• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,247
Reaction score
3,666
Points
113
வேதம் – 6

முத்துக்கிருஷ்ணன் மகனை எரித்துவிடுவது போல பார்த்தார். வத்சலா அன்பழகன் கையில் பட்டென்று ஒரு அடியை அடித்தார்.

“ஏன் டா, அந்தப் பொண்ணு பின்னாடி போக மாட்டேன்னு எழுதித் தர சொன்னா, என்ன எழுதி வச்சிருக்க நீ?” அறிவழகன் கூட அன்பழகன் செயலில் கோபம்கொண்டான்.

இனிமேல் வேதவள்ளியின் பின்னே சுற்றக்கூடாது என காவலர் எழுதச் சொல்ல, அதற்கு எதிர்மாறாக எழுதியிருந்தான் ஆடவன்.

‘எழிலை மட்டுமல்ல, வேதவள்ளியைக் காயப்படுத்துபவர் யாராக இருந்தாலும், அவர்களையும் இப்படி அடித்து துவைத்துவிடுவேன். இது எல்லோருக்கும் பொருந்தும், அவளுடைய பெரியப்பா, பெரியம்மாவிற்கும் கூட.

அப்புறம், வேதா பின்னாடி போகாம, அவளைப் பார்க்காம இருக்குறது எல்லாம் முடியாத காரியம். வாரத்துல ஆறுநாள் மட்டும்தான் பின்னாடி போறேன். ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் அவளைப் பார்க்காம, அந்த நாளே எனக்குப் போக மாட்டுது. இதுல வேதாவைப் பார்க்காம இருக்கது எல்லாம் நோ சான்ஸ்.

என்றும்
வேதாவின் அன்பு ❤️

என்று அந்தக் காகிதத்தில் எழுதியிருந்தான் ஆடவன்.

“அங்கிள், அவனைக் கூப்பிட்டு வேற லெட்டரை எழுதிக் கொடுக்க சொல்லுங்க...” காவலர் பல்லைக் கடிக்க, முத்துக்கிருஷ்ணன் மகனைத் தேட, அவன் வெளியேறியிருந்தான்.

விறுவிறுவென வெளியே சென்ற அன்பழகன் தனது இருசக்கர வாகனத்தில் பறந்திருந்தான். எல்லோரும் அவனைத் தேட, “ம்மா, உன் பையன் அந்தப் பொண்ணு பின்னாடி போய்ட்டான். அப்பாகிட்டே சொல்லு போ...” அறிவு தன் தாய் காதைக் கடிக்க, வத்சலா நொந்து போனார்.

“ஏங்க, அவன் கிளம்பி போய்ட்டான்...” பெண்மணி பாவமாகக் கூற, முத்துக்கிருஷ்ணன் அவரை முறைத்தார்.

“கர்ணா, நான் அவனை உன்னை வந்து பார்க்கச் சொல்றேன் பா. இப்போ அவன் கிளம்பி போய்ட்டான். தப்பா எடுத்துக்காத...” என அந்த நாளின் மன்னிப்பு படலத்தை அத்துடன் முடித்துக்கொண்டு வீட்டிற்கு சென்றார் மனிதர். வத்சலா மனம் முழுவதும் பயத்துடனும் பதற்றத்துடனும் இருப்பிடம் சென்றார். அறிவு தம்பியைத் தேடி பார்த்துவிட்டு அவனும் வீட்டை நோக்கி நகர்ந்தான்.

“வேதா, நீ வீட்டுக்குப் போ. நானும் அம்சும் எழிலை டாக்டர்கிட்டே காட்டீட்டு கூப்ட்டு வர்றோம்...” என்ற முருகையா மகன் மற்றும் மனைவியுடன் மருத்துவமனைக்கு நகர்ந்தார். வேதவள்ளியை மறவாமல் ஒரு தானியில் ஏற்றிவிட்டுத்தான் சென்றிருந்தார் மனிதர்.

இருசக்கர வாகனத்தில் அந்த தானியின் பின்னே சென்ற அன்பழகன், அது நகராதவாறு முன்னே சென்று தன் வாகனத்தை நிறுத்தினான். அவனை வெற்றுப் பார்வை பார்த்த வேதவள்ளி, வாகனத்திலிருந்து இறங்கவே இல்லை.

