• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
New member
Messages
14
Reaction score
16
Points
3
அத்தியாயம் _08

பொன்னியின் துரிதமான வேலை கண்டு விட்ட ரேணு அவளை நல்லா விவரமா தாண்டி இருக்க சரி வா டீ குடிக்க செல்லலாம் என்று உள்ளே செல்ல திரும்பியவர்கள் இருவருமே அப்படியே திகைத்து நின்று விட்டனர்..

" ஹையோ மாமா.." என்று ரேணு பதறி திருதிருவென விழிக்க பொன்னியோ எதிரில் நின்ற மாறனை கண்டு ஸ்விட்ச் போட்டார் போல் நின்றாள்.. பின்னங்காலை தூக்கி வேட்டியை பிடித்து பின்னால் கை கட்டியவாரு நின்று அவர்கள் இருவர்களையும் கூர்மையாய் தன் விழிகள் கொண்டு தீர்க்கமான பார்வை ஒன்றை வீச அவனின் கண்ணசைவில் ரேணு கண்களை உருட்டி மண்டையை ஆட்டியவாரு வேகமாக தாவணியோடு சேர்த்து பாவாடையும் தூக்கி கொண்டு ஓட அவனுக்கும் சற்று சிரிப்பு வந்து விட்டது.. அதை உதட்டில் மறைத்தவன் அவளை அழைத்தான்..

" ரேணு.." கணீர் என்ற அவன் குரலில் வீட்டை நோக்கி சென்றவள் வேகமாய் அவன் முன் வந்து நின்றாள்.. இத்தனைக்கும் பொன்னி அமைதியாய் தான் நின்றாள்..

" நாளையில் இருந்து நீ இவளுக்கு ஹெல்ப் பண்ண கூடாது.. புரிஞ்சுதா.." மாறன் கேட்க ரேணு தலையை சரி என்றும் ஆட்டாமல் மாட்டேன் என்றும் சொல்லாமல் பொன்னியை திரும்பி சங்கடமாக பார்த்தவள் மாறன் பக்கம் திரும்பி சங்கடமாய் அவனை பார்த்தாள்.. பேச சற்று தயங்கி கொண்டே பேசினால்..

மாறன் என்னதான் தன் மாமனாய் இருந்தாலும் ரேணு தேவை என்ற இடங்களில் மட்டுமே அவனிடம் வாய் மலர்ந்து பேசுவாள்.. இல்லையெனில் அவன் எது சொன்னாலும் அதற்கு சரி என்று மட்டுமே சொல்வாள்.. அவனை மறுத்து அதிகம் பேச மாட்டாள்.. ஆனால் இப்பொழுது பொன்னிக்காக ஏனோ அவளுக்கு பேச தோன்றியது..
அவனிடம் அவழுக்காய் பேசவும் செய்தால்..

" மாமா அது.. பொன்னி டவுனுல வழந்த பொண்ணு.. வேலை செஞ்சி பழக்க பட்டு இருப்பாளோ என்னவோ.. அதனாலே அவ இதெல்லாம் கத்துகிடுற வரைக்கும் கொஞ்சம் உதவி பண்ணுறேன்.. அவ கத்துக்கிட்ட பிறகு நிச்சயம் நான் அவளுக்கு உதவி செய்யல.. நீங்க சொன்னது போல அவ மட்டுமே தானா இதெல்லாம் செய்யட்டும்.." அவள் மெல்ல பேச பொன்னி இப்பொழுது அவள் பக்கம் திரும்பி பார்த்தாள்..

ரேணுவை பார்த்த பொழுதே அவளுக்கு மிகவும் பிடித்து போனது.. அவளின் அமைதியான சாந்தமான முகம் கண்டு.. இப்பொழுது அவலுக்காகவே பேசும் ரேணுவை இன்னும் இன்னும் அவளுக்கு பிடித்து போனது.. மனதார இந்த தருணத்தை மனம் எனும் பெட்டகத்தில் சேர்த்தால்..

