• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

பொன்மாறனின் பொன்னியிவளே

New member
Messages
14
Reaction score
16
Points
3
பொன்னி _03

வறுத்தமாய் பேசியவரை அவள் தேற்றி கொண்டே வற பழைய நினைவுகளில் இருந்தவளின் நினைவு தடை பட்டது.. பின்னிருந்து கதவு திறக்கும் ஓசையில்.. கதவை திறந்து குட்டி ஆதி தேவோ கதவின் இடுக்கில் தன் முழு உடலை மறைத்து தலையை மட்டும் உள்ளே நீட்டி எட்டி பார்த்தான்.. அவனின் செய்கை கண்டு பொன்னிக்கு சிரிப்பு தான் வந்தது.. குழந்தையை ஆசை தீர
ரசித்தால்..

அவளின் இரத்த பந்தம் ஆயிற்றே.. ரசிக்காமல் இருக்க முடியுமா என்ன.. அவனின் விளையாட்டு இன்னும் தொடர்வதை கண்டு அவன் பக்கம் சென்று அவனை போலவே இவளும் அவனுக்கு விளையாட்டு காட்டினாள்.. அதை கண்டு ஓட போனவனை வளைத்து பிடித்து தூக்கினாள்.. அவனின் நெற்றி முட்டி சிரிக்க குட்டி ஆதி தேவ்வோ அழகாய் சிரித்தான்..

" உங்க பேரு என்ன.." அழகாய் மொழிந்தான்..

" என் பேரு பொன்னி தேவி.. நல்லா இருக்கா.." அவளும் சிறு பிள்ளை போல் தலையாட்டி வினவினாள்..

" ம்ம்.. சூப்பர்.. என் பேரு.."

" ஆதி தேவ்.." அவன் சொல்லும் முன் இவள் முந்தி கொண்டால்..

" என் பேரு உங்களுக்கு தெரியுமா?.."

" ம்ம் தெரியுமே.."

" எப்படி.."

" இப்போ கொஞ்சம் முன்னாடி உங்க சித்தி உன்ன கூப்பிடும் போது தான்.." அவள் பேசியதை கண்டு தலை ஆட்டினான்..

" நான் ஒன்னு கேக்கட்டுமா.."

" என்ன கேக்க போரிங்க குட்டி ஆதி.."

" அது நீங்க வரலனா எங்க வீட்டுக்கு ரேணு தான் எனக்கு அம்மாவா வந்து இருப்பா.. அவ என்ன நல்லா பார்த்துப்பா.. அவளை மாதிரி நீங்க என்ன நல்லா பார்த்துபிங்களா.."

" பெரிய மனுச மாதிரி பேசுற.. யார் உன்கிட்ட இப்படியெல்லாம் பேச சொன்னது.." அவன் கன்னத்தை பிடித்து கிள்ளி முத்தம் வைத்தால்..

" யாரும் சொல்லல.. ஆனா வெளியில ரெண்டு பேரு பேசினாங்க.. நான் கேட்டேன்.. வந்த புள்ளை இந்த பையனை எப்படி பார்த்துக்குமோ அப்படின்னு.."

" சரி.. அவங்க பேசினா பேசிட்டு போகட்டும்.. பெரியவங்க தானே விட்டு தள்ளு.. நா சொல்றது கேளு.. உன்ன உன் ரேணு எப்படி பார்த்துப்பானு எனக்கு தெரியாது.. ஆனா நான் உன்ன ரெனுவை விட இன்னும் சூப்பரா பார்த்துப்பேன்.. ஏன்னா நான் உன் அம்மா.."

" நிஜமாவா.." குட்டி ஆதி கண்கள் விரிய கேட்டான்.. தனக்கு ஒரு தாய் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில்..

" எங்கேயாவது ஒரு அம்மா தன் புள்ளைய நல்லா பார்த்துக்காம இருப்பாங்களா சொல்லு.."

" ஹான் இல்ல இல்ல.. எங்க அம்மம்மா அப்பா சித்தப்பா சித்தி மூணு பேரையும் சூப்பரா பார்த்துப்பாங்க.. என்ன இன்னும் இன்னும் சூப்பரா பார்த்துபாங்க.."

" ம்ம்.. சூப்பர்.. நானும் உன்ன அப்படித்தான் பார்த்துபேன்.. நீ சாப்டியா.."

" இல்லையே.. நீங்க சாப்டிங்களா.."

" ம்ம் இல்ல.. பசிக்கிது.."

" சரி அப்போ நம்ம சாப்பிடலாம்.."

" எனக்கு இப்போ வேணாம்.. நீ போய் சாப்பிடு.. நா அப்புறம் வரேன்.." என்றவள் சொல்லில் வேகமாய் மறுப்பாய் தலை ஆட்டினான்..

" நீங்களும் வாங்க. அப்போ தான் நான் சாப்பிடுவேன்.." என்றவன் வழு கட்டாயமாக அவள் கை பிடித்து இழுத்து சென்றான்..

