்திக்காட்டிப் பழிப்புக் காட்டினாள்.

“நான்தான சின்னவ? அப்ப எனக்குத்தான முதல்ல வைச்சிருக்கணும்?. அவதான் பிடிக்குது எல்லாத்துக்கும். அதான் அவளுக்கே சப்போர்ட் பண்ணுறீங்க” ஆர்த்தி கோபத்தில் நளிரா கையில் நறுக்குன்னு கிள்ளிவைக்க.

“அக்கா பாருக்கா” நளிரா கையை அசைக்க, சைத்ரா வரைந்த ஓவியம் கோணலாகப் போனது.

“சொன்னா கேளு ஆர்த்தி. எனக்கும் வைக்கணும் இனிமேல்தான். நேரமாகுதுல்ல” சைத்ரா சண்டையிடும் நளிராவையும் ஒரு அதட்டு அதட்டி வைத்தாள்.

“எனக்கு வச்சா என்னவாம்” ஆர்த்தி பதிலுக்கு கேட்க.

“அவளுக்கு முதல்ல வச்சா, உனக்கு வைச்சு முடிக்கறதுக்குள்ள ஆறிடும்டி. அவ கையை கழுவிட்டு வந்து எனக்கு வைப்பா. அதான் அவளுக்கு வைக்கறேன்” சைத்ரா அவளை அடக்கினாள்.

பெண்கள் மூவரும் ஹாலில் அமர்ந்து கலகலத்து சிரித்தவாறே ஒருவருக்கொருவர் மருதாணி வைத்துக் கொண்டார்கள்.

“அக்கா எனக்கும் அது மாதிரியே வைக்கா. அவளுக்கு மட்டும் அழகா வச்சிவிட்டிருக்க?” ஆர்த்தி அடங்காமல் நளிராவின் கையை எட்டி எட்டிப் பார்த்தாள். நளிராவின் உள்ளங்கையில் மயில் உருவம் அழகாய் பொருந்தியிருக்க, ஆர்த்தியின் விழிகள் அகல மறுத்தது.

“மூணு பேருக்குமே ஒரே டிசைன் வச்சா நல்லாருக்காது ஆர்த்தி. உனக்கு வேற டிசைன் யோசிச்சு வச்சிருக்கேன். அப்ப பாரு நீயே அசந்து போவ” சைத்ரா சொல்லிவிட்டு நளிரா பாதத்துக்கும் நெளி நெளியாக வைத்து ஒவ்வொரு வளைவுக்கும் சின்ன சின்ன புள்ளிகளை வைத்தாள்.

“செல்ல அக்கா. எனக்கு மட்டும் கியூட்டா யோசிக்கறா எப்பவும். நான்னாதான் அக்காவுக்கு பிடிக்கும் தெரியுமா?. எனக்கு மயில்ன்னா உனக்கு காக்காதான் வரைஞ்சு விடுவா பாரேன்” தன் பாதத்தை பிடித்திருக்கும் சைத்ரா கன்னத்தில் எட்டி முத்தம் வைத்தவள், திரும்பவும் தங்கையை பார்த்து பழிப்புக் காட்டிட,

ஆர்த்தியின் பொறாமைத் தீயை இன்னும் விசிறி விட்டாள் நளிரா.

“நெளிரா நெளிரா நெளிநெளியா போன நொளிரா. வாய மூடுடி ரத்தக் காட்டேரி. அக்காக்கு நானும்தான் உசுரு. உன்னைத்தான் பிடிக்கவே பிடிக்காதுடி குள்ள கத்திரிக்கா” தன்னை விட கொஞ்சம் உயரம் கம்மியாக இருப்பதால், கோபம் வரும் போதெல்லாம் இதை சொன்னால் நளிராவுக்கு மூக்குக்கு மேல் கோபம் வரும்.

