- Messages
- 1,242
- Reaction score
- 3,657
- Points
- 113
வேதம் – 18
அன்பழகன் கூறியது போல விருதுநகரில் இரண்டு பிரபல கல்லூரியிலும், மதுரையில் ஒரு கல்லூரியிலும் வேதாவிற்காக விண்ணபித்திருந்தான்.
ஒரு வாரத்திற்குப் பின் கலந்தாய்வு நிறைவுற, மதுரைக் கல்லூரியில்தான் வேதாவிற்கு இடம் கிடைத்திருந்தது. பயணம் செய்யும் நேரம் இரண்டு மணியத்தியாலகங்ளுக்கு மேலிருக்க, விடுதியில் சேர்த்துவிடுகிறேன் என கணவன் முடிவெடுக்க, சரியென்றுவிட்டாள் வேதவள்ளி.
ஆனால், மனதை கொஞ்சம் பாரம் சூழ்ந்துகொண்டது. கடந்த இரண்டு மாதங்களில் அவனுக்குப் பழகிவிட்டிருந்தாள் வேதா. காலையில் இருவரும் பேசிக்கொண்டே அருந்தும் தேநீர் முதல், இரவு அணைத்துத் தூங்கும் படுக்கை வரை பறிப்போகிறது என மனம் கவலைக்
கொண்டது. இருப்பினும் அவள் ஆசைப்பட்ட படிப்பு, இளங்கலை கணிதம் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இடம் கிடைத்திருக்க, அதை விட்டுவிட மனதில்லை.
கல்லூரியில் வேதவள்ளியை சேர்த்துவிடுவதற்கானப் பணத்தையும் ஏற்பாடு செய்துவிட்டிருந்தான் அன்பு. விடுதியில் தங்குவதற்கு என்னென்ன பொருட்கள் வேண்டும் என யோசித்து இருவரும் ஓரளவுக்கு எல்லாவற்றையும் வாங்கி முடித்திருந்தனர்.
வேதவள்ளியிடம் சொற்பமான உடைகளே இருக்க, புது உடைகள் எடுப்பதற்காக அவளைத் துணிக்கடைக்கு அழைத்துச் சென்றிருந்தான் அன்பழகன். இருவரும் பெண்கள் உடைப்பகுதிக்குள் நுழைந்தனர்.
“மேடம், சுடிதாரா? இல்லை சேரி பார்க்குறீங்களா?” கடை ஊழியர் வினவ, “சுடிதார் ஓகேதான்” என்றவள், உடைகளைப் பார்க்க ஆரம்பித்தாள்.
வேதாவிற்கு அருகே ஒரு நாற்காலியைப் போட்டு அமர்ந்துவிட்டான் அன்பழகன். அவள் ஒவ்வொரு உடையாகத் தேர்வு செய்ய, அமைதியாய்ப் பார்த்திருந்தான் கணவன். பின்னர் கடையைச் சுற்றிப் பார்வையைப் படரவிட்டவனின் விழிகள் ஒரு புடவையில் நிலைத்தன.
தங்க நிற ஜரிகை வைத்து அழகாய் கண்ணைக் கவரும் வண்ணம் காப்பர் பட்டிலான சேலை ஒன்றிருக்க, எழுந்து சென்று அதை எடுத்துப் பார்த்தான். வேதவள்ளிக்கு அந்தப் புடவை அத்தனை அழகாய் இருக்கும் எனத் தோன்றியது ஆடவனுக்கு.
“இந்தச் சேலையும் சேர்த்து பேக் பண்ணிடுங்க...” கடை ஊழியரிடம் கொடுத்துவிட்டு அமைதியாய் அவளருகே அமர்ந்துகொண்டான். சிறிது நேரத்திலே வேதா உடைகளை தேர்வு செய்துவிட, வெளியே ஒரு உணவகத்தில் உண்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தனர் இருவரும். இன்னும் இரண்டு நாட்கள் கழித்து, கல்லூரியில் சேர்க்க தேதி கொடுத்திருந்தனர்.
ஒரு ஆர்வமே இல்லாது வாங்கிய உடைகளை பையில் எடுத்து வைத்துக்
கொண்டிருந்தாள் வேதவள்ளி. அன்பழகனும் அவளைக் கவனித்துக்கொண்டுதானே இருக்கிறான். அவன் வாங்கிய சேலையை எடுத்து அலமாரியில் வைத்துவிட்டாள். மனம் மட்டும் பாரமாய் இருந்தது பெண்ணுக்கு.
