- Messages
- 1,247
- Reaction score
- 3,666
- Points
- 113
வேதம் – 5
மறுநாள் காலை காவல்நிலையத்தில்தான் விடிந்திருந்தது வேதவள்ளிக்கு. அவளிடம் ஒரு வார்த்தைக் கூட நடந்ததை விசாரிக்காத முருகையா, காலையிலே மனைவி மற்றும் மகனுடன் காவல் நிலையம் சென்றுவிட்டார். வேதவள்ளியும் அவர்களுடன்தான் சென்றாள்.
அழுதழுது முகமெல்லாம் சிவந்திருந்தது பெண்ணுக்கு. இமைகள் தடித்து வீங்கியிருந்தன. கன்னத்தைக் கண்ணீர் தடங்கள் ஆக்கிரமிப்பு செய்திருக்க, நிராதரவாக நின்றிருந்தாள். மனது மரத்துப் போன உணர்வு.
தனக்கென யாருமின்றி ஆதரவற்று நிற்கும் நிலையெல்லாம் கொடுமையின் உச்சக்கட்டம். அவர்கள் மூவரும் ஒரு குடும்ப சகிதமாக நிற்கும்போது, தான் மட்டும் தனியாள் என்று பிரித்துக் காட்டுவது போல தோன்ற, விழியோரம் துளிர்த்த நீரை உள்ளிழுத்துக்
கொண்டாள்.
‘யாரும் இல்லை தனக்கு. நான் மட்டும்தான் இப்போதைக்கு எனக்கான ஆறுதல். யாரிடமும் ஆறுதல் தேட விழையாதே மனமே!’ எனத் தனக்குத் தானே கூறிக்கொண்டாள் பெண்.
காலையிலே வீட்டின் அழைப்புமணி அழைக்கவும், எழுந்து சென்று கதவைத் திறந்தார் வத்சலா. வாயிலில் நின்றிருந்த காவலரைக் கண்டதும், உள்ளே பயபந்து ஒன்று உருளத் துவங்கியது.
“ஏம்மா, இங்க அன்பழகன்றது உங்கப் பையனா?” காவலர் வினவவும், முத்துக்கிருஷ்ணன் அந்தச் சத்தத்தில் வெளியே வந்தார்.
“யார் வேணும் சார் உங்களுக்கு?” அவர் வினா எழுப்ப, “உங்கப் பையன் அன்பழகன் மேல அடிதடி கேஸ் வந்திருக்கு. அவனைக் கூட்டீட்டு போகத்தான் வந்தோம்” காவலர் கூறியதும்,
“ஐயோ சார், என் பையன் அடிதடிக்கு எல்லாம் போகமாட்டான். நீங்க வீடு மாறி வந்துட்டீங்க” தாயாய் பதறிப்போனார் வத்சலா.
“ஏழாம் நம்பர் வீடு இதானே? காலேஜ்ல ப்ரொஃபசரா வேலை பார்க்குற முத்துக்கிருஷ்ணன் உங்க ஹஸ்பண்ட் தானே?” காவலர் கேட்கவும், வத்சலாவின் தலை தானாக ஆடியது.
“சார், என்ன பிரச்சனை? எதுக்காக கேஸ் கொடுத்துருக்காங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?” முத்துக்கிருஷ்ணன் வினாத் தொடுக்க, “உங்கப் பையன் ஒரு பொண்ணு பின்னாடி சுத்தியிருக்கான். அதை கேட்க வந்த அந்தப் பொண்ணோட சொந்தக்காரனைப் போட்டு அடிச்சிருக்கான். எல்லாத்தையும் இங்கேயே சொல்ல முடியாது. ஏதோ நல்ல குடும்பம், இன்ஸ்பெக்டருக்கு தெரிஞ்சவங்கன்னுதான் இவ்ளோ பொறுமையா பேசுறோம். பையனை கூப்பிடுங்க முதல்ல...” காவலர் குரலை உயர்த்திப் பேசினார்.
