• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

புன்னகை 16

Administrator
Staff member
Messages
464
Reaction score
794
Points
93
புன்னகை 16:

இறையுடைமை என்பது வேறொன்றுமில்லை

பற்றிக் கொண்ட‌
உயிர்களை தாங்கி
நிற்கும் பாங்கு தான்…!


நொடிகள் நிமிடங்களாக கடக்க செல்வா அழுகையை நிறுத்தவில்லை.

கண்ணீர் வற்றாத நதியாய் விழிகளில் நிரம்பி வழிந்தது.

வெகுநேரம் அவள் அழுதிருக்க ஆதரவாக அவளது முதுகை வருடியவன்,

"போதும் ஜான்சி ராணி இன்னும் எவ்ளோ நேரம் அழுவ" என்று சமாதானம் கூற,

பதில் கூறாதவள் மேலும் அவன் மார்பில் ஒன்றினாள்.

"ஜான்சி ராணி இங்க பாரு நிமிர்ந்து என்னை. இன்னும் ஒன் இயர் தான் நீ யூ ஜி முடிச்சதும் கல்யாணம் பண்ணிக்கலாம். அதுக்கப்புறம் கூட நீ பிஜி பண்ணு. ஹ்ம்ம்" என்று அவளது முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்த முயல,

"ம்ஹூம் இப்போவே பண்ணிக்கலாம்" என்றவளது பதிலில் சட்டென்று புன்னகை வந்துவிட்டது.

"ஹ்ம்ம் நான் ரெடியா தான் இருக்கேன். பட் உங்கப்பா என் மாமா மிஸ்டர் ராமநாதன் ரெடியா இருக்கணுமே?" என்று சிரிப்புடன் கூற,

"பேசி சம்மதிக்க வைங்க" என்றவள் நிமிராது கூற,

"பேசலாம் பேசலாம் நீ பர்ஸ்ட் என் சர்ட்ட கசக்காத. திரும்பி வெளியே போகணும் அங்க என்னோட பேன்ஸ் இருக்காங்க" என்று சிரிப்புடன் அவளை வம்பிழுக்க கூறினான்.

அதில் சட்டென்று நிமிர்ந்து அவனை கண்ணீருடன் முறைத்தவள் மீண்டும் குனிந்து அவன் சட்டையில் முகத்தை நன்றாக தேய்த்து கசக்கினாள்.

"ஹே என்னடி பண்ற விடு என்னை" என்று போலியாக அலற,

நன்றாக ஒட்டிக் கொண்டவள் இன்னும் இரண்டு நிமிடங்கள் தேய்த்து கசக்கிவிட்டு,

"இப்போ போங்க உங்க பேன்ஸ பாக்க" என்று அழுது சிவந்த முகத்துடன் முறைக்க,

மந்காச சிரிப்புடன், "நீயிருக்கும் போது நான் எதுக்கு அவங்களை பாக்க போகணும்?" என்று சிரிப்புடன் வினா தொடுத்து அவளது கைகளை பிடிக்க,

"ப்ச் விடுங்க" என்றவள் முறைப்புடன் முகத்தை திருப்ப,

"விட்டுட்டேன்" என்றவன் சட்டென்று கையை எடுத்துவிட,

தனது கரம் மட்டும் அங்கேயே இருப்பதை உணர்ந்து அவனை மேலும் முறைத்து நகர எத்தனிக்கும் நொடி சடுதியில் அவளை பிடித்து இழுத்து அணைத்து கொள்ள,

"விடுங்க என்னை விடுங்க" என்றவளது திமிறலை ரசித்தவன் சட்டென்று குனிந்து அவளது முகத்தில் மென்மையாய் ஊதி நெற்றியில் விழுந்த கூந்தலை ஒதுக்க,

அப்படியே அசைவின்றி நின்றுவிட்டாள். முகம் வேறு சற்று சூடாக துவங்கியது.