அவள் சொல்வதை கேட்ட மாறன் மறுப்பேதும் சொல்லாது சரி என்று சொல்ல பொன்னி வியந்து தான் போனால்.. ஏனெனில் அவன் நிச்சயம் மாட்டேன் என்று தான் சொல்வான் என்று நினைத்தால்.. ஆனால் அவன் பொசுக்கென்று இப்படி சொல்ல தான் அவள் திகைத்து அவனை பார்த்தாள்..

" சரிங்க மாமா நான் உள்ள போறேன்.." என்றவள் சிரித்த முகமாய் உள்ளே ஓடினாள்.. இங்கோ இன்னும் பொன்னி மாறனை வைத்த கண் வாங்காமல் தலை சாய்த்து பார்த்தவாறு நின்றாள்.. அதிலே தெரிந்து விட்டது அவனுக்கு அவளின் பார்வை தன் மீது ரசனையை தத்து எடுத்து இருக்கிறது என்று.. அவனுக்கு தெரியாது அவள் பார்வையின் அர்த்தம் என்னவென்று.. அதை கண்டு ஒரு பெரும் மூச்சு விட்டவன் அவளின் முன் சொடுக்கிட்டான்.. அதில் திரு திருவென அவள் பாவமாய் விழிக்க இவனோ அதை கண்டு கொள்ளாது பேச்சை தொடர்ந்தான்..

" உனக்கு வேற வேலையே இல்லையா?.." அவன் கேட்க இவள் விழித்தால்..

" புரியல.."

" எப்போ பார்த்தாலும் என்ன ஒரு மார்க்கமா பாக்குறியே என்ன இல்ல என்னனு கேட்டேன்.." முக இருக்கத்தோடு அவன் கேட்க இவள் அவனை ஒரு மாதிரி பார்த்தாள்..

" மார்க்கமானா.. எந்த மாதிரி.. அந்த அந்த மாதிரியா.." என்று அவள் ஒரு தினுசாக கை ஆட்டி வினவ அவன் முக இறுக்கம் இன்னும் கூடியது..

" ம்ம்.. என்ன ஏன் திங்குற மாதிரி பாக்குறனு கேட்டேன்.." அவன் கேட்க இவளோ சிரித்தாள்.. ஆண் அவன் வாய் விட்டு கேட்டிட.. இப்பொழுது கட்டி இருந்த வேட்டியை இறக்கி கைகளை கட்டி கொண்டு நின்றான்.. அவளும் அதே போல் கை கட்டி சற்று அவன் பக்கம் நெருங்கி நின்றாள்..

" நீங்க நியாயம் தர்மம் எல்லாம் நல்லா பேசுவிங்கனு கேள்வி பட்டேன்.. இப்ப அதே நம்பிக்கையில் உங்கள்ட ஒரு கேள்வி கேக்குறேன்.. ஒரு கணவனுக்கு பொண்டாட்டியை சைட் அடிக்க எல்லா உரிமையும் இருக்கு இல்லையா.. அப்போ ஒரு மனைவிக்கும் தன் புருஷனை சைட் அடிக்க ஏக போக உரிமைகள் காதல் எல்லாம் இருக்கும் இல்லையா.." அவள் கேட்க இவன் தான் அவளை ஒரு வெற்று பார்வை வீசியவாரு அவளை நோக்கி கை காட்டினான்..

" அது அண்டர்ஸ்டாண்டிங் காதல் இப்படி குடும்பத்துல ஒன்றி இருக்க அன்யோன்யமான சாதாரண கணவன் மனைவிக்கு இடையில இருக்க வேண்டியது.. பொய்ய மட்டும் சொல்லி கல்யாணம் பண்ண உனக்கும் எனக்கும் இல்லை.. புரிஞ்சுதா.." அவன் இறுகிய முகத்துடன் கேட்க இவளுக்கு தான் ஒரு மாதிரி ஆகி போனது.. அப்படியே அவள் நிற்க இவன் மீண்டும் பேச்சை தொடர்ந்தான்..

" தெரிஞ்சோ தெரியாமலோ நீ தப்பு பண்ணிட்டே.. தண்டனையும் நிச்சயம் உனக்கு தான்.. என்ன கொஞ்சம் ஹெவியா தர முடியாது.. ஆனா எனக்கு தெரிஞ்சு டவுன்ல வளர்ந்த உனக்கு இந்த வேலைகளே ரொம்ப பெருசு தான்.. அப்புறம் இன்னும் ஒரு விடயம்.. இந்த மாதிரி பாக்குறப்போ எல்லாம் என்ன பல்ல பல்ல காட்டி இளிச்சிக்கிட்டு பச்சையா சைட் அடிக்காம நான் சொன்ன வேலைகளை ஒழுங்கா செய்.. இப்போ போ.." என்றவன் சொல்ல இவளும் அவன் பேசிய வார்த்தைகள் சற்று மன வருத்தத்தை தர துப்பட்டாவின் முனையை பிடித்து திருகியவாரு சோர்ந்த முகத்துடன் உள்ளே சென்றால்..

போகும் அவளை பார்த்தவன் பெரு மூச்சு விட்டு தலையை ஆட்டி விட்டு உள்ளே செல்ல அதற்குள் இங்கு ஒரு களேபரம் நடந்து முடிந்து இருந்தது..

மாறனிடம் பேசி விட்டு முந்தானையை சொறுகியவாரு குனிந்து கொண்டே சென்ற ரேணு நடுவீட்டில் எதன் மீதோ மோதி நிற்க திடுக்கிட்டு பின்னே நகர்ந்தால்.. அப்பொழுது தான் கவனித்தால்.. எதிரில் நின்ற வாசுவை.. பிளாக் காட்டன் பேண்ட் ப்ளூ செக்டு ஷர்ட் என்று டிப் டாப்பாய் வந்து நின்றவனை அவள் ரசித்து மெய் மறந்து அப்படியே நின்று விட இவனோ அவளை முறைத்தான்..

" அறிவிறுக்காடி உனக்கு.. கண்ணை எங்க வச்சிக்கிட்டு வற.." என்ற வாசுவின் குரலில் சுயம் பெற்றவள் அப்பொழுது தான் கவனித்தால்.. அவள் தட்டி விட்டதில் அவன் கையில் இருந்த டீ அவன் சட்டையில் ஊற்றி இருக்க அதில் தான் அவனுக்கும் கோவம் வந்து விட இவளோ பதறி போனால்.. அவனின் சத்தத்தில் மிரண்டவல் கண்ணீர் கூட எட்டி பார்க்க ஆரம்பித்தது..

" அச்சோ சாரி மாமா.. சாரி நான் கவனிக்கல.. தப்பு தப்பு தான் மாமா.. நீ கோவ படாத.. நீ சட்டையை கழட்டு.. நான் துவச்சி தாரேன்.." அவள் அழுகையுடன் கேட்க அவனோ அவசரத்தில் கிளம்பி நிற்க தாய் சொன்ன ஒரு வார்த்தைக்காக தான் டீயை அறுந்த நின்றான்.. இப்பொழுது இவள் செய்த வேளையில் இன்னும் லேட் ஆக அவனுக்கு கோவம் எகிறியது..

" கிறுக்கச்சி.. கிறுக்கச்சி.." என்றவன் அவளை நோக்கி பாய அதே நேரம் மாறனும் உள் நுழைந்து இருந்தான்.. பொன்னி கூட அங்கே இருக்க வேகமாய் அவர்களிடம் செல்ல போனவள் பின்னிருந்து கேட்ட குரலில் திடுக்கிட்டு தான் போயினர் அனைவரும்..

" வாசு.." என்ற குரலில் அனைவரும் திரும்ப அங்கோ அவனின் அப்பா கதிரவன் தான் இறுகி போய் கத்தினார்..

" உனக்கு நேரம் ஆச்சுன்னா வெரசா போய் வேற சட்டையை மாத்திட்டு கிளம்பு.. அதை விட்டுட்டு என் மருமக மேல கை ஓங்குற வேலை வச்சிக்காத.. அவ தான் உன்ன கவனிக்கல.. நீ அவளை கவனிச்சு தள்ளி நிக்க வேண்டி தானே.. உனக்கு கண்ணு எங்க போச்சு.. தப்பு உன் மேலையும் தான்.. இதுவே கடைசியா இருக்கட்டும்.. என் மருமக மேல கை ஓங்கிறது.. இனி ஒரு தரம் இப்படி நடந்துச்சு என்ன மனுசனா பாக்க மாட்ட.." என்றவர் சொல்ல வாசு தான் ரேணுவை முறைத்து விட்டு டீ டம்ளரை கிட்ச்சென் வாசலில் நின்ற அவன் அத்தை கோதை கையில் திணித்து விட்டு சென்றான்..

மாறனும் வாசுவும் குணத்தில் சற்று வேறு பட்டவர்கள் தான்.. மாறனுக்கு அப்படியே அவனின் தாத்தா சத்ய நாராயணன் குணம்.. அவரை போலவே அதிகம் கோவம் வந்தாலும் ஒரு போதும் பொறுமையையும் நிதானத்தையும் கை விட மாட்டான்.. கோவத்தை கட்டு படுத்த முயல்வானே ஒழிய அதை மற்றவரிடம் காட்ட மாட்டான்.. ஆனால் வாசு அப்படி இல்லை.. கண்மன் தெரியாத கோவத்தில் நிதானத்தை இழந்து விடுவான்.. பட் பட்டென பேசி விடுவான்.. இந்த ஒரு விடயத்தில் மட்டுமே.. மற்ற நேரங்களில் அண்ணனை போல் சாந்த சொரூபன் தான்..

அவரின் பேச்சை கேட்ட பொன்னி திரும்பி மாறனை பார்த்து வாயை கோனி விட்டு வாசுவிடம் கோபமாக பேசிய கதிரவன் அங்கிருந்த மர சோபாவில் அமர அவளும் அவர் பக்கம் சென்று நின்றாள்.. தன் பக்கம் கண்ட நிழலை உணர்ந்து நியூஸ் பேப்பரை விடுத்து அவள் முகம் கண்டார்..

" மாமா.. நீங்க நீதி நேர்மை நியாயம் தர்மம் பாத்து பேசுற மனுஷன் தானே நீங்க.. அப்போ எனக்கும் ஒரு பதில சொல்லுங்க.." என்றவள் பேச்சில் அவர் திரும்பி மாறனை கண்டார்.. இனி வரை அவரும் இவளிடம் பேசியதில்லை.. இவளும் அவரிடம் பேசியதில்லை.. அவள் விடயத்தில் ஏதுவாகினும் அந்த முடிவு மாறன் உடையது மட்டுமே.. இப்பொழுது அவள் இவரிடம் வந்து நிற்கவே தான் அவனை திரும்பி பார்த்தது.. அதை மாறன் உணர்ந்தானோ என்னவோ அவரிடம் தான் பார்த்து கொள்வதாக கண் அசைத்தான்..

" சொல்லுமா.." என்றவர் கேட்க இவளோ குது கழித்தால்..

" ஹை மாமா நீங்க என்கிட்ட பேசிட்டிங்க.." என்று அவள் நின்ற இடத்திலே குதித்து குதுகளிக்க இவருக்கும் சிறிது சிரிப்பு எட்டி பார்த்தது..

