- Messages
- 1,028
- Reaction score
- 2,912
- Points
- 113
பொழுது – 8
கணினியை நீண்ட நேரம் உற்றுப் பார்த்ததில் நிவினின் விழிகள் பூத்துப் போயிருந்தன. ஒரு முறை சிமிட்டி அதற்கு ஈரபதத்தைக் கொடுத்தவன், மெதுவாய் ஒற்றைக் கையை மட்டும் நெட்டி முறித்தான். பழக்க தோஷத்தில் மற்றொரு கையையும் உயர்த்தச் சென்றவன், நொடியில் சுதாரித்து கீழே இறக்கியிருந்தான்.
வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதி வாங்கி ஒரு மாதமாக செய்து கொண்டிருக்கிறான். இன்றைக்கு ஏதோ தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எங்கேயும் அவனால் நகர முடியவில்லை. அது என்னவென பார்த்து சரிசெய்ய இரவு மணி பத்தை தொட்டுவிட்டது. இன்னும் உணவு ஈயாத வயிறு கத்த, கண்கள் உறக்கத்திற்கு கெஞ்சின.
கணினியை அணைத்துவிட்டு சமையலறைக்குள் சென்றான். விபத்திற்குப் பிறகு நிவின் பெரிதாய் இரவு சமைப்பதில்லை. கோதுமை ரொட்டியை வெதுப்பியில் போட்டெடுத்து ஒரு குவளை பாலுடன் உணவை முடித்துக்கொண்டு வந்து கட்டிலில் வீழ்ந்தான். இப்போது உறக்கம் சற்றுத் தொலைவில் சென்றிருந்தது.
அன்னிச்சையாய் கை அலைபேசியை எடுக்க, இணையத்தை இணைத்தான். பலவிதமான அறிவுப்புகள் வந்து விழ, தேவையில்லாதது எனத் தோன்றியவற்றைத் தள்ளிவிட்டான். அவற்றிற்கு இடையில் சுதியின் செய்தியும் ஒளிந்திருந்தது.
அதைத் தொட்டு உள்ளே சென்றான். சில நொடிகள் நெற்றியைச் சுருக்கியவன், “இஃப் யூ டோன்ட் ஹேவ் எனி ப்ராப்ளம், ஐ’யம் ஓகே வித் திஸ்!” என அனுப்பினான். ஏற்கனவே அங்கு வணிக வளாகத்தில் வேலை பார்ப்பவள் எப்படி இங்கேயும் பார்க்க முடியும் எனத் தோன்றினாலும் அதை கேட்வில்லை நிவின். நேரில் வந்தால் பேசிக் கொள்ளலாம் என்றுவிட்டான்.
அந்தப் பெண்மணி வேலைக்கு வராததால் இரண்டு நாட்களாக வெளி உணவகத்தில் உண்டான். அக்ஷா ஒருநாள் உணவை எடுத்து வந்து கொடுத்தாள். தினமும் அவளே சமைத்து எடுத்து வருதாகக் கூற, நிவின் தீட்சண்யமாக மறுத்துவிட்டான். அவன் கொஞ்சமே கொஞ்சம் குரலை உயர்த்தி விட, அதில் அவளின் முகம் வாடிப் போயிற்று. அதனாலே இரண்டு நாட்கள் அக்ஷா இங்கு வரவில்லை. நிவினுக்கு பெரியதொரு நிம்மதி பிறந்தது. வீடு கொஞ்சம் அலங்கோலமாக இருப்பதைப் பார்த்து அவனுக்கு ஒப்பவே இல்லை. ஏனோ அனைத்திலும் சுத்தம் வேண்டுபவனுக்கு தன் வீடே அந்நியப்பட்ட உணர்வு. காலையில்தான் வாயிற் காவலாளியிடம் வேறு யாரேனும் வேலைக்கு வருவார்களா எனச் சொல்லி வைத்தான். அப்போதும் அவனுக்கு நம்பிக்கை இல்லை.
சுதிரமாலா கேட்டதும் ஒத்துக் கொண்டான். ஏனோ இந்தப் பெண் சரியாய் அமைந்திடுவாள் என மனம் கூற, நினைவுகளுடனே உறங்கிப் போனான்.
சுதி காலையில் கண் விழித்தது நிவினின் குறுஞ்செய்தியில்
தான். அதைப் பார்த்ததும் இவளுக்கு நிம்மதிதான். நேராய் சந்திராவிடம் சென்று நின்றாள்.
“ம்மா... என்ன பண்றீங்க?” என இவள் கேட்க, “சப்பாத்திக்கு மாவு பிசையுறேன் சுதி. டீ போட்டு வச்சிருக்கேன் பாரு. போ, உனக்கும் அவளுக்கும் ஊத்திக்கோ...” என்றவர் வேலையில் கவனமாய் இருந்ததால் இவளைக் கவனிக்கவில்லை.