“இன்னைக்கு சொல்றேன் எழுதி வச்சுக்கடி. உனக்கு கிராமத்தான்தான் புருஷனா வருவான். பட்டிக்காட்டுல கூட்டுக் குடும்பமா பார்த்துதான் அமையும்டி. எந்நேரம் கொட்டிகிட்டே இருக்க மாமியாரு கையில சிக்கி அரைபடுவ பாத்துக்க” இந்தா பிடி சாபம்னு வாரி வழங்கினாள் ஆர்த்தி. அவ சொன்ன நேரம் வானில் உள்ள தேவதைகளும் அப்படியே ஆகட்டும்னு சொல்லிட்டே சென்றார்கள்.

பொதுவாய் அவர்கள் வீட்டில் எல்லோருமே ஓரளவு நார்மலான உயரம்தான். ஆனால் நளிரா மட்டும்தான் கொஞ்சம் உயரம் கம்மியாக இருப்பாள் மற்றவர்களை காட்டிலும். அதுவும் கொஞ்சம்தான். ஆனால் அதுவே அவளை சீண்டிவிட ஒரு வாய்ப்பாக போனது ஆர்த்திக்கும் அவ்வப்போது சைத்ராவுக்குமே.

ஆர்த்தியின் பேச்சில் முட்டிக்கிட்டு வரும் சிரிப்பை உதட்டை மென்று சைத்ரா அடக்கினாள் இல்லாவிட்டால் நளிரா கையை இப்பவே ரோசம் வந்து கழுவிவிடுவாள். இத்தனை நேரம் முதுகு வலிக்க வச்சுவிட்டான்னு கூட பாவம் பார்க்க மாட்டாள்.

“அதெப்படி அந்தப் பிசாசு பேசுனதுக்கு நீ சிரிக்கலாம்ன்னு” மூஞ்சை தூக்கி வைச்சுக்குவாள்.

அதுக்குப் பிறகு சமாதானப்படுத்தி திரும்ப அதே டிசைன் மேல மருதாணி வரைவது பெரிய வேலையாக போகும் சைத்ராவுக்கு.

“யாருடி கத்திரிக்கா. நாயே நெளிரான்னு சொல்ற வேலை வச்சுக்காத சொல்லிட்டேன்” அவளிடம் எகிறியவள்,

“ம்மா எதுக்குமா நளிரான்னு பேரை வச்ச. இந்த குட்டி நாயி என்னை அசிங்கமா பேசிட்டு இருக்குது. நா நெளியா இருக்கனாம்” கூப்பாடு போட்டவளை கண்டுகொள்ளாமல் ராஜனும் மலரும் நாளைக்கு வரும் மாப்பிள்ளை வீட்டார் பத்தி பேசிக்கொண்டிருந்தனர்.

“போடி கத்திரிக்கா. பாத்தியா அம்மா கூட கண்டுக்கலை உன் நீ பேசுறத. எங்கயோ அண்டங்காக்கா சோத்துக்கு கத்துதுன்னு நெனைச்சுட்டாங்க போல” ஆர்த்தி இன்னும் சீண்ட.

“பாருக்கா அவளை. முதல்ல இனிமேல் என்னை அக்கான்னு சொல்லச் சொல்லு. வாடிப்போடின்னு சொல்லி கூப்பிடுற வேலை இனிமேட்டு வேணவே வேண்டாம். நீயே சொல்லி திருத்து, இல்லைன்னா நான் கையை கழுவிக்குவேன் பாத்துக்கோ” நளிரா மிரட்டினாள் அக்காவை.

“அம்மா தாயே முதுகு வலிக்குதுடி. கொஞ்சம் கருணை காட்டுங்க ரெண்டு பேரும்” சைத்ரா கெஞ்சவும் அடங்கிப் போனார்கள் பெண்கள் இருவரும்.

பிள்ளைகள் குரல் காதில் இனிமையாய் ஒலிக்கவும், “மலரப்பா நாமளும் ஹாலுக்கே போயிக்கலாம். பிள்ளைங்களோட பேசிக்கிட்டே செஞ்சா அலுப்பு தெரியாது பாருங்க” மலர்விழி சொல்ல.

அடுத்த நிமிடம் அடுப்பும் சமையல் பொருட்களும் ஹாலுக்கே வந்தது. மலர்விழி பலகாரம் செய்ய, ராஜன் லட்டுவை உருட்டி தட்டில் வைக்க ஆரம்பித்தார்.

