New member
- Messages
- 5
- Reaction score
- 0
- Points
- 1
அத்தியாயம்: 1
துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்
பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும் நிமலனருள்
கந்தர் சஷ்டி கவசம் தனை.
அமரரிடர் தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.
என்ற முருகனின் கந்த சஷ்டி கவசம் மெல்லிய சத்தத்துடன் ஒலித்து அந்த அதிகாலை பொழுதை இதமாக்க, பாடலுடன் சேர்ந்து சஷ்டி கவசத்தை சொல்லியபடி சாமி அறையில் விளக்கேற்றி வணங்கினார் ஈஸ்வரி.
"என்ன அண்ணி இன்னைக்கு நீங்க முத்திட்டிங்களா?" என மெல்லிய புன்னகையுடன் கேட்டபடி அவரை தொடர்ந்து உஷாவும் வந்து சேர்ந்து கொள்ள, இருவரும் முருகரை மனதார வேண்டிக்கொண்டு அன்றைய சஷ்டி விரதத்தை இனிதே தொடங்கினர்.
சாமி கும்பிட்டு முடித்ததும் இருவரும் சமையலறை வந்தவர்கள் அன்றைக்கு என்ன சமைக்கலாம்! என்ற ஆலோசனையுடன் அதற்கான வேலையை தொடங்கினர்.
எப்போதும் அவர்கள் வீட்டில் சமையல் வேலை மட்டும் சற்று பரபரப்புடன் தான் செல்லும். வீட்டில் இருக்கும் ஏழு பேரும் ஏழு விதம்.
அதிலும் இன்று ஞாயிற்று கிழமை. எல்லோரும் வீட்டில் இருப்பார்கள். பின்பு சமையலை பற்றி சொல்லவும் வேண்டுமா! எப்போதும் சமைப்பதும் பாத்திரம் தேய்ப்பதுமாக தான் இன்றைய நாள் செல்லும்.
அதிலும் இன்று தீபாவளி ஷாப்பிக் செல்ல வேண்டியது இருக்க, காலையிலேயே மதிய உணவும் சேர்த்து சமைக்க வேண்டும் என்பதால் பெண்கள் இருவரும் பரபரப்புடன் வேலை செய்து கொண்டிருக்க "ஈஸ்வரி டீ கொண்டு வா...." என்றார் அப்போது தான் எழுந்து வந்த முத்துவேல்.
அந்த குடும்பத்தின் தலைவர். காமாட்சியின் கணவர். டெல்லி விமான நிலையத்தில் சுங்கதுறை அதிகாரியாக வேலை செய்தவர். ரிடையர் ஆகி இரண்டு மாதங்களே ஆகிறது.
முத்துவேலின் குடும்பம் சிறு கூட்டு குடும்பம். அவருக்கு ஒரே தங்கை உஷா. உஷாவின் கணவர் மணிமாறனும் முத்துவேலுடன் சுக்கதுரை அதிகாரியாக வேலை பார்த்தவர் தான். இருவரும் ஒரே நேரத்தில் வேலைக்கு சேர்ந்ததால் இருவருக்குள்ளும் நல்ல நட்பு உருவாக, உஷாவை மணிமாறனுக்கு கட்டி கொடுத்து நண்பனின் தங்கையான ஈஸ்வரியை திருமணம் செய்து கொண்டார்.
இருவருக்கும் இரண்டு பிள்ளைகள். எல்லோரும் ஒரே வீட்டில் ஒன்றாக சந்தோசஷமா வாழ்ந்து வர, மூன்று வருடங்களுக்கு முன் அவர்கள் குடும்பத்தில் நடந்த ஒரு செயலால் இன்று மணிமாறன் உயிருடன் இல்லை.
மணிமாறன் ஒரு நல்ல மனிதர். இறக்க குணம் அதிகம் கொண்டவர். பிள்ளைகளிடமும் தோழமையுடன் பழகுவார். அதனாலேயே அவர் இருக்கும் இடத்தில் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் இப்போதெல்லாம் சிரிக்கவே காரணம் தேடும் நிலை தான் அவர்களுடையது. மணிமாறன் இல்லை என்ற வலி வீட்டில் இருந்த அனைவர் உள்ளத்திலும் இருந்த போதும் மற்றவரிடம் காட்டி கொள்ளாமல் நடமாடி கொண்டிருந்தனர்.
