• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

மேகம் 24

Administrator
Staff member
Messages
464
Reaction score
794
Points
93
மேகம் 24:

பேசிவிட்டு ஊருக்கு வந்த பிறகு தான் சைத்துவிற்கு தான் பேசியது மிகவும் அதிகப்படி என்று புரிந்தது.

ஏதோ அந்த நேர கோபத்தில் அவளை அதிகமாய் காயப்படுத்திவிட்டோம் என்று புரிய தலையை பிடித்தபடி அமர்ந்துவிட்டான்.

அதுவும் அவளது அந்த அதிர்ந்த உறைநிலை அவனை உள்ளுக்குள் அலைகழித்தது.

ஏற்கனவே தன்னிலை இழந்து தனக்குள் ஒடுங்கி இருப்பவளை இன்னும் ஒதுங்கி போக செய்து கொண்டிருக்கிறோம் என்று தன்னையே நிந்தித்து கொண்டான்.

“ப்ச்…” என்று சலித்தவனுக்கு ஒருவித வெறுமை பரவியது.

அதற்கு மேல் இத்தனை நாள் அவள் தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று தான் நினைத்து கொண்டிருக்கிறாளா? அதனால் தான் தன்னிடம் அத்தனை ஒதுக்கம்.

தன்றையறியாது வந்த ரசனை உணர்வையும் நொடியில் கட்டு படுத்தி கொண்டிருக்கிறாளா?

ப்ச் முதலில் எனக்கு காயுவுடன் திருமணம் முடிந்துவிட்டது என்று எண்ணியிருந்தாள்.

அது‌ இல்லை என்று தெரிந்தவுடன் வேறு யாருடனோ திருமணம் முடிந்துவிட்டது என்று அவளாகவே நினைத்து கொண்டு என்னிடமிருந்து விலகி சென்றிருக்கிறாள்.

இவளை என்ன செய்வது? என்று நிச்சயமாக அவனுக்கு புரியவில்லை.

தானாக சென்று அவளிடத்தில் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறியிருக்க வேண்டுமோ?

அவள் தனக்கு திருமணம் ஆகிவிடும் என்று எண்ணியிருப்பாள் தான் சிந்திக்கவில்லையே?

யார் இவளிடம் தனக்கு திருமண ஆகிவிட்டது குழந்தைகள் இருக்கிறது என கூறியது என்று சிந்தித்தவன் நம்பிக்கையான ஆள் மூலம் அலுவலகத்தில் விசாரித்தான்.

அதில் யாரோ ஒருவர் தனக்கு திருமணம் முடிந்து பிள்ளைகள் இருப்பதாக வதந்தியை பரப்பிவிட்டிருக்கிறார் என்று தெரியவந்தது.

ஆனால் ஆள் யாரென தெரியவில்லை.

யாரோ ஏதோ கூறினால் இவள் அப்படியே நம்பிவிடுவாளா? என்று எண்ணம் பிறக்க,

பிறகு அவளுக்கு எப்படி உன்னை பற்றி தெரியவரும். அவள் உன்னிடத்தில் நேரடியாக வந்து உங்களுக்கு திருமணம் முடிந்துவிட்டதா? குழந்தைகள் உள்ளதா? என்று கேட்பாளா? என்று மனசாட்சி வினா தொடுக்க,

‘க்கும் கேட்டுட்டாலும் என்னை பாத்த உடனேயே மயங்கிவிழுந்துட்டா இதுல வந்த என்கிட்ட பேச என்னை பார்த்ததுமே டீச்சரை பாத்த ஸ்டூடன்ட் மாதிரி பயந்து நிப்பா’

பயந்து நிற்கும் போது முகமெல்லாம் ஒரு மாதிரி வியர்த்து பதட்டத்தில் துப்பட்டாவை இறுக பிடித்து கொண்டு தன்னை பார்க்காதது போல பார்த்து நிற்கும் அவளது முகம் மனக்கண்ணில் வந்து போக, உள்ளுக்குள் அவளை பார்க்க வேண்டும் என்று அவா பெரியதாக எழுந்தது.

ஆனால் போக விழையவில்லை காரணம் தான் அவளை அத்தனை தூரம் காயப்படுத்திவிட்டு வந்துவிட்டோம் இப்போது எந்த முகத்தை வைத்து கொண்டு அவளை பார்ப்பது என்று தான்.

இருந்தும் கவியின் திருமணத்திற்கு தன்னை மறந்து சிறிதாய் பிளந்த வாயுடன் அதிர்ந்து பார்த்து பின்னர் பார்வையில் ரசனை வழிய பார்த்து நின்ற முகம் திருமணம் பற்றி தான் கேட்ட போது அதிர்ந்து விழி விரித்து நின்றவளது முகம் என்று தன்னை காணும் ஒவ்வொரு முறையும் விதவிதமான பாவனைகளை கொடுப்பவளது வதனம் நினைவில் தோன்றி அவனை தொல்லை செய்தது.

“ப்ச் ராங்கி ஏன் டி என்னை இப்படி படுத்துற” என்று வாய்விட்டே புலம்பியவன் தலையை சாய்த்து கொள்ள அந்நேரம் அழைப்பு வந்தது.

எடுத்து பார்க்க காயுவின் எண்ணில் இருந்து காணொளி அழைப்பு வந்தது.

அதனை கண்டதும் இளையவர்கள் தான் அழைக்கிறார்கள் என்று புரிய இதழில் மென்னகை படர்ந்தது.

அழைப்பை ஏற்ற கணம்,

“சைத்துப்பா எப்போ வருவீங்க? மிஸ் யூ” என்க,

“சீக்கிரம் வரேன் செல்லங்களா? அப்பாக்கு இங்க கொஞ்சம் ஹெவி ஒர்க் அதான் வர முடியலை. மிஸ் யூ பேட்லி” என்று என்று புன்னகையுடன் பதில் அளித்தான்.

மேகாவின் செவியில் சைத்துவின் குரல் வந்து மோத பார்வையை சுற்றி இருப்பவர்களை பார்த்தவாறு அலையவிட்டாள்‌‌.

“சீக்கிரம் வாங்கப்பா அம்மா எங்களுக்கு டூ ஐஸ்கிரீம் வாங்கி தர மாட்றா” என்று அனிருத் கூற,

“ஆமா நீங்க வந்து வாங்கி கொடுங்க. ஆதிப்பாவும் வாங்கி தர மாட்றாங்க” என்று அக்ஷி உதடு பிதுக்க,

“நான் வந்து வாங்கி தர்றேன்டா பட்டு” என்று சைத்தன்யா மொழிய,

சிரிப்புடன் பேச்சு வார்த்தையை பார்த்திருந்த காயு, “நீங்க பேசிட்டு இருங்க நான் வாஷ் ரூம் போயிட்டு வர்றேன்” என்று சென்றாள்.

“அம்மா நீங்க திட்டுவிங்கன்னு பயந்து வாஷ் ரூம் போய்ட்டாங்கப்பா” என்று அனிருத் வாயை பொத்தி சிரிக்க,

“ஆமப்பா” என்று அக்ஷியும் நகைக்க,

“உங்களை தனியாவா விட்டுட்டு போயிருக்கா?” என்று சைத்து வினவ,

“இல்லை மேகா ஆன்ட்டி இருக்காங்களே” என்ற அனிருத் சடுதியில் அவள்புறம் அலைபேசியை திருப்பிவிட,

இதனை எதிர்பாராத மேகா பெரிதாய் அதிர்ந்து விழிகளை விரித்தாள்.

சைத்துவும் நிச்சயமாக அவளை எதிர்பார்த்திருக்கவில்லை. நொடி நேரத்தில் அனிருத் அலைபேசியை திருப்பி இருந்தான்.

இருந்தும் அந்த கண நேரத்தில் கண்ட அவளது வதனம் இவனை மொத்தமாய் ஏதோ செய்திருக்க இதயம் நின்று தான் துடித்தது.

அதுவும் ஒரு கையில் கன்னத்தை தாங்கியபடி சோகமே உருவாய் அமர்ந்து இருந்தவளது தோற்றம் உள்ளுக்குள் எதையோ நழுவச் செய்தது.

பேசிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்ட பிறகு அவனால் அங்கே இருக்க முடியவில்லை.

ஏற்கனவே அவளை பார்த்துவிட வேண்டும் என்று துடித்த மனது மேகாவை காணொளி அழைப்பில் கண்ட பிறகு அவனை போட்டு பாடாய் படுத்தியது.

தனது கட்டுப்பாடு மொத்தமாய் இவ்விடத்தில் தகர்த்தெறிய படுவதை உணர்ந்தவன் சட்டென்று எழுந்து கொண்டான்.

இதற்கு மேல் தாங்காது நிச்சயமாய் என்று நினைத்துக்கொண்டு உடனடியாக விமானத்தை பிடித்து கிளம்பிவிட்டான் கொண்டவளை காண.

ஆனால் அவளோ அங்கு சைத்துவிற்கு திருமணத்திற்கு திருமணத்திற்கு பெண் பார்த்து கொண்டிருந்தாள் அவனது மேகா.

விமான நிலையத்தில் இருந்து வீட்டினை அடைவதற்குள் ஒரே குறுகுறுப்பு.

அதுவும் காயுவிடத்தில் மேகா தன்னுடைய வீட்டில் இருப்பதை உறுதி செய்துவிட்டு தான் தான் வந்து கொண்டிருந்தான்.

வாகனத்தை நிறுத்திவிட்டு அழைப்பு மணி‌யை அழுத்தியவனது முகத்தில் மெலிதான கீற்று புன்னகை.

தன்னை கண்டு அதிர்ந்து விழிகளை விரிக்கும் அவளது வதனத்தை காண தான் அவா பெருகியது.

காயு தான் கதவை திறப்பாள் என்று எண்ணியிருக்க கதவை வந்து திறந்தது மேக மொழியாள்.

வழக்கம் போல அவனை கண்டதும் அவளது ஆழி விழிகள் விரிந்து அவனை உள்ளிழுத்து கொண்டது.

இத்தனை நேரம் இருந்த ஆர்ப்பரிப்பு எல்லாம் தன்னவளை கண்டதும் பூவாய் மலர்ந்திட கீற்று புன்னகையை அதக்கி,

‘என்ன?’ என்று ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கினான்.

அதில் சுயம் பெற்றவள் விலகி வழியை விட்டாள்.

மேகாவின் செயலில் சைத்துவின் புருவம் இடுங்கியது.

உள்ளே நுழைந்தவாறு அவளை அவதானிக்க முகமெல்லாம் அழுதது போல இருந்தது.

அதை மறைக்க முயற்சிப்பதை உணர்ந்தவனுக்கு காரணம் விளங்கவில்லை.

சிந்தனையுடனே காயுவிடம் கூறிவிட்டு அறைக்கு சென்று உடை மாற்றி வந்தவனது பார்வை முழுவதும் மேகாவிடத்தில் தான்.

ஆனால் அவளோ இவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

அப்போது தான் காயு,

“சைத்து என் லாப்ப ஆன் பண்ணு” என்று உணவை எடுத்து வைத்தாள்‌.

மேகாவிற்கு உணவு தொண்டையில் இறங்க மறுத்தது‌. கடினபட்டு விழுங்கி கொண்டிருந்தாள்‌.

“உன் நேம்ல ஒரு போல்டர் இருக்கும் அதை ஓபன் பண்ணு” என்க,

தேநீரை அருந்தியபடி அந்த கோப்பை திறந்து பார்த்தான் சைத்தன்யா.

“பொண்ணு எப்படி இருக்கா சைத்து?” என்று காயு கேட்க,

“ஹ்ம்ம் அழகா தான் இருக்கா”

“அழகா இருக்கிறால? உனக்கு பிடிச்சிருக்கா? பேரு சொனாக்ஷி டாக்டர் தேவ் இன்டஸ்ட்ரீஸ் பொண்ணு. அத்தை நிறைய போட்டோ அனுப்புனாங்க. அதுல மேகா தான் இந்த பொண்ணு உனக்கு பொருத்தமா இருப்பான்னு செலக்ட் பண்ணா” என்றிட,

சட்டென்று உள்ளுக்குள் ஒன்று இறுகியது.

எதையும் காண்பிக்காது நிதானமாக மேகாவை ஏறிட்டான்.

அதில், ‘அப்படியா?’ என்பது போல ஒரு பாவனை தோன்றி மறைய,

அவனது பார்வையை எதிர் கொள்ள இயலாதவள் உண்ணும் சாக்கில் குனிந்து கொண்டாள்.

அந்த கணம் மேகாவின் அழுது சிவந்த முகத்திற்கான காரணம் புரிந்தது.