சில நொடிகள் யோசித்து எப்படி பேசலாம் எனத் தனக்குள்ளே பேசிப் பார்த்த சுதி, “ம்மா... காம்ப்ளக்ஸ் பின்னாடி அப்பார்ட்மெண்ட் இருக்குல்ல. அங்க ஒரு சார் எங்க காம்ப்ளக்ஸ்க்கு ரெகுலரா வருவார். இப்போ அவருக்கு ஆக்ஸிடென்டாகி கைல கட்டுப் போட்டிருக்காரு. ஒரு ஆள்தான், காலைக்கும் மதியத்துக்கும் சமைக்க ஆள் வேணும்னு கேட்டாரு...” என நிறுத்தினாள் இவள்.
“பக்கத்து வீட்டு பாக்கியம்கிட்டே சொல்லு. அவ வருவா, இல்லைன்னா, தெரிஞ்சவங்க
கிட்டே சொல்லுவா!” என்றார் சந்திரா.
“ம்மா... ஏற்கனவே அந்த அக்கா அங்க வேலைக்கு வந்துட்டுப் பிடிக்கலைன்னு வேற வீட்டுக்கு மாறிட்டாங்க!” என நடந்ததை விளங்கினாள். பெரியவர் அவள் பேச்சின் சாராம்சம் புரியாது நோக்கினார்.
“பாவம்மா... நான்தான் இந்த அக்காவை அனுப்புனேன். ஏற்கனவே வேலை செஞ்சவங்களும் வரலயாம். நான் வேணா போய் சமைச்சு குடுத்துட்டு வரவா மா?” என இவள் தயங்க, சந்திரா மகள் முகத்தைப் பார்த்து அழுத்தமாகத் தலையை அசைத்தார்.
“வேணாம் சுதி... ஏற்கனவே காலைல எட்டு மணிக்குப் போய்ட்டு நைட்டு எட்டு மணிக்குத்தான் வீட்டுக்கு வர்ற? இதுல இந்த வேலையெல்லாம் வேணாம். போ, போய் கிளம்புற வழியைப் பாரு!” பெரியவர் உறுதியாக மறுத்தார்.
“ம்மா... தவாக்கு டெர்ம் ஃபீஸ் கட்ட வேணாமா மா? ருத்ராவுக்கும் கட்டணும். எப்படி மேனேஜ் பண்ணுவீங்க?” எனக் கேட்டாள் சுதி.
“என்பாடு சுதி அது, இத்தனை நாள் எப்படி பண்ணேனோ, அப்படியே பார்த்துக்கலாம். உன் உடம்பை பாரு நீ. டெய்லி நீ தைலம் தேய்ச்சுட்டு தூங்குறது எனக்குத் தெரியாதுன்னு நினைக்குறீயா? பார்த்தும் எதுவும் செய்ய முடியாத நிலையிலதான் இருக்கேன் நான்!” என்றவர் குரல் வேதனை ததும்பி வர, இவள் அவரைப் பின்னோடு அணைத்துக் கொண்டாள்.
“நம்ப குடும்பத்துக்காகத் தானே மா செய்றேன். அண்ணி வேலைக்குப் போய்ட்டா, நான் இவ்வளோ கஷ்டப்படத் தேவையில்லை. இவர் ஒரு ஆளுக்கு சமைக்க எட்டாயிரம் தரேன்னு சொல்றாரு. எப்படியும் காலைல நான் உக்கார்ந்து அப்பளம் தேய்ச்சா ரெண்டாயிரம்தான் கிடைக்கும். அதே நேரத்துல அவருக்கு நான் குக் பண்ணிக் கொடுத்தா, எட்டாயிரம்மா. யோசிச்சு பாருங்க!” என்றாள். அவர் எதுவும் பேசாதிருக்க இவளே தொடர்ந்தாள்.
“ம்மா... அந்த சார் கை இன்னும் நாலஞ்சு மாசத்துல சரியாகிடும். அப்புறம் நான் எதுக்கு வேலைக்குப் போகப் போறேன். சொல்லுங்க? நாலு மாசம்தானே. அவருக்கும் உதவியா இருக்கும். நமக்கும் புள்ளைங்களுக்கு டெர்ம் ஃபீஸ் கட்ட ஈஸியா இருக்கும். கடன் வாங்கத் தேவையில்லை மா!” என்றாள் அவரைக் கரைக்கும் முயற்சியாக.
விறுவிறுவென சமையலறைக்குள் நுழைந்த சௌம்யா சுதியை முறைத்தாள். இத்தனை நேரப் பேச்சுக்களும் அவளது செவியை எட்டாது இல்லை. “ஏற்கனவே உன்னை வச்சுத்தான் நாங்க வாழ்றோம் சுதி. இதுக்கும் மேலயும் உன்னைக் கஷ்டப்படுத்த மனசு வரலை. எம்புள்ளைக பீஸை நான் பார்த்துக்கிறேன். நீ உன் வேலையை மட்டும் பாரு. சமைச்சுக் கொடுக்கப் போறாளாம்!” என அவள் கோபமும் ஆதங்கமுமாய்ப் பேசினாள்.