அறையிலிருந்து வெளியே வந்த தொலைக்காட்சியை உயிர்பித்து அமர்ந்தாள் வேதா. எஸ்.பி.பி தன் குரலில் உருகிப் பாடிக்கொண்டிருந்தார். ஏனோ அவளுக்கு மனம் எதிலுமே லயிக்கவில்லை. மீண்டும் தனிமை சிறையா? என நினைப்பே கசந்தது. விடுதியில் நிறைய மாணவிகள் இருந்தாலும், அன்பழகன் இருப்பு இல்லாது போகப் போகிறதே என்ற உண்மை மனதை அரித்தது.
லேசாக அவளுக்கே சிரிப்பு வந்தது. எத்தனை வருடங்களாக அவனை தனக்குத் தெரியும். இரண்டு வருடங்கள்தான். அதுவும் திருமணம் முடிந்த இரண்டு மாதங்கள் மட்டும்தானே இந்த அருகாமை சுகத்தை உணர்ந்தாள். அப்படியென்ன அவன் தன்னில் ஊடுருவியிருக்கிறான் என ஆராய்ந்தால், மொத்தமும் அன்பின் வேதமாக, தான் மாறிவிட்டிருக்கிறோம் என்பதே அப்போதுதான் அவளுக்கு உறைத்தது.
வெறும் மூன்று மாதங்கள் இல்லையில்லை மிஞ்சிப் போனால் இரண்டரை மாதங்கள், அவள் வாழ்க்கையே மாறிவிட்டிருந்தது. தாய் தந்தையுடன் இருந்த அருகாமையைக் கொடுத்திருந்தவன் மனம் முழுவதும் நிறைந்து கிடந்தான்.
பெண்களை வசியப்படுத்துவதற்கெல்லாம் பெரிதாய் மெனக்கட வேண்டியதில்லையே! அவளுக்கென கனவுகள், ஆசைகள், இன்ப, துன்பங்கள் இருக்கும் என எப்போதும் அவளுக்கு ஆதரவாய் நேசக்கரத்தை நீட்டினாலே, அவர்கள் எல்லாம் ஆண்களுக்கு அடிமையாகிவிடுகின்றனர். அது அன்பின் அடிமை சாசனம். வேதாவும் அன்பழகனுக்கு அன்பின் சாசனம்தான் எழுதி கொடுத்திருந்தாள்.
தரையில் அமர்ந்து கைகளைக் கட்டிக்கொண்டு முட்டியில் தலையைச் சாய்த்திருந்தவள் சிந்தை முழுவதும் அன்பழகன்தான். கூடத்திற்கு வந்தவன் சில நொடிகள் அவளைப் பார்த்துவிட்டு தொலைக்காட்சியை அணைத்தான். அந்த பிரக்ஞை கூட இல்லை வேதாவிடம். அமைதியாய் அவளருகில் சென்று அமர்ந்தவனின் அரவம் உணர்ந்தும், விழிகளைத் திறக்கவில்லை பெண்.
“என்னவாம், சோக கீதம் வாச்சிச்சுட்டு இருக்க ரெண்டு நாளா?” தன்னிடம் வினவியவனை நிமிர்ந்து பார்த்தவள், ‘ஒன்றும் இல்லை’ என்பது போல தலையை அசைத்துவிட்டு மீண்டும் கைகளைக் கட்டிக்கொண்டு அமர்ந்தாள்.
“இல்லையே, ஏதோ இருக்கே. மேடம் ரொம்ப அமைதியா இருக்கீங்களே?” யோசனைப் படர்ந்தன அன்பழகன் முகத்தில்.
விழிகளை மலர்த்தி அவனைப் பார்த்தவள், முகம் கொஞ்சம் கனிந்து கிடந்தது அவன் மீதான தேசத்தில். ஒரு கையை அவனை நோக்கி நீட்டியவள், ஒவ்வொரு விரலாய் விரித்தாள்.
“ஹ்ம்ம்... முத்தம் கொடுங்க” கைகளைத் தன் முன்னே நீட்டியவளின் பேச்சில் அன்பழகன் புருவம் ஆச்சர்யத்தில் உயர்ந்தது.
“ஹே...” என்றவன் உதட்டில் புன்னகை குடியேறியது.