இங்கோ டைனிங் டேபிளில் வாசு குழலி தாத்தா கதிரவன் ரேணு மற்றும் ரேணுவின் தாய் தேவகி என அனைவரும் அமர்ந்து இருந்தனர்.. அப்பொழுது தான் வீட்டின் உள் நுழைந்தான் மாறன்.. வந்தவனை அவன் தாய் சாப்பிட அழைக்க அவரை திரும்பி பார்த்தான்.. நிச்சயமா அவள் முக பாவனை எதை சொல்கிறது என்று அவனுக்கும் புரியவில்லை.. இந்த கல்யாணம் நடந்ததில் அனைவரும் திருப்தி பட்டார்கலோ இல்லையோ ஆனால் யாரும் அவனை ஒரு கேள்வியும் கேட்கவில்லை.. மனம் பிசைந்தது தான் அவனுக்கு.. இருந்தும் வெளியில் காட்டவில்லை.. உணர்ச்சி துடைத்த முகம் தான் எப்பொழுதும்..

அழைத்ததும் வந்து அமர்ந்து மற்றவர்கள் முகத்தை கூர்ந்து கவனித்தான்.. அவனை போலவே வாசுவின் முகத்திலும் உணர்ச்சி இல்லை.. இருந்தும் ஓர் நிம்மதி.. அழகாய் காட்டியது அண்ணநவனுக்கு தம்பியின் முகம்.. தாத்தாவும் அப்பாவும் சாப்பிடுவதில் குறியாய் இருக்க அவர்களை விடுத்து ரேணுவை கவனித்தான்..

கல்யாணம் நின்றதா யாருக்கு இவழுக்கா என்று கேட்கும் அளவுக்கு தன் வேளையில் மும்முரமாய் இருந்தால்.. எங்கு கல்யாணம் நடந்து விடுமோ என்று கவலை கொண்டவழுக்கு இது இன்ப திகைப்பு அல்லவா.. பெரிய மாமனை கட்டிக்கிரேன் என்று சொன்னதோடு சரி.. அதன் பின் அவள் முகம் தான் உலகில் உள்ள அத்துணை கவலையையும் குத்தகைக்கு எடுத்தது போல் சோர்ந்து இருந்தது.. அவனுக்கு தான் தெரியுமே.. அவள் மனம்.. இருந்தும் குடும்ப சூழ்நிலை.. ஒத்து கொண்டான் கல்யாணத்திற்கு.. சபையில் வைத்து நிறுத்தி விடலாம் என்று தான் நினைத்தான்.. ஆனால் சரியாக பொன்னி வந்து தடுத்து விட்டால்.. ஒரு புறம் பெருமூச்சு நிம்மதி.. மறுபுறம் குழப்பம் மட்டுமே எஞ்சியது.. இருந்து கிடைத்த சந்தர்பத்தை அழகாய் உபயோகம் செய்தான்..

அவள் நல்லவளா கெட்டவளா.. படித்தவளா படிக்காதவளா.. ஊரோ பேரோ எதுவும் தெரியாது.. அவள் கண்ணில் உன்னை மணப்பேன் உன்னை மனந்தே தீருவேன் என்ற உருதியை மட்டுமே கண்டான்.. இதோ இப்பொழுது மனந்தும் விட்டான்.. ரேணுவின் தாய் தேவகியை பார்த்தான்.. சோகத்தின் மறு உருவமாய் திகழ்ந்தார்.. சிறு வயதில் இருந்து அவனை சீராட்டி தாலாட்டி வளர்த்தவல்.. அன்னையும் அத்தையும் அவனுக்கு ஒன்றே.. இருவரும் அவனின் தாய் தான்.. சிறுவயதிலேயே மாறன் என்றால் உயிர் தேவகிக்கு.. தங்கள் சொந்தத்திலே ஒரு மாப்பிளை பார்த்து தேவகிக்கு மணந்து வைத்தனர்.. ஆனால் ரேணு பத்து வயதாக இருக்கும் பொழுதே அவர் இறந்து விட்டார் தோப்பில் வேலை செய்யும் பொழுது பாம்பு கடித்து..

அதன் பின் அத்தையை தனியே விட மனமில்லை அவனுக்கு.. அத்தையும் இரு பெண்ணையும் தங்கள் வீட்டிற்கே அழைத்து வந்து விட்டான்.. இப்பொழுது வரை அவர்களை உயிராய் காத்து வருகிறான்.. குடும்பமும் சரி.. கதிரவனுக்கும் தாத்தாவிற்கு அவள் தங்கள் வீட்டில் இருப்பதே அளவு கடந்த சந்தோசம் தான்.. தேவகி வெகுளி பெண்.. யார்க்கும் தீங்கு நினைக்காத நல் உள்ளம்.. ஏனோ இப்பொழுது அவரை இப்படி பார்க்க இயலவில்லை அவனால்..

" அத்தை.." அவன் அழைத்தது தான் தாமதம்.. வேகமாக நிமிர்ந்து புன்னகைத்தார்..

