Member
- Messages
- 94
- Reaction score
- 2
- Points
- 8
அத்தியாயம் - 32
நேரம் அதிகாலை மூன்றை தொட்டுக் கொண்டிருந்தது. இன்னமும் அமிழ்தினியனின் எதிர்பாராத செய்கையில் முகிழ்ந்திருந்தவளின் முகம் தெளிந்தபாடில்லை. அவ்வளவு பொறுமையாக அதற்கு விளக்கம் கொடுத்து எடுத்து சொல்லி புரிய வைத்தும் மழைக்குழலியின் அசாதாரண கோபப் பார்வை அவனையே தான் குற்றம் சுமத்தியது.
'எத்தனை துணிந்து இந்த முடிவினை எடுத்துவிட்டான்!’
மனம் மானசீகமாய் வெந்துப் போனது. நகரும் நொடிகளுடன் கடந்த நிமிடங்கள் ஒவ்வொன்றும் மனமெங்கும் கசப்பை உமிழ்ந்து சென்றதை போல இருந்தது.
காற்றிலாடிய காகிதங்களை கற்சிலையாய் வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவளின் நிலையை அதற்கு மேல் கைகட்டி தள்ளி நின்று காண முடியாமல் நிதானமாய் அவளருகே வந்து நின்றான் அமிழ்தினியன்.
அணைக்க மறந்த இமைகளை சுமந்தவாறு தவிப்பில் துடிக்கும் இதழ்களுடன் தன்னை நோக்கி நிமிர்ந்தவளின் நெகிழி பேழைக்குள் அடைக்கப்பட்டிருந்த இதயத்தை மெல்ல சுட்டெரித்தது அவன் விழிகளின் தீற்றல்கள்.
தடதடவென அங்குமிங்குமாய் அசைந்த கருவிழிகளுக்குள் வர்ணம் பூசி மெதுவாய் குனிந்து அவள் இமை ஓரமாய் பதித்தான் தன் நேசத்தை. இரு நொடிகளுக்குள் பதிந்து திரும்ப வேண்டிய இதழ்கள் இரண்டு நிமிடங்கள் கடந்தும் பிரிய மனம் இல்லாது மயங்கி நின்றது.
மீளாத சூழலாக இன்ப பெருவெள்ளத்தில் மாட்டிக் கொண்ட அதரங்களால் தொட்டு தொட்டு அவள் மீது வண்ணங்கள் தீட்டினான். ஒன்றிரண்டில் தான் நிறுத்தி விடமுடியுமா? கொடுக்க கொடுக்க இன்னும் அதிகமாய் பெருகிட, திகட்ட திகட்ட அவனை பெற்றுக் கொண்டிருந்தாள் அவன் இதயத்தின் இளவரசி.
“அத்..தான்” கட்டுப்படுத்திக் கொண்ட அழுகையுடன் அழைத்தவளின் இதழ்கள் அவனில் இடம் மாறிப் போனது.
அடுத்தடுத்து அவள் அழைக்க, அவனிடம் கேள்வி கேட்க கேட்க, சிறிது சிறிதாக அவள் மொத்தமாய் அவனிடம் இடம் பெயர்ந்துக் கொண்டிருந்தாள். அவளை பேசவே விடவில்லை அமிழ்தினியன்.
“நீ இதுவரைக்கும் பேசினது எல்லாம் போதும் ஜில்லு…” என்றுவிட்டான் ஒரேயடியாக.
“இனி நா..நான் பேசுறதை கேளு. என்னை உள்வாங்கிக்க ரெடியா இரு…” என்பதை தவிர அவனும் வேறு எதையும் அவளிடம் பெரிதாய் பேசிவிடவில்லை. அதற்கு அவனிடம் பொறுமையும் இல்லை.
“இன்னைக்கு நம்ப கல்யாண நாள் ஜில்லு. இரண்டு வருஷத்தை விடு. இப்பவாது என்னை அனுசரிச்சு போடி…” மொத்தமாய் மாறிப் போயிருந்தது அமிழின் நகர்வுகள்.
