- Messages
- 1,028
- Reaction score
- 2,912
- Points
- 113
பொழுது – 16
“இன்னொரு தோசை சாப்ட்றீயா சுதி?” சந்திரா வினவிக் கொண்டே அவளுடைய தட்டில் தோசையை நிரப்பினார்.
“இதோட போதும்மா!” என்றவள் உண்டுவிட்டு அனைத்தையும் சரிபார்த்துக் கைப்பையை எடுத்து மாட்டினாள்.
“சண்டை எதுவும் போடாத சுதி. பொறுமையா அந்தப் பையன்கிட்ட சொல்லிட்டு வா. தேவையில்லாத வம்பு நமக்கு வேணாம்!” கவலைப் படிந்த குரலில் கூறிய சந்திராவைப் பார்த்து மென்மையாய் புன்னகைத்தவள், “ம்மா... சண்டை போட மாட்டேன். நீங்க இதையே நினைச்சிட்டு இருக்காதீங்க. நான் பார்த்துக்கிறேன்...” என்றாள் ஆதரவாக கையைப் பிடித்து.
“என்ன பார்த்துப்ப சுதி!” குறுகுறுவென தன்னையே தொடரும் சௌம்யாவின் பார்வையில் நிமிர்ந்து அவளை அழுத்தமாகப் பார்த்தாள் சுதி.
“இந்தப் பிரச்சனையை எப்படி சமாளிக்கிறதுன்றதை நான் பார்த்துக்கிறேன்னு சொன்னேன் அண்ணி...” என்றாள் தீர்க்கமாக.
“ஹம்ம்!” நான்கு பக்கமும் தலையை உருட்டிய சௌம்யா இவளை நம்பாது பார்த்து வைத்தாள். சுதி சில நொடிகள் சௌம்யாவைப் பார்த்துப் பின்னர் புன்னகைத்தாள்.
“நீங்க நினைக்கிற மாதிரி காரியம் எல்லாம் நடக்கவே நடக்காதுண்ணி. நேத்து வந்த மாப்பிள்ளை பாஸ்கர்க்கு அம்மா பிக்ஸ் ஆகிட்டாங்க. சோ, ஓவர் திங்கிங்கை விட்டுடுங்க. நிவின் சார்கிட்டே இன்னைக்கு தெளிவா எல்லாத்தையும் பேசிட்டு வந்துடுவேன் நான்” என்றவள் விடைபெற, சௌம்யாவின் உள்மனது வேறு ஏதோ செய்தி சொல்லிற்று. எதுவாக இருந்தாலும் பார்க்க்ததானே போகிறோம் என அசட்டையாய் நினைத்தாள் அவள்.
பேருந்தில் ஏறியமர்ந்த சுதி இலவச பயணச்சீட்டைப் பெற்றுக் கொண்டு அலைபேசியை கையிலெடுத்தாள். புலனத்தை திறந்து நிவினின் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்.
“ஒரு டென்மினிட்ஸ்ல அப்பார்ட்மெண்ட் கேட்க்கு வாங்க சார். உங்ககிட்டே பேசணும் நான்!” அவள் செய்தி அனுப்பிய நொடி நிவின் பார்த்திருந்தான்.
“நோ... உனக்கு என்கிட்ட பேசணும்னா, நீதான் என் வீட்டுக்கு வரணும். நான் வரமாட்டேன்!” அவன் பதிலில் எரிச்சலானவள், “வம்பு பண்ணணும்னே நினைக்காதீங்க சார். கீழே வாங்க!” என செய்தியைத் தட்டிவிட்டாள்.
பார்த்துவிட்டான், இருந்தும் பதிலளிக்கவில்லை என சுதி எண்ணிக் கொண்டிருக்கும் போதே அழைப்பை விடுத்தான். சில நொடிகள் யோசித்துவிட்டு அதை ஏற்றுக் காதிற்கு கொடுத்தாள்.
“சச் அ இர்ரெஸ்பான்சிபிள் பெர்சன் யூ ஆர் சுதி. லீவ் வேணும்னா இன்பார்ம் பண்ணணும்னு தெரியாதா உனக்கு. டைம் என்ன இப்போ? இவ்வளோ லேட்டா ஏன் வரணும்? பேசாம வேலைக்கு வராம இருந்திருக்கலாம்!” படபடவென பொரிந்தவன், “நான் உன்கிட்ட ப்ரபோஸ் பண்ணேன்றதுக்காக வேலையில அட்வாண்டேஜ் எடுக்கணும்னு நினைக்காத சுதிரமாலா. இட்ஸ் நாட் குட். வொர்க் வேற, பெர்சனல் வேற!” என அவன் பேசி முடித்ததும் சுதிக்கு பேருந்து ஜன்னல் கம்பியில் தலையை முட்டிக் கொள்ளலாம் என்றிருந்தது.
பல்லைக் கடித்துப் பொறுமையை இழுத்துப் பிடித்தவள், “நான் நேத்தே உங்ககிட்டே சொல்லிட்டேனே சார். எனக்கு வேலைக்கு வர இஷ்டம் இல்ல. இனிமே வரவும் மாட்டேன்” என்றாள் கடுப்புடன்.
“வேலையை விட்டு நிக்கிறதுக்கு ஒன்மந்த் பிஃபோர் இன்பார்ம் பண்ணணும்ன்றது லா புக்லயே இருக்கு. நீ உன் இஷ்டத்துக்கு நிக்க முடியாது. நான் லீகலா உன் மேல ஆக்ஷன் எடுப்பேன்!” என அவன் பேசும்போதே சுதி அழைப்பைத் துண்டித்துவிட்டாள். இப்போதே அவளுக்கு ஆயாசமாக இருந்தது. அவனிடம் எப்படிப் பேச போகிறோம் என நினைத்ததும் அயர்ந்து போனாள். நிவின் அலைபேசியை முறைத்துப் பார்த்தான்.
சில பல நிமிடங்களில் தன்னைத் தேற்றியவன் எழுந்து சென்று இருவருக்கும் குளம்பியைத் தயாரித்து தனக்கொன்றை எடுத்துக்கொண்டு வந்து அமர, அழைப்பு மணி ஒலித்தது. சுதிதான் வந்திருப்பாள் என ஊகித்து கதவைத் திறந்தான். அவள்தான் நின்றிருந்தாள்.
“கெட் இன் சுதிரமாலா!” என்றவனின் முகத்தைப் பார்க்க விருப்பமற்று தலையசைத்து உள்ளே வந்தாள்.
“சிட், ஒன் மினிட்ல நான் வரேன்...” என்று உள்ளே சென்று ஒரு குவளையில் குளம்பியை ஊற்றி அவளுக்கு முன்னே வைத்தான்.
“எதுவா இருந்தாலும் காஃபியைக் குடிச்சிட்டு பேசு!” என அவனுமே அவளுக்கு எதிரில் அமர்ந்து குளம்பியைப் பருகினான். சுதி அதைத் தொடக் கூடவில்லை. அமைதியாய் வீட்டை நோக்கினாள். அவள் சுத்தம் செய்வதைவிட இன்னுமே நன்றாய் பளபளவென வைத்திருந்தான் வீட்டை. இவனளவிற்குத் தன்னால் சுத்தம் செய்ய முடியவில்லையோ என மனம் வேறு சிந்தனையில் உழன்றது.
“காஃபி குடிச்சா நீ பேசுறதை நான் கேட்பேன். இல்லைன்னா நீ கிளம்பலாம் சுதி!” அவன் கூறியதும் நிமிர்ந்து அழுத்தமாய் அவனைப் பார்த்தவள், “எனக்கு காஃபி பிடிக்காது சார்!” என்றாள் காரமாய். இவனிஷ்டத்திற்கு நான் வளைய மாட்டேன் என்ற கோபம் குரலில் இருந்தது.
“ஓஹோ... இனிமே பழகிக்கோ. எனக்கு காஃபி தான் பிடிக்கும். ஒரு நாளைக்கு போர் டைம்ஸ் குடிப்பேன். எனக்கு கம்பெனி குடுக்கணும் நீ!” என்றவனை அமைதியாகப் பார்த்தவள், “நான் பேசுறதை ஒரு பத்து நிமிஷம் நீங்க பொறுமையா கேட்கணும்...” என்றாள் இழுத்துப் பிடித்த குரலில்.
“நான் பொறுமையா கேக்குறது இருக்கட்டும். நீ ஏன் இவ்வளோ டென்ஷனா இருக்க சுதி. ஹோப் யூ ஆல் ரைட்?” எனக் கேட்டவனை பிரித்தரிய முடியாத நோக்கியவள், “நிஜமா சொல்லணும்னா நான் நல்லா இல்லை சார். நீங்க என்னை ரொம்ப டார்ச்சர் பண்றீங்க!” என்றாள் கோபத்தை அடக்கிய குரலில்.
“ஓ... நான் லவ் டார்ச்சர் பண்றேனா சுதி?” அப்பாவியாய்க் கேட்டவனை முறைத்தவள், “அதொன்னுதான் குறை. ஏன் என்னை இவ்வளோ பாடுபடுத்துறீங்க. உங்களுக்கு உதவி செஞ்ச பாவத்துக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும் எனக்கு!” என்றாள் ஆற்றாமையாய். நிவின் கையை சற்றே தளர்த்தி அசட்டையாய் அவளைப் பார்த்தான். அந்தப் பார்வை இவளை வெறியேற்றியது.
