• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
New member
Messages
14
Reaction score
16
Points
3
அத்தியாயம் _02

கருமேகங்கள் திரண்டு இருந்த அதிகாலை வேலை அந்த மிக பெரிய சிவன் கோவில் மக்களின் கூட்டத்தால் ஜேஜேவென நிரம்பி இருந்தது.. அதிகம் எல்லாம் இல்லை.. வெறும் நெருங்கிய சில சொந்தங்கள் மட்டுமே.. முகூர்த்த நேரம் நெருங்க மணமகனை அழைத்தனர்.. அவன் வந்து சிறிது நேரத்தில் பெண்ணை அழைக்க முகத்தில் எந்த சலனமும் இல்லாது அவன் பக்கத்தில் அமர்ந்து இருந்தாள்.. கூடியிருக்கும் உறவுகளுக்கு சந்தோசம் இருந்ததோ என்னவோ ஆனால் மேடையில் மணமக்களாக இருந்த இருவருக்கும் துளியும் சந்தோசம் இல்லை..

சிறிது நேரத்தில் ஐயர் தாலி எடுத்து குடுக்க அதை பெண்ணின் களுத்தில் கட்ட போக சரியாக அதே சமயம் நடு கூட்டத்தில் ஒரு பெண் குரல் கேட்க மணமக்கள் முதற் கொண்டு அனைவரும் திரும்பி பார்த்தனர்..

" மிஸ்டர் பொன்மாறன்.." என்று கேட்ட குரலில் அந்த கூடமே ஒரு அதிர்வை தந்தது.. அங்கு நிற்கும் புதியவல் யார் என்று பார்க்க உள்ளுக்குள் எழுந்த குத்தாட்டதுடன் இப்பொழுது தான் மணமகளாய் இருந்த ரேணு நிமிர்ந்து பார்த்தாள்.. அதே குழப்பத்துடன் இவ்வளவு நேரமும் மணமகனாய் கண்ணும் கருத்துமாய் கடமைக்கென அமர்ந்து இருந்த மாறனும் உணர்ச்சிகள் துடைத்த முகத்துடன் அவளை தான் பார்த்தான்.. குடும்பத்தில் இருந்த யாரும் கேள்வி கேட்காது அமைதியாய் இருந்த பட்சத்தில் கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவர் வாய் திறந்தார்..

" யாரு மா.. நீ.. எவ்வளவு தைரியம் உனக்கு.. பெரிய வீட்டு கல்யாணத்தை நிறுத்துற.. மாறன் தம்பியை கூப்டுற.. என்னமா வேணும் உனக்கு.." என்றவர் கேட்க தோலில் மாட்டி இருந்த பேக்கை எடுத்து முன் வந்து நின்றாள்..
" நியாயம் வேணும்.." என்றவள் கேட்க அனைவரும் முழித்தனர்..

" என்னமா நியாயம் வேணும் சொல்லு.." என்று இவ்வளவு நேரம் அமைதியாய் இருந்த மாறனின் தாத்தா சத்ய நாராயணன் கேட்க அவரை கூர்ந்து கவனித்தால்..

" நிச்சயமா உங்களால எனக்கு நியாயம் சொல்ல முடியுமா.. உங்களை நான் எப்படி நம்புறது.." என்றவள் கேட்க கூட்டத்தில் ஒரே சலசலப்பு.. ஊருக்கே பஞ்சாயத்தில் நல்லது சொல்லும் மனிதரிடம் இப்படி கேட்க இருக்காதா பின்னே.. மாறனின் பார்வை அவளிடம் கூர்மையாய் விழுந்தது.. இருந்தும் அவள் யாரிடம் பேசுகிறாலோ அவர்கள் பக்கம் மட்டுமே அவள் கவனம் இருந்தது..

