- Messages
- 1,028
- Reaction score
- 2,912
- Points
- 113
பொழுது – 14 
ஆறுமணியைக் கடந்தும் சுதிக்கு விழிப்பு வருவேனா என்றது. ஆறு முப்பதுக்கு வைத்திருக்கும் அலறி அதன் வேலையை சரியாய் செய்ய, நேரமானதை உணரந்து திடுக்கென எழுந்தமர்ந்தவள், கண்களை தேய்த்தாள்.
“சுதி... இன்னைக்கு ஒருநாள் வேலைக்குப் போக வேணாம். நீ லீவ் சொல்லிடு!” சந்திரா அறையை எட்டிப் பார்த்துவிட்டு கூற, இவள் என்னவெனப் புரியாது எழுந்து அவிழ்ந்திருந்த முடியைத் தூக்கிக் கொண்டையிட்டு பாயை மடித்துவிட்டு வெளியே வந்தாள்.
“ம்மா... காம்ப்ளக்ஸ் லீவ்தான். இன்னைக்கு காலைல நிவின் சார்க்கு சமைச்சு கொடுத்துட்டு வந்துடுறேன் மா. சொல்லாம கொள்ளாம லீவ் போட முடியாது மா!” சுதி சந்திராவின் முகம் பார்த்தாள்.
“ஒருநாள் லீவு கொடுக்காத வேலை எதுக்கு உனக்கு. அதை விட்ரு!” என்றவரின் பேச்சில் சுதிக்கு எதுவும் புரியாதநிலை. சந்திரா எப்போதும் இப்படியெல்லாம் பேச மாட்டாரே என அவள் விழித்தாள்.
“அத்தை... ஈவ்னிங் தானே வர்றாங்க. இப்போ அவ வேலைக்குப் போகட்டும் அத்தை. விடுங்க!” சௌம்யா கூற, “யாரு வர்றாங்க அண்ணி?” என இவள் கேள்வி கேட்டாள்.
“ஹம்ம்... சுதி, உனக்கொரு சம்பந்தம் அமைஞ்சு வந்திருக்கு. இன்னைக்கு உன்னைப் பார்க்க வரவான்னு கேட்டாங்க. சரி லீவ் நாள்னு நானும் வர சொல்லிட்டேன். நீயும் அந்தப் பையனைப் பாரு. நல்லக் குடும்பம், குறைன்னு எதுவும் இல்ல. டிகிரி படிச்சிட்டு டிவிஎஸ்ல வேலை பார்க்குறாராம். எவ்வளோ பெரிய கம்பெனி அது. முப்பதாயிரம் சம்பளம். அப்பா, அம்மா, ஒரு அக்காவாம். பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சாம். நமக்கு எல்லா வகையிலயும் ஒத்து வரும்னு தோணுச்சு. அதான் நேர்ல பார்த்துட்டு முடிவு பண்ணலாம்!” சந்திரா முகம் முழுவதும் படர்ந்த மகிழ்ச்சியுடன் பேச, சுதிக்கு முகத்தில் எந்த உணர்வும் இல்லை.
“ஓ... சரிம்மா...” என்றாள். அவ்வளவுதான் அவளது எதிர்வினை.
“என்ன ஓன்னு ஒரு வார்த்தையில முடிச்சிட்ட. முகம் டல்லா இருக்கு. நல்லா சந்தோஷமா கேக்க வேணாமா சுதி. பையன் பார்க்க எப்படி இருப்பாரு, கருப்பா சிவப்பான்னு எதாவது?” சௌம்யா குறையாய்க் கூற, சுதியின் முகத்தில் மெல்லிய முறுவல் அரும்பியது.
“நான் சொன்னா, நீங்க திட்டக் கூடாது!” அவள் கூற, “நீ என்னென்னு சொல்லு. நான் அப்புறம் திட்றதா, வேணாமான்னு முடிவு பண்றேன்!” பெரியவள் உதட்டைச் சுழித்தாள்.
“முதல்ல வர்றவங்களுக்கு என்னைப் பிடிக்கட்டும் அண்ணி. படிச்ச பையன், அழகா வேற இருப்பார்னு சொல்றீங்க. அப்புறம் எப்படி என்னைப் போய் பிடிக்கும். ரொம்ப ஆசையை வளர்த்துக்காதீங்க ரெண்டு பேரும்...” சுதி பொறுமையாய்க் கூற, சந்திரா அப்போதே அகன்றிருந்தார்.