“அன்னைக்கு எப்படியோ போங்கன்னு ரோட்ல விட்டுட்டுப் போய்ருக்கணும். தேவையில்லாம உங்க உயிரைக் காப்பாத்துனதுதான் என்னோட முதல் தப்பு. அதுக்கு பனிஷ்மெண்ட்னு சூப்பர்வைசர் கிட்டே நான் பட்ட கஷ்டமெல்லாம் உங்களுக்கு எங்கத் தெரியப் போகுது...” எனப் பொரிந்தவளை ஆழ்ந்து பார்த்தவன், “செத்தா சாகட்டும்னு விட்டுட்டுப் போய்ருக்க வேண்டியதுதானே சுதிரமாலா. வொய் டிட் யூ ஆட்மிட் மி இன் ஹாஸ்பிடல்?” எனக் கேட்டான்.
“இதுக்கான பதிலை நான் ஏற்கனவே உங்ககிட்டே சொல்லிட்டேன். நீங்கன்னு இல்ல, அந்த இடத்துல யாரா இருந்தாலும் ஹெல்ப் பண்ணி இருப்பேன். இட்ஸ் மை நேச்சர். அதுக்காக நான் அன்னைத் தெரசா எல்லாம் இல்லை. எனக்கு சரின்னு பட்டதால உங்க உயிரைக் காப்பாத்துனேன்!” என்றாள் மனதிலிருப்பதை மறைக்காது.
“ஓஹோ...” அசட்டையாக உதட்டைக் குவித்து யோசித்தவன், “ரைட்... நீ சொல்றதுல நியாயம் இருக்கு சுதிரமாலா!” என்றவனின் பேச்சில் அவளுக்கு நிம்மதி பிறந்தது. ஒருவழியாய் இப்போதாவது இவனுக்குப் புரிந்ததே எனத் தளர்ந்து அமர்ந்தாள்.
அடுத்து என்ன பேசுவதென அவள் மனதில் வரிசையாய் யோசிக்க, “பட், ஒன்திங்க். என் உயிரைக் காப்பாத்துனது நீதானே. சோ, ஃபர்ஸ்ட் டைம் எனக்கு உயிர் கொடுத்தது பேரண்ட்ஸ். அது அவங்களுக்கு சொந்தம். நெக்ஸ்ட் டைம் உயிர் கொடுத்தது நீ. சோ, இந்த உயிர் உனக்குத்தானே சொந்தம். அதான் என்னை மேரேஜ் பண்ணி என்னை சொந்தமாக்கிக்க சொல்றேன் நான். லாஜிக் கரெக்டா இருக்கா?” எனக் கேட்டவனை என்ன செய்தால் தகுமெனப் பார்த்தாள்.
“ஓ... உங்க லாஜிக் சரின்னே வச்சுப்போம் சார். அன்னைக்கு ஆம்புலன்ஸ்ல ஃபர்ஸ்ட் எய்ட் பண்ண லேடி ஒருத்தவங்க இருந்தாங்க. அவங்களும்தான் உங்க உயிரைக் காப்பாத்துனது. நீங்க ஏன் அவங்கிட்டே ப்ரபோஸ் பண்ண கூடாது?” எனக் கேலியாய்க் கேட்டாள்.
“யெஸ்... யூ ஆர் ரைட் சுதிரமாலா. பட் அந்த லேடி நீயாக முடியாதில்லை!” என்றான் அடர்ந்தக் குரலில். அதை அவதானிக்க முயன்று தோற்றவள் மூச்சை இழுத்துப் பிடித்து தன்னை நிதானப்படுத்தி நேராய் அமர்ந்தாள்.
“நேத்தே நான் உங்ககிட்டே சொல்லிட்டேன் சார். என்னோட லைஃப் ஸ்டைல் வேற. மாசம் பதினஞ்சாயிரம் கம்பளத்துக்கு நாயா ஓடி உழைக்கிறவ நான். ஈஸியா ஆறாயிரம் ரூவாக்கு சென்ட் வாங்குறவரு நீங்க. உங்களோட ஒரு மாசம் எக்ஸ்பென்ஸ் எங்களுக்கு ஐஞ்சாறு மாசம் சாப்பாட்டு செலவுக்கு காணும். நீங்க நினைக்கிற மாதிரி நான் இல்லை. நேத்து மார்னிங் நீங்க பேசும்போது நான் கோபப்பட்டேன். உங்களோட இன்டென்ஷன் தப்புன்னு தோணுச்சு. பட் ஈவ்னிங் நீங்க வீட்டுக்கு வந்தது கோபம் வந்தாலும் நிதானமா நைட் யோசிச்சுப் பார்த்தேன் நான். ஐ அக்செப்ட். உங்களோட எண்ணத்துல தப்பில்லை. பட், ஒன்னை நீங்க புரிஞ்சுக்கணும். உங்களுக்கு மட்டும் விருப்பம் இருந்தா போதாது. எனக்குப் பிடிக்கணும்!” என நிறுத்தியவள், “ஓ... பெக்கர்க்ஸ் கான்ட் பீ சூசர்ஸ்னு நினைச்சுட்டீங்களோ?” என எள்ளலாகக் கேட்டாள். நிவின் எதுவும் பேசாது சில நொடிகள் அவளை நோக்கியவன், “இதுவரைக்கும் ஐ டிடின்ட் திங்க். பட் இனிமே நினைச்சா நினைக்கலாம்!” என்றான் உதட்டை வளைத்து.