அதில் அவனது முகத்தில் அழகாய் மென்னகை குமிழிட அவளது கன்னத்தில் இதழ்களால் தீண்டாமல் தீண்ட, விழிகளை இறுக்கமாக மூடிக் கொண்டாள்.

மூடிய இமைகளின் மீதும் மென்மையாக இதழ் ஒற்றியவன்,

"சேலையில அப்படியே உள்ளுக்குள்ள இறங்கி என்னமோ பண்ற டி" என்று கிறக்கமாக மொழிய,

அதில் அடிவயிற்றில் சில்லென்ற உணர்வு பிராவகமாக பொங்கி கண பொழுதில் அவனை தள்ளிவிட்டவள் மறுபுறம் திரும்பி கொண்டாள்.

இவ்வளவு நேரம் அழுகையில் சிவந்திருந்த முகம் இப்போது நாணத்தில் செவ்வானமாக சிவந்தது.

கன்னத்தில் கண்ணீர் தடயங்களுடன் முகத்தில் லஜ்ஜையுடன் லேசாக சிவந்த பன்னீர் ரோஜாவாக கலைந்த ஓவியத்தின் சாயலாக ஒரு புறமாக திரும்பி நின்றிருந்தவளை பார்க்க, உள்ளத்து குறுகுறுப்பு பேருணர்வாக மாற புன்னகையுடன் தலையை கோதிதன்னை நிலைப்படுத்தியவன் பின்னிருந்தவாறே அணைத்து தோளில் தாடையை பதித்து,

"ஜான்சிராணி இந்த பிரிவெல்லாம் ஜெஸ்ட் டெம்ரவரி தான். நீ பர்ஸ்ட் படிச்சி முடி. பிஜி பண்ணு‌ உனக்குனு ஒரு ஐடென்டிய தேடிக்கோ அப்புறமா கல்யாணம் பண்ணிக்கலாம். நம்மோட காதல் உன்னோட சுயத்தை அழிச்சிடக் கூடாது" என்று அவள் முகம் பார்த்தான்.

சில நிமிடங்கள் மறந்திருந்த ஒன்று மீண்டும் நினைவு வர மனது கலங்கியது.

இருந்தும் அவன் கூறியதில் உள்ள நியாயம் புரிய சம்மதமாக தலையசைத்தாள்.

அவளது முக மாற்றத்தை கவனித்தவன்,

"மூனு வருஷத்தை இப்படின்றதுக்குள்ள சீக்கிரமா போய்டும். அப்புறம் மூனு வருஷம் ஃபுல்லாவேவா பாக்காம இருக்கப் போறோம். நான் தினமும் கால் பண்றேன் வீடியோ பார்த்து கால்ல பேசலாம். அப்பப்போ வந்து பார்த்திட்டு போறேன்" என்று சமாதானமாக பேசி செவிமடலில் இதழ் பதிக்க,

அப்படியே திரும்பி அவனது மார்பில் முகத்தை அழுத்தியவள், "ஹ்ம்ம்" என்ற‌ முனங்கிவிட்டு,

"தினமும் மறக்காம கால் பண்ணுவிங்களா?" என்று வினவ,

"உன்னை மறந்திட்டு என்னடி பண்ண போறேன். எவ்ளோ வொர்க் இருந்தாலும் காலையில முதல் கால் உனக்கு தான்" என்றான்.

"ஹ்ம்ம் தென் மந்த்லி ஒன்ஸ் வந்து என்னை பாத்திட்டு போவீங்களா?" என்று வினவ,

"மந்த்லி வருவேன்னு கன்பார்மா சொல்ல முடியாது பட் ஃப்ரிக்வன்ட்டா வந்து பாக்குறேன்" என்றவன் அவளது முறைப்பில்,

"ஓகே ஓகே மந்த்லி ஒன்ஸ் வந்திட்றேன்" கூறி முடித்தான்.

அதன் பிறகு தான் செல்வா ஓரளவு சமாதானம் அடைந்தாள். முகத்தில் சிறிதளவு தெளிவு பிறந்தது. இதழ்கள் மெலிதாக வளைந்தது.