“ப்ம்ச்... கொடுப்பீங்களா? மாட்டீங்களா?"
"என்னடி?" என்றவனுக்கு அப்போதும் ஆச்சர்யம்தான். உதட்டலிருந்த சிரிப்பு முகம் முழுவதும் படர்ந்தது.
"உங்களுக்காகத்தான் மருதாணி வச்சேன்...” விழிகள் முழுக்க நேசத்துடன் கூறியவளை உதட்டில் உறைந்த புன்னகையுடன் பார்த்தான் கணவன்.
“இப்படிலாம் கேட்டா, எனக்கு கொடுக்கத் தோணலை டி. நானா உன் கையைப் பிடிச்சிழுக்கும்போது நீ துள்ளுவ இல்லை. அதான் டி பிடிச்சிருக்கு...” குறும்பு மின்னக் கூறினான் ஆடவன்.
“போயா...” சத்தம் வராது உதட்டை அசைத்தவள், கைகளை இழுத்துக்
கொண்டாள். சிரிப்புடன் அவளது இரண்டு கரத்தையும் தன்னை நோக்கி இழுத்தவன், முகர்ந்து பார்க்கவும், மருதாணியோடு இழைந்த வேதாவின் வாசம் உடல் முழுவதும் பரவ, மனமும் உடலும் குளிர்ந்து போனது.
சிரிப்புடன் இரண்டு கைகளிலும் முத்தமிட்டான். ஆசையாய் பார்த்திருந்தாள் வேதா. கைகளை இழுக்கவும் இல்லை, அசைக்கவும் இல்லை. பெண்ணின் கரங்கள் ஆடவன் கைகளில் பொதிந்து போயின, பொருந்திப் போயின.
“என்னடி, பார்வை எல்லாம் தினுசா இருக்கு?” சன்னமான சிரிப்புடன் கேட்டவனிடம் இரண்டு கைகளையும் விரித்தவள், “கட்டிக்கோங்க...” என்றாள்.
“அடிப்பாவி!” வாயில் விரலை வைத்துவிட்டான் கணவன்.
“கட்டிக்கோங்க...” சிணுங்கினாள் பெண். சிதறிப்போனான் ஆடவன்.
“ஹ்ம்ம்...” தாடையைச் சொரிந்தவன், “இரண்டு வருஷமா கிறுக்கனைப் போல பின்னாடி சுத்த விடுவாளாம். பார்த்தா, திமிரா ஒரு லுக்கு... இப்போ மேடம் கட்டிக்கோங்கன்னா, கட்டிப்போமா?” மூக்கை சுருக்கியவன், உதடுகள் புன்னகையில் விரிய, விழிகள் சுருங்கின. அதே சிரிப்புடன் விரிந்த அவளது கைகளில் அடக்கலம் புகுந்தான். இதுவரை தான் மட்டுமே பெண்ணை அணைத்திருக்கிறான். இப்போது முதன்முதலில் அவளில் புகும்போது உடலெல்லாம் சிலிர்த்துப் போனது.
மஞ்சளை குழைத்து அப்பியிருந்தவளின் வாசனையோடு மருதாணி வாசமும் நாசியை துளைத்து மூளையை மங்கச் செய்தது. அவளது மார்பில் முகத்தைப் புதைத்திருந்தான். தான் கட்டிய தாலி மனைவி கழுத்தில் தொங்கியிருந்தது. உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை மின்சாரம் பாய்ந்த உணர்வு.
மூச்சடைத்த நிலைதான் ஆடவனுக்கு. வார்த்தையெல்லாம் வற்றிப்போனது. நிமிர்ந்து வேதாவைப் பாவமாய்ப் பார்த்தான் அன்பழகன்.
“ஏன் டி...” என எதோ கூற வந்தவனின் வாயில் கையை வைத்தவள், “உங்களை மயக்கிட்டேன்...” என்று கூறி அவள் லேசாய் வெட்கப்படவும், அன்பழகன் இதயம் துடிப்பதை நிறுத்தியிருந்தது. அவளிடமிருந்து பிரிந்து எழுந்தவன் மனம் படபடவென அடித்துக்கொண்டது.
‘ம்ப்ச...’ என நெற்றியைத் தட்டிக்கொண்டவன், “ச்சு... போடி. போ. மனுஷன் சும்மா இருந்தாலும் நீ உசுப்பேத்திட்டு இருக்க. ஒழுங்கா படிக்கிற வழியைப் பாரு...” என்றவனை மனைவி லேசாக முறைத்தாள்.
அதில் அன்பழகன் உதட்டில் சிரிப்பு படர்ந்தது. “மாயக்காரி, வசியக்காரி...” என அவளது மூக்கின் நுனியைப் பிடித்து ஆட்டியவன் கையை தட்டிவிட்ட வேதா, உதட்டைச் சுழித்துக்கொண்டே அறைக்குள் நுழைந்தாள். அப்படியே கையை தலைக்குக் கொடுத்து படுத்துவிட்டவனின் மனம் முழுவதும் வேதாதான் நிரம்பி இருந்தாள். அன்பழகனும் நிறைந்து போனான். தான் மட்டுமே பகிர்ந்த நேசத்தை, முதன்முதலில் அவளும் கொடுக்கும்போது உடலெல்லாம் சிலிர்த்துப் போனது.
‘தூரம் போதும்
கிறுக்கேத்துற
இந்த பாவி மனச
ஏன் உசுப்பேத்துற?
மொழியா விழியா
எதில் பேசுற?
விதியா? இது சதியா?
உன் மடி சேருறேன்
ஹோ ஓ ஒ ஹோ...
நான் உன் அருகே
நெசமாகுறேன்
ஒரு பார்வை பார்த்தா
உன் வசமாகுறேன்!’
***
இரண்டு நாட்கள் கடந்திருக்க, வேதவள்ளியைக் கல்லூரியில் சேர்த்துவிடுவதற்காக அன்பழகன் செல்ல, முகிலும் உடன் வந்தான்.
அன்பு மறுத்தும், அடமாக ஒட்டிக்கொண்டு வந்துவிட்டான் தோழன்.
காலையில் சென்று கல்லூரியில் பணத்தைக் கட்டி சேர்க்கையை முடித்துவிட்டு, விடுதிக்குச் சென்றர். எவ்வளவு பணம் கட்டவேண்டும், என்னென்ன விதிமுறைகள் என எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்துகொண்டான் அன்பழகன். அந்தப் பகுதியின் பாதுகாப்பை இருமுறை உறுதிசெய்த பின்னரே, மனம் சமன்பட்டது அவனுக்கு. எல்லா வேலைகளும் முடிய மாலையாகிவிட, அவளை விடுதியில் விட்டுவிட்டு இருவரும் கிளம்பினர்.
“பத்திரமா இருந்துக்கோ டி. எதுனாலும் உடனே எனக்கு கால் பண்ணு. வந்துடுவேன்...” எனக் கூறியவனைப் பார்த்து வேதாவிற்கு விழியோரம் நீர் துளிர்த்தது. அதை இமைசிமிட்டி உள்ளிழுத்துக்
கொண்டாள் பெண்.
“வரேன்...” தலையை அசைத்து விடைபெற்ற அன்பழகனுக்குக் கூட ஏதோ மனதினோரம் பாரம் அழுத்தியது. அவளைப் பார்த்து தலையை அசைத்தவன், சட்டைக் கையை சரிசெய்து கொண்டே சென்றுவிட்டான். ஒருவரின் மனம் மற்றொருவரின் பின்னே சென்றுவிடத் துடித்தது.
வேதவள்ளி தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்தாள். ஏற்கனவே இரண்டு பேர் இருக்க, இவள் மூன்றாவதாய் இணைந்துகொண்டாள்.
தான் கொண்டுவந்த பைகளைத் தனக்குரிய அலமாரியில் வைத்துப் பூட்டினாள். கட்டிலிலிருந்த பழைய போர்வையை எடுத்து தூக்கி எறிந்துவிட்டு, புதிதாய் வாங்கிவந்த போர்வையை விரித்து தன்னிடத்தை சுத்தம் செய்தாள்.
மற்ற இருவரும் வேதாவைப் பார்த்து சிநேகமாக சிரிக்க, பதிலுக்குப் புன்னகை புரிந்தாள். இவளை விட அவர்களுக்கு ஓரிரண்டு வயதுகள்தான் வேறுபாடிருக்கும். தோற்றத்தில் பார்த்தால், அதை கண்டறிய முடியாது.
மூவரும் தங்களை அறிமுகம் செய்துக் கொள்ள, சிறிதுநேரம் பேச்சு சென்றது. வேதவள்ளி உடையை மாற்றி வந்தாள். உண்பதற்காக மூவரும் ஒன்றாக உணவு கூடத்திற்குச் சென்றனர். பெரிதாய் சுவையில்லாவிடினும், சாப்பிடுவது போலிருந்தது உணவு.
ஒரு வாய் எடுத்து வைத்ததும் அன்பழகன் நினைவுதான் வேதாவிற்கு. ‘அவன் வீட்டிற்குச் சென்றிருப்பானா? சாப்பிட்டிருப்பானா?’ என்ற கேள்வி எழ, உண்டுமுடித்து அறைக்குச் சென்றதும் அவனுக்கு அழைத்துவிட்டாள்.
அப்போதுதான் அன்புவும் முகிலும் வீட்டிற்குச் சென்று இறங்கியிருக்க, வீட்டை திறந்து உள்ளே நுழைந்த அன்பழகனை வெறுமையான வீடே வரவேற்றது.
பெருமூச்சை வெளிவிட்டவன், ‘இனிமேல் இதைப் பழகிக் கொள்ள வேண்டும்’ என்று தனக்குத்தானே கூறிக்கொள்ள வேதவள்ளி அழைத்துவிட்டாள்.
“வீட்டுக்குப் போய்ட்டீங்களா?” வேதா வினவ,
“இப்போதான் வந்தேன்...” பதில் இயம்பியவன், மின்விசிறியை சுழலவிட்டவாறே நாற்காலியில் கால் நீட்டி அமர்ந்தான்.
“ஹ்ம்ம்... சாப்ட்டீங்களா?”
“வரும்போதுதான் நானும் முகிலும் சாப்பிட்டோம்...”
அடுத்து என்ன பேசுவதென்று தெரியவில்லை வேதவள்ளிக்கு. இரண்டு நிமிடங்கள் மௌனம் விழுங்கிக் கொள்ள, “ம்ம்... நல்லா தூங்குங்க...” எனக் கூறி அழைப்பைத் துண்டித்தாள் பெண்.
அலுப்புத் தீர குளித்து முடித்து உடைமாற்றி வந்தவன் படுக்கையில் விழவும், நினைவை நிறைத்தாள் பெண். தினமும் அவளோடு ஒட்டிப்படுத்துக் கொண்டு, வம்பிழுப்பது நினைவில் வர, இதழ்களில் புன்னகை மலர்ந்தது. அதை நினைத்துக்கொண்டே உறங்கிப் போனான்.
மறுநாள் காலையில் கல்லுாரிக்குச் செல்லத் தயாரான வேதா, அன்பு அழைக்கும் முன்னரே அவனுக்கு அழைத்துப் பேசிவிட்டிருந்தாள். பின்னர் முதல்நாள் கல்லூரி முடிந்து வரவும், அவனே அழைக்க, அன்றைய நாளில் நடந்தவகளை கணவனோடு பகிர்ந்து கொண்டாள்.
அவளுக்கென இரண்டு நண்பர்கள் கிடைத்துவிட, ஓரளவுக்கு அவர்களோடு ஒன்றிப்போனாள். இருபாலர் படிக்கும் கல்லூரி என்பதால், கலகலப்புக்குப் பஞ்சமில்லாது போனது.
தினமும் காலையிலும் மாலையிலும் அன்பழகனுக்கு அழைத்துப் பேசுவதை வழக்கமாக்கிவிட்டாள் வேதவள்ளி. அவள் அழைக்காவிடில், பதறிக்கொண்டு கணவன் அழைத்துவிடுவான். சில நிமிடப் பேச்சுக்கள் மனதிற்கு இதத்தை அளித்திருந்தது.
கலைக்கல்லூரிகளில் சனி, ஞாயிறு எப்போதும் விடுமுறை உண்டு. வேதா முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு திரியும்போது, இதைக் கூறித்தான் அவளை சமாதானம் செய்திருந்தான் அன்பழகன்.
வெள்ளிக்கிழமை காலையிலே அழைத்து, மாலைதான் வருவதாக அன்பு கூறிவிட, வேதவள்ளியும் ஆசையுடன் அன்றைய நாளைக் கடத்தியிருந்தாள். ஒருவாரப் பிரிவெனினும், திருமணத்திற்குப் பின்னான முதல் பிரிவு. சற்றே நீண்ட நெடியப் பிரிவாக மூளை உணர, மற்றவர் அருகாமைக்கு மனம் ஏங்கியது.