“அவங்க உங்க புள்ளைங்க மட்டுமில்ல. என் அண்ணன் புள்ளைங்க. அவங்களுக்கு செய்ய எனக்கும் உரிமை இருக்குண்ணி...” சுதியும் ரோஷமாய்க் கூறினாள்.
“சுதி... புரிஞ்சுக்கோ. உன் உடம்பு என்னாகுறது. ஏற்கனவே எலும்பும் தோலுமா இருக்க நீ. உன்னைப் பார்க்கவே கஷ்டமா இருக்கு சுதி. இதெல்லாம் வேண்டாத வேலை. இத்தனை நாள் இருக்க காசுலதானே எல்லாம் பண்ணோம். இப்பவும் அப்படியே பார்த்துப்போம்!” என அவள் கூற, இவள் பெருமூச்சுடன் அண்ணியருகே சென்றாள். சௌம்யாவிற்கு இந்தப் பெண் ஏன் இப்படி செய்கிறாள் என மனம் வெதும்பியது. தங்களுக்காக இவளை சுயநலமாக சுரண்டுகிறோம் என மனம் புழுங்கியது.
“அண்ணி... நான் என்ன வருஷம் முழுக்கவா வேலை பார்க்கப் போறேன். நீங்க எக்ஸாம் எழுதி முடிச்சு வேலைக்கு சேர்ந்துட்டீங்கன்னா, நானும் ஜாலியா வீட்ல இருப்பேன். இப்போ இவருக்கு குக் பண்ணித் தர்றது கூட நாலஞ்சு மாசம்தான். அந்த காசு வந்தா கடனை அடைச்சுடலாம். டெர்ம் பீஸூம் கட்டிடலாம் அண்ணி. ஒரு ஆளுக்கு சமைக்க எவ்வளோ நேரமாகப் போகுது?” எனக் கேட்டாள். அவள் குரலில் குடும்பத்தின் மீதான அக்கறை மட்டுமே மிகுந்திருந்தது.
“தனியா இருக்க ஒருத்தரை நம்பி வயசுப் புள்ளையை எப்படி அனுப்ப சொல்ற சுதி. இதெல்லாம் ஆவுற காரியம் இல்ல!” சௌம்யா திடமாய் மறுத்தாள்.
“அண்ணி... அது அவருக்கு வயசு நாப்பதுக்கு மேல இருக்கும். நம்ப அப்பா மாதிரி இருப்பாரு!” என்றாள் திக்கித் திணறி. பொய் உரைக்க மனதில்லை. இருந்தும் வேறு வழியில்லாது கூறினாள்.
“வயசு பசங்களை கூட நம்பிடலாம் சுதி. வயசானவங்களை நம்ப முடியாது!” அவள் கூற, சுதிக்கு ஆயாசமாக இருந்தது.
“எல்லா இடத்துலயும் பாசிட்டீவ், நெகட்டீவ் இருக்கத்தானே செய்யும் அண்ணி. நான் அவ்வளோ கேர்லெஸ்ஸா இருக்க மாட்டேன். பத்திரமா இருந்துப்பேன். பட்ட பகல், பக்கத்து பக்கத்துல வீடிருக்கும். அப்புறம் என்ன அண்ணி?” என மேலும் சில பல நிமிடங்கள் பேசி ‘அனுப்ப முடியாது’ என்ற முடிவை ‘பார்க்கலாம்!’ என மாற்றிய பிறகு சுதி வேலைக்கு கிளம்பினாள்.
இரவு வந்து பேசி சரி செய்துவிடலாம் என்ற நம்பிக்கை பிறக்க, நிவினுக்கு நாளை முதல் வேலைக்கு வருகிறேன் என்ற குறுஞ்செய்தியைத் தட்டிவிட்டாள். நேரமானதை உணர்ந்தவள், அறக்கபறக்க கிளம்பி ஓடினாள்.
சௌம்யாவிற்கும் சரி, சந்திராவிற்கும் சரி. அவளை அனுப்புவதில் துளியேனும் உடன்பாடில்லை. ஆனால் இந்தப் பெண் உறுதியாய் இருந்தாள். அவர்களுக்கு கவலையாய் போயிற்று. அவள் அகன்றதும் மாமியாரிடம் மருமகள் புலம்பித் தள்ள, அவரும் யோசனையானார்.
இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவளிடம் முடியாது என உறுதியாய் உரைக்கலாம் எனப் பெரியவர்கள் இருவரும் முடிவை எடுத்திருக்க, சுதி அரைமணி நேரம் பேசி அவர்களை கரைத்திருந்தாள்.
“அண்ணி... ஒன் வீக் ட்ரை பண்றேன். அப்படியும் என்னால முடியலை, கஷ்டமா இருக்குன்னா, கண்டிப்பா நான் கன்டினியூ பண்ண மாட்டேன்...” எனப் பேசி அவர்களைத் தலையாட்ட வைத்தவள் உண்டுவிட்டு உறங்க, மற்ற இருவரும் எதுவும் செய்ய இயலாத கையறு நிலையில் இருந்தனர். உண்மையில் ஒவ்வொரு நான்கு மாதத்திற்கு ஒருமுறையும் சிறுவர்கள் இருவருக்கும் பருவத் தேர்வு கட்டணம் கட்ட அத்தனையாய்ப் பாடுபடுகின்றனர்.
சந்திராவும் சௌம்யாவும் அப்பளம் தேய்த்து மாதம் எட்டாயிரம் முதல் பத்தாயிரம் சம்பாரிக்கின்றனர். வீட்டு வாடகைக்கு அதில் ஆறாயிரம் போக, சுதியின் சம்பளத்தோடு அவர்கள் உணவு, தேவையானப் பொருட்கள் வாங்கியது போக கொஞ்சம் மிச்சம் பிடிக்க முடிந்தது. ஆனால், நான்கு மாததில் சேமிப்பெல்லாம் சிறுவர்கள் பள்ளிக் கட்டணத்தில் கரைந்து விடுகிறது. சந்திரா முடிந்தளவு வீட்டு செலவை குறைத்துதான் செய்வார். பிள்ளைகள் ஆசையாய் கேட்டால் கூட, எதையும் வாங்கித் தர மாட்டார். ஒருமுறை பணம் இருக்கும்போது வாங்கிக் கொடுத்துவிட்டு மீண்டும் அவர்கள் கையிருப்பில் எதுவும் இல்லாத போது கேட்டால் ஏமாந்து விடுவார்கள் என எண்ணி அவர்களுக்கு எதையும் வாங்கிக் கொடுக்க மாட்டார். வாரம் ஒருமுறை அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை வீட்டிலே எதாவது பலகாரம் செய்து தருவார்.
சிறியவர்களுக்கு அடிப்படைத் தேவை கல்வி, பாதுக்காப்பான வாழ்க்கையை மட்டுமே அவர்களால் இப்போது தர முடிந்தது. அவ்வப்போது மனதிற்குள் அதை நினைத்துக் கவலை எழுந்தாலும், சௌம்யா வேலைக்குச் சென்றால் ஓரளவிற்கு பழைய வாழ்க்கையை மீட்டு விடலாம் என சந்திரா எண்ணி ஏக்கப் பெருமூச்சு விடுவார்.
கணவன், மகன் இருந்தவரை அவர்கள் எதற்கும் இந்த அளவிற்கு கஷ்டப்பட்டதில்லை. வேலுச்சாமி நல்ல சம்பளத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவர். அந்தக் காலத்திலே அவர் கணிதத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருந்தார். மகன் சரத்தையும் பிகாம் சிஏ படிக்க வைத்திருந்தார். அவனும் படித்து முடித்து நல்ல வேலையில் அமர்ந்துவிட்டான். பின்னர் அவர்கள் வாழ்க்கையில் நடந்தது எல்லாம் விதி என ஒரே வார்த்தையில் அடக்கிவிட முடியாது. ஆண் துணையின்றி மூன்று பெண்களும் கடந்த எட்டு வருடங்களாக எத்தனை துன்பப்பட்டனர் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பணக்கஷ்டம், மனக்கஷ்டத்தையும் தாண்டி சில மனித மிருகங்களிடமிருந்தும் தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டியதாகப் போயிற்று. அதனாலே சுதியை ஒருவர் மட்டுமே வசிக்கும் வீட்டிற்கு வேலைக்கு அனுப்ப சௌம்யாவிற்கும் சந்திராவிற்கும் விருப்பமற்றுப் போனது. ஆனால் அவள் சாதித்திருந்தாள். அவர்களைப் பேசவிடாது செய்தவள், மறுநாள் காலை ஐந்தரைக்கே எழுந்தாள்.
எப்போதும் ஆறுமணிக்கு எழுவாள். இன்று விரைவாய் எழுந்தது கண்ணெல்லாம் எரிச்சல். குளித்து முடித்தும் கூட விழிகள் உறக்கத்திற்குக் கெஞ்ச, உறங்கும் அண்ணன் குழந்தைகளைக் கொஞ்சி அவர்களை நினைத்து உறக்கத்தை விரட்டியடித்தாள்.
சந்திரா எப்போதும் எட்டு மணிக்குத்தான் மதிய உணவை சமைத்து முடிப்பார். இன்றைக்கு இவள் விரைவாய் கிளம்ப, அவரும் எழுந்து அறக்கபறக்க சமைத்தார். காலை உணவையும் மதிய உணவையும் தனித்தனி டப்பாவில் அடைத்துக்கொண்டு கிளம்பி நின்றாள் பெண்.
சந்திரா இன்னுமே முகம் தெளியாதிருந்தார். வயசுப் பெண்ணை அங்கே அனுப்புவதில் அவருக்கு நெருடலும் பயமும் ஒருங்கே தோன்றிற்று.
“போகணுமா சுதி. இதெல்லாம் ரிஸ்க் டி!” சௌம்யா கேட்க, “ப்ம்ச்... அப்போ பக்கத்து வீட்டக்கா இருபது வருஷமா ரிஸ்க் எடுக்குறாங்களா அண்ணி?” எனக் கேலியாய் கேட்டுவிட்டு இவள் அகல, அவர்கள் பெருமூச்சு விட்டனர்.
அதிகாலை என்பதால் போக்குவரத்து நெரிசல் இல்லை. இருபது நிமிடத்திற்கும் குறைவாக சுதி அடுக்குமாடிக் கட்டிடத்தை அடைந்தாள். அவனது வீட்டு எண், எந்த தளம் என எல்லாவற்றையும் அலைபேசியில் ஒருமுறை பார்த்துவிட்டு மின்தூக்கியில் சென்று இறங்கினாள்.
“அண்ணி, ரீச்சிட்...” என சௌம்யாவிற்கு ஒரு குறுஞ்செய்தியைத் தட்டிவிட்ட சுதி அழைப்பு மணியை அழுத்த, நிவின் வந்து கதவைத் திறந்தான். அவள் வருகிறேன் என்று உரைத்திருந்தாலும் வருவாளோ? மாட்டாளோ என்ற சந்தேகத்தில்தான் இருந்தான் அவன். ஆனாலும் சுதி குறிப்பிட்ட நேரத்திற்கு சரியாய் வந்தாள். கடிகாரம் ஏழு மணி எனக் காண்பித்தது.
“கெட் இன்...” என அவன் வழிவிட, இவள் தலையை அசைத்து உள்ளே வந்தாள். நல்ல விஸ்தாரமான கூடம். அவர்கள் வீடே இதில் அடங்கிவிடும். கூடத்தின் நடுவே நீள்விருக்கையும் தணிவு மேஜையும் இருந்தன. நிவின் கதவைப் பாதி திறந்தே வைத்தான். முன் வந்த இரண்டு பெண்மணிகளும் வயதானவர்கள் என்பதால் அவனுக்குப் பெரிதாய் தெரியவில்லை. ஆனால் சுதி திருமணமாகத இளம் யுவதி என்பதால் கதவை அவன் தாழ் போடவில்லை. என்ன செய்வது எனத் தெரியாது கூடத்தில் நடுவே நின்றவாறு அவன் முகத்தைப் பார்த்தாள் பெண். அப்படியே வீட்டையும் ஒருமுறை கண்களால் அளந்தாள்.
“கிட்சன் அங்க இருக்கு சுதிரமாலா...” என்றவன் முன்னே நடக்க, அவள் பின்னே சென்றாள். கொஞ்சம் சுத்தமில்லாமல்தான் இருந்தது. அவனுக்கு கை சரியில்லாததால் இப்படி இருக்கக் கூடுமென எண்ணினாள் பெண்.
“வெஜிடபிள்ஸ் ப்ரிட்ஜ்ல இருக்கு. மார்னிங்க டிபன் அண்ட் லஞ்ச்க்கு ரைஸ் வச்சிடுங்க!” என்றான்.
“என்ன குக் பண்ணட்டும் சார். சொல்லுங்க!” என அவள் வினவ, நிவினுக்கு சட்டென எதுவுமே தோன்றவில்லை.
“சிம்பிளா இட்லி வித் சட்னி!” என அவன் நகர, இவள் குளிர்சாதனப் பெட்டியை திறந்து பார்த்தாள். நேற்று இரவு என்னென்ன சமையல் பதார்த்தங்கள் உள்ளன, ஒவ்வொரு நாள் காலைக்கும் என்ன சமைக்கலாம் என மனதிலே யோசித்து வைத்திருந்தாள்.
இட்லி மாவைத் தேடி தோற்றக் கண்களுக்கு அவை அகப்படவில்லை. நொடியில் சிந்தனை, ‘இன்ஸ்டன்ட் இட்லி மிக்ஸ்!’ எனக் கூற அவன் அதை வாங்கி வந்ததும் நினைவை நிறைத்தது. ஒருமுறை எது எது எங்கே இருக்கிறது என எடுத்துப் பார்த்துவிட்டு பாலைக் கொதிக்க வைத்து அவனுக்கு குளம்பியைக் கலக்கினாள்.
நிவின் கூடத்திலே தான் அமர்ந்திருந்தான். தொலைக்காட்சியில் பிபிசி ஆங்கிலத்தில் செய்திகள் ஓடிக் கொண்டிருக்க, அதில் ஒரு கண்ணும் அலைபேசியில் ஒரு கண்ணுமாய் இருந்தான்.
அவள் குவளையுடன் வர, “நான் மார்னிங் சிக்ஸ்க்கே எழுந்து காபி குடிச்சிட்டேன் சுதிரமாலா. நாளைல இருந்து காஃபி வேண்டாம். இப்போ நீங்க ப்ரிபேர் பண்ணதால, ஐ வில் ட்ரிங்...” என அவன் எடுத்துக் கொள்ள, தலையை அசைத்தவள் மாவில் தண்ணீரைக் கலந்து இட்லியை ஊற்றி அடுப்பில் ஏற்றினாள்.
நிலக்கடலை சட்னி அவளுக்கு விருப்பமான ஒன்று. சந்திரா சட்னி அரைத்தால் வீட்டில் அனைவரும் இரண்டு இட்லிகள் அதிகமாய் உண்பார்கள். அதனாலே அவரிடம் எப்படி செய்வதென கேட்டு, சில முறையும் சுதி முயன்றிருக்கிறாள். பரவாயில்லை என்றவாறு வந்திருந்தாலும், சந்திராவின் கை பக்குவம் வரவில்லை. இன்றைக்கு நிவினுக்கும் நிலக்கடலையே சட்னி அரைத்துவிட்டு நேரத்தைப் பார்த்தாள்.
ஏழு நாற்பத்தைந்தாகிவிட, அரிசியைக் காமைக்கலத்தில் ஏற்றி விசிலை சொருகியவள் காய்கறி குருமாவை வைத்துவிட்டு முட்டைகோஸையும் கேரட்டையும் நறுக்கிப் பொரியல் செய்து முடித்தாள். சமைக்கும் போதே பயன்படுத்திய பாத்திரங்களைக் கழுவி வைத்துவிட்டாள். தனியே செய்ய வேண்டியிராதென அப்போதே கழுவி கழுவி கவிழ்த்தினாள். அடுப்பில் பொரியலும் குருமாவும் இருக்க, துடப்பத்தைக் கையிலெடுத்தாள். விறுவிறுவென ஒன்றுக்கு இரண்டு முறை ஒவ்வொரு இடத்தையும் கூட்டினாள்.
“என் ரூம் க்ளீன் பண்ண வேணாம். அங்க எதுனாலும் நானே பார்த்துக்கிறேன் சுதிரமாலா!” என அவன் கூற, தலையை அசைத்தவள் வீட்டை சுத்தம் செய்து முடித்தாள்.
விசில் வந்ததும் குருமாவை இறக்கி சிறிய பாத்திரத்திற்கு மாற்றி காமைக் கலத்தை கழுவினாள். அப்படியே ஏற்கனேவே சமையல் மேடையில் கவிழ்த்திய பாத்திரத்தை அங்கிருந்த துணி கொண்டு துடைத்து அதற்குரிய கூடையில் வைத்தாள். பொரியல் வெந்து முடிய, அந்தப் பாத்திரத்தையும் கழுவி முடித்திருந்தாள். எல்லா வேலையும் முடித்தவள் ஈரமாய் இருந்தக் கையைத் துப்பட்டாவில் துடைத்தாள்.
தொண்டை வரண்டிருந்தது போல. தன் கைப் பையில் வைத்திருந்த தண்ணீர் பொத்தலை எடுத்து வாயில் சரித்தாள். உலர்ந்த தொண்டையை நனைத்துவிட்டு அவன் முன்னே சென்று நின்றாள்.
“துணியை நாளைக்கு மெஷின்ல போட்டு எடுக்குறேன் சார். இப்போ எனக்கு டைமாச்சு...” என இவள் தயக்கமாய்க் கூற, “நோ இஷ்ஷூஸ். நீங்க கிளம்புங்க. வீக்லி ட்வைஸ் ட்ரெஸ் வாஷ் பண்ணா போதும்!” என அவன் கூற, “ஓகே சார்...” எனத் தலையாட்டலுடன் கைப்பையை எடுத்துக் கொண்டு விடை பெற்றாள்.
நேரம் எட்டு நாற்பத்தைந்தை கடந்துவிட காலை உணவை உண்ண முடியாது என அவளுக்குப் புரிந்தது. முதல்நாள் என்பதால் அவளால் நேரத்தை சரிவர உபயோகிக்க முடியவில்லை. நாளை எந்த நேரத்தில் என்னென்ன செய்ய வேண்டுமென இப்போதே மனதில் உருப்போட்டவாறு வணிக வளாகத்தை அடைந்தாள். பொத்தலில் மீதமிருந்த தண்ணீரையும் உள்ளே சரித்துவிட்டு பையை அவளுக்குரிய பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்துப் பூட்டிவிட்டு சீருடையை எடுத்து சுடிதாருக்கு மேலே அணிந்து கொண்டாள்.
இவள் உள்ளே நுழைய, விவேகாவும் வந்துவிட்டாள். காலை நேரம் பரபரப்பாய் கழிந்தது. தேநீர் இடைவேளை வந்ததும் சுதி காலையில் உண்ணாத உணவை எடுத்து பத்து நிமிடத்தில் உண்டு முடித்தாள். பசி அடங்கியிருந்தது. ஆனாலும் உண்ணாது உணவை வீட்டிற்கு எடுத்துச் சென்றால், இந்த ஒன்றைக் காரணம் காண்பித்தே தாயும் அண்ணியும் அவளை வேலைக்கு செல்ல வேண்டாமென நிறுத்தி விடுவார்கள். உணவை கீழே கொட்ட அவளுக்கு மனம் வராது. இந்த மூன்று வேலை உணவிற்காகத் தானே ஓடுகிறோம் என்ற எண்ணம் அவளிடம் நிரம்ப உண்டு. அதனாலே உணவை வீணடிக்க மாட்டாள்.