“சார், நீங்க முன்னாடி போனீங்கன்னா, ஒரு ரெண்டு நிமிஷத்துல என் பையனை நானே கூட்டீட்டு வர்றேன். நீங்க கூட்டீட்டுப் போனா, எல்லாரும் வேடிக்கைப் பார்ப்பாங்க சார்...” முத்துக்கிருஷ்ணன் தயங்கினார்.
“அதை கை வைக்கிறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும். பத்து நிமிஷத்துல ஸ்டேஷன் வந்து சேருறீங்க...” சிடுசிடுத்த காவலர் நகரவும், வத்சலா அன்பழகன் அறைக்குள் நுழைந்தார்.
நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான் அவன். “டேய் அன்பு, எழுந்திரி டா. சும்மா இல்லாம, எவன் மேலடா கையை வச்சுட்டு வந்த? போலீஸ் வந்துட்டாங்க டா...” மகனைப் போட்டு உலுக்கினார் வத்சலா.
“ப்ம்ச்... என்னம்மா?” என எழுந்தவனுக்கு தாயின் வார்த்தைகள் தெளிவாகச் செவியை அடையவில்லை.
“டேய், நேத்து என்னடா பண்ணிட்டு வந்த? ஏதோ பொண்ணு பின்னாடி சுத்துறேன்னு சொல்றாங்க. உண்மையா டா? கொஞ்ச நாள் அடிதடிக்குப் போறதில்லைன்னு நிம்மதியா இருந்தேன். அது உனக்குப் பொறுக்கலையா டா...” வத்சலா வசைபாடிய பிறகுதான் அன்பழகனுக்கு நேற்றைய நிகழ்வு நினைவில் படர்ந்தது.
“ஏன் டா அமைதியா இருக்க? வாயைத் தொறந்து சொல்லு டா. போலீஸ் ஸ்டேஷனுக்கு வர சொல்லிட்டாங்க...” வத்சலா கோபமாகப் பேச, எரிச்சலாய் வந்தது அன்புவிற்கு.
அவரது கையைத் தட்டிவிட்டவன், “ம்மா, நீங்க யாரும் ஸ்டேஷன் வர வேணாம். நான் மட்டும் போய்ட்டு வர்றேன்...” என்று அவன் கூறவும்,
“என்ன டி சொல்றான் உன் மகன். போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் கூட்டீட்டு போகாம இருக்கானேன்னு நினைச்சேன். இப்போ அதுவும் நடந்துடுச்சு. இதுல பொண்ணு பின்னாடி வேற சுத்தியிருக்கான். குடும்ப மானமே போச்சு...” முத்துக்கிருஷ்ணன் சட்டையின் பொத்தான்களை மாட்டியவாறே பேச,
“ம்மா, அவரை வரவேணாம்னு சொல்லு. நான் பார்த்துக்கிறேன். அதான் அவர் மானம் போகுது இல்லை...” பல்லைக் கடித்தவன் முதுகில் சுளீரென்று ஒரு அடியைப் போட்டார் வத்சலா.
“செய்றதையும் செஞ்சுட்டு இவனுக்குக் கோபம் ஒன்னுதான் குறை. முதல்ல போய் ட்ரெஸை மாத்து...” வத்சலா கூறுவதைப் பொருட்படுத்தாமல், அணிந்திருந்த இரவு உடையை சரிசெய்துகொண்டே இருசக்கர வாகனத்தின் சாவியை எடுத்தவாறே வெளியே விரைந்தான் அன்பழகன். இவர்கள் சத்தத்தில் எழுந்து வந்த அறிவழகன், தாய் தந்தை பேச்சில் ஏதோ பிரச்சனை என ஊகித்து, தம்பியின் பின்னே ஓடினான்.
“டேய் அன்பு, என்னாச்சு டா?” மூச்சு வாங்க அறிவழகன் வினவ, “போலீஸ் ஸ்டேஷன் வரை போய்ட்டு வர்றேன். அம்மா, அப்பாவை வரவிடாமப் பார்த்துக்கோ” என்றவன், தனது இருசக்கர வாகனத்தை உயிர்பித்தான்.