“ப்ம்ச்... சும்மா லூசு மாதிரி பேசாத நீ. படிச்ச பையன் படிக்காத பொண்ணைக் கல்யாணம் பண்றது ஊர்ல இல்லாத வழக்கமா சுதி. நீயா உன்னை மட்டம் தட்டிக்காத!” பெரியவள் கண்டித்தாள்.
“இல்லைன்னு சொல்ல மாட்டேன் அண்ணி. படிச்ச பையன் படிக்காத பொண்ணைக் கல்யாணம் பண்ண ரெண்டு காரணம் இருக்கும். ஒன்னு பொண்ணு அழகா இருக்கணும். ஆனால் பாருங்க அது இங்க இல்லை. நான் எப்படி இருக்கேன்னு எனக்கே தெரியும். ரெண்டாவது நிறையா வரதட்சணை போட்டாவது கல்யாணம் பண்ணணும். அதுவும் இல்ல, அப்படி இருக்கும்போது படிச்ச அழகான பையன் என்னைக் கட்டுவானா என்ன? உண்மையை நம்ப ஏத்துக்கணும் அண்ணி!” என்றவள் சில நொடிகள் நிறுத்திப் பின், “நான் முன்னாடியே சொல்லணும்னு நினைச்சேன். நீங்களா கல்யாண பேச்செடுக்கும் போது சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன் அண்ணி. படிக்காத பையனா பாருங்க. அழகா இருக்கவன் வேணாம். அவனோட எக்ஸ்பெக்டேஷனுக்கு நான் இல்ல. அதனால என்னை மாதிரி பார்க்க சுமாரா இருக்கவனைப் பாருங்க. முக்கியமா வரதட்சணை வேணாம்னு சொல்றவனைப் பாருங்க. அப்படி ஒருத்தன் வந்தா, கருப்போ, சிவப்போ, நெட்டையோ, குட்டையோ எப்படி இருந்தாலும் நான் ஏத்துப்பேன் அண்ணி! முக்கியமா உங்களுக்கும் அம்மாவுக்கும் மரியாதை தர்றவங்களா பாருங்க. பணம் இல்லாதவங்களா இருந்தாலும் பண்பா இருந்தா போதும் அண்ணி. ஏன்னா, பணம் இருக்க இடத்துல திமிர் தானா வந்துடும். அதெதுக்கு, நமக்கு ஏத்தவங்கன்னா சரியா இருக்கும்!” மெல்லிய குரலில் சுதி பேசி முடிக்க, சௌம்யா முகத்தில் வருத்தம் பரவியது. இந்தப் பெண் தங்களுக்காகத்தான் பார்க்கிறாள் எனப் புரிந்தவள் அவளது தோளைத் தட்டினாள்.
“உன் நல்ல மனசுக்கு நல்ல படிச்ச அழகான பையன் அமைவான் சுதி. கடவுள் பார்த்துப்பாரு எல்லாத்தையும். இந்த சம்பந்தம் அமையும்னு எனக்கு தோணுது!” சௌம்யா கூற, “ரொம்ப எதிர்பார்க்காதீங்க. அப்புறம் இல்லைன்னு போச்சுன்னா, கஷ்டமாய்டும். எதுனாலும் அவங்க ஈவ்னிங் வந்து என்னைப் பார்த்துட்டுப் போகட்டும்!” என்றாள் புன்னகைத்து.