“மெதுவா சாப்பிடு டி!” என தோழியை விவேகா அதட்ட, சுதி புன்னகையுடன் உண்டு முடித்தாள்.
“ஏன்டி... காலைல ரொம்ப டைமாகிடுச்சா... எடுத்துட்டு வந்து சாப்பிட்ற?” அவள் வினவ, சுதி தயங்கினாள். இப்படி அவள் வீட்டு வேலைக்குச் செல்வது தெரிந்தால் தோழி அவளைத் திட்டி தீர்த்துவிடுவாளே என எண்ணம் தோற்றிற்று.
“ஹம்ம்... விவே, நான் ஒரு வீட்டுல வேலைக்கு சேர்ந்திருக்கேன்!” சத்தமில்லாது மெதுவாய் உரைத்த சுதியை இவள் யோசனையாகப் பார்த்தாள்.
“என்ன... என்ன வேலை டி?” அவள் நெற்றியை சுருக்க, “ஹம்ம்... அது அன்னைக்கு ஆக்ஸிடென்டாகி நான் காப்பாத்துனேன் இல்ல, அந்த சாரு வீட்ல குக்கிங் வேலைக்குச் சேர்ந்திருக்கேன்!” எனத் தயங்கியபடியே நடந்ததை விவரித்தாள்.
அவள் கூறியதைக் கேட்ட விவேகாவின் முகம் மாறியது.
“அறிவிருக்கா டி உனக்கு? இப்போ அங்க வேலைக்குப் போகணும்னு என்ன அவசியம். காலைல ஒன்பது மணில இருந்து எட்டு வரை இங்க நின்னே சாகுறோம். அதுக்கே முதுகு, கை, காலுன்னு பெண்டு கழண்டுடுது. இதுல இந்த தொல்லையெல்லாம் உனக்கு அவசியமா?” என அவள் கடுப்புடன் கேட்க, சுதி அமைதியாய் இருந்தாள்.
“நான் உன்கிட்டதான் கேட்குறேன். வாயைத் தொறந்து சொல்லு சுதி. ஏற்கனவே சண்டே கூட லீவ் போடாம வேலைக்கு வர்ற. இதுல காலைல வீட்டு வேலை வேற? ஒன்னைப் புரிஞ்சுக்கோ சுதி. இந்த உடம்புக்கும் இத்தூனூண்டு வயித்துக்குத்தான் ஓட்றோம். இதுல அந்த உடம்பையே கவனிக்காம விட்டா, எப்படி டி ஓட்றது. சுவர் இருந்தாதான் சித்திரம் வரைய முடியும். நீ நல்லா இருந்தாதான் இங்கேயாவது ஒழுங்கா வேலை பார்க்க முடியும்!” என்றாள் அவளின் மீது அக்கறையும் கோபமுமாய். தோழி கூறியவை எல்லாம் சுதிக்குப் புரியாமல் இல்லை. இருந்தும் வீட்டுச் சூழ்நிலை அவளைப் பேச விடாது செய்தது.
“பணக் கஷ்டம் அதிகமா இருக்கு டி!” சுதி கூற,
“யாருக்குத்தான் பணக்கஷடம் இல்ல? பதினைஞ்சாயிரம் வாக்குற நமக்கும் கஷ்டம். ஒரு லட்சம் வாங்குறவனுக்கும் கஷ்டம் இருக்கத்தான் செய்யும். சம்பளத்துக்கு ஏத்த மாதிரி செலவு பண்றதுதான் மனுஷனோட குணம். அதனால இதெல்லாம் காரணம் காட்டாதே. எங்க வீட்ல கூடதான் ஆயிரம் பஞ்சாயத்து. நான் குடுக்குற காசுலதான் தங்கணும், திங்கணும், என் கல்யாணத்துக்கு நகையும் சேர்க்கணும். முடியுமான்னு யோசிச்சு பாரு. வாய்க்கும் கைக்கும் பத்தாமதான் ஓடிட்டு இருக்கோம். அதனால நீ முதல்ல இந்த வேலையை விடு!” என்றாள் அதட்டலாய்.
“பாவம் டி அந்த சார்... ஏற்கனவே ரெண்டு பேர் வந்து இப்போ மூனாவதா நான் போய் சேர்ந்திருக்கேன். நானும் பாதியிலயே நின்னா நல்லா இருக்குமா?”