“இந்தக் காலையில போலீஸ் ஸ்டேஷன் எதுக்கு டா போற? அப்பா வேற கோபமா இருக்காரு” அறிவு புரியாது வினவ,
“நேத்து ஒரு நாயை அடிச்சேன். அவன் ஸ்டேஷன்ல போய் கம்ப்ளைண்ட் கொடுத்துட்டான் போல. என்னென்னு கேட்டுட்டு வர்றேன் டா” என்ற அன்பு நிற்காமல் பறந்துவிட, சில நொடிகள் அவன் கூறியது புரியாது விழித்த அறிவு, “அடப்பாவி...” என்று அதிர்ந்தான்.
முத்துக்கிருஷ்ணன் தனது வாகனத்தை இயக்கவும், வத்சலாவும் அவரும் காவல்நிலையத்தை நோக்கி நகர்ந்தனர். ‘விட்டுட்டு போய்ட்டாங்க...’ என்று எண்ணிய அறிவழகன், ஒரு தானியைக் கையைக்காட்டி ஏறி, தானும் அவர்கள் பின்னே சென்றான்.
காவல்நிலையம் அடைந்ததும் உள்ளே சென்ற அன்புவின் விழிகள் நிலைத்தது பெண்ணிடம்தான். பாவையின் சிவந்து தடித்திருந்த இமைகளும், அவள் நின்றிருந்த தோற்றத்திலும் உயிரே போய்விட்டது ஆடவனுக்கு. மனம் படபடக்க அவளை நோக்கி நகர்ந்தான்.
“ஏய் வேதா, என்னாச்சு டி? அடிச்சாங்களா உன்னை...” என அவளருகே பதறி விரைந்தவன் விழிகள் பெண்ணை முழுமையாக அளவெடுத்தன. அவன் தன்னருகே வருவதைக் கண்டு பயந்து இரண்டு அடிகள் பின்னே சென்றாள் வேதவள்ளி.
“நைட்டெல்லாம் தூங்கலையா நீ. ஏன் டி இப்படி அழுதிருக்க. அந்தப் பொம்பளை எதுவும் சொல்லுச்சா?” என்றவன் கோபத்தில் பல்லை நறநறவெனக் கடிக்கவும், “ப்பா, அவன்தான் பா” என எழில் அன்புவை கையைக் காட்டினான்.
“ஏய்! அங்கென்ன டா பேச்சு உனக்கு? இங்க வா...” என்று காவலர் அழைக்கவும், அவர் முன்னே சென்று நின்றான் அன்பு.
“அங்கிள் எங்க டா?” காவலர் கருணா வினவினார். முத்துக் கிருஷ்ணனுக்குத் தூரத்து சொந்தம் அவர்.
“அவர் வரலை. நான் மட்டும்தான் வந்தேன்...” என்றவனின் பார்வை மொத்தமும் வேதாவிடம்தான். அவளின் அழுத வதனம் அவனை ஏதோ செய்தது. மனது தவித்தது அவளருகே சென்று ஈரம் படர்ந்த விழிகளில் முத்தமிட்டு, தன்னோடு அணைத்துக் கொள்ளவேண்டும், ஆறுதல் மொழி கூறி, தன்னுடனே அழைத்துச் செல்லவேண்டும் என மனது உந்தியது. அகத்திலிருப்பதை முகத்தில் காட்டாதிருக்க வெகு பிரயத்தனப்பட வேண்டியிருந்தது ஆடவனுக்கு. அவன் பார்வை தன்னைத் துளைத்தாலும், நிமிரவேயில்லை பெண்.
“டேய்! இங்க நான் கேட்கிறேன். அங்க என்ன பார்வை உனக்கு?” அந்தக் காவலர் அதட்டவும், முத்துக்கிருஷ்ணனும் வத்சலாவும் வந்துவிட்டனர்.
“வாங்க அங்கிள், உட்காருங்க...” அவர் புன்னகைக்கவும், சங்கடமாக அமர்ந்தார் முத்துக்கிருஷ்ணன்.
