• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
New member
Messages
14
Reaction score
16
Points
3
அத்தியாயம் _05

மாறன் கீழே வந்த நேரம் வீட்டில் அனைவரும் எழுந்து தம் தம் வேலையை கவனிக்க சென்றனர்.. மாறனும் எப்பொழுதும் போல வந்து அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்தான்.. தன் நுனி விரலால் உந்தி ஊஞ்சல் ஆடிய படியே அன்னையை அழைத்தான்..

" அம்மா.." அவனின் குரல் கேட்டு சமையல் அறையில் இருந்த வந்தார் செல்வி.. அவர் சும்மா நிற்பதை பார்த்து புருவம் சுருக்கினான்..

" எங்கம்மா.." அவன் கேட்க உடல் இங்கிருக்க நினைவுகள் எங்கோ இருந்த செல்வி கேட்டார்..

" என்னப்பா ஏதாவது வேணுமா.." அவரின் கேள்வியில் தாடையில் ஐவிரல் பதித்து அவரை பார்த்தான்..

அவனுக்கும் புரிந்தது தான் அவரின் நிலை.. ஆனால் நிதர்சனம் என்ற உலகிற்கு நாமும் வந்து தானே ஆக வேண்டும்.. நடந்ததை நினைத்து எவ்வளவு நாள் வருத்தம் கொள்வது.. அது என்றுமே மாறனுக்கு பிடிக்காத ஒன்று.. வாழ்க்கை என்றால் ஆயிரம் கஷ்டம் நஷ்டம் நல்லது கெட்டது நினைத்தது நினைக்காதது எதுவானாலும் நடக்கலாம்.. அதை முழுமையாய் அனுபவித்தவன் ஆயிற்றே.. அவனுக்கு தெரியாததா.. தான் நினைத்தது மட்டும் தான் தன் வாழ்வில் நடக்க வேண்டுமென்று எந்த மனிதனும் எதிர் பார்க்க முடியாத ஒன்றல்லவா.. ஆனால் அது அவருக்கும் புரிந்தாலும் நேற்றைய சம்பவத்தில் இருந்து இன்னும் வெளி வரவில்லை..

தாடையில் கை வைத்து தாயே உற்று பார்த்தான் மாறன்..

" என்ன ராசா அப்படி பாக்குற.." அவனின் கன்னம் தடவி கேட்டது அந்த தாயுள்ளம்..

" நான் தப்பு பண்ணிட்டேன் நினைக்கிறியாமா.." அவனின் கேள்வியில் வேகமாய் மறுப்பாய் தலையசைத்தான்..

" இல்லையா.. இல்ல.. என்ன ஒன்னு நேத்து தாத்தா பேசும் போது கூட நீ எதுவும் பேசலையே.. அதான் வருத்தம்.. அவ உன்ன பத்தி அந்த சபையில சொன்னது தப்பு.. எவ்வளவு பெரிய பொய்.. தாத்தாவுக்கும் தெரியும்.. அப்படி இருந்தும் அவர் உனக்கு அந்த பொண்ணை கட்டி வச்சிட்டார்.. அதுவும் இல்லாம நான் இந்த வீட்டு மருமகளா ரேணுவை தான் நினைச்சேன்.. அதுவும் இல்லாம உன் வாழ்க்கை மட்டும் இப்படி ஆகுதே எனக்கு வெசனமா இருக்குயா.." கண்ணில் வழிந்த கண்ணீரை சேலை முந்தானையால் துடைத்து கொண்டே பேசினார்..

" எம்மா உனக்கே தெரியும்.. சின்ன வயசுலேயே வாசுவுக்கு ரேனுனு அவ மனசுல ஆசையை விதைச்சிட்டிங்க.. அவளும் அவனை தான் விரும்புறா.. அது நம்ம எல்லாருக்கும் தெரியும்.. ஆனா சந்தர்ப்ப சூழ்நிலை திடிருனு அவளை என்ன கட்டிக்க சொன்னிங்க.. நீங்க சொன்னிங்கனு அவளும் மனசுல இருந்த ஆசையை மறைச்சிட்டு என்ன கட்டிக்க சம்மதிச்சா.. ஆனா நானே இதை நிருத்தனும் தான் நினைச்சேன்.. கடைசியில இன்னொருத்தி வந்து நிறுத்திட்டா.. உண்மையை சொல்ல போனால் நான் அவளுக்கு நன்றிக்கடன் பட்டு இருக்கேன் மா.." அவன் எங்கோ வெறித்து பார்த்து பின் தன் அன்னையை பார்க்க அவன் சொல்வதும் உண்மை தானே என்று தான் செல்வி அன்னைக்கும் தோன்றியது..

