New member
- Messages
- 21
- Reaction score
- 1
- Points
- 3
வேந்தன்…17
பெண்கள் எப்போதுமே பேச்சில் பொடி வைத்துதான் பேசுவார்கள். அதாவது அவர்களின் ஒரு சொல்லில் ஆயிரம் அர்த்தம் இருக்கும். ஆர்த்தி தன்னைத் தொட்டுத்தான் நளிராவுக்கு தினமும் எங்காவது ஒரு இடத்திலிருந்தாவது அறிவுரையும் வண்டி வண்டியாக திட்டும் பறந்து வருகிறது என்பதால் பாவமாகவும் இருக்கும் அதேநேரம் குதூகலமாகவும் இருக்கும்.
“ஏம்மா நளிரா. அவங்க ரெண்டு பேரையும் படிக்க வச்சத்தோட உங்கப்பா நிப்பாட்டியாச்சு. உன்ன? பாட்டு கிளாஸ்ன்னு அனுப்பி பணத்தைக் கரைச்சார். அந்த அறிவு கொஞ்சமாவது இருக்க வேண்டாமா உனக்கு?”
“ஆயிரந்தா இருந்தாலும் உனக்கு இவ்வளவு திமிர் ஆகாதுடியம்மா. சம்மந்தியம்மாகிட்டயே வேண்டாம்னு நறுக்குன்னு சொல்லிட்டியாம்ல”
இப்படி அறிவுரையை கேட்டுக் கேட்டு வீட்டுக்கு உறவினரோ இல்லை போன் அழைப்புகளோ வந்தாவே பேயை நேர்ல கண்ட மாதிரி நளிரா மிரண்டு ஓட ஆரம்பித்தாள்.
“நளி. அத்தை உன்கிட்ட பேசணுமாடி” மலர் நளிராவை அழைத்தால் “அம்மா பேயி” என்றோடி விடுவாள்.
தொல்லை தாங்காமல் இப்போதெல்லாம் சாதகம் பண்ணுவதோடு யோகாவும் செய்கிறாள்.
இதையும் பார்த்த வாணி “காலகாலத்துல கல்யாணத்தைப் பண்ணிக்காம, தலைகீழா நிற்குறா பாரேன். காலக்கொடுமை” என்று தலையில் அடித்துக்கொண்டு போக.
“அப்பா ஈஸ்வரா” வானத்தைப் பார்த்து கத்திவிடுவாள் நளிரா.
அதையெல்லாம் மனதில் வைத்து ஆர்த்தி நளிராவைக் கிண்டல் செய்யவும், அதற்கு நளிராவும் பதில் சொல்லவும் இங்கே ஒருவனுக்கு கட்டுப்பாடில்லாத சினம் மூளைக்கு ஏறியது.
பார்த்த முதல் பார்வையிலேயே அவள் மீது ஈர்ப்பு கொண்டவனுக்கு, உரிமையுணர்வும் தானாகவே பிறந்தது. அதெப்படி இன்னொருவனைப் பற்றிப் பேசலாம்? அவளை நோக்கி நடந்தான் சிபின்.
முந்தானையை தரையை தொடும் அளவிற்கு விட்டிருக்க, காற்றில் அங்குமிங்கும் அசைய, அதை இடுப்பில் சொருகியவள், சகோதரிகளைப் பார்க்க, அவர்களோ ஒருபக்கமாய் அமர்ந்து மாமியாருடன் உறவை வளர்த்துக்கொண்டு இருந்தார்கள்.
மாமியார்கிட்ட பேசறதுக்கு எதுக்குடா பீச்சுக்கு வராங்க? அதுவும் துணைக்குத் தன்னையும் இழுத்துக்கிட்டா வரணும்?. இந்த நேரத்தில் பாட்டு கிளாஸ் போனால் மனதிற்கு உற்சாகமாக இருக்கும். சொல்லித் தரவோ அல்லது கற்றுக் கொடுக்கவோ அவள் செல்லவில்லை, பிள்ளைகளோடு சேர்ந்து பாடல்களை பாடி நேரத்தை செலவிடுவாள். பிடித்த விஷயம் என்பதால் அவளும் பிள்ளைகளோடு சேர்ந்து சிறுபிள்ளையாக மாறிவிடுவாள்.
சரிவரட்டுமென ஒரு படகின் மீது சாய்ந்து நின்றாள். ஆளுயற படகு மணலின் மீது ஊன்றி உறுதியாய் நின்றது. மீன் பிடி படகிற்கே உண்டான வாசம் நாசியில் காரமாய் ஏறினாலும் அவளுக்கு அது பழகிய ஒன்றுதான் என்பதால், அருவெறுப்பாய் முகம் சுளிக்கவில்லை. மணலில் புதைந்திருந்த வெண் சிப்பிகளை வலது காலால் உதைத்து விளையாடிபடி நின்றிருந்தாள்.
கடல் காற்று மேனியை வருடி குளிரச் செய்ய முந்தானையை இழுத்து போர்த்திக்கொள்ள, வலது கரத்தை பின்புறம் நீட்ட, அதுவோ முரடனின் வசம் சிக்கிக்கொண்டது.
“அய்யோ!” திடுக்கிட்டு திரும்பியவளை,
சிபினின் வலிய கரம் அவளது இடையை இறுகப் பற்றி வெடுக்கென தன்னை நோக்கி இழுத்தது.