"ஹ்ம்ம் இப்போதான் அழகா என் ஜான்சி ராணி மாதிரி இருக்க" என்று மென்மையாக புன்னகைத்தவன் அவள் தோளில் கையை போட்டு கொண்டான்.

பின்னர், "நாம இன்னும் ஒரு பிக் கூட எடுக்கலை வா எடுப்போம்" என்று அலைபேசியை எடுக்க,

"ம்ஹூம் நான் அழுது வடிஞ்சு இருக்கேன்" என்று அவள் மறுத்தாள்.

"எப்படி இருந்தாலும் நீ அழுக்குதான்டி" என்றவனது கூற்றில் திகைத்து விழித்தவள் திரும்பி அவனை முறைக்க, இதழ்களில் விஷம சிரிப்புடன் அதனை சுயமி புகைப்படம் எடுத்திருந்தான்.

அதன் பிறகு வல்லபனின் நண்பர்கள் அவனை அழைத்துவிட அரங்கிற்கு சென்று அவர்களுடன் விழாவை முடித்தவன் செல்வாவை தனது மகிழுந்தில் ஏற்றிக் கொண்டு கிளம்பினான்.

வழியில் ஒரு உணவகத்தில் வாகனத்தை நிறுத்தியவன் அவளை உண்ண அழைத்து சென்றான்.

அவனுக்கு தெரியும் வீட்டிற்கு சென்றால் நிச்சயமாக அவள் உண்ண மாட்டாள் என்று.

செல்வாவிற்கு இங்கேயும் சாப்பிட விருப்பமில்லை இருந்தும் அவனுடன் இருக்கும் நேரம் அதிகரிக்கிறதே என்று எண்ணியே ஏதும் கூறாது முடிந்தளவு உண்டாள்.

அதன் பிறகு அமைதியான மகிழுந்து பயணம். இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

அவன் கையோடு கைகளை கோர்த்து கொண்டு தோளில் சாய்ந்து கொண்டவள் அசதியில் சிறிது நேரத்தில் உறங்கியும் போனாள்.

செல்வாவின் வீடு இருக்கும் இரண்டு தெரு தள்ளி வாகனத்தை நிறுத்தியவன் தன்னவளை பார்க்க அவளோ குழந்தை போல அவனது கைகளில் சாய்ந்து உறங்கி கொண்டிருந்தாள்.

உறங்கும் காதலியை பார்க்க விழிகளிரெண்டு போதவில்லை மன்னவனுக்கு இதழ்களில் மென்னகை தவழ்ந்தது.

சில நிமிடங்கள் விழியகற்றாது ரசித்தவனுக்கு அவளை எழுப்பிவிடவே மனமில்லை.

இருந்தும் எழுப்பவேண்டுமே பெருமூச்சுடன்,

"ஜான்சி ராணி எழுந்திடு உன் வீடு வந்திருச்சு பாரு" என்று அவளது கன்னம் தட்டினான்.

"ஹ்ம்ம்…" என்று முனங்கலுடன் முகத்தை மறுபுறம் திருப்ப புன்னகை பெரியதாகியது.

"செல்லக்குட்டி வீடு வந்திடுச்சுடா" என்று அவளது காதில் கூற,

சட்டென்று விழிகளை திறந்து பாதி உறகத்தில் எழுந்து இருக்கும் இடம் தெரியாது திகைத்து பார்த்தாள்.

"ஹே பயப்படாதடா என் கூட தான் இருக்க. வீட்டுக்கு பக்கத்துல வந்துட்டோம் பாரு" என்று எடுத்து கூற,

அதில் தெளிந்தவள், "ஓ…வந்திடுச்சா" என்றவளது குரலில் சுருதி குறைந்தது.

"ஹ்ம்ம்…" என்றவாறு அவளை பார்த்தான்.

தனது கைப்பையை எடுத்து கொண்டவள் ஒரு நொடி அவனை இமையாது பார்த்தாள்.

