• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,242
Reaction score
3,657
Points
113
வேதம் – 22
“டேய், என்ன டா சிரிக்கிற, என்ன காரியம் பண்ணி வச்சிருக்க?” மகனை அடிக்க கை நீட்டினார் வத்சலா. அவரது கையை லாவகமாக மடக்கி, தோளில் கையைப் போட்டவனின் மீசைக்கு கீழே இன்னமும் சிரிப்பின் எச்சமிருந்தது.
“ம்மா... ஏன் மா?” எனப் புன்னகையுடன் வினவியவன், “உன் சின்னப் புள்ளை அப்பாவாகப் போறான். நான் பெரியப்பாவாகப் போறேன். நீயும் அப்பாவும் தாத்தா, பாட்டியா புரமோட் ஆகப்போறீங்க...” என்றவன் குரலில் மகிழ்ச்சி படர்ந்திருந்தது. அவன் கூறியதைக் கேட்ட வத்சலா முகம் நொடியில் மின்னியது.
அதை மகனுக்கு காட்டாது மறைத்தவர், “ஓ... இருந்துட்டுப் போகட்டும். அதை ஏன் டா என்கிட்ட சொல்ற?” லேசாய் சடைத்துக்கொண்டதைப் போலத்தான் வினவினார் பெண்மணி. ஆனாலும் அவரது உதட்டோரம் சிரிப்பு துளிர்த்தது.
“ஓ... உனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை, அப்படித்தானே? சரி விடு...” குறும்பாய்க் கேட்டவன் தாயின் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்தான்.
“ஆமா டா. வீட்டுக்கு அடங்காமப் போனவனைப் பத்தி எல்லாம் என்கிட்ட பேசிட்டு இருக்காத!” பெரியவர் குரலில் மருந்துக்கும் கோபமில்லை. ஆனால், பாவனை மட்டும் கோபத்தைக் காண்பித்தது.
“அப்போ சரி மா. நான் இன்னைக்கு லீவ் போட்டுட்டு உன்னை அவனைப் பார்க்க உன்னைக் கூட்டீட்டுப் போகலாம்னு நினைச்சேன். உனக்குத்தான் பிடிக்கலையே. நீயும் அப்பாவும் ரோசத்துக்கு பேர் போனவங்க. நான் வற்புறுத்துனாலும் வர மாட்ட...” என்றவாறே உணவருந்தும் மேஜையில் அமர்ந்தவன், “நான் ஹாஃப் டே ஹாஸ்பிடல் போறேன். நீ எனக்கு சாப்பாட்டைப் போடு.” என்று தட்டைத் திருப்பி வைத்தான்.
அவனது கூற்றில் தவறு செய்த குழந்தையாய் விழித்தவர், அவனுக்கு உணவைப் பரிமாறினார். ‘அவரசப்பட்டு விட்டோமோ? இதற்கு மேல் வருகிறேன் என்று கூறினால், கேலி செய்வானே மகன்!’ என்று சிந்தித்தவாறே அடுக்களைக்குள் நுழைந்தார் வத்சலா. குளிர்சாதன பெட்டியிலிருந்த பழங்கள் அனைத்தையும் ஒரு கூடையில் எடுத்து வைத்தார். கணவருக்காக அரைத்து வைத்த சத்துமாவில் பாதியை மற்றொரு டப்பாவில் அடைத்து அதையும் கூடைக்குள் வைத்தார்.
அறிவழகன் உண்டு முடித்து சமையலறைக்குள் நுழைந்து கையைக் கழுவினான். அந்தக் கூடையைக் கண்டும் காணாதது போல நகர்ந்தவனின் உதட்டோரம் சிரிப்பு மலர்ந்தது.
“நான் ட்ரெஸ் சேஞ்ச் பண்றேன் மா, டைமாச்சு. ஆப்டர்நூன் ட்யூட்டியில போய் ஜாய்ன் பண்ணிக்கிறேன்...” வேண்டுமென்றே முகத்தில் எதையும் காட்டாது அறைக்குள் நுழைந்து இலகுவான உடையை மாற்றினான்.
மகனின் அறைக்குள் நுழைந்தார் வத்சலா‌. கையில் கடிகாரத்தை மாட்டியவாறே, “என்னம்மா, எதுவும் சொல்லணுமா?” உதட்டுக்குள் மறைத்த புன்னகையுடன் கேட்டான் அறிவு.
“அது டா... அது வந்து...” வத்சலா திணற, அதில் மகன் பொங்கிச் சிரித்தான்.

அவனது சிரிப்பில் முகம் சிவந்தவர், “போடா... எனக்கென்ன வழியா தெரியாது?” என முறைப்புடன் தாய் நகரப் பார்க்க, அவரை தோளோடு அணைத்தவன், “சரி, சரி. நான் சிரிக்கலை.‌..” என்றவனின் உதடு முழுவதும் புன்னகையின் சாயல்.
“எனக்குத் தெரியும் மா. உன் சின்னப்புள்ளை என்ன தப்பு பண்ணாலும் உனக்கு அது பெருசாத் தெரியாது...” என்றான்.
“இப்போ என்னைக் கூட்டீட்டு போவீயா? மாட்டீயா?” அவர் முறைக்க, “உன்னைக் கூட்டீடுப் போகத்தான் கிளம்புனேன். உன்னை ட்ராப் பண்ணிட்டு, நான் வெளிய ப்ரெண்டைப் பார்க்கப் போறேன். வாங்க போகலாம்...” என்றான் மகன்.
“உங்கப்பாவுக்குத் தெரிஞ்சா, கோபப்படுவாரே டா...” வத்சலா இழுக்க,
“அதான் நீங்களே தெரிஞ்சாதான் திட்டுவார்னு சொல்றீங்களே! தெரிஞ்சா தானே? சொல்ல வேண்டாம். வாங்க போகலாம்...” அறிவு கூற, தாய் துள்ளலுடன் கூடையைக் கையில் எடுத்தார்.
“ஏழு மாசம் பார்க்காததுக்கும் சேர்த்து வச்சு உன் சின்ன மகனை கொஞ்சப் போறல்ல மா?” குறும்பாய் கேட்ட அறிவு காலணியை அணிய, “போடா...” என சிரித்த வத்சலா கதவை திறவுகோலால் பூட்டினார் அவர்கள் பின்னே அரவம் கேட்க, “யாரு அது?” எனக் கேட்டு அசட்டையாகத் திரும்பிய பெண்மணி வாயடைத்துப் போய் நின்றார். முத்துக்கிருஷ்ணன் நின்றிருந்தார்.
“என்னம்மா யாரு?” என்ற அறிவும் நிமிர்ந்து பார்க்க, இருவருக்கும் அதிர்ச்சி.
“என்ன... என்னங்க...” வத்சலா பயத்தில் உளறப் போக, “அப்பா, வாங்க...” என இடைபுகுந்தான் மகன்.
“எங்க கிளம்பிட்ட வத்சலா?” கணவர் வினவ, சட்டென பொய் சொல்ல வராது திணறியவர், “அது... அது வந்து கடைக்குப் போறோம்ங்க...” என்றார்.
“ஓ... எந்தக் கடைக்கு? கையில என்ன கூடை, அதுல எதோ இருக்கே!” அடுக்கடுக்காய்க் கேள்வி கேட்ட முத்துக்கிருஷ்ணனைப் பார்த்து விழி பிதுங்கிப் போனார் வத்சலா.
“ப்பா, நீங்க ஏன் ஹாஃப் டேயில வந்துட்டீங்க? உடம்பு எதுவும் சரியில்லையா?” சட்டென்று அவரை திசை திருப்பிவிட்டான் அறிவு.
“ஆமா டா, தலை ரொம்ப வலி. அதான் வந்துட்டேன்‌...” என்றவர் மூக்குக் கண்ணாடியைக் கழட்ட,
“ம்மா, பார்த்துட்டே இருக்கீங்க? போங்க... போய் அப்பாவுக்கு சூடா காபி போட்டு கொடுங்க. அவர் ஒரு மாத்திரையைப் போட்டு தூங்கட்டும்...” என்றவன் தாயைப் பார்த்து லேசாய் கண்ணை சிமிட்ட, “சரி டா, சரி‌..‌.” என்ற வத்சலா பூட்டிய கதவை திறந்துவிட, முத்துக்கிருஷ்ணன் உள்ளே நுழைந்தார்.
அவர் கையிலிருந்த கூடையைப் பிடுங்கியவன், “ம்மா, நான் கீழே போய் வெயிட் பண்றேன். வளவளன்னு பேசாம, காபியை போட்டுக்கொடுத்து அவரை ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டு எஸ்ஸாகி வா...” என அறிவு வெளியேற, ‘தனியா கோர்த்து விட்டுட்டுப் போறானே!’ என பதறியவர், அமைதியாய் குளம்பியைத் தயாரித்து கணவருக்கு கொடுத்தார்.
“இந்தாங்க, இந்த மாத்திரையைப் போட்டு தூங்குங்க...” என்ற வத்சலா கணவரிடம் மாத்திரையைக் கொடுக்க, அதை வாங்கி உண்டுவிட்டு படுத்தார் மனிதர்.
“சரிங்க, நான் கடைக்குப் போய் காய்கறி வாங்கிட்டு வர்றேன். நைட் சமைக்க எதுவும் இல்லை...” அப்படியே நழுவப்பார்த்தார் பெண்மணி.
“நானும் வரவா வத்சலா? எப்படி ஒத்தைல தூக்கிட்டு வருவ?” என வினவினார் மனிதர்.
‘அடப்பாவி மனுஷா, உனக்கு இப்பத்தான் பாசம் பொங்குமா? இத்தனை நாள் தனியாதானே கடைக்குப் போனேன்?’ என மனதிற்குள் புலம்பியவர், “ம்க்கூம்... இத்தனை நாள் இல்லாத அக்கறை இப்போ எதுக்கு? தேவையில்லை. நானே போய்க்கிறேன். நீங்க படுங்க...” என்றார் அவர்.
“ப்ம்ச்... இத்தனை நாள் லீவ்ல இல்லை. அதனால வரலை, இப்போ சும்மதானே இருக்கேன். கோச்சுக்காத, நானும் கூட வர்றேன்...” முத்துக்கிருஷ்ணன் படுக்கையிலிருந்து எழ,
‘வாயை வச்சுட்டு சும்மா இருந்திருக்கலாமே வத்சலா’ பதறியவர், “அதெல்லாம் ஒன்னும் வேணாம். ஒழுங்கா படுத்து தூங்குங்க. ஏற்கனவே தலைவலி. இதோட வெயில்ல என்கூட அலைஞ்சுட்டு அப்புறம் தலைவலி அதிகமானதுக்கு காரணம் நான்தான்னு புலம்புவீங்க. வேணாம் உங்க அக்கறை, சரக்கரை...” ஒரே போடாய் கோபமாய் பேசியபடி அறையை விட்டு வெளியேற யத்தனித்தார் வத்சலா. கோபமாக இருப்பது போல் காட்டிக் கொள்ளாவிட்டால், கணவரும் தன்னுடன் வந்துவிடக் கூடும் என்ற பயத்திலே பேசிவிட்டார்.
“ஆமா, அறிவு ஏன் வேலைக்குப் போகலை...?” அதிமுக்கியமான கேள்வியைக் கேட்ட கணவரை என்ன செய்தால் தகும் என திரும்பிப் பார்த்தார் வத்சலா.
‘நேரங்கெட்ட நேரத்துல உன்னை யாருய்யா வர சொன்னது. காலேஜ்ல லீவ் கொடுத்தவனுங்களை வெளுக்கணும்...’ பல்லைக் கடித்தவர், “அதை உங்கப் புள்ளைகிட்டே கேளுங்க. என்கிட்ட ஏன் கேட்க்குறீங்க? எல்லாமே என்கிட்ட சொல்லீட்டுத்தான் எல்லாரும் செய்றீங்க பாருங்க. என்னை மனுஷியாவே மதிக்குறது இல்லை ஒருத்தரும். கட்டுனவரும் அப்படித்தான், எனக்குப் பொறந்த ரெண்டும் அப்படித்தான்...” கோபத்தில் தாளிக்க ஆரம்பித்த மனைவியைப் பார்த்தார் முத்துக்கிருஷ்ணன்.
மனைவி பேச ஆரம்பித்தால், விட மாட்டாள் என உணர்ந்தவர், “சரி, சரி கிளம்பு டி நீ. சந்தை மூடிட போறாங்க...” என்றுவிட்டார். வத்சலாவை சமாளிக்க அவரிடம் தெம்பில்லை. இப்படி பேச ஆரம்பிக்கும் மனைவி ஆதி முதல் அந்தம் வரை கணவரது குடும்பத்தை இழுத்துவிடுவாரே எனப் பதறினார் மனிதர்.
‘அந்தப் பயம் இருக்கட்டும்...’ கணவரை முறைத்த வத்சலா வெளியேற, “என்னம்மா நீ, அரை மணிநேரம் கழிச்சு வர்ற?” என சிடுசிடுத்தான் அறிவு.
“டேய், நான் என்ன பண்ண? என்னைக்கும் இல்லாத திருநாளா, இன்னைக்குக் தான் உங்க அப்பாவுக்கு என் மேல பாசம் பொங்குது...” என்றவர் மகன் பின்னே ஏறி அமர, அவன் இருசக்கர வாகனத்தை இயக்கினான்.
“என்னம்மா, பாசத்துல அப்பா உன்னை தூக்கிட்டுப் போறேன்னு சொன்னாரா?” வாகனத்தின் கண்ணாடி வழியே வத்சலாவைப் பார்த்தவாறே அறிவு வினவ, அதில் சிவந்த வத்சலா, “சீ... போடா. போ, அதெல்லாம் அதியத்துல சேர்க்க வேண்டி வந்துடும் உங்கப்பா அப்படியெல்லாம் பேசிட்டா...” என சிரிப்புடன் அவன் தோளில் அடித்தார்.
அன்பழகன் வீட்டு வாயிலில் தாயை இறக்கிவிட்ட அறிவு, “ரெண்டாவது வீடுமா. முகில் வீட்டுப் பக்கத்து வீடு, திரும்ப வீட்டுக்கு போகும்போது கால் பண்ணுமா. நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்...” என்றவன் பறந்திருந்தான்.
ஒரு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்த அன்பழகன் மற்றொரு காலை இன்னொரு நாற்காலியில் நீட்டி, தொலைக்காட்சி முன்னே உட்கார்ந்திருந்தான். இடக்கை தொலைவியக்கியை இயக்கிக் கொண்டிருக்க, வலக்கை யாருக்கோ குறுஞ்செய்தி அனுப்பிய வண்ணமிருந்தது. இதழ்கள் ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்தன.
வாசலில் வத்சலா வந்து நிற்க, அவரை திரும்பிப் பார்த்தவனின் முகத்தில் துளிகூட ஆச்சர்யம் இல்லை. லேசாய் புருவத்தை கேலியாய் ஏற்றி இறக்கியவன், “வேதா, உன் சொந்தக்கார ஆன்ட்டி யாரோ வந்திருக்காங்க. என்னென்னு வந்து பாரு...” என்று நக்கலாகக் கூறிவிட்டு பார்வையை தொலைக்காட்சியில் பதித்தான். அவன் கூற்றில் முறைத்த வத்சலா விறுவிறுவென வீட்டிற்குள் நுழைந்து மகன் காலிலே பட்டென கூடையை வைத்தார்.
“ஆ... மம்மி, என்ன பண்ற நீ...” என முகத்தைச் சுளித்தவாறே காலை நாற்காலியிலிருந்து இழுத்துக்கொண்டவன், “எதுக்கு இப்போ வந்திருக்க?” என வினவினான். கணவனது சத்தத்தில் அறைக்குள்ளிருந்த வேதவள்ளி வெளியே வந்தாள். அவனது கேள்வியில் லேசாய் முறைப்புடன் கணவனைப் பார்த்தவள், வத்சலாவை எவ்வாறு அழைப்பது என தயங்கி சங்கடமாக நோக்கினாள்.
“டேய்...” மகனின் முடியைக் கொத்தாகப் பிடித்தார் பெண்மணி.
“ப்ம்ச்... எனக்குத் தெரியும். உன் பெரிய மகன் சொன்னதும், அப்படியே துள்ளி குதிச்சுட்டு ஓடி வருவன்னு. என்னை மட்டும் வேண்டாம்னு புருஷனும் பொண்டாட்டியும் வீட்டை விட்டு அடிச்சு தொரத்துவீங்க. என் புள்ளையை மட்டும் சொந்தம் கொண்டாட வர்ற? என்னைப் பார்க்கணும்னு தோணலைல உனக்கு?” என்றவனை முறைத்தவர்,
“வாய் மட்டும் உனக்கு குறையவே குறையாது டா. அவர்கிட்டே இருந்து உன்னைக் காப்பாத்தி தொரத்தி விட்டதுக்கு இதுவும் பேசுவ, இன்னும் பேசுவ. அந்த மனுஷன் இப்போவும் உன் மேல செம்ம கோபத்துல இருக்காரு. நான்தான் பேசி அவரை சமாதானம் செஞ்சிட்டு இருக்கேன்...” என்றவரின் கையைப் பிடித்து இழுத்து ஒரு நாற்காலியில் அமர வைத்தான்.
“ஏன் என்னை இத்தனை நாள் நீ பார்க்க வரலை?” மீண்டும் அதையே கேட்டான் அன்பு.
“டேய்! நான்தான் உன் மேல கோபத்துல இருந்தேனே. அதான் பார்க்க வரலை...”
“சரி, கோபம் குறைஞ்சதும் வந்து என்னை சமாதானம் செஞ்சு இருக்கலாம் இல்ல?”
“உன்னை எதுக்கு டா நான் சமாதானம் செய்யணும். நியாயமா நீதான் என்னை சமாதானம் செய்யணும்...”
“ம்மா, லாஜிக்கா பேசு. நீதான் கோபமா இருந்தீயே, என் கூட பேச விரும்பலையே!” என இழுத்தவன், “கோபமா இருந்தீயா? இல்லையா?” என வினவினான்.
“ஆமா டா, கோபமாதான் இருந்தேன்...”
“ஆங்... அதான் நானும் சொல்றேன். நீ கோபமா இருந்த. என்கிட்ட பேச மாட்டேன்னு சொல்லிட்ட. அப்போ உன் கோபம் குறைஞ்சதுன்னு எனக்கு எப்படித் தெரியும். அதனால கோபம் போனதும் நீதானே வந்து என்கிட்ட பேசி இருக்கணும். இதானே லாஜிக்...” உதட்டுக்குள் மறைத்த புன்னகையுடன் அன்பு கூற, அவன் கூறியதில் குழம்பிய வத்சலா ஒரு நொடி தலையை, ‘ஆமா...’ என்பது போல ஆட்டிவிட்டார்.
“ஆங்... இப்போ யார் மேல தப்பு? உன் மேல்தான். சோ நீதான் என்னை சமாதானம் செய்யணும்...” சன்னமான சிரிப்புடன் கூறிவனை வெட்டவா? குத்தவா? என்ற எண்ணத்தில் பார்த்தார் வத்சலா.
“ஏன் டா?” அவர் பல்லைக் கடிக்க, “சரி, சரி. கோபப்படாதம்மா...” என்றவன், “வேதா, அம்மாவுக்கு கூலா ஜூஸ் கொண்டு வா...” எனக் கூற, வேதவள்ளி சமையலறைக்குள் நுழைந்தாள்.
“உன்கிட்ட பேசி பேசியே டயர்ட் ஆகிட்டேன் டா...” என்ற பெண்மணி நன்றாய் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தார்.
“ஹ்ம்ம்...” எனத் தாடையைச் சொரிந்தவன், “நீ இங்க வந்தது மிஸ்டர் முத்துக்கிருஷ்ணனுக்குத் தெரியுமா?” என வினவினான்.
“அதை ஏன் டா கேட்க்குற...” என இழுத்தவர் நடந்த அனைத்தையும் கூறி பெருமூச்சு விட்டார். “அவருக்குத் தெரியாமல் வர்றதுக்குள்ள மூச்சு முட்டிப்போச்சு...” என்றார்.
“அப்போ தெரிய வச்சிடுவோம்...” வில்லன் போல சிரித்தவனைப் பார்த்து பதறிய வத்சலா, “டேய்! குடும்பத்துக்குள்ள குட்டையை குழப்பி விட்றாத டா!” என பதறிவிட்டார்.
“சேரி, சேரி. பதறாதம்மா, அப்படியெல்லாம் பண்ண மாட்டேன். லுலுலாய்க்கு சொன்னேன்...” என்றவன் முகத்தில் குறும்பிருந்தது.
“ஏன் டா, மெலிஞ்சுட்ட மாதிரி தெரியுற, சரியா சாப்பிட்றது இல்லையா?” என்ற வத்சலா வாஞ்சையுடன் மகன் தலையை தடவினார்.
அவரைப் புன்னகையுடன் பார்த்தவன், “சாரிம்மா...” என்று உண்மையான குரலில் கூறி, அவர் தோளில் சாய்ந்தான்.
“என்ன டா, எட்டாவது அதிசயமா இருக்கே. சாரியெல்லாம் கேட்குற, அதுவும் பீல் பண்ணி?” வத்சலா புருவத்தை உயர்த்தினார்.
“அது ஒன்னும் இல்லைமா, என்னை இப்படியெல்லாம் உன்கிட்ட சாரி கேட்க சொன்னது என் பொண்டாட்டிதான்‌. அப்படியே அவதான் செய்ய சொன்னதுன்ற விஷயத்தையும் பேச்சு வாக்குல உன் காதுல போட்டுவிடவும் சொன்னா. அப்போதான் உனக்கு அவ மேல நல்ல எண்ணம் வருமாம்...” இழுத்துக் கூறியவனை முறைத்துக்கொண்டே வந்த வேதா, சங்கடமாக வத்சலாவிற்கு பழச்சாறைக் கொடுத்தாள்.
“அவன் கிடக்குறான் மா. நீ இப்படி வந்து உட்காரு...” அதட்டலாய் அவளை இழுத்து ஒரு நாற்காலியில் அமர்த்தினார் பெரியவர்.
“டாக்டர் கிட்ட போய் செக் பண்ணீங்களா? என்ன சொன்னாங்க. எத்தனை நாள் ஆகுது?” என வினவினார்.
“அதெல்லாம் போயாச்சு, போயாச்சு” அன்பழகன் சிரிப்புடன் கூற, “ச்சு... கொஞ்ச நேரம் அமைதியா இரு டா!” என அவனை ஒரு அடி போட்டவர், “நீ சொல்லு வேதா...” என்றார்.
“நாற்பத்தைஞ்சு நாளாச்சு...” என்றவள், ‘அத்தை’ என அழைப்பதா? வேண்டாமா? எனத் தயங்கி தயங்கி அவர் முகம் பார்த்தாள்.
“அத்தை சொல்லணும்... ஹ்ம்ம்?” வத்சலா மிரட்டுவது போல கூற,
“என்னம்மா, என் பொண்டாட்டியை என் முன்னாடியே மிரட்டுற?” எனக் கேட்டவன் குரல் முழுவதும் கேலிதான்.
“டேய்... முதல்ல எழுந்து போடா நீ” தாய் அவனை முறைக்க,
“ம்மா, நீ சொல்றதுக்கு எல்லாம் தலையை ஆட்றதால, அமைதியானவன்னு நினைச்சுடாத. புயலுக்கு முன்னும் பின்னும் அமைதிதான்...” அன்பழகன் சிரிப்புடன் மனைவியைப் பார்க்க, தீயாய் அவனை முறைத்தாள் வேதா.
“இதுல பழம் கொஞ்சம் இருக்கு. வர்ற அவசரத்துல வீட்ல இருந்ததை எடுத்துட்டு வந்துட்டேன். அப்படியே சாப்பிடு, ஜூஸ் போட்டு குடிக்காத. சளி புடிச்சுடும். அப்புறம் இந்த சத்துமாவை டெய்லி பால்ல கலந்து குடி. வீட்ல அரைச்சது, ரொம்ப சத்து...” என்றவர் மாமியாராய் மட்டுமின்றி, ஒரு செவிலியராகவும் பல அறிவுரைகளை வழங்கினார்.
“நான் சொன்னது எல்லாம் புரிஞ்சதா?” அதட்டலாய் கேட்டவரைப் பார்த்து வேதவள்ளியின் இதழில் லேசாக புன்னகை துளிர்த்தது.
“டேய்! என்ன டா, நான் கோபமா பேசுறேன். இவ சிரிக்கிறா...” மகன் புறம் திரும்பி தாய் புகார் வாசிக்க, அவனும் பொங்கிச் சிரித்தான்.
“பின்ன என்னம்மா, சீரியல்ல வர்ற வில்லி மாமியார் மாதிரி பேச சொன்னா, நீ டாம் அண்ட் ஜெர்ரீல வர்ற டாம் மாதிரி பண்ணீட்டு இருக்க...” என்றவனின் உதடுகள் சிரிப்பில் துடித்தன.
“போடா படவா...” வத்சலா மகன் கையில் கிள்ள, அவர்களது சத்தத்தில் அதிர்ஷ்டலட்சுமி வந்துவிட்டார்.
“வா வத்சலா, எப்படி இருக்க?” அவர் புன்னகையுடன் வினவ, “நான் நல்லா இருக்கேன். நீ எப்படியிருக்க லட்சுமி?” என இருவரும் பரஸ்பரம் நலம் விசாரிக்க, அன்பழகனை முறைத்துக்கொண்டே வேதவள்ளி அறைக்குள் நுழையப் போக, அன்புவும் சிரிப்புடன் அவள் பின்னே சென்றான்.
லட்சுமியுடன் பேசிக்கொண்டிருந்த வத்சலா இதை ஓரக்கண்ணால் கவனித்துவிட்டு, “ஏன் லட்சுமி, கல்யாணதுக்கு முன்னயே அவளுக்காக அத்தனை பண்ணுவான். இப்போ கேட்கவே வேண்டாம். என் புள்ளையை முந்தாணையில முடிஞ்சு வச்சுக்கிட்டா போல...” லேசாகப் பொறாமையில் கேட்டார். அவர் மெதுவாய் பேசியதே வேதா, அன்புவின் காதில் விழுந்துவிட,
“ப்ம்ச்... என்னங்க. நீங்க முதல்ல வெளியப் போங்க. என் பின்னாடியே வர்றதைப் பார்த்துத்தான் அவங்க அப்படி சொல்லியிருப்பாங்க...” தன்னை வெளியேற்ற முயன்ற மனைவியின் கையை லாவகமாகப் பற்றி திருப்பித் தன்னோடு அணைத்துக்கொண்டவன் முகத்தில் சன்னமான புன்னகை.
“இல்லாததையா எங்கம்மா சொல்றாங்க? அதானே உண்மை. மாயக்காரி...” உதட்டிலேறிய சிரிப்புடன் கூறியவனிடம், “ப்ம்ச்... போங்க...” என சிணுங்கினாள் பெண்.
இரண்டு நிமிடங்கள் கடக்க, “போதும் போங்க. வெளிய உங்க அம்மா இருக்காங்க...” என அன்பழகனை வெளியே துரத்திவிட்டு கழிவறைக்குச் சென்று வந்தாள் வேதா.
அதிர்ஷ்டலட்சுமியிடம் பேசி முடித்த வத்சலா, “சரி டா, உன் அண்ணனுக்கு ஒரு போன் போடு. அவன் வந்து என்னைக் கூட்டீட்டுப் போவான்...” என்றார்.
“அவன் எதுக்கு மா? நானே உன்னை வீட்ல ட்ராப் பண்றேன். வா” அன்பு கூற,
“வேற வினையே வேண்டாம். உங்க அப்பாவுக்குத் தெரிஞ்சுடும் டா” என்றார்.
“ப்ம்ச்... ம்மா, அவருக்குத் தெரியாம உன்னை தெரு முனையில விட்டுட்றேன். வாம்மா...” என வத்சலாவை இழுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் பறந்தான்.
தெரு முனையை அடைந்ததும், “நிறுத்து டா. இங்கேயே இறங்கிக்கிறேன்...” என்றார் பெண்மணி.
“ம்மா, நடந்தா உனக்கு மூட்டு வலிக்கும். வாசல்ல இறக்கி விடுறேன்...” என்றவன், சட்டென வாசலருகே சென்று வண்டியை நிறுத்தினான்.
“அப்பாவுக்கும் மகனுக்கும் நேரங்கெட்ட நேரத்துலதான் டா அக்கறை பொங்கும். முதல்ல நீ கிளம்பு...” என்ற வத்சலா விறுவிறுவென வீட்டுக்குள் நுழைந்து கதவை சாற்றினார்.
கூடத்தில் அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தார் முத்துக்கிருஷ்ணன். “உங்க தலைவலி இப்போ பரவாயில்லையாங்க?” எனக் கேட்டார் மனைவி.
“இப்போ பரவாயில்லை வத்சலா...” என்றவர் வேறு எதையும் தூண்டி துருவாது விட்டுவிட, ‘நன்றி கடவுளே...’ என பெருமூச்சை வெளிவிட்டுக்கொண்டே அறைக்குள் நுழைந்தார் அவர்.
இரண்டடி நகர்ந்த அன்பழகன் அப்போதுதான் வத்சலா தன்னுடைய கூடையை வாகனத்தின் கைப்பிடியிலே மறந்து விட்டிருந்தது கண்ணில் பட, “சாரி மம்மி, இட்ஸ் ஆல் ஃபேட்...” என வில்லனின் சிரிப்புடன் அதை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கி நகர்ந்தான்.
கதவில் கையை வைத்து திறந்து உள்ளே நுழைய முயன்றவன், காலை பின்னே இழுத்துக் கொண்டான். “ம்மா... ம்மா...” என்று இவன் கத்தல் முத்துக்கிருஷ்ணன் செவியை அடைய, அவர் வாசலருகே வந்துவிட்டார்.
‘ஐயோ! இது சின்னவன் குரலாச்சே!’ மூளை உணர்த்தியதும் படபடக்கும் இதயத்துடன் வெளியே வந்தார் வத்சலா.
‘நீ எங்கே இங்க?’ என்பது போல அன்பை முறைத்துப் பார்த்தார் முத்துக்கிருஷ்ணன். அவரை சட்டை செய்யாது பின்னால் வந்த வத்சலாவை நோக்கியவன், “என்னம்மா, கூடையை மறந்து வச்சிட்டு போய்ட்ட. அப்புறம் நெக்ஸ்ட் டைம் வீட்டுக்கு வரும்போது எப்படி ப்ரூட்ஸ் எடுத்துட்டு வருவ?” என வினவினான்‌.
‘அடப்பாவி! போட்டு விட்டுட்டீயே டா!’ நெஞ்சுப் பதறிப்போய் பார்த்தார் வத்சலா.
“என்னமா அப்படி பார்க்குற. வா, வந்து கூடையை வாங்கு...” என்றவன், முத்துக்கிருஷ்ணனைப் பார்த்து, “நான் இந்த வீட்டுக்குள்ள வர்றதுக்கு ஒன்னும் வரலை மா...” என ரோஷத்துடன் கூறினான்.
அன்னிச்சையாய் அவனை நோக்கி நகர்ந்தன வத்சலாவின் கால்கள். ‘இப்போ ரெண்டும் ரொம்ப முக்கியம்?’ மகனை மனதில் தாளித்துக்கொண்டே அந்தக் கூடையை வாங்கினார்.
தந்தை அறியாது தாயைப் பார்த்து கண்ணடித்த அன்பு, “சாரிம்மா...” என முணுமுணுத்துவிட்டு திரும்பியவன் முகம் முழுக்க சிரிப்புதான்.
‘பத்த வச்சுட்டீயே டா பரட்டை. அதுக்குப்புறம் சாரி எதுக்கு. எனக்குப் பொறந்தது கூட எமனா இருக்கே...’ என நொந்துகொண்டே கணவரைப் பார்த்தார் வத்சலா. அவர் ருத்ர மூர்த்தியாக நின்றிருந்தார்.



































































































 
Well-known member
Messages
547
Reaction score
389
Points
63
அச்சோ பாவம் அம்மா
 
Top