• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

மறுமையும் நின் நெஞ்சம் நேர்பவளே !... - 2

Messages
37
Reaction score
20
Points
8
அத்தியாயம் 2

மிருதுளாவின் முகத்தில் சந்தோஷம் ஆச்சரியம் அவன் தன் மீது கொண்டுள்ள காதல் என அனைத்தும் கலந்த கலவையாக இருக்க .

குணாளின் முகத்தில் மின்னலைப் போல ஒரு அதிர்ச்சி

கார்த்திக் முகத்தில் நிம்மதி பரவியது .

காவ்யா மிருதலாவை பார்த்து கண்ணடித்தவள் மிரு கல்யாண சாப்பாடு எப்ப போடுவ என கேட்டு கிண்டல் செய்ய மிருதாலினிக்கு தன் நிலை கொள்ள முடியவில்லை.

அதன் பிறகு கேலியும் சிரிப்பும் ஆக போக இடைவேளை முடிந்து அவர்களது வேலையை தொடர்ந்தனர்.

காவியா நேரத்தை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க கவி அப்படி என்னத்த வீட்டுல வச்சிருக்க ஆபீஸ் முடிய இன்னும் 20 மினிட்ஸ் இருக்கு இப்படி பாத்துட்டு இருக்காத இல்லனா நான் பாஸ் கிட்ட போட்டு தந்து விடுவேன் என பொய்யாக சொன்னவளை பார்த்த காவியா

மிரு இன்னைக்கு என்ன நாள் தெரியுமா வெள்ளி என்று சிரித்தவள் உங்க வீட்டில என்ன ஸ்பெஷல் என்று சொன்னால் தானே தெரியும் என்று தன் புருவத்தை உயர்த்தி கேட்டவளை பார்த்த காவியா அது இன்னைக்கு எங்க அத்தை பையன் வரான் நான் கூட சொல்லி இருக்கேன் அதான் மேடம் டைம் இப்படி முறைச்சு பார்த்துட்டு இருக்கியா சீக்கிரம் போகணும்னு என்று ஏற்று இறக்கி கேட்டவளை பார்த்த காவியாவிற்கு முறைத்தவாறு நீ ஏன் கேட்க மாட்ட உனக்கு தான் ஆல்ரெடி எல்லாம் கரெக்ட் ஆயிடுச்சு. சிறிய இடைவெளி விட்டு முகத்தில் சோகத்தை தத்து எடுத்தவள் 'என்னோட காதலை எப்படி சொல்றதுன்னு தெரியல' .

இதைக்கேட்ட மிரு சிரித்துக் கொண்டே " என்ன கவி உன்னோட அவர் என்ன பூச்சாண்டியா உன்னோட காதல சொல்ல இவ்வளவு பயப்படுற "என கேட்க

கவி அவளை முறைக்க அவளின் கன்னத்தை கிள்ளியவள் " சோ ஸ்வீட் கவி" என அவள் கோபத்தை போக்கும் விதமாக பாசாங்கு காட்ட கோபத்தில் சிவந்த முகமாக

"மிரு அவரை பூச்சாண்டின்னு என்கிட்டயே சொல்றியா" என்று இடுப்பில் கை வைத்துக் கொண்டு புருவத்தை உயர்த்தி கேட்க சிரிப்பை அடக்கியவள்.

"சேரி சொல்லு கேட்போம்" -மிரு

" போடி சொல்ல மாட்டேன்"- காவியா

"சாரி போதுமா இப்ப சொல்லு ரொம்ப தாண்டி சீன் போட்டது போதும் சொல்லு "- மிரு

"அவருக்கு என்ன பிடிக்குமான்னு தெரியல அது இல்லாம அவருக்கு வேற கேர்ள் ஃப்ரெண்ட் இருக்கான்னு தெரியல "- காவியா

என்று சொல்லும்போதே கவி முகம் வாடுவதை பார்த்த மிரு தோழியை பழைய நிலைக்கு கொண்டு வர

"நீ பயப்படற அளவுக்கு ஒன்னும் இருக்காது அவருக்கு அத்தை பொண்ணு நீ தைரியமா உரிமையா கேளு உன்னோட காதல சொல்லு"-மிரு

என்ற அவள் கவியை பார்த்து கண்ணடித்தவள்

"அத்தை பொண்ணுன்னு கண்டிப்பா ஃபீலிங்ஸ் இருக்கும் கவி"- மிரு

சிறு இடைவெளி விட்டு பெருமூச்சு விட்டவள்

" நீ லக்கி தாண்டி எனக்கு அத்தை பையன் இருந்திருந்தா இந்நேரம் கரெக்ட் பண்ணி செட்டில் ஆகி இருப்பேன் "-மிரு

என்று பொய்யாக முகத்தை சோகமாக வைத்தவள் கவி உண்மை என்று எண்ணியவள்

"உனக்கு சொந்தம் இல்லன்னு வருத்தப்படாத கார்த்திக்கை கல்யாணம் பண்ணினதும் உனக்கு பெரிய சொந்தம் கிடைக்கும்"

என்று தோழி மனம் வாடுவதை தாழாமல் ஆறுதல் சொல்ல

"அதுலா ஃபீல் பண்ண மாட்டேன் கவி எனக்கு சொந்தம் எல்லாமே அம்மா அப்பா தான் அதுவே போதும்"

என்று சொன்னவளை புன்னகையுடன் பார்த்த காவியா

" நா அத சொல்ல வரல மிரு என்று கண்ணடிக்க "

அவள் குழந்தைகளை பற்றி கூறுகிறாள் என்று அறிந்து முகம் சிவக்க அதை மறைத்தவாறு ஒரு சிறிய அடியை தந்தாள் மிரு.

அவளுக்கு தான் சொந்தங்கள் யாரும் இல்லை என்று சொல்லி இருக்கின்றார்களே .

ஆபீஸ் முடிய வீட்டுக்கு செல்ல ஆயத்தமானார்கள் கவி மிருவிடம் சொல்லி சென்று விட்டாள் .

கார்த்திக் அனைத்தையும் முடித்துவிட்டு செல்ல நடந்து வருபவனை ஒரு ரசனையாக பார்த்து சிரிப்புடன் வரவேற்க அவளின் கண்கள் அசைவில்

" போயிட்டு வரேன் "

என்று சொன்னவள் சிரிப்புடன் கையசைக்க அவன் வாயில் கை வைத்தவன்

"ஊர்ல இப்படி ஒரு காதலை யாரும் பார்த்திருக்க மாட்டாங்க ஒரு கிஸ் பண்ணி போயிட்டு வரேன் பேபி என்று நாலு வார்த்தை பேசுவேன்னு ஓடி வந்தேன் இப்படி பொசுக்குன்னு சொல்ற"- கார்த்திக்

என சொல்பவனை சிரிப்புடன் பார்த்த மிரு

"அதெல்லாம் கல்யாணம் முடியட்டும் அப்புறம் பார்த்துக்கலாம் கார்த்திக் இன்னைக்கு தான் நம்ம விஷயத்தை அப்பா கிட்ட சொல்லலாம்னு இருக்கேன்"

என்றவள் சிறிய இடைவெளி விட்டு

"கொஞ்சம் பயமா தான் இருக்கு எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு"

என தன் மனதில் உள்ள பயத்தை சொல்ல அவனும் சிரித்தவாறே

" நீ இப்படி முகத்த வச்சு இருந்தா எப்படி நா பேசுவ"

"ஏ என்னோட முகத்துக்கு என்ன " என்றவளை பார்த்தவன்

"இவ்ளோ அழகையும் சேர்த்து நீ பேசுனா எனக்கு மூச்சே வராது "-கார்த்திக்

என்றவன் ரசனையாக பார்க்க .

"ஆல் தி பெஸ்ட்" என்றவன் எப்படியும் சம்மதம் வாங்கிடவனு தெரியும்.

"உனக்காக கண்டிப்பா யோசிப்பாங்க டான்ட் ஒரி "

அவன் விழிகளில் தன் விழிகளை சேர்த்தவள்

கண்களை அசைத்து சம்மதம் வாங்கி விடுவேன் என்று காட்டியவள் சிரிப்புடன் விலகி சென்றாள் அவளின் முதுகை பார்த்தவன் குணாளின் சிறுமலில் நிலைக்கு வந்தவன்.

"என்னடா மச்சி போலாமா "என்றவன்.

"ம்ம்" என்று உயிர்ப்பே இல்லாமல் சொன்னவனை மேலிருந்து கீழ் பார்த்தவன் என்னடா ஆச்சு என்றவனை

'வாடா போயிட்டே பேசலாம்' என்றவன் பைக்கை ஸ்டார்ட் செய்து தங்களது பிளாட்டுக்கு செலுத்தினால் கார்த்தி சிறிது நேரம் மௌனத்திற்கு பிறகு முதலில் ஆரம்பித்தது கார்த்திக்.

'என்னடா முகமே வாடிடுச்சு எந்த கப்பல் முழுகிடுச்சு 'என்று சிரிப்பவனை பார்த்து வலிக்காத வண்ணம் அடித்தவன் .

'பார்க்கு போகலாமா டா '-குணால்

அவனை புரியாமல் பார்த்தவனை ஒரு பெருமூச்சுடன் சொல்ல ஆரம்பித்தான் .குணால் அனைத்தையும் சொல்லி முடித்தான் .

அவ்வழியாக சென்ற குணாளின் காதில் விழ காற்று போன பலூன் போல ஆகிவிட்டான் குணால் இதைக் கேட்ட கார்த்திக் சிரிப்பை அடக்கிக்கொண்டு

"திரிசா இல்லனா நயன்தாரா" என்று சொல்லி சிரிக்க அவர்கள் வரவேண்டிய இடம் வர இருவரும் சேர்ந்து குடிக்க ஆரம்பித்தனர்.

கார்த்திக் -"மச்சி ஒரு முக்கியமான இன்ஃபர்மேஷன் கேட்டேனடா " போதையிலும் தெளிவாக கேட்டான் . குணாலுக்கு ஒரு வித சங்கடம் அவன் யாரையும் காய படுத்த மாட்டான் இருந்தும் இவன் மட்டுமே நண்பனாக இருக்க அவனுக்காக அனைத்தையும் செய்தான் .

'மச்சி நீ லக்கி டா'

'டேய் மேட்டருக்கு வாடா '-கார்த்திக்

"உன்னை பத்தி தெரிஞ்சா மிரு விட்டுட்டு போயிடுவா உன்ன ரொம்ப நம்பரா பேசாம எல்லாத்தையும் சொல்லிடு டா" -குணால்

தலைக்கு ஏறிய போதை இறங்க கோபம் தலைக்கு ஏறியது என்னன்னு சொல்றதுடா

"இந்த காதல்........ம்ம் சிரித்தவன் காதல் பத்துல நாலுதான்டா உண்மையா இருக்கும் நீ எனக்கு அட்வைஸ் பண்ணாத நான் கேட்டதுக்கு பதிலே சொல்லு"

என்றுவனை பார்த்து மீண்டும் ஒரு வெக்கை போட்டவன் .

"முன்னாடியே சொன்னேனே நீ லக்கினு" என்று சொன்னவன்மீண்டும் தொடர்ந்தான்

"மச்சி நீ ஒரு கம்பெனிக்கு ஓனராக போறடா" என்று சொன்னவனை யோசனையாக பார்த்து

'அப்புறம் அவங்க குடும்பம் சிம்பிள் மிருக்கே இப்படி இருக்கிறது தான் பிடிக்கும் '

என்றவனை முறைக்க


"நீ எதுக்கு இப்படி முறைக்கிற இரு "என்றவன் அவன் சேகரித்த அனைத்து விடயத்தையும் தொலைபேசியில் காட்ட

கார்த்திக்கின் கண்களில் ஒளி மின்னியது சந்தோஷத்தில் இன்னும் குடித்தவன் டாக்ஸி புக் செய்து அவர்களது பிளாட்டுக்கு சென்றார்கள் .

ஆபீஸ் முடிந்து வீட்டிற்கு வந்த மிரு தனது காலனியை விட்டவள் அம்மா என்று கூவிக்கொண்டே சென்றவள் இரவுக்காக சமையலை செய்து கொண்டிருந்தவரை பார்த்து

"ஒரு காபி "என்றவள் பிரஷ்ஷாக சென்று விட்டாள்.

சிவகாமியோ -"கலெக்டர் வேலை பாக்குறா வந்ததும் வராதுமா என்ன வேலை வாங்குற" என்று மனதுக்குள் திட்டுவதாக எண்ணி வாய்விட்டே சொன்னார் அவர் என்னதான் திட்டினாலும் அவளுக்கான தேநீர் தயாரித்தார் பிரஷ் ஆகி வந்தவள்

'அம்மா தேங்க்யூ சோ மச் மா'- என்று ஒரு முத்தத்தை பரிசாக தந்தவள் மகிழ்ச்சியாக அவர்களது தோட்டத்திற்கு சென்றாள் .

ஆம் அவள் இயற்கையின் ரசிகை அவளுக்காகவே தோட்டத்தை அமைத்தார் வேதாச்சலம் ரசனை உடையவர்கள் மகிழ்ச்சியானவர்கள் அதற்கு ஏற்றார் போல மிரு எப்பொழுதும் பூக்களை ரசிப்பது பிடித்த ஒன்று அப்பொழுது அனைத்தையும் மறந்து நிம்மதியான உணர்வை பெறுவதுண்டு தோட்டத்தில் இருக்கும் இருக்கையில் அமர்ந்த வாரே தேநீரை சுவைத்தவளின் மனதில் எவ்வாறு தன் காதலை தெரிவிப்பது அதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்று யோசித்துக் கொண்டு இருக்க வேதாச்சலம் கார் உள்ளே வர பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திவிட்டு வந்தார்.

சிவகாமி மலர்ந்த முகமாக வரவேர்த்தார் அதே புன்னகை வேதாச்சலத்தின் முகத்திலும் இருக்க

"என்னங்க இன்னிக்கு ஏதாச்சும் நல்ல செய்தி இருக்கா எப்பவுமே கம்மியா சிரிப்பீங்க இன்னைக்கு என்னமோ பல்லெல்லாம் தெரியிற அளவுக்கு சிரிக்கிறீங்க என்ன முக்கியமான விஷயம் ஏதாவது நல்ல விஷயம் இருந்தா சொல்லுங்க "-சிவகாமி

என்று கூறிக் கொண்டே அவர் முகத்தை ஆழ்ந்து பார்க்க

வேதாச்சலம்-" எல்லாம் நல்ல விஷயம்தான் மிரு குட்டி எங்கே என்று கேட்க"

'அவ தோட்டத்தில் இருக்காங்க அவளுக்கு என்ன'

சிவகாமி என்னுடைய நண்பர் ராஜதேவ் இன்னைக்கு ஒரு மகிழ்ச்சியான நல்ல செய்தி சொன்னார். அது என்று எடுத்தவர் நமக்கு பிள்ளைகளோடு எதிர்காலத்தை பத்தி தான் சிவகாமி என்று மகிழ்ச்சியாக கூற மகிழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் ஏதோ ஒரு உறுத்தல் இருக்க அதை வெளிக்காட்டாமல் மலர்ந்த முகமாக

'ரொம்ப சந்தோஷம்ங்க இருந்தாலும்.....' இடைவிட்டு ஆ என்று ஆரம்பித்தது தான் தாமதம்

"கோவமாக அதெல்லாம் எது நடக்காது கற்பனை பண்ணாத "

என்றவர் வேகமாக தனது அறைக்கு சென்று விட்டார் அவர் முதுகையே யோசனையாக பார்த்தார் சிவகாமி.

பெருமூச்சுடன் தனது வேலைகளை செய்ய சென்று விட்டார்.
 
Last edited:
Top