• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

புன்னகை 15

Administrator
Staff member
Messages
464
Reaction score
794
Points
93
புன்னகை 15:

ஒரு அதீத அன்பின்
பற்றுதலில் இளைப்பாறி
இறுதி நொடி இதமாய் கடந்துவிடுவதை தவிர்த்து பெரிதாய் என்ன சாதித்துவிட போகிறது இந்த வாழ்க்கை…?

"செல்வா என்னடி இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க? பங்கஷன் ஸ்டார்ட் ஆக போகுது" என்ற பானுவின் கேள்விக்கு,

"இதோ ஆட்டோல இருந்து இறங்க போறேன். டூ மினிட்ஸ் டி" என்று அந்த தானி ஓட்டுநருக்கு பணத்தை கொடுத்துவிட்டு தான் கட்டியிருந்த ஆலீவ் பச்சை நிற சேலையின் முந்தானையை கையில் பிடித்தபடி கல்லூரிக்குள் நுழைந்தது அரங்கத்தை நோக்கி சென்றாள்.

அந்த கல்லூரியில் ஆங்காங்கே மாணவர்கள் கூட்டம் கூட்டமாக நின்றிருந்தனர்.

அரங்கம் வண்ண வண்ண பலூன்கள் மற்றும் இதர அலங்கார பொருட்களால் அழகாக மின்னி கொண்டிருந்தது.

அரங்கின் முகப்பில் பெரியதாக 'பேர்வெல்- பிரிவு உபச்சார விழா' என்று பெரியதாக பலகை தொங்கியது.

இளநிலை படிக்கும் மாணவர்கள் அங்குமிங்கும் ஓடியாடி விழாவுக்கான வேலைகளில் மும்முரமாகியிருந்தனர்.

இன்று முதுநிலை படிக்கும் மாணவர்களுக்கு இன்று பிரிவு உபச்சார விழா.

"வந்துட்டியா? ஸ்டார்ட் ஆகுறதுக்குள்ளயும் உள்ள போகலாம்" என்ற பானு செல்வாவின் கையை பிடித்து உள்ளே அழைத்து செல்ல,

அந்த சேலையை கட்டிக்கொண்டு வேகமாக நடக்க இயலாது தடுமாறி நடந்து சென்றாள்.

ஆனால் பானுவிற்கு சேலை பழகிய ஒன்று தான் போல வேக வேகமாக சாதரணமாக நடந்தாள்.

இருவரும் உள்ளே நுழைய ஒலிப்பெருக்கியில் விழா தொடங்க போவதாக அறிவிக்கப்பட்டது.

உள்ளே சென்றதும் செல்வாவின் விழிகள் வல்லபனை தான் தேடி அங்குமிங்கும் அலை பாய்ந்தது.

இன்று வல்லபனுக்கும் சேர்த்து தான் பிரிவு உபச்சாரம்.

ஆம் நாட்கள் கடந்துவிட்டது. அதோ இதோ என்று இரண்டு வருடங்கள் கடந்துவிட்டது.

நேசம் கொண்ட நெஞ்சத்தின் அருகாமையில் செல்வாவிற்கும் வல்வபனுக்கும் இரண்டு வருடங்கள் இரண்டு மாதங்களாக கடந்திருந்தது.

இந்த இரண்டு வருடத்தில் செல்வா தான் வல்லபனது காதலில் கரைந்து திளைத்து அவனுக்குள்ளே நிறைந்து போயிருந்தாள்.

சில ஊடல்களும் அதன் பின்னான செல்ல சமாதானங்களும் வாழ்வை நிறைத்து அவர்களை மற்றவருக்குள் நிறைய செய்தது.

வல்லபனது அளப்பரிய நேசத்தின் அலையின் கரை தொட முடியாத தூரத்திற்கு அடித்து செல்லப்பட்டவள் அவனிடமே அடைக்கலம் புகுந்து அவனது நிழலாகவே மாறியிருந்தாள்.

மொத்தத்தில் செல்வா வல்லபன் மேல் பித்தாகி தான் போயிருந்தாள். அத்தனை தூரம் மயக்கி வைத்திருந்தான் மயங்க வைத்திருந்தான் இந்த கோசாரக் கள்வன்.

ஆனந்தத்தில் திளைத்து
அவனது அருகாமையில் வாழ்ந்திருந்தவளை இந்த பிரிவு சற்று தடுமாறி சறுக்க செய்திருந்தது.