இழுத்த வேகத்தில் அவளது இதழ்களில் தன் இதழ்களை பதித்தே விட்டான். முடிவில்லாத முரட்டு முத்தம், பெண்ணின் இதழ் தேனை ருசித்தவனுக்கு இடம் பொருள், ஏன் தன்னை யாரென்றே அறியா கன்னியவளின் மனநிலையும் மறந்து போனது. காற்றுக்கும் பித்துப்பிடித்ததோ பலமாக அவர்கள் இருவரையும் வீழ்த்திவிடும் வேகத்துடன் மோத, வலிய ஆண்மகன் அவளையும் சேர்த்து தன்னோடு தாங்கி நின்றான்.
அவன் கைகளுக்குள் சிறுத்தையிடம் சிக்கிய புள்ளி மானாய் சிக்கித் தவித்த பெண்ணவளோ அவன் மார்பில் கைவைத்துத் தள்ள முற்பட, ம்ஹூம் உடும்பு பிடியிலிருந்து இம்மியளவும் நகரத்தான் முடியவில்லை அவளுக்கு.
அவளது கூந்தலில் இருந்த மல்லிகைப்பூவை எடுத்துவிட்டு, தான் வாங்கி வந்ததை அவளுக்கு சூடிவிட்டவன், விரும்பியே அதனை முகர்ந்து பார்த்திட, அவளின் வாசனை மல்லிகைப்பூவை தோற்கடிக்க, நறுக்கென பற்கள் பதிந்தது அவள் கழுத்தில்.
“ம்ம்ம்” நளிர்பெண் சுதாரித்து விலகும் முன்னர் ஒரு முத்த யுத்தம் நடந்து முடிய, அவனது வலிய கரங்கள் மெல்ல தளர, வில்லிலிருந்து விலகிய அம்பாக விலகி நின்றாள் நளிரா.
அரண்ட விழிகளுடன் வேக மூச்சுகளை எடுத்துவிட்டவள் அவனையே பார்த்தாள்.
அவள் மீதான தாபம் இன்னும் மீதூர, கிறங்கிய கூர் விழிகளை அவள் மீன் விழிகளோடு கலக்க விட்டவன் “யாருக்கு யாருடி மாப்பிள்ளை. கொன்னு புதைச்சிருவேன் பார்த்துக்க” மிரட்டவும் செய்தான்.
இவளுக்கோ யாரோ பொறுக்கி போல இருக்கேன்னு அச்சம் வந்தது. சுற்றுமுற்றும் பார்த்தவளுக்கு யாரையும் அங்கே காணாது போக, சகோதரிகள் இருவரும் சற்று தள்ளி போனில் தஞ்சமடைந்திருக்க, எதிரில் நிற்பவனிடமிருந்து தப்பித்தால் போதுமே, யாராவது காப்பாற்ற வருவார்களா என்று அக்கம்பக்கம் பார்த்தாள்.
அவளுக்குத்தான் அவன் புதியவன், அவனுக்கோ ஒரு நாளில் கற்பனையிலேயே அவளுடன் வாழ்ந்திருந்தான், அதனால் மோக முத்தங்களுக்கிடையில் விரல்களால் தேகத்தில் தன் தடங்களை பதித்துவிட. தளிர் தேகத்தை உணர்ந்த கைவிரல்களை ஆசையாய் பார்த்தவன் அவளையும் ரசித்திட.
அவளோ அவன் தொட்ட இடங்களை அழுந்தித் தேய்த்தாள்.
அதில் போன ஊடல் திரும்பவும் நெஞ்சத்தில் மஞ்சம் கொள்ள, இதுதான் சாக்கென்று அவளது தலைமுடியை கொத்தாகப் பற்றி தன் அருகே இழுத்தவன் “நீ எனக்கு மட்டும்தான்டி. மனசுக்குள்ள எழுதி வச்சுக்க” அவள் காதோரம் உருமியவனின் குரலில் அவளது நெஞ்சு சில்லிட்டுப் போனது.
தேகமெல்லாம் அறிமுகமற்றவனின் அத்துமீறலில் நடுநடுங்க, அவனை எதிர்க்கும் துணிவு கூட வாறாது அப்பாவியாய் நின்றிருந்தாள். முந்தானை ஒரு ஓரமாய் விலகி சரிந்திருக்க, பார்வைக்கு விருந்தான அழகில் அவனது கண்கள் சிவந்தே போனது. மூச்சே நின்றுவிடும் போலாக, “மை காட். கொல்லுறடி” கேசத்தை அழுந்தக் கோதி விடுவித்தவன் அவள் அருகில் செல்ல.
அவனது பார்வை அங்கம் சுட, பதறி முந்தானையை ஒழுங்கு படுத்தியவள், அங்கிருந்து ஒரே ஓட்டமாய் ஓடிப்போனாள்.
வேகமாய் ஓடியவள் சைத்ரா மீது விழுந்தாள்.
ஆர்த்தியும் சைத்ராவும் ஒரு பக்கமாக அமர்ந்து வருங்கால மாமியாரிடம் சமையல் குறிப்புகளைக் கற்றுக்கொண்டிருக்க, அவர்கள் மீதுதான் பொத்தென்று விழுந்தாள் நளிரா.
“ஏய் பிசாசு. தள்ளுடி வலிக்குது” தங்கள் மடிமீது கிடப்பவளை உருட்டி கீழே தள்ளிவிட்டனர் சகோதரிகள் இருவரும்.