"ஈஸ்வரி...." என முத்துவேல் மீண்டும் சத்தம் கொடுக்க,
"இதோங்க...."என வேகமாக வந்த ஈஸ்வரி காபியை அவரிடம் கொடுக்க,
"சரவணன் எழுந்துட்டானா?" என்றார் முத்துவேல்.
"ஆமாங்க... எழுந்து ஜாக்கிங் போய்ட்டான். ஏங்க? எதுவும் சொல்லனுமா?" என்று ஈஸ்வரி கேட்க,
"ஹாப்பிங் போகனும்னு சொன்னிங்களே... வர்ஷாவுக்கு புது போன் வேணுமாம். சரவணன்கிட்ட அழைச்சிட்டு போக சொல்லிருக்கேன். நீங்களும் அவனோட போய்ட்டு வந்துடுங்க. எனக்கு இன்னைக்க வர முடியாது. நான் தோட்டம் வரைக்கும் போய்ட்டு வரேன்..." என்றவர் தோள் துண்டை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.
"ம்... சரிங்க. உங்களுக்கு சாப்பாடு எடுத்து வச்சிட்டு போகட்டுமா? இல்ல குடுத்து விடனுமா?" என்று கேட்டபடி ஈஸ்வரி அவர் பின்னே செல்ல,
"குடுத்து விட்டுடு. நான் வர ஈவ்னிங் ஆகிடும்" என்றார்.
அதிலேயே அவர் மாறன் சமாதிக்கு தான் செல்கிறார் என்று புரிந்து கொண்ட ஈஸ்வரி "ஏங்க ஒரு நிமிஷம் இருக்க, உஷா அண்ணனுக்கு மாலை கட்டி வச்சிருந்தா எடுத்துட்டுவர சொல்றேன்" என்று தங்கவேலுலை நிறுத்தியவர்,
"உஷா..." என்று உள் நோக்கி குரல் கொடுக்க, "என்ன அண்ணி?" என்றபடி உஷா வர,
"உன் அண்ணன், அண்ண சமாதிக்கு தான் போறாங்களாம். நீ மாலை கட்டி வச்சிருக்கேன்னு சொன்னியே! குடுத்து விடு" என்றார்.
"ஹான்... இதோ அண்ணி எடுத்துட்டு வரேன்" என்று வேகமாக உள்ளே சென்ற உஷா, வீட்டு தோட்டத்தில் பூத்த ரோஜா பூக்களை கொண்டு தொடுத்து வைத்திருத்த மாலையை கொண்டு வந்து கொடுக்க,
அதை வாங்கிய தங்கவேலுவின் முகத்தில் உயிர்ப்பே இல்லை. அதை பார்த்த உஷா "என்ன அண்ணா" என கேட்க,
"அவன் உனக்கு பூ வாங்கி தந்து அழகு பார்த்த காலம் போய்... நீ அவனுக்கு மாலை கட்டி தர வேண்டியது வந்துட்டேம்மா" என்றார் தங்கவேல் வேதனை படிந்த முகத்துடன்.
அதில் உஷாவின் கண்களில் கண்ணீர் தேங்கிவிட, அவரும் வேதனையுடன் மௌனமாக உள்ளே சென்று விட்டார்.
மணிமாறன் இறந்து மூன்று ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனாலும் அவரின் இல்லாமை அந்த வீட்டினரை எவ்வொரு அனுவிலும் பாதித்தது கொண்டே இருந்தது. அவரை சுற்றி இருந்த அனைவரும் ரத்தத்துடன், உயிருடன், உணர்வுடன் கலந்தவர்கள் என்பதால் மணிமாறனின் இல்லாமை அவர்களிடம் வெறுமையை விதைத்து. அதிலும் உஷாவை இன்னும் அதிகமாக பாதித்தது.
எத்தனை காலம் ஆனாலும் ஒரு பெண்ணுக்கு கொண்டவன் துணை கொடுக்கும் அன்பையும், பாதுகாப்பையும் வேறு யாராலும் தர முடியாது என்பதை உஷா நிறையவே உணர்ந்து விட்டார்.
