• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

மேகம் 18

Administrator
Staff member
Messages
464
Reaction score
794
Points
93
மேகம் 18:

ஆளில்லா பாலைவனத்தில் தூரத்து கானல் நீராய் வந்து போகிறது இவன் பார்வைகள் நெருக்கத்தில் பார்வை பாவையை தீண்டினால் மூர்ச்சையாகி போவாளா இவள்…?


நேரம் செல்ல செல்ல கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் வெறித்த பார்வையுடன் நின்றிருந்தவளுக்கு உடல் கிடுகிடுவென நடுங்க துவங்கியது இருந்தும் கம்பியை இறுக பிடித்து கொண்டாள்.

வெறுமை மனது முழுவதும் வெறுமை தான். மொத்தமாக உயிரை உருவி சென்றுவிட்டான்.

தான் தான் அத்தனைக்கும் காரணம் என்று தெரிந்திருந்தும் மனது யாவையும் ஏற்க மறுத்தது.

“மேகா இன்னும் எவ்ளோ நேரம்மா இங்கயே நின்னுட்டு இருக்க ஐடியா? உனக்கு ஷிவராக ஆரம்பிச்சிடுச்சு வா கீழ” என்று சேதுபதி அழைக்க,

காதில் விழுந்தாலும் பதில் கூறாது நின்றிருந்தாள். இத்தனை நேரம் தன்னை பற்றி மட்டுமே சிந்தித்து கொண்டிருந்தவளுக்கு தந்தையை கண்டதும் குற்றவுணர்வு பெருகியது.

“மேகாம்மா உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்” என்று சேதுபதி தன்மையாகவே கூற,

“இவக்கிட்ட என்ன பேசிட்டு இருக்கிங்க. கன்னத்தை சேத்து ரெண்டு அப்புனா தான் சரியா வருவா? என்ன வேலை பாத்து வச்சிருக்கா. அவங்க எவ்ளோ பெரிய இடம் அவங்களா வந்து சம்மந்தம் பேசியிருக்காங்க. இப்படி கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி வந்து கல்யாணத்தை நிறுத்துங்கன்னு சொல்லிட்டு இருக்கா” என்று தனது ஆதங்கத்தை கொட்ட,

அப்போதும் மேகாவிடம் அமைதி மட்டும் தான்.

“பதில் பேசுறாளா பாரு? எவ்ளோ அழுத்தம் இவளுக்கு கல்லு மாதிரி நிக்கிறா” என்று முதுகில் ரெண்டு அடி போட,

சேதுபதி, “தமயந்தி என்ன பண்ற? விடு அவளை” என்று அடிப்பதை தடுத்தார்.

அடி வாங்கி கொண்டு இருந்தவளோ வலியை சிறிதும் முகத்தில் காட்டாது நிச்சலமாக நின்றிருந்தாள்‌.

குளிரில் உடல் வெகுவாக நடுங்க துவங்க பற்கள் தந்தியடித்தது. உதடு கடித்து நின்றிருந்தாள்.

“அடிக்கிறதை நிறுத்துறியா இல்லையா?” என்று சேதுபதி அதட்ட,

“நீங்க பேசாம இருங்க. நீங்க கொடுக்குற செல்லத்துனால தான் இவ இப்படி பண்ணிட்டு இருக்கா? ஊரெல்லாம் பத்திரிகை குடுத்து கல்யாணத்துக்கு கூப்பிட்ட பின்னாடி வந்து கல்யாணத்தை நிறுத்த சொல்றா. இப்போ எல்லாருக்கும் என்ன பதில் சொல்றது மத்தவங்களை விடுங்க சம்மந்தி வீட்டுக்காரங்ககிட்ட என்ன பதில் சொல்றது?” என்று கேட்க,

சேதுபதியிடம் ஒரு கணம் பதில் இல்லை. அவர் கேட்பது எல்லாம் நியாயம் தானே?

இருந்தும் மகள் அடிவாங்குவதை பொறுக்க இயலாதவர்,

“அதுக்கு மேகாவ அடிச்சா சரியா போச்சா? விடு அவ இவ்ளோ தூரம் வந்த பின்னாடி இப்படி சொல்றான்னா கண்டிப்பா எதாவது காரணம் இருக்கும்” என்று மொழிந்திட,

இத்தனை நேரம் திடமாக நின்றிருந்த மேகா தந்தையின் நம்பிக்கையில் உடைய துவங்கினாள்.

விழிகள் மெதுவாக கலங்கியது.

“என்ன காரணம் இருந்திட போகுது? எல்லாம் திமிரு. இவளாதான வந்து நின்னா காதலிக்கிறேன்னு நம்மளும் பொண்ணு ஆசைப்பட்றாளேன்னு ஒத்துக்கிட்டோம் அது தான் தப்பா போச்சு. வேணும்னு சொன்னப்ப எதுவும் சொல்லாம ஒத்துக்கிட்டோம்ல அதான் வேணாம்னு சொன்னாலும் எதுவும் கேட்காம தலையாட்டுவோம்னு நினைச்சிட்டா” என்று தனது கோபங்களை வார்த்தைகளில் கொட்டினார்.

தமயந்தி கூறும் ஒவ்வொரு வார்த்தையிலும் உண்மை இருப்பதால் எப்போதும் மேகாவிற்கு ஆதரவாக பேசும் சேதுபதியாலும் இப்போது பேச இயலவில்லை.

ஆனால் மனதினோரம் பெரிதான நம்பிக்கை இருந்தது மேகாவின் செயலுக்கு பின்னால் நிச்சயமாக ஏதோ ஒரு காரணம் இருக்கும் என்று.

ஆனால் அதனை கூறினால் கண்டிப்பாக தமயந்தி ஒத்து கொள்ள மாட்டார்.

தந்தையின் பேசவியலாத இந்நிலைக்கு தான் மட்டுமே காரணம் என்று உணர்ந்தவளுக்கு உள்ளே மெல்லிய இழை இறுகியது.

“பதில் பேசுடி உன்கிட்ட தான பேசிட்டு இருக்கேன். நீ தான ஆசைப்பட்டு அவரை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்ன நாங்களா பாத்த சம்மந்தமா இது?” என்று உலுக்க,


உள்ளமெங்கும் பெரிய கூக்குரல் கேட்டது.

‘நான் தான் நான் தான் ஆசைப்பட்டேன் நான் தான் இப்போது வேண்டாமென்கின்றேன்’ என்று கத்த தோன்றியது.

வெகுவாக தன்னை கட்டுப்படுத்தி நின்றிருந்தவளுக்கு கால்கள் தள்ளாடியது.

சேதுபதி, “மேகா” என்று பிடித்து கொள்ள,

“மேகா என்னாச்சுடி” என்று பதறிய தமயந்தியும் ஒரு கையால் பிடித்தார்.

இமைகளை முயன்று பிரித்தவள்,

“ஒன்னுமில்லை” என்று மொழிய,

“என்ன ஒன்னுமில்லை நிக்கவே முடியலை எவ்ளோ நேரம் மழையில நின்னுட்டு இருக்க” என்று தாயின் பரிதவிப்புடன் பதறியவர் அருகில் இருந்த நாற்காலியில் அமர வைத்து துண்டை எடுத்து துவட்டிவிட,

சேதுபதி அவளுக்கு குடிக்க சூடாக பாலை எடுத்து வர சென்றார்.

“ஏன்டி உடம்பு சுடாக ஆரம்பிச்சிடுச்சு ஏன்டி இப்படி எங்களை கஷ்டப்படுத்துற? நாங்க நல்லா இருக்கும் போதே உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்கணும்னு நினைக்கிறது அவ்ளோ பெரிய தப்பா?” என்று குரல் கமற வினவியபடி துவட்ட,

இவள் சிறிது சிறிதாக உடைய துவங்கியிருந்தாள்.

சேதுபதி சூடாக பாலை எடுத்து வந்து கொடுக்க,

“இந்தா இதை குடிச்சிட்டு மாத்திரையை போடு” என்று தமயந்தி கூற,

அதற்கு மேலும் அவர்களை கஷ்டப்படுத்த விரும்பாதவள் அமைதியாக அதனை குடித்து மாத்திரையை விழுங்கினாள்.