“ம்மா, இன்ஸ்பெக்டர் அவனுக்குச் சொந்தம் போல” எழில் தன் தாயின் காதில் ஓதினான். அம்சவேணியும் அதைப் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்.
“சார், இங்க வாங்க...” முருகையாவை அழைத்து முத்துக்கிருஷ்ணன் அருகில் அமர வைத்தார் காவலர்.
“இவங்க வீட்டுப் பொண்ணு பின்னாடி அன்பு சுத்தியிருக்கான். அதை கேட்கப் போனதுக்கு, இவர் பையன் மேல கையை வச்சுட்டான். அதனால அன்பு மேல இவர் கேஸ் கொடுத்திருக்காரு...” காவலர் விளக்கிக் கூறவும், தந்தையின் பார்வை மகனைத் தொட்டது.
“அவங்க சொல்றது எல்லாம் உண்மையா டா. அந்தப் பொண்ணு பின்னாடி சுத்துனீயா?” என்றவர் எழிலின் உதட்டிலிருந்த காயத்தைப் பார்த்தார். “அந்தப் பையனை அடிச்சீயா?” அவர் குரல் கடுமையாக வெளிவந்தது.
“ஆமாப்பா, ஆறுமாசமா அவ பின்னாடி சுத்துறேன். எனக்கு வேதாவைப் பிடிச்சிருக்கு. அதான் சுத்துனேன். அவனை அடிச்சதும் நான்தான். ரோட்ல வச்சு அவளை அசிங்கமா பேசுனான். அதான் வாயிலே ஒன்னுக் கொடுத்தேன்...” என்றவன் எழிலைப் பார்த்து திமிராக நின்றான். வேதாவும் அவனைத்தான் பார்த்தாள். பயமென்பது துளி கூட இன்றி அலட்சமாக நின்றிருந்தான் ஆடவன். மகன் பதிலில் தந்தை கொதித்துப் போனார்.
“சார், என்ன சார் சும்மா நிக்க வச்சு கொஞ்சீட்டு இருக்கீங்க. கூப்பிட்டு வந்து, லாக்கப்ல வச்சு அடிச்சு வெளுங்க சார். பொறுக்கிப் பையன்” அம்சவேணி எகிறவும்,
“யாரைப் பாத்துப் பொறுக்கின்னு சொல்றீங்க. என் பையன் அப்படியெல்லாம் இல்லை. உங்கப் பொண்ணு பின்னாடி வந்தானே தவிற, அவளுக்கு எந்தத் தொந்தரவும் கொடுத்திருக்க மாட்டான். வார்த்தையை அளந்து பேசுங்க” வத்சலா பொங்கிவிட்டார்.
மகன் மீது தவறிருந்த போதும், அவனைப் பிறர் பேசுவதைக் கேட்டு வேடிக்கைப் பார்க்க மனம் வரவில்லை. அன்புவை முறைக்கவும் தவறவில்லை வத்சலா. அவரும் வந்ததிலிருந்து கவனித்துக்கொண்டுதானே இருக்கிறார். புதல்வனின் பார்வை அந்தப் பெண்ணைவிட்டு இம்மியும் நகரவில்லை. உள்ளுக்குள்ளே மகனைத் திட்டித்தீர்த்தார் பெண்மணி.
“என்னங்க புள்ளையை வளர்த்து வச்சிருக்கீங்க. அடுத்த வீட்டுப் பையனை அடிக்கணும்னா? எவ்ளோ தைரியம் இருந்தா, என் பையனை அடிச்சிருப்பான்” அம்சவேணி கோபப்பட, “இனிமேலும் உங்கப் பையனை அடிப்பேன். வேதாவை தப்பா பேசுனா, யாரா இருந்தாலும் அடிப்பேன் நான்...” அன்பு சத்தமாகப் பேசினான்.
“சார், என்ன சார் இந்தப் பையன் இப்படி பேசுறான். நீங்க அமைதியா இருக்கீங்க...” இத்தனை நேரம் அமைதியாக இருந்த முருகையா எழுந்து நின்றுவிட்டார்.