இதற்கு பிறகு அவளுடனான தன் வாழ்க்கைக்கு எந்த தடையும் இருக்க போவதில்லை என்ற பெரும் கொண்டாடல் அவனை நிமிர்த்தி நிறுத்தியிருந்தது. அதனால் மனைவியின் அர்த்தமற்ற பேச்சுகளை கேட்கும் எண்ணமே இல்லை அவனிடம்.
கொண்டவனின் தீண்டல்களில் உள்ளெழுந்த உணர்வுகளை தவிர்க்க முடியாமல் திண்டாடிய குழலி வேறுவழியில்லாமல் அவனை ஏற்றாள். ஏற்றுக் கொண்டாள் என்பதை விடவும் மார்பிலிருந்து பீறிட்டு கிளம்பிய மென்மையில் கரைந்துக் கொண்டிருந்தாள். அவனால் மட்டுமே அவளுள் வெடித்து சிதறும் உணர்வுகளின் பேருவகை ஆளுமையின் கீழ் அவனுடைய இதழ் ஒற்றல்கள் நீண்டது. அவள் வாசத்தை சுவாசித்தவாறே முகத்தை தாண்டி விட துடித்தபடி திணறினான் அமிழ்தினியன்.
குறை என்று கொடுத்த இறைவன் இந்த உணர்வுகளையும் பிடுங்கி எறிந்திருக்கக் கூடாதா என்ற தவிப்பு அவளுள் பெருகிக் கொண்டேப் போனது. காதலின் உணர்வு காய்ச்சலில் எரிந்துக் கொண்டிருந்தன உள்ளங்கள்.
“உனக்கு குறை இருக்குனு நீ நினைச்சனா… இப்ப… எனக்கும் கூட குறை வந்துடுச்சு தானே… அதுவும் இதுவும் சரியாப் போய்டுச்சுல ஜில்லு. இப்ப இதுக்கு அப்பறம் நீ என்னை வேணாம்னு சொல்ல மாட்டல…” சற்று முன்பு அவன் சொல்லியவையே மீண்டும் மீண்டும் அவளுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. அதிலும் அவன் முகபாவனைகளும் குரலும் அவளிடம் அவளை கேட்டு நின்றதை போலவே இருந்தது.
நிறுத்தி நிதானமாய் காதுக்குள் ஒலித்த வார்த்தைகளில் மீண்டும் அவள் விழிகள் இருவரை சுற்றிலும் விழுந்திருந்த காகிதங்களை ஒருமுறை தொட்டு மீண்டது.
“அத்…தான்” மீண்டும் அவனிடம் ஒரு யாசிப்பு.
“ம்ம்” அவள் கன்னங்களோடு அவன் மீசை முடிகளுக்குள் நடந்த சண்டையில் முன்னேறியபடி மெல்ல கிசுகிசுத்தான்.
“இதெல்லாம் சரியா?” குழலியின் பார்வை சுற்றிலும் பதிந்தது.
கிடைத்த இடைவெளியில் முகம் பார்த்து இதழ் அணைத்தவன், “சரின்னு நினைச்சா சரிதானே ஜில்லு…” மனைவியின் கனி இதழ்களுக்குள் பேசினான்.
அவன் மார்பில் கைப்பதித்து வேகமாய் அவனிடமிருந்து பிரிந்து, “என..எனக்கு சரின்னு தோணலையே அத்தான்…” என சத்தமில்லாமல் முனங்கினாள் மழைக்குழலி.
தன் கைகளை இறுக்கமாய் மூடி அரை நிமிடம் அவளை வெறித்தவன், “இப்ப என்ன என்னை மறுபடியும் போய் ஆப்ரேஷன் பண்ணிக்க சொல்றியா?” சுத்தமாய் இதம் தொலைந்த வலுமை அவனிடம்.
அவன் வார்த்தைகளை கேட்டு துடித்து அதிர்ச்சியில் உறைந்துவிட்ட விழிகளுக்குள் எரிமலையின் கங்குகளை புதைத்தான் அந்த நிதானக்காரன்.
நெஞ்சலிருந்து ஊற்றெடுத்த வலியொன்று குழலியின் உடலெங்கும் வேகமாய் பரவியது. சற்று முன்பு வரை தன்னை கொண்டாடி கரைந்த இதழ்களை பார்த்தபடியே அமர்ந்திருந்த குழலியின் உள்ளம் தன்னை முழுதாய் அவனிடம் அள்ளி கொடுத்திட சொல்லியது.