“டி... அவனுக்கு எதுக்கு நீ பாவம் பார்க்குற. அவன் கொடுக்குற காசுக்கு நூறு பேர் வேலைக்கு வருவாங்க. அவனுக்கு நீ பாவம் பார்க்குற நிலையில இல்ல. நம்மதான் பாவம்ன்ற நிலைமைல இருக்கோம். அதைப் புரிஞ்சுக்கோ...” என கடுகடுத்தவள், “ஆமா... அவனுக்கு வேற யாருமே வேலைக்கு கிடைக்கலையா என்ன? எதுக்கு நம்ப உசுரை வாங்குறான். ஏற்கனவே இங்க சாகுறது பத்தலைன்னு அங்கப் போய் சாகணுமா? அவனுக்கெல்லாம் மனசாட்சியே இருக்காதா? பணக்காரன்னா, ஈவு இரக்கமிருக்காதா? எப்படி டி உன்னை வேலைக்கு கூப்பிடலாம் அவன்?” எனக் கோபமாய் பல்லை நறநறத்தாள்.
“சுதிரமாலா, விவேகா... ப்ரேக் ஓவர். உள்ள வாங்க, சார் பார்த்தா திட்டுவாரு...” சக ஊழியர் ஒருவர் கூற, விவேகா விறுவிறுவென முன்னே நடந்தாள்.
“பணக்காரன்ற திமிர் அவனுங்களுக்கு. மனுஷியா மாடா இவ? அவனுங்க சொகுசா இருக்கணும். இருக்கவன் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை, கவலைப்பட மாட்டாங்க. அவனுக்கு வலிக்கிற மாதிரி தானே எங்களுக்கும்னு யோசிக்க மாட்டானுங்க. பார்க்க நல்லவனா தெரியுறானேன்னு ஏமாந்துட்டேன்...” நிவினைத் தாளித்துக் கொண்டே அவள் நடக்க, சுதி வாயையே திறக்கவில்லை. அவன் அழைத்தான் என்றெண்ணிய விவேகா நிவினுக்கே இவ்வளவு வசவுகளைப் பொழிகிறாள். இவள் தான் கேட்டால் என்று தெரிந்தால் இரண்டு மடங்கு திட்டுவாங்க வேண்டி வரும் என வார்த்தைகளைப் தொண்டைக் குழியிலே புதைத்துக் கொண்டாள் சுதி.
நிவின் அப்போதுதான் காலை உணவை உண்டு முடித்திருந்தான். உணவு ஒன்றும் அத்தனை சுவையாய் இல்லை. பரவாயில்லை என்ற வகையில்தான் இருந்தது. ஆனாலும் சுதியின் வேலை அத்தனை நேர்த்தியாய் இருக்க, இவனுக்கு வெகுவாய் நிம்மதி பரவியது.
அவன் குறிப்பிடவில்லை எனினும் சமையலையைறை பளிச்சென வைத்துவிட்டுச் சென்றாள். எங்கேயும் உணவு சிந்தவில்லை. பாத்திரம் விளக்குமிடம் கூட நேர்த்தியாய் இருக்க, வீட்டிலும் ஒரு குப்பையோ தூசியோ இல்லை. அதனாலே உணவைக் கணக்கிலெடுக்காமல் அவளை வேலைக்கு அமர்த்திக் கொள்ளலாம் என முடிவெடுத்திருந்தான் ஆடவன்.
சுதி மதியம் உணவு உண்ணும்போது தோழியை சமாதானம் செய்ய, விவேகா செவிசாய்க்கவில்லை. தன் பிடியிலே நிற்க, அவளால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது. அவளே சரியாகிவிடுவாள் என இவள் விட்டுவிட்டாள். இருந்தும் தொணதொணவென்ற தோழியின் பேச்சைக் கொஞ்சம் தேடினாள்.
மாலை வீட்டிற்கு செல்லும்போது நிவின் நினைவுதான். சுதி அப்படியொன்றும் பிரமாதமாய் சமைக்க மாட்டாள். வயிறு வாடாத அளவில் ஒருவாறு சமைப்பாள். அவனுக்குத் தன் சமையல் பிடித்திருக்குமோ என்னவோ என எண்ணியவள் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு புலனத்தில், “சாப்பாடு ஓகேவா சார்? எதுவும் சேஞ்ச் பண்ணணும்னா சொல்லுங்க!” என அனுப்பிவிட்டு வேடிக்கைப் பார்க்கத் தொடங்க, “நாட் பேட் சுதிரமாலா... கீப் இட் அப்!” என்றதோடு அவன் முடித்துக் கொள்ள, இவள் கட்டைவிரலை உயர்த்தும் பொம்மையை அனுப்பிவிட்டு வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினாள். வேலைக் கொஞ்சம் கஷ்டமாய் இருந்தாலும் பழகிவிடும், பழக வேண்டும் என எண்ணிக்கொண்டு வீட்டை அடைந்தாள்.
தொடரும்...
நாளைக்கு சண்டே. அப்டேட் வேணுமான்னு கமெண்ட்ல சொல்லுங்க டியர்ஸ். எத்தனைப் பேர் கேட்குறீங்கன்னுப் பொறுத்து போட்றேன். இல்லைன்னா சோம்பேறியா இருந்துடுவேன்