"ஏங்க... காலையிலேயே இதை பேசி அவளை நோகடிக்கனுமா உங்களுக்கு?" என்று ஈஸ்வரி ஆதங்கமுமாய் கேட்க,
"நீ பேசுவ டி. நீ ஏன் பேச மாட்ட! எல்லாம் நீ பெத்த சனியனால வந்தது. அவன் மட்டும் என் கண்ணு முன்னாடி வரட்டும் அன்னைக்கு அவனை கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போய்டுவேன் டி. சொல்லி வை அவன் கிட்ட" என்றார் தங்கவேல் கடும் கோபத்துடன்.
உடன் பிறந்தவளின் கண்ணீரை பார்க்க பொறுக்கவில்லை அவருக்கு. 'எல்லாம் தான் பெற்ற சனியனால் வந்தது' என நினைத்த தங்கவேல் மனதுக்குள் மூத்த மகனை அர்ச்சித்தவன் வெளியே மனைவியிடம் கோபம் காட்ட,
"என்னங்க எப்பவும் எனக்கு மட்டும் வலியே இல்லைங்குறமாதிரி பேசுறிங்க? சொல்ல போன உங்களை எல்லாம் விட எனக்கு தான் அதிக வலி. நீங்களும் உங்க தங்கச்சியும் இப்போ இடையில வந்தவங்க. ஆனா நான் அப்படி இல்லை. அவன் பிறந்த ரத்தத்துல பிறந்து... அவனோடவே வளர்ந்தவ. என்னை வளர்த்தவன் அவன். என்னோட இத்தனை காலம் வரை பெத்தவர் ஸ்தானத்துல நின்னு எறக்கு எல்லாம் செஞ்சி என்னை அரவனச்சிக்கிட்டவன். அவனோட இழப்பு உங்களை விட எனக்கு தான் அதிகம்."
"ஆனா... என்ன, நீங்க பேச ஆள் இருக்குனு பேசிடுறிங்க. ஆனா நான் யார்கிட்ட ஆதங்கப்பட, இல்ல கோபப்பட சொல்லுங்க? உங்ககிட்ட பேசலாம்னா, நீங்க இதோ... இப்படி என் மேல பாயுறிங்க. உஷாட்ட பேசலாம்னா அவ அழறா. இப்படி இருக்க நான் தான் விக்கவும் முடியாம கக்கவும் முடியாம அழையுறேன்" என்றார் ஈஸ்வரி கடும் கோபத்துடன்.
இத்தகைய பேச்சு ஈஸ்வரிக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. இன்று மட்டும் இல்லை கடந்த மூன்று ஆண்டுகளாகவே பல முறை பல கோணங்களில் இந்த வார்த்தைகளை கேட்டு விட்டார். ஆனால் அந்த வார்த்தைகள் பழகி போகாமல் ஈஸ்வரிக்கு பெரும் வலியை கொடுத்தது என்பது தான் உண்மை. ஆனால் அதை புரிந்து கொள்ளத்தான் அவர் கணவர் தயாராக இல்லை.
அவர்கள் இருவரும் வாசலில் நின்றே வாக்குவாதம் செய்து கொண்டிருக்க, அப்போது தான் ஜாக்கிங் முடித்து வந்த சரவணன் "என்ன அத்த? காலையிலேயே என்ன வாக்குவாதம் ரெண்டுபேருக்கும்?" என்று கேட்டபடி வெளியே போட்டிருந்த சேரில் அமர்ந்து ஹூவை கலட்ட,
தங்கவேல் ஈஸ்வரியை 'எல்லாம் உன்னால் தான்' என்பது போல் முறைத்து பார்க்க, ஈஸ்வரி சரவணன் முன்பு எதுவும் பேச முடியாது அமைதியாக நின்றிருந்தார்.
மற்ற நேரம் என்றால் சரவணனும் சாதாரணமாக கடந்து சென்றிருப்பான் . ஆனால் இன்று ஈஸ்வயியின் முகத்தில் இருந்த வலி அவனை நிறுத்தி வைக்க 'யாராவது பதில் சொல்வார்களா!' என இருவரையும் பார்த்து நின்றான்.