சேதுபதி, “வாம்மா வந்து ரெஸ்ட் எடு மார்னிங் பேசிக்கலாம்” என்று அவளது கைப்பிடித்து அறைக்கு அழைத்து செல்ல,

மனம் முழுவதும் கோபம் பயம் பரிதவிப்பு என அனைத்தையும் தாங்கி நின்ற தாயின் பார்வையை எதிர்கொள்ள இயலாதவள் அறைக்குள் சென்று படுத்துவிட்டாள்‌.

போர்வையை எடுத்து கழுத்து வரை போர்த்திவிட்டு,

“எதையும் நினைக்காம தூங்குடா” என்று தலையை கோதிவிட,

உள்ளுக்குள் ஒன்று மொத்தமாய் உடைந்து சிதறியது.

முகத்தை தலையணையில் புதைத்து கொண்டாள்.

அவளது நிலை உணர்ந்த சேதுபதி மேலும் காயப்படுத்த விரும்பாது எழுந்து வெளியே வந்துவிட்டார்.

வெளியே பதற்றத்துடன் நின்றிருந்த தமயந்தி,

“என்னங்க எதுவும் சொன்னாளா?” என்று வினவ,

“நான் எதுவும் கேக்கலை தமயந்தி. இப்போ அவ ரொம்ப உடைஞ்சு போயிருக்கா காலையில பேசிக்கலாம்” என்க,

“காலையில என்ன பேசுறது? சம்மந்தி வீட்டுக்காரங்களுக்கு என்ன பதில் சொல்றது?” என்று பரிதவிக்க,

“என்ன நடந்துச்சுனு தெரிஞ்சிக்கிட்டு பேசுவோம்”

“இவ சொல்லுவான்னு எனக்கு நம்பிக்கையில்லை”

“மாப்பிள்ளைக்கிட்ட பேசுவோமா?”

“அவருக்கே தெரியலையே? தெரிஞ்சிருந்தா நமக்கிட்ட நிச்சயம் சொல்லியிருப்பாரே”

“அப்போ கவி? காயத்ரி? இவங்க ரெண்டு பேருக்கும் தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கு”

“ஹ்ம்ம் நானும் அதான் நினைச்சேன். மார்னிங் கவி கூட தான வெளியே போனா அவக்கிட்ட கேட்போம். நீயே பேசு” என்று அழைப்பை விடுத்து தமயந்தியிடம் கொடுத்தார்.

மறுமுனையில் அழைப்பை ஏற்றதும் கவி,

“சொல்லுங்கத்தை . இந்த நேரத்தில கால் பண்ணி இருக்கிங்க?” என்று வழக்கம் போல இயல்பாக பேச,

அவளுக்கு ஏதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று புரிந்து போனது இருவருக்கும்‌.

“கை தவறி கால் போய்டுச்சு மா? எப்படி இருக்க? வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?” என்று கேட்க,

“ஓ சரிங்கத்தை எல்லாரும் நல்லா இருக்காங்க‌‌. மேகா என்ன பண்றாத்தை மெசேஜ் பண்ணேன் பார்க்கலை” என்க,

“அவளுக்கு தலை வலிமா தூக்கிட்டு இருக்கா”

“ஆமா வரும் போதே தலைவலின்னு சொன்னா சரி ரெஸ்ட் எடுக்கட்டும்த்தை மார்னிங் பேசிக்கிறேன்” என்று அழைப்பை துண்டித்தாள்.

தமயந்தி கவலையுடன் கணவனை பார்க்க,

“காயத்ரிக்கு கூப்பிடு அவளுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்” என்று மொழிய,

தமயந்தி காயத்ரிக்கு அழைப்பை விடுத்தார்‌.

அழைப்பு துண்டாகும் நேரத்தில் ஏற்ற காயத்ரி,

“சொல்லுங்கம்மா? மேகா என்ன பண்றா?” என்று மொழிய,

“அவ தூங்கிட்டு இருக்காம்மா” என்றதும்,

“நல்லா தூங்கட்டும் நெக்ஸ்ட் வீக் கல்யாண வொர்க்ல தூங்க டைம் இருக்காது” என்க,

அவளது பதிலிலே எதுவும் அறியாதவள் என்று தெரிந்தது‌.

“ஹ்ம்ம் சரிதான் மா. பசங்க என்ன பண்றாங்கம்மா கண்ணுக்குள்ளயே நிக்கிறாங்க” என்று சமாளிக்க,

“தூங்கிட்டாங்கம்மா. மார்னிங் எழுந்ததும் வீடியோ கால் போட்டு உங்கிட்ட பேச வைக்கிறேன்” என்று காயு மொழிந்ததும்,

“சரிம்மா” என்று இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு வைத்தார்.

“என்னங்க இவங்க ரெண்டு பேருக்குமே எதுவும் தெரியலை என்ன பண்றது இப்போ” என்று வினவ,

“காலையில மேகா எழுந்து சொன்னாதான் தெரியும் என்ன பிரச்சனைன்னு”

“எனக்கு பயமா இருக்குங்க. கல்யாணம் நின்னு போய்டுமோன்னு”

“அப்படிலாம் எதுவும் நடக்காது. எனக்கு மாப்பிள்ளை மேல நிறைய நம்பிக்கை இருக்கு. அவர் என்னைக்கும் நம்ம பொண்ணை கைவிடமாட்டாரு” என்றவரது குரலில் அவ்வளவு நம்பிக்கை.

அத்தகைய நம்பிக்கையை சைத்தன்யா கொடுத்திருந்தான்.

இங்கு தலையணையில் முகத்தை புதைத்திருந்த மேகாவின் இடது கரம் வலது கரத்தில் இருந்த மோதிரத்தை வருடி கொண்டிருந்தது‌.

அது சைத்தன்யா மற்றும் மேகாவின் நிச்சய மோதிரம்.

காதலை கூறிய சில நாட்களிலே தனது வீட்டினரை சம்மதிக்க வைத்து அழைத்து வந்து மேகாவின் வீட்டிலும் பேச வைத்திருந்தான்.

சைத்தன்யாவின் பின்புலத்தினை கண்டு மேகாவின் பெற்றோர் முதலில் சற்று தயங்கினாலும் சதாசிவம் தன் பேச்சால் அவற்றை உடைத்திருந்தார்.

மேலும் சைத்தன்யாவின் தந்தை தாய் தமையன் சகோதரி என யாவரும் அவ்வளவு எளிமையாகவே பழகினார்கள்‌.

இத்தனை சீக்கிரத்தில் இவ்வளவு அமைதியாக தங்களது திருமணம் நிச்சியக்கப்படும் என்று மேகாவிற்கு துளியும் நம்பிக்கை இருந்திருக்கவில்லை.

ஆனால் அவை நிகழும் போது ஒரு வித மோன நிலையில் தான் இருந்தாள்.

ஏன் இன்று காலை வரை அப்படி தான இருந்தாள்.

வணிக வளாகத்தில் காலை அந்நிகழ்வு நடக்கும் வரை.

அப்பெண்ணை மேகா சந்திக்கும் வரை. அவளுடைய குரல் இப்போதும் செவியில் மோதியது.

‘சைத்து மாமாவ கல்யாணம் பண்ணிக்க உனக்கு என்ன தகுதி இருக்கு? அவரோட கால் தூசிக்கு சமமா இருப்பியா நீ? உன்னோட பேஸ கண்ணாடில பாத்து இருப்பியா நீ? இதுல ஏகப்பட்ட ஹெல்த் இஸ்ஸூஸ் வேற. யாருடா கிடைப்பான்னு அலைவீங்களா நீங்களாம்?’

‘என் மாமாவோட அழகென்ன படிப்பென்ன? ஸ்டேட்ஸ் என்ன? மிடில் கிளாஸ் பேமிலில இருந்து வந்த உனக்கு பார்ன் வித் சில்வர் ஸ்பூனா பிறந்த என் மாமா கேக்குதா? உன் கலர் என்ன? அவர் கலர் என்ன? அவர் தான் பரிதாபத்துல கல்யாணம் பண்ணிக்க கேட்டாருன்னா நீயும் கிடைச்சது சான்ஸ்னு ஒட்டிக்கிட்டியா?’ என்ற செவிப்பறையை கிழிக்கும் குரல் வந்து விழுக,

“நோ…” என்று காதை இறுக பொத்தி கொண்டவளுக்கு அழுகை பெருகியது‌.

“நான் அவருக்கு பொருத்தமில்லை தான். என்னை மாதிரி பொண்ணை அவரோட நிலைமைக்கு கல்யாணம் பண்ணிக்க நினைச்சது ரொம்ப பெரிய விஷயம் அவர் வாழ்க்கையை நான் கெடுக்க மாட்டேன்” என்று தனக்கு தானே கூறியவளுக்கு காலையில் நடந்த நிகழ்வு நிழலாடியது‌.

“மேகா இந்த ரெட் சாரி பாரேன் சூப்பரா இருக்கு” என்ற கவிக்கு,

“ஹ்ம்ம் நல்லா இருக்கு டி. இதையும் எடுத்துக்கலாம்” என்று வேறு புடவையை அலசிய மேகாவின் முகத்தில் திருமண கலை அத்தனை அழகாய் பொருந்தி இருந்தது.

இத்தனை வருடங்களாய் பொத்தி வைத்திருந்த காதல் இன்று வேர்விட்டு மரமாய் வளர்ந்து நின்றதை கண்டு உள்ளம் உவகையில் விம்மி கொண்டிருந்தது.

எந்நேரமும் சைத்தன்யாவின் நினைப்பு தான் அவளை அத்தனை தூரம் தனது நேசத்தில் திளைக்க வைத்திருந்தான் சைத்தன்யா.

இருவரும் பார்த்து கொண்டிருக்கும் சமயம் கவிக்கு அலைபேசியில் அழைப்பு வர,

“நீ பாத்திட்டு இரு நான் வந்திட்றேன்” என்று சற்று தொலைவிற்கு சென்று பேசினாள்.

இங்கு மேகா புடவையை பார்த்து கொண்டிருக்கும் சமயம்,

“மேகா” என்ற பெண் குரல் கேட்க,

‘யார்?’ என்ற சிந்தையுடன் மேகா திரும்ப,

அழகிய யுவதி நின்றிருந்தாள்.

“நீங்க?” என்று மேகா கேட்க,

“நான் ஸ்வஸ்திகா. சைத்து மாமாவோட கசின்” என்க,

“ஹாய், நான் உங்களை எங்கேஜ்மென்ட்ல பாக்கலையே?” என்று மேகா இன்முகத்துடன் விசாரித்தாள்.

“அந்த கருமத்துக்கு எதுக்கு நான் வரணும்” என்றவளது வார்த்தையில் மேகா அதிர்ந்து பார்க்க,

“என்ன பாக்குற? நான் உன்கிட்ட கொஞ்சி குழாவ வரல. சைத்து மாமாவ கல்யாணம் பண்ணிக்க உனக்கு என்ன தகுதி இருக்கு? அவரோட கால் தூசிக்கு சமமா இருப்பியா நீ? உன்னோட பேஸ கண்ணாடில பாத்து இருப்பியா நீ? இதுல ஏகப்பட்ட ஹெல்த் இஸ்ஸூஸ் வேற. யாருடா கிடைப்பான்னு அலைவீங்களா நீங்களாம்?” என்றவளது பேச்சில் மேகா ஏகமாய் அதிர்ந்து பார்த்தாள்.


அதனை கண்டு கொள்ளாத ஸ்வஸ்திகா,

“‘என் மாமாவோட அழகென்ன படிப்பென்ன? ஸ்டேட்ஸ் என்ன? மிடில் கிளாஸ் பேமிலில இருந்து வந்த உனக்கு பார்ன் வித் சில்வர் ஸ்பூனா பிறந்த என் மாமா கேக்குதா? உன் கலர் என்ன? அவர் கலர் என்ன? அவர் தான் பரிதாபத்துல கல்யாணம் பண்ணிக்க கேட்டாருன்னா நீயும் கிடைச்சது சான்ஸ்னு ஒட்டிக்கிட்டியா?” என்று வார்த்தைகளில் நெருப்பை வாரி இறைத்தாள்.

இதனை சற்று எதிர்பாராத மேகாவின் விழிகள் கலங்கிட துவங்கியது.

“இப்படி அழுது சீன் போட்டு தான் என் மாமாவ மயக்கிட்டியா? எனக்கும் மாமாக்கும் கல்யாணம் பண்ணி வைக்க அத்தை மாமா எல்லாம் அவ்ளோ ஆசைப்பட்டாங்க. மாமாக்கு கூட என் மேல விருப்பம் இருந்துச்சு. ஆனால் என்னைக்கு அவரால தான் உனக்கு அடிப்பட்டு ஆப்ரேஷன் பண்ணாங்கன்னு தெரிய வந்ததோ அப்போவே எல்லாம் முடிஞ்சு போச்சு”

“...”

“என் மேல இருந்த காதலை புதைச்சிட்டு பரிதாபத்துல உன்னை தேடி வந்துட்டாரு. செஞ்ச தப்பை சரி பண்ண உன்ன கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணிட்டாரு” என்றவளது வார்த்தையினால் மேகா உட்சபட்சமாய் அதிர்ந்து ஆயிரம் பாகங்களாக சிதறி கொண்டிருந்தாள்.

“உன்னை பத்தி தெரிய வரலைனா இந்நேரம் எனக்கும் மாமாக்கும் கல்யாணம் முடிஞ்சிருக்கும். எல்லாம் உன் மேல வந்த பரிதாபத்துனால தான்” என்று கரித்து கொட்ட,

“பரிதாபமா?” என்று வினவியவளது இதழ்கள் நடுங்கியது.

“ஆமா பரிதாபம் தான். அதில்லாம வேற என்ன? அவரோட ரேஞ்சுக்கு உன்னைலாம் திரும்பி பார்த்திருப்பாரா? நீயே திங்க் பண்ணி பாரு. அவரோட ஸ்டேட்டஸ்க்கு எத்தனை அழகான பொண்ணுங்களை பாத்திருப்பாரு அவங்களை எல்லாம் விட்டுட்டு போயும் போயும் உன்னை ஏன் பிடிக்கணும் அவருக்கு”

“...”

“அநியாயமா என் வாழ்க்கையை தட்டி பரிச்சிட்டியே? உன்னால எங்களுக்கு நடக்க இருந்த எங்கேஜ்மென்ட் நின்னு போச்சு. என்னை மனசுல வச்சிக்கிட்டு அவரால
எப்படி உன்கூட வாழ முடியும்? என் வாழ்க்கையை தட்டி பறிக்க நினைச்ச நீ நல்லாவே இருக்க மாட்ட” என்றவள் வார்த்தைகளை குத்தீட்டியாய் பயன்படுத்தி அவளை குத்தி கிழித்து விட்டு அகன்றுவிட்டாள்.

அவளால் காயப்பட்ட மேகா தான் உயிருடன் மரித்து போயிருந்தாள்…


 
Messages
524
Reaction score
403
Points
63
அடக்கடவுளே யார் இந்த புது வில்லி இப்படி மேகாவை கஷ்டப்படுத்திட்டு போயிட்டா
 
Well-known member
Messages
859
Reaction score
630
Points
93
Achacho, iva yaaru puthusha

Ithunaala thaan megha marriagea stop panna sollittalaa, paavam megha

Shaithu ku theriya varappa irukku avalukku
 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Megha ithu na la than chaidhu sympathy la yum guilt ah yum aval ah kalyanam pannika vendam nu nenachi endha reason um sollama avan kadhal aachum neraveratum nu marriage ah venam nu sollitala ah
Chaidhu ah la than iva luku adipattuchi ah epudi enna nu theriyala aana chaidhu megha ah va rombha varusham ah virumburan nu than thonuthu athukana bathil chaidhu kita than iruku
 
Top