- Messages
- 1,366
- Reaction score
- 4,169
- Points
- 113
சாரி... சாரி. சாரி, சொல்லாம கொள்ளாம லீவ் போட்டுட்டேன். பேக் டூ பேக் திருச்செந்தூர் ட்ராவல் பண்ணதுல டயர்டாகிட்டேன் டியர்ஸ். பட் இருந்தாலும் டைப் பண்ணலாம்னு நேத்து உட்கார்ந்தேன். காத்து தான் வந்துச்சு. சீனே வரலை
அதான் இவ்வளோ லேட்டு. நெக்ஸ்ட் அப்டேட்ல மேரேஜ். பத்திரிகை வச்சாச்சு. எல்லாரும் வந்துடுங்க 
இன்னும் 5 டூ 7 அப்டேட்ல கதை முடிஞ்சிடும். நிவினுக்கு டாடா காட்டிடலாம் 
பொழுது – 18
சௌம்யாவும் சந்திராவும் கூடத்தில் அமர்ந்து அப்பளம் தேய்த்துக் கொண்டிருந்தனர். செவி மட்டும் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் நாடகத்தில் லயித்திருந்தது.
நிவின் உள்ளே வந்து நிற்க, சுதிதான் வந்திருப்பாள் என நினைத்து நிமிர்ந்து பார்த்த பெரியவர் ஒரு நொடி அதிர்ந்து போனார். சௌம்யாவும் அவனை எதிர்பாராது திகைத்து எழ, சந்திராவும் எழுந்து நின்றார்.
“தம்பி, இந்த நேரத்துல எதுக்கு வந்துருக்கீங்க? யாரும் பார்த்தா, தப்பா நினைச்சுடுவாங்க. அன்னைக்கே உங்ககிட்டே நான் சொல்லிட்டேன், இதெல்லாம் ஒத்து வராதுன்னு!” சந்திரா கொஞ்சம் கடினக் குரலில் பேச, நிவின் முகம் லேசாய் மாறியது. அவனையே பார்த்திருந்த சுதிக்கு என்னவோ போலாகிவிட்டது.
“ம்மா... அது, நான் நடந்து வந்துட்டு இருந்தேன். இவர் அந்தப் பக்கம் வந்தாரா, லேட் நைட் ஆகிடுச்சுன்னு என்னை ட்ராப் பண்ணாருமா. நான்தான் உள்ளே கூட்டீட்டு வந்தேன்!” என அவள் தயங்கிப் பேச, அந்தப் பேச்சின் பின்னிருந்த அக்கறையில் நிவின் குளிர்ந்து போனான். சந்திராவின் பேச்சுக்கள் எல்லாம் நொடியில் பின்னகர்ந்திருந்தது. தனக்கான நேசம் கணநேரம் எனினும் அந்த அன்பை பிரியத்தைப் பரிபூரணமாய் சுகித்தான் நிவின்.
“இந்த நைட் டைம்ல ஒரு வயசு பையனோட வீட்டுக்கு வருவீயா சுதி? இதென்ன புதுசா பழக்கம்? உன்னை நான் அப்படித்தான் வளர்த்தேனா?” என சந்திரா சுதியிடம் கடுமையாகப் பேச,
“ஐயோ ஆன்ட்டி... சுதி வர மாட்டேன்னு தான் சொன்னா. நான்தான் கம்பெல் பண்ணிக் கூட்டீட்டு வந்தேன். என் மேலதான் மிஸ்டேக். டோன்ட் ஸ்கோல்ட் ஹெர்!” என நிவின் அவளுக்குப் பரிந்து பேச, சௌம்யா இருவரையும் ஏற இறங்கப் பார்த்து வைத்தாள்.
“எதுவா இருந்தாலும் நீங்க பண்ணது தப்பு. இனிமே நைட் டைம்ல வீட்டுக்கு வராதீங்க. சுத்தி இருக்கவங்க வாய் சும்மா இருக்காது!” என அவர் கோபக் குரலில் கூறினார்.
“சாரி ஆன்ட்டி... சாரி இட்ஸ் மை மிஸ்டேக் ஒன்லி. இன்னைக்கு உங்களைப் பார்த்து பேசலாம்னு டைம் பார்க்காம வந்துட்டேன். இனிமேல் அன்டைம்ல வர மாட்டேன். நாளைக்கு என் அப்பா, அங்கிள், ஆன்ட்டியோட வர்றேன். சோ உங்ககிட்டே இன்பார்ம் பண்ண வந்தேன். நீங்களும் ப்ரிபேர்டா இருப்பீங்க. சொல்லாம திடீர்னு வந்தா நாகரீகமா இருக்காதுல்ல. அதான் ஆன்ட்டி...” என அவன் மன்னிப்போடு வந்த விஷயத்தையும் கூற, சந்திரா பதிலளிக்கும் முன், “எத்தனை பேரு வருவீங்க தம்பி. ஜூஸ், ஸ்னாக்ஸ் எல்லாம் வாங்கி வைக்கணும்?” என இடை புகுந்தாள் சௌம்யா. சந்திரா திரும்பி அவளை முறைத்தார்.
என்ன சொல்வது எனத் தடுமாறியவள், “அது... வீட்டுக்கு வர்றவங்களுக்கு கொடுக்கணும்ல அத்தை?” என அசட்டுச் சிரிப்பை உதிர்த்தாள் சின்னவள்.
“அதெல்லாம் ஒன்னும் யாரும் வர வேணாம். என்ன பேசுனாலும் உங்களுக்கு என் பொண்ணைக் கட்டித் தர சம்மதம் இல்லை தம்பி!” சந்திரா முகத்தில் அடித்தது போல கூறவிட, நிவின் பேசும் முன் சுதி அவனைப் பேச வேண்டாம் என சைகை செய்தாள்.
“ப்ளீஸ், நீங்க கிளம்புங்க!” என வார்த்தையில்லாது உதட்டை மட்டும் அசைத்தவளின் முகத்தில் என்னக் கண்டானோ, “நாளைக்கு வரேன் ஆன்ட்டி. நீங்க சுதியை எனக்கு மேரேஜ் பண்ணி வைங்கன்னு நான் கட்டாயப்படுத்தல. அந்த மாப்பிள்ளை பாஸ்கரை நீங்க கன்சிடர் பண்ணது போல என்னையும் பண்ணுங்க. வீட்ல இருக்கப் பெரியவங்களோட வந்து பேசுனா உங்களுக்கு நம்பிக்கை வரும் ஆன்ட்டி. நான் கிளம்புறேன்!” என பெரியவரிடம் கூறியவன் சுதியிடம் தலையை அசைத்து விடைபெற்றான். வீட்டின் உள்ளே வரும்போதிருந்த துள்ளல் அவன் முகத்தில் இல்லை. லேசாய் வாடியிருந்ததைக் கவனித்தவள் அவன் போகும்வரை பார்த்துவிட்டு அறைக்குள் நுழைந்தாள்.
‘இதெல்லாம் தேவையா இவருக்கு. எதுக்கு இப்படி வரணும்? அம்மா அவரைக் கஷ்டப்படுத்தணும்?’ மனதில் முனங்கிக் கொண்டே உடை மாற்றி வெளியே சென்றாள். அடுத்து சந்திரா கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதிலை வரிசைக்கட்டியபடி சமையலறைக்குள் நுழைந்தாள்.
“சப்பாத்தி போட்டிருக்கேன். புள்ளைங்களோட சாப்ட்டு போய் படு!” என்றவர் வேறு எதையும் கேட்காது விட்டுவிட, இவளுக்கு ஒரு மாதிரியாகப் போய்விட்டது.
“ம்மா... அது, சம்பள பாக்கி தரணும்னு. அதான் ஏ.டி.எம் கூட்டீட்டுப் போய் எடுத்துக் குடுத்தாரு மா. கால் வலின்னு நானும் அவர் கூட வந்து இறங்கிட்டேன் மா. மத்தபடி எந்த தப்பான எண்ணமும் எனக்கில்லை மா. நான் உங்கப் பொண்ணு. நீங்க யாரைக் கை காட்றீங்களோ அவரைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன். நிவின் சார் என்னோட ஓனர். அது மட்டும்தான் மா. எங்களுக்குள்ள வேற ஒன்னும் இல்ல. அவர்தான் புரியாம பேசுறாரு. நாளைக்கு நிவின் சாரோட அப்பா வருவாரு, நீங்க அவர்கிட்டே பேசிப் புரிய வைங்க மா!” என்றவளின் குரலில் லேசான தவிப்பு. தாய் தன்னைத் தவறாக எண்ணி விடக் கூடாது என கலங்கிய மனதுடன் அவரை ஏறிட்டாள்.
சில நொடிகள் மௌனமாய் இருந்தவர், “என் பொண்ணைப் பத்தி எனக்குத் தெரியும் சுதி. ஆனால் மத்தவங்களும் எல்லாத்தையும் புரிஞ்சுப்பாங்கன்னு நம்ம எதிர்பார்க்க கூடாதுல்ல. நாளைக்கு வேற வீட்ல வாழப் போற பொண்ணு. இந்த நேரத்துல ஒரு பையன் கூட வந்து இறங்குற. உன் வாழ்க்கையை நினைச்சுதான் எனக்கு கவலை சுதி. உங்க அப்பா இருந்திருந்தா இப்படியெல்லாம் உன்னைக் கஷ்டப்பட விட்டிருக்க மாட்டார்னு ஏற்கனவே எனக்குள்ள ஒரு எண்ணம் இருக்கு. இப்போ உனக்கு இருபத்தைஞ்சு வயசாகிடுச்சு. இன்னும் உனக்கு கல்யாணம் பண்ண முடியாம நிக்கிறேன். இந்தப் பையன் கூட நேரங்கெட்ட நேரத்துல நீ வரவும் மனசு பதறுதுடி. பார்த்து பதனமா இருந்துக்கோ. நீ பொறுப்பான பொண்ணுதான். நான் சொல்லித் தெரியணும்னு இல்ல சுதி!” என அவர் கூற, இவளது விழிகள் தளும்பி நின்றன.
“சாரி மா!” என்றாள் புன்னகைக்க முயன்று தோற்ற குரலில்.
“போய் சாப்பிடு சுதி. நாளைக்கு அந்தப் பையன் வீட்ல இருந்து வரட்டும். அவங்க வீட்டுப் பெரியவங்ககிட்டே பேசுனா, கண்டிப்பா புரிஞ்சுப்பாங்க!” என அவர் இவளது கையைத் தட்டினார். சுதி விழிகளைத் துடைத்துக்கொண்டு தலையசைத்துவிட்டு பெயருக்கு உண்டுவிட்டு படுத்தாள்.
ருத்ராவும் தவாவும் கட்டிலில் ஏதோ சிரித்து சண்டையிட்டுக் கொண்டிருக்க, அவர்களையே பார்த்தவாறு படுத்திருந்தாள். விழிகளை மூடினாலும் உறக்கம் அண்டவில்லை. விழித்தே கிடந்தாள். நேரம் பத்தைத் தாண்டி ஓட, இவளது அலைபேசி சப்தமிட்டது. நிவின்தான் குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறான் என அவன் பெயர் திரையில் மின்ன, இவள் எடுத்துப் பார்க்கவில்லை. அடுத்தடுத்த சங்கிலித் தொடர் போல சப்தம் கேட்க, எடுத்துப் படித்தாள்.
“சாரி சுதிரமாலா... ஆன்ட்டி உன்னைத் திட்டியிருப்பாங்க, ஐ க்நோ. ரியலி சாரி ஃபார் எவ்ரிதிங்க்!” ஒவ்வொரு செய்தியையும் தனித்தனியாய் அனுப்பியிருந்தான். இவள் பதிலளிக்கவில்லை. அமைதியாய்ப் பார்த்திருந்தாள்.
“உன்னை ரொம்ப கஷ்டப்படுத்துறேனா சுதி?” அவன் குரல் செய்தி அனுப்பவும், அதைத் ஒலிக்கவிட்டாள். ஆழ்ந்த அமைதியில் அவன் குரல் செவியில் நுழையுவம், சுதியின் விழிகள் வேகவேகமாக நனைந்தன. மெதுவாய் விசும்பல் வெளிப்பட, அதை அடக்கிக் கொண்டாள்.
நடுங்கிய கரத்துடன் தட்டச்சு செய்தாள்.
“இல்லைன்னு பொய் சொல்ல மாட்டேன். ரொம்ப கஷ்டப்படுத்துறீங்க!” என இவளும் குரல் வழிச் செய்தி அனுப்ப, கேட்டவன் நொடியில் அழைத்துவிட்டான். இந்த நேரத்தில் அழைப்பான் என எதிர்பாராக்காதவள் திகைத்து விழித்து, அதைத் துண்டித்தாள்.
“கால் பண்ணாதீங்க. மெசேஜ் பண்ணுங்க!” இவள் செய்தி அனுப்ப, “நோ... ஐ நீட் டூ டாக் டூ யூ ரைட் நவ்!” என அவன் அனுப்ப,
“கால் அட்டென்ட் பண்ண முடியாது...” என்றாள் அழுத்தமாய்.
“சுதிமா... ப்ளீஸ் டா. ஒரு நிமிஷம் பேசணும்!” என அவன் குரலில் ததும்பி வழிந்த உணர்வில் சுதிக்கு மனம் வலித்தது. மூளை வேண்டாம் என்றாலும் மனம் செய் என கட்டளையிட, அதற்குப் பணிந்து அழைப்பை ஏற்றுக் காதில் பொருத்தினாள்.
“சாரி டா... ரியலி சாரி. நான் உன்னைக் ஹேர்ட் பண்ணணும்னு எதுவுமே பண்ணலை சுதி. ஐ ஜஸ்ட் வாண்ட் யூ டூ இன் மை லைஃப். இதுவரைக்கும் நான் சொன்னது இல்லை. பட் ட்ரஸ்ட் மீ, உன்னோட ஆப்சன்ஸ் என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிடுச்சு!” என அவன் பேசியதும் சுதியிடம் பதிலில்லை. அவன் குரல் வழி கடத்திய செய்தி புதிதுதான். சுகிக்க முயன்றாலும் அவளது நிலை அவளை முன்னெடுக்க அனுமதிக்கவில்லை. அழ வேண்டும் என்றொரு உந்துதல். தொண்டை வரை வந்த வார்த்தைகளோடு அழுகையும் அமிழ்த்தினாள். இந்நொடி அவனின் அன்பை சுதியால் பரிபூரணமாக உணர முடிந்திருந்தது. இதற்கு முன்னே பலமுறை பேசும் போது அலட்சியம் நிறைந்த குரல் இவளிடம் இந்நொடி மண்டியிட்டப் போது, அவன் பிரியத்தை இவளால் உணர முடிந்தது.
சில நொடிகளில் கண்ணீரைத் துடைத்து மூச்சை வெளிவிட்டவள், “நீங்க இருக்க இருப்புக்கு என்னைவிட பெட்டரா ஆயிரம் பேர் வருவாங்க சார். நான் முன்ன சொன்ன மாதிரிதான். இது ஜஸ்ட் உங்களை நான் கேர் பண்ணதால வந்த ஃபீலிங்க்ஸ். என் இடத்துல வேற ஒரு கல்யாணமானவங்க இருந்திருந்த இந்த உணர்வுக்கு அக்கான்னு பேர் வச்சிருப்பீங்க. ஆளுக்கு தகுத்தாப்புல மாறுற ஃபீலிங்க்ஸ் ஜஸ்ட் நத்திங் சார்!” என்றாள் அவனுக்குப் புரிய வைத்திடும் நோக்கோடு.
“சுதி... யூ க்நோ, அக்ஷா முன்னாடி ரெண்டு பேர் என்கிட்டே ப்ரபோஸ் பண்ணி இருக்காங்க. இன்ட்ரஸ்டடா டேட்டிங் கூட ஒரு சிலர் கூப்பிட்டு இருக்காங்க. அட் த டைம், எனக்கு எந்த ஃபீலிங்க்ஸூம் வரலை. அப்போ அவங்க என்னைக் கேர் பண்ணலையா என்ன. எக்ஸாம்பிள்க்கு சொல்றேன், அக்ஷா உன் கண்ணு முன்னாடியே என்னை எப்படி ட்ரீட் பண்ணுவா. பட் ஐ கான்'ட் ஃபீல் எனிதிங்க். பட் நீ அப்படி இல்ல, ஐ வாண்ட் யூன்னு நான் சொல்லி இருந்தா உன்னோட ரீசன் அக்செப்டபிள். பட் நீட் யூ... ஐ நீட் யூவர் ப்ரெசென்ஸ். எனக்கு இந்த சுதிரமாலா மட்டும்தான் வேணும். நீ படிக்கலை, அழகு இல்லன்னு உன்னை நீயே டீக்ரேட் பண்ணிக்காத. எனக்கு உன்னைப் பிடிக்கும்ன்ற ஒரு காரணம் போதும். நம்ப காலம் முழுக்க சேர்ந்து வாழ. என் மனசுக்குத் தெரியும். அது சொல்லும் யாரோட வாழ்ந்தா நான் சந்தோஷமா இருப்பேன். அபார்ட் ப்ரம் ஹேப்பினெஸ், உன்னோட வாழ்ந்தா நான் ரொம்ப நிம்மதியா இருப்பேன்.தென், இட்ஸ் அப் டு யு!” என அவன் பேசி முடித்து மூச்சை வெளிவிட, சுதி சுவற்றில் சாய்ந்து கண்களை மூடி அமர்ந்தாள். அவன் குரலில் இருந்த எதுவுமே பொய்யில்லை என மனம் கூற, மூளை அதட்டி அடக்கியது.
“ஹம்ம்... சோ, நீங்க டிசைட் பண்ணிட்டா போதும். எனக்குன்னு ஒரு விருப்பம், மனசு இருக்கும்னு உங்களுக்குத் தோணலையா சார். சச் எ செல்ஃபிஷ் யூ ஆர்!” என ஆதங்கமாய்க் கேட்டாள் பெண்.
“சாரி சுதி... உன்னோட விஷயத்துல நான் செல்ஃபிஷ்ஷாவே இருந்துட்டு போறேன்!” அவன் கூறவும் இவளுக்கு கோபம் வந்தது.
“திஸ் இஸ் நாட் ஃபேர் சார். நீங்க பண்றது தப்பு!” என அவள் அங்கிருந்தே நிவினை முறைத்தாள்.
“எவ்ரிதிங்க் இஸ் ஃபேர் இன் லவ் அண்ட் வார்!” அவன் கூறவும், சுதிக்கு கோபமும் சிரிப்பும் வந்தது.
“பழமொழி ஒன்னுதான் குறை. எதுக்கு இப்போ கால் பண்ணீங்க?” என சிடுசிடுத்தாள்.
“தேங்க்ஸ் சொல்லதான். எனக்காக உங்க அம்மாகிட்டே நீ சப்போர்ட் பண்ண இல்ல. ஐ ஃபெல்ட் வெரி ஹேப்பி சுதி!” என அவன் குரலில் மகிழ்ச்சி ததும்பி வழிந்தது.
“ச்சு... அப்போவே திட்டணும்னு நினைச்சேன். இதெல்லாம் உங்களுக்குத் தேவையா? அம்மா பார்க்கத்தான் அமைதி. பட் அவங்க கோபப்பட்டுட்டா யார் என்னென்னுப் பார்க்காம பேசிடுவங்க. உங்களை அவங்க ஹேர்ட் பண்ண கூடாதுன்ற கன்சன்லதான் அப்படி சொன்னேன். ப்ளீஸ் இதுமாதிரி பண்ணாதீங்க. எனக்கு சுத்தமா பிடிக்கலை!” என அவள் கோபத்தில் இரைந்தாள்.
“என்னைப் பிடிக்கலையா சுதி?” ஆழ்ந்து செவியோரம் அடர்ந்தக் குரலில் சுதிக்கு கோபம்தான் வந்தது. ஏன் இவன் இப்படியெல்லாம் பேசுகிறான் எனப் பல்லைக் கடித்தவள், “இப்போ இருக்க நிவினை எனக்கு சுத்தமா பிடிக்கலை. முன்னாடி பிடிச்சது. ஒரு வார்த்தை அதிகமா பேசாம மூஞ்சித் திருப்பிட்டு போனா கூட அவர் நல்லவர். வேலை விஷயத்துல தவிர எந்த வகையிலயும் என்னை அவர் டிஸ்டர்ப் பண்ணது இல்ல. ஹீ இஸ் சோ ஜென்யூன். பட், இப்போ இருக்கவரு என் உசுரை எடுக்குறாரு. சொன்னா எதையும் புரிஞ்சுக்க மாட்றாரு. இவர் பிடிச்ச முயலுக்கு மூனு கால்னு நிக்கிறவரு!” சுதி படபடவென பொரியவும், நிவின் முகம் மலர்ந்து போனது.
“ஹம்ம்... அப்போ அந்த முசுடு நிவினா இருந்தா கல்யாணம் பண்ணிப்பீயா சுதிரமாலா?”
“ப்ம்ச்... அந்நியன், அம்பின்னு நீங்க எத்தனை வேஷம் போட்டாலும், என் வாய்ல இருந்து பாசிட்டீவா ஒரு வார்த்தை வராது சார். நான் முன்ன சொன்னதுதான். எனக்கு என் ஃபேமிலி முக்கியம். அவங்களைத் தாண்டி வர்ற அளவுக்கு ஐ யம் நாட் அ செல்ஃபிஷ். இப்பவும் அதேதான் சொல்றேன். என் அம்மா சொல்ற பையனைத்தான் கட்டிப்பேன் நான்!” சுதி ஆதங்கம் பொங்க உரைத்தாள்.
“ஹம்ம்... அப்போ ஆன்ட்டியைக் கரெக்ட் பண்ணிட்டா, நீ ஓகே சொல்லிடுவ. ஐ யம் ரைட் சுதி?” அவன் தாடையைத் தடவ,
“சீ... என்ன பேசுறீங்க?” அவள் உதட்டை சுழிக்க, நிவின் சத்தமாய் சிரித்திருந்தான்.
“ஹாஹா... டோன்ட் மைண்ட் எனிதிங்க் பேட் சுதிரமாலா. நான் அவங்களோட சம்மதத்தைதான் அப்படி மீன் பண்ணேன்!” என சிரிப்புடன் அவன் கூற, “ஓ...” என இழுத்தாள் பெண்.
அவன் குரலின் பின்னே வாகன இரைச்சல் கேட்கவும், “ஹாரன் சவுண்ட் கேட்குதே. எங்க இருக்கீங்க. கிளம்புன நேரத்துக்கு எப்பவோ வீட்டுக்குப் போய்ருக்கணுமே?” என சுதி யோசனையாய்க் கேட்டாள்.
“ஹம்ம்...” என இழுத்தவன், “யெஸ், போய்ருக்கணும். பட் போகத் தோணலை. சோ அப்படியே சின்னதா ஒரு லாங் ட்ரைவ்!” என அவன் மூச்சைவிட்டான்.
“பகல்லயே பசுமாடு தெரியாம விழுந்து வாருனவரு நீங்க. இதுல நைட்டுல எருமை மாடு தெரியுமா? எதுக்கு இப்போ லாங் டரைவ்?” அவள் அதட்ட, இவனுக்கு புன்னகை அரும்பிற்று.
“தெரியலையே... போகணும்னு தோணுது. அதான்!” என்றான்.
“போன வரைக்கும் போதும். இப்போ வீட்டுக்கு கிளம்புங்க. டைமாச்சு!” கட்டளையிட்டாள் பெண். நிவினின் மொத்தமும் அடிபணிந்து போனது.
“உத்தரவு மகாராணி. இப்பவே கிளம்புறேன்!” என்றவன், “சுதி... இப்போ நீ ஓகே தானே. என் மேல கோபம் இருந்தா அன்னைக்கு வந்தது போல நேர்ல கூட வந்து திட்டிடு. நீயே உன்னைக் கஷ்டப்படுத்திக்காத. உன் வாய்ஸ் நோட் கேட்டதும், ஐ ஃபெல்ட் கில்ட். நான் ஏதோ தப்பு பண்ற மாதிரி இருக்கு. ஐ நெவர் வான்ட் டூ ஹேர்ட். ஐ நீட் யூ. தட்ஸ் இட். உன்னைத் தவிர உன்கிட்ட வேற எதையும் நான் எக்ஸ்பெக்ட் பண்ணலை சுதிரமாலா!” நுரைத்துத் ததும்பிய குரலில் சுதியின் மனம் தடுமாறியிருந்தது. அசட்டையாய் இருந்தக் குரலை புறக்கணிக்க முடிந்தவளால் இந்தக் குரலை புறந்தள்ள முடியவில்லை.
தவித்த மனதை இழுத்துப் பிடித்தவள், “பத்திரமா வீட்டுக்குப் போங்க சார். நான் காலைக் கட் பண்றேன்!” என்றாள். ஏனோ மூச்சடைத்தது அவளுக்கு.
“ஹம்ம்... குட் நைட் சுதி. நாளைக்கு ஈவ்னிங் மீட் பண்ணலாம்!” என அவன் கூற,
“நாளைக்கு நான் வீட்ல இருக்க மாட்டேன்?”
“ஏன்...ஏன்? அந்த பாஸ்கர் பொண்ணுப் பார்க்க வந்தப்போ மட்டும் மேடம் மேக்கப் போட்டு அழாக வந்து நின்னீங்க. எனக்கு எதுவும் கிடையாதா?” அவன் குரலில் பொறாமைக் கொட்டிக் கிடந்தது. அதை உணர்ந்த சுதிக்கு புன்னகைதான்.
“ஃபார் அ கைண்ட் இன்பர்மேஷன் சார், அவர் என்னைப் பொண்ணு பார்க்க வந்தவரு. பட் நீங்க, நான் வேணாம்னு தொரத்துனாலும் ப்ரெண்ட்லி விசிட்னு மொத்த ஃபேமிலியையும் கூட்டீட்டு வரப் போறீங்க. ரெண்டுத்துக்கும் மலையளவு வித்யாசம் இருக்கு!” என இவள் சிலுப்ப, “ஓ...” என அவன் முனங்கினான்.
“நாளைக்கு அம்மா உங்ககிட்டே கோபமா பேசிருவாங்களோன்னு பயமா இருக்கு சார். கண்டிப்பா நாளைக்கு நீங்க வருவீங்களா?”
“ஹண்ட்ரட் பர்சன்ட் வருவேன்!” அவன் அழுத்திக் கூற,
“இன்னைக்கு மாதிரி நாளைக்கும் அவங்க முகத்தைத் தூக்கிடுவாங்க சார். தேவையில்லாத சங்கடம் உங்களுக்கு. பேசாம இதை அப்படியே விட்ருங்க சார்!” அவள் இறைஞ்சலாய்க் கேட்க,
“கேட்டதும் பொண்ணைக் கொடுக்குறதுக்கு சுதி அவ்வளோ ஈஸி இல்ல. ஐ க்நோ, ஐ ஹேவ் டூ வொர்க் ஹார்ட் டூ கெட் யூ இன் மை லைஃப் சுதி!” என்றவன், “டோன்ட் வொர்ரீ. ஆன்ட்டிகிட்டே எப்படி பேசுறதுன்னு எனக்குத் தெரியும். நீ விடு, நான் பார்த்துக்குறேன்!” என்றான் ஆதரவாக.
“என்னத்தைப் பார்க்க போறீங்களோ தெரியலை. நான் நாளைக்கு வீட்ல இருக்க மாட்டேன். என்னமோ பண்ணுங்க, யார் சொல்றதையும் கேட்க கூடாதுன்ற முடிவுல இருக்கீங்க. பட் ஒன்திங்க், இது நடக்க வாய்ப்பு ரொம்ப கம்மி!” என்றவள் அரவம் கேட்கவும், “அண்ணி வர்றாங்க. ஊர் சுத்தாம ஒழுங்கா வீட்டுக்குப் போய் சாப்ட்டு படுங்க!” என்ற அதட்டலுடன் அழைப்பைத் துண்டித்து அலைபேசியைத் தூரப் போட்டுவிட்டு போர்வைக்குள் சுருண்டு கொண்டாள். மெதுவாய் நிவினுக்கும் தனக்குமான உரையாடலை மனம் அசைப்போடத் தொடங்கியது. அலைபேசியை சிறிது நேரம் பார்த்திருந்த நிவின் முகத்தில் புன்னகை வாடவேயில்லை. வீடு சென்று சேர்ந்தான்.
மறுநாள் காலையில் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்த சுதியைத்தான் சௌம்யா குறுகுறுவென பார்த்திருந்தாள். அவளைக் கவனித்தாலும் கருத்தில் கொள்ளாது சுதி குளித்து முடித்து உண்டு தயாராக, “இன்னைக்கு நீ வேலைக்கு லீவ் போடுவன்னு நினைச்சேன் சுதி. நீ பாட்டுக்கு கிளம்பிட்டு இருக்க?” பின்னே ஒலித்தக் குரலை செவியில் வாங்கியவள் திரும்பாது, “எதுக்கு அண்ணி லீவ் போடணும்? எங்க ஓனர் அப்புறம் கடிச்சு கொதறிடுவாரு...” என்றவாறே கண்ணாடியைப் பார்த்து பொட்டை இரண்டு புருவங்களுக்கு மத்தியில் பொருத்தினாள்.
“அந்தப் பையன் நிவின் ஃபேமிலியோட வர்றாரே சுதி?” சௌம்யா குழப்பம் நிறைந்தக் குரலில் கேட்டாள்.
“வரட்டும் அண்ணி. அதான் அம்மா இருக்காங்கல்ல. அவங்க பேசி அனுப்பி விடுவாங்க. நான் எதுக்கு தேவையில்லாம. எப்படியும் வேணாம்னு சொல்றதுக்கு எதுக்கு நான்?” அவள் பொறுமையாய்ப் பேச,
“சுதி எங்களுக்காகப் பார்த்து நீ பேசாத. அந்தப் பையன் மேல உனக்கு விருப்பம் இல்லையா?” என இவள் அதட்டினாள்.
அவளைத் திரும்பிப் பார்த்த சுதி, “நிஜமா இல்லை அண்ணி. அம்மாகிட்டே நேத்து நான் சொன்னது உங்களுக்கும் சேர்த்துதான். அவர் என்னோட ஓனர். நான் அவர் வீட்ல வேலை பார்த்த பொண்ணு. அதைத் தவிர அவர் மேல எனக்கு எந்த உணர்வும் இல்ல அண்ணி. அவர்தான் புரிஞ்சுக்காம ஒரே பல்லவியைத் திரும்பி திரும்பிப் பாடீட்டு இருக்காரு!” என மூச்சை விட்டவள், “நீங்களும் அம்மாவும் தன்மையா பேசி வேணாம்னு முடிச்சு விடுங்கண்ணி. அவருக்கு ஏத்தப் பொண்ணா அவங்கப்பாவை சீக்கிரம் பார்க்க சொல்லுங்க. அவருக்கொரு கல்யாணம் நடந்துட்டா, மூவ் ஆன் ஆகிடுவாரு!” என சலனமில்லாமல் கூறினாள்.
“நிஜமா சுதி... எனக்கு நம்பவே முடியலை. அவன் மேல உனக்கு ஃபீலிங்க்ஸ் இருக்குன்னு நான் நினைச்சுட்டு இருந்தேன். பட் நீ பேசுறதைப் பார்த்தா ஒன்னுமே இல்லை போல?” அவள் வருத்தமாய்க் கேட்டாள்.
“ஒன்னுமே இல்லைதான் அண்ணி. அவர் மேல எதுக்கு என்னமும் வரணும். வேலை செய்ற ஓனர் மேல ஃபீலிங்க்ஸ் வரணும்னா, எங்க சூப்பர் வைசர் மேலத்தான் முதல்ல வந்திருக்கணும்!” என்றவள் குறும்பாய் சிரிக்கவும், சௌம்யா முறைத்தாள்.
“ஒன்னுமே இல்லையா சுதி. நீ பொய் சொல்லலை இல்ல?” பெரியவள் கவலையாய்க் கேட்க, “ச்சு அண்ணி... என்னைக்குமே தகுதிக்கு மீறுன விஷயத்து மேல என் பார்வை போனதே இல்லை. நிவின் சாரும் அப்படித்தான். அவர் ஏதோ தனியா இருந்து நான் குக் பண்ணி கேர் பண்ணதால இப்படி பிஹேவ் பண்றாரு. பட் ரியாலிட்டின்னு ஒன்னு இருக்குல்ல. நீங்களே சொல்லுங்க. நியாயமா நம்ப அவர் இடத்துல இருந்திருந்து, நிவின் சார் நம்ப இடத்துல இருந்தா நீங்க என்னை அவருக்கு கல்யாணம் பண்ணி வச்சிருப்பீங்களா?” என சுதி கேட்க, சௌம்யா இல்லையென தலையை அசைத்தாள்.
“ஹான்... அதான் நானும் சொல்றேன். நம்மளோட நிலைமை என்னென்னு தெரிஞ்சவ நான். பணக்காரன் வேணாம் அண்ணி. என் குடும்பத்தை அவன் குடும்பமா மதிக்கிறவன் போதும் அண்ணி!” என்றவள் சில நொடிகள் நிறுத்தி, “நிவின் சாரை நான் குறையா சொல்லலை. பட் நான் ஒரு வேலைக்காரியா இருக்கும் போது என்கிட்ட அவர் காட்டுன முகம் வேற. இப்போ அவர் இருக்குறது வேற. உண்மையை சொன்னா, பேச காசு கேக்குற மனுஷன். அவரோட இயல்பே இது இல்லை. முசுடு முகமும் சிரிக்க தெரியாத உதடும்தான். இன்னைக்கு நீங்க பார்க்குறவரு உங்களை இம்ப்ரெஸ் பண்ணி இருக்கலாம். பட் நான் அவரோட ரெண்டு சைடையும் பார்த்திருக்கேன். அதனாலதான் உறுதியா மறுக்குறேன் அண்ணி!” எனக் கூறிய சுதி கிளம்பி செல்ல, சௌம்யா செல்லும் அவளைப் புரியாது பார்த்திருந்தாள். இருவருடைய செய்கையும் வைத்து அவள் வேறு கணக்கைப் போட்டு வைத்திருக்க, கடவுளின் முடிச்சு வேறொன்றோ என ஆழ்ந்த சிந்தனைக்குச் சென்றுவிட்டாள்.
வேலைக்குச் சென்ற சுதியிடம் அக்ஷா வந்து ஆடித் தீர்க்க, சுதி அவளை பேசியே ஓட வைத்திருந்தாள்.
தொடரும்...