அவன் கல்லூரி முடிந்ததும் சென்றுவிடுவான் என்று அவளுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது.

இருந்தும் மனது அவனது பிரிவை ஏற்க மறுத்தது. இதோ கடந்த ஒரு மாதமாக அவனது பிரிவை ஏற்க முயற்சித்து கொண்டிருக்கிறாள்.

அவளது வருத்தத்தை கவனித்த வல்லபன் கூட இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் தான் அதன் பிறகு திருமணம் செய்து காலம் முழுவதும் சேர்ந்து வாழலாம் என்று பலவாறு எடுத்து கூறினான்.

அவன் கூறுவதெற்கு எல்லாம் தலையை அசைத்தாலும் மனது சற்று தவித்து தடுமாறியது உண்மை தான்.

இன்று அவனுடைய பிரிவு உபச்சார விழா அவனுக்கானது அதிலும் முகத்தை சோகமாக வைத்து அவனை வருந்த வைக்க வேண்டாம் என்று சிரித்த முகமாக இருக்க முயற்சித்தாள்.

படபடவென அங்குமிங்கும் தேடிய கண்கள் முதுநிலை மாணவர்களுக்காக முன்புறம் தனியாக போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து அஜய்யுடன் பேசியபடி இருந்தான்.

அடர் கருப்பு நிறத்தில் சட்டையும் அதற்கு தோதாக வெள்ளை நிறத்தில் வேட்டியும் அணிந்து இருந்தவன் நெற்றியில் புரண்ட முடியை கோதியபடி சிரித்து பேசினான்.

செல்வாவின் விழிகள் அந்த வதனத்தில் அதில் அழகாய் பூத்து நிற்கும் புன்னகையை தான் விழியெடுக்காது பார்த்திருந்தாள்.

இப்போதெல்லாம் இப்படி தான் ஆகிவிட்டாள். அவன் செய்த வேலை எல்லாம் இப்போது செல்வா செய்கிறாள்.

அவனே சில சிமயம் மெலிதான இதழ் துடிக்கும் புன்னகையுடன் "என்னடி" என்று கேட்கும் சமயம் இன்னுமின்னும் அவனை பிடித்து தொலைத்தது.

இவன் மேல் ஏனிந்த நேசம் என்னையே மறக்க வைக்கும் நேசம் எப்படி வந்தது எங்கே முளைத்தது என்று பல வினாக்கள் வரிசையாக எழும் பதில் தான் இல்லை.

வல்லபனும் அவளுடைய பார்வையை உணர்ந்தான் போலும் திரும்பி விழிகளால் அவளை துலாவ பார்வையில் சிக்கினாள்.

மென்புன்னகையுடன் தன்னை கண்டவளின் மீது விழிகள் ரசனையுடன் பதிந்தது.

அதுவும் புடவையில் அவளை முதல் முறை காண்கிறான். ஆலிவ் பச்சை நிறத்தில் பட்டும் அதற்கேற்ற நிறத்தில் குடை ஜிமிக்கி காதில் தொங்க கூந்தலின் மேல் பகுதியை எடுத்து குத்தி க்ளிப்பில் அடக்கி கீழிறிந்த கூந்தலை விரித்துவிட்டிருந்தாள்‌. அதன் நடுவே பிச்சிப்பூ சரம் அழகாய் வீற்றிருந்தது.

நெற்றியில் சிறிதாய் சிவப்பு நிற பொட்டு அதன் மேலே சிறு கீற்றாய் குங்குமம் மின்னியது.

பொங்கும் ரசனை ஊற்றில் முகத்தின் புன்னகை இமை நீள ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி அவளை கண்டான்.

அதில் உள்ளுக்குள் குறுகுறுக்க லேசான கூச்சத்துடன் முகத்தை திருப்பிவிட்டாள்.

இதயத்தினுள் மென்சாரல் மெதுவாய் தூர துவங்கியது. காரணம் நிச்சயமாக வல்லபனது முக பாவனை தான்.

அவனுக்காக தானே இத்தனை அலங்காரம் முதன் முதலாக புடவை அணிந்து வந்திருக்கிறாள்.

பொதுவாக செல்வாவிற்கு புடவை கட்டி நடப்பதில் சில பல அசௌகர்யங்களை உணர்ந்ததால் அதனை அணிய விரும்பமாட்டாள்.