சரியாய் கல்லூரி முடிந்து வேதவள்ளி வெளியே வர, வாயிலில் இருசக்கர வாகனத்துடன் காத்திருந்தான் அன்பழகன். அவனைக் கண்டதும் முகம் மலர்ந்து போனது பெண்ணுக்கு.
அவனும் அவளைத்தான் பார்த்திருந்தான். மற்ற மாணவர்களோடு சேர்ந்து, குட்டியாகத் தெரிந்தாள். ‘குழந்தையைப் போய் திருமணம் செய்திருக்கிறேனே!’ என ஏற்கனவே மனம் எள்ளி நகையாடும். இப்போது மனைவி உண்மையிலே மற்றவர்களோடு சேர்ந்து குழந்தையாய் தெரிந்தாள்.
அவனருகில் வந்த வேதா, தனது தோழிகள் இருவரையும் அறிமுகம் செய்து வைக்க, அவர்களைப் பார்த்து லேசான சிரிப்புடன் தலையை மட்டும் அசைத்தான் அன்பு. அவர்கள் இருவரும் விடைபெற, விடுதிக்குச் சென்று விடுமுறை கடித்தத்தைக் கொடுத்துவிட்டு கணவனும் மனைவியும் வீட்டிற்குப் புறப்பட்டனர்.
கல்லூரியிலிருந்து வீட்டை அடைய கிட்டத்தட்ட மூன்று மணிநேரங்கள் பிடித்தது. வீட்டிற்குள்ளே நுழைந்ததும், வீடிருந்த கோலத்தில் இடுப்பில் கையை வைத்து ஆடவனை முறைத்தாள் மனைவி.
“என்ன டி?” பட்டென ஜனித்த புன்னகையை உதட்டுக்குள் மறைத்துக்கொண்டு அன்பு வினவ, இருந்தும் முகம் மலர்ந்து கிடந்தது. இந்த ஒருவாரம் ஏதோ கலையிழந்து போயிருந்த வீடு மனைவி நுழைந்ததும் பிரகாசித்தது.
“வீட்டை குப்பைக் கூளம் மாதிரி ஆக்கி வச்சிருக்கீங்க? எவ்வளோ சுத்தமா வச்சுக் கொடுத்துட்டுப் போனேன்?” என முறைத்தவளின் கையை எட்டிப்பிடித்தான் அன்பழகன்.
“ப்ம்ச்... போங்க...” என முறைத்தவளை இறுக அணைத்துக்கொண்டான் கணவன். அமைதியாய் அவனது அணைப்பில் அடங்கிப் போனாள் வேதா.
“என்னை மிஸ் பண்ணீங்களா?” தலையை உயர்த்தி விழிகளை மலர்த்திக் கேட்டவளின் மூக்கில் குனிந்து முத்தமிட்டவன், “இல்லையே...” என உதட்டைப் பிதுக்கினான்.
“போயா...” என அவனை உதறியவளின் முகம் முழுவதும் முறைப்புதான். அறைக்குள் சென்று உடைமாற்றி வந்தவள், இரவுக்கு சமைக்க என்ன இருக்கிறது எனப் பார்த்தாள்.
ரவை இருக்கவும், உப்புமாவை கிளறி வைத்துவிட்டு, வீட்டைச் சுத்தம் செய்யத் துவங்கினாள். உதட்டில் மலர்ந்த சிரிப்புடன் மனைவியின் செய்கைகளை ரசித்திருந்தான் கணவன்.
பாயை விரித்தவள், உணவை எடுத்துவைத்துவிட்டு அவன் முகத்தைப் பார்த்தாள். ‘பார்த்தா, வந்து உட்காரணுமோ?’ என அலட்சியமாகப் பார்த்து வைத்தான் அன்பழகன்.
உதட்டுக்குள் ஏதோ முணுமுணுத்தவள், “மகாராஜா, வந்து உட்கார்ந்து சாப்பிடுங்க...” என கோபத்துடன் பெண் கூற, சத்தமாய் சிரித்துவிட்டான் கணவன்.
மனைவி முறைப்பு அதிகமாகவும், உதட்டில் புன்னகையை மறைத்தவன், அமைதியாய் அமர்ந்து உண்ண, தானும் சாப்பிட்டு முடித்த வேதா, அவனை சட்டை செய்யாமல் படுத்துவிட்டாள். பயணக்களைப்பு வேறு அவளுக்கு.
அருகே படுத்த அன்பழகனின் அரவம் உணர்ந்ததும், “கையை காலை மேல போடட்டும்...” என வாய்க்குள் முணுமுணுத்தாள் வேதவள்ளி.
பத்து நிமிடங்கள் கடந்தும் அன்பழகன் தள்ளியே படுத்திருக்க, ‘தூங்கி விட்டானோ?’ என எண்ணி அவன் புறம் வேதா திரும்பியதும், அதற்காகத்தான் காத்திருந்தேன் என்பது போல அவளை இடையோடு இழுத்து அணைத்துக்கொண்டான் அன்பு.
“ப்ம்ச்... போங்க. போங்க...” மனைவி சண்டையிட, அதை சிரிப்புடன் ஏற்றவன், அவளை இறுகி அணைத்துக்
கொண்டான். வேதாவும் சில நொடிகளில் அவனை கட்டிக்கொண்டு படுத்துவிட்டாள். சுகமான சயனம் இருவரது நயனங்களையும் ஆக்கிரமித்துவிட்டன.
அடுத்து வந்த இரண்டு நாட்களுமே மனைவியை ஒட்டிக்கொண்டேதான் திரிந்தான் அன்பழகன். மீண்டும் திங்கட்கிழமை வர, அதிகாலையிலே கிளம்பி அவளை சரியான நேரத்தில் கல்லூரியில் இறக்கிவிட்டிருந்தான்.
அடுத்தடுத்து வந்த நாட்களிலும் இதுவே தொடர்கதையாகிப் போனது. வார இறுதிகளில் வீட்டில் கொஞ்சிக் கொள்பவர்கள், வார நாட்களில் தொலைப்பேசியில் கொஞ்சிக் கொண்டனர். அப்படியே ஓரிரு மாதங்கள் ஓடியிருந்தன.
அன்று ஞாயிற்றுக்கிழமை காலைப்பொழுது. அன்பழகனுக்காக எதையோ சமைக்கிறேன் என சமையலுடன் போராடிக்கொண்டிருந்தாள் வேதா. அவனும் சலிக்காது அவளுக்காகக் காத்திருந்தான்.
வாயிலில் யாரோ அழைப்புமணி அடிக்கும் சத்தம் கேட்டது. அன்பு சென்று கதவைத் திறக்க, முருகையா நின்றிருந்தார். அவரைப் பார்த்து புருவத்தை உயர்த்தியவன், பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை. ‘உள்ளே வா’ என்று அழைக்கவோ, சிநேகமானப் பார்வையோ கூட ஆடவனிடம் இல்லை. அவர் சங்கடமாகப் பார்த்தார். அன்பு அந்நியப் பார்வை பார்த்து வைத்தான்.
“யாருங்க?” என வினவியவாறே கையில் கரண்டியுடன் வெளிய வந்த வேதவள்ளி முருகையாவை எதிர்பார்க்கவில்லை. ஒரு நொடி திகைத்துப் போனாள்.
“பெ... பெரியப்பா, உள்ளே வாங்க. வாங்க...” என்றவள் கரண்டியை வைத்துவிட்டு அவரருகில் சென்றாள். முழுமையாக அன்பழகனின் மனைவி வேதவள்ளியாய்த்தான் அவருக்கு தெரிந்தாள் பெண்.
உள்ளே நுழையாது வாயிலிலே நின்றவரின் பார்வை அன்பழகனைத் தொட, அவனைப் பார்த்தாள் வேதவள்ளி. முகத்தில் அத்தனை திமிரோடு நின்றிருந்தான்.
அவனருகில் சென்றவள், “பெரியப்பாவை உள்ளே கூப்பிடுங்க...” என கணவன் கையைப் பிடிக்கவும், அவன் அசையவே இல்லை. அப்படியேதான் நின்றான் அலட்சியமாக.
“ஏங்க...” பல்லைக் கடித்தாள் வேதா. ஒரு நொடி கூட எதிர்வினை ஆற்றவில்லை அன்பு.
அவனை முறைத்தவள், “பெரியப்பா, உள்ளே வாங்க...” என அவர் கையைப் பிடித்து இழுத்து வந்து நாற்காலியில் அமர வைத்தாள்.
“வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க? பெரியம்மா, எழில் என்ன பண்றாங்க பெரியப்பா?” சந்தோஷமாக வினவினாள் பெண். அவளது முகத்தைப் பார்த்து முருகையாவிற்கு குற்ற உணர்வு தொக்கி நின்றது.