“டேய்! வாயை மூடிட்டு சும்மா இருடா...” மகன் கையை அழுத்தினார் வத்சலா. அறிவழகன் உள்ளே நுழைந்தவன், தம்பியின் அருகில் சென்று நின்றான்.
“சார், இதெல்லாம் ஆகுற காரியம் இல்லை. உங்க சொந்தகாரப் பையன்னதும், நீங்க இப்படி உட்கார வச்சு பேசீட்டு இருக்கீங்க. நாங்க உயர்அதிகாரியைப் பார்த்து பேசிக்கிறோம்...” அம்சவேணி கூற,
“ஓ... இந்தாங்க நீங்க கொடுத்த கம்ப்ளைண்ட். எங்க கொடுக்கணுமோ நீங்கப் போய் கொடுங்க. எனக்கு இதை எப்படி டீல் பண்ணணும்னு தெரியும்...” முருகையா கொடுத்த புகார் காகிதத்தை நீட்டிய காவலர் முகம் முழுவதும் கோபம்தான்.
“அம்சு, கொஞ்ச நேரம் அமைதியா இரு. நான் பேசீட்டு இருக்கேன்ல!” மனைவியை அதட்டிய முருகையா, “சாரி சார், நீங்க அடுத்து என்னென்னு பாருங்க...” என காவலரைச் சமாதானம் செய்தார்.
“நீங்க கம்ப்ளைண்ட் கொடுத்ததும், நடந்தது என்ன? ஏதுன்னு விசாரிக்காம எல்லாம் ஆக்ஷன் எடுக்க முடியாது சார். எந்த போலீஸ்காரங்களும் அப்படியெல்லாம் எடுக்கவும் மாட்டாங்க. என்ன நடந்துச்சுன்னு விசாரிச்சாதானே தெரியும்?” அவர் கோபமாக வினவ, முத்துக்கிருஷ்ணன் மகனை ஏகத்துக்கும் முறைத்துக்கொண்டிருந்தார். அவருக்கு இரத்த அழுத்தம் வேறு எகிறிக் கொண்டிருந்தது.
“சாரி சார்...” முருகையா மீண்டும் மன்னிப்பை வேண்ட, “நீங்க கொடுத்த கம்ப்ளைண்டை நான் கன்சிடர் பண்ணி எஃப்.ஐ.ஆர் போட்டா, கேஸ் கோர்ட்டுக்கு வரும். எத்தனை ஹியரிங் போகும்னு தெரியாது. எத்தனை தடவைனாலும், உங்க வீட்டுப் பொண்ணும், பையனும் ஒவ்வொரு முறையும் கோர்ட்டுக்கு வரணும். ஏன், உங்க வொஃய்ப் கூட சாட்சி சொல்ல வரணும். இதுல உங்களுக்கு சம்மதமா?” என முருகையாவிடம் வினவியவர்,
“இல்லை சம்பந்தப்பட்ட ரெண்டு பேரும் பிரச்சனையைப் பேசி தீர்த்துக்குறீங்களா? உங்கப் பொண்ணு பின்னாடி அந்தப் பையன் வரமாட்டான்னு எழுதி வாங்கிடலாம். அதே மாதிரி உங்க வீட்டுப்பையன், ரோட்ல வச்சு அப்படியெல்லாம் பேசுனது தப்பு. எதுவானாலும், வீட்டுக்குள்ள வச்சுக்கோங்க பஞ்சாயத்தை” காவலர் கூறி முடிக்க, முருகையா சில நொடிகள் யோசித்தார். அவர் சொல்வதும் சரியாகத்தான் இருந்தது. வயது பெண் நீதிமன்றம், காவல்நிலையம் என அலைந்தால், அது நன்றாக இராது. அதுவுமின்றி எழிலரசனும் தன் மனைவியும் சேர்ந்து அலையநேரிடும். தன் குடும்பப் பெயர் கெடுவதை விரும்பவில்லை முருகையா.
