- Messages
- 1,242
- Reaction score
- 3,657
- Points
- 113
வேதம் – 16
வேதவள்ளியின் பேச்சில் அன்பழகன் அதிர்ந்ததெல்லாம் ஒரே ஒரு நொடிதான். முழுதாய் தனக்கு மனைவியாய் மாறி, அதட்டலாய் பேசியவளின் முகத்தில் பார்வையைப் பதித்தவனின் இதழ்கள் பெரிதாய் விரிந்தன.
‘எந்த அலட்டலுமின்றி அழகாய் இவள் தன் கூட்டில் இணைந்து கொண்டாளே!’ ஆச்சர்யம்தான் கணவனுக்கு. இத்தனை எளிதாய் எப்படி இவளால் என்னை ஏற்றுக் கொள்ள முடிந்தது. இதெல்லாம் உடனடியாக நடந்தது போலில்லை. சூழ்நிலையின் காரணமாக பெண் அவள் வாழ்வில் தன்னை இணைத்துக் கொண்டால், இத்தனை விரைவில் எல்லாம் இந்த இணக்கமும் உரிமையுணர்வும் தோன்றிட வாய்ப்புகள் அரிது என மனம் அடித்துக் கூறியது. அது அவளுக்கு தன் மீதான நேசத்தை பறைச்சாற்ற, மனம் அத்தனையாய் நிறைந்து போனது அந்தக் கணத்தில்.
நாள் தவறாது பின்னே சென்ற போது தன்னை ஒரு நொடி கூட திரும்பிப் பார்க்காது அலையவிட்டவள் இவள். அந்தத் திமிரான அலட்டலான பார்வைக்குச் சொந்தமானவள் இவள். முதல்முறையாக தன்னை நேர்க்கொண்டு பார்க்கும்போது லேசாய் தயங்கி தவிப்புடன் தன்னை ஏறிட்ட விழிகளுக்கு சொந்தமானவள் இவள்தான். இப்போது இந்த அதட்டலான பேச்சிற்கும் கூட இவள்தான் பாத்தியப்பட்டவள் என நினைத்ததும், அன்பழகனுக்கு உதட்டோடு விழிகளும் சேர்ந்து மலர்ந்து சிரித்தன.
சுவற்றில் சாய்ந்தவன், ‘என்ன?’ எனப் பார்வையால் வினவினான். ஊனும் உயிரும் எதிரே நின்றிருந்தவளோடு உறைந்து போன்றதொரு உணர்வு. வார்த்தையால் வடிக்க முடியாதவன், முகத்தில் புன்னகை படர்ந்தது. அவனைப் பார்த்த வேதவள்ளியின் முகத்தில் உண்மையான முறைப்பிருந்தது.
“பார்வைக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை...” முறைப்புடன் முணுமுணுத்துக்கொண்டே சமையலறைக்குள் சென்று தான் பாதியில்விட்ட வேலையைத் தொடர்ந்தாள் வேதா.
தலையை இருபுறமும்
ஆட்டிச் சிரித்தவனின்
மனது உரிமையாய்த்
தன்னிடம் சண்டையிட்ட
மனைவியின் முகத்தை ஆழப்பதித்துக்கொண்டது. ஜில்லென பனிக்கூழை ரசித்த மகிழ்வு, மழை உச்சியில் நின்று தனக்குப் பிடித்தவர்களின் பேரை கத்தி உரைக்கும் உணர்வு, குழந்தையிடம் அவர்களுக்கு பிடித்த பொம்மையை வாங்கித் தரும்போது, அவர்கள் முகத்தில் படர்ந்து கிடக்கும் மகிழ்ச்சி, அதை அதைத்தான் அன்பழகன் ஸ்பரிசித்தான்; மனம் நிறைந்து புன்னகைத்தான்.
தானும் சமையலறைக்குள் சென்றவன், “வேதா...” என அழைத்தான். அவளிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை.
“ப்ம்ச்... நான் அப்படியெல்லாம் நினைக்கலை டி. இப்போ என்ன, உன் காசை வாங்கிக்கணுமா?” எனக் கேட்டான். பதிலில்லை அவளிடம்.
நெற்றியைச் சொரிந்தவனுக்கு எப்படி வேதாவைச் சமாதானம் செய்வதென தெரியவில்லை. முதன்முதலான ஊடல். கொஞ்சம் திணறிப் போனான் மனைவியின் இந்த அடாவடியில். ஆனாலும் அதிகமாய் ஈர்த்தாள். அமைதியாய் இருந்தாலும் சரி, அடாவடியாய் இருந்தாலுமே அன்புவிற்கு அவளை அத்தனைப் பிடிக்கும்.
அடாவடிக்குப் பேர் போன அன்பழகனையே திணற வைத்துக் கொண்டிருந்தாள் மனைவி. அவளிடம் கோபம் கொள்ளவெல்லாம் அன்புவால் முடியாத காரியமாகிற்றே. இந்த அளவுக்கு அவன் அடிபணிந்து போவது வேதாவிற்காக மட்டும்தான், வேதாவிடம் மட்டும்தான். வேறு யாராய் இருந்தாலும், அசட்டையாய் திமிராய் பதில் கூறியிருப்பான். ஆனால், வேதவள்ளியிடம் மட்டும் அவ்வாறெல்லாம் முடியாது போனது.
இரண்டு நிமிடங்கள் என்ன செய்வது எனத் தெரியாது நின்றவன், அவள் புறங்கையைப் பிடித்து தன் புறமாகத் திருப்பினான். “ஏய், நம்புடி, அப்படியெல்லாம் எனக்கு யோசனை போகலை. நீயா நினைச்சுக்கிட்டா, நான் என்ன பண்றது?” எனக் கேட்டு தாடியைச் சொரிந்தவன், “ஒரு முப்பதாயிரம் கொடு டி. வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்கணும்” என்றான்.
இத்தனை நேரம் அசட்டையாக நின்றிருந்த வேதவள்ளி, அறைக்குள் நுழைந்து தன் கைப்பையிலிருந்து பணபரிவர்த்தன அட்டையை எடுத்து வந்து அவன் கையில் திணித்தாள். “இதுல ஐம்பதாயிரம் இருக்கு. அந்தச் செயினை மீட்டுட்டு வந்துடுங்க. வீட்டுக்கு அட்வான்ஸூம் கொடுத்துடலாம்...” சுவற்றைப் பார்த்து பேசினாள் வேதா.
‘ஐம்பதாயிரம் இவளிடம் இருக்கிறதா?’ என ஒரு நொடி ஆச்சர்யப்பார்வை வீசினான் அன்பழகன்.
அதைக் கவனித்தவள், “சம்பளத்துல பாதிதான் பெரியம்மா வாங்கிப்பாங்க. மிச்சம் என்கிட்டேதான் இருக்கும். பெருசா எனக்குன்னு செலவு இல்லாததால, அக்கவுண்ட்ல போட்டு வச்சிருந்தேன்...” கேட்காத கேள்விக்கு பதிலளித்தவள், சட்னி அரைப்பதற்காக முகிலன் வீட்டிற்குள் நுழைந்தாள். மின் அரவை இயந்திரம் இன்னும் வாங்கவில்லை அவர்கள். அதனால்தான் அங்கே சென்று அரைத்து வரலாம் என சென்றாள்.
சட்னியை அரைத்து வந்த வேதா, அவன் முகம் பார்த்து நின்றாள். நிமிர்ந்தான் அன்பழகன். “சாப்பிட வாங்க...” அதிகாரமாய் கூறிவிட்டு சிலுப்பிக் கொண்டவளின் பின்னே சென்றவன்,
சமையல் திண்டில் ஏறி அமர்ந்து கொண்டான். அதை கவனித்தாலும் அவன் புறம் திரும்பவில்லை பெண். தோசைக்கல்லை அடுப்பில் ஏற்றி தோசைச் சுட ஆரம்பித்தாள்.
அவளது செய்கைகள் ஒவ்வொன்றையும் அமைதியாய்ப் பார்த்திருந்தான் அன்பு. எட்ட நின்று பார்த்தப் போதே, அத்தனை காதல் செய்த காதல் பித்தனவன், முன்பு காதலி என்ற ஸ்தானத்தில் கண்ணியமான பார்வை வீசினான். ஆனால், இப்போது கண்ணியப்பார்வை எல்லாம் காற்றோடு கரைந்து போனது.
தலை முதல் கால்வரை ரசனையாய் தழுவின ஆடவன் விழிகள். திறந்திருந்த சாளரத்தின் வழியே மெல்லிய தென்றல் இருவரையும் பட்டும்படாமலும் தழுவிச் சென்றது.