"இன்னும் எக்ஸாம் முடிய ட்வென்டி டேஸ் இருக்குதான. காலேஜ்ல டெய்லியும் வந்து பாக்குறேன்" என்று கூற,

"ஹ்ம்ம்" என்று தலையசைத்தாள்.

"பீல் பண்ணாம போய்ட்டு வா" என்க,

மௌனமாக தலையசைத்து கதவை திறக்க சென்றவள் திரும்பி அவனது கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதித்துவிட்டு இறங்கி சென்றுவிட்டாள்.

இவன் தான் இங்கு பாவையின் தாக்குதலில் திகைத்து இன்பமாய் அதிர்ந்து சாளரத்தின் வழியே எட்டிப் பார்க்க அவள் தெருவை கடந்து உள்ளே நுழைந்திருந்தாள்.









***************

தனது முகத்திற்கு நேராக நீட்டப்பட்ட துப்பாக்கியை கண்டு செல்வா ஏகமாய் அதிர்ந்து நிற்க,

எதிரில் துப்பாக்கியை ஏந்தி இருந்தவளோ, "ஹாண்ட்ஸ் அப். இங்க டெரரிஸ்ட் நடமாட்டம் இருக்கதா எங்களுக்கு நியூஸ் வந்திருக்கு" என்று கூற,

"டெ..டெரரிஸ்ட்டா…?" என்றவள் வார்த்தைகளற்று போனாள்.

"ஆமா டெரரிஸ்ட் தான். ஒரு மோசமான இயக்கத்தை சேர்ந்த தீவிரவாத கும்பல் இங்க இருக்கதா எங்களுக்கு இன்டெலிஜென்ட் டீம்ல இருந்து இன்பர்மேஷன் வந்திருக்கு" என்க,

"இல்லை இல்லை உங்களுக்கு யாரோ தப்பா இன்பர்மேஷன் குடுத்திருக்காங்க" என்றவள் மறுத்தாள்.

எதிரில் இருந்தவள் ஏதோ கூற வர,

"அக்ஷி என்ன பண்ணிட்டு இருக்க?" என்று முறைத்தபடி வந்தார் ஒருவர்.

"ஜெஸ்ட் பார் ஃபன் டேடி" என்று சிரித்தாள் அக்ஷயா.

"என்ன ஃபன் உங்கண்ணி எப்படி பயந்துட்டா பாரு" என்று முறைத்தவர்,

"நீ ஒன்னும் தப்பா பயப்படாதம்மா" என்று அக்ஷயாவின் கைகளில் இருந்த துப்பாக்கியை பிடுங்கினார்.

செல்வாவே நடக்கும் எதுவும் புரியாது விழித்தபடி நின்றிருந்தாள்.

எதிரில் இருப்பவர்கள் யாரென தெரியவில்லை எதற்காக வந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை அவளுக்கு.

இதற்குள், "செல்வா யாரு வந்திருக்கது?" என்றவாறு வல்லபன் அவள் பின்னால் வந்து நின்றவன்,

தந்தையையும் தமக்கையையும் கண்டு, "ப்பா வாட் அ சர்ப்ரைஸ் உள்ள வாங்க" என்றவன் மனைவியின் கையைப் பிடித்து நகர்த்தி அவர்களுக்கு வழிவிட்டான்.

'ஓ…இவருடைய குடும்பத்தினரா?' என்று நினைத்து பார்க்க,

உள்ளே வந்து அமர்ந்ததும் வல்லபன்,

"செல்வா என்ன பாக்குற இவர் என் டாடி அபிஷேக் உன் மாமனார். அண்ட் இது அக்ஷயா என் தங்கை" என்று கூறுகையிலே,

"உங்க நாத்தனார் அண்ணி. நாத்தனார் கொடுமை பண்ண வந்திருக்கேன்" என்று கூறி சிரிக்க,

"வாலு…" என்று தங்கையின் தலையை கலைத்துவிட்டான்.