“பரவாயில்லை சார், என் பையனை அடிச்சவன் மேல கேஸ் போடுங்க. எங்கனாலும், நாங்கப் பார்த்துக்குறோம். வேதா வந்து சாட்சி சொல்லுவா...” என்ற அம்சவேணி, “சொல்லுவதானே டி?” என வேதவள்ளியிடம் அதட்டலாகக் கேட்டார். அன்பு அவள் முகத்தைதான் பார்த்திருந்தான். பெண் பதிலுரைக்கும் முன் இடை புகுந்தார் முருகையா.
“அம்சு, இங்கேயிருந்து கிளம்புற வரை அமைதியா இருக்கணும்...” முருகையா சத்தம் போடவும், அம்சவேணியின் வாய் பூட்டுப் போட்டுக்கொண்டது.
எழில் தந்தை அருகே சென்றவன்,
“ப்பா, அவனை விட்றலாம். அடிச்சதுக்கு மன்னிப்பு கேட்க சொல்லுங்க பா...” என்று அன்புவைப் பார்த்தவாறே பேச, ஆடவன் இதழ்களில் கேலிப் புன்னகை.
‘என்னால் மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது. உன்னால் முடிந்தால், என்ன வேண்டுமானாலும் செய்து கொள்’ என்ற அலட்சியப் பாவனையை முகத்தில் தாங்கியிருந்தான் ஆடவன். அதைப் பார்த்து எழில் முகம் கடுகடுத்தது.
“சார், நாங்க கேஸ் கொடுக்கலை. வாபஸ் வாங்கிக்கிறோம். இந்தப் பையன் இனிமே எங்க வீட்டுப் பொண்ணு பின்னாடி வரக்கூடாது. என் பையனை அடிச்சதுக்கு மன்னிப்பைக் கேட்கச் சொல்லுங்க சார். இனிமே எங்ககிட்டே எந்த வம்பும் பண்ணக்கூடாது அவங்க வீட்டாளுங்க...” என்று முருகையா இறங்கி வந்தார்.
“சாரி சார், என்னால மன்னிப்பு கேட்க முடியாது. அவன் பண்ணது தப்பு அதான் அடிச்சேன்” அன்பு கூற, “டேய், ஒழுங்கா அந்தப் பையன்கிட்டே மன்னிப்பை கேளு” என்ற முத்துக்கிருஷ்ணன் மகனருகில் வரவும், வத்சலா அவனுக்குக் காவலாக முன்னே கணவனை இடைமறித்தார். கோபத்தில் மகனிடம் கையை நீட்டி விடுவாரோ? என்று தாய் மனம் பதறியது. பொது இடத்தில் தன் குடும்ப விஷயம் கடை பரப்புவதை அவர் விரும்பவில்லை.
“சார், நீங்களே சொல்லுங்க, ரோட்ல நீங்க போகும்போது, யாரோ ஒரு பொண்ணை இந்த மாதிரி ஒருத்தன் அசிங்கமா பேசி, அந்தப் பொண்ணு அழுதுட்டு நின்னா, என்ன பண்ணுவீங்க. அடிப்பீங்களா? மாட்டீங்களா? அதைத்தான் நான் பண்ணேன்...” என்றவன் முருகையாவிடம், “உங்கப் பையன் பேசுனது தப்புதானே? அவன் பேசுனதுக்கு வேதாகிட்டே மன்னிப்பைக் கேட்கச் சொல்லுங்க. அப்புறம், உங்கப் பையன்கிட்ட நான் மன்னிப்பைக் கேட்குறேன்” என்றான் அன்பழகன்.