" என்னமா நீ.. எங்க வந்து என்ன பேசுற.. ஊருக்கே நியாயம் சொல்றவங்க அவங்க.. அவங்களால எத்தனை குடும்பம் வாழ்ந்து இருக்கு தெரியுமா.. அப்படி இருக்கும் போது இவ்வளவு பேர் கூடிய இருக்க சபையில இப்படி பேசுற.." என்ற ஒரு பெரியவர் எகிற இவ்வளவு நேரமும் மாறன் குடும்பத்தில் தாத்தாவை தவிர யாரும் எதுவும் பேச வில்லை..

" கூட்டத்துல எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருங்க.." என்ற சத்ய நாராயணன் அவள் பக்கம் திரும்பினார்..

" சொல்லுமா.. யார் நீ??.. உனக்கு பிரச்சனை என்ன??.. எங்கிருந்து வற??.. கல்யாணம் நடக்குற சமயம் நீ நிறுத்த காரணம் என்ன?.. இதுக்கெல்லாம் நீ சரியா பதில் சொன்னா மட்டும் தான் உனக்கு நான் நல்ல தீர்ப்பு சொல்ல முடியும்.." என்றவர் பேச்சில் இன்னும் நிமிர்ந்து நின்றாள்..

" நான் பொன்னி.. பொன்னி தேவி.. உங்க பேரன் ஒருத்தற்காக என்ன பெத்தவங்களை தூக்கி எறிந்து இவ்வளவு தூரம் வந்து இருக்கேன்.. காரணம்.. உங்க பேரனை மூணு வருஷத்துக்கு முன்னால் ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் உங்க பேரனை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் போது பார்த்தேன்.. ஆனா அந்த ஒரு விஷயத்துக்காக நாங்க அடிக்கடி மீட் பன்ற நிலமை வரும்னு நான் யோசிக்க இல்லை.. அப்படி நாங்க அடிக்கடி சந்திக்க உங்க பேரனும் நானும் காதலிக்க ஆரம்பிச்சோம்.. ஆறு மாசம் நல்லா தான் போச்சு.. அப்பப்போ அவர் இங்கேயும் அங்கேயும் அலைய ஆரம்பிச்சார்.. ஒருநாள் வந்து எனக்கு வீட்ல பொண்ணு பார்த்து இருக்காங்க அவங்க கல்யாணத்தை பேசி முடிக்க குள்ள நம்ம காதலை வீட்ல சொல்லி கல்யாணம் பண்ணிக்குவோம் சொன்னார்.. ஆனா எங்க வீட்ல சம்மதிக்கல.. அதுனால நான் நீங்க பார்த்து இருக்க பொண்ணையே உங்க பேரனை கட்டிக்க சொல்லி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி சாக போனப்போ தான் அவர் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சார்.. அப்புறம் அவர்க்கு கல்யாணம் ஆகி என்ன என்னவோ நடந்து போச்சு.. இப்போ மறுபடியும் அவரை நான் ஒரு நாள் பார்த்தப்போ அவர் எல்லா உண்மையும் என்கிட்ட சொன்னார்.. அதெல்லாம் கேட்டு மனசு தாங்காம தான் இப்போ நான் இவ்வளவு தூரம் ஓடி வந்தேன்.. ஆனா அவர் என்ன கட்டிக்க மாட்டேன் சொல்லிட்டார்.. அன்னைக்கு விட்டுட்டு போனவ இன்னைக்கு ஏண்டி வற.. உன்ன கல்யாணம் பண்ணிக்க முடியாது சொல்லிட்டார்.. ஆனா இன்னமும் என் மனசுல அவர் மட்டும் தான் இருக்கார்.. அதனாலே தான் இத்தனை வருடமும் நான் கல்யாணம் கூட பண்ணிக்காம இருக்கேன்.. ஆனா கண்டிப்பா இந்த முறை என்னால அவரை யாருக்கும் விட்டு குடுக்க முடியாது.. அவர் என் சொத்து.. எனக்கு மட்டும் தான் சொந்தம்.. நீங்க தான் ஒரு நல்ல முடிவை சொல்லனம்.." என்றவள் இப்பொழுது கை கட்டி. இன்று விட்டாள்..

முதலில் அவள் பேசுவதை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தவர்கள் மெல்ல மெல்ல அதிர்ந்தனர்.. மாறன் முகம் எந்த பிரதிபலிப்பையும் காட்டா விடினும் அவனின் புருவங்கள் மட்டும் அவ்வப்பொழுது சுருங்கியது.. குடும்பம் மொத்தமும் அதிர்ந்து நின்றனர்.. ஒரு நிமிட யோசித்த நாராயணன் அதற்கு ஆதாரம் ஏதும் உண்டா என்று கேட்க தன் கை பையில் இருந்த சில போட்டோக்களை எடுத்து காண்பித்தாள்.. அவர்க்கும் மனதளவில் அதிர்ந்தார் தான்.. போட்டோவை கண்ட பின்பும் அவரால் நம்பாமல் இருக்க முடியவில்லை.. என்ன செய்வது என்று ஒரு நிமிடம் யோசித்தவர் அங்கு இவ்வளவு கூட்டம் இருந்த போதும் எதற்கும் சளைக்காமல் நின்று இருந்தவளை தான் பார்த்தார்.. அவளின் உருதி அவரை உண்மையோ என்று நினைக்க வைத்தது..

அதே சமயம் தன் பேரனையும் திரும்பி பார்த்தார்.. அவன் முகம் எந்த சலனமும் இல்லாது அப்படியே தான் இருந்தது.. அவளின் மீது கூர்மையாய் வைத்த பார்வையை அவன் இன்னும் துளியும் திருப்ப வில்லை.. எழுந்து நின்று கை கட்டி கொண்டு தாடையில் கை வைத்து அவளை தான் பார்த்தான்.. தன் மேல் ஒருவள் பழி சொல்கிறாள் என்று தெரிந்த போதும் அவன் கம்பீரம் குறையவே இல்லை..

" மாறா.." என்ற அழைப்பு தாத்தாவிடமருந்து வற அவரை பார்த்தான்.. பேச்சையும் அவனே முடித்து வைத்தான்..

" நீங்க என்ன சொன்னாலும் நான் செய்றேன் தாத்தா.." என்றவன் பேச்சில் அவரும் ஒரு முடிவெடுத்து விட்டார்..

அவள் சொத்தோ பொருளோ எதுவும் கேட்கவில்லையே.. அவள் கேட்டது எல்லாம் அவள் உரிமை.. அவளின் ஆசை.. எந்த பெண் தான் தாங்குவால் இதை.. தன் காதலனை இன்னொருவள் சொந்தம் கொண்டாட நினைக்க எந்த பெண் தான் அனுமத்திப்பால்.. அவள் கேட்டது எல்லாம் உங்க பேரன் எனக்கு வேணும்.. எப்படி இருந்தாலும் ஏற்று கொள்ள அவள் தயாராக இருக்க நானும் நீதியை மட்டுமே வழங்க வேண்டும் என்று நினைத்தவர் குரலை கனைத்து நிமிர்ந்து நின்றார்..

" தெரிஞ்சோ தெரியாமலோ இவ்வளவு பேர் கூடிய சபையில ஒரு பெண் நியாயம் கேட்டு வந்துறுக்கா.. அதுவும் என் வீட்டு பிள்ளை மேல குத்தம் சொல்லி.. ஊருக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயம் எல்லாம் இல்லை.. சரியோ தப்போ அவ உரிமையை அவ கேட்டு வந்து நிக்குறா.. அத கண்டிப்பா நான் குடுத்து தான் ஆகனும்.. இப்போ நான் இந்த பொண்ணை உங்க எல்லார் முன்னாடியும் மாறனுக்கே கட்டி வைக்கிறேன்.. நீங்க எல்லாரும் மனசார ஆசிர்வாதம் பண்ணுங்க.." என்றவர் ரேனுவை எழுந்து கொள்ள சொல்ல பொன்னியை வந்து அங்கு அமர சொன்னார்.. ஒரு நொடி அப்படியே நின்றவள் வேகமாக மாறன் பக்கம் சென்று அமர்ந்தாள்.. எதற்கும் மாறன் மறுப்பு சொல்லவில்லை.. அவன் தான் சொன்னானே.. எதுவானாலும் கட்டு படுகிறேன் என்று..

அவள் பக்கத்தில் அமர மீண்டும் ஐயர் மந்திரம் ஓத மாறன் கையில் தாலியை குடுக்க யாரும் எதுவும் பேசவில்லை.. பெரியவர் இருக்கும் போது யாரும் எதுவும் பேச மாட்டார்கள்.. அவர் நியாயமான தீர்ப்பை தான் சொல்வார் என்பது வீட்டிலும் சரி ஊரிலும் சரி அனைவரும் அவரை நம்புவர்..

மாறன் பக்கத்தில் இருந்த பொன்னியை பார்த்தான்.. அவள் பார்வை நேரே இருந்தது.. அவள் கலுத்தில் தாலியை கட்டும் போது நெஞ்சுரசிய தாலியை கண்டு உணர்ந்து இப்பொழுது தான் மாறனின் கண்ணை நேருக்கு நேர் சந்தித்தால்.. சற்று தடுமாற்றம் தான் வந்தது.. அவனது பார்வையில்.. இருந்தும் வெளி காட்ட வில்லை.. இருவரின் கண்களும் ஒருவரை ஒருவர் தொட்டு மீண்டது.. அதன் பின் நெத்தியில் குங்குமம் வைத்து மெட்டி அணிந்து வந்த உறவுகள் எல்லாம் வாழ்த்தி செல்ல இருவரும் அமைதியாகவே இருந்தனர்.. இதை எல்லாம் ஒருவர் பதட்டத்துடன் பார்க்க அவரை சாப்பிட அனுப்பினார் நாராயணன்.. உள்ளுக்குள் ஒரு வித கலக்கம் இருந்த போதும் வெளியில் காட்டி கொள்ளாது அவர் சென்று விட பொன்னி அவரை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தார்.. அவர் தலை சுற்றுவது போல் ஒரு சைகை செய்ய உதடு குவித்து சிரித்தாள்..

இங்கு நடந்தது யாருக்கு சந்தோசமோ இல்லையோ ரேணு ரொம்பவும் மகிழ்ந்தாள்.. அதை விட வாசு தேவன் இப்பொழுது தான் பிடித்து வைத்த மூச்சை நிறுத்தி நிதானமாக வெளி இட்டான்.. செல்விக்கு இருந்த கவலை எல்லாம் இனியும் தன் மகன் வாழ்வு எப்படி ஆகுமோ என்று தான்.. பொற்குழலி ஒரு வித யோசனையுடன் வளம் வந்தால்..

இப்படி இருக்க மாறனை நோக்கி ஆதி தேவ் ஓடி வற வேகமாக அவனை தூக்கி அனைத்து கொண்டான்.. அவன் மனதில் ஒரு சிறு சலனம்.. இருந்தும் தன்னை மீறி எதுவும் நடந்து விட முடியாது என்றும் நினைத்தான்.. மாறனின் கையில் இருந்த ஆதி மெல்ல எட்டி பார்த்தான் பின்னிருந்த பொன்னியை.. இவனை கண்டு அவள் இதலோரம் ஒரு சிரிப்பு சிரித்து கண்ணடிக்க படக்கென தன் அப்பாவின் தோலில் முகத்தை மூடி கொண்டான்.. எல்லா சம்பிரதாயம் முடிந்து அவர்கள் வீட்டுக்கு வற நாராயணன் ரூமிற்குள் சென்று தன் மனைவியின் புகை படத்தை பார்க்க ஆரம்பித்தார்..

செல்வி இருந்த வேலைகளை செய்ய மாறன் வெளியில் சென்று விட பொற் குழலி அவளுக்கு ஒரு அறையில் விட்டு எதுவா இருந்தாலும் அப்புறம் பேசி கொள்ளலாம் என்று நகர்ந்து விட்டாள்.. இப்பொழுது ரூமில் தனிமையில் அமர்ந்தவல் அவள் இங்கு வந்ததை யோசிக்க ஆரம்பித்தாள்..
*************

மதுரை விமான நிலையம்.. மனதில் ஆயிரம் குழப்பங்கள்.. கேள்விகள்.. அடுத்து என்ன செய்வது.. எப்படி அனைத்தையும் சரி செய்வது என்று திக்கு திசை அறியாது விமான நிலையத்திற்கு வெளியில் காத்து இருந்தாள்.. கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் ஆனது.. ஆனால் அவள் எதிர்பார்த்த ஆள் மட்டும் இன்னும் காணாததால் சற்று நேரம் தூங்கிய நினைவுகள் மனதில் மீண்டும் உயிர்பெற்று இருந்தது.. அப்படி இருந்தும் அதை எல்லாம் தூக்கி மூட்டை கட்டி வைத்தால்..

அது போக அவள் எதிர்பார்த்த அவரை அழைப்பு கொள்ள அவள் கையில் ஃபோன் இருந்தும் அது சார்ஜ் போட மறந்ததால் இப்பொழுது அதுவும் செத்து போய் கிடக்க புது இடத்தில் பாவும் அவளும் என்ன தான் செய்வாள்.. கை கடிகாரத்தை பார்பதும் ரோட்டை பார்பதுமாக அவள் இருக்க பின்னிருந்து மூச்சு விடும் சத்தம் ஒன்று பலமாக கேட்டது.. அதை உணர்ந்த மங்கை அவள் திரும்பி பார்க்க அவரும் பார்த்தார்..

" சாரி மா.. கொஞ்சம் லேட் ஆச்சு.. எப்படி இருக்க.. அம்மா எப்படி இருக்கா.."

"எல்லாரும் நல்லா இருக்காங்க.. அப்புறம் அம்மாவை பத்தி உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.. நீங்க ரெண்டு பேரும் காண்டாக்ட்ல தான் இருக்கிங்க எனக்கு தெரியும்.. அம்மா சொன்னாங்க.." இருவரும் பேசி கொண்டே நடக்க அவரும் அதை ஆமோதித்தார்..

" ஆமா இப்படி திடு திப்புனு உன் அம்மா சொந்த ஊருக்கு வந்துறுக்கியே என்னடா விடயம்.." என்றவர் காரில் பின் பக்கம் ஏற அவளும் ஏறினால்..

" அம்மாவோட ஆசை நிறைவேற்ற தான் அங்கில்.. அப்புறம் அம்மாவோட ஆசை என்ன அப்படின்னு நா உங்களுக்கு சொல்ல தேவையில்ல நினைக்கிறேன்.." என்றவள் சொல்ல அவளுடன இருந்த ஆனந்தன் சத்தமாக சிரித்தார்.. கூடவே அவளும் இப்பொழுது தான் இதழ் விரித்து புன்னகைத்தாள்..

" உண்மை தான்.. நாங்க ரெண்டு பேரும் ரொம்ப நெருங்கிய தோழமை.. அவளும் சரி.. நானும் சரி.. எதையும் மறைச்சது இல்ல.. அப்போவும் சரி.. இப்போதும் சரி.. ஆனா அவளுக்கு இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை.." என்றவர் வருத்தம் தேய்ந்த குரலில் பேச அவரை தேற்றினால்..

வருவாள் பொன்னி...
 
Member
Messages
65
Reaction score
34
Points
18
Vowwww marriage over ahh.... Romanctic fight varuma.ah .... Waiting sis ... For ur next ud.... Semma😀😙🥳🤪🤭😘😘🥰📃📃😊🤩✍️😀🤪🤗
 
Top