"ஆமா வாலு தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி துப்பாக்கியை நீட்டி நீங்க டெரரிஸ்ட்னு சொல்லி மருமகள பயப்படுத்தி கலாட்டா பண்ணிட்டா. பாவம் செல்வா பயந்துட்டா" என்று மகளை முறைத்தவாறு கூற,

வல்லபனின் பார்வை மனைவியின் மீது பதிந்தது.

அவள் முகத்தில் கலவரத்தின் சொச்சம் மீதி இருந்தது.

"ண்ணா இது பொம்மை துப்பாக்கி அதிக்காக வாங்கிட்டு வந்தேன். அண்ணி இதை பார்த்து பயந்துட்டாங்க" என்று சிரித்தவள்,

"அண்ணி சாரிண்ணி ரொம்ப பயந்துட்டிங்களா?" என்று கெஞ்சும் பாவனையில் கேட்க,

அந்த வளர்ந்த குழந்தையின் பாவனையில் சிறிது புன்னகை எழுந்தது.

"ம்ஹூம்" எனும் விதமாக தலையசைத்தவள்,

"லைட்டா" என்று மென்னகைத்தாள்.

வல்லபன், "ரெண்டு பேரும் என்ன குடிக்குறிங்க. நான் டீ போடவா?" என்று எழ,

"நீங்க இருங்க. நான் போட்டு எடுத்திட்டு வர்றேன்" என்று செல்வா சமையலைறைக்குள் நுழைந்தாள்.

வல்லபன் வெகுநாட்களுக்கு பிறகு நேரில் சந்தித்த தந்தையுடனும் தமக்கையுடனும் சிரித்தவாறே பேசி கொண்டிருந்தான்.

பாலை அடுப்பில் வைத்துவிட்டு வெளியே எட்டிப்பார்த்தவள் அவனது அகம் நிறைந்த புன்னகையை ஒரு நொடி தன்னை மறந்து ரசித்து பார்த்திருந்தாள்.

பேசியபடி இருந்தவன் மனைவியின் பார்வையை உணர்ந்து திரும்பியவன் சிரிப்புடன் என்னவென்பதாக புருவத்தை உயர்த்த,

சடுதியில் ஒன்றுமில்லை என்று இடம் வலமாக தலையசைத்து விட்டு திரும்பி கொண்டவள்,

"ப்ச் என்ன பண்ணிட்டு இருக்க செல்வா" என்று தன்னை தானே கடிந்து கொண்டாள்.

"ஒரு நிமிஷம்பா வந்திட்றேன்" என்றுவிட்டு சிரிப்புடன் சமையலறைக்குள் நுழைந்தவன்,

"காஃபி போட்டாச்சா?" என்று வினவினான்.

சிந்தையில் இருந்தவள் விடுபட்டு,"ஹான் போட்டுட்டு இருக்கேன்" என்க,

"அக்ஷயா ரொம்ப பயப்படுத்திட்டாளா?" என்று வினவினான்.

"இல்லை திடீர்னு வரவும் லைட்டா பயந்துட்டேன்" என்க,

"அவ வளர்ந்தாலும் கொஞ்சம் குழந்தை தனமா தான் இருப்பா. எங்க எல்லாருக்கும் ரொம்ப செல்லம்" என்று தங்கையை பார்க்க,

"நீங்க பேசும்போதே தெரிஞ்சது" என்று தானும் மென் கீற்றை உதிர்த்தாள்.

"அப்பாக்கு காஃபி கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கணும். ஒரு ஹாஃப் ஸ்பூன் காஃபி பவுடர் எக்ஸ்ட்ரா போ
டு" என்க,


"ஹ்ம்ம்" என்று தலையசைத்தவள்,

"இவ்ளோ நாள் வராதவங்க. இப்போ திடீர்னு வந்திருக்காங்க" என்று தயங்கியவாறு வினா தொடுக்க,