சில நிமிடங்கள் கடந்தும் இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்தபடி அமைதியாக நிற்கவும் "எதுவும் இல்லைனா போய் வேலையை பாருங்க... அத்தை"என்ற சரவணன் உள்ளே செல்ல போக,
"ஏன் டா நீயும் என்னை தான் குறை சொல்லுவியா? உன் மாமாவ கேட்க மாட்டியா? அவர் என்னனா எப்பவும் என்னையே திட்டிட்டு இருக்கார்" என்று ஈஸ்வரி கோபமும் ஆதங்கமுமாம் சொல்ல,
'என்ன மாமா?' என்பது போல் சரவணன் முத்துவேலை பார்க்க,
"அவளுக்கு வேலை என்ன டா? ஏதோ ஷாப்பிங் போகனுமாம். கூட்டிட்டு போ. நான் தோட்டத்துக்கு போறேன்" என முத்துவேல் சொல்ல,
"ஏங்க இப்படி மாத்தி பேசுறிங்க? உண்மையை சொல்ல வேண்டியது தானே" என முத்துவேலிடம் சொன்ன ஈஸ்வரி "உன் அப்பா இறந்ததுல எனக்கு எந்த வலியும் இல்லையாம். உன் மாமா இன்னைக்கு மட்டும் இல்லடா எப்பவும் இப்படி தான் சொல்றார். நீ சொல்லு... எனக்கெல்லாம் வலி, வேதனை, கோபம், எல்லாம் வராத?" என்றார் ஈஸ்வரி,
தங்கவேல் தன் மேல் பலி சொன்னதில் கோபத்தில் எதையும் யோசிக்காமல் பேசியவர், அதன் பிறகே உணர்ந்து சரவணனை பார்க்க அவன் முகம் ரத்தபசையற்று வெளுத்து போய் இருந்தது.
அதில் பதறி போன ஈஸ்வரி "சரவணா சாரி டா..." என்று அவன் கை பற்ற,
"பச்... ஒன்னும் இல்லை அத்தை. ரெண்டு பேரும் இந்த பேச்சை விடுங்க. எப்பவும் நீங்க ரெண்டு பேரும் ஏன் இத வச்சே எப்பவும் சண்டை போட்டுக்குறிங்க? பிறந்தா இறந்து தானே ஆகனும்! ஆனா என்ன அப்பாவோட இறப்பு கொஞ்சம் சீக்கிரமா நடந்துட்டு. அதுக்காக நாம ஒருத்தரை ஒருத்தர் ப்ளேம் பண்ணி என்ன ஆக போகுது" என சரவணன் ஒரு வித கோபத்துடன் கேட்க,
"சரி டா நான் உன் அத்தையை சொல்லலை. ஆனா இவ பெத்த தருதலை மாறன் இறப்புக்கு காரணம் இல்லைனு இவளை சொல்ல சொல்லு" என்று தங்கவேல் பேச
ஈஸ்வரிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அருண் பேச்சை இப்போது எடுத்தால் சரவணனும் கோபப்பட கூடும் என்பதால் எதுவும் பேசாமல் கோபத்துடன் உள்ளே சென்று விட, சரவணனும் ஒரு பெருமூச்சுடன் உள்ளே சென்று விட்டான்.
ஈஸ்வரி சென்று பார்த்த போது உஷா நார்மலாக சமையல் வேலையை பார்த்து கொண்டிருக்க, ஈஸ்வரியும் எதையும் காட்டி கொல்லாமல் இயல்பாக பேசியபடி வேலையை தொடர, சற்று நேரத்தில் எல்லாம் ஒவ்வொருவராய் டீ, டிபன் என்று வந்து விட அதன் பிறகான காலை நேரம் பறபறப்புடனே சென்றது.
அனைவரும் அமர்ந்து காலை உண்டு கொண்டிருக்க "இன்னைக்கு தீபாவளி ஷாப்பிங் போறோம். யாரெல்லாம் வரிங்க?" என்று சரவணன் கேட்க,
"எனக்கு இப்போ எடுத்தா தான் டிரஸ் ஸ்டிச் பண்ண கொடுக்க முடியும்ணா. சோ நான் வரேன்..." என்று வர்ஷினி முதல் ஆளாக கூற,
"நாம நமக்கு நெக்ஸ் வீக் எடுக்கலாம் டா சரவணா. இன்னைக்கு எனக்கு வேற வேலை இருக்கு" என்றான் கௌத்தம்.