" நீ இந்த வீட்டு பொண்ணு மா.. என் பையனோட பொண்டாட்டி.. உன்கிட்ட பேசாம என்ன பண்ண போறேன்.." என்றவர் கேட்க அவளும் தலை அசைத்து மாறனை மீண்டும் கண்டவள் தன் மனதிலிருந்த கேள்வியை அவரிடம் கேக்க ஆயத்தமானால்..

" அது என்ன அப்படின்னா.. ஒரு மனைவி தன் கணவனை.." என்று ஆரம்பிப்பதற்கு அடுத்த வார்த்தையை தொடங்கும் முன் அவள் எதை கேட்க போகிறாள் என்று உணர்ந்த மாறன் வேகமாய் அவள் பேச்சில் இடை வெட்டினான்..

" ஹேய்.." என்றவன் அழைக்க அவளோ மீண்டும் ஒரு கோண புன்னகை சிந்தினால்..

" அதாவது என்னனா மாமா.." மீண்டும் ஆரம்பித்தாள்.. வேகமாய் தடுத்தான்..

" அப்பா நீங்க மில் வரைக்கும் போய் பஞ்சு லோடு வருதாம்.. அதை கொஞ்சம் சரி பார்த்துட்டு வாங்க.." அவன் சொல்ல மகன் பேச்சிற்கு மறுப்பு பேசாதவர் சரி என்று எழுந்து விட அவர்க்கு தண்ணி கொண்டு வந்து தந்தால் ரேணு.. அவள் சோகமான முகம் கண்டு அவள் தலை தடவி விட இவள் நிமிர்ந்தாள்..

" என்ன இருந்தாலும் நீங்க மாமனை அப்படி பேசி இருக்க கூடாது மாமா.." என்றவள் பேச்சில் சிரித்தார்..

" உனக்காக தானே மா பேசினேன்.." அவர் சொல்ல இவள் முக வாட்டம் இன்னும் மாறவில்லை..

" என் மேல என் மாமனுக்கு இல்லாத உரிமையா மாமா.. ஒரு அடி தானே வாங்குகிற மாட்டேனா.." என்றவள் கேட்க இவர் திரும்பி மாறனை பார்த்தார்.. அவனோ பொன்னியை முறைத்து நிற்க அவளோ அவனுக்கு பலிப்பு காட்டி கொண்டு இருந்தாள்..

" நான் அவனை மிரட்டாம போய்ருந்தா அவன் இந்நேரம் உன்ன அடிச்சி இருப்பான்.. அதை பார்த்து உங்க பெரிய மாமன் கோவ பட்டு அவனை அடிச்சி இருப்பான்.. தேவையா இதெல்லாம்.." அவர் கேட்க இவளுக்கும் புரிந்தது..

பெண் பிள்ளைகள் மீது கை நீட்டுவது சுத்தமாக மாறனுக்கு பிடிக்காத ஒன்று.. அதுவும் ரேணு அவனின் ஆசை அத்தை கோதையின் பிள்ளை.. அவரை போலவே சாந்தமான பெண் பிள்ளை.. அதனாலே அவளின் மீதும் அத்தையை போல் அதிக பாசம் கொண்டவன்.. அப்படி பட்ட பெண் அவளுக்கு ஒன்று என்றால் நிச்சயம் அவன் சும்மா இருக்க மாட்டான் என்பதே நிதர்சனம்..

அவரின் சொல் கேட்டு அவள் சரி என்று தலையசைக்க இவர் வெளியில் கிளம்ப மாறன் பொன்னியை முறைத்து தள்ளி எச்சரிக்கை விடுத்து அவனும் நகர்ந்து விட்டான்..

பொன்னி வருவாள்..

எழுத மைண்ட் செட் இல்ல.. இருந்தாலும் eluthitten.. கொஞ்சம் அட்ஜஸ்ட் pannikonga dears.. அடுத்த ud ஒழுங்கா எழுதி போடுறேன்..😊 பச்ச பிள்ளையை அப்படியே மன்னிச் விட்ருங்க..🤪🤪
 
Top