" என்னையா.." அவரின் ஒவ்வொரு வார்த்தையும் தேன் ருசி தான் யாருக்காய்யுனும்.. அவ்வளவு பாசம்.. அன்பு.. அக்கறை.. பொறுமை..

" சாப்பாடு தட்டுல கோலம் போடாம நல்லா அள்ளி சாப்பிடு.." பாசமாய் அவன் வினவ வேகமாய் தலை அசைத்தார்..

" சரியா.. நான் சாப்பிடுறேன்.. நீ முத நல்லா சாப்பிட்டு.. காலையில் இருந்து நீ சாப்பிடவே இல்லை.." என்றவர் அவனிடம் பேசி விட்டு கண்களை சுழல விட்டார்..

" மதனி.. மருமக சாப்பிட வரலையா.. ஆதி எங்க.." அவளின் பேச்சை கண்டு செல்விக்கு கண்ணீர் தான் வந்தது.. தன் மகள் வாழ்க்கை இன்னொருவழுக்கு சென்ற பின்பும் எந்த கோவமும் இல்லாது பாசமாய் கேட்டவளை நினைத்து பெருமை தான்.. இருந்தாலும் கவலை தான் மேலோங்கியது..

" ஆதி போனான்.. வருவான் கூட்டிட்டு.. நீ சாப்பிடு.." என்ற செல்வி சொல்ல சரியாய் அங்கு வந்து நின்றாள் பொன்னி ஆதியோடு..

" அம்மம்மா சாப்பாடு வைங்க.. எனக்கும் இவங்களுக்கு... இல்ல இல்ல வேணாம்.. ஒரு பிளேட் போதும்.. எனக்கு இவங்க ஊட்டி விடுவாங்க.. பொன்னி நீ எனக்கு ஊட்டி விடு.. இவங்க எல்லார் கையிலேயே சாப்பிட்டு எனக்கு போர் அடிச்சிருச்சு.." அவனின் பேச்சை கண்டு அனைவருக்கும் சிரிப்பு தான் வந்தது..

" டேய் படவா இந்த அம்மமா கையில் சாப்பிட்டு பெரிய மனுசருக்கு போர் அடிக்குதா.. என் செல்லமே.." என்று அவனை தூக்கி இடுப்பில் வைத்தார் தேவகி.. ம்ம் என்று மண்டை ஆட்டிய குழந்தையுடன் கொஞ்சிய படியே சாப்பிட்டு எழுந்து கை கழுவி வந்தார்..

" அம்மாடி பொன்னி உக்காரும்மா.. நான் உனக்கு சாப்பாடு வைக்கிறேன்.. மதனி நீயும் உக்காரு.." என்றவள் சொல்ல தயக்கமாக அமர்ந்தாள்.. முழு உரிமை இருக்கு தான்.. இருந்தாலும் சிறு பயம்.. என்ன நினைப்பார்களோ என்று.. அவளுக்கு சாப்பாடு வைத்து அனைவரும் சாப்பிட்டு முடிக்க மாறன் பார்வை பொன்னியை துளைத்தது..

சிறிது நேரத்தில் அவரவர் ரூமுக்கு சென்று விட பொன்னியை தயார் செய்து அவனின் அறைக்கு அனுப்பி வைத்தார் தேவகி.. இவ்வளவு நேரம் இருந்த தைரியம் காணாமல் போய் பயம் பதட்டம் நடுக்கம் என அனைத்தும் உடலில் ஒட்டி கொண்டது போல் உணர்ந்தாள்..

நடுக்கத்துடன் அறையில் கால் எடுத்து வைக்க உள்ளே மாறன் இல்லை.. அவள் திரும்பும் வேளையில் சரியாய் உள்ளே நுழைந்தான்.. உள்ளே நுழைந்ததும் அவளை மேல் இருந்து கீழ் வரை பார்க்க படக்கென தலை குனிந்தாள் கோதை.. அவளை பார்த்த படியே இடக்காலை தூக்கி வேட்டியை மடித்து கட்டியவன் பின்னன்கால்களால் கதவை உதைத்து சாத்தி தாழ் போட்டவன் கை சட்டையை மடக்கியவாரு அவள் நோக்கி சென்றான்.. சிறு உதரலுடன் அவள் பின்னே செல்ல அவனோ அவள் நோக்கி சென்றான்.. இருதியில் சுவர் முட்டி நின்றவளின நெஞ்சு கூடு மேல் ஏறி இறங்கியது.. அவள் இருப் பக்கமும் தன் கைகளை அனையாய் வைத்து அவள் நோக்கி குனிந்தான்..

வருவாள் பொன்னி..
 
Active member
Messages
291
Reaction score
192
Points
43
👌👌👌வீக்கிலி ஒன்ஸ் ஒரு யுடி போடுங்க சிஸ்டர்
 
Messages
524
Reaction score
403
Points
63
ரொம்ப நாள் ஆச்சு இப்போ தான் போட்டு இருக்கீங்க
கதை நல்லா இருக்கு கொஞ்சம் சீக்கிரம் போடுங்க
 
Top