“நல்லா இருக்கோம் டா. நீ எப்படி இருக்க?” எனக் கேட்டு அவளது கையைப் பிடித்தார் மனிதர்.
“எனக்கென்ன பெரியப்பா. ரொம்ப நல்லா இருக்கேன்...” உண்மையான மகிழ்ச்சியுடன் கூறியவளின் பார்வை கணநேரத்தில் கணவனைத் தொட்டு மீண்டது. அவளது பார்வையை உணர்ந்தவருக்கு மனது நிறைந்து போனது. முகிலனை அனுப்பி வேதாவின் பள்ளிச் சான்றிதழ்களை முருகையாவிடமிருந்து வாங்கி இருந்தான் அன்பழகன்.
எதற்கெனக் கேட்டு சான்றிதழ்களைக் கொடுத்தவருக்கு அன்பழகனின் மீதான தன்னுடைய கண்ணோட்டம் தவறோ என தோன்றியது. சில வாரங்கள் கடக்க, வேதா மதுரையில் ஒரு கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறாள் எனக்கேட்டதும் அத்தனை மகிழ்ச்சி அவருக்கு.
எதேச்சையாக இருவரையும் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பார்த்திருந்தார் மனிதர். வேதாவின் மலர்ந்த முகமே அவளது வாழ்க்கையை எடுத்துரைக்க, அவள் மீதான வீணான கோபத்தைத் துடைத்தெறிந்துவிட்டு பார்க்க வந்திருந்தார்.
“தம்பி, எப்படி இருக்கீங்க?” முருகையா அன்பழகனிடம் வினவ, அதை அசட்டை செய்து வீட்டைவிட்டு வெளியேறியிருந்தான். அவனது செயலில் முருகையாவின் முகம் மாறிவிட, வேதாவிற்கு அத்தனை கோபம் வந்தது.
“அது... பெரியப்பா, அவருக்கு ஏதோ வேலை. அதான் வெளிய போய்ட்டாரு...” என்று சமாளிப்பாய்க் கூறினாள் பெண்.
“பரவாயில்லை மா. அவருக்கு கோபம் இருக்கத்தானே செய்யும்...” என்றவர், சற்றே நிறுத்தி, “என்னை மன்னிச்சிடு மா. அன்னைக்கு சூழ்நிலையில எதுவும் செய்ய முடியாமப் போச்சு...” என்று தயங்கியபடி மன்னிப்பை யாசித்தார் மனிதர்.
“பெரியப்பா, நடந்ததை விடுங்க. உங்க வேலை எப்படி போகுது?” என வேறு பேச்சுக்குத் தாவியவளுக்கு நடந்த நிகழ்வின் சுவடைப் பற்றிக் கூட பேச விருப்பமில்லை.
அதற்குமேலும் வேதாவை வருத்த விரும்பாதவர், மேலும் சில நிமிடங்கள் பேசினார். அவருக்குத் தேநீர் கொடுத்து தானும் அவருடன் அமர்ந்து பேசினாள் வேதவள்ளி.
“ரொம்ப சந்தோஷமா இருக்கு டா. நீ நல்லா இருந்தா போதும். தம்பி உன்னை நல்லா பார்த்துக்குறார்னு உன் பேச்சுலே தெரியுது...” என்ற முருகையா விடை பெற, வாசல்வரை சென்று அவரை வழியனுப்பி வைத்த வேதவள்ளிக்குக் கோபம் கனன்றது.
எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு, ஒரு நாற்காலியில் அமர்ந்தவளின் விழிகள் அன்பழகனை எதிர்பார்த்த வண்ணமிருந்தன.
‘அப்படி என்ன இவருக்கு பொல்லாத கோபம், வீராப்பு. வயசான மனுஷன், அவரே வீடு தேடி வந்திருக்காரு. சம்பிரதாயத்துக்காகவாது வான்னு கூப்பிட்டா குறைஞ்சுப் போய்டுவாரா? வயசுக்காவது மரியாதை கொடுக்க வேண்டாமா? அலட்சியம், திமிர்...’ என நினைத்து பல்லைக் கடித்தாள் இவள்.
முருகையா வெளியேறிச் சென்றதை தெருமுனையில் பார்த்த அன்பழகன், தோளை குலுக்கிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான்.