“தெரியும்... உங்களுக்கு அந்த மாதிரி எண்ணம் இல்லாம இருந்தால்தான் அதிசயம். இட்ஸ் ஓகே சார். நான் கோபப்பட மாட்டேன். உங்களோட எண்ணம் உங்களோட இருந்துட்டுப் போகட்டும். நீங்க எனக்குப் பிச்சை போடவும் வேணாம். அதை நான் தலையெழுத்தேன்னு அக்செப்ட் பண்ணவும் வேணாம். என் அம்மா பார்த்து யாரைக் காட்டுறாங்களோ அவரைத்தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன். யாருமே இல்லாம அனாதையாக நின்ன என்னை இவ்வளோ தூரம் வளர்த்தவங்க அவங்க. சோ, அவங்களுக்குத்தான் என் வாழ்க்கையில எல்லா முடிவெடுக்குற உரிமையும் இருக்கு!” என்றாள் தீர்க்கமாக.
“திஸ் இஸ் டூ மச் சுதிரமாலா!” நிவின் முகத்தைச் சுருக்க, அவள் என்னவெனப் புரியாது நோக்கினாள்.
“எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. சோ உன்னை இம்ப்ரெஸ் பண்றதுல ஒரு நியாயம் இருக்கு. பட் வொய் ஷூட் ஐ இம்பெர்ஸ் யுவர் மாம். அவங்களுக்கு என்னைப் பிடிக்கணும்னு என்ன செய்ய முடியும் நான்?” எனக் குறும்பாய்க் கேட்டவனை அற்பமாய்ப் பார்த்தாள் பெண்.
“ஓகே சில் சுதி... உங்க அம்மாவை சம்மதிக்க வைக்க வேண்டியது என்னோட வேலை. ஐ யம் ஷ்யூர், அவங்களே உன்கிட்ட வந்து என்னை மேரேஜ் பண்ணிக்க சொல்வாங்க!”
“இம்பாசிபிள்!” சுதி உதட்டைச் சுழித்தாள்.
“ஐ கேன் மேக் இட் பாசிபிள்!” என அவனும் தோளைக் குலுக்கினான்.
“வாய்ப்பே இல்லை. என் அம்மா எனக்கு எப்பவும் நல்லது மட்டும்தான் நினைப்பாங்க. உங்களை மாதிரி ஒரு ஆளுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க மாட்டாங்க!” என்றாள் கேலியாய்.
“என்னை மாதிரி மீன்ஸ்? வாட் சுதி. லெட் மீ க்நோ!” என்று கேட்டபடியே முன்னே நகர்ந்தமர்ந்தான் நிவின்.
“நான் நல்லா சொல்லிடுவேன். பட் உங்க மனசுதான் கஷ்டப்படும். பரவாயில்லையா சார்?”
“ஹே... ஐ யம் சோ மச் ஈகர் டூ நோ யுவர் தாட்ஸ். என்னை மேரேஜ் பண்ணிக்கப் போற பொண்ணு மனசுல என்னைப் பத்தி என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க ஈகரா இருக்கேன்!” உண்மையிலே அவன் குரலில் ஆர்வம் ததும்பி இருந்தது. அதில் கடுப்பானாள் சுதிரமாலா.
“உங்களை மாதிரி ஒருத்தரை என்னைக்கும் எனக்குப் பிடிக்காது. பணம் காசு இல்லைனாலும் மனுஷங்களை மதிக்குறவரைத்தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன். உங்களை மாதிரி எதுக்கெடுத்தாலும் எரிஞ்சு விழுற உம்முனா மூஞ்சி எனக்கு வேணாம். உங்க முகம் வெள்ளைதான். பட் உங்க எண்ணம் சரியில்லை சார். யார் மேல என்ன கோபம்னாலும் வேலைக்காரங்க இழிச்ச வாய்ங்கன்னு அவங்க மேல காட்றது, அவங்களை மனுஷங்களா மதிக்காமல் இருக்குறது இதெல்லாம் உங்களோட குணம்!” என்றவளைப் பார்த்து யோசித்தான் நிவின்.
