• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,242
Reaction score
3,657
Points
113
வேதம் – 25
“என்ன டா, என்னாச்சு? ஒரே சிரிப்போட வர்ற?” அறிவு தம்பியை யோசனையாய்ப் பார்த்தான்.
“அது, அது ஒன்னும் இல்லைடா அண்ணா, மனுஷன் ரொம்ப எமோஷனலாகி என்கிட்ட மன்னிப்பு கேட்டாரா? நானும் சரி போனா போகுதுன்னு மன்னிச்சுட்டேன்...” உதட்டிலேறிய சிரிப்புடன் கூறிய தமையன் மீது கையில் அகப்பட்ட பொருளை எறிந்தான் அறிவழகன்.
“உன் வேலையை என்கிட்ட காட்டுற இல்லை, நான் ஒன்னும் அம்மா இல்லை...” தமையன் முறைக்க,
“சரி டா, உங்க அப்பாகிட்டே பேசித் தொண்டை வரண்டு போச்சு. கொஞ்சம் கூலா ஐஸ் வாட்டர் எடுத்துட்டு வா டா...” அன்பு கூற,
“ஹம்ம்...” முறைப்புடன் நகர்ந்தான் அறிவழகன். அவன் சென்று விட்டதை உறுதி செய்த அன்பு, மனைவியருகே சென்றான்.
“என்னங்க...” ஏதோ கேட்க வந்தவளின் உதட்டில் அழுத்தமாய் முத்தமிட்டு, “தேங்க்ஸ் டி பொண்டாட்டி…” என்றுவிட்டு மீண்டும் இருக்கைக்கு வந்து அமர்ந்துவிட, அவன் செயலில் வேதவள்ளி திகைத்துப் போய் விட, கன்னமெல்லாம் சிவந்து போனது. அவனை முறைக்க முயன்றாள், முடியாது போனது.
அறிவழகன் வர, “தேங்க்ஸ் டா...” என்ற சின்னவன் அதை வாங்கிப் பருகினான். மனதில் ஏதோ சொல்ல முடியாத நிறைவு, அது முத்துக்கிருஷ்ணன் முகத்திலிருந்த புன்னகையைப் பார்த்து வந்திருந்தது. அவர்களை தான் மிகவும் படுத்திவிட்டோமோ? என்ற எண்ணம் வியாபிக்க, இனிமேல் எதை செய்தாலும் அவர்களை பாதிக்காது செய்ய வேண்டும் என நினைத்துக்கொண்டான். கண்டிப்பாக செய்யாயமல் எல்லாம் அன்பழகனால் இருக்க முடியாது. ஏனென்றால் அது அவனுடையப் பிறவி குணம். மாற்றவெல்லாம் முடியாதே, இருப்பினும் கண்டிப்பாக முயற்சி செய்யலாம் என்ற எண்ணம் மனதில் துளிர்விட்டது.
தான் மன்னிப்புக் கேட்டதும் தந்தை முகத்தில் வந்து போன பாவனையில் மனைவியின் முகம்தான் ஆடவனுக்கு நினைவு வந்தது. அவள்தான் இதற்குக் காரணம்.
“உங்கப்பா என்ன சொன்னாலும், கொஞ்சம் பொறுமையாப் பேசுங்க. பெரியவங்க அவரு, கோபத்துல ரெண்டு அடி அடிச்சாக் கூட வாங்கிக்கணும். அதுவும் இல்லாம நம்ம செஞ்சது தப்புங்க, ஒரே ஒரு வார்த்தை அவர்கிட்டே சாரி கேளுங்க, கண்டிப்பா உங்கப்பாவுக்கு உங்க மேல இருக்க கோபம் குறையும். ஒருதடவை மன்னிப்பு கேட்க்குறதால, நம்ம குறைஞ்சு போய்ட மாட்டோம். அதுவும் உங்க அப்பாதானே அவரு...” வரும் வழியெங்கும் அவன் காதில் ஓதிய வண்ணமிருந்தாள்.
“ச்சு... போடி...” என்று அதையெல்லாம் ஒரு பக்க செவியில் வாங்கி மறுபக்க செவியிலிருந்து காற்றில் பறக்க விட்டிருந்தான் அன்பழகன்.
இதுவரை தன்னுடன் நேருக்கு நேரே சண்டையிட்ட முத்துக்கிருஷ்ணனை மட்டுமே பார்த்திருந்தவன், இப்போது கலங்கி நின்றவரைப் பார்த்ததும் மனதெல்லாம் சொல்ல முடியாத பாரமொன்று அழுத்தித் தொலைத்தது. என்னவென அறிய முற்படவில்லை அவன்.
‘இவர்கள் என்னவர்கள், என் குடும்பத்தார்கள், எங்களுக்குள்ளே ஆயிரம் வேற்றுமைகளும் கருத்துவேறுபாடுகள் இருப்பினும் இந்த உறவு உயிர் போகும் வரை உடன் வருமே’ மூளையும் மனதும் அந்த நொடி எடுத்துரைத்தது.

தனக்கும் தந்தைக்கும் நிறைய முறை சண்டை நிகழ்ந்திருந்தாலும், இப்போது தளர்ந்து போயிருந்த மனிதரை அப்படிக் காண முடியாது மன்னிப்பை யாசித்துவிட்டான். மனதாரத்தான் கேட்டான் மகன், தந்தை ஆரத்தழுவிக்கொண்டார். தனக்காக இறங்கி வந்த மகனுக்காக தானும் தன்னிலையிலிருந்து இறங்கி வரலாம் என முடிவை எடுத்துவிட்டிருந்தார் முத்துக்கிருஷ்ணன். இனிமேல் அவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும், அதை பேசி தீர்த்துக் கொள்வார்கள் இருவரும்.
தன்னை முறைத்துக்கொண்டு நின்ற மனைவியைப் பார்த்த முத்துக்கிருஷ்ணன், “என்ன வத்சலா?” என வினவினார்.
“என்ன, என்ன வத்சலா. அவன்கிட்டே என்ன சொன்னீங்க?” இன்னும் வத்சலாவின் முகம் முழுவதும் முறைப்புதான்.
“நான் என்ன சொன்னேன்?” மனிதர் புரியாது விழிக்க, “என் பொண்டாட்டி வளர்ப்பு சரியில்லை, அதான் நீ தப்பு பண்ணிட்டன்னு அவன்கிட்ட சொல்லி இருக்கீங்க?” கடுமையாக வினவினார் மனைவி.
“ப்ம்ச்... நான் அப்படி எதுவும் சொல்லலை வத்சலா. எப்பவும் போல உன் மகன் வேலையைக் காட்டிட்டான்...” என்றவர் முகத்தில் சிரிப்புப் படர, வத்சலா கணவரை ஆச்சர்யமாய்ப் பார்த்தார்.
“போ வத்லா, போய் உன் மகனையும் மருமகளையும் நம்ம வீட்டுக்கு வரச்சொல்லு...” என்று முத்துக்கிருஷ்ணன் கூறியதும், இன்னும் வத்சலாவின் முகத்தில் ஆச்சர்யம் நீண்டது. மாற்றம் வருமென நம்பித்தான் இருவரையும் பேச வைத்தார் பெண்மணி. ஆனால், இவ்வளவு விரைவில் இல்லையே. மனம் அத்தனை மகிழ்ச்சியை அனுபவித்தது.
‘முதலிலே இதை செய்திருக்க வேண்டுமோ?’ என அதே மனது கவலையும் பட, அதை அடித்து விரட்டியவர், “சரிங்க...” எனத் தன் கோபத்தையே மறந்து முகமெல்லாம் மலர்ந்து போய் வெளியே சென்றுவிட்டார் பெண்மணி. முத்துக்கிருஷ்ணன் அப்படியே கட்டிலில் சாய்ந்து படுத்துவிட்டார். இனிமேல் ஓரளவுக்கு எல்லாம் சரியாக நடக்கும் என மனம் நம்பியது பெரியவருக்கு.
அன்பழகனுக்குப் பின்னே சென்று நின்ற வத்சலா, அவன் காதைப் பிடித்து திருகினார். “வர வர உன் சேட்டைக்கு அளவில்லாமப் போய்ட்டு இருக்கு...” அவர் கூற, “ம்மா... விடும்மா...” சிரிப்புடன் கூறினான் மகன்.
“அதுக்குள்ளேயும் வந்துட்டீயே மா, ஒரு வாரே எக்ஸ்பெக்ட் பண்ணேன்” சன்னமான சிரிப்பு அன்பழகன் முகத்தில்.
“எதிர்பார்ப்ப டா, எதிர்பார்ப்ப” விழிகளை உருட்டியவர், “ஒழுங்கா உன் பொண்டாட்டியைக் கூட்டீட்டு இங்க வந்து சேரு டா...” என்றார்.
அவரைப் பக்கவாட்டில் திரும்பிப் பார்த்து புன்னகைத்தவன், “ப்ம்ச்... சாரிம்மா, என் பொண்டாட்டிக்கு தனிக்குடித்தனம்தான் பிடிக்கும்னு சொல்லிட்டா...” என்றவனின் குறும்புப் பார்வை இப்போது மனைவியிடம்.
“ஐயோ! இல்லை அத்தை, நான் அப்படியெதும் சொல்லலை...” வேதவள்ளி பதறிப்போனாள்.
“நீ பதறாத வேதா, எனக்கு அவனைப் பத்தியும் தெரியும்.‌ உன்னைப் பத்தியும் தெரியும்...” என மகனின் முதுகில் ஒன்று போட்டார். கலட்டாவான பேச்சு மற்றும் சிரிப்புடன் நேரம் நகர, இருவரையும் சாப்பிட வைத்தே அனுப்பினார் வத்சலா.
வீடு நுழைந்ததும் அசதியாக இருக்க, சேலையை அகற்றி இரவு உடைக்கு மாறியவள், மெத்தையில் சாய்ந்து அமர்ந்து கால்களை நன்றாய் நீட்டினாள். முகம் மட்டும் கணவனை முறைத்த வண்ணமிருந்தது. ஆனால், அவன் அதையெல்லாம் கண்டு கொண்டதாய் தெரியவில்லை. புன்னகையை உதட்டில் படரவிட்டவாறே உடையை மாற்றி வந்தான்.
“வேதா...” சன்னமான சிரிப்புடன் காலருகே அமர்ந்தவனை வெட்டும் பார்வை பார்த்தவள் முகத்தைத் திருப்பிக்கொள்ள, மனைவியின் காலை தன் மடியில் எடுத்து வைத்தவன், மெட்டியணிந்த விரலில் முத்தமிட்டான்.
“ப்ம்ச்...” முறைப்புடன் வேதவள்ளி காலை இழுக்க முயல, அவளால் முடியவில்லை. ஒவ்வொரு விரலாக தன் இதழைப் பதித்தான் அன்பழகன். கூச்சத்தில் விரல்களை மடமடக்கி விரித்தவளின் வாயிலிருந்து ஒற்றை வார்த்தை வரவில்லை.
அப்படியே நகர்ந்து தானும் சுவரில் சாய்ந்து அமர்ந்தவன், “என்னாச்சு வேதா, கோபமா இருக்க போல?” எனக் கேட்டவன் உதட்டில் சிரிப்பு ஏறியது. அப்போதும் பெண்ணிடம் பதிலில்லை. இதழை மட்டும் சுழித்தாள்.
“ப்ம்ச்... சரி விடு...” என்றவன் சுழித்த உதட்டைப் பிடித்து இழுத்து, கீழுதட்டில் மென்மையாக முத்தமிட, “தள்ளுங்க...” என அவனை தள்ளிவிட முயன்றவளின் முகத்தில் லேசான சிவப்பின் சாயல்.
மோகனப் புன்னகையை சிந்தியவன், “எப்படி டி ஒவ்வொரு தடவையும் கிஸ் பண்ணும்போது முதமுறை கொடுக்குற மாதிரி சிவந்து போய்ட்ற...” என்றவனின் விரல்கள், மனைவியின் செம்மைப் படர்ந்த முகத்தில் மென்மையாய் கோலமிட்டன.
“இந்த ஆராய்ச்சி ரொம்ப முக்கியம்?” அவன் கையைத் தட்டிவிட்டவள், “நீங்க செய்றது கொஞ்சம் கூட நல்லா இல்லை. இன்டேரக்டா எனக்கும் உங்க அம்மாவுக்கும் சண்டை இழுத்துவிட பார்க்குறீங்க...” என்றாள் கடுப்புடன்.
“இன்டேரக்டாவா சொன்னேன்? டேரக்டா தானே சொன்னேன்...” என்றவனின் முகத்திலிருந்த சிரிப்பில் கோபமானவள், அவனது மீசையை பிடித்து வெடுக்கென இழுத்துவிட்டு, கன்னத்தில் அடிக்க வர, அந்தக் கையைப் பிடித்து ஒவ்வொரு விரல்களிலும் முத்தமிட்டான்.
“நீங்க... நீங்க பொண்டாட்டி தாசனாகிட்டீங்க...” வேதா சிணுங்கிக்கொண்டே கூற, “பரவாயில்லை, என் பொண்டாட்டிக்கு தாசனாவே இருந்துட்டுப் போறேன்...” என்றவன் அவளது இதழில் அழுத்தமாய் முத்தமிட்டான். சிரித்தாள் வேதவள்ளி, கொஞ்சம் வெட்கம், கொஞ்சம் கர்வத்துடனும்.
இரண்டு நாட்கள் கழிய, அன்பழகனும் வேதவள்ளியும் தங்களது வீட்டை மொத்தமாக வத்சலா மற்றும் முத்துக்கிருஷ்ணனின் இருப்பிடத்திற்கு மாற்றி இடம்பெயர்த்து விட்டிருந்தனர்.
முதன்முதலில் தங்களுக்கென குடிபுகுந்த வீடு, அதில் தங்களது சந்தோஷம், மகிழ்ச்சி, சண்டை என எல்லாமும் நினைவுகளாகியிருக்க, சிறிய புன்னகையுடன் வீட்டைவிட்டு வெளியேறினர். அதிர்ஷ்டலட்சுமியும் கலையும் பிரியாவிடை கொடுத்தனர்.
“இங்க இருந்து காலி பண்ணிட்டதால, எங்களை மறந்துடணும்னு இல்ல. கண்டிப்பா வீட்டுக்கு அடிக்கடி வரணும்...” அன்பான அதட்டலுடன் அவர்களை வழியனுப்பி வைத்தார் அதிர்ஷ்டலட்சுமி.
அவர்கள் வாங்கிக் குவித்த பொருட்களை வைக்க இடமில்லாது திண்டாடிய வத்சலா, “ஏன் டா இவ்ளோ திங்க்ஸ் வாங்குன? எங்க வைக்கிறது?” என கடிந்துகொண்டே அப்போதைக்கு தேவையில்லை எனத் தோன்றிய அனைத்தையும் மாடியிலிருந்த வெற்று அறையில் போட்டு அடைத்துவிட்டார்.
மூன்றாவதாக வீட்டிலிருந்த அறையில் உள்ள அனைத்துப் பொருட்களும் மாடிக்கு மாற்றப்பட, அன்பழகனும் வேதாவும் அந்த அறையில் தங்கினர். ஏற்கனவே நான்கு நாட்கள் விடுமுறை எடுத்தாகிவிட்டது என மறுநாளே கல்லூரிக்கு கிளம்பிவிட்டாள் பெண்.
வத்சலாவிற்கு அத்தனை நிம்மதி மகனும் மருமகளும் வீட்டிற்கு வந்தது. அங்கே அவர்கள் தனியாய் இருப்பது அவருக்கு மனதில் வருத்தத்தை உண்டு பண்ணியிருந்தது. என்னதான் வாரம் ஒருமுறை அவர்களைச் சந்தித்து வந்தாலும், உடன் வைத்து மருமகளைப் பார்த்துக்கொள்ள முடியவில்லையே என்ற எண்ணம் மனதிலிருந்தது. அந்தக் குறை இப்போது நீங்கவிட்டதில் பெண்மணி மகிழ்ச்சியாக மகனையும் மருமகளையும் பார்த்துக்கொண்டார்.
வேதவள்ளிக்கு என்ன பிடிக்கும் எனக்கேட்டு ஆசையாய் அதை செய்து கொடுத்தார். மகள் இல்லாததாலோ என்னவோ, மருமகளை நன்றாய் கவனித்துக்கொணடார் வத்சலா. வேதவள்ளியும் அவர் கோபத்தில் முகத்தைக் காட்டினாலும், ஓரிரு வார்த்தைகள் பேசினாலும் அதை பெரிதாய் எடுத்துக்
கொள்ளவில்லை. கோபம் இருக்கும் இடத்தில்தான் குணமிருக்கும் என்பது வத்சலா விஷயத்தில் அவள் உணர்ந்தாள்.
அவர் தன்னை திட்டினால் கூட, கணவன் காதுவரை அதை எட்டவிடவில்லை பெண். அமைதியாக புன்னகைத்து வத்சலாவை எதிர்க்கொள்வாள். அவரும் சிறிதுநேரம் கழிந்ததும், “சாரி வேதா, கோபத்துல பேசிட்டேன்...” என குழந்தையாய் நிற்க, அவளும் என்னதான் செய்வாள்? முகம் முழுவதும் புன்னகை பூத்துவிடும். அன்பழகன் அப்படியே தாயைப் போல என எண்ணிக்கொண்டாள்.
“பரவாயில்லை அத்தை, எனக்கு செய்றதுக்கு எவ்வளோ உரிமை இருக்கோ, அதே போல திட்டுறதுக்கும் உரிமை உங்களுக்கு இருக்கு...” என சிரிப்புடன் பதில் இயம்பினாள் வேதா.
அம்சவேணி திட்டிய வார்த்தைகளுடனுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், வத்சலா பேசுவது எல்லாம் கேலியாகத்தான் இருக்கும். ஏனென்றால் அம்சவேணியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அத்தனை கூறு போடும் பெண்ணை. ஏனோ அந்த வீட்டிலிருந்து வந்த பிறகு மனம் அதை நினைத்து ஆயிரம் முறை ஆசுவாசம்கொண்டது. அவர் அடித்திருந்தால் கூட, வேதா அதை மறந்து இருப்பாளோ, என்னவோ? வார்த்தைகள் வடுவாய் மனதில் நிறைந்து போய்விட்டன.
ஆனாலும் மனம் அவருக்காக ஒரு சில கணங்கள் வாதாடும். அவருக்குத் தன்னுடைய வருகையே விருப்பமின்மையைக் கொடுத்திருக்க, எப்படி அவரால் தன்னை சகிக்க முடியும் என மனம் அவர்புறம் பேசியதும் உண்டு. எல்லாவற்றையும் கடந்துவிட்டாள். இப்போது நினைக்கும்போது லேசாய் சிரிப்பு குமிழிடும் உதட்டில்.
அன்பழகன் முன்புபோல எந்த ஒரு அடாவடித்தனமும் செய்யாமல், சுயக்கட்டுப்பாட்டில் இருந்தான். முடிந்தளவிற்கு சண்டைகளைத் தவிக்கப் பழகியிருந்தான். தந்தையின் முகம் பார்த்து ஒருசிலவற்றை
புரிந்துகொண்டான். தன் குடும்பம் என்று வரும்போது அவர்களுக்காக ஒரு படி வாழ்க்கையில் இறங்கி விட்டுக்கொடுத்துவிட்டான்.
வேதவள்ளி அவர்கள் வீட்டில் நன்றாய் பொருந்திப் போய்விட்டிருந்தாள். அங்கு போலவே இங்கும் வார விடுமுறைக்கு வீட்டிற்கு வர துவங்கியிருந்தாள். ஒவ்வொரு முறை அவளை விடச் செல்லும்போதும், அழைக்கச் செல்லும்போதும் அன்பழகன் தாயின் வசவுகளைப் பெற மறக்கவில்லை.
“இங்க காலேஜே இல்லாத மாதிரி அவ்வளோ தூரத்துல கொண்டுபோய் புள்ளையை சேர்த்துவிட்டிருக்கான் பாரு. புள்ளைத்தாச்சி, வாரம் வாரம் போய்ட்டு வந்தே டயர்டாகிடுவா...” என்று வத்சலா திட்டுவதை அலட்சியமாகக் கடந்துவிடுவான்.
முத்துக்கிருஷ்ணனுக்கு முதலில் வேதவள்ளியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஓரிரு வார்த்தைகள் கூட பேசவில்லை.‌ ஆனால் நாட்கள் செல்ல செல்ல, அவளது அமைதியான குணமும், ஆர்ப்பாட்டமில்லாத செய்கைகளும் மனதில் அவளைப் பற்றிய நல்லெண்ணத்தை விதைத்திருந்தது. ஏற்றுக்கொண்டார் மருமகளை. தன் மகனின் தேர்வு சரியாக உள்ளது என நினைத்தாலும், மனதினோரம் அவனது செய்கைகளின் வலி வடுவாய் தங்கிவிட்டிருந்தது. காலப்போக்கில் அது மறந்துவிடும் என பெரிதாய் அதற்கு மதிப்புக் கொடுக்கவில்லை மனிதர்.
வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழியில் செல்ல, குடும்பம் என்ற அமைப்பு அவர்களை இணைக்கும் பாலமாக இருந்தது.
நாட்கள் மெதுவாக நகர, திடீரென தன்னை அழைத்த மனைவியை ஏன் என்று கேட்காது வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான் அன்பழகன்.
“என்ன வேதா, இன்னைக்கு வந்துருக்க வீட்டுக்கு?” உள்ளே நுழைந்ததும் வத்சலா வினவ, “ஒன்னும் இல்லை அத்தை, உங்களை எல்லாம் பார்க்கணும்னு தோணுச்சு. அதான்...” என்று புன்னகைத்தாள்.
“நல்ல பொண்ணும்மா நீ, நான் பயந்துட்டேன். போ...” என அவர் நகர, அறைக்குள் நுழைந்தும் கணவனும் அதைத்தான் கேட்டான்.
“வேதா, உடம்புக்கு எதுவும் சரியில்லையா?” எனக் கேட்டு அருகே அமர்ந்த கணவன் தோள்சாய்ந்தாள் பெண்.
“நாளைக்கு என் அப்பாவைப் பார்க்கப் போறோம்...” சந்தோஷமும் அதே சமயம் வலியுடனும் கூறினாள் பெண்.
அவளது முகத்தை நிமிர்த்திய அன்பு, “உங்கப்பா வர்றாரா? எங்க இருந்தாரு இத்தனை நாளும்?” என அன்பழகன் வினவ,
“நாளைக்கு உங்களுக்கே தெரியும்...” என்றவளின் உதடுகள் புன்னகையில் விரிய, விழிகளில் கண்ணீர் வழிந்தது.
“ப்ம்ச்... ஏன் டி?” எனக்கேட்டு மனைவியின் கண்ணீரை துடைத்துவிட்டவன், “எதுக்கு இந்த அழுகை?” என வினவினான்.
“தெரியலை, எட்டு வருஷம் கழிச்சு அவரைப் பார்க்கப் போறேன். அதனால சந்தோஷத்துல அழுகை வருது...” என விழிகளில் துளிர்த்த நீரை துடைத்து, “அவர் நம்மளை ஏத்துப்பார் தானேங்க?” எனக்கேட்டவளின் கரங்கள் மேடிட்ட வயிற்றைத் தடவின.
“கண்டிப்பா ஏத்துப்பாரு, இல்லைன்னா, ரெண்டு தட்டு தட்டிட்றேன் என்னோட பாஷையில...” என்றவனை மனைவி முறைக்க, “தட்ஸ் குட்...” என அவள் நெற்றியில் இதழொற்றி அணைத்துக்கொண்டான் அன்பழகன்.
மறுநாள் காலையில் இருவரும் விரைவாகவே எழுந்து குளித்துக் கிளம்ப, “ப்ம்ச்... இதென்ன ட்ரெஸ், நல்லாவே இல்லை. இந்த ஆலிவ் க்ரீன் கலர் டீஷர்ட் போடுங்க, ப்ளாக் ஜீன்ஸ்...” என கணவனைப் பாடாய்படுத்தி அழைத்துச் சென்றாள் வேதவள்ளி. வத்சலாவிடம் நண்பர் வீட்டு விழாவிற்கு செல்கிறோம் என வேதவள்ளியே பதிலளித்துவிட, அன்பழகனும் தலையை மட்டும் அசைத்தான். இருவரும் சென்று நின்றது சிறைச்சாலை முன்புதான். அன்பழகனுக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் தோன்றினாலும், அப்போதைக்கு எதையும் கேட்கவில்லை. ஏற்கனவே வேதவள்ளி சந்தோஷமும் குற்ற உணர்வும் போட்டிப்போட நின்றிருக்க, முருகையாவும் வந்துவிட்டிருந்தார்.







































































 
Well-known member
Messages
547
Reaction score
389
Points
63
அச்சோ ஜெயிலில் இருந்தாரா?
 
Top