"சரி டா..." என்ற சரவணன் "அம்மா, அத்தை உங்க ப்ளான் என்ன?" என்று கேட்க,
"ஈவ்னிங் போலாம் டா. நானும் அத்தையும் காலையில மருதமலை போய்ட்டு வந்துடுறோம்" என்று உஷா சொல்ல,
"நோ.... ஈவ்னிங் போனா ஷாப்பிங் பண்ண டைம் இருக்காதுமா. செவனோக் கிளாக் ஆனாதும் நீங்க லேட் ஆகிட்டு, லேட் ஆகிட்டு சீக்கிரம் எடுனு அர்ஜென்ட் பண்ணுவிங்க. என்னால அவசரமா எல்லாம் எதையோ எடுத்தோம்னு எடுத்துட்டு வர முடியாது. சோ... நான் மார்னிங் போறதா இருந்தா வரேன்" என்றாள் வர்ஷினி.
"சரி... அப்போ கோவில் போய்ட்டு அப்படியே ஷாப்பிங் போலாமா?" என்று காமாட்சி கேட்க,
"நோ... அத்தை எனக்கு காலையிலேயே போனும். நான் அண்ணன் கூட முன்னாடி போறேன். நீங்க வேணும்னா கோவில் போய்ட்டு வாங்க" என்று வர்ஷினி பிடிவாதமாக சொல்ல,
"ஏய்... எல்லாத்துக்கும் பிடிவாதமா உனக்கு" என்று கௌத்தம் வர்ஷினியை அதட்ட,
"உனக்கு ஷாப்பிங் வர பிடிக்கலைனதும் உன் இஷ்ட படி வீட்டுல இருக்க தானே! இதுவே நாங்க வந்து தான் ஆகனும்னு சொன்னா வருவியா? மாட்ட தானே! அதே போல நானும் ஒன்னு இஷடப்பட்டு அதை செய்ய முயற்சி பண்ணா அது பிடிவாதமா? என்ன டா நியாயம் உங்களோடது..." என வர்ஷினி கோபமாய் கேட்க,
"எம்மா அதுக்கு ஏன் இவ்வளவு லென்தியா மூச்சை பிடிச்சிட்டு பேசுற. மூச்சை விடு டி. பொறுமையா பேசுமா பிஏபில். நீ மூச்சை பிடிச்சிட்டு பேச இது கோர்ட்டும் இல்ல நாங்க ஜட்ஜூம் இல்லை" என்றான் கௌத்தம் புன்னகையுடன்.
பதிலுக்கு முகத்தை வெடுக்கென லிரும்பி கொண்ட வர்ஷினி "அண்ணா நீ என்னை ஷாப்பிங் அழைச்சிட்டு போ. அம்மாவும் அத்தையும் கோவில் போய்ட்டு வந்து நம்மளோட ஜாய்ட் பண்ணிக்கட்டும்" என்றாள் முடிவாக.
தீபாவளி சீசன் தான் புது கலைஷன்ஸ் அதிகமாக வரும் என்பதால் எப்போதும் தீபாவளி சீசனில் தான் வர்ஷினி அந்த ஆண்டுக்கு தேவையாக உடைகளை மொத்தமாக எடுப்பாள். எனவே அவள் முடிவே இறுதியாக.
அதன்படியே சரவணனும் வர்ஷினியும் உடை எடுக்க கிளம்ப, ஈஸ்வரியும் உஷாவும் கோவிலுக்கு சென்றனர்.
அவர்கள் கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து மதிய உணவையும் முடித்து விட்டு சற்று நேரம் ஓய்வெடுத்து விட்டு மாலை நேரம் கடைக்கு கிளம்பி வர, வர்ஷினியும் அதற்குள் அவள் ஷாப்பிங்கை முக்கால்வாசி அளவு முடித்து இருந்தாள்.
அவளின் ஒவ்வொரு உடை தேர்விலும் சரவணன் அவளுடன் சலிக்காமல் சுற்றி கொண்டிருக்க, "அன்பு மலர்களே..." என்று பின்னால் கேட்ட கௌத்தமின் கிண்டலில் திரும்பிய சரவணன் "ஷப்பா வந்துட்டிங்களா?" என்றான் பெருமூச்சுடன்.