“என்னடி பாக்கற? அதை தானே அடுத்து சொல்லப் போற?” உறுமலுடன் அவள் முழங்கையை பற்றி இறுக்கினான்.
ஒரு முடிவோடு நிமிர்ந்து, “ஆமா, இது ரிவர்சிபிள் தானே. வாசெக்டாமி…” என சொல்லி எழுந்து நிற்க முயன்றவளின் கரம் பிடித்து அவளை வேகமாய் இழுத்தவன் அவளை இழுத்து தன்னுள் சுருட்டிக் கொண்டபடியே,
“எல்லாத்துக்கும் உன்கிட்ட சொல்லுஷன் இருக்குல… நீ எல்லாரையும் யோசிக்கறல…” என நிறுத்தி அவள் முகவாய் பற்றி,
“அப்ப… என்னை பத்தியும் யோசி ஜில்லு. என்னோட காதலுக்கும் பதில் சொல்லு…” அதட்டலுடன்,
“நான் வாசெக்டாமி பண்ணிக்கிட்டேன்னு தெரிஞ்சதும் அப்படி துடிச்சுப் போன. எல்லா மெடிக்கல் ரிப்போர்ட்ஸையும் தூக்கி எறிஞ்ச. இரண்டு மணி நேரமா உட்காந்து அழுத… அப்பறம்… அவ்வளவு தான்ல… மறுபடியும் ஆரம்பிச்சுட்ட. என்னை பத்தி அவ்வளவு தான் யோசிப்பல நீ” ஆங்காரமாக வினவினான்.
விழிகளில் திரண்டு நின்ற முத்துகளோடு அவனை நிமிர்ந்துப் பார்க்க முடியாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தவளின் முகம் பார்த்து விழி பதித்து, “நான் ஒன்னும் எனக்காக இதெல்லாம் பண்ணிக்கல. எனக்கு இதெல்லாம் தேவையே இல்ல. இதெல்லாம் இல்லாமலே என்னால உன் கூட சந்தோஷமா வாழ முடியும். ஆனா, இதை நினைச்சு என் பொண்டாட்டி எப்பவும் வருத்தப்படவே கூடாதுனு தான். எந்த நிலையிலையும் உன்னாலனு நீ யோசிச்சிட கூடாதுனு தான்.. இதெல்லாம்…” கூறியவனின் முன்பாக தவிப்புக்கும் வருடலுக்கும் இடையே கிடந்து அல்லாடினாள் குழலி.
உள்ளுக்குள் கிடுகிடுவென ஆடியது மனம். நிஜம் தான். உண்மையில் எவரும் செய்ய துணியாத காரியத்தை எந்தவித அலட்டலும் இல்லாமல் செய்துவிட்டு வந்திருக்கிறான். அது வேறொன்றுமில்லை வாசெக்டாமி என்றழைக்கப்படும் ஆண் கருத்தடை அறுவை சிகிச்சை. குடும்பத்திறக்காக என்றாலுமே பல தகப்பனார்கள் இன்னமும் செய்ய முன்வராமல் பின்னடைவில் நிற்கும் ஒன்று. எப்போதும் போல அன்னைகளின் உதிரத்திற்கும் உடல் வலிமைக்கும் வேலை வைக்கும் சமுதாயத்தில் அவளால் கிஞ்சித்தும் ஏற்க முடியாத விஷயத்தை செய்துவிட்டு வந்திருக்கிறான் என்பதில் இருந்தே இன்னமும் அவளால் வெளிவர முடியவில்லை.
'இனிமே உன்னால என்னை வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கங்க அத்தான்னு சொல்ல முடியாதுல ஜில்லு…' சிறு துள்ளலுடனும் மனமெங்கும் பாய்ந்த வந்த இன்பத்துடனும் அவன் கூறிய வார்த்தைகள் அவளுக்கு மட்டும் அமிலத்தை நினைவுப்படுத்தி சென்றதே.