“என்ன மேகா சைலண்டா இருக்க சொல்லு. நீதான செலெக்ட் பண்ண” என்று காயு மொழிய,

இதயத்தை கல்லாக்கி கொண்டு நிமிர்ந்தவள்,

“ஆமா சார்‌. அந்த பொண்ணு ரொம்ப அழகா இருக்காங்க. உங்களுக்கு ரொம்ப பொருத்தமா இருப்பாங்க” என்றுவிட்டு எழுந்து கைக்கழுவ செல்ல,

“மேகாவே சொல்லியாச்சே இந்த பொண்ணு எனக்கு ஓகேன்னு சொல்லிடு காயு” என்றவனும் எழுந்து கொண்டான்‌.

சடுதியில் அவளது முகத்தில் வந்து போன வேதனையை கண்டவனுக்கு‌ கோபம் பெருகியது.

அப்படியென்ன இவளுக்கு இத்தனை நாள் எனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று எண்ணி விலகி இருந்தாள்.

இப்போது திருமணம் ஆகவில்லை என்று தெரிந்தவுடன் எனக்கு பெண்ணை தேர்வு செய்கிறாள் இவளை என்ன செய்வது என்று அவனுக்கு புரியவில்லை.

மேகா வீட்டிற்கு கிளம்ப விழைய,

இன்று அவளிடம் பேசிவிடும் எண்ணத்தில்,

“வா நான் ட்ராப் பண்றேன்” என்று மகிழுந்தை இயக்க சென்றான்.

இங்கு மேகா மறுத்து தயங்கி நிற்க காயு பேசி அனுப்பி வைத்தாள்.

அமைதியாய் ஒரு பயணம். சைத்துவிற்கு உள்ளே கோபம் கனன்றது.

ஆனால் வாயை திறக்கவில்லை. தான் நிச்சயமாக கோபத்தில் எதாவது கூறி காயப்படுத்திவிடுவோம் என்று அமைதியை கடைபிடித்தான்.

ஆனால் இப்படி உள்ளுக்குள் வைத்து கொண்டு எத்தனை நாள் மறுகி கொண்டிருப்பாள் என்று மனது ஆறவே இல்லை.

அவளது வீடு வரை அழைத்து வந்துவிட்டான்.

கேட்காமல் இருக்க முடியாது என்று தோன்ற, “எனக்கு கல்யாணம் ஆகும் போது கூட இப்படி அழுது சிவந்து முகத்தோட வேடிக்கை தான் பார்ப்பியா மேகா?” என்று கேட்டுவிட்டான்.

இதில் மேகா தான் ஏகமாய் அதிர்ந்து பார்த்தாள்.

அவளது முகத்தையே ஊடுருவி பார்ந்திருந்தவன்,

“சொல்லு மேகா இப்படி என்னை வேற ஒருத்திக்கு கொடுத்துட்டு அழுதிட்டு இருக்க போறீயா?” என்று மீண்டும் அழுத்தம் திருத்தமாக கேட்க,

இவளுக்கு விழிகள் முழுவதும் நிறைந்துவிட்டது,

“ப்ச் சும்மா அழுதிட்டே இருக்காத மேகா” என்றவன் சலிப்புடன் நெற்றியை தேய்க்க,

இவளது கரங்கள் கண்ணீரை துடைத்தது.

“உனக்காக தான் உன்னை வீடியோ கால்ல பாத்திட்டு தான் எல்லா வேலையையும் விட்டுட்டு பைத்தியக்காரன் மாதிரி ஓடி வந்திருக்கேன்” என்றவன் முகத்தை மறுபுறம் திருப்பி தலையை கோதி கொண்டான்.

மேகா தான் நடப்பவற்றை நம்பவியலாது விழிகள் தெறிக்க பார்த்து கொண்டிருந்தாள்.

“ஆனால் நீ எனக்கு பொண்ணு செலெக்ட் பண்ணிட்டு இருக்க? அந்த சொனாக்ஷிய நான் கல்யாணம் பண்ணிக்கணுமா?” என்று அவளை உறுத்துவிழிக்க,

பொங்கிய அழுகையை கட்டுப்படுத்தியவள் முகத்தை அவனுக்கு காட்டாது மறைத்து கொண்டாள்.

அவளது அமைதி அவனது பொறுமையை சோதிக்க,

“ப்ச் இறங்கி போடி” என்றவன் கார் கதவை திறந்துவிட,

சடுதியில் இறங்கியவள் விறுவிறுவென்று வீட்டிற்குள் ஓடிவிட்டாள்.