இருந்தும் அவர் மனம் ஏனோ ஒப்பவில்லை.. தன் மகனை பொய் சொல்லி எதற்கு கண்ணாலம் செய்ய வேண்டும் என்ற நினைப்பே அவருக்கு உள்ளுக்குள் அறுத்தது.. அதையும் கண்டு கொண்டான் போல மகன் அவன்.. அதற்கும் அவனே பதில் தந்தான்..

" அம்மா அவ யாருனு நமக்கு தெரியாது.. ஆனா நா அவளை ஒரு முறை பட்டனத்துல பாத்து இருக்கேன்.. நல்ல மாதிரியான பொண்ணு தான்மா.. அவளால நம்ம குடும்பத்துக்கு பாதிப்பு எதுவும் அண்டாது.. அதுக்கு நான் பொறுப்பு.. சரியா.. போ போய் இப்போவாவது காபியை எடுத்துட்டு வா.." மாறன் என்னத்தான் சொன்னாலும் மனதுக்குள் அவருக்கும் சலனம் என்ற ஒன்று இருந்து கொண்டே தான் இருந்தது..

இருந்தும் மகனுக்காய் சம்மதமாக தலை அசைத்து அவன் கேட்டதை எடுக்க நகர போக சரியாக அவரின் முன்னே ஒரு தட்டில் காபி நீட்ட பட்டது.. கண்கள் மூடி முகத்தை மட்டும் ஒரு எட்டு பின் நகர்த்தி விட்டார்.. பின் யார் என்று நிமிர்ந்து பார்த்தவர் எதுவும் பேசவில்லை..

" குட் மார்னிங் அத்தை.." தலையசைத்து உற்சாகமாய் மொழிந்தால் பொன்னி.. அவரும் கடமையே என எடுத்து கொண்டார்..

" காபியை கையில குடுமா.. விட்டா முகத்துல ஊத்தி புடுவ போல.." செல்வி சொல்ல பதறினாள் பொன்னி..

" ஹையோ அத்தை நீங்க எனக்கு அம்மா மாதிரி.. நான் போய் அப்படியெல்லாம் செய்வேனா.." அவள் கேட்கவே அவளை மேல் இருந்து கீழ் வரை பார்த்து சென்றார் செல்வி.. அடுத்து காபி கப்பை மாறனிடம் நீட்டினாள்..

" என்னங்க காபி.." பொன்னி மாறன் பக்கம் நீட்டிடவே அவளின் அழைப்பில் சற்று உதாசினமாய் ஒரு கையில் நாவல் புத்தகம் ஒன்று இருக்க மறுக்கையில் காதை மெலிதாய் குடைந்தான்.. எல்லாம் அவளின் இந்த அமைதியான அழைப்பை கண்டு தான்.. பொன்னி இப்பொழுது எந்த அளவுக்கு அமைதியோ அந்த அளவுக்கு அவளின் அராத்யையும் கண்டவன் ஆயிற்றே மாறன்.. அவனிடம் அவளின் அறை வேக்காடை காட்டினாள் முடியுமா.. அவன் இன்னும் எடுக்காதது உணர்ந்து அடுத்து அழைத்தாலே ஒரு வார்த்தை.. மாறன் தான் திடுக்கிட்டான்..

" அத்தான்.." அவள் அப்படி கூப்பிட்டது அவனின் பழைய நினைவுகள் நெஞ்சில் ரணமாய் கிளர்ந்தது.. கண்களை இறுக மூடி கொண்டான்.. அதில் புருவம் நெளிய அவன் முகம் பார்த்த பொன்னி ஒரு நிமிடம் அரண்டு தான் போனால்.. ஏனெனில் மாறன் கண்கள் மூடி பற்கள் ஒன்றோடு ஒன்று உரசி நர நரவெனும் சத்தம் அவளது செவிகளை நன்றாக தீண்டியது.. செல்வி கூட விருட்டென திரும்பி பார்த்தார்.. மகனின் மன நிலை என்னவென காண.. அவர் நினைத்தது போலவே அவனின் முகம் அதையே பிரதி பலித்தது..

முன்பு ஒரு காலத்தில் அத்தான் அத்தான் என்று இரு பெண்கள் இவ்வீட்டை சுற்றிய பொழுது எவ்வளவு ஆனந்தம் கொண்டவன் ஆனால் அதற்கும் நேர் மாறாக இன்று அந்த அழைப்பு அவனுக்கு கோவத்தை தான் வரவழைத்தது.. அதை உணர்ந்த செல்வி வேகமாக அவன் பக்கம் வற போக ஆனால் அதற்கும் முன் வந்து சேர்ந்தான் மாறனின் மகன் ஆதி தேவ்..

"அப்பா.. குட் மார்னிங்.." ஆதியின் சத்தத்தில் அனைவரும் அவன் புறம் திரும்ப இவ்வளவு நேரம் கோவத்தில் கண்கள் மூடி இருந்த மாறனும் கண் விழித்தான்..

" அம்மம்மா எனக்கு பால் வேணும்.. பசிக்குது வயிறு.." அவன் கேட்ட நேரம் சரியாக வந்து நின்றார் தேவகி ரேணுவின் தாய்..

" என் பட்டு பையனுக்கு பசிக்கிதா.. வா வா அம்மம்மா பால் கொண்டு வந்துட்டேன்.. குடிச்சிட்டு நம்ம குளிக்க போலாமா.." அவர் கேட்க அவனும் சரி என்று அவரிடம் தாவினான்.. அதற்கும் முன் பொன்னி பக்கம் திரும்பி குட் மார்னிங் வைக்க அவளும் சிரித்த படியே சொன்னால்..
தேவகி அவனை தூக்கி நகர மாறன் அவள் குடுத்த டீயை ட்ரேயில் வைத்து விட்டு அங்கிருந்து எழுந்தவன் ஒரு விரல் நீட்டி எச்சரித்தான்..

" அத்தான் பொத்தான் சொன்ன பல்லு பேந்துக்கும்.. உன் இடம் எதுவோ அங்கேயே இரு.." என்றவன் இட காலை தூக்கி நுனி விரலால் வேட்டியை பிடித்து வேகமாய் அங்கிருந்து வெளியில் சென்றான்..

அதே நேரம் சரியாக உள்ளே நுழைந்தவரை கண்டு வெளியில் சென்ற மாறனும் நின்று விட்டான்..

" வா சித்தப்பு.." அவன் அழைக்கவே அவரும் சிரித்து கொண்டே வந்தார்..

" என்னடா புது மாப்பிளை எப்படி இருக்க.. முகமெல்லாம் ஜொலிக்கிது.. புது பொண்ணு செய்த மாயமோ.." அவர் கேட்கவே மாறனுக்கு சுல்லென ஏறியது.. உடனே நுனி விரலில் வேட்டி இருக்க மறு கையின் ஆட்காட்டி விரல் வைத்து தன் நெற்றியில் தேய்த்தவன் நிமிர்ந்து பின்னே பார்த்தான்.. இப்பொழுது இவருக்கு அடுத்து அவன் யாரை எதிர் பார்த்தானோ சாட்சாத் அவனே..

" நண்பா.. நான் வந்துட்டேன் டா" என்று கத்தி கொண்டே வந்தவன் இப்பொழுது பாடலும் பாடினான்..

" நண்பா என்றழைக்காத உயிரில்லையே.. நண்பனை போல் ஒரு உறவில்லையே.. மாறன் தான் என் உயிர் நண்பன் தான்.." சத்தத்தோடு பாடி வந்தவனை கண்டு பொன்னி ஆவலாய் வாசல் பக்கம் வந்தால்.. பாடல் பாடி கொண்டே வந்தவன் மாறன் பக்கம் வந்ததும் வைத்தான் அவன் முதுகில் இரண்டு அடி.. அடி வாங்கியவன் பாவமாய் பார்க்க பொன்னி வாயில் கை வைத்து விட்டால்.. பக்கத்தில் இருந்த மாறனின் சித்தப்பு நெஞ்சில் கை வைத்து பிறகு சிரித்து விட்டார்..

" ஏன்டா மகனே உன் உயிர் சிநேகிதன அடிச்சி வச்ச.."

" ஹான் நீ கேட்ட கேள்விக்கு உன்ன அடிக்க முடியாதுல.. அதான் உன் மவன் மேல பாஞ்சேன்.." மாறன் சொல்ல சித்தப்பு அதை கண்டு கொள்ளாது உள்ளே சென்றார்..

" எம்மா தங்கச்சி இன்னைக்கு என்னமா சோறு பொங்குன.." என்று கேட்டு கொண்டே அவர் உள்ளே செல்ல மாறன் தலையில் அடித்து கொள்ள அடி வாங்கியவனோ கத்தினான்..