“நானும் என்னென்னமோ சொல்லிப் பார்த்துட்டேன். என்னென்னவோ செஞ்சுப் பார்த்துட்டேன். ஆனா, நீ என் பேச்சைக் கேக்குறதாவே தெரியல. அதான் உனக்கு ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ்… என்னோட கிஃப்ட் எப்படி இருக்கு ஜில்லு?” என இதழ்கள் விரிய புன்னகை முகமாய் அவன் கேட்டு நின்றபோது உடலுக்குள் உயிர் கறைவதாய் ஒரு உணர்வு தோன்றியதே அதை இப்போதும் கூட அவளால் எளிதாக ஏற்க முடியவில்லையே.
அடுத்தடுத்த விஷயங்களின் பின்னலில் மாட்டிக்கொண்டு அவளால் அப்படியே யோசித்துக் கொண்டிருக்கவும் முடியாதே. அவனுடைய எந்த வகையான செய்கைகளுக்கும் மகிழ்வுறும் விதி அவளுக்கு இந்த ஜென்மத்தில் வாய்க்கப்படவில்லையே. எல்லாம் தனக்காகவே என சந்தோஷிக்க முடியாத அவல நிலையில் அல்லவா மலர்ந்திருக்கிறது பெண் மனது. அதனாலேயே அதற்குள் அடுத்தக்கட்ட பேச்சிற்குள் நகர்ந்துவிட்டாள். ஆயினும், முன்பை போல மனதார அவளால் இனி அவனை பிரிய முடியாது என்பது எப்போதோ அவளுக்கு புரிந்துவிட்டது. முன்பு, எப்படியோ அவனுடைய நலனுக்காகவென தீர்க்கமாய் அவனை பிரிந்துவிடும் முடிவோடு அவளால் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி முடிந்தது.
ஆனால் இப்போது கதையே வேறு. தன் நேசம், நாட்களின் நகர்வு, ப்ரியமானவனின் அருகாமை, அவன் பார்வைகள் முதல் தொடுதல்கள் வரை எல்லாமே அவளை அடிமையாக்கிவிட்டன. அவனுடைய நேசத்தை சுவாசிக்கவே இவ்வுலகத்திற்குள் உதிர்ந்துவிட்ட நட்சத்திரமாய் ஒளிர்ந்தது அவள் பெண்மை.
இனி தான் என்னதான் செய்வது என சிந்தித்தபடியே மெல்ல அவன் கை நழுவி எழுந்து, தள்ளி நின்றவளை கண்டு வேகமாய் எழுந்தவன் இரண்டெட்டில் அவளை அணுகி, “அடுத்து குழந்தைனு தானே ஆரம்பிக்கப் போற?” என கேள்வியுற்றவாறே மெதுவாய் அவள் வயிற்றில் கைப்பதித்து,
“என்னோட குழந்தைய உன்னால மட்டும் தான் சுமக்க முடியும். அந்த உரிமை உனக்கு மட்டும் தான் சொந்தம் ஜில்லு. குழந்தைப் பெத்துக்க எத்தனையோ வழிகள் இருக்கு தான். அதெல்லாம் வேணாம்னு சொல்ற அளவுக்கு நான் பிற்போக்குவாதி கிடையாது. பட், நமக்கு எதுவும் வேணாம். எந்த காலத்துலையும் என் ஜில்ல இக்கட்டான நிலையில நிறுத்துற எந்த விஷயமும் எனக்கு வேணாம். அது குழந்தையாவே இருந்தாலும்.
நீ இல்லாம எதுக்கு டி எனக்கு குழந்தை? என்னோட இரத்தத்துல இருந்து பிறந்தா தான் அது குழந்தையா? இல்ல உனக்கும் எனக்குமான பந்தத்துக்கு குழந்தை தான் அத்தாட்சியா? நீயும் நானும் குழந்தையே பெத்துக்க வேணாம். நம்பகிட்ட வர குழந்தைய நாம நல்லபடியா வளர்ப்போம்.” என ஆதரவாக அவளை தன் தோளோடு அணைத்துக் கொண்டான்.