“சரி அண்ணி... ரொம்ப லேட்டாகிடுச்சு. நான் டைம்க்கு போக முடியாது இன்னைக்கு. சண்டேதானே? லேட்டா போறேன்!” என அவளே பேசிவிட்டு விறுவிறுவென தலைக்கு குளித்து முடித்தாள். அசிரத்தையாய் நிலைபேழையில் விழிகளை ஓட்டியவள் நீண்ட நாட்களாக உடுத்தாமல் வைத்திருந்த புடவை ஒன்றைக் கையிலெடுத்தாள். கரும்பச்சை நிறத்தில் அங்காங்கே தங்க நிறத்தில் பூக்கள் பூத்திருந்தன. நேரமானாலும் அதை நேர்த்தியாய் உடுத்தியவள், தலையைத் தளரப் பின்னலிட்டாள். சந்திரா மாலைப் பெண் பார்க்க வரும்போது
வைப்பதற்காகப் பூ வாங்கியிருந்தாலும், இப்போதும் வைத்துக் கொள்ளுமாறு கொஞ்சம் பூவைக் கொடுத்துவிட்டுச் சென்றார். அதை எடுத்து தலையில் வைத்தவள் கண்ணாடியில் முகம் பார்த்தாள். முட்டைக் கண்கள் வெறுமையாய் இருக்க, ஆசையாய் அதற்கு மையிட்டாள். வட்ட பொட்டை விடுத்து இன்றைக்கென நீளப் பொட்டை எடுத்து வைத்தவள் முகம் சற்றே மிளிர்ந்தது.
அறைக்கு வெளியே செல்ல சற்றே சங்கடமாய் இருந்தது பெண்ணுக்கு. கடைசியாய் கல்லூரி கிளம்பும்போது இப்படியெல்லாம் ஒப்பனை செய்தது. அதற்கடுத்து அவளுக்கு வாய்ப்பும் அமையவில்லை. மனநிலையும் இல்லையென்பதே உண்மை.
சில நொடிகள் மூச்சை வெளியிட்டு அவள் கூடத்திற்கு வர, மொச்சைப் பயறை உரித்துக் கொண்டிருந்த சௌம்யாவின் முகத்தில் கேலிப் புன்னகை. சற்று நேரம் முன்பு சுதியின் மீதிருந்த அதிருப்தி எல்லாம் இந்நொடி தகர்ந்திருக்க, “ஆஹா...” என்றாள் கிண்டலாய். அவள் முகபாவனையில் சுதிக்கு லேசாய் வெட்கம் வந்துவிட, “அண்ணி...” என சிணுங்கினாள்.
“ஹக்கும்... ம்க்கும்... அத்தை, ஈவ்னிங் தானே சுதியைப் பொண்ணு பார்க்க வர்றதா சொன்னீங்க. ஆனால், காலைலயே வர்றாங்க போல?” சௌம்யா குரலை உயர்த்த, சந்திரா வெளியே வந்தார். மகளை நீண்ட நாட்கள் கழித்து இப்படி பார்க்கையில் அவரது மனம் நிறைந்து போனது. சுதி அவர் முகத்தை சங்கோஜமாய்ப் பார்த்தாள்.
“ச்சு... சௌமி, புள்ளை எவ்வளோ நாள் கழிச்சு இப்படி அலங்காரம் பண்ணியிருக்கா. நீயே கிண்டல் பண்ணாத!” என அதட்டியவர், “அழகா இருக்கு சுதி!” என்றார் மகிழ்ச்சியுடன். மகளுக்கு நல்ல வாழ்க்கை அமையப் போகிறதென அவர் உள்ளம் உவகைக் கொண்டது. அத்தோடு அவளும் அந்த வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளுவாள் என அவள் நடவடிக்கைகள் கூற, எல்லாம் நன்றாக நடக்க வேண்டும் என்றெண்ணிக் கொண்டார்.
“சரி சுதி... மழை வர்ற மாதிரி வானம் இருட்டீட்டு கிடக்கு. பார்த்துப் போ!” என அவர் கூற, தலையை அசைத்துவிட்டு சுதிரமாலா கிளம்பினாள். அகத்தின் மகிழ்ச்சி முகத்தில் தெரிந்தது. திருமணம் என்ற எண்ணத்தை தாண்டி அவளுக்கான வாழ்க்கை. ஆசையாய் எத்தனையோ கனவுகளை சுமந்து கொண்டிருக்கிறாள். அந்தக் கனவுகள் உயிர்ப்பெற்று நிற்கப் போகும் கணங்கள் கண்முன்னே வரவும், இயல்பாய் முகம் மலர்ந்தது.
‘ரொம்ப சந்தோஷப்படாத சுதி. அவங்களை சொல்லிட்டு நீ எதிர்பார்க்காத. எது வந்தாலும் ஃபேஸ் பண்ணணும்!’ என துள்ளிய மனதை அடக்கிவிட்டு பேருந்திலேறினாள்.
மேகம் ஆங்காங்கே கூடிக் கலைந்து மழை வரும் அறிகுறியைக் காண்பித்தது. வெளுத்து சிவந்திருந்த வானத்தைப் பார்த்த சுதியின் முகத்தில் மெலிதாய் ஒரு சொட்டு மழைநீர் பட்டுத் தெறித்தது. ஜன்னல் கதவை இழுத்து மூடியவளின் உடலை கூதக்காற்று துளைத்தது. மழைக்காலம் கூட இல்லையே புதிதாய் என்ன மழை வருகிறது என்றெண்ணியவள் அலைபேசியை எடுத்து இணையத்தை இணைக்க, நிவினின் செய்தி வந்து விழுந்தது.
“வொய் டிட் யூ டேக் லீவ் வித்தவுட் ஆஸ்கிங் பெர்மிஷன்?” அவனின் குறுஞ்செய்தியைப் படித்தவள், 'அரைமணி நேரம் லேட்டாச்சுன்னா லீவ் போட்டுட்டேன்னு நினைச்சுடுவார் போல!’ என மனதிற்குள்ளே முனங்கியவள், “சாரி சார். ஆன் தி வே. கொஞ்சம் லேட்டாகிடுச்சு!” என பதிலளித்தாள். பத்து நிமிடங்களில் பேருந்து நிறுத்தம் வந்துவிட, மழையில் நனையக் கூடாதென அடித்துப் பிடித்து அந்த அடுக்குமாடிக் கட்டிடத்திற்குள் நுழைந்த போது பாதி நனைந்திருந்தாள்.
முகத்திலிருந்த நீரை மட்டும் முந்தானையால் துடைத்துவிட்டு மின்தூக்கி மூலம் மேல் தளத்தை அடைந்து அழைப்பு மணியை அலுத்த, நிவின் வந்து கதவைத் திறந்தான். நனைந்து வந்தவளைப் பார்த்தவன், “கெட் இன் சுதிரமாலா...” என்றுவிட்டு அவள் உள்ளே நுழைந்ததும் மின்விசிறியை சுழலவிட்டான்.
“மழை ஸ்டாப்பானதும் வந்திருக்கலாம்ல. ஏன் இப்போ அவசரமா வந்தீங்க?” என்றவன் கரிசனமான வார்த்தைகளில் சுதிக்கு ஆச்சரியம்தான். வெயில் காலத்தில் மழை பெய்ததற்கான காரணம் இதுவாகத்தான் இருக்கக் கூடுமென அனுமானித்தவள், “பரவாயில்லை சார். ஏற்கனவே டைமாகிடுச்சு. அதான் வந்துட்டேன்!” என்றவள் சமையலறைக்குள் நுழைந்தாள்.
புடவைக் கட்டி வேலை பார்த்த பழக்கமில்லை அவளுக்கு. முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகியவளின் உதடுகளில் புன்னகை நெளிந்தது. ‘வீட்டு வேலைக்கு வர்றதுக்கு எதுக்கு இத்தனை அலங்காரம்னு நினைச்சிருப்பான்!’ என நினைத்தவளுக்குமே சிரிப்பு வந்தது. வீட்டு வேலைக்குத்தானே வந்திருக்கிறேன். என்னவோ சௌம்யா சொன்னது போல இத்தனை அலங்காரம் எதற்கு என மனமே கேலி செய்ய, அதைக் கிடப்பிலிட்டவள் அமைதியாய் வேலையைப் பார்த்தாள்.
சற்றே அசௌகரியத்தை அளித்தது சேலை. இருந்தாலும் நல்ல மனநிலையில் இருந்தபடியால் சுதிக்கு எதுவுமே பெரிதாய் தோன்றவில்லை. வேண்டாம் எனத் தட்டிவிட முயன்றாலும் வரும் மாப்பிள்ளைக்குத் தன்னைப் பிடிக்காது போய்விட்டால் என்ன செய்வது என மனம் அதையே சுற்றி வந்தது. ஒரே வரன் பார்த்து அதுவே அமைந்துவிடும் அளவிற்கு எல்லாம் தனக்கு யோகமில்லை என்றெண்ணியவள், அப்படி அமையாது என மனதில் ஆழப் பதித்தாள். காரணம் விவேகாவிற்கு திருமணப் பேச்சை எடுத்து சில பல மாதங்கள் ஓடியிருக்க, ஒன்றுமே அமையவில்லை. அவளுமே ஒவ்வொரு முறை பெண் பார்க்கச் வரும்போது அது இதுவெனக் காரணம் காண்பித்து வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் எனக் கவலையுற்றிருக்கிறாள். அதனாலே மனதை அனைத்திற்கும் தயார் செய்தாள்.
பிடிக்கவில்லை என்று அவர்கள் அவளது தோற்றத்தை, படிப்பை எதைக் குறைக் கூறினாலும் ஏற்றுக் கொள்ளும் மனநிலையைக் கொடு கடவுளே என காலையிலே வேண்டிவிட்டாள். அவளைப் பிடித்திருக்கிறது என்று மாப்பிள்ளைக் கூறிவிட்டால், அவனின் தோற்றம் பற்றியெல்லாம் சுதிக்கு எண்ணமே இல்லை. என்னை ஏற்றுக் கொள்பவன் எப்படி இருந்தாலும் எனக்கு சம்மதம்தான் என்ற சிந்தனையிலே வேலையை முடித்தாள்.
சிறிது நேரம் தூறிக் கொண்டிருந்த வானம் சற்று நேரத்தில் வெளுக்கத் துவங்க, இவள் ஆயசமாகப் பார்த்தாள். இப்போதுதான் மழை நின்றுவிட்டது வீட்டிற்கு செல்லலாம் என நினைத்தாள். ‘மறுபடியும் மழை பெய்யுதே!’ என அலுத்தவள், எட்டி ஜன்னல் வழியே பார்த்த வண்ணமிருந்தாள். நிவின் கூடத்திலேதான் அமர்ந்திருந்தான். எப்போதும் அவன் கையிலிருக்கும் அலைபேசியோ மடிக்கணினியோ என எதுவுமே இல்லை. அவன் சிந்தனை கூட இங்கில்லை. இளையராஜா உருகிக் கொண்டிருந்தார். அதில் கூட அவன் லயிக்கவில்லை என முகமே கூறியது. சுதி எட்டிப் பார்த்துவிட்டு கைப்பையிலிருந்த அலைபேசியை எடுத்து கண்களை அதில் ஓட்டினாள்.
அப்படியே வர சற்றுத் தாமதமாகும் என சௌம்யாவிற்குக் குறுஞ்செய்தி ஒன்றைத் தட்டிவிட்டாள். “சுதிரமாலா, ஒரு காஃபி வேணும்!” அவன் குரலில் கலைந்தவள் அலைபேசியை பையில் வைத்துப் பூட்டிவிட்டு அவனுக்கொரு குளம்பியைத் தயாரித்துக் கொடுத்துப் பின்னர் அப்படியே பால்கனிக்குச் சென்று நின்றாள்.
மழை விட்டுவிட்டுப் பெய்து கொண்டிருக்க, இவள் ஆர்வமே இல்லாது அசிரத்தையாய்ப் பார்வையை சாலையில் படரவிட்டாள். சிந்தனை எங்கெங்கோ படர்ந்தது. கையைக் கட்டி சுவரில் சாய்ந்தவள் அடுத்து வாழ்க்கையில் என்னவென யோசித்தாள்.
“யூ லுக் ப்ரிட்டி இன் திஸ் சாரி சுதி!” தூரத்தில் நின்றாலும் செவிவழி நுழைந்து இதயத்தை அதிரச் செய்த குரலின் அடர்த்தியில் நெஞ்சம் திடுக்கிட்டது பெண்ணுக்கு. வெகுபிரயனதனம் மேற்கொண்டு முகத்தில் எதையும் காண்பிக்காது சரிசெய்தவள், “தேங்க் யூ சார், அண்ட் இந்த காம்ப்ளிமெண்ட் தேவையில்லாதது!” என்றாள் இழுத்துப் பிடித்த புன்னகையுடன். உன்னுடைய பேச்சு எனக்கு உவப்பாய் இல்லை என்று பார்த்து வைத்தாள்.
(தொடர்ந்து கீழே படிக்கவும்)