வல்லபன் எவ்வளோ கூறியும் இதுவரை அணியாதவள் இன்று அவனுக்கு பிரிவு உபச்சாரம் என்ற காரணத்தினால் தான் உடுத்தியிருந்தாள்.

அவள் முகத்திருப்பலில் இவனது முகத்தில் மந்தாச புன்னகை விரிய இப்போதே அருகில் செல்ல மனம் உந்தியது.

சூழ்நிலை கருதி கேசத்தை மென்னகையுடன் கோதியவன் அலைபேசியை எடுத்து,

"ஜான்சி ராணி" என்று செய்தியை தட்டிவிட்டான்.

அலைபேசியின் செய்தி ஒலியில் எடுத்து பார்த்தவளது பார்வை வல்லபனது மீது பதிய,

சைகையில் அலைபேசியில் பதிலனுப்புமாறு கூறினான்.

"சொல்லுங்க" என்று பதிலை அனுப்ப,

"கல்யாணம் பண்ணிக்கலாமா?" என்று வழக்கம் போல அவன் வினவினான்.

இவளும் எப்போதும் போல, "ஹ்ம்ம், இன்னைக்கே பண்ணிக்கலாமா?" என வினவ,

இருவரும் ஒருவரையொருவர் பார்த்து கொள்ள இருவரது வதனமெங்கும் புன்னகையின் சாரல் வீசியது.

அதன் பிறகு ஒவ்வொருவராக பேச அழைக்கப்பட இருவரும் மேடையில் கவனத்தை வைத்தனர்.

முதுநிலை வகுப்பு மாணவர்கள் அழைக்கப்பட்டபின் ஒவ்வொருவராக மேடை ஏறி வந்து தங்களது அனுபவத்தை கூறி பரிசை பெற்று சென்றனர்.

ஒருவாராக வல்லபனது பெயர் அழைக்கப்பட முகத்தில் தவழும் புன்னகையுடன் அவன் எழுந்து கொள்ள,

"ஹே…." ஒரு கூட்டம் பேரிரைச்சல் போட இடம் கலகலப்பானது.

கூட்டத்தில் இருந்த பெண்கள் வேறு,

"வல்லபன் சார் ப்ளாக் சார் ஆஸ்ஸம்"

"வல்லபன் சார் பார்க்க கல்யாணம் மாப்பிள்ளை மாதிரியே இருக்கிங்க"

"கல்யாணம் பண்ணிக்கலாமா?" என்று தொடர்ந்து அங்குமிங்கும் இருந்து குரல் கொடுக்க,

அவன் சிறிதான நாணப் புன்னகையுடன் கேசத்தை மேலேற்றியபடி மேடையை நோக்கி சென்றான்.

இதே போல வேறு சிலருக்கும் குரல்கள் எழத்தான் செய்தது. இருந்தும் வல்லபனது ரசிகப் பட்டாளங்களால் சத்தம் சற்று அதிகமாக இருந்தது.

அதோ அந்த வெட்கப் புன்னகையில் இங்கே செல்வா தான் கரைந்து கொண்டிருந்தாள்.

மேடைக்கு சென்று ஒலிப்பெருக்கியை வாங்கியவன் சிரிப்புடன், "போதும் ஸ்டாப் பண்ணிக்கலாம்" என்று கையை நீட்டவும் தான் சத்தம் குறைந்தது.

இதழ் வளைத்த மென்னகையுடன் விழாவை சிறப்பாக செய்ததற்க்காக இளநிலை மாணவர்களுக்கு நன்றி கூறியவன் கல்லூரியில் தனது அனுபவத்தை கூறி நண்பர்களை பற்றியும் கூறியவன் இறுதியில் சிரிப்புடன்,

"நான் இந்த காலேஜ எப்பவும் மறக்கமாட்டேன் பிகாஸ் எனக்கு இது வாழ்க்கையே குடுத்திருக்கு" என்று செல்வாவினை அர்த்தமாக பார்த்தான்.

அடுத்த கணம், "ஹோ…." என்ற பேரிரைச்சல் அரங்கத்தை நிறைக்க, எல்லோரது பார்வையும் செல்வாவின் மீது படிந்து மீண்டது.

அவனது இத்தகைய வார்த்தையை எதிர்பாராது திகைத்து விழித்தவள் மற்றவர்களது பார்வையில் லேசாக முகம் சிவந்து குனிந்து கொண்டாள்.

மனதிற்குள், "இவருக்கு எப்போ பார்த்தாலும் இதே வேலை தான் எதையாவது திடுதிடுதிப்புனு செஞ்சி என்னை ப்ரீஸ் ஆகிட்றது" என்று செல்லமாக வைது கொண்டாள்.

அதன் பிறகு சில வார்த்தைகள் பேசிவிட்டு இறங்கியவனது பார்வை செல்வா மீது விழ,

அவளோ அவனை செல்லமாக முறைக்க,

இதழ்மடித்த சிரிப்புடன் இருக்கையில் அமர்ந்தான்.

அதன் பிறகு எல்லோரும் பேசி முடிய மதிய உணவு இடைவேளை வந்தது.

பஃபே எனப்படும் தாங்களே தேவையானதை எடுத்து கொள்ளும் முறையில் உணவு பரிமாறப்பட எல்லோரும் எழுந்து சென்றனர்.

நண்பர்களுடன் இருந்தவன் சாப்பிடும் நேரம் அவளுடன் அமர கூறிவிட்டு வந்தான்.

செல்வாவும் அவனுடன் இணைந்து கொள்ள இருவரும் உணவை தட்டில் எடுத்து கொண்டு ஓரத்தில் அமர்ந்தனர்.

அமர்ந்ததும், "ஏன் அப்படி சொன்னிங்க? எல்லாரும் என்னையே பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கு கூச்சமா போய்டுச்சு" என்றவள் சிணுங்கலுடன் முறைக்க,

"உண்மையதானே சொன்னேன். இது என்ன யாருக்கும் தெரியாத விஷயமா?" என்று சிரிப்புடன் தோளை குலுக்க,

அதில் செல்வா நாசி சிவக்க அவளை முறைத்தான்.

இத்தனை நேரம் அமர்ந்திருந்ததில் சிறிதாக கூந்தல் கலைந்து குங்குமம் பாதி கரைந்து வடிந்தபடி நாசி நுனி சிவக்க முறைத்தவளது தோற்றத்தினை கண்டவனது சிரிப்பு மறைய மனதிற்குள் தித்திப்பாய் ஓர் சாரல் வீசியது. பார்வையில் ரசனை மிளிர்ந்தது.

அவனது பார்வையின் மாற்றத்தை உணர்ந்தவள் சடுதியில் முகத்தை கவிழ்த்து உண்ண துவங்கினாள்.

உள்ளுக்குள் இதயம் தறிகெட்டு ஒடியது. லஜ்ஜையில் கன்னம் வேறு சூடாகிவிட்டது.

அவனை மறந்தும் நிமிர்ந்து பார்க்கவில்லை காரிகை. ஆனால் கள்வன் விழிகள் முழுவதும் பாவையிடம் தான்.

சில நொடிகள் அவளை விழிகளுக்குள் சிறை எடுத்தவன் அவளது தவிப்பை கண்டு மேலும் சீண்டாது உண்ண துவங்கினான்.

உணவு இடைவேளைக்கு பின்னர் தொடங்கிய விழா மாலை தான் முடியும் தருவாயில் இருந்தது.

நேரம் செல்ல செல்ல செல்வாவினுள் சிறிதாய் தொடங்கிய சுணங்கல் பெரியதான பாரமாக மாறி நெஞ்சை அழுத்தியது.

வல்லபனும் அவளது முக மாற்றத்தை அதனை அவள் மறைக்க முயற்சிக்கும் விதமும் தெரிந்தது.

அலைபேசியை எடுத்து அவளுக்கு அழைக்க, அவனை ஒரு கணம் பார்த்துவிட்டு அழைப்பை ஏற்றாள்.

"செல்வா" என்று அழைத்தான் வல்லபன். எப்போதாவது அதியசமாக அழைப்பவனுக்கு இன்று அழைக்க தோன்றியது.

அவளுக்கு என்னவோ பேச இயலாது தொண்டையை அடைக்க பேசினால் அழுதிடுவோம் என்றெண்ணி,

"ஹ்ம்ம்" என்றாள்.

"செல்வா உன்னை தான்" என்று அவன் மீண்டும் அழைக்க,

"ஹ்ம்ம்" என்று அழுத்தமாக மொழிந்தாளே தவிர வேறேதும் கூறவில்லை.

அவளது நிலையை குரல் வழியே உணர்ந்தவன்,

"ஸ்டேடியம்க்கு பின்னாடி வா. நான் வெயிட் பண்றேன்" என்று எழுந்து சென்றவிட்டான்.

அவளுக்கும் அவனை பார்க்க வேண்டும் போல இருப்பதால் பானுவிடம் கூறிவிட்டு எழுந்து சென்றாள்.

தூரத்தில் நின்றிருந்தவனை நெருங்க நெருங்க கண்கள் கரித்தது.

அருகில் சென்றவளது பார்வை அவனது முகத்தை தவிர்த்து அங்குமிங்கும் பார்த்தது.

"ஜான்சி ராணி" என்றவனது அழைப்பிற்கு விழிகளை காணாது,

"ஹ்ம்ம்" என்றாள்.

"இங்க பாரு என்னை" என்றவன் அவளது நாடியில் கை வைத்து தன்னை நோக்கி திருப்ப,

அவனது விழிகளை நேருக்கு நேர் ஒரு விநாடி கண்டவள் சட்டென்று அவனது கைகளை தட்டிவிட்டு முகத்தை திருப்பி கொண்டாள்.

முயன்று உள்ளிழுக்க முயன்ற கண்ணீர் கரையுடைத்து கன்னத்தை தொட்டிருந்தது. இத்தனை நேரம் அழுகையை அடக்கியதில் முகம் செக்கச் செவேலென சிவந்திருந்தது.

அவள் நின்றிருந்த தோற்றமும் விதமும் அழுகையும் அவனை உருக செய்ய பட்டென்று இழுத்து இறுக்கமாக அணைத்து கொள்ள அவளும் அவனது சட்டையை இறுகப் பற்றி முகத்தை அவன் மார்பில் புதைத்து கொண்டாள்.

நீங்கும் நேரத்தில்
நெஞ்சம் தன்னாலேயே…
நீங்கும் நேரத்தில்
நெஞ்சம் தன்னாலே
நங்கூரம் பாய்த்தால்

நான் என்னாகுவேன்…[/ISPOILER][/ISPOILER][/ISPOILER]

******************

"வாய் மொழிந்த வார்த்தை யாவும்
காற்றில் போனால் நியாயமா?
பாய் விரித்து பாவை பார்த்த
பார்வை என்ன மாயமா?"

தொலைக்காட்சியில் ஒலித்த பாடலுடன் தானும் உருகி பாடி கொண்டே சமையலறையில் காய்களை நறுக்கி கொண்டிருந்தாள் செல்வா.

அதி அறையில் உறங்கி கொண்டிருந்தாள்.

செல்வாவும் வல்லபனும் ஹைத்ரபாத் வந்து இரண்டு வாரங்கள் கடந்திருந்தது.

இதோ இந்த இரண்டு வாரங்களில் ஓரளவு வல்லபனுக்கும் அதிக்கும் செல்வா பழகியிருந்தாள் இல்லையில்லை வல்லபன் பழக்கியிருந்தான் என்றே சொல்ல வேண்டும்.

அவளை முடிந்தவரை தனியாக விடுவதில்லை. வீட்டில் இருக்கும் நேரம் அவளிடம் தான் செலவழித்தான்.

அதியையும் தாயுடன் நன்றாக ஒன்றவிட்டான். முதலில் அதியின் நெருக்கத்தில் அவளை அத்தனை சுலபம் ஏற்றுக் கொள்ள இயலாது தடுமாறினாலும் தாயின் உள்மனம் குழந்தையை ஏதோ ஒரு வகையில் உணர்த்த அவளுடன் ஒன்றி போனாள்.

வல்லபன் பணிக்கு சென்ற பிறகு அதி தான் செல்வாவின் உலகமாகினாள்.

அதியும், "ம்மா ம்மா" என்று மழலையில் மிழற்றி தாயின் நிழலிலே இருந்து கொண்டாள்.

இரவு தந்தை வரும் வரை எல்லாமே தாய் தான் அவளுக்கு.

செல்வாவிற்கும் ஹைத்ரபாத்தும் அங்குள்ளவர்களும் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு பழகியிருந்தனர்.

செல்வாவின் உதவிக்கு வல்லபன் ஒரு பணிப்பெண்ணை நியமித்திருக்க, அவரது உதவியுடன் வேலையை செய்தாள்.

பணி முடிந்து வந்த பிