• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,028
Reaction score
2,912
Points
113
பொழுது – 7 💖
சுதிரமாலா அந்த வார ஞாயிற்றுக்கிழமை விடுப்பில் ஓரளவிற்கு உடலையும் மனதையும் தேற்றினாள். நீண்ட நாட்கள் கழித்து எட்டு மணிவரை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூக்கினாள். பிள்ளைகளுடன் அளவளாவினாள். சந்திரா கையால் சமைத்த அசைவ உணவுகளை ஆசையாய் உண்டாள். மனம் சமன்பட்டிருந்தது. இப்படித்தான் வாழ்க்கை இருக்குமென்ற எண்ணத்தை எப்போதுமே மனதில் ஆழப் பதிந்து கொண்டாள்.
அடுத்த மாதம் துவங்கியிருந்தது. வேலை வீடு என அவளுக்கு நாட்கள் நகரத் தொடங்கின. இடையில் விவேகாவிற்கு வீட்டில் மணமகன் தேடத் துவங்கியிருந்தனர். அவ்வப்போது பெண் பார்க்க வருகிறார்கள் என அவள் விடுப்பெடுத்தாள். அவளில்லாத நாட்கள் எல்லாம் வெறுமையாய் சென்றன. திருமணத்திற்குப் பிறகு வேலைக்கு வர மாட்டேன் என இப்போதே அலட்டிக் கொள்ள, சுதிக்கு சிரிப்பு வந்தது.
“பின்ன என்ன சுதி... நம்ம என்ன மிஷினா? இங்க அம்மா வீட்ல அவங்க சமைச்சுப் போட்றாங்க. வீட்ல வேலையைப் பார்த்துக்கவும், நமக்கு வேலைக்கு போறது பெருசா தெரியலை. இதுவே கல்யாணம் ஆகிட்டா, அங்கப் போய் வீட்ல இருக்கதை பார்க்கவே நேரம் சரியா இருக்கும். இதுல எங்குட்டு வெளிய வேலை பார்க்க...” என அலுத்தவள், “மோர் ஓவர் எனக்கு இந்த மாதிரி வேலைக்கு வரவே இஷ்டம் இல்ல டி சுதி. மேரேஜ்க்குப் பிறகு என் புருஷனை ஆசை ஆசையா பார்த்துக்கணும். அவரும் என் மேல அக்கறையா இருக்கணும். அவர் கொஞ்சம் பரவாயில்லாம சம்பாரிச்சாலே போதும். குடும்பத்தை இருக்க காசுல ஓட்ட வேண்டியதுதான். அப்புறம் குழந்தை பொறந்துச்சுன்னா, அது பின்னாடியே காலம் ஓடிடும் டி!” என்றவளின் முகம் மலர்ந்திருந்தது. திருமணத்தைவிட இனிமேல் இது போல எங்கும் வேலை பார்க்க தேவையில்லை என்ற ஒரு வார்த்தையே அவளுக்கு அத்தனை மகிழ்வை கொடுத்தது போல. சுதி அவளை ஆதுரமாகப் பார்த்தாள். விவேகாவிற்கும் அவளுக்கும் இந்த எண்ணத்தில் ஏகப் பொருத்தம். இரண்டு வீட்டு சூழ்நிலையும் ஓரளவிற்கு ஒன்றுதான். என்ன அவளுக்குத் தந்தை, தமையன் உண்டு. தந்தைக்கு வயதாகிவிட்டதால் அவரால் முடிந்ததை வீட்டிற்கு செய்கிறார். பொறுப்பாய் அனைத்தையும் எடுத்து செய்ய வேண்டிய மகன் வீட்டில் கஷ்டப்பட்டு படிக்க வைத்தும் ஒழுங்காக கல்லூரி முடிக்காது, மது, மாது என கெட்டு சீரழிய, வேறு வழியின்றி இவள் வீட்டு சுமையை ஏற்றிருந்தாள்.
“என்னைக்கு வேலையைவிட்டுப் போறேனோ அன்னைக்கு இந்த காண்டாமிருகத்துக்கு இருக்கு டி. ரோட்ல போகும்போது கல்லைவிட்டு எறிஞ்சிட்டு தெரியாத மாதிரி ஓடிடணும் டி...” என அவள் தீவிரமாய்க் கூற, சுதிக்கு சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்தது.
“அந்தாளு கண்டுபிடிச்சுட்டா, என்ன பண்ணுவ டி?” சுதி கேட்க, “ஹக்கும்... கண்டுபிடிச்சா பிடிச்சுட்டுப் போறான் டி. நான் அவனை என் அவரைவிட்டு சண்டை போட வைப்பேன்!” என அவள் வெட்கப்பட, இவளுக்கு இன்னுமே புன்னகை விரிந்தது.
“அந்த அவர் யாரு விவே?”
“ப்ம்ச்... அதான் டி என் ப்யூச்சர் வீட்டுக்காரர், புருஷர், பெட்டர் ஹாஃப், லைஃப் பாட்னர், மை காம்ரேட்!” என அவள் அடுக்க, “டி விவே... போதும் டி. நீ பேசுறது யார் காதுலயும் விழப் போகுது!” என அவளின் தோளில் தட்டிய சுதி, “சீக்கிரம் நீ நினைச்ச மாதிரி நல்ல பையனா கல்யாணம் பண்ணிக்கோ டி...” என்றாள் மனமுவந்து.