பொண்ணு பார்க்க வராங்கன்னு மலர்விழி இதையெல்லாம் செய்ய நினைக்கலை. இதோ இன்னும் இரண்டு நாளில் தீபாவளி பண்டிகை வருது. மூணு பொண்ணுங்க இருக்காங்க. அவங்க ப்ரண்ட்ஸ், அக்கம் பக்கம் கொடுக்க. ஏன் பிள்ளைங்களே வீட்டில் சாப்பிடுறதுக்கும் ஏதாவது செஞ்சாகணுமே.

வாணி படியில் ஏற முடியாமல் மெதுவாய் படியில் ஏறி வீட்டுக்குள் வந்தார்.

“ஏய் நாட்டாமை வருதுடி” சைத்ரா சொல்லிச் சிரிக்க. அதைக்கேட்ட பெண்கள் வாணியைப் பார்த்து நகைத்தனர்.

வாணி நல்லவர்தான். என்ன பொண்ணுங்களை அதட்டி உருட்டிகிட்டே இருப்பதால் அவரைக் கண்டால் மூவருக்கும் கொஞ்சம் அலர்ஜி அவ்வளவுதான்.

“என்னடி பொண்ணுங்களா மருதாணி வைக்கறீங்களா?” கேட்டவாறே உள்ளே வந்தார்.

“உங்களுக்கும் வைக்கட்டுமா வாணிக்கா” நளிரா எதார்த்தமாய் கேட்டாள்.

“நளிரா பேசாம இரு. உனக்கெதுக்கு வம்பு. அந்தம்மா தேவையில்லாம் ஏதாவது சொல்லுவாங்க” சைத்ரா தடுத்தாள்.

“ஆமாக்கா. அட்வைஸ் குயின்” ஆர்த்தி சிரித்தாள்.

“எனக்கெதுக்கும்மா. சின்னப் பொண்ணுங்க நீங்களே வைங்க” சொல்லிவிட்டு மலரைப் பார்த்து

“என்ன மலரு தீபாவளி வந்துருச்சா இப்பவே?” கேட்டார்.

“அது ஒரு சாக்குக்கா. இத்தனையும் வெளியே போய் வாங்கணும்னா ஏகப்பட்ட பணம் வேணுமே. அட பணத்தை விடுங்க. நம்ம கையால செஞ்சு புள்ளைகளுக்கு தந்தா சந்தோசமா சாப்பிடுவாங்க. கடையில காசு கொடுத்து வாங்கினா அவன் விக்கற விலைக்கு பத்தியும் பத்தாமையும் பிள்ளைகளுக்கு திங்க தரணும். அதான் இன்னைக்கு ஆரம்பிச்சுட்டேன்” மலர்விழி அடுப்பை அணைத்துவிட்டு, துண்டால் முகத்தை துடைத்தவாறே வந்து அமர்ந்தார் மகள்கள் அருகில்.

“கையை தாடி உனக்கு நான் வச்சுவிடறேன். சைத்ராவுக்கு கையே வலிக்கும் உனக்கும் அவளுக்கும் வைக்கப் போயி” ஆர்த்தியின் கையை இழுத்து அவளுக்கு மருதாணி வைக்க ஆரம்பித்தார் மலர்விழி.

ஆர்த்தியின் காலை சுரண்டிய நளிரா “ஏமாந்தியா?” கேட்டுட்டே கேலியாக சிரிக்க.

பெத்தவங்களும் வாணி அக்காவும் கூட இருக்கறதால அக்காவை ஏதும் செய்ய முடியாமல் முறைக்க மட்டுமே முடிந்தது ஆர்த்திக்கு.

“மாப்பிள்ளை வீட்டுல இருந்து எத்தனை மணிக்கு வராங்கன்னு சொன்னாங்களா மலரு?” வாணி விசாரித்தார்.

“காலைல பத்து மணிக்கு கிளம்பறேன்னு சொன்னாங்க. ஆனா தடம் வழின்னு பார்த்து வரதுக்கு எப்படியும் பதினொன்னு ஆகும்னாங்க” மலர் சொல்ல.

“நளிராவையும் ஆர்த்தியையும் நாளைக்கு எங்க வீட்டுக்கு அனுப்பி வை மலரு. மாப்பிள்ளை வீட்டுல இருந்து வந்துட்டு போற வரைக்கும் அங்கயே இருக்கட்டும்” வாணி சொன்னார்.

“எதுக்குன்னேன் வாணிக்கா. பொண்ணுங்க மூணு பேரையும் வர்றவங்க பார்த்தா என்னங்கறேன். வர்றவன் யோக்கியனா இருந்தா யாரை பாக்க வரோம்னு தெளிவா இருப்பான். அதில்லாம மனசை அலைபாய விட்டுட்டு இளைய பொண்ணை கேட்டா அவன் யோக்கியம் அங்கயே அடிபட்டுப் போகுதே” மலருக்கு இந்த யோசனையே பிடிக்காமல் வெடுக்குன்னு மறுத்துட்டார்.

“அதில்லடி” வாணி கவலையாக இடைபுகுந்தார்.

“வேணாக்கா. அம்மா சொன்னது சரிதான். நளிரா இங்கயே இருக்கட்டும். வர்றவன் எனக்காக வரட்டும். அதைவிட்டுட்டு இவளை அங்கேயும் இங்கேயும் அனுப்பி அவ மனசைக் காயப்படுத்த வேண்டாம்” சைத்ரா சொல்லிவிட்டாள்.

“அக்கா லவ் யூ” சைத்ரா கன்னத்தில் முத்தமிட்டாள் நளிரா.

“அக்கா நானும் லவ் யூ” ஆர்த்தி அக்காக்கள் இருவருக்கும் முத்தம் கொடுக்க.

“என்னமோ நல்லாருக்கணும்டியம்மா மூணு பேரும்” வாணி கனிவுடன் சொன்னார்.

“நளிரா இன்னைக்கு ஸ்டோர் போகணுமாம்மா. மருதாணி வச்சிருக்கியே நா வேணும்னா சிவதானுகிட்ட சொல்லிரட்டா உன்னால இன்னைக்கு வரமுடியாதுன்னு” ராஜன் கேட்டார்.

“அப்பா இது மூணு மணிநேரத்துல காய்ஞ்சிடுப்பா. கழுவிட்டு போயிக்கறேன். நான் போகலைன்னா அங்க கஷ்டம்ப்பா. அங்கிள் யாரையும் நம்பி விடமாட்டேங்குறார். நீங்க சொன்னாலும் அவர் கேக்கவே மாட்டார் வந்தே ஆகணும்னு நிப்பார். அப்புறம் நீ போம்மான்னு சொல்லுவீங்க. எதுக்கு இத்தனை வேலை. அதுக்கு நானே போயிக்கறேன்” நளிரா சிரிப்போடு சொன்னாள்.

“நளிரா சொல்ல மறந்தே போயிட்டேன். சிவன் கோவில் குருக்கள் உன்னை நாளைக்கு கோவிலுக்கு வரச் சொன்னார். தேவாரம் பாடணும்னு. அதுக்குத்தான் காலைல வந்தேன். எண்ணத்தையோ பேசிட்டு மறந்துட்டே போய்ட்டேன்” வாணி சொன்னார்.

“சரிக்கா நான் போயிக்கறேன்” நளிரா எழுந்து மின்விசிறிக்கு அடியில் போய் காற்று படும்படி அமர்ந்தாள். மற்ற பெண்களும் அவள் கூடவே சென்றுவிட்டார்கள்.

கொஞ்ச நேரம் போய் கையை கழுவிய பெண்கள் என் கைதான் சிவப்பா இருக்கு என ஒருத்தருக்கொருத்தர் சண்டை போட, ராஜன்தான் இடையில் புகுந்து “மூணு பேர் கையுமே அழகா இருக்கு கண்ணம்மா” என்று சமாதானம் செய்து வைத்தார்.

வாணி அவர் வீட்டுக்கு போய்விட, மூவரும் வெளியே செல்லப் பிளான் பண்ணினார்கள்.
 
Top