"நீ ஹாஸ்பிட்டல்ல இருக்கும் போது அடிக்கடி வந்து பாப்பாங்க. இப்போ டாடி ஒரு பிஸ்னஸ் ட்ரிப்ல ஆஸ்திரேலியாவுல மாட்டிக்கிட்டாரு. இப்போ தான் இந்தியா வந்தாரு. அதான் இவ்ளோ லேட்டா வந்திருக்காங்க. இல்லைன்னா நாம ஹைத்ரபாத் வந்ததுமே வந்திருப்பாங்க" என்று விளக்கம் கூற,

"ஓ…" என்று கேட்டு கொண்டவள்,

"மத்தவங்க எல்லாம்" என்று இழுக்க,

"மத்தவங்களுக்கு இன்னும் கோபம் போகலை சரியானதும் வந்திடுவாங்க" என்று கூற, சம்மதமாக தலையசைக்க, அவன் வெளியேறினான்.

அதன் பிறகு இரண்டு நிமிடங்களில்,

"அண்ணி" என்று அழைத்தவாறு உள்ளே வந்தாள் அக்ஷயா.

செல்வா கேள்வியாக திரும்ப,

"ரியல்லி சாரிண்ணி. நான் ஜெஸ்ட் பார் ஃபன்க்கு தான் செஞ்சேன். டோன்ட் மைண்ட்ண்ணி" என்று வருந்தி கூற,

"ஹே… அக்ஷயா நான் அதை அப்பவே மறந்துட்டேன். நான் எதுவும் நினைக்கலை. எதுக்குடா இவ்ளோ டைம் சாரி கேக்குற" என்று கூற,

"ஸோ ஸ்வீட் ஆஃப் யூ அண்ணி" என்று புன்னகைத்தவள்,

"அதி எங்கண்ணி. என்னை பார்த்ததுமே அத்தை அத்தைன்னு குதிப்பாளே" என்று வினவ,

"பாப்பா உள்ள தூங்குறா" என்று மொழிந்தாள்.

"ஓ… நான் போய் பாத்திட்டு வர்றேண்ணி" என்று நகர,

செல்வா காஃபியை குவளையில் ஊற்றி கொண்டு சென்றாள்.

காஃபியை எடுத்து கொண்ட அபிஷேக், "உட்காரும்மா ஏன் நிக்கிற" என்று கூற,

"இல்லை இருக்கட்டும்" என்றவள் எப்படி அழைப்பதென தடுமாற,

வல்லபன், "மாமான்னு கூப்பிடு செல்வா" என்று அழுத்தமாக கூற,

"இருக்கட்டும் மாமா" என்று கூறிவிட்டாள் அந்த அழுத்தத்தில்.

"அண்ணி பாப்பா எழுத்துட்டாண்ணி" என்றவாறு அக்ஷயா அதியை தூக்கி வர,

"அதிக்குட்டி தாத்தாட்ட வாங்க. தாத்தா உங்களுக்காக நிறைய சாக்லேட் வாங்கிட்டு வந்திருக்கேன்" என்று கையை நீட்ட,

"தாத்தா" என்று சிரிப்புடன் அவரது கைகளில் தாவியவள்,

கைநிறைய இனிப்புகளை வாங்கிக்கொண்டு முல்லை பற்கள் மின்ன சிரித்தாள்.

மழலையின் சிரிப்பில் நால்வருக்கும் மனது நிறைந்து போனது.

அக்ஷி, "பார்த்தியா சாக்லேட்டை பார்த்ததும் அத்தையை டீல்ல விட்டுட்டு அம்போன்னு தாத்தாட்ட தாவிட்ட" என்று செல்லமாக கோபிக்க,

மற்றவர்களுக்கு அக்ஷிக்கும் அதிக்கும் வேறுபாடு தெரியவில்லை.

அத்தையின் கூற்றில் என்ன புரிந்ததோ அதிக்கு, "த்தை ந்தா சாக்தேட்" என்று அவளுக்கு நீட்ட,

அதியின் செயலில், "க்யூட்டா செல்லம் நீ" என்று அதியை தூக்கி கொள்ள இருவரும் தங்களுக்குள் பேச துவங்கிவிட்டனர்.