"என்னடா ரொம்ப நொந்து போய்ட்ட போல?" என்ற கௌத்தம் "இன்னைக்குள்ள உன் ஷாப்பிங்க முடிச்சிடுவியா? இல்லை நாளைக்கும் வருவியா?" என்று வர்ஷினியிடம் வம்பு வளர்க்க கேட்க
"ச்சே நாளைக்கு எல்லாம் வர மாட்டேன் அடுத்த சண்டே" என்றாள் வர்ஷினி.
அதில் அரண்டு போன கௌத்தம் "செத்தாண்டா சேகர்" என்று தலையில் கை வைத்து விட,
"அவ சும்மா சொல்றா டா. அவ ஷாப்பிங் முடிஞ்சி. அம்மாவும் அத்தையும் தான் எவ்வளவு நேரம் ஆக்க போறாங்கனு தெரியலை. சீக்கிரமா வந்திருந்தா இவளோடயே அவங்களும் முடிஞ்சிடுவாங்களேனு பார்த்தேன். இனி அவங்களுக்கு வெயிட் பண்ணனும்" என்று சரவணன் சொல்ல,
"அப்போ ஓகே. பிரச்சனை இல்லை" என்றான் கௌத்தம்.
அவன் சேட்டையில் சிரித்தபடி அவன் தோளில் தட்டிய உஷா "நாங்க வரதுக்குள்ள நீங்களும் உங்களுக்கு டிரெஷ் எடுத்துடுங்க. நாங்க எங்களுக்கு பார்க்குறோம்" என்று ஈஸ்வரியுடன் அடுத்த தளம் சென்றார்.
காமாட்சியும் உஷாவும் சேலை பிரியர்கள். அதிலும் இருவரும் சீக்கிரம் தேர்வு செய்யும் ரகம். எனவே இருவரும் சீக்கிரமே தங்களுக்கான உடைகளை தேர்வு செய்து பில் போட போக... வர்ஷினியும் அவளுக்கு சேலை எடுக்க அந்த தளத்திற்கு வந்தாள்.
வர்ஷினி அவளுக்கான சேலையை பார்த்து கொண்டிருக்க, தனக்கான பில்லை முடித்து விட்டு வந்த உஷா அப்போது தான் நினைவு வந்தவராக, "வள்ளிக்கும் ஒரு சேலை எடு வர்ஷினி" என்றவர் அவரும் சேர்ந்து பார்க்க தொடங்க.
"என்ன கலர்லமா எடுக்க? அந்த அக்காட்ட என்ன கலர் இல்லை சொல்லுங்க" என்று வர்ஷினி கேட்க,
சேலை பார்த்து கொண்டிருந்த ஆர்வத்தில் ஈஸ்வரி அருகில் நிற்பதை மறந்து விட்ட உஷா "புதுசா கல்யாணம் ஆக போற பொண்ணு. நல்ல ப்ரைட் கலரா பார்த்து எடு" என்று சொன்னவர், 'இந்த கல்யாணமாவது நல்லபடியா அமையனும்' என்று தனக்கு தானே பேசி கொள்ள,
"என்ன வள்ளிக்கு கல்யாணமா?? என் மருமகளுக்கு நீங்க எப்படி இரண்டாவது கல்யாணம் பண்ணி வைப்பிங்க? யாரை கேட்டு இதெல்லாம் செய்யுற உஷா நீ?" என்று ஈஸ்வரி உச்சகட்ட கோபத்தில் கத்தி இருந்தார்.
அவரின் கோபத்தில் அவர் குடும்பம் மொத்தமும் அதிர்ந்து நிற்க,
"சொல்லு... உஷா யாரை கேட்டு என் மருகளுக்கு நீ கல்யாணம் பண்னி வைக்க போற? என் மகன் ஒன்னும் செத்து போகலை சரியா?" என பலரும் கேட்கும் படி கத்தியவர், உடன் வந்தவர்கள் யாரையும் அழைக்காமல் விருவிருவென்று அங்கிருந்து சென்று விட்டார்.
ஆனால் இவர்கள் சண்டைக்கு காரண கர்த்தாவாகிய அருண் பிரபாகரனும், செந்தூர வள்ளியும் வேறு வேறு திசையில் மற்றவரின் எண்ணங்களுடன் தங்களுக்கான வேலையில் மூழ்கி இருந்தனர்.
மௌனம் தொடரும்....

Last edited by a moderator: