• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,028
Reaction score
2,912
Points
113
பொழுது – 19 💖
சற்றே உடலைத் தளர்த்தி முட்டியிட்டு அமர்ந்திருந்த சுதி தூசிப் படிந்திருக்கும் பொருட்களை எடுத்து துடைத்து தேதிவாரியாகப் பிரித்து அடுக்கிக் கொண்டிருந்தாள். எல்லா ஞாயிற்றைப் போலவும் அல்லாது அன்றைக்கு வணிக வளாகத்தில் கூட்டம் வெகு குறைவாய் இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலர் மட்டுமே இருந்தனர்.
அதன் பொருட்டே வைகுண்டம் காலையிலே முசுட்டு முகத்துடன் இருந்தார். எந்நிலையிலும் அவரிடம் அகப்பட்டு விடக் கூடாதென சுதி பொறுமையாய் வேலையை செய்தாள். கவனமாய் கண்ணாடிப் பொருட்களைக் கையாண்டாள். விவேகாவை வந்ததிலிருந்து இவள் பார்க்கவில்லை. மேல்தளத்தில் அவள் இருக்கக் கூடுமென எண்ணியவள் வேலையில் கவனமானாள்.
தேநீர் இடைவேளையின் போது இவள் பார்வையை சற்றே உயர்த்த, விவேகாவும் எட்டிப் பார்த்தாள். “இப்போ போகாத சுதி. அடுத்த செட்ல போவோம்!” என அவள் உதட்டை அசைத்துவிட்டு போக, சுதி தலையாட்டலுடன் வாடிக்கையாளரைக் காணச் சென்றாள்.
பத்து நிமிடங்கள் கடக்க, முன்பு தேநீர் அருந்தச் சென்றவர்கள் வந்துவிட, இவளும் விவேகாவும் பின்பக்கமாகச் சென்று இருக்கையை இழுத்துப் போட்டு அமர்ந்தனர்.
“இன்னைக்கு நீ வேலைக்கு வர மாட்டேன்னு நினைச்சேன் டி. நீ என்னென்னா பொசுக்குன்னு வந்து நிக்கிற?” விவேகா சுதியை கூர்ந்து பார்த்தவாறு கேட்டாள்.
“ஏன்... எதுக்கு லீவ் போடணும் விவே?” குனிந்து உதட்டைக் குவித்து ஊதி தேநீரை அருந்தியபடியே சுதி அசிரத்தையாய் வினவினாள்.
“இதென்ன டி கேள்வி. அண்ணா ஃபேமிலியோட வர்றாங்க இல்ல?” அவளது அண்ணா என்ற விளிப்பில் சுதி தோழியை முறைக்க, “ஷ்... சாரி டி. என்னமோ தெரியலை. நீ சொல்லும்போது கோவம் வந்துச்சு. பட் அவர் பேசும்போது ஏதோ ஒன்னு... உண்மைன்னு நம்ப சொல்லுது. அவர் நல்லவர் டி சுதி. ஒருநாள் பழகுன எனக்கே தப்பா தோணலை. நீ எத்தனை மாசம் அவர் வீட்ல வேலை பார்த்திருக்க. அப்பவும் ஏன் நம்பிக்கை வரலை?” எனக் கேட்டவளைப் பார்த்த சுதி முறுவலித்தாள். பதிலேதும் உரைக்கவில்லை.
“ப்ம்ச்... சுதி, சிரிச்சா என்ன அர்த்தம்?” விவேகா சலிக்க, “ஹம்ம்... நிவின் சார் ஆள் மயக்கின்னு அர்த்தம்!” என்றாள் மெல்லிய புன்னகையுடன்.
“லூசு மாதிரி பேசாத டி‌. நான் என்ன கேட்குறேன். நீ என்ன பதில் சொல்ற?” அவள் முறைக்க,
“உன்னை நினைச்சுத்தான் ஆச்சரியமா இருக்கு டி விவே. நேத்து வரைக்கும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரை வாய்ல போட்டு அவலா மென்னுத் தின்னுட்டு இருந்த. இப்போ அவருக்கே சப்போர்ட் பண்ற. ஒருநாள் அவர் கூடப் பேசுனதுலயே இப்படி எப்படி டி மாறுன?‌ சப்போஸ் ரெண்டு நாள் அவரோட பழகுனா நீயே என்னைக் கட்டாயப்படுத்தி அவருக்கு கட்டி வச்சிடுவ இல்ல?” என சுதி கேட்க, அவள் குரலில் இருந்த வேதனை விவேகவை சுட்டது.
“ஐயோ... சுதி. சாரி டி. நான்... நான் வேணும்னு எதையும் பண்ணலை. ஜஸ்ட் உன்னோட நல்லதுக்குத்தான் டி. நீ நல்லா இருக்கணும்னு எனக்கும் ஆசை இருக்கு டி. சும்மா சொல்லலை. பணம் காசு எல்லாத்தையும் விட அவர் உன்னை அன்பா பார்த்துப்பாரு டி. நீ நிம்மதியா சந்தோஷமா வாழுவ டி!” விவேகா என்ன சொல்லுவது எனத் தெரியாது தவித்து மனதிலிருப்பவற்றைக் கொட்டினாள்.
“கடைசில நீயும் அவருக்கு சப்போர்ட் பண்றல்ல விவே?” கேள்வி கேட்ட சுதியின் முகத்தில் கசந்த புன்னகை.
“ச்சு... இல்ல சுதி. சரி விடு, நான் ஆயிரம் சொன்னாலும் உனக்கு எது சரியா இருக்கும்னு உன்னைவிட யாராலையும் சூஸ் பண்ண முடியாது டி. எதுனாலும் ஒன்னுக்கு ரெண்டு தடவை யோசிச்சுப் பண்ணு. ஏன்னா இது உன் வாழ்க்கை டி!” விவேகா தோழியின் கையைப் பிடிக்க, சுதி தலையை அசைத்தாள்.
பத்து நிமிடங்கள் கடந்ததும் இருவரும் வேலையைத் தொடர, “சுதிரமாலா...” எனத் தனக்குப் பின்னே கேட்ட குரலில் யோசனையாய்த் திரும்பினாள் பெண். அக்ஷாதான் நின்றிருந்தாள். அவளை ஒரு நொடி எதிர்பாராது தடுமாறிய சுதி, “சொல்லுங்க மேடம், என்ன வேணும் உங்களுக்கு?” எனப் புன்னகை முகமாகக் கேட்டாள்.
“எனக்கு என் நிவின் வேணும் சுதிரமாலா!” அவள் வார்த்தைகள் பல்லிடுக்கில் வந்து விழ, “சாரி மேடம், இது வொர்க்கிங் டைம். சூப்பர் வைசர் பார்த்தா திட்டுவாரு. உங்களுக்கு என் கூடப் பேசணும்னா லஞ்ச் டைம்ல பேசலாம்!” என சுதி வலியப் புன்னகைத்தாள்.
“இல்ல... எனக்கு இப்பவே உன் கூட பேசணும் சுதி!” அவள் காரத்துடன் கூற, “அப்போ எங்க சூப்பர் வைசர்கிட்டே போய் பெர்மிஷன் வாங்குங்க மேடம்!” என்றவள் வேலையைக் கவனிக்க, அக்ஷா விறுவிறுவென வைகுண்டத்திடம் சென்றாள். ஐந்து நிமிடங்கள் அவள் என்ன பேசினாலோ, அவர் சுதியை அழைத்து அவளுடன் சென்று வருமாறு கூறினார். இருவரும் தேநீர் அருந்தும் இடத்திற்கு சென்று நின்றனர்.
“ஹவ் சீப் சுதிரமாலா யூ ஆர். யூ ஆல்ரெடி நோ தட் ஐ லவ் நிவின் சோ மச். அப்புறம் ஏன் இப்படி கேவலமா பிஹேவ் பண்ற. காசு, பணத்தைப் பார்த்ததும் அப்படியே செட்டிலாகிடலாம். லைஃப் டைம் வேலைக்குப் போகத் தேவையில்லை. அழகான படிச்ச பையன்னு வளைக்கலாம்னு நினைக்குறீயா. உன்னை நான் இப்படி யோசிக்கவே இல்லை. ஃபர்ஸ்ட் ஆப் ஆல் வாட் இஸ் யுவர் க்வாலிபிகேஷன் டு மேரி ஹிம். வீட்டு வேலைக்கு வந்த உனக்கு நிவின் கேட்குதா? அவனோட ஸ்டேட்டஸ் என்னென்னு உனக்குத் தெரியுமா? அவன் மந்த்லி சேலரி என்னென்னு உனக்குத் தெரியுமா?” என அக்ஷா பேசிக் கொண்டே செல்ல, “ஷட் அப் அகஷா... திஸ் இஸ் யுவர் லிமிட். ஜஸ்ட் ஷட் அப் யூவர் நான்சென்ஸ் டாக்!” என சுதி சீறலாய் உரைக்க, அக்ஷா முகம் இருண்டு போனது.
“இல்ல எனக்குப் புரியலை. எதுக்கு இப்போ என்கிட்டே வந்து நீங்க கத்தீட்டு இருக்கீங்க. உங்களுக்கும் எனக்கும் என்ன இருக்கு? என்னைத் திட்ட ரைட்ஸ் உங்களுக்கு கொடுத்தது யாரு? இப்போ நான் உங்க ஃப்ரெண்ட் வீட்ல வொர்க் பண்ற செர்வன்ட் கூட இல்லை. தென் வொய் ஆர் யூ ஸ்கோல்டிங் மி லைக் திஸ்?” சுதி அழுத்தமாய்க் கேட்டாள்.
“நீ பண்ண தப்பை நான் கேட்க வந்தேன். உனக்கும் எனக்கும் என்ன இருக்கு. ஐ லவ் நிவின். அவன் எனக்கு வேணும். தட்ஸ் இட், அதுக்காகத்தான் உன்கிட்ட எல்லாம் சண்டை போட்றேன்!” அவள் முகத்தைச் சுளிக்க, சுதிக்கு கோபம் கனன்றத் தொடங்கியது.
“ஓஹோ... நிவின் வேணும்னா அவர்கிட்டே போய் பேச வேண்டியதுதானே... ஏன் என்கிட்ட பாயுறீங்க? ஓஹோ... உங்களை வீட்டுக்கு வரக் கூடாதுன்னு அடிச்சுத் தொரத்திட்டாரோ?” இவள் சற்றே எள்ளலாகக் கேட்க, அக்ஷா வெகுண்டெழுந்தாள்.
“ஷட் அப் சுதி. திஸ் இஸ் யுவர் லிமிட். எனக்கும் நிவினுக்கும் ஆயிரம் இருக்கும். நாங்க சண்டை போட்டுப்போம். சமாதானமாகிப்போம். நீ இடையில வராதே!” அவள் சீற,
“ச்சு... என்ன அக்ஷா நீங்க. நான் வேலை பார்க்கும்போதே நீங்க வந்தா உள்ளே விடக் கூடாதுன்னு சொல்லி இருக்காரு. என்கிட்டவே பொய்யா?” சுதி வேண்டுமென்றே கூற, அக்ஷாவின் முகம் மாறியது.
“என்ன அக்ஷா, உங்களுக்கு கோபம் வருதா? அதே மாதிரிதானே என்னை நீங்க தப்பா பேசும்போது எனக்கும் வந்திருக்கும். உங்களுக்கு அவரைப் பிடிச்சிருக்குன்னா அவர்கிட்ட போய் பேசி கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணுங்க. அதை விட்டுட்டு என்கிட்ட உங்களோட கோபத்தைக் காட்ட வேணாம்...” என நிறுத்தியவள், “ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டியாம்ன்ற மாதிரி என்னைப் பேசலாம்னு ஓடி வந்திருக்கீங்க போல. உங்க பருப்பெல்லாம் அவர்கிட்ட வேகுறது இல்லையா என்ன?” என சுதி கேட்டதும் அக்ஷாவின் முகம் கோபத்தில் சிவந்தது.
“எனாஃப் சுதி... இதுக்கும் மேல ஒரு வார்த்தைப் பேசுன, நான் மனுஷியா இருக்க மாட்டேன். யூ ஆர் அ சீப் கேர்ள். பணத்துக்காகத் தானே இப்படி பண்ற. எவ்வளோ வேணும்னு சொல்லு. நானே தர்றேன், என் நிவினை விட்டுட்டு. அவன் பாவம், அவன் ஏதோ புரியாம பண்றான். மீறி நீ அவன்கிட்டே விளையாடுன, இந்த அக்ஷா யார்னு உனக்கு காட்ட வேண்டி வரும். என் நிவின் அவரு... அவர யாருக்கும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன். ஐ லவ் ஹிம் தட் மச்!” அக்ஷா கூறி முடித்ததும் சுதி அவளை சலனமற்றுப் பார்த்துவிட்டு, “ஒரு நிமிஷம் வர்றேன் அக்ஷா!” என உள்ளே சென்று அலைபேசியை எடுத்து வந்து கருப்பியிருந்த நிவின் எண்ணை வெள்ளைக்கு மாற்றினாள். பின்னர் அவனுக்கு அழைப்பை விடுக்க, சில நொடிகளிலே அழைப்பு ஏற்கப்பட்டது.
“சுதி... வாட் ஹேப்பன், என்னாச்சு. இந்த டைம்ல கால் பண்ணி இருக்க? இது உனக்கு வொர்க்கிங் டைம் இல்ல?” என அவன் கேட்க, அக்ஷா சுதியை முறைத்தாள்.
“அது... ஆமா சார். வொர்க் டைம்தான். பட் உங்ககிட்டே ஒன்னைக் கன்பார்ம் பண்ணத்தான் கால் பண்ணேன்!” என்றாள். தயங்கிய குரலை சரி செய்தவள் அக்ஷாவைப் பார்த்திருக்க, அவள் இவளைக் கண்களால் பொசுக்கினாள்.
“என்ன... என்ன கர்பர்மேஷன் சுதி?” அவன் புரியாது கேட்க, ஒலிப்பெருக்கையை ஒலிக்க விட்டவள், சில நொடிகள் தயங்கி, “என்னை உங்களுக்கு எவ்வளோ பிடிக்கும்?” எனக் கேட்டாள். அங்கே நிவின் முகம் முழுவதும் ஆச்சரியம் படர்ந்தது.
“ஹே... இது... இதென்ன கேள்வி. நான் ஏற்கனவே சொல்லிட்டேனே!” அவன் சந்தோஷக் குரலில் கூற,
“ஏன்... இன்னொரு தடவை சொல்ல மாட்டீங்களா?” என இவள் அதட்ட, “ச்சு... மெஷர்மெண்ட் எல்லாம் இல்ல சுதி. அன்லிமிடெடா பிடிக்குது இந்த சுதிரமாலாவை!” ஆசையாய் நிவின் கூற, அக்ஷாவின் விழிகள் தளும்பின.
“அப்போ என்னை லவ் பண்றீங்க, ரைட்?” சுதி கேட்க, “ப்ம்ச்... இதென்ன டி கேள்வி. ஒன் வீக்கா விதம் விதமா ரகம் ரகமா இதைத்தானே சொல்றேன் நான்!” என அவன் சுகமாய் அலுத்தான்.
“இப்போ சொல்லுங்க. எனக்கு கேட்கணும். என்னை நீங்க லவ் பண்றீங்களா? கடைசி வரைக்கும் இதே அன்போட பார்த்துபீங்களா?
என்னை எப்பவும் விட்டுட மாட்டீங்கல்ல?" என்ன முயன்றும் சுதியின் குரல் இதைக் கேட்கும் போது மெதுவாய் இடறியது.
“சுதி.. ஆர் யூ ஆல் ரைட். நீ... நீ சரியில்ல. என்னாச்சு, ஏன் இப்படி பேசுற? நான் வரேன் இரு!” அவன் அதட்டலும் தவிப்புமாய்க் கூற, “நோ... நீங்க வர வேணாம். நான் கேட்ட கேள்விக்கு பதில் வேணும். சொல்லுங்க!” அடமாய் இவள் கேட்டாள்.
“சாகுறவரை சுதிரமாலா கூடத்தான் நிவின் வாழப் போறான். அவ இல்லாம அவனோட வாழ்க்கை நிறையாது. எனக்கு என் சுதி வேணும். வாழ் நாள் முழுக்க வேணும். என் அம்மாவுக்கு அடுத்து நான் யார் கூட சந்தோஷமா வாழ்வேன்னு கண்ணை மூடுனா அவ முகம் மட்டும்தான் வந்து நிக்கிது. அப்படி இருக்க பொண்ணை எப்படி என்னால விட முடியும்?” அவன் குரலில் இருந்த உணர்வில் அக்ஷாவின் கண்களிலிருந்து சரசரவென நீர் வழிந்தது.
“அவ படிக்கலை, அழகா இல்லையே. பணக்காரி கூட இல்லை. மூனு வேளை சோத்துக்கே கஷ்டப்படுற குடும்பத்துல இருந்து வேலைக்குப் போய்ட்டு இருக்கவ. இப்போ காதல் கண்ணை மறைச்சிடுச்சு, மனசைப் பார்த்துச்சுன்னு சொல்றவரு நாளை பின்னே எந்த ஒரு சூழ்நிலையிலும் அவளை மட்டம்தட்டிப் பேசினா, அவளுக்கு ரொம்ப வலிக்கும். அப்புறம் புருஷனாவே இருந்தாலும் மூனு வேளை சோறு போட்டா என்ன வேணா பேசுவானான்னு அவளுக்கு ரோஷம் வந்து சண்டை போடுவா. இந்த ஒரு விஷயத்துல மட்டும் இல்ல. நீங்க சம்பாதிக்கிறேன்னு ஊதாரித்தனமா செலவு பண்றப்போ அவ சண்டை போடுவா. இருபத்து நாலு மணி நேரமும் அவ சிரிச்சிட்டே இருக்க மாட்டா. பொண்டாட்டியா பொறுப்பா இருக்கணும்னு நினைக்கிறவ அவ. இப்போ பைனலா சொல்லுங்க. அவதான் வேணுமா?” சுதி கேட்க, நிவின் யோசிக்கவில்லை.
“யெஸ் அவ படிக்கலை, அழகா இல்லை, பணக்காரி இல்லை. பட் ஐ லைக் ஹெர்... அந்த ஒரு ரீசன் போதும், சேர்ந்து சந்தோஷமா வாழ. ஐ லவ் ஹெர். ஷீ நோஸ் ஆல்ரெடி. நானும் ட்வென்ட்டி போர் ஹவர்ஸூம் கொஞ்சிட்டு இருக்க மாட்டேன். ஆஃபிஸ் டென்ஷனை பொண்டாட்டிக்கிட்டே காட்டுவேன். தென் நானே ஈகோ பார்க்காம சாரி கேட்பேன். என் பொண்டாட்டிகிட்டே நான் சாரி கேட்காம யாரு கேப்பா?” அவன் முகத்தில் முறுவல் படர்ந்தது. சரியென்ற வார்த்தையை சொல்வதற்கே இந்தப் பெண் இத்தனை அலைக் கழிக்கிறாள். ஆனால் கணவன் மனைவி என்ற பந்தம் எப்போது பேச்சில் நுழைந்தது என இருவருமே அறியர்.
“ஹம்ம்... இதுவரைக்கும் நான் உங்களுக்கு யெஸ் சொல்லலை. பட் இப்போ உங்களைக் கன்சிடர் பண்ணலாம்னு இருக்கேன்!” சுதி உரைத்ததும் நிவினிடம் சில நொடிகள் பேச்சே இல்லை.
“ஹே...சுதிர மாலா. ஆர் யூ கிட்டிங்?” அவன் குரல் ஆர்வமாய் வெளிவந்தது.
“நான் பொய் சொல்ல மாட்டேன்னு உங்களுக்குத் தெரியும் இல்ல?” இவள் அதட்டலாய்க் கேட்க, “யெஸ்...யெஸ். சாரி அண்ட் தேங்க் யூ சோ மச் சுதி. இதை... இதை நீ நேர்ல சொல்லி இருக்கலாம். ஐ மிஸ்ட் யுவர் எக்ஸ்பிரஷன்ஸ், மிஸ்ட் அ லாட்!” அவன் குறையாய்க் கூற, “அப்புறம் பேசலாம். சூப்பர் வைசர் வந்துட்டாரு!” என அழைப்பைத் துண்டித்து சுதி நிமிர, அக்ஷா கண்களில் கண்ணீர் வழிய நின்றிருந்தாள். அவளை அப்படி பார்க்கவும் இவளுக்கு மனம் கனத்தது.
“சாரி அக்ஷா... இது எதுவும் நான் உங்களை ஹேர்ட் பண்றதுக்காக செய்யலை. ஐ ஜஸ்ட் வாண்ட் டூ ப்ரூவ் தட், நிவின் சார் என்னை எந்த அளவுக்கு விரும்புறார்னு உங்களுக்கு தெரியணும்னுதான். உண்மையை சொல்லப் போனா ஐ லைக் ஹிம். ஒரு தனி மனுஷனா அவரை ரொம்ப பிடிக்கும். கல்யாணம் பண்ற அளவுக்குப் பிடிக்குமான்னு தெரியலை. ஒருவேளை கடவுள் எங்க ரெண்டு பேருக்கும் தான்னு தலைல எழுதி இருந்தா அதை யாராலும் மாத்த முடியாது. நான் அவர்கிட்ட பேசுனதுக்கு முக்கிய காரணம், அவர் என்னை எந்த சூழ்நிலையிலயும் விட்டுட மாட்டார்னு காட்டத்தான். உங்களுக்கு அவரைப் பிடிக்கும், விரும்புறீங்க. ஐ அக்செப்ட். பட் அவர் என்னைக்குமே உங்களை ஃப்ரெண்டாதான் பார்க்குறாரு. இந்த ஜென்மத்துல உங்களை வேற எப்படியும் அவரால பார்க்க முடியாது. நீங்க உங்க மனசை மாத்திக்கோங்க. அண்ட் ஒன் திங், நான் அவரைப் பறிச்சிட்டேன். சீப் அப்படி இப்படின்னு எதுவும் வாய்க்கு வந்த படி பேச கூடாது. நானா போய் அவரைக் காதலிக்கிறேனோ, இல்லை மேரேஜ் பண்ணிக்கறேனோ ப்ரபோசல் வைக்கலை. அவர் சொன்னாரு. நான் வேணாம்னு ரெப்யூஸ் பண்ணேன். என்னோட குடும்ப சூழ்நிலை வேற. ஹம்ம்... என் அம்மாவே அவருக்கு ஓகே சொல்லி என்னைக் கல்யாணம் பண்ணிக்க சொன்னா, தாராளமா பண்ணிப்பேன். ஏன்னா, என்னை எனக்காக மட்டுமே ஏத்துக்கிற ஒரு மனசுக்காகத்தான் நான் காத்திருந்தேன். அப்படியொருத்தர் வந்து நிக்கும்போது அவரோட அன்பை என்னால உதாசீனப்படுத்த முடியாது. எனக்கு நிவின் சார் வேணும்னு சொல்லலை. கடவுள் கொடுத்தா, அவரை முழு மனசா ஏத்துப்பேன். அவரோட அன்புல சந்தோஷமா வாழ்வேன். உங்களைப் பொறுத்தவரை நான் செல்பிஷ்ஷாவே இருந்துட்டு போறேன் அண்ட் ஒன் திங் தேங்க் யூ சோ மச். நீங்க வரலைன்னா நான் இவ்வளோ தைரியமா என் மனசுல இருக்கதை அவர்கிட்டே சொல்லி இருக்க மாட்டேன்!” சுதி பெருமூச்சை வெளிவிட்டாள்.
“நான் நிவினை யாருக்கும் விட்டுத் தர மாட்டேன். ஐ வாண்ட் ஹிம்!” என அவள் மூக்கை உறுஞ்ச, சுதிக்கு முறுவல் பிறந்தது.
“பைன்... உங்களோட திறமை. எனக்கு அக்ஷாவைத்தான் பிடிச்சிருக்கு. அவளைத்தான் நான் கட்டிப்பேன்னு அவர் வாய்ல இருந்து ஒரு வார்த்தை வந்துடுச்சுன்னா, என் நிழல் கூட அவர் மேல படாது!” என்றாள் தீர்க்கமாக.
“அவ்வளோ நம்பிக்கை உனக்கு?” அவள் சீற,
“என் மேல இல்லை. அவர் மேல அவ்வளோ நம்பிக்கை!” என்ற சுதி, “இனிமே எது பேசுறதா இருந்தாலும் அவர்கிட்ட பேசுங்க. என்னைப் பார்த்து சின்னப் புள்ளைத் தனமா சண்டையெல்லாம் போட வேணாம். எனக்கு டைமாச்சு. நான் வரேன்!” என விடை பெற, அக்ஷா அவளை முறைத்துவிட்டு விறுவிறுவென நிவினின் வீட்டை நோக்கி நடந்தாள்.
“கர்ட் ரைஸ் வித் கோபி மஞ்சூரியன் ஓகே தானேப்பா. அதான் குக் பண்ண போறேன்!” என்ற நிவின் காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தான்.
“நான் என்ன கேக்குறேன். நீ என்ன டா பதில் சொல்ற. போன் பண்ணி திடுதிப்புன்னு ஒரு பொண்ணைப் பிடிச்சிருக்கு. வந்து சம்பந்தம் பேசி கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொல்ற. நான் வீட்டுக்கு வந்ததும் இந்தப் பொண்ணு சுதிரமாலாவைத்தான் புடிச்சிருக்குன்னு சொல்ற. எனக்கொன்னும் புரியலை டா!” என பாலுமகேந்திரா மகனை முறைத்தார்.
“இதுல புரியாததுக்கு என்ன இருக்குப்பா. ஐ லவ் ஹெர், அதான் உங்களைக் கூட்டீட்டுப் போய் முறையா அவங்க வீட்ல பேசப் போறேன்!” நிவின் அசிரத்தையாய் பதிலளித்தான்.
“அந்தப் பொண்ணை நிஜமா பிடிச்சிருக்கா டா. அப்படியொன்னும் நீ அவகிட்டே சிரிச்சுப் பேசுன மாதிரி தெரியலை. முறைச்சுட்டே தானே டா இருந்த?” இவருக்கு மண்டைக் காய்ந்தது.
“ப்பா... அந்த ஆராய்ச்சி எல்லாம் எதுக்கு. நான் உங்ககிட்டே முன்னாடியே சொன்னேனா இல்லையா? எனக்குப் பிடிச்ச பொண்ணைப் பார்த்ததும் கல்யாணம் பண்ணி வைங்கன்னு. இப்போ அதான் சுதியைக் கைக் காட்டுறேன்!” நிவின் பேசிக் கொண்டே காமைக் கலத்தில் சாதம் வைத்தான்.
“டேய்... நான் உன் வார்த்தையை எப்படி நம்புறது. உனக்காக யோசிக்கலைனாலும், அந்தப் பிள்ளைக்காக யோசிக்கிறேன் டா. இப்போ படிப்பு, அழகுன்னு எதையும் பார்க்காம ஆசைப்பட்டு கட்டிகிட்டு பிறகு அவ எனக்கு சரி வரலைன்னு நீ சொல்லிடுவீயோன்னு பயமா இருக்கு டா. இதுல உங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் சம்பந்தப்பட்டு இருக்கு. எதுனாலும் யோசிச்சு முடிவெடுப்போம்!” அவர் தீர்க்கமாகக் கூற, “ஹம்ம்... சரிப்பா. இன்னும் ஒரு டூ த்ரி ஹவர்ஸ் யோசிங்க. தென் ஈவ்னிங் சுதி வீட்டுக்குப் போகலாம். அங்கிள், ஆன்ட்டிட்ட நான் பேசிட்டேன். அவங்க அங்க நேரா வந்துடுறேன்னு சொல்லி இருக்காங்க!” என்றவனை தந்தை முறைத்தார்.
“ஏன் டா... டைம் வேணும்னு சொன்னா ரெண்டு மணி நேரம் தர்ற. நான் பொறுமையா செய்வோம்னு சொன்னேன்!”
“அவ்வளோ பொறுமை எல்லாம் எனக்கில்லைப்பா. சுதியை எனக்குப் பிடிச்சிருக்கு. அவ்ளோதான், நீங்க ரொம்ப குழப்பிக்காதீங்க. ஐ லைக் அண்ட் லவ் ஹெர். அப்படியெல்லாம் அவளை விட்ற மாட்டேன். என் பக்கம் கொஞ்சமா யோசிங்க. அவளுக்கே சப்போர்ட் பண்றது!” அவன் முணுமுணுக்கவும், தந்தைக்குப் புன்னகை பூத்தது.
“எம்புள்ளைக்காகத்தான் டா நானும் யோசிக்கிறேன். அவனுக்காகத்தான் பார்க்குறேன். உன்னோட சந்தோஷம்தான் எனக்கு முக்கியம். இருந்தாலும் கொஞ்சம் படிச்ச பொண்ணா, நம்ப ஆளுங்களா இருந்தா நல்லா இருக்கும்னுதான் நான் உனக்கு தேடுனேன். ஆனால் திடுதிப்புன்னு இப்படி சொல்றீயே டா!” என்றவரைத் திரும்பிப் பார்த்தவன்,
“ப்பா... நான் சந்தோஷமா வாழணும்னு உண்மையா நினைச்சீங்கன்னா, சுதிக்கும் எனக்கும் கல்யாணம் பண்ணி வைங்க. இல்லை, ஒன்னும் பிரச்சனை இல்ல. உங்கப் பையனா கடைசி வரை இருந்துடுவேன். நோ மேரேஜ், சிங்கிளா உங்களுக்கு நான், எனக்கு நீங்கன்னு இருந்துடலாம்!” என்றவனை முறைத்தவர், “லூசு மாதிரி பேசாத டா!” என்றார் அதட்டலாய்.
“சரி, உங்களுக்கு ரெண்டு சாய்ஸ். இந்த மேரேஜ்க்கு சம்மதிச்சிங்கன்னா ஒரே வருஷத்துல பேரனோ பேத்தியோ பெத்துக் கொடுத்து உங்களை பிஸியாக்குவேன். இல்ல, வேண்டாம்னு சொன்னீங்கன்னா, சந்நியாசம் போய் வெறியாக்குவேன்!” உதட்டுக்கு கீழே புன்னகைப் படர உரைத்தவனின் முதுகிலே மெல்லமாய் அடி வைத்தார் பெரியவர்.
அவரது பார்வை கவலையுடன் தன் மீது படிந்ததை உணர்ந்தவன், “ப்பா... அம்மாவை ஏன் உங்களுக்குப் பிடிச்சது பா. அரேஞ்ட் மேரேஜ் தானே உங்களோடது?” எனக் கேட்டான்.
“தெரியலை டா. அதுக்கு முன்னாடி ரெண்டு மூணு பொண்ணுப் பார்த்தாலும் உங்கம்மா மாதிரி யாரையும் எனக்குப் பிடிக்கலை. அவளோட கடைசி வரை வாழ்க்கையைக் கொண்டுப் போக முடியும்னு தோணுச்சு டா. மகராசி இருந்த வரை என்னைக் கண்ணுக்குள்ள வச்சுப் பார்த்துக்கிட்டா. அவளை மாதிரி யாராலையும் என்னைப் பார்த்துக்க முடியாது டா!” என்றவரை வாஞ்சையாகப் பார்த்தான். தாய், தந்தையின் அன்பான திருமண வாழ்க்கையை உடனிருந்து பார்த்தவானகிற்றே. அவர்களுடைய அன்னியோன்யத்தைக் கண்டு அவனுக்குமே அப்படியொரு வாழ்க்கைத் துணை அமைய வேண்டும் என்ற ஆசையெல்லாம் துளிர்த்திருந்தது.
“அதே மாதிரிதான் பா. சுதியோட வாழ்ந்தா நிம்மதியா சந்தோஷமா இருப்பேன். நீங்க நினைக்கிற மாதிரி தப்பா எதுவும் நடக்காது பா. உங்கப் பையனை நம்புங்க!” என்றான் ஆதரவாய்ப் புன்னகைத்து. வேண்டும் வேண்டாம் என்ற போராட்டத்தின் பிடியிலிருந்த மகேந்திரா மகனின் சந்தோஷமான வாழ்க்கை முக்கியம் என அவனது முடிவிற்கு சம்மதித்திருந்தார்.
“நிவின்... எங்க இருக்க மேன்?” கோபமும் ஆற்றாயையுமாய்க் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தாள் அக்ஷா.
தொடரும்...





























































 
Well-known member
Messages
430
Reaction score
319
Points
63
சுதி செம்மையா குடுத்தா👌👌👌. அக்ஷா இப்போ இவன் கிட்டயும் வாங்கிக் கட்டப் போறா
 
Messages
55
Reaction score
36
Points
18
காதலுக்காக தேடிவந்து
கடுமையாக பேசி
கத்தி தீர்ப்பவளை
கண்ணில் அலட்சியமாக
காதில் புரியும்படி
கருத்தை தெரிவிக்க....
காதலன் வாய்மொழியாக
காதலை கேட்க
கண்ணீரில் ஆஷா
கர்வமாக சுதி....

என்றும் சுதி இறங்கி தாழ்வில் இருப்பவள்
இன்று சூப்பரா பேசி
சுயமரியாதையில்
உயர்ந்து
விட்டாள்....
 
Top