“சைத்து தூங்க போகாம‌ என்ன பண்ற?” என்று காயுவின் குரல் செவியில் மோதினாலும் பதில் அளிக்காது நின்று இருந்தான்.

“டேய் உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன். மேரேஜ்க்கு இன்னும் நாள் இருக்கு இப்போவே கனவுல டூயட் பாட்றியா?” என்று சிரிப்புடன் அருகில் வர,

“ப்ச் நீ வேற ஏன்” என்றவன் சலித்து கொள்ள,

அவனது குரலில் இருந்த பேதத்தை உணர்ந்தவள்,

“சைத்து என்னாச்சு எதுவும் பிராப்ளமா?” என்க,

“ஆமா பிராப்ளம் தான்”

“என்ன அத்தை மாமா எதுவும் சொன்னாங்களா?” என்று வினவ,

“அதெல்லாம் எதுவுமில்லை. மேகா தான்”

“ஏன் அவளுக்கு என்ன? உங்களுக்குள்ள எதுவும் சண்டையா?”

ஒரு பெருமூச்சை வெளியிட்டவன்,

“சண்டைலாம் எதுவுமில்லை. அவளுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையாம். ஸ்டாப் பண்ண சொல்றா” என்று இவன் சாவகாசமாக பதில் பொழிந்ததும்,

“என்னடா சொல்ற?” என்ற காயுவின் முகத்தை ஏகமாய் அதிர்ச்சி ஜனித்தது.

சைத்துவிடம் பதில் இல்லை அமைதியாக காயுவை கண்டான்.

“மேகாவா அப்படி சொன்னா? ஏன் சொன்னா?” என்று அதிர்ச்சி விலகாத குரலில் கேட்க,

“ஸ்வஸ்திகா” என்று ஒற்றை வரியில் பதில் அளித்தவனுக்கு சிறிது நேரத்திற்கு முன்பு தான் செய்தி வந்தது.

“என் தங்கச்சியா?”

“ஆமா அவ தான்” என்று நடந்ததை கூறினான்.

“சாரி டா அவ இப்படி நடந்துப்பான்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லை. நாளைக்கு காலையில முதல் வேலையா போய் அவளை நாலு சாத்துறேன்” என்று கோபமாக பேச,

“அவளை ஏன் திட்ற. போய் மேகாவை ரெண்டு அடி போடு. யார் என்ன சொன்னாலும் நம்பிடுவாளா? அவளுக்கு என் மேல நம்பிக்கையே வராதா?” என்று வருத்தத்துடன் கேட்க,

“அதுவும் சரிதான். ஸ்வஸ்திய அப்புறம் பாத்துக்கிறேன். நாளைக்கு மேகாவுக்கு கொடுக்குறதுல அவ மேரஜை நிறுத்துறதை பத்தி கனவுல கூட நினைக்க மாட்டா” என்றவள்,

“நீ ஒன்னும் பீல் பண்ணாத கல்யாணம் எந்த பிராப்ளம் இல்லாம நடக்கும்” என்று ஆறுதல் கூற,

“அவளே என்னைவிட்டு போக நினைச்சாலும் நான் விட மாட்டேன். அவ வேணாம்னு சொன்ன கோபத்துல தான் அப்படி பேசிட்டு வந்துட்டேன்” என்று அழுத்த
மாக உரைத்தவன்,

“போய் சொல்லு அவக்கிட்ட இந்த ஜென்மத்துல அவளுக்கு நான் தான் நான் மட்டும் தான்னு” என்றவன் விறுவிறுவென இறங்கி சென்றுவிட்டான்.

மறுநாள் காலையில் முதல் விமானத்தை பிடித்து காயத்ரி மேகாவின் வீட்டு வாசலில் நின்றிருந்தாள்.










 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Gayu first Megha ku vepillai adika ready aagita ah andha Chaidhu rombhavae thelivu ah mattum illa strong ah vum irukan Megha ah vae nenachalum avan ah vittu pogamudiyatham apadi solluda cutan indha athiradi ah than expect pannan
 
Well-known member
Messages
859
Reaction score
630
Points
93
Athaane paarthen, shaithu avlo seekkirama vidura aala nu

Gaayu megha kitta pesi samaathanam panniduvaa

💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌
 
Top