“தம்பி, யாருப்பா நீ? எதுக்காக ஆட்டோவை மறைக்கிற மாதிரி டூவீலரை நிப்பாட்டி இருக்க?” தானி ஓட்டுநர் வினவ,

“ரெண்டு நிமிஷம் பேசிட்டு போயிட்றேன் ண்ணா. நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணுதான்...” அன்பழகன் கூறியதும், அதிர்ந்து அவனை நோக்கிய வேதவள்ளியின் முகம் பின் முறைப்பைத் தத்தெடுத்தது.

“வேதா... அது...” என்றவன் அவள் முகத்திலிருந்தப் பார்வையை அகற்றி சுற்றிலும் படரவிட்டான். வலக்கை உயர்ந்து வலதுபுற நெற்றியைத் தடவ, குரலை சரி செய்துகொண்டவன், “சாரி டி...” என்றான் எங்கோ பார்வையைப் பதித்தபடி.

அவன் கூறியதும் பெண் இதழ்களில் இகழ்ச்சிப் புன்னகை. ‘யாருக்கு வேண்டும் உன்னுடைய மன்னிப்பு?’ என்பது போல அவனைப் பார்த்தாள்.

அந்தப் பார்வை, அது எதோ செய்தது அவனை. இப்படித்தானே ஒவ்வொரு முறையும் தன்னை அலட்சியம் செய்வாள் பெண். தானியை விட்டிறங்கியவள், அவன் முன்னே கையைக்கட்டி நின்றாள். ஒரு வார்த்தைக் கூட உதிர்க்கவில்லை. பாவையின் உடல் மொழியே அவனுக்கு உள்ளத்தை எடுத்துரைத்தது.

தொண்டையைச் சரி செய்தவன், “சாரி டி... நான் எதையும் வேணும்னு பண்ணலை. அவன் உன்னை பேசுனதும், நீ கண்ணு கலங்கி நின்னப்போ, எதையும் திங்க் பண்ண தோணலை. கோபம் மட்டும்தான் வந்துச்சு, அதான் அடிச்சுட்டேன். அந்த நாயை அடிச்சதுக்கு எல்லாம் சாரி கேட்க மாட்டேன். என்னாலதானே நீ இவ்வளோ தூரம் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் வர வேண்டியதாப் போச்சேன்னு ஒரே கில்ட்டா இருக்கு...” என்றவன் குரலில் தவறு செய்துவிட்ட பாவனை துளிகூட இல்லை. ஆனால் எல்லோரிடமும் பேசும்போதிருக்கும் அலட்சியமும் திமிரும் இல்லை. தளர்ந்திருந்தது உடல்மொழி. குரலில் மென்மை கொட்டிக் கிடந்தது. அதை பெண்மை உணரத்தான் செய்தது.

அவன் வார்த்தைகளில், பேச்சில், செயலில், மனம் முழுவதும் பயம்தான். தைரியம் முழுவதும் நடந்துவிட்ட நிகழ்வில் வடிந்திருக்க, இமையோரம் துளிர்த்த நீரை உள்ளிழுக்க முயன்று தோற்றாள் பாவை.

அதை கவனித்துவிட்ட அன்பழகன், “ப்ம்ச்... அழாத வேதா. ஏதோ மாதிரி இருக்கு டி‌‌...” என்றவனின் குரல் முழுவதும் மன்றாடல்தான். பெண் விழிகளில் வழியும் ஒவ்வொரு சொட்டு நீரும் ஆடவனை பதம் பார்க்கும் கத்தி போல உணர்ந்தான்.

“என்னைத் திட்டணும்னா, வாயைத் தொறந்து திட்டிக்கோ. இப்படி அழுதுக்கிட்டே தூங்காம, சாப்பிடாம, உன்னை நீயே தண்டிச்சுக்காத” என்றவனின் பார்வை பாவையின் சோர்ந்திருந்த விழிகளிலும் வதனத்திலும் நிலைத்தது.

“அந்தப் பொம்பளை, உங்க பெரியம்மா என்ன சொன்னாலும் கேட்டுட்டே நிக்காத. பதில் பேச பழகு. இல்லை குத்திட்டேதான் இருப்பாங்க” அன்பழகன் குரலில் அம்சவேணியின் மீதான அதிருப்தியே தெறித்தது.

“அவன் வேற எதுவும் வாலாட்டுனா சொல்லு, அடையாளமே இல்லாம அடிச்சு துவைச்சுட்றேன்‌‌” என்றவனைத் திரும்பிப் பார்த்தாள் பெண். இத்தனை நேரம் அவன் தன்னிடம்தான் பேசுகிறான் என்பதை கவனிக்காதது போல முகத்தை மற்றைய பக்கம் திருப்பியிருந்தவள், இப்போது தீர்க்கமாக அவனைப் பார்த்தாள்.

‘ரௌடியா டா நீ?’ என்று பார்வையால் சுட்டவளிடம் லேசாகத் திணறிப் போனான் ஆடவன். கோபத்தில் சிவந்திருந்த முகம் அவனது சிந்தையை ஆக்கிரமிப்பு செய்து, சிந்தனையைத் தடை செய்திருந்தது. ஏனோ இந்தக் கோபம் தனக்காக, தன் மீதுள்ள அக்கறையினாலா? என்ற கேள்விக்கு விடை தெரியாத போதும், அந்த நொடி தித்தித்தது அன்புவிற்கு.

கைகளைக் கட்டி நின்று தன்னை முறைக்கும் இந்த வேதா புதிது. இதுவரை தன்னை நிமிர்ந்து கூடப் பார்த்திராத பெண்ணின் முகத்தில் இத்தனை பாவனைகள். ஒவ்வொன்றும் அவனைச் சுருட்டி பாவையின் பாதத்தில் அவன் மனதை சேர்ப்பிக்க விழைந்தது. முதன்முதலில் மூச்சடைத்தது இந்தப் பெண்மை.

இதுவரை எத்தனையோ பேரிடம் சண்டையிட்டு, அடிதடி வரை சென்றவனுக்கு இந்தப் பெண்ணின் விழி பார்த்துத் திக்கித் திணறிப் போனான். படபடவென அடித்த மனதை சமன் செய்ய கைகளை மடக்கியவன், பின்புறமாகத் தூக்கி பின்னந்தலையைக் கோதிக்கொண்டே ஒற்றைக் கண்ணால் அவளைப் பார்க்கவும், விறுவிறுவென தானியிலேறி, “அண்ணா, ஆட்டோவை எடுங்க” என்றாள் வேதவள்ளி.

ஓட்டுநர் வாகனத்தை இயக்கவும், தானும் அவள் பின்னே சென்றவன், வேதவள்ளி வீட்டிற்குள் நுழையும் வரை அங்கேயே நின்று அவளைப் பார்த்துவிட்டுதான் அகன்றான்.

வீட்டிற்குள்ளே நுழைந்த வேதாவுக்கு விழிகள் மீண்டும் பனிக்க, அதை துடைத்துக்கொண்டு குளித்து முடித்து வேலைக்குச் செல்ல ஆயத்தமானாள். மருத்துவமனைக்குச் சென்றவர்கள் வீடு வந்து சேர்ந்ததும், “நான் வேலைக்குப் போய்ட்டு வர்றேன் பெரியப்பா” என முருகையாவிடம் முகம் பார்க்காது கூறிவிட்டு நகர்ந்தாள் வேதா.

அன்பழகன் வீட்டிற்குள்ளே நுழைய, “எங்க டா போய்ட்டு வர்ற?” என்று வினவினார் வத்சலா.

“வேதாவைப் பார்த்துட்டு வர்றேன் மா. அவ தனியா வீட்டுக்குப் போனா. அதான் வீடு வரை போய் விட்டுட்டு வர்றேன்...” எதுவுமே நடவாதது போல கூறி நீள்விருக்கையில் பொத்தென அமர்ந்தான் அன்பழகன்.

அதில் பல்லைக் கடித்தார் முத்துக்கிருஷ்ணன். “டேய்! அந்தப் பொண்ணு சேஃப்டியை அவ வீட்ல இருக்கவங்க பார்த்துப்பாங்க. இனிமே நீ அவ பின்னாடி போகக் கூடாது” வத்சலா தீர்க்கமாக உரைத்தார். கணவர் முகம் பார்த்து பெண்மணிக்கு லேசாக உதறல் எடுத்தது. அதை கோபமாக மகன் மீது காண்பித்தார்.

“ம்மா, இப்போ சொல்றதுதான் லாஸ்ட் வரை. அவதான் உன் மருமக. அவளைப் பார்க்காத, பின்னாடி போகாத, பேசாதன்னு எல்லாம் சொல்லீட்டு இருக்காத” அன்புவின் குரல் அழுத்தமாக வெளிவந்தது.

“வத்சலா, உன் மகன் என்ன பேசுறான்னு தெரிஞ்சு பேசுறானா? இவனால இன்னைக்கு அசிங்கப்பட்டது நான்தான். இன்னும் என்னென்ன பண்ண காத்திருக்கானோ? முதல்ல அடிதடின்னு சுத்தீட்டு இருந்தான். படிச்சு முடிச்சு சொந்தமா கடை வச்சதும் திருந்திடுவானோன்னு நினைச்சு ஏமாந்துட்டேன். ஆனால், இப்போ பொண்ணு பின்னாடி சுத்தீட்டு இருக்கான்...” முத்துக்கிருஷ்ணன் கோபமாக மொழிந்தார்.

அவரது பேச்சில் எழுந்து நின்றவன், “இல்லை எனக்குத் தெரியலை மா. ஒரு பொண்ணை விரும்பி அவ பின்னாடி போறதுல என்ன பொறுக்கித்தனத்தை கண்டீங்க? ஏன் யாருமே காதலிக்கிறது இல்லையா?” என வினவினான்.

“யாரும் காதலிக்காம எல்லாம் இல்லை டா. உன்னை மாதிரி போலீஸ் ஸ்டேஷன் வரை பெத்தவங்களை கூட்டீட்டுப் போய் அசிங்கப்படுத்தலையே! இன்னைக்கு உங்க அப்பா அத்தனை பேர் முன்னாடியும் தலை குனிஞ்சு நின்னப்போ, அவ்ளோ உக்கிப் போய்ட்டாரு. அங்க வச்சு எதுவும் கேட்க கூடாதுன்னு அமைதியா கூட்டீட்டு வந்துட்டேன் நான்...”

“ப்ம்ச்... ம்மா, அவன் பண்ணது தப்புமா. அதான் நான் அடிச்சேன்” சலிப்பான குரலில் அன்பழகன் கூற,

“அதை கேட்க நீ யார் டா? அவங்க வீட்ல அதைப் பார்த்துப்பாங்க. நீ பொது சேவை செய்யத் தேவையில்லை. உன் வேலை எதுவோ, அதை மட்டும் பாரு” வத்சலா பல்லைக் கடித்தார்.

“ம்மா, அப்பா, இப்போ சொல்றதுதான். அவ யாரோ ரோட்ல போறவ இல்லை. அவளுக்கு ஒன்னுன்னா, யாரா இருந்தாலும் நான் அடிப்பேன். அவ என்னோட வேதா. இதை மனசுல பதிஞ்சு வச்சுக்கோங்க...” என்றவன் அறைக்குள் நுழைந்து பட்டென கதவை அடைத்தான்.

“வத்சலா, என்ன பேசுறான் உன் மகன். இவன் பேசுறதைப் பார்த்தா, நம்ம குடும்பத்தை அசிங்கப்படுத்தாம விடமாட்டான் போல. இவனால எனக்கு பிரஷர் ஏறுது. ரெண்டு புள்ளையைப் பெத்து நல்லாதான் படிக்க வச்சேன். ஒன்னு நல்லா இருக்கு. இன்னொன்னு மட்டும் ஏன் தறுதலையாப் போச்சுன்னு தெரியலை...” என்று முத்துக்கிருஷ்ணன் ஆதங்கப்பட,

“ப்பா... ஏன் கோபப்படுறீங்க. பிரஷர் ஏறப்போகுது. அமைதியாக இருங்க. நான் அவன்கிட்ட பேசுறேன்” என்ற அறிவழகன், தாய் தந்தையை சமாதானம் செய்து, அறைக்குள் நுழைந்தான்.

“டேய்! அங்கேயே நில்லுடா. அம்மா பேசுனதையேதான் பேசப் போறேனா, ரூம்க்குள்ள வராத. அப்படியே ஓடிரு...” அன்பழகன் கோபத்தில் கையை நீட்டிப் பேச, அவனை முறைத்த அறிவு, கதவை அடைத்துவிட்டு வந்து அவனருகில் அமர்ந்தான்.

“என்ன டா?” அன்பு முறைக்கவும், “டேய், நான்தான் டா கோபப்படணும். ஏன் டா இப்படி அம்மா, அப்பாவை டென்ஷன் பண்ற?” என வினவினான் அறிவு.

“நீயுமா டா?” ஆயாசமாக கட்டிலில் சரிந்தான் அன்பழகன்.

“உனக்கு அந்தப் பொண்ணைப் பிடிச்சிருக்கதுல எல்லாம் தப்பில்லை டா. ஆனால், நீ கோபத்துல அவனை அடிச்சது தப்பு. என்னதான் அவன் அப்படி பேசுனாலும், நீ உடனே கையை நீட்டியிருக்கக் கூடாது. வாயை விட கைதான் உனக்கு அதிகமாப் பேசுது” அறிவு ஆதங்கப்பட, விழிகளை முடி படுத்திருந்த அன்பழகன் செவியில் அவையெல்லாம் விழுந்தது.

“நீ போற பாதை தப்பு. நம்ம, அம்மா அப்பாகிட்டே ஏன் டா இப்படி பேசுற‌. பொறுமையா எடுத்து சொல்லி இருக்கலாம். அம்மா, அப்பா உன் விருப்பத்தைக் கன்சிடர் பண்ணியிருப்பாங்க. ஆனால், இப்போ அதுக்கெல்லாம் வாய்ப்பில்லை...”

எழுந்து அமர்ந்த அன்பழகன், “அவங்க கன்சிடர் பண்ணாலும், பண்ணலைனாலும் எனக்கு கவலை இல்லை டா. வாழப் போறது நானும் அவளும். எங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சா போதும்...” என்றவனை அறிவழகன் ஏகத்திற்கும் முறைத்தான்.

“சரி... சரி. விடு, நான் எதையும் வேணும்னு செய்யலை. சிட்சுவேஷன் அப்படி அமைஞ்சுடுச்சு. இனிமே கோபத்தைக் கன்ட்ரோல் பண்ண ட்ரை பண்றேன்...” என்று தமையனைச் சமாதானம் செய்தான் அன்பழகன்.

அதில் சற்று இறங்கிய அறிவு, “ஹம்ம்... எதா இருந்தாலும் யோசிச்சு செய் டா. அம்மா, அப்பாவை, குடும்பத்தைப் பாதிக்காத மாதிரி பார்த்துக்கோ டா” எனப் பெரியவன் நகர்ந்துவிட்டான்.

“என் புருஷனை அசிங்கப்படுத்துற மாதிரி எதுவும் செஞ்ச, அப்புறம் நான் உனக்கு அம்மாவா இல்லாம, அவருக்குப் பொண்டாட்டியா பேச வேண்டி வரும் டா. பார்த்துக்கோ” வத்சலா தன் பங்கிற்குக் கோபமாக அன்புவிடம் பேசிவிட்டுச் செல்ல, அந்த நாள் ஒருவருக்கும் உவப்பாக இல்லாது முடிந்தது.

மறுநாள் காலையில் சமைத்துக் கொண்டிருந்த வத்சலாவின் பார்வை சந்தேகமாக மகனைத் தழுவின. கடந்த சில மாதங்களாகக் காலை ஒன்பது முப்பத்துக்கு முன்பு அடித்துப் பிடித்து ஓடும் மகனை, கடையை சரியான நேரத்தில் திறப்பதற்காக ஓடுகிறான் என்று நினைத்திருந்தார். ஆனால், இப்போதுதான் அவருக்கு அவன் விரைவாகச் செல்வதற்கான காரணம் புரிந்தது.

“எங்க டா போற?” வத்சலா வினா எழுப்ப, “வேதாவைப் பார்க்கப் போறேன் மா. இந்த டைம்க்குதான் அவ வேலைக்கு வருவா” அலட்டலில்லாத பாவனையில் கூறி விடை பெற்றவனைப் பார்த்து வத்சலா முறைக்க, முத்துக்கிருஷ்ணன் அவனது செயலில் தன் அதிருப்தியை முகத்தில் காட்டினார். ஏற்கனவே பட்டும்படாமலும் தொட்டும் தொடாமலும் இருந்த தந்தை மகன் உறவு அன்றோடு அறுந்து விட்டிருந்தது. வத்சலாதான் அதை ஒட்ட வைக்கப் போராடிக்
கொண்டிருந்தார்.

கண்டிப்பாக அன்பு வருவான் என உள்மனம் கூறியதை பொருட்படுத்தாமல் வேதவள்ளி பேருந்திலிருந்து இறங்கவும், சாலையின் மறுபுறம் தன் இருசக்கர வாகனத்தில் சாய்ந்து நின்று அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் அன்பழகன். ஆடவனை சட்டை செய்யாது, அவன் பார்வையை அலட்சியமாகக் கடந்துவிட்டாள் பெண். பின்பு அதுவே வாடிக்கையாகிப் போனது. தினமும் காலையிலும் மாலையிலும் அவள் பின்னே வருவதை பிரதானக் கடமையாக மாற்றியிருந்தான் அன்பழகன்.

நடந்த நிகழ்வை அசைபோட்டவாறே உறங்கிப் போனாள் வேதவள்ளி. மறுநாள் காலையில் அவள் வேலைக்குச் செல்லத் தயாராகி நிற்க, முருகையா கூறியது போல தன் இருசக்கர வாகனத்தை உயிர்ப்பித்தார்.

“வாம்மா, உன்னை இறக்கி விட்டுட்டு நான் வேலைக்குப் போறேன்...” என்று அவர் கூறியதும், அவரது இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்தாள் வேதவள்ளி.

இருவரும் நகரவும்,
“பெட்ரோலுக்குப் பிடிச்ச கேடு. ட்ரைவர் வேலை மட்டுந்தான் பார்க்காம இருந்தாரு. இப்போ அதுவுமா?” எனப் புலம்பினார் அம்சவேணி.

தனது ஆஸ்தான இடமான தேநீர் விடுதியில் நின்றவாறே சூடான தேநீரை பருகிக்கொண்டிருந்த அன்பழகனின் விழிகள் ஒவ்வொரு பேருந்தையும் எதிர்பார்ப்புடன் நோக்கிய வண்ணமிருந்தன. நேற்றைய நிகழ்வின் நினைவில் இதழ்களில் புன்னகைப் படர்ந்தது. பாவையின் பார்வை இப்போது நினைத்தாலும் ஆடவனில் குளுமையைப் பரப்பியது. தன் அன்பை, நேசத்தை அவளிடம் இறக்கி வைத்த பின்பு பெண்ணின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்று ஆர்வம் முகத்தில் கொட்டிக்கிடந்தது.

முருகையா வாகனம் சாலையில் பயணித்ததை கவனித்த அன்பழகனின் முகம் ஒரு நொடி யோசனையைக் காட்டி பின், அவருக்கு பின்புறம் அமர்ந்து வந்த வேதவள்ளியில் நிலைத்தது. நேற்றைய தன் செயலின் எதிர்வினையா இது? என யோசித்ததும் அவன் இதழ்களிலிருந்த சிறிய புன்னகை பெரிதாய் விரிந்து முகம் முழுவதும் படர்ந்தது.

முருகையாவும் அவனைத்தான் பார்த்தார். அவன் பார்வை வேதவள்ளியைவிட்டு நகரவில்லை என்பதை உணர்ந்து அவனை முறைத்தார் பெரியவர். அவரைப் பார்த்து கேலியாகச் சிரித்தவன், தன் கால்சராயில் கையை நுழைத்து குளிர் கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டான். அலட்சியமான பாவனையை முகத்தில் தாங்கியிருந்தான். உடல்மொழி கூட திமிராகத்தான் அவருக்குத் தோன்றியது.

வேதவள்ளியையும் கவனித்தார் மனிதர். ஒருநொடி கூட அன்பழகனைப் பெண் நிமிர்ந்து பார்க்கவில்லை. அதையும் அவர் மனது குறித்துக் கொள்ள, அவளை வணிகவளாகத்தின் வாயிலில் இறக்கிவிட்டு, “சாயங்காலம் நானே வந்து கூப்பிட்டுப் போறேன் வேதா மா. நீ பஸ்ல வராத...” என்று வலியுறுத்தி நகர்ந்தவர், நேரே அன்பழகனிடம்தான் சென்றார்.

மு
ருகையாவின் செயல்களை அவதானித்த வேதவள்ளி, இருவரையும் பயத்துடன் பார்த்தாள். அன்பு இன்னும் அதே போலதான் நின்றிருந்தான்.





 
Well-known member
Messages
1,058
Reaction score
763
Points
113
Superrrrrrrrr superrrrrrrrr
Ivarukita epdi pesa porano theriyalaye 😕😕😕😕😕😕
 
Well-known member
Messages
551
Reaction score
389
Points
63
இவர் கிட்ட என்ன சொல்ல போகிறான்?
 
Top