“யெஸ்... நீ என்னை கரெக்டா அனலைஸ் பண்ணி இருக்க சுதிரமாலா. எனக்கு ஈகோ அதிகம்தான். சின்ன வயசுல இருந்தே ஹெட் வெயிட் அதிகம்னு எல்லாரும் சொல்வாங்க. இட்ஸ் மை நேச்சர். அதை மாத்த முடியாது. அண்ட் அன்னைக்கு உன்கிட்ட கோபப்பட்டது தப்புன்னு ஐ ஆக்ஸ்ட் சாரி. அதுக்கப்புறம் அப்படி எதுவும் நடந்ததா எனக்கு ஞாபகம் இல்லை. சோ, அது என்னோட மிஸ்டேக்தான். அக்செப்ட் பண்ணிப்பேன். இனிமே அப்படி நடக்காதுன்னு என்னால கேரண்டி வாரண்டி எல்லாம் குடுக்க முடியாது. ஆஃபிஸ்ல எதுவும் டென்ஷன்னா என்னைக்காவது ஒருநாள் உன்கிட்ட கோபப்படலாம்தான். ஏன்னா நான் வேற யார்கிட்ட கோபப்பட முடியும். என்னோட வொய்ப்கிட்டே தானே நான் நானா இருக்க முடியும். கோபப்பட்டு திட்டுனாலும் நானே சமாதானம் கூட செய்வேன்!” நிவின் ஒப்புக் கொண்டான். எந்தப் பசப்பு வார்த்தைகளையும் அவன் கூறவில்லை. என் இயல்பே இதுதான் என ஒப்புக் கொண்டவனை சுதியின் ஆச்சரிய பார்வை ஒரு நொடி உரசிப் போனது. அவன் கோபம் கொள்வான் என இவள் நினைத்திருக்க, அவனின் பதில் தலைகீழாய் இருந்தது.
“எல்லாத்தையும் ஒத்துக்கிட்டா நீங்க அக்மார்க் நல்லவராகிட மாட்டீங்க!” சுதி முறைத்தாள். நிவின் உதடுகளில் மெதுவாய் புன்னகை ஏறியது.
“ஐ சீ... நான் என்னை நல்லவன்னு சொல்லவே இல்லையே சுதிரமாலா!” என்றவன், “தென் வேற எதுவும் இருக்கா? இல்ல அவ்வளோதானா?” எனக் கேட்டவனை முறைத்தவள்,
“எனக்குப் புருஷனா வர்றவரு எனக்கு மட்டும்தான் சொந்தமா இருக்கணும். பாரின் கல்சர் ஐடி கல்சர்னு பார்க்குற பொண்ணுங்களை எல்லாம் கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுக்குறது எல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்காது. கொஞ்சம் கூட நாகரீகம் இல்லாம நடந்துக்க கூடாது!” என்றாள் முகம் சுளித்து அன்றைய நினைவில்.
“இட் வாஸ் அன் ஆக்ஸிடென்ட் சுதிரமாலா. ஐ டூ டிடின்ட் எக்ஸ்பெக்ட் திஸ். நான் அக்ஷாவை அன்னைக்கே தனியா கூப்ட்டு திட்டிட்டேன். ஈவன் அவ நம்பரை கூட ப்ளாக் பண்ணிட்டேன். உனக்கே தெரியுமே அவ இங்க வர்றது இல்லைன்னு!”
“கொஞ்சிக்கிறது நாலு பேர் முன்னாடி. திட்றது மட்டும் தனியா. நல்ல கதைதான் இது!” என முறைத்தவள், “சுய உணர்வோட ஒரு பொண்ணு உங்களுக்கு அத்தனை பேர் முன்னாடி முத்தம் கொடுக்குறது எல்லாம் ஆக்ஸிடென்ட்ல வரும்னு எனக்கு இப்போதான் தெரியுது சார்!” என்றாள் நக்கலாய்.
“ஹம்ம்... இப்போ என்னால ஆக்ஸிடென்ட் பத்தி தெரிஞ்சுகிட்ட சுதிரமாலா. குட் குட்!” அவன் பெருமையாய் தலையை அசைக்க, ‘சைக்... என்ன மனுஷன் இவன்?’ எனப் பார்த்தாள்.
“பைனலி எனக்குப் புருஷனா வர்றவரு ராமனா இருக்கணும்னு சொல்லலை. என்னைக் கல்யாணம் பண்ண பிறகு எனக்கு உண்மையா இருக்கணும். மோர் ஓவர் நான் காலம் முழுக்க, சாகும்வரை எனக்கொரு லைஃப் பாட்னர் வேணும்னு ஆசை படுறேன். சும்மா பிடிச்சிருக்குன்னு சொல்லி கல்யாணம் பண்ணிட்டு பின்னாடி ஆறே மாசத்துல பிடிக்கலைன்னு டைவர்ஸ் பண்ற ஐடியா எனக்கில்லை. எனக்கு புருஷனா வர்றவரு என் கூட வாழ்க்கை முழுசும் வருவார்னு நம்பிக்கை தரணும். எனக்கு மரியாதை கொடுக்கணும். என் அம்மா, அண்ணியை மதிக்கணும். பணம் இருக்குன்ற திமிர்ல ஆடக் கூடாது. சம்பாரிக்கிறோம்னு ஊதாரிதனமா செலவு பண்ண கூடாது. காசோட அருமை தெரிஞ்சிருக்கணும். மூனு வேளை சோறுக்கு எத்தனையோ பேர் கஷ்டப்படுறாங்க. அதனால சாப்பட்டை வேஸ்ட் பண்ணாதவரா இருக்கணும்!” என அவள் பேசுவதை மென்மையாய் தலையை அசைத்துக் கேட்டவனைப் பார்த்து சுதி கடியாகிப் போனாள். இவனிடம் பேசினால் அவளுக்குத்தான் இரத்த அழுத்தம் உயரும் என்றெண்ணியவள் நேரத்தைப் பார்த்தாள். பக்கென்றிருந்தது. இன்னும் பத்து நிமிடத்தில் அவள் சென்றாக வேண்டுமெ மூளை உந்த, படக்கென்று எழுந்தாள்.
“என்ன சுதிரமாலா... முழுசா பேசி முடிக்காம கிளம்புனா எப்படி. வேற எதுவும் மனசுல இருந்தா சொல்லிடு. நானும் யோசிப்பேன் இல்ல!” என்றவனை வெட்டவா குத்தவா எனப் பார்த்துவிட்டு விறுவிறுவென நடந்தாள். ஒரு நொடி அவளது நடை நிதானப்பட, திரும்பி நிவினைப் பார்த்தாள். அவள் குடிக்காது வைத்திருந்த குளம்பிக் குவளையை எடுத்துவிட்டு நிமிர்ந்தவன், “என்ன சுதி, எதையும் மறந்துட்டீயா?” எனக் கேலிக் குரலில் கேட்டான்.
அவனை முறைத்தவள், “எனக்கொரு டவுட்?” என்றாள் அவன் முகம் நோக்கி.
“யெஸ் ப்ரொசிட்!” தோளை குலுக்கினான்.
“இல்ல... உங்கப்பா பேசும்போது உங்கம்மாவைத் தவிர வேற யாரும் உங்க லைஃப்ல இல்லைன்னு சொல்லி இருக்காரு. ஒருவேளை நான் உங்க உயிரைக் காப்பாத்தி உங்களுக்கு சமைச்சுப்போட்டு கேர் பண்ணதால உங்களுக்கு என் மேல எதுவும் பீல்ங்க்ஸ் வந்துடுச்சோ. இல்லை வேலைக்காரியைக் கல்யாணம் பண்ணா சம்பளம் கொடுக்கத் தேவையில்லை. வீட்டுக்காரியாவும் இருந்துடுவா. ஒரு கல்லுல ரெண்டு மாங்காய்ன்னு நினைச்சுட்டீங்களா?” கண்கள் இடுங்க அவனைப் பாரத்துக் கேட்டாள்.
அவளது பேச்சில் முகம் முழுவதும் படரப் பார்த்த புன்னகையை உதட்டைக் கடித்து அதக்கி, “ஹம்ம்... அப்படியும் இருக்கலாமோ சுதி?” எனக் கேட்டவனை முறைத்துவிட்டு அவள் நடந்தாள்.
“இந்த சுதிரமாலா வேலைக்காரியா இருந்தாலும் வீட்டுக்காரியா இருந்தாலும் எனக்கு மட்டும்தான் இருக்கணும். வேலைக்கு வேலையும் ஆச்சு. வெய்ஃப்ம் ஆச்சு. நீ சொன்ன மாதிரி ஒரு கல்லுல ரெண்டு மாங்கா. ரொம்ப ஸ்மார்டா நிவின் நீ?” என அவன் கத்தியது செவியில் மோதியதும் திரும்பி அவனைக் கண்களால் எரித்தாள் பெண். சில நிமிடங்களில் கேலியைக் கைவிட்டவன், “கூல் சுதிரமாலா. உன்னை மீறி நான் எதுவும் செய்ய மாட்டேன் மா!” என்றான் மென்மையாய்.
அவனை யோசனையாகப் பார்த்தவள், “அப்போ எனக்குப் பிடிக்கலைன்னு இந்த ப்ரபோசலை நிறுத்திடுவீங்களா என்ன?” எனக் கேட்டாள். சன்னமான சிரிப்புடன் தலையை நான்கு புறமும் உருட்டியவன், “இந்த சுதிரமாலா நிவினுக்குத்தான் சொந்தம்!” என்றான் அடர்ந்தக் குரலில். கேலி இருந்தாலும் அவன் சொல்லின் உட்பொருளிலிலிருந்த அழுத்தம் அவளுக்கும் புரிந்தே இருந்தது.
ஒரு நொடி அவனை சலனமற்றுப் பார்த்துவிட்டு நடந்த சுதியின் மொத்த ஆற்றலும் வடிந்து போயிருந்தது. சத்தியமாய் நிவினிடம் இப்படியொரு பரிமாணத்தை அவள் கிஞ்சிற்றும் எதிர்பார்க்கவில்லை. சிடுமூஞ்சி, பேசுவதற்கே காசு கேட்பவன் என மனதில் அவனைப் பற்றி வரைந்திருந்த பிம்பத்தை இந்நொடி அழித்தாள். சத்தியமாய் அவளுக்குப் புரியாதது ஒன்றே ஒன்றுதான். தன்னிடம் என்ன இருக்கிறதென்று இவன் இப்படி பேசுகிறான் என நினைத்ததும் எதுவும் தவறாய் இருக்குமோ என மனம் முழுவதும் பதற்றம் பரவியது.
சுதியின் மொத்த மூளையையும் ஆக்கிரமிப்பு செய்திருந்தான் நிவின் என்ற மனிதன். என்ன முயன்றும் அவன் செய்கைக்கான பொருளை அவளால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. சர்வ நிச்சயமாய் நேற்று அவன் பேசும் முன் யாராவது வந்து இதைக் கூறியிருந்தால் கூட சிரித்திருப்பாள். ஆனால் இப்போது எரிச்சல் அதான் மிஞ்சியது. வணிக வளாகத்தில் வேலையில் தன்னை தொலைக்க முயன்றவளின் முகத்தை என்ன முயன்றும் இயல்பாக்க முடியவில்லை.
தேநீர் இடைவேளையின் போது விவேகா, “மூஞ்சியை ஏன் சுதி இஞ்சித் தின்ன குரங்கு மாதிரி வச்சிருக்க நீ?” எனக் கேட்டேவிட்டாள்.
அவளைத் திரும்பிப் பார்த்த சுதி, “இந்த இஞ்சித் தின்ன குரங்கு மூஞ்சிதான் அவனுக்கு வேணுமாம். என்னைத்தான் கல்யாணம் பண்ணுவானாம். வீடு வரைக்கும் வந்து இம்சையைக் கூட்டுறான் விவே. இதுவரைக்கும் என் முகத்தைக் கூட ரெண்டு நிமிஷத்துக்கு மேல பார்த்திருக்க மாட்டான். இந்த ஐஞ்சு மாசத்துல என்னைப் பத்தி என்னத் தெரியும் அவனுக்கு. ஹம்ம், இதுல நேத்து வந்த மாப்பிள்ளை எனக்கு செட்டாக மாட்டான்னு இவனே சொல்லிட்டுப் போறான். இவனை விட அவனே பெட்டர் டி. இவன் மூஞ்சில அடிச்ச மாதிரி பேசுவான். அவன் சிரிச்சுட்டே கஷ்டப்படுத்துற மாதிரி பேசுவான். ரெண்டும் ஒன்னுதான்!” என மனப்புழுக்கத்தில் பொரிந்திருந்தாள் சுதிரமாலா. விவேகாவிற்கு ஒன்றுமே புரியவில்லை.
எல்லாத்தையும் தூசியாய் தட்டிவிட்டு வாயே திறக்காத சுதியின் மடைதிறந்த பேச்சில் அசைவற்று நின்றவள் சுயம் பெற்று, “என்னடி சொல்ற? இவன் எவன் டி. அவன் யாரு டி. என்ன நடக்குது இங்க. யாரு உன்கிட்ட ப்ரபோஸ் பண்ணது. முதல்ல அதை சொல்லு!” என்றாள் ஆர்வமாய்.
அவளை முறைத்த சுதி, “டி விவே... நான் சொன்னாலும் நீ நம்ப மாட்ட டி!” என்றாள் உள்ளே சென்ற குரலில். அவளுக்கு வருத்தமாய் இருந்தது. தன்னுடைய தோழியே தான் சொல்வதை நம்ப மாட்டாள். அந்தளவிற்கு அவளுடைய தோற்றமும் குடும்ப சூழ்நிலையும் இருக்க, எந்த எண்ணத்தில் ஒத்து வருமென நிவின் இப்படி அழுத்தமாய் இருக்கிறான் என அவளுக்கு உத்தமமாய்ப் புரியவில்லை. அவன் அருகில் சென்று தான் நின்றால் எப்படி இருப்போம் என்ற நினைப்பே அவளைப் பின்னடையச் செய்தது. சினிமா கதாநாயகன் போல இருக்கும் அவன் எங்கே. வீட்டில் வேலை செய்யும் தான் எங்கே. ஒருவேளை அவன் கூறியது போல அவனுக்கும் எனக்கும் திருமணம் முடிந்தால் அந்த வீட்டில் அவளால் வேலைக்காரி என்ற எண்ணத்தில் இருந்து வீட்டு உறுப்பினராய் மாற முடியாது எனத் தோன்றியது. அவனோடு வாழ்ந்தால் தாழ்வு மனப்பான்மையிலே வாழ்க்கை ஓடி விடுமே எனப் பயந்தாள். நடக்காது என்று மனதைத் தேற்றினாலும் கடைசியாய் அவன் பார்வை இன்னுமே உள்ளுக்குள் குளிரைப் பரப்பியது.
“நீ மொதல்ல சொல்லுடி... அப்புறம் நான் நம்புறதா இல்லையான்னு யோசிக்கிறேன்!” என விவேகா கூற, பெருமூச்சை இழுத்துவிட்ட சுதி சின்ன குரலில் கூறி முடிக்கவும் விவேகாவிடம் அசைவே இல்லை.
“என்னைப் பிராங்க் எதுவும் பண்றியா சுதி?” அவள் கேட்கவும் இவளிடம் ஒரு வருத்தப் புன்னகை. அமர்ந்த இடத்திலிருந்து எழுந்து நின்றாள்.
“ப்ம்ச்... சரி. நீ உக்காரு சுதி. நான் உன்னை நம்பாமலா. இருந்தாலும் என்னால அவனை ஒரு பர்சன்ட் கூட நம்ப முடியலை டி. இங்க வர்ற கஸ்டமர்ஸ் நிறைய பேர் நம்மளை டச் பண்ணக் கூட கூடாதுன்னு ஒதுங்கி நின்னுதான்டி பார்த்துருக்கிறேன். அப்படி இருக்கும்போது இவன் பேசுறதை எந்த வகையில நம்புறது. ஏமாத்தப் பார்க்குறானோன்னு பயமா இருக்கு டி. நீ அவன் பேசுறதை எல்லாம் நம்பிடாத. எத்தனை சினிமா படம் பார்த்திருப்போம். பணக்கார திமிரு டி. வேற யார்கிட்டேயும் காட்ட சொல்லு இதை. இல்லாதவங்கன்னா எளக்காரமா போச்சா அவனுக்கு!” என விவேகா நிவினைத் தாளிக்க, சுதி அமைதியாய் இருந்தாள்.
“பயமா இருக்கா சுதி?” விவேகா கவலையாய்க் கேட்க, இவள் பெருமூச்சுடன் இருபுறமும் தலையை அசைத்தாள்.
“ஹம்ம்... பேசாம அவன் ப்ரெட் வாங்க வருவான் இல்ல, அதுல மிளகாய்ப்பொடியை தடவி விட்ருவோமா?” தீவிரக் குரலில் விவேகா கேட்க, சுதி அடக்கமாட்டாமல் சிரித்து விட்டாள்.
“ரொம்ப சில்லறைத் தனமா இருக்குல்ல டி?” என விவேகாவே அசட்டுத்தனமாய்க் கேட்க, சுதி சிரிப்புடன் அதை ஆமோதித்தாள்.
“ஹம்ம்... ரொம்ப டார்ச்சர் பண்ணான்னா சொல்லு. என் ஒன்னுவிட்ட பெரிம்மா பையன் போலீஸ்ல கான்ஸ்டபிளா இருக்கான். புடிச்சு உள்ள போட்றலாம்!” என்றாள் யோசனையாக.
“சீ...பாவம் டி. வேணாம். விட்றலாம்!” என்ற சுதியை மற்றவள் சந்தேகமாகப் பார்க்க, “ஹக்கும்... நீ வேற ஏன் டி. அவன் எல்லாம் என் வாழ்க்கைக்கு செட்டாக மாட்டான் டி. அவனைக் கட்டீட்டு காலம் முழுக்க வேலைக்காரியாத்தான் இருக்கணும். எனக்கு ஏத்தவன் ஒருத்தனைக் கடவுள் சீக்கிரம் அனுப்பி வைப்பார். ஹம்ம், இந்த பாஸ்கரா கூட இருக்கலாம் டி. அம்மா ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்காங்க. அவங்களா பார்த்து செஞ்சா சரியாதான் இருக்கும்!” என்று சுதி எழுந்து செல்ல, விவேகா அவளை வேதனையுடன் பார்த்தாள்.
அன்று முழுவதும் கிடைக்கும் இடைவெளியில் எல்லாம் நிவினை அப்படி செய்யலாம், அவன் வீட்டு அழைப்பு மணி அழுத்திவிட்டு கதறவிடலாம், சாப்பாட்டில் உப்பை அள்ளிப் போட்டுவிடலாம், வாகனத்தின் தலையாடையை (டயரை) ஓட்டையாக்கி விடலாம் என அவள் கொடுத்த யோசனையில் சுதியின் மொத்த மனநிலையும் மாறிப் போயிருந்தது.
வீட்டிற்குப் போகும்போதும் கூட விவேகா, “நல்லா யோசிச்சு ஒரு ஐடியா ரெடி பண்ணி இருக்கேன் டி. பேசாம அவன் போட்டோவைப் ப்ரிண்ட் போட்டு அப்பார்ட்மெண்ட் ஃபுல்லா வெள்ளை உளுவைன்னு ஒட்டி வச்சிடுவோமா? ஷேம் ஷேமா பீல் பண்ணி வெளிய வர மாட்டான் இல்ல?” என்றாள் தீவிரமாய்.
“டி... யப்பா விவே. போதும் டி. உன்கிட்ட ஐடியா கேட்டேன் பாரு. என்னை சொல்லணும். திட்டம் போட்ற மூஞ்சியைப் பாரு!” என சுதி சிரிப்பும் முறைப்புமாய் நகர, “போடி... போ. உனக்கு ஐடியா கொடுத்தேன் இல்லே. என்னை சொல்லணும்!” என முகத்தைத் தோளில் இடித்தபடியே விவேகா நகர்ந்தாள்.
தொடரும்...
நைட்டு இன்னொரு அப்டேட் வேணும்னா கமெண்ட் பண்ணுங்க டியர்ஸ்