விழிகளுக்குள் திரண்டு நின்ற நீரோடு மௌனமாய் அவனை திரும்பிப் பார்த்த குழலியை நோக்கி குனிந்தவன் லேசாய் அவள் நெற்றி முட்டி, “இன்னும் நான் என்ன பண்ணனும் ஜில்லு? என்ன பண்ணா நீ என் கூடவே இருப்ப? என்ன பண்ணா உன் காதல் மொத்தத்தையும் எனக்கு தருவ? சொல்லு ஜில்லு…” மென்மையாய் கேட்க,
“அத்தான்… நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்…” தாடையில் பதிந்திருந்த அவன் விரல்களை பிரித்து அகற்றினாள்.
பெருமூச்சோடு விலகியவன் தள்ளி நின்று மார்பிற்கு குறுக்காக தன் கைகளைக் கட்டிக் கொண்டு இமைக்காமல் அவளையே பார்த்திருந்தான். தொடர்ந்து வீசும் விழிகளின் மின்னல்களில் மெல்ல தலை குனிந்து தன்னை சரி செய்துக் கொண்டு தன் மனம் திறந்தாள் மழைக்குழலி.
“எனக்கு ஒரு பதினஞ்சு வயசு இருக்கும். ஒரு பெண்ணா என்னை நான் உணர ஆரம்பிச்ச நேரம். காதல்னா என்னனு கேள்விப்பட்ட வரையறையில மட்டும் தான் நான் அப்ப இருந்தேன். ஸ்கூல் டைம்ல சில ஃப்ரெண்ட்ஸ் பேசுற டாப்பிக் தான். ஆனாலும், எனக்கு என்னமோ பெருசா அதுல இன்ட்ரெஸ்ட் இருந்ததே இல்ல. குடும்பம், படிப்பு, விளையாட்டுனு நானும் ஒரு வளையத்துக்குள்ள மட்டும் தான் இருந்தேன்.
அந்த கால கட்டத்துல தான் பெருசா இல்லனாலும் ஏதோ ஒரு விஷயம் என்னை உங்கள நோக்கி ஈர்த்துச்சு. ஈர்ப்ப விட நீங்க என்கிட்ட காட்ட ஆரம்பிச்ச ஒதுக்கம் என்னை என்னமோ பண்ணிச்சு அத்தான். வெளிப்படையா இல்லனாலும் நீங்க விலகிய நொடிகள் என்னை ரொம்பவே பலகீனமா ஆக்கிடுச்சு.
சொல்லப்போனா முதல்முறையா அப்பதான் காதல்னா என்னனு உணர்ந்தேன். ஆனாலும், மனசுக்குள்ள ஒரு சின்ன நெருடல். ஸ்கூல் படிக்கிற வயசுல இதெல்லாம் தப்புனு ஒரு பயம் ஸ்கூல் முடிக்கற வரைக்கும் என்னை பெருசா யோசிக்க விடல. அதுவரைக்கும் எதையும் தெரிஞ்சிக்காம எப்பவும் போல அமைதியாவே தான் இருக்கணும்னு இருந்தேன்.
காலேஜ் படிக்கும்போது எனக்கு ஓரளவுக்கு என்னோட நிலமை புரிஞ்சிடுச்சு. உங்களை எவ்வளவு யோசிக்கிறேன்னு தெரிஞ்சுது. ஆனா, அதை உங்ககிட்ட சொல்றதுக்கு சுத்தமா எனக்கு தைரியம் இல்ல. என்னோட ஆசைய நான் சொல்லி, நீங்க நான் அப்படியெல்லாம் உன்னை நினைக்கவே இல்லனு சொல்லிட்டாலோ, என்ன நீ இப்படி எல்லாம் கேவலமா யோசிக்கறனு கேட்டுட்டாலோ அதுக்கு அப்பறம் நான் என்ன பண்ணுவேன்.
பக்கத்துலையே இருந்து தினமும் பார்த்திட்டு இருக்கற உங்களை அதுக்கு அப்பறம் நான் எப்படி எதிர்கொள்வேன்னு ஒரே யோசனை. அதனால என்ன ஆனாலும் சொல்லிடவே கூடாதுனு முடிவெடுத்தேன். உள்ளுக்குள்ள உங்களை நான் தேடினாலும் வெளிய காமிச்சுக்கவே கூடாதுனு ரொம்ப உறுதியா இருந்தேன்.”