வேதவள்ளி சேலை அணிந்திருக்கவில்லை. சுரிதார் தான் உடுத்தியிருந்தாள். மனம் கொஞ்சம் சுணங்கியது. பாவை சேலை மட்டும் உடுத்தியிருந்தாள் ஆயிரம் பிதற்றல்களை கவிதையாய் வடித்திருப்பான். இப்போதும் மனைவி அவனை வசீகரித்தாள்தான். அங்கும் இங்கும் ஒரு நொடி கூட கருவிழிகள் அசையாது தன்னை நோக்குபவனைப் பார்த்து குப்பென வயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தது பெண்ணுக்கு. அரிதாரமின்றி சிவந்து போயின கன்னங்கள்.
ஜன்னல் வழி வந்த நிலவொளியில் வேதவள்ளி அணிந்திருந்த மூக்குத்தி மின்னயது. அதில் திணறிப்போனவனின் பார்வை கண்ணியத்தை உடைத்து உதட்டை மொய்க்கவும், ஜிவுஜிவென உள்ளுக்குள் உணர்வுகள் பொங்கியது. கார்க் கூந்தலை அடக்கியிருந்த இழுப்பட்டையை இழுத்துவிட முனைந்த கரத்தைப் பின்னிழுத்துக் கொண்டவன், லேசாய் இருமினான். சுகமான அவஸ்தை செய்தாள் பெண். அவளது கைகள் வேலை பார்த்துக்கொண்டிருந்தாலும் படபடவென அடித்த விழிகள் பூகம்பத்தைப் பரப்ப, பட்டென கீழே குதித்து இறங்கியவனின் மனம் கூட எகிறி குதித்தது.
“இதெல்லாம் சரிபட்டு வராது டா சாமி” முணுமுணுத்தவன், விறுவிறுவென கூடத்திற்குச் சென்றுவிட்டான். பாயை எடுத்து விரித்து, கால் நீட்டி அமர்ந்துகொண்டான்.
அன்பழகன் முணுமுணுப்பாய் கூறியது தெளிவாய் விழவில்லை வேதாவிற்கு. அவன் சென்றதும் மூச்சை வெளிவிட்டாள் பெண். அதுவரை எதிலோ அடைபட்டிருந்த உணர்வுதான் அவளுக்கு.
இரண்டு தோசைகள் ஊற்றி அவனுக்கு எடுத்துச் சென்றவள், உணவையும் தண்ணீரையும் அவனுக்கு முன்னே வைத்தாள். பிரமாதமாய் சமைக்கவில்லை எனினும், ஓரளவுக்கு நன்றாய்தான் சமைப்பாள் வேதா.
அன்பழகன் உண்ண ஆரம்பித்ததும் அவன் முகம் பார்த்தாள். எந்தப் பாவனையும் இல்லை. அமைதியாய் உண்டான். அத்தனை சுவையாய் ஒன்றும் இல்லை. இருந்தும் ரசித்தான். ஆசையாய் தனக்கென தன் மனைவி கையால் சமைத்த உணவு சுகமாய் தொண்டையில் இறங்கியது. இது போலொரு பொழுதெல்லாம் கற்பனையில் மட்டுமே நிகழ்ந்த ஒன்று. அவளை நிமிர்ந்து பார்த்தவன், தலையை லேசாய் அசைத்ததும், அதிலே பெண்ணுக்கு சற்று நிம்மதி பிறந்தது. அவன் உண்டு முடிய, தானும் சாப்பிட்டு முடித்தாள்.
நேற்றைக்கு போல் அல்லாது இன்று அறைக்குள் படுக்கத்தான் ஏற்பாடு செய்திருந்தனர். கட்டில் வாங்க போதிய அளவு பணமில்லை. அதனால் மெத்தை, தலையணை மற்றும் போர்வையும் வாங்கி வந்திருந்தனர். வேதவள்ளி படுக்கையை சரிசெய்து படுக்கவும், அன்பழகனும் மெத்தையில் வீழ்ந்தான்.
கடந்த இரவைப் போல் அல்லாது இன்றைக்கு இருவருக்கும் இடையில் இடைவெளி அடைத்திருக்க, நிம்மதிப் பெருமூச்சு விட்டவளை நொடியில் இழுத்து அணைத்துக்
கொண்டான் அன்பழகன்.
‘அதானே பார்த்தேன...’ மனம் நக்கல் செய்ய, “என்னடி கோபம் போய்டுச்சா?” கிசுகிசுப்பாய் காதோரம் ஒலித்த குரலில் செவிமயிர்கள் எல்லாம் சிலிர்த்தது பெண்ணுக்கு.