அவளை நிமிர்ந்து பார்த்த விவேகா, “எனக்கு மட்டுமில்ல சுதி. உனக்கும்தான். இருபத்தைஞ்சு வயசுல என்கூட ஸ்கூல் படிச்ச எல்லாரோட புள்ளைகளும் ஸ்கூல் போறாங்க. நீயும் நானும் மட்டும்தான் சிங்கிளா இருக்கோம். நீயும் ஒரு நல்ல பையனா பாரு. வீட்ல என்ன சொல்றாங்க?” எனக் கேட்க, சுதியிடம் பதிலில்லை.
வீடு இப்போதிருக்கும் நிலையில் அவள் திருமணம் பற்றிப் பேச்செடுப்பது அத்தனை உவப்பாய் அவளுக்கே தோன்றவில்லை. முதலில் சௌம்யா ஒரு நல்ல வேலையில் அமர வேண்டும். பிறகு அவர்களே இந்தப் பேச்சைத் தொடங்கக் கூடும். சுதி மறுப்பேதும் தெரிவிக்கப் போவதில்லை. அவளுக்குமே வேலைக்குச் செல்லாது வீட்டிலே சுகவாசியாய் இருக்க வேண்டும் என்றொரு ஆசை உண்டு. கணவனின் சம்பாத்தியத்தில் கொஞ்ச நாள் வாழ வேண்டும்‌. போதுமென உடல் கூறுமளவு ஓய்வெடுத்துக்கொண்டு சிறியதாய் ஏதேனும் தொழில் தொடங்க வேண்டும் என்றொரு எண்ணம் எப்போதும் அவளிடம் இருக்கும். இங்கிருந்து வேலையை விட்டப் பிறகு நிச்சயமாக மீண்டும் இதுபோல எங்கேயும் பணிக்கு செல்லும் எண்ணம் துளியும் இல்லை அவளுக்கு. வேறு எதாவது செய்ய வேண்டும் என அவ்வப்போது எண்ணிக் கொள்வாள்.
“என்ன டி... ஏன் இப்படி யோசிக்கிற? இப்படியே சர்ச்சுக்கு சிஸ்டரா போற எண்ணமா?” என விவேகா கேலி செய்ய, சுதி சிரித்தாள்.
விவேகாவின் அலைபேசி இசைத்தது. எடுத்துப் பேசினாள்.
“சரிம்மா... ஹம்ம்!” என இரண்டு நிமிடங்கள் பேசிவிட்டு வைத்தாள்.
“என்ன விவே?” இவள் கேட்க, அவளிடம் சலிப்பு‌.
“ப்ம்ச்... என்ன என்னடி... ஒரு வரன் வந்திருக்காம். சண்டே நல்ல நாள் இல்லையாம். வெள்ளிக்கிழமை தான் அவனுங்க வருவானுங்களாம். அம்மா லீவ் கேக்க சொன்னாங்க. ஹம்ம், இவனுங்க நல்ல நாள்னு நம்ம உசுரை எடுப்பானுங்க. எரிச்சலாவுது. இப்போ போய் நான் லீவு கேட்டா, அந்தாளு நாய் மாதிரி குரைப்பான். நல்ல ஜாலியான மைண்ட் செட்டை கெடுத்துடுவான்!” என அவள் பெருமூச்சுவிட்டாள்.
“ப்ம்ச்... விடு விவே. நீ போய் கேளு. ரெண்டு நாளைக்கு முன்னாடி கேட்கணும்னுதானே ரூல்ஸ். நீ மூனு நாள் முன்னாடி கேட்குற. அதெல்லாம் தருவாரு!” சுதி ஆறுதலாய் பேசினாள்.
“இந்த மாசம் ஏற்கனவே ஒருநாள் லீவு எடுத்திட்டேன். மறுபடியும் கேட்கணுமான்னு செம்ம கடுப்பு டி. அதுவும் இல்லாம பொண்ணு பார்க்குறேன்ற பேர்ல டென்ஷன் பண்றாங்க டி. ஃபோட்டோ பார்த்து பிடிக்கலைன்னா, சொல்லிட்டு போக வேண்டியதுதானே. வேலை மெனக்கெட்டு லீவ் போட்டு இவனுங்க முன்னாடி பஜ்ஜி, செஜ்ஜின்னு அலங்கரிச்சு நின்னா, பொண்ணு கருப்பா இருக்கு, நெட்டை, குட்டைன்னு டென்ஷன் பண்றாங்க. நான் கருப்பா இருக்கேன்னு தெரியுதில்ல. அப்புறம் என்னத்துக்கு வீடு வரை வர்றாங்க. இவனை யாரு டி வெள்ளையா பொறக்க சொன்னது?” என அவள் குரல் கொஞ்சம் வருத்தத்திலும் ஆதங்கத்திலும் வந்து விழுந்தது. ஒவ்வொரு முறையும் ஆசை ஆசையாய் அவள் அலங்கரித்துச் சென்று நிற்க, ஏதேனும் ஒரு குறை கூறி வேண்டாம் எனத் தட்டி விடுகிறார்களே என மனதில் கடுப்புதான் அவளுக்கு.
“விவேகா... விடு டி... இன்னும் உனக்கானவங்க வரலை டி. அப்படி அவங்களை நீ மீட் பண்றப்போ கருப்பா, கலரான்னு எல்லா மனசு பார்க்காது டி. எப்படியும் அவளுக்கு உன்னைப் பிடிக்கும், உனக்கும்தான். அதெல்லாம் கடவுள் போட்ட முடிச்சு. அதை யாராலும் மாத்த முடியாது டி. மேஜிக் மாதிரி ஒரே மாசத்துல கல்யாணம் முடிஞ்சிடும் பாரு!” என்றாள் அவள் சிரிப்புடன்.
“என்ன மேஜிக்கோ... என்னை அவனுங்க ஜோக்கராக்காம இருந்தா சரி!” என்றவள் உள்ளே செல்ல, சுதியும் நகர்ந்தாள். தேநீர் இடைவேளை முடிந்திருந்தது.
“நான் போய் அந்தாளுகிட்டே திட்டு வாங்கிட்டு வரேன் டி. நீ போய் வேலையைப் பாரு!” என வைகுண்டத்தை நோக்கிச் சென்றாள் விவேகா. அவள் கூறியது போலவே வார்த்தைகளால் அர்ச்சித்து, இதற்கு மேல் விடுப்புக் கேட்டால் வேலைக்கு வரத் தேவையில்லை என்று திட்டி, ஒருவழியாய் வெள்ளிக்கிழமை அவளுக்கு விடுப்பை வழங்கிவிட்டார். பத்து நிமிடங்கள் அவர் பேசுவதையெல்லாம் பொறுமையாய் கேட்டு, முகம் மாறாது வெளியே வந்த விவேகாவிற்கு சலிப்பானது.
‘இந்தாளுக்கு எல்லாம் வாயே வலிக்காது போல. சரியான திமிர் பிடிச்சவன்!’ என அவள் மனதிலே புலம்பியடி வேலையைப் பார்க்க, சுதி இவளைத்தான் கவனித்தாள். அவளது பார்வை உணர்ந்தவள், கண்ளாலே விடுப்புக் கொடுத்துவிட்டார் என விவேகா சைகை செய்ய, அவளிடம் நிம்மதி பெருமூச்சு.
“அக்ஷா... உனக்கு க்ளினிக் இருக்குல்ல. நீ கிளம்பு... நானே ஷாப்பிங் பண்ணிக்கிறேன்!” நிவின் இத்தோடு நான்கு முறை கூறியும் அதற்கு செவிமடுக்காது மீனாட்சி வணிக வளாகத்தில் காய்கறிகள் விற்கும் பகுதியில் என்னென்ன வேண்டும் என்றுப் பார்த்து கூடையில் எடுத்து வைத்தாள். நிவின் எதுவும் பேசாது சுற்றியிருப்பவர்களை வெறித்தான்.
இப்போதெல்லாம் வாரத்தில் பாதி நாட்கள் அக்ஷா இங்குதான் வாசம் செய்கிறாள். நிவின் பேசும்போது எதேச்சையாக வேலைக்காரப் பெண்மணியின் சமையல் நன்றாய் இல்லையென நந்தனாவிடம் தெரிவித்திருக்க, அது இவளுக்கும் கேட்டுவிட்டது போல. அதிலிருந்தே காலையில் விரைவாய் வந்து இவனுக்காக எதாவது சமைத்துக் கொடுத்தாள். வேலைக்கார அம்மாவும் இதுதான் காரணமென்று தாமதமாய் வரப் பழகிவிட்டார்.‌
அப்படியே விரைவாய் வந்தாலும் கடமைக்கென எதையோ சமைத்து, வேலைகளெல்லாம் அரக்கப் பறக்க அரைகுறையாய் முடித்துவிட்டு சென்றார். இவனுக்கு அத்தனை எரிச்சல் அவர் மீது. அவரை வேண்டாம் என இவன் நிறுத்திவிட்டால், அக்ஷா தன் பொருட்களோடு இங்கே வந்து குடி புகுக கூடத் தயக்கமாட்டாள் என்பதை உணர்ந்தவனுக்கு எந்தப் பக்கம் செல்வதென சத்தியமாய் தெரியவில்லை. இவளையும் கடிந்து பேச முடியாது, அவரிடமும் முகத்தைக் காண்பிக்க முடியாது நிவின் அல்லாடிப் போனான்.
அக்ஷா தான் அதிகம் சோதித்தாள். அவளுக்கு எந்த வகையிலும் இவன் நம்பிக்கை கொடுக்க கூடாதென உருப்போட்டிருக்க, அவையெல்லாம் இப்போது செல்லாகாசாகிப் போயின. அதிக உரிமை எடுத்தாள் வேண்டாம் எனத் தடுத்தால், இரண்டு நாட்கள் சோகமே உருவாய் வலம் வந்தாள். இவன் ஏதோ தவறிழைப்பது போல குற்றவுணர்வை பொங்கச் செய்தாள். நிவினுக்கு சத்தியமாய் முடியவில்லை.
சனி, ஞாயிறு மகேந்திரா வந்து செல்ல, அந்த இரண்டு நாட்கள்தான் அவனுக்கு நிம்மதி கிட்டியது. அதுவும் ஒவ்வொரு வாரமும் தந்தையை அலைய வேண்டாம் என இவன் கூறிவிட்டான். அதனாலே மாதத்திற்கு ஒருமுறை வந்து சென்றார்.
விபத்து நடந்து இரண்டு மாதங்கள் முடித்திருக்க, இவனும் இரு முறை அவரைச் சென்று சந்தித்து வந்திருந்தான். இன்னும் நான்கு மாதங்கள் கழித்துதான் கட்டைப் பிரிக்க வேண்டுமா என்று கூற முடியும் என்றுவிட்டார் அவர். ஒருவேளை எலும்பு இன்னும் ஒட்டாதிருந்தால், மேலும் சில மாதங்கள் கூட அவன் கட்டோடுதான் இருக்க வேண்டும் என அவர் கூறிவிட, இவன் சோர்ந்து போனான். கை சரியாகிவிட்டால் இந்த இரண்டு பெண்களிடமிருந்து தப்பித்து விடலாம் என அவன் எண்ணியிருக்க, அந்த நாள் வெகுதொலைவில் கண்ணுக்கு எட்டியவரை காணவில்லை. இருதலைக் கொள்ளி எறும்பாய் தவித்தவன், இன்றைக்கு காலையில்தான் நந்தனாவிற்கு அழைத்து கத்தியிருந்தான்.
“என்னகிட்ட சத்தம் போட்டா ஆச்சா டா? அவகிட்டே பேசு நீ. உனக்காக அவளையும் அவளுக்காக உன்னையும் என்னாலவிட்டுக் கொடுக்க முடியாது டா. நீயாச்சு அவளாச்சு!” என்றவள், “ஆனாலும் உனக்கு இவ்வளோ ஆகக் கூடாது நிவினு. அவ உன் மேல உண்மையா பாசம் வச்சிருக்க. ஷீ லவ்ஸ் யூ ட்ரூலி. பட், நீ அவளை ரொம்ப இக்னோர் பண்ற. அவ ஹேர்ட் ஆகுறா...” என்றாள் தோழிக்காகப் பார்த்து. ஒவ்வொரு முறையும் அக்ஷா நிவினைப் பற்றிப் பேசும்போது அவளது முகம் மலர்ந்து கிடக்கும். என்னவோ தெரியவில்லை இந்தப் பையன் மீது அவளுக்கு என்னப் பிடித்தமோ, பிரியமோ? அதையே பிடித்துத் தொங்குகிறாள் என நந்து வேதனைப்படுவாள்.
“அதுதான் நான் வேணாம்னு சொல்றேன் நந்து. அவ ஹேர்ட் ஆவான்னுதான் நான் பல்லைக் கடிச்சிட்டுப் பொறுமையா இருக்கேன். எனக்கு குக் பண்றதுக்காக அவ மார்னிங் ஷிப்டை கேன்சல் பண்ணிட்டு ஈவ்னிங் ஷிஃப்ட்ல வொர்க் பண்றா. எனக்கு ஒரு மாதிரி கில்ட்டா இருக்கு‌. அவ ஃபீலிங்க்ஸ்க்கு என்னால ரெஸ்பெக்ட் கொடுக்க முடியாது டி!” என்றான் தன்னிலையை விளக்கி.
“அதான் ஏன்?” நந்து கேள்வியாய் நிறுத்தினாள்.
“அவ எனக்கு ஃப்ரெண்ட் மட்டும்தான். என்னால அவளை வேற மாதிரி பார்க்க முடியலை!” இவன் எரிச்சலாய் உரைத்தான்.
“இதுவரைக்கும் பார்க்க முடியலை சரி. இனிமேல் ட்ரை பண்ணு. அக்ஷாவை விட யாராலும் உன்னை இந்தளவுக்குப் பார்த்துக்க முடியாது டா‌. தென் யுவர் விஷ்!” என அவள் அழைப்பைத் துண்டித்திருக்க, இவன் அலைபேசியை வெறித்தான். சில நிமிடங்களிலே அக்ஷா வந்துவிட, வேண்டாம் என வற்புறுத்தியும் இவனோடு கடைக்கு வந்திருந்தாள் பெண்.
“சுதிரமாலா... கீழே வெஜிடபிள்ஸ் வந்துருக்கு. மேல ஸ்டாக் இல்லாததை ஃபில்லப் பண்ணுங்க!” வைகுண்டம் சுதியை அழைத்துக் கூற, தலையை அசைத்தவள் மற்றொரு ஊழியரையும் அழைத்துக்கொண்டு சென்று தக்காளிகளை எடுத்து வந்தாள். அந்த டப்பா கொஞ்சம் கனமாக இருக்க, பெண்கள் இருவரும் கடினப்பட்டு தூக்கி வந்தனர்.
“மேடம்... ஒரு நிமிஷம், நாங்க ஃபில்லப் பண்ணிட்றோம்!” என சுதி அக்ஷாவிடம் கூற, அவள் கைகளைப் பின்னிழுத்துக் கொண்டாள். இருவரும் ஒருவரையொருவர் கவனிக்கவில்லை. சுதிக்கு அவளை நினைவும் இல்லை. ஆனால் மற்றவளுக்கு நினைவிருந்தது.
சுதி தக்காளியை கொட்டிவிட்டு அகல முனைய, அக்ஷா அவளைப் பார்த்துவிட்டாள். “ஹாய், இங்க தான் வொர்க் பண்றீங்களா நீங்க?” அவள் வினவ, சுதி அவளது முகத்தைக் கூர்ந்து பார்த்தாள். அன்றைக்கு அழுதப் பெண் என மனம் அடையாளம் காண்பிக்க, “ஆமா மேம்... இங்கதான் வேலை பார்க்குறேன்!” எனப் புன்னகைத்தாள். நிவின் வேறு எதையோ ஒற்றைக் கையில் சிரமப்பட்டு தூக்கி வர, “சார்... குடுங்க சார். நான் தூக்குறேன்...” என சுதி அவனிடமிருந்து வாங்கிக் கொண்டாள்.
“ஃபைவ் மினிட்ஸ் நிவின், நான் வெஜிடபிள்ஸ் வாங்கிட்றேன். நம்ப கிளம்பலாம்!” என அக்ஷா நகர, சுதிக்கு அவனருகே நிற்க வேண்டிய சூழ்நிலை. அவன் வேறு எதுவும் தேவையா என மூளையை அலசி எடுத்துக் கூடையில் போட்டான். சுதி அவனுடன் நடந்தாள். அவள் கைகளில்தான் கூடையிருந்தது. தள்ளும் வகை கூடைகள் இருந்தாலும் நிவின் அதை பெரும்பாலும் உபயோகிக்கவில்லை.
அந்த நிகழ்வு நடந்து முடிந்தப் பின் இருமுறை நிவின் இங்கு வந்திருந்தாலும் சுதி அவனை நேர்க்கொண்டு பார்க்கவில்லை. ஏனோ சங்கடமாய், அவமானமாய் இருந்தது அவளுக்கு. அவனுக்கும் புரிந்தது போல. அவளைக் காணவில்லை. பின்னர் இன்றைக்குத்தான் இருவரும் முகம் பார்த்தனர். சுதி ஓரளவிற்கு இயல்பிற்கு வந்துவிட்டாள். அதானலே பெரிதாய் எந்த சிந்தனையும் அவளிடமில்லை. சக வாடிக்கையாளர் இவன் எனப் புன்னகைத்தாள்.
ஒரு நொடி யோசித்த நிவின், “சுதிரமாலா, உங்களுக்கு குக் பண்ற யாரையும் தெரியுமா? குக்கிங் மெய்ட் வேணும்!” என்றான் அவன். சுதி அவனைக் கேள்வியாக நோக்கினாள்.
“என் வீட்ல குக் பண்ண ஆள் வேணும்...” என்றான். சுதிக்கு பக்கத்து வீட்டிலிருக்கும் அக்கா நினைவிற்கு வந்தார். இரண்டு நாட்கள் முன்புதான் வேலை பறிபோய்விட்டதென புலம்பியிருந்தார்.
“மூனு வேளையும் சமைக்கணுமா சார்? குக்கிங் மட்டுமா, இல்லை வேற எந்த வேலையும் இருக்குமா சார்?” என விபரம் கேட்டாள். நிவின் அனைத்தையும் கூறினான்.
“சம்பளம் எவ்வளோ தருவீங்க சார்?” என அவள் கேட்க, “எய்ட் தௌசண்ட்!” பதிலளித்தான்.
“சரிங்க சார்... என் பக்கத்து வீட்ல ஒரு அக்கா இருக்காங்க. அவங்களும் வேலை இல்லைன்னு சொன்னாங்க. நான் கேட்டுட்டு சொல்றேன்!”
“ஓகே சுதிரமாலா... என்னோட நம்பரை நோட் பண்ணிக்கோங்க. கேட்டுட்டு டீடெயில்ஸ் எனக்குப் பிங் பண்ணுங்க...”
“போன் லாக்கர்ல இருக்கு சார். இங்க அலவுட் இல்ல. என் நம்பர் சொல்றேன். நீங்க ஒரு மிஸ்ட் கால் கொடுங்க சார். நான் சேவ் பண்ணிக்கிறேன்!” என தனது இலக்கத்தை அவனிடம் பகிர்ந்தாள். அக்ஷா வரவும், இருவரும் இவளிடம் விடைபெற்று கிளம்பினர்.
இரவு வீட்டிற்கு செல்லும்போதும் அந்த அக்காவிடம் பேச வேண்டும் என்று நினைத்தாள். இரவு நேரத்தில் அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம். காலையில் வேலைக்கு கிளம்பும்போது போய் பேசிவிட்டு செல்லலாம் என்ற எண்ணத்தில் அதை தள்ளி வைத்தாள்.
மறுநாள் காலையில் இவள் துணியை உலர்த்தும் போது சரியாய் பக்கத்து வீட்டு அக்காவும் மாடிக்கு வந்தார். இப்போதே பேசிவிடலாம் என நினைத்தவள், “அக்கா... வேலை எதுவும் செட்டாச்சா கா?” என வினவினாள்.
“எங்க சுதி... ஒன்னும் கிடைக்கலை. தேடிட்டு இருக்கேன். உனக்கு எதுவும் தெரிஞ்சா சொல்லு சுதி. உன் மாமாவுக்கும் சரியா வேலை இல்ல!” அவர் வருத்தமாய்க் கூறினார்.
“அக்கா... காம்ப்ள்க்ஸ்க்கு ஒரு சார் வருவாரு. அவர் வீட்ல ஆளு வேணும்னு கேட்டாரு. ஒரு ஆள்தான், காலைக்கும் மதியத்துக்கும் சமைச்சு கொடுக்கணும். பாத்திரம் விளக்கி, வீட்டைப் பெருக்கணும். துணியை மெஷின்ல போட்டா போதும். உங்களுக்கு ஓகேன்னா, பாருங்க கா...” என்றாள். அவன் கூறிய மற்ற விவரத்தையும் இவள் குறிப்பிட, “கும்பிட போன தெய்வம் குறுக்க வந்த கணக்கா சொல்ற சுதி. நீ அந்த சார் வீட்டு அட்ரஸைக் குடு. நான் போய் பேசிக்கிறேன்!” என அவர் ஒப்புக்கொள்ள கீழே சென்ற சுதி நேற்றைக்கு வந்த தவறி அழைப்பிலிருந்து அவனது எண்ணை சேமித்து புலனத்தில் செய்தியை தட்டிவிட்டாள்.
“ஹாய் சார், அந்த அக்கா ஓகே சொல்லிட்டாங்க. உங்க வீட்டு அட்ரஸ் வேணும்!” என இவள் அனுப்பியிருக்க, “ஓகே சுதிர மாலா!” என வீட்டு முகவரியைப் பகிர்ந்திருந்தான். இவள் கட்டை விரலை உயர்த்தும் பொம்மையை அனுப்பி உரையாடலை நிறைவு செய்து அந்த அக்காவிடம் முகவரியைக் கொடுத்துவிட்டு, வேலைக்கு கிளம்பிவிட்டாள்.
அந்த வாரம் கழிந்திருந்தது. விவேகாவைப் பெண் பார்க்க வந்திருந்தவர்கள் இவள் படிக்கவில்லை என்று கூறி வேண்டாம் என மறுத்துவிட்டதாய் அவள் அன்றைக்கு முழுவதும் புலம்ப, சுதிதான் தோழியை தேற்றினாள். ஒருவாறாக அவள் தன்னைத் தேற்றிக் கொள்ள, இருவரும் வேலை முடிந்து பேருந்து நிலையம் வந்தனர்.
விவேகாவிற்கு பேருந்து வந்துவிட, அவள் முதலில் சென்றுவிட்டாள். இவள் நின்று கொண்டிருக்க, பக்கத்து வீட்டு அக்கா வந்தார். அவரை எதிர்பாராது திகைத்தவள், “அக்கா... இந்த டைம்ல இங்க என்ன பண்றீங்க?” என வினவினாள்.
“நீ வேலைக்கு சேர்த்துவிட்டல்ல சுதி. அந்த தம்பி வீட்ல எனக்கு ஒத்து வரலை. ரெண்டு நாள்ல நானே வரலைன்னு சொல்லிட்டேன். ரெண்டு மணிநேரத்துல முடியுற வேலைதான் சுதி. சரியான நொச்சு அவன். பாத்திரத்தைக் கழுவி வச்சா போதாதாம். அது காஞ்சதும் துடைச்சு கூடையில கவுத்தணுமாம். அவ்வளோ பெரிய வீட்டை சோப்பாயில் வச்சு கழுவவே பெண்டு கழண்டுடுது. இதுல இன்னொரு தண்ணி வச்சு ரெண்டு டைம் துடைக்கணும்னு சொல்றான். அதான் நான் அந்த அப்பார்ட்மெண்ட்லயே வேற வேலையைப் பார்த்துட்டேன். அந்த வேலை முடிஞ்சு வர நேரமாய்டுச்சு...” என அவர் அலட்டலில்லாது கூற, சுதிக்கு கொஞ்சம் எரிச்சல்தான். அவரது பேச்சிலே அலட்சியம் தெறித்தது. வேறு வீட்டு வேலைப் பார்த்தாகிற்று என்ற எண்ணத்தில்தான் இந்த வேலையக்குச் செல்லாது நின்றிருப்பாரோ என எண்ணமளவிற்கு அவரது செய்கைகள் இருந்தன. வேலை கேட்கும்போது இருந்த பாவனை இப்போது தலை கீழாய் மாறியிருந்தது.
இவர் வந்ததால் நிவின் ஏற்கனவே வேலை பார்த்தவர்களை நிறுத்தியிருக்கக் கூடும். ஒரு வாரம் கூட வேலை பார்க்காது உப்பு பெறாத காரணத்தைக் கூறி இவர் நின்றிருக்க, அவன் என்ன பண்ணுவான் என்ற கரிசனம் இவளுக்குத் தோன்றிற்று. அதைவிட இவள்தான் அவரை வேலைக்குச் சேர்த்துவிட்டாள். ஒற்றைக் கையோடு அவன் என்ன செய்வான் என்ற யோசனையோடு பேருந்திலேறி அமர்ந்தாள்.
ஒரு நிமிடம் யோசித்தவள் புலனத்தை எடுத்து அவனுக்கு செய்தி அனுப்பினாள். “சாரி சார்...” என சுதி அனுப்ப, சில பல நிமிடங்களில் அவன் பார்த்துவிட்டான் போல. இரண்டு நீல கோடுகள் விழுந்தன.
“நோ... திஸ் இஸ் நாட் யுவர் மிஸ்டேக் சுதிரமாலா!” என அவன் புரிதலாய் அனுப்ப, இவள் சிரிக்கும் பொம்மை ஒன்றை அனுப்பியிருக்க, அவன் புலனத்திலிருந்து வெளியேறிவிட்டான்.
சில நொடிகள் சுதி சிந்தித்தாள். அந்த வேலையின் சாதக பாதங்களையும் சம்பளத்தையும் கணக்கிட்டால். காலையில் சற்று விரைவாய் எழுந்தால் இரண்டு மணி நேர வேலைதான். தானே செய்தால் என்ன என்ற எண்ணம் அவளுக்கு. எட்டாயிரம் பெரிய தொகைதான் அவளுக்கு. காலையிலே அடுத்தப் பருவத்திற்கு பள்ளி கட்டணம் வேண்டுமென தவசெல்வன் வந்து நின்றது சிந்தையை நிறைத்தது.
அவளது அண்ணன் இருந்த போது அவனை தனியார் பள்ளியில் சேர்த்துவிட்டிருந்தார். கொஞ்சம் பணத்தில் புரளும் பள்ளியென்றாலும் தரமான கல்வி வேண்டுமென அவர் மகனை சேர்த்து விட்டிருந்தார். அவர் இறந்த பிறகு அரசு பள்ளியில் சேர்க்கலாம் என சௌம்யா கூற, சந்திரா மறுத்துவிட்டார். பேரன் பெரிய பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் பணத்தை சேமித்து, கடன் வாங்கி என அவனைப் படிக்க வைக்கிறார். சுதி கூட அரசு பள்ளி வேண்டாமென மறுத்துவிட்டாள்.
அவளே மதுரையின் புகழ்பெற்ற எஸ்.பி.ஓ.ஏ பள்ளியில்தான் படித்தாள். தந்தை இருந்தவரை அவர்களுக்குப் பெரிதாய் சுமை தெரியவில்லை. தந்தையும் தமையனும் அற்றுப் போனதில் இப்போது பள்ளிக் கட்டணம் பெரிதாய் தோன்றிற்று. தவச்செல்வனுக்கு மட்டும் என்றால் கூட அவர்களால் அதை சமாளிக்க முடியும். ருத்ராவும் அதே பள்ளியில்தான் படிக்கிறாள். இரண்டு பேருக்கு பள்ளிக் கட்டணம் செலுத்த அவர்களுக்கு மூச்சு முட்டிப் போகிறது. அதனாலே இந்த வேலைக்கு சேரலாமா என்ற எண்ணம்.
வீட்டு வேலைக்குப் போக வேண்டுமா என மனதில் வலித்தாலும், ‘எந்த வேலையும் இழிவானதல்ல. பார்த்துக் கொள்ளலாம்!’ என நினைத்தவள், “உங்களுக்கு ஓகேன்னா, நான் அந்த வேலைக்கு வரலாமா?” என அனுப்பிவிட்டாள். அவன் இணையத்தை துண்டித்திருந்ததால், செய்தி அவனை அடையவில்லை. அவன் பார்த்ததும் பதிலளிக்கட்டும் என இவள் பேருந்திலிருந்து இறங்கி வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

தொடரும்...
 
Administrator
Staff member
Messages
1,028
Reaction score
2,912
Points
113
பொழுது – 7 💖
சுதிரமாலா அந்த வார ஞாயிற்றுக்கிழமை விடுப்பில் ஓரளவிற்கு உடலையும் மனதையும் தேற்றினாள். நீண்ட நாட்கள் கழித்து எட்டு மணிவரை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கினாள். பிள்ளைகளுடன் அளவளாவினாள். சந்திரா கையால் சமைத்த அசைவ உணவுகளை ஆசையாய் உண்டாள். மனம் சமன்பட்டிருந்தது. இப்படித்தான் வாழ்க்கை இருக்குமென்ற எண்ணத்தை எப்போதுமே மனதில் ஆழப் பதிந்து கொண்டாள்.

“நீ வேலைக்கு சேர்த்துவிட்டல்ல சுதி. அந்த தம்பி வீட்ல எனக்கு ஒத்து வரலை. ரெண்டு நாள்ல நானே வரலைன்னு சொல்லிட்டேன். ரெண்டு மணிநேரத்துல முடியுற வேலைதான் சுதி. சரியான நொச்சு அவன். பாத்திரத்தைக் கழுவி வச்சா போதாதாம். அது காஞ்சதும் துடைச்சு கூடையில கவுத்தணுமாம். அவ்வளோ பெரிய வீட்டை சோப்பாயில் வச்சு கழுவவே பெண்டு கழண்டுடுது. இதுல இன்னொரு தண்ணி வச்சு ரெண்டு டைம் துடைக்கணும்னு சொல்றான். அதான் நான் அந்த அப்பார்ட்மெண்ட்லயே வேற வேலையைப் பார்த்துட்டேன். அந்த வேலை முடிஞ்சு வர நேரமாய்டுச்சு...” என அவர் அலட்டலில்லாது கூற, சுதிக்கு கொஞ்சம் எரிச்சல்தான். அவரது பேச்சிலே அலட்சியம் தெறித்தது. வேறு வீட்டு வேலைப் பார்த்தாகிற்று என்ற எண்ணத்தில்தான் இந்த வேலைக்குச் செல்லாது நின்றிருப்பாரோ என எண்ணமளவிற்கு அவரது செய்கைகள் இருந்தன. வேலை கேட்கும்போது இருந்த பாவனை இப்போது தலை கீழாய் மாறியிருந்தது.
இவர் வந்ததால் நிவின் ஏற்கனவே வேலை பார்த்தவர்களை நிறுத்தியிருக்கக் கூடும். ஒரு வாரம் கூட வேலை பார்க்காது உப்பு பெறாத காரணத்தைக் கூறி இவர் நின்றிருக்க, அவன் என்ன பண்ணுவான் என்ற கரிசனம் இவளுக்குத் தோன்றிற்று. அதைவிட இவள்தான் அவரை வேலைக்குச் சேர்த்துவிட்டாள். ஒற்றைக் கையோடு அவன் என்ன செய்வான் என்ற யோசனையோடு பேருந்திலேறி அமர்ந்தாள்.
ஒரு நிமிடம் யோசித்தவள் புலனத்தை எடுத்து அவனுக்கு செய்தி அனுப்பினாள். “சாரி சார்...” என சுதி அனுப்ப, சில பல நிமிடங்களில் அவன் பார்த்துவிட்டான் போல. இரண்டு நீல கோடுகள் விழுந்தன.
“நோ... திஸ் இஸ் நாட் யுவர் மிஸ்டேக் சுதிரமாலா!” என அவன் புரிதலாய் அனுப்ப, இவள் சிரிக்கும் பொம்மை ஒன்றை அனுப்பியிருக்க, அவன் புலனத்திலிருந்து வெளியேறிவிட்டான்.
சில நொடிகள் சுதி சிந்தித்தாள். அந்த வேலையின் சாதக பாதங்களையும் சம்பளத்தையும் கணக்கிட்டால். காலையில் சற்று விரைவாய் எழுந்தால் இரண்டு மணி நேர வேலைதான். தானே செய்தால் என்ன என்ற எண்ணம் அவளுக்கு. எட்டாயிரம் பெரிய தொகைதான் அவளுக்கு. காலையிலே அடுத்தப் பருவத்திற்கு பள்ளி கட்டணம் வேண்டுமென தவசெல்வன் வந்து நின்றது சிந்தையை நிறைத்தது.
அவளது அண்ணன் இருந்த போது அவனை தனியார் பள்ளியில் சேர்த்துவிட்டிருந்தார். கொஞ்சம் பணத்தில் புரளும் பள்ளியென்றாலும் தரமான கல்வி வேண்டுமென அவர் மகனை சேர்த்து விட்டிருந்தார். அவர் இறந்த பிறகு அரசு பள்ளியில் சேர்க்கலாம் என சௌம்யா கூற, சந்திரா மறுத்துவிட்டார். பேரன் பெரிய பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் பணத்தை சேமித்து, கடன் வாங்கி என அவனைப் படிக்க வைக்கிறார். சுதி கூட அரசு பள்ளி வேண்டாமென மறுத்துவிட்டாள்.
அவளே மதுரையின் புகழ்பெற்ற எஸ்.பி.ஓ.ஏ பள்ளியில்தான் படித்தாள். தந்தை இருந்தவரை அவர்களுக்குப் பெரிதாய் சுமை தெரியவில்லை. தந்தையும் தமையனும் அற்றுப் போனதில் இப்போது பள்ளிக் கட்டணம் பெரிதாய் தோன்றிற்று. தவச்செல்வனுக்கு மட்டும் என்றால் கூட அவர்களால் அதை சமாளிக்க முடியும். ருத்ராவும் அதே பள்ளியில்தான் படிக்கிறாள். இரண்டு பேருக்கு பள்ளிக் கட்டணம் செலுத்த அவர்களுக்கு மூச்சு முட்டிப் போகிறது. அதனாலே இந்த வேலைக்கு சேரலாமா என்ற எண்ணம்.
வீட்டு வேலைக்குப் போக வேண்டுமா என மனதில் வலித்தாலும், ‘எந்த வேலையும் இழிவானதல்ல. பார்த்துக் கொள்ளலாம்!’ என நினைத்தவள், “உங்களுக்கு ஓகேன்னா, நான் அந்த வேலைக்கு வரலாமா?” என அனுப்பிவிட்டாள். அவன் இணையத்தை துண்டித்திருந்ததால், செய்தி அவனை அடையவில்லை. அவன் பார்த்ததும் பதிலளிக்கட்டும் என இவள் பேருந்திலிருந்து இறங்கி வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
தொடரும்...

Well-known member
Messages
430
Reaction score
319
Points
63
ஆஹா அவன் வீட்டுக்கே வேலைக்கு போகப் போறாளா?
 
Messages
55
Reaction score
36
Points
18
உதவிக்கு உதவி என
உதவ முன் வந்தாள்
உரைத்த உதவியை
உதறி தள்ளிய பெண்மணி
உள்ளம் கவலை கொண்டு
உதவிக்கரம் பற்றிக் கொள்ள
உள்ளம் நினைக்க
உமையாள் துணிந்து விட்டா
ள்.....
 
Top