இறுகிய முகம் லேசாய் மாறிவிட அவனுக்கு முதுகு காட்டி மறுபக்கமாக திரும்பி நின்றிருந்தவளுக்கு அருகில் வந்து நின்றான் அமிழ்தினியன்.
“அதுக்கு அப்பறம் படிப்பு, வேலைனு ஓட்டிட்டே இருந்தபோதும் என்னை உயிர்ப்போட வச்சிருந்தது என்னோட காதல் தான். முதல்ல இருந்த தயக்கம் காலப்போக்குல சந்தோஷமாவும் நிம்மதியாவும் மாறிடுச்சு. அந்த சந்தோஷத்தையும் நிம்மதியையும் கெடுத்துக்க விரும்பாம ஊமையா உங்களை நேசிச்சேன். என் விருப்பத்தை வெளியே சொல்லாத அந்த ஒருதலைக்காதல் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது அத்தான்.
உங்களை கனவுல, கற்பனையில, என் இதயத்துலனு அழகா வடிச்சு வச்சு ரசிச்சிட்டு இருந்தேன். உங்ககிட்ட இருந்து நான் எதையும் எதிர்பார்க்கவே இல்ல அத்தான். ஆனா, உங்களை சேர முடியாம போயிருமோன்ற தவிப்பு மட்டும் எனக்குள்ள அதிகமாகிட்டே இருந்துச்சு…” கரைந்துவிட்ட கண்ணீரோடு மார்பிற்கு குறுக்காக கைகளை கட்டிவாறு தன் தோள்களை தடவிக் கொடுத்தாள்.
“ஜில்லு… இங்க பாரேன்…” அவள் படும் அவஸ்தையை காண பிடிக்காமல் தன் மௌனத்தை கலைத்து வாய்திறந்தவனை தவிர்த்தவாறு வெளியே வேடிக்கைப் பார்ப்பதாய் பாசாங்கு செய்தவளின் குரல் கம்மியது.
“அப்பதான் அன்பா கல்யாணம் நடந்துச்சு. அன்னைக்கு நடந்ததை என்னால மறக்கவே முடியாது. எங்க பக்க சொந்தம் எல்லாம் அன்பாக்கு அடுத்து எனக்கு தான்னு பேசும்போதும், வரனா ஒண்ணு இரண்டு இடம் சொல்லும்போதும் அப்பா சொன்னது என் உயிரை வேரோடு பிடுங்கி அந்த பரந்த ஆகாயத்துக்கே தூக்கி எறிஞ்ச மாதிரி இருந்துச்சு. அந்த நொடி என் மனசு அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்லத்தான்.”
அவனுக்கும் அன்றைய நிகழ்வு நன்றாகவே நினைவு இருக்கிறது. தன் தந்தை வழி சொந்தத்திலிருந்த ஒருவர் குழலிக்காகவென ஒரு வரத்தை பற்றி பேசவும் அங்கேயே அனைவரின் முன்பாகவும் தன் மனதிலிருந்ததை தெளிவாக சொல்லிவிட்டார் அவனுடைய மாமானர். சொல்லிவிட வேண்டும் என அவர் நினைக்கவில்லை தான் ஆனால் மற்றவர்களிடத்தில் தட்டி கழித்து பேசியதை போல தன் சொந்த பந்தத்திடம் சாக்கு சொல்லி அவரால் சமாளிக்க முடியாமல் தீர்க்கமாக சொல்லிவிட்டார்.
'குழலிக்கு இனியன் தான்னு பேசி ரொம்ப நாளாச்சே. சொல்லப் போனா அவங்க சின்ன வயசுல இருந்தபோதே நான் என் நண்பனுக்கு என் பொண்ணு அவன் வீட்டுக்கு தான் மருமகளா வருவானு வாக்கு கொடுத்துட்டேன். அவங்களும் எங்க பேச்சுக்கு எந்த மறுப்பும் சொல்ல மாட்டாங்கனு நினைக்கறேன். அதனால சபைல வச்சே தெளிவா சொல்லிடறேன் என் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சு. அமிழ்தினியன் தான் அவளுக்காக நாங்க பேசியிருக்கற வரன். அவங்க கல்யாணத்துக்கு எல்லாரையும் கூப்டறோம்…' என உரைத்த குரலில் அங்கிருந்த சொந்தங்கள் அனைவருக்கும் நன்றாக புரியும் வகையில் தெளிவாக தெரிவித்திருந்தார்.