‘ம்க்கூம்... இதுக்கு அடிதடி பண்றவனே பரவாயில்லை’ மனம் அலற, வாயைத் திறக்கவில்லை வேதா.
“போகலைன்னா....” என குறும்பாய் இழுத்தவன், “சமாதானம் செய்யலாம்னு இருக்கேன்...” உதட்டோரச் சிரிப்புடன் கூறினான். அவன் குரலின் சாரம்சத்தில், அர்த்தத்தில் பதறிய வேதவள்ளி, திரும்பி அவனை முறைத்தாள்.
சிவந்த மூக்கில் முத்தமிட்டு முக்தியடைய விரும்பியவன், லேசாய் அவள் மூக்கில் இதழைப் பதிக்கவும், சிலிர்த்துப் போனாள் பெண். கண்களைச் சுருக்கி தன்னைப் பார்த்து சிரித்தவனின் சட்டையைப் பிடித்து இழுத்திருந்தாள் வேதா. இதை எதிர்பாராத அன்பு தடுமாறி அவள் தோளில் கையை வைக்க, இருவரது முகமும் அருகருகே இருந்தது.
ஆடவன் மூச்சுக்காற்று முகத்தில் மோத, ஒரு நொடி விழிகளை மூடித் திறந்தவள், “கையை காலை வச்சுட்டு சும்மா படுக்கணும். இல்லை...” மெல்லிய குரலில் மிரட்ட, அவளைப் பார்த்து அன்பழகனுக்கு மீசைக்கயிடில் உதடு துடித்து தொலைத்தது.
“இல்லைன்னா என்னடி பண்ணுவ?” உதட்டை வளைத்துக் கேட்டான் கணவன். மனமெங்கும் அந்த நொடி தித்தித்தது. அவள் மீது விழுந்துவிடாதவாறு, தரையில் கையை ஊன்றிக் கொண்டான்.
“இல்லைன்னா ரூம்க்குள்ள படுக்க முடியாது. வெளியதான் போய்ப் படுக்கணும்...” என்றவாறே அவனைத் தள்ளிவிட்டிருந்தாள் வேதா. மெத்தையில் அப்படியே விழுந்தவனுக்கு மனதெல்லாம் ஜில்லென்ற உணர்வு. தன்னை முறைத்த விழிகளில், வளைத்த உதட்டில், சட்டையைப் பிடித்த கரங்களில் இதயமெல்லாம் இதம் பரவியது. காதலியை விட மனைவியாய் அதிகம் பிடித்தது பெண்ணை. ‘அது ஒருவிதமான அமைதியான அழகு. இது கொஞ்சம் அடாவடியான அழகு’ மனம் மனைவியானவளைக் கொஞ்சிக்கொண்டது.
அன்பு ஒருபுறமாய்த் திரும்பி வேதாவைப் பார்க்க, போர்வையை எடுத்து போர்த்திக்கொண்டு உறங்க ஆரம்பித்திருந்தாள் பெண். அவளையே விழியகற்றாது பார்த்தவனுக்கு இன்னும் இன்னும் ஆச்சரியமாகத் தெரிந்தாள் மனைவி.
அவன் நினைத்திருந்த வேதா வேறு. தன் மனைவியாய் நிற்கும் வேதா வேறு. உறவென்று வந்துவிட்டாலே, உரிமையுணர்வு தானாய் துளிர்த்துவிடும் போல என எண்ணிக்கொண்டான்.
முதன்முதலில் காவல்நிலையத்தில் பயந்து தன்னைப் பார்த்த வேதவள்ளியை விட, இந்த அடாவடி வேதவள்ளி மிகவும் பிடித்துத் தொலைத்தாள். வெளியே எல்லோரிடமும் அமைதியாய், சாதுவாய் இருக்கும் வேதவள்ளி, அன்பழகனிடம் மட்டும் எதிர்பதமாகத்தான் இருந்தாள். அது அவளின் இயல்பு.
உறங்கும் மனைவியை ரசித்தான் அன்பழகன். ஏனோ மகிழ்ச்சியில் உறக்கம் அண்டாது போனது. தூக்கத்தில் புரண்டு அவனருகில் வந்த வேதாவை இறுக அணைத்துக்கொண்டு விழிகள் மூட, கதகதப்பாய் இருந்தது. ஏதோ தனக்குரிய பொருளை, தான் மட்டுமே சொந்தம் கொண்டாடும் உணர்வு. அப்படியே உறங்கிப் போனான் ஆடவன்.
“நேசம் என்பது போதை!
அது தூக்கம் போக்கிடும் பாதை!
என்ற போதிலும் அந்தத் துன்பத்தை ஏற்றுக் கொள்பவன் மேதை!”
மறுநாள் காலையில் அன்பழகன் வேலைக்குச் செல்ல ஆயத்தமாக, “நானும் வேலைக்குப் போறேன். வீட்ல சும்மா இருக்க முடியாது...” என்று வேதவள்ளி அவன் முன்னே நிற்க, தலையை மட்டும் சம்மதமாய் அசைத்தான் கணவன்.
குளித்து முடித்து சுரிதாரை அணிந்தவள், காலைக்கும் மதியத்திற்கும் எளிமையாய் சமைத்து முடித்திருந்தாள். இருவரும் உண்டு முடிய, தனக்கு உணவை டப்பாவில் அடைத்தவள், “உங்களுக்கு டிபன் கட்டிடவா? இல்லை வீட்டுக்கு வந்து சாப்பிட்டுக்குறீங்களா?” என வினவினாள்.
“இல்லை, நான் வந்து சாப்பிட்டுக்குறேன்...” என்று அன்பு பதில் இயம்ப, சரியென இருவரும் கிளம்பினர்.
“மச்சான், நீ இருடா. இவளை விட்டுட்டு வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கிறேன்...” அன்பழகன் முகிலிடம் கூற,
“இல்லை, ஒன்னும் பிரச்சனை இல்லை. நான் பஸ்ல போய்க்கிறேன்...” வேதவள்ளி மறுக்க, தலையை இடம் வலமாக அசைத்தவன் இருசக்கர வாகனத்தை இயக்கி அவளுக்காக நின்றான். ‘நீ வந்தே ஆக வேண்டும்’ என்ற கட்டாயமும் அழுத்தமும் பார்வையிலிருந்தது.
முகில் அருகில் இருக்கவும் எதுவும் கூறாது அவனை முறைத்துவிட்டு பின்புறம் ஏறி அமர்ந்தாள் வேதா.
வணிகவளாகம் செல்லும் தெருவை அடைந்ததும், “இங்கேயே வண்டியை நிறுத்துங்க. நான் நடந்துப் போய்க்கிறேன்...” என்றவளை வாகனத்தின் கண்ணாடியூடுப் பார்த்தவனுக்கு அவள் ஏன் அப்படி கூறுகிறாள் எனப் புரிந்தது. கேலிச்
சிரிப்பொன்றை உதட்டில் படரவிட்டவன், வேண்டுமென்றே வேகமாக வண்டியை வணிக வளாகத்தின் வாயிலில் சென்று நிறுத்தினான். வாகனச் சத்தம் அதிகமாகக் கேட்க, உள்ளிருந்த அனைவரின் பார்வையும் இருவரிடம்தான்.
வேதாவையும் அன்புவையும் அனைத்து விழிகளும் ஆச்சர்யத்துடன் நோக்கின. அவர்களைப் பார்த்து சங்கடமாய்ப் புன்னகைத்தவள், திரும்பி கணவனைத் தீப்பார்வை பார்த்தாள். அதையெல்லாம் கண்டும் ஆடவன் உதட்டிலிருந்த சிரிப்பு மாறவில்லை. வேண்டுமென்றுதானே செய்தான்.
இந்தப் பார்வைகளையும் அதன் பின்னே பாயும் வினாக்களையும் தவிர்ப்பதற்காகத்தானே பெண் உடைக்குள் மாங்கல்யத்தை மறைத்து வைத்திருந்தாள். இப்போது எல்லாம் வெட்ட வெளிச்சமாகிவிட, மனதிற்குள் கட்டியவனை அர்ச்சித்தவாறே உள்ளே நுழைந்தாள்.
‘சொல்லியவை எல்லாவற்றையும் கேட்டுவிட்டால் அவன் அன்பழகன் இல்லையே!’ மனம் சரியாய் உரைத்தது.
முன்னுச்சி முடிகளைக் கலைத்து விட்டுக்கொண்டே மனைவி செல்லும் திசையிலிருந்த பார்வையை சுற்றிலும் படரவிட்டவனின் விழிகளில் விழுந்தார் தேநீர் கடைக்காரர். இருவரையும் திறந்த வாயை மூடாது கவனித்துக்கொண்டிருந்தார் மனிதர்.
சிரிப்புடன் அவரருகில் சென்று, “அண்ணே! ஸ்ட்ராங்கா ஒரு ஸ்பெஷல் டீ போடுங்க...” என்றவன் உதட்டில் சிரிப்பு தேங்கியிருந்தது. சரி என்பதாய் தலையை அசைத்தவர், தேநீரை தயாரித்தவாறே அவன் முகத்தை இருமுறை பார்த்தார்.
“என்ன ண்ணே! எதுவும் கேட்கணுமா?” உதட்டைக் கடித்து புன்னகையை விழுங்கியவன், நாற்காலியில் அமர்ந்தான்.
“தம்பி, அந்தப் பொண்ணு உங்க காதலை ஏத்துக்கிச்சு போல?” எனக் கேட்டார் அவர்.
எழுந்து அவரருகே சென்றவன், “லவ்வை அக்செப்ட் பண்ணது மட்டுமல்ல ண்ணே, நைட்டோட நைட்டா திருட்டுக் கல்யாணம் வேற பண்ணி, தனிக்குடித்தனம் போய்ட்டோம்” என்றவன் குரலில் குறும்பு எஞ்சியிருந்தது.
“போங்க தம்பி, விளையாடாதீங்க...” என்று அவனிடம் தேநீரை நீட்டினார் கடைக்காரர்.
“ப்ச்... நீங்க நம்ப மாட்டீங்கன்னுத் தெரியும். ஃபோட்டோ பாருங்க...” தன் அலைபேசியை அவரிடம் கொடுத்தவன், தேநீரைச் சூடாய் உள்ளிறக்கினான். கடைக்காரரின் முகத்தில் வந்துபோன ஆச்சரியத்தைப் பார்த்து வதனம் முழுவதும் புன்னகை ஆடவனுக்கு.
அவரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு அலைபேசியை வாங்கினான். “கல்யாணத்துக்கு ஒருவார்த்தைக் கூப்பிடலையே தம்பி?” அவர் வினவ,
சுற்றும் முற்றும் பார்த்தவன், “இன்னும் பத்து மாசத்துல எனக்கொரு மகன் பொறந்துடுவான். அப்போ எல்லாரையும் கூப்பிட்டு ஃபங்க்சன் வச்சிடலாம்...” என்றவனின் பேச்சில் அவர் வாயைப் பிளக்க, அட்டகாசமான சிரிப்புடன் அவரைக் கடந்து சென்றான். அவர்தான் ஆச்சரியத்தின் உச்சியில் இருந்தார்.
மாலை பணி முடிந்த வேதவள்ளி வெளியே வந்தாள். அன்பழகன் ஐந்து நிமிடத்தில் வந்துவிடுவேன் எனக்கூறி இருக்க, மெதுவாய் நடந்தாள்.
வேலை செய்த அலுப்பை விட, அனைவரிடமும் பதில் சொல்லி ஓய்ந்து போனாள். சிலர் கேள்வியில் குடைய, சிலர் பேசியே சிவக்கச் செய்திருந்தனர். அத்தனை சங்கடப்பட்டுப் போனவள், மனதிற்குள் அன்பழகனை திட்டி ஒரு வழியாக்கியிருந்தாள். நேரிலும் அதை செய்யக் காத்திருந்தாள்.
தேநீர் விடுதியைக் கடக்கும்போது எதேச்சையாக கடைக்காரரைப் பார்க்க நேர்ந்த வேதவள்ளி, லேசாய்ப் புன்னகைத்தாள்.
“தம்பி சொன்னாரு மா, கல்யாணம் ஆகிடுச்சுன்னு. சந்தோஷமாக இருங்க...” என அவர் கூற, சங்கடமாகப் புன்னகைத்தவள், கோபத்தில் பல்லைக் கடிக்க, அவள் முன்னே வந்து நின்றான் அன்பழகன்.
பல்லைக் கடித்தவாறே இருசக்கர வாகனத்தில் ஏறியமர்ந்தவளின் முகத்தைப் பார்த்தவன், புருவத்தை ஏற்றியிறக்கி, தோளை குலுக்கிக்கொண்டே வீட்டை நோக்கி நகர்ந்தான்.
கதவை திறந்து வேதா உள்ளே நுழைய, அன்புவும் பின்னே சென்றான். “என்ன பண்ணி வச்சுருக்கீங்க? உங்களால...” என மெல்லிய குரலில் கோபமாகப் பேசியவளின் முன்பு, கையில் எதையோ நீட்டியிருந்தான் அன்பழகன். அதையும் அவனையும் மாறி மாறிப் பார்த்தவளின் முறைப்பு அதிகமாகியது.