" எப்பா உன் புள்ளையை ஒருத்தன் அடிக்குறான்.. என்ன ஏதுன்னு பஞ்சாயத்து பண்ணாம சோறு முக்கியம்னு போற.." அவன் கத்த அவரும் திரும்பி பார்த்தார்..

" டேய் மகனே.. ஊரு பயலுவழுக்கு ஒரு சண்டை சச்சிறவு அப்படின்னா கூட அப்பா ஓடி போய் நாட்டாமை பண்ணுவேன்.. ஆனா உங்க இரண்டு பேத்து இடைக்குள்ள வரது வழி தெரியாம முட்டு சந்துக்குள்ள முட்டுன மாதிரி.. அதுனால நீங்க பார்த்துக்கோங்க.." என்றவர் உள்ளே சென்று விட மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க மாறனை பார்த்தான்..

" ஏன்டா டேய்.. உன்ன பார்த்து ரெண்டு நாள் ஆச்சினு நான் ஓடோடி வந்தா நீ என்னையவே அடிக்கிற.." அவன் பாவமாய் கேட்க பொன்னி வேகமாய் சிரித்தாள்..

" ஹையோ அண்ணா நா சத்தமா பெருசா சிரிச்சிட்டென்.. நீங்க பம்பு இல்லாம காத்து அடிச்சதை பார்த்து இங்க ஒரு சம்பவம் இருக்குனு ஆவலா பார்த்தா நீங்க என்ன புஷுனு முடிச்சுட்டிங்க.. ஆளு பாக்க பல்காவா இருக்கிங்க.. ஆனா பேச்சு டம்மியாக இருக்கு.." பொன்னி சொல்லவே அவள் யாரென்று தந்தை சொன்னதை கேட்டு யூகித்தவனும் அவளிடம் பேசினான்..

" எங்கத்தா இந்த கதையும் சரி சினி மாவும் சரி.. ஹீரோவுக்கு சைட் ஹீரோ எல்லாம் காமெடி பீசா தான் போட்ராங்க.. என்னத்த சொல்ல.." அவன் கேட்கவே மீண்டும் வேகமாய் சிரித்த பொன்னி அவனிடம் கை நீட்டினாள்..

" நான் பொன்னி.. உங்க தோஸ்த்து மனைவி.." அவள் அவனை பார்த்து கை நீட்ட உடனே அவனும் நீட்டினான்..

" நான் ஆதவன்.. உன் புருசன் தோஸ்த்து.. அவன் கூட தான் பார்ட்னர் வேலை விசயத்துல.. ரெண்டு பேரும் ஒன்னா தான் படிச்சோம்.. அங்க போறது எங்க அப்பா மணி வேலு.." என்றவன் கை நீட்ட இருவரும் உற்சாகமாய் கை குலுக்கி கொண்டனர்.. அங்கிருந்து ஒரு அண்ணன் தங்கை உறவும் ஆரம்பம் ஆனது.. இதை எல்லாம் பார்த்த மாறன் எதுவும் பேசாது சத்தம் இல்லாது சாப்பாடு மேசைக்கு சென்றான்.. காலை உணவை எடுக்க.. அவன் போவதை பார்த்து பொன்னி மெல்ல அவன் அருகே குனிந்தாள்..

" உங்க தோஸ்த்து சிரிக்க மாட்டாரா.. சரியான முசுடா இருக்கார்.. எப்போ பார்த்தாலும் உற்றுனு.." அவள் கேட்கவே இவனும் சத்தமாய் சிரித்தான்..

" அவன் பொண்டாட்டி தானே நீ.. இனிமே அவனை தினம் நல்லா உத்து பார்த்து தெரிஞ்சுக்கோ.."

" தினம் என்னனா.. ஒவ்வொரு நிமிஷமும் உத்து உத்து தான் பாக்குறேன்.. என்ன அழகு.. என்ன அழகு.." அவள் ரசித்து சொல்ல அவளை ஒரு மாதிரி பார்த்து விட்டு அவனும் சாப்பிட சென்றான்.. இருவரையும் இங்கு வந்து சாப்பிடுமாரு மாறன் தந்தை கதிரவன் தான் அழைத்து இருந்தார்..

அனைவரும் சாப்பிட அமர ரேனுவும் வந்தால்.. அவளின் கண்கள் வாசுவை தேட அதை யார் உணர்ந்தார்களோ இல்லையோ பொன்னி நன்றாகவே கவனித்தால்..

பொன்னி வருவாள்..
 
Top