அப்போது அமிழ்தினியனும் அங்கு தான் இருந்தான். மழைக்குழலியும் கூட அங்கு தான் இருந்தாள். இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் கண நேரத்தில் திரும்பிப் பார்த்ததோடு சரி. வேறு எதையும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. இருவருமே தங்கள் வாழ்க்கையை பற்றிய சிந்தனையிலும் எதிர்காலத்தின் எதிர்பார்ப்பிலும் ஆழ்ந்துப் போய் மௌனமாய் யோசித்து நின்றிருந்தனர்.
ஆனால், அந்த ஒரு வினாடியில் பதிந்து விலகிய அமிழ்தினியனின் பார்வை மாற்றத்தை கண்டுக் கொண்டாள் மழைக்குழலி. அந்த நொடி நேர உரசலில் தான் உணர்ந்துக் கொண்ட காதலால் தான் நம்பிக்கையுடன் அவனுக்காக காத்திருக்க துவங்கினாள்.
“அன்னைக்கு என்னை ஒரே ஒரு நொடி சந்திச்சு விலகின உங்க கண்ணுல இருந்து தான் முதல்முறையா உங்க காதலை உணர்ந்தேன். உங்களோட விருப்பத்தை நீங்க சொல்லாமலே அந்த பார்வையிலேயே எனக்கு புரிஞ்சுது. அப்ப எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்ல. ஒரு வாரம் நான் சுத்தமா தூங்கவே இல்ல. எப்பலையில இருந்து உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கும்? என்னோட காதலை நான் வெளிப்படுத்தாமையே நீங்களும் புரிஞ்சிக்கிட்டீங்களா? இனி நான் உங்களை எப்படி ஃபேஸ் பண்றது? நம்ப உறவு இனி எப்படி இருக்கும்னு எனக்குள்ள ஆயிரம் யோசனை ஓட்டிட்டே இருந்துச்சு.
காதலிப்பதை விட காதலிக்கப்படுவது எவ்வளவு சுகம்னு நான் அன்னைக்கு தான் தெரிஞ்சுக்கிட்டேன். ஆனா, அடுத்தடுத்த விஷயங்கள் நான் எதிர்பார்த்தபடி நடக்கல. நீங்களும் எதுவும் நடக்காத மாதிரி பழையபடி தான் இருந்தீங்க. வீட்லையும் யாரும் எதுவும் பெருசா தோண்டி துருவல. எல்லாரும் எப்பவும் போல இயல்பா இருக்க… எனக்கு தான் மனசுக்குள்ள கொஞ்சம் ஏமாற்றமா இருந்துச்சு…” அந்நாட்களின் தன்னுடைய அமைதி அவளை எந்த அளவிற்கு குழப்பி இருக்கிறது, அவளுக்கு எந்த அளவிற்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது என்பதினை இப்போது புரிந்துக் கொண்டவனாக தவித்துப் போனான் அமிழ்தினியன்.
“இல்லடா… உன்னை டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு தான்… உனக்கு எந்த வகையிலையும் என் காதல் தொந்தரவா இருந்தற கூடாதுனு தான் நான் உன்கிட்ட வெளிப்படையா எதையும் காட்டிக்கல…” தன் கைகளால் பரபரவென தலையை அழுத்தமாய் கோதிக் கொடுத்தான்.
தலை முதல் கால் வரை பீறிட்டு கிளம்பிய சிலிர்ப்பை கட்டுப்படுத்தவே முடியாமல் தண்ணீரை எடுத்து தன் வாயில் சரித்தவன் அவளிடமும் கொடுத்தான். சிறு புன்னகையோடு அவன் தருவித்ததை வாங்கிக் குடித்தவள்,
“எனக்கு உங்களை நல்லாவே தெரியும் அத்தான். நீங்க என்ன நினைச்சு என் கிட்ட சொல்லலனு தெரியாது. ஆனா, அதுவும் எனக்காக தானு எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும்…” இதழ் பிரிக்காத இளம்முறுவலுடன் மீண்டும் தொடர்ந்தாள்.