பேச்சில் நேரம் கழிய,

"சரிடா டைம் ஆச்சு. நாங்க நெக்ஸ்ட் வீக் வர்றோம்" என்று அபிஷேக் கூற,

"ப்பா என்னப்பா இவ்ளோ தூரம் வந்திட்டு சாப்பிடாம போறிங்க" என்று தந்தையை முறைக்க,

"டேய் மகனே ஏர்போர்ட்ல இருந்து நேரா இங்க தான் வர்றேன். ஆல்ரெடி லேட் இப்பவே உங்கம்மா கேள்வி கேப்பா" என்று கூற,

"அது உங்க ப்ராப்ளம். நீங்க தான் சமாளிக்கணும். இப்போ சாப்பிட்டு தான் போறீங்க" என்று வல்லபன் முடித்துவிட, அவரும் சம்மதித்தார்.

"நான் போய் சாப்பாட்டை எடுத்து வைக்கிறேன்" என்ற செல்வா உணவு மேஜையில் எடுத்து வைக்க செல்ல, மற்றவர்கள் கைகளை கழுவிவிட்டு உண்ண அமர்ந்தனர்.

செல்வா பரிமாற துவங்க,

அபிஷேக், "நீயும் உட்காரும்மா. நாங்களே எடுத்து வச்சிக்கிறோம்" என்று அவளை அமர வைத்துவிட்டு தாங்களே உணவை எடுத்து கொண்டனர்.

செல்வா மாவை அதிகமாக போட்டுவிட்டதால் சற்று அதிகமாக தான் சமைத்து இருந்தாள்.

அதிக்கு பாலை ஆற்றி கொடுக்க அவள் அமைதியாக குடித்து கொண்டிருந்தாள்.

தட்டில் சப்பாத்தியை வைத்து சென்னாவில் தேய்த்து எடுத்து வாயில் வைத்தவளுக்கு அதை முழுங்கவும் முடியவில்லை துப்பவும் முடியவில்லை அத்தனை மோசமாக இருந்தது.

சட்டென்று நிமிர்ந்து மற்றவர்களை பார்க்க அவர்கள் எந்த பாவனையுமின்றி உண்டனர்.

இதில் அபிஷேக் வேறு, "சாப்பாடு ரொம்ப நல்லாயிருக்கும்மா" என்று கூற,

"ஆமாண்ணி சென்னா சூப்பர்" என்று அக்ஷயாவும் கூறினாள்.

தனக்காக தான் பொய் கூறுகின்றனர் என்று உணர்ந்த நொடி சட்டென்று சிரிப்பு வந்துவிட அதை இதழ்கடித்து கட்டுப்படுத்திவிட்டு நன்றி கூறும் விதமாக புன்னகைத்தாள்.

அதனை உண்டு முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது செல்வாவிற்கு.

கூடவே வீட்டிற்கு வந்தவர்களுக்கு இவ்வளவு மோசமான உணவை கொடுத்துவிட்டோமே என்று வருத்தம் வேறு ஒட்டி கொள்ள, கணவனை கண்டாள்.

அவனும் உணவு நன்றாக இருக்கும் பாவனையில் தான் உண்டான்.

'முதலிலே அவர் கேட்கும் போதே உதவிக்கு அழைத்திருக்கலாம்" என்று தன்னையே நொந்து கொண்டு உண்டு முடித்தாள்.

சாப்பிட்ட உடனேயே அபிஷேக், "சரிடா போய்ட்டு வர்றோம். வர்றோம்மா மருமகளே" என்று கிளம்ப,

"வர்றோம்ணா. வர்றோம்ண்ணி. இனி அடிக்கடி வர்றேன்" என்றவாறு கிளம்ப,

அவர்களை வழியணுப்பி வைப்பதற்காக வல்லபன் உடன் சென்றான்.

புன்னகையுடன் வழியனுப்பியவள் கணவன் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தாள்.

அவன் ஐந்து நிமிடங்கள் கழித்து உள்ளே வர கதவை பூட்டியவள்,

"சாரி சாரி ரியல்லி சாரிங்க. நான் சாப்பாடு ஓரளவு நல்லாயிருக்கும்னு தான் நினைச்சேன். பட் இவ்ளோ மோசமா இருக்கும்னு தெரியாது. நிஜம்மா சாரி" என்று கண்ணை சுருக்கி உதடு குவித்து கெஞ்ச,

மனைவியின் பாவனையில் அவனுடைய உள்ளம் கொள்ளை போனது.

இதழில் குறுஞ்சிரிப்புடன் சட்டென்று இடையில் கைகொடுத்தவன் தன்னோடு இறுக்கி கொள்ள,

அவனது செயலை எதிர்பாராதவள் அதிர்ந்து திகைத்து விழிக்க, இதழில் சிரிப்புடன் அவள் முகம் நோக்கி சென்றான்.

அதில் சட்டென்று விழிகளை இறுக மூடிக்கொண்டாள்.

குவிந்த இதழ்களுடன் தன்னிதழ்கள் உரசும் வண்ணம் குனிந்தவனுக்கு அவளது இதழ்களில் இருந்து முணுமுணுப்பு கேட்க, காதை கொண்டு கேட்டான்.

"ப்ளீஸ் வேணாம். ப்ளீஸ் வேணாம்" என்று மந்திரத்தை போல உச்சரிப்பவளை கண்டு இமை நீண்ட புன்னகை விரிய,

"செல்வா கண்ணைத் திற உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன்" என்று கூற, சடுதியில் அவள் விழி திறந்து பார்த்தாள்.

"சாப்பாடு ஒன்னும் அவ்ளோ மோசமில்லை தென் நீ பாசமா எங்களுக்காக சமைச்சது எப்படி நல்லாயில்லாம போகும்" என்று அவள் மூக்கோடு மூக்கை உரச,

இடையில் பதிந்திருந்த அவனது கரத்தின் வெம்மை தந்த குறுகுறுப்பில் நெளிந்தவாறே,

"நிஜமாவா?" என்று விழிவிரித்து வினவ,

"ஹ்ம்ம்" என்று தலையசைத்தவன்,

"ஸோ க்யூட் ஜான்சிராணி" என்று இதழ்களுக்குள் முணுமுணுக்க, அவளுக்கு தெளிவாக கேட்டது.

"ஜான்சி ராணி" என்றவள் கேள்வியாக பார்க்க,

"ஆமா நீ தான் ஜான்சி ராணி நான் உன்னை பார்த்த பர்ஸ்ட் மீட்டிங்ல இருந்து அப்படிதான் கூப்பிடுவேன்" என்று சிரித்தபடியே கூறிவினவ,

அவளுக்கு அவன் கூறுவதாக சொன்ன காதல் கதை நினைவு வர,

"லவ் ஸ்டோரிய சொல்றேன்னு சொன்னிங்களே" என்றவள் கேட்க,

"ரொம்ப லேட்டாகிடுச்சு. நாளைக்கு சொல்றேன்" என்று திரும்பி பார்க்காது சிரிப்புடன் நடக்க,

"ப்ச்" என்று செல்லமாக சிணுங்கியவள் அவனை முறைப்புடன் நோக்கினாள்…



கோவிலினுள்ளே

நுழைந்திடும்
போது வருகிற
வாசனை நீயல்லவா…?
உன்னுடன் வாழும்
ஒவ்வொரு நொடியும்

சர்க்கரை தடவிய
நொடியல்லவா…?
 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Annan um thangachi yum ethula othumaiya irukagalo illayo selva ku shock kudukarathu la irukaga love story ah keta escape agitan namalum ketu irukalam but solla ma poitan
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Gun kondu vanthathu vallapan thangachi ya nalla shock kudutha ma ne aasha aathi kuda serthu kutty pilla ya marita selva ku epathaan theriyuthu avala avan jansirani nu kupiduvan nu love story ya ketta escape agidan payan
 
Top