“அவ எங்க வீட்டுப் பொண்ணு. எப்படி பேசணும், பார்த்துக்கணும்னு எங்களுக்குத் தெரியும்...” முருகையா கூற,
“அதான் உங்கப் பையன் ரோட்ல வச்சு அசிங்கமா பேசுனானா? சொந்தகாரப் பொண்ணுன்னு தானே இப்படி பேசுறீங்க. இதே உங்க சொந்தப் பொண்ணா இருந்தா, இப்படி பேச விட்டிருப்பீங்களா? என்ன நடந்துச்சுன்னு கூடக் கேட்காம, இவ்வளோ தூரம் வந்துருப்பீங்களா? அவகிட்டே ஃபர்ஸ்ட் என்ன நடந்துச்சுன்றதை கேட்டு தெரிஞ்சு இருப்பீங்க தானே?” அன்பழகன் கேட்டதும், முருகையா அதிர்ந்து போனார். அவன் கூறியதும் மனதில் ஏதோ ஒன்று முள் போல அவரை தைத்தது. அன்பழகன் கூறுவது போல, ஒரு வார்த்தைக் கூட அவளை விசாரிக்கவில்லையே! என்று மனம் நெருட, எதுவும் பேசவில்லை மனிதர்.
“அன்பு, போதும். முதல்ல வந்து அந்தப் பொண்ணு பின்னாடி சுத்த மாட்டேன்னு எழுதி சைன் போடு...” என்று காவலர் கர்ணா கூறவும், அவரருகே சென்றான் ஆடவன்.
நடப்பவற்றை எல்லாம் வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தாள் வேதவள்ளி. அன்பு கடைசியாக அவளுக்காகப் பேசியது, ஏதோ மனதிற்கு இதமாக இருந்தது. இருப்பினும் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை பெண்.
அவளைப் பார்த்துக்கொண்டே கடிதத்தை எழுதி, அதில் கையொப்பமிட்டான். மேலும் முருகையாவிடம் பேசி சமாதானம் செய்த காவலர், எழிலையும் எச்சரித்து அனுப்பினார்.
“இந்தப் பையனால மேற்கொண்டு உங்களுக்கு எதுவும் பிரச்சனை வந்தாலும், தயங்காம என்கிட்ட வந்து சொல்லுங்க. அடுத்து பேசிட்டு இருக்கலாம் மாட்டேன். லாக்கப்தான்...” என்ற காவலர் அன்புவை முறைக்கவும், அவன் அதை சட்டை செய்யவில்லை.
“உன் பையன் பண்ண காரியத்தைப் பாருடி. அசிங்கமா இருக்கு எனக்கு...” முத்துக்கிருஷ்ணன் மனைவியிடம் பல்லைக் கடித்தார்.
“இனிமே இந்த மாதிரி வம்பை எதுவும் இழுத்துட்டு வந்தான்னா, நான் எதுவும் செய்ய மாட்டேன். போலீஸ்ல புடிச்சு போடுங்கன்னு சொல்லிடுவேன்” முத்துக்கிருஷ்ணன் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்தாலும், எதிர்வினை எதுவும் ஆற்றவில்லை அன்பழகன். வத்சலாதான் மகனுக்கும் கணவருக்கும் இடையில் அல்லாடினார்.
முருகையா குடும்பத்தை அனுப்பி வைத்த காவலர், “அங்கிள், சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. இதான் ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட். நெக்ஸ்ட் டைம் இந்த மாதிரி பேசிட்டு இருக்க மாட்டேன்...” என்றவர் முன்பு முத்துக்கிருஷ்ணன் தலையைக் குனிந்தார். அவமானமாக இருந்தது அவருக்கு. மன்னிப்பை கேட்டுவிட்டு எல்லோரும் நகரவும், “அங்கிள், ஒரு நிமிஷம் நில்லுங்க. உங்கப் பையன் பேப்பர்ல என்ன எழுதியிருக்கான்னு பாருங்க...” என்ற காவலரின் பார்வை அன்புவைக் கண்டித்தது.
முத்துக்கிருஷ்ணனும் வத்சலாவும் அந்தக் கடித்ததைப் பார்த்து
அதிர்ந்தனர். அறிவழகன் தம்பியை முறைக்க, “எவ்வளோ பட்டாலும் திருந்த மாட்டீயா டா?” என வத்சலா மகனின் கையில் ஓங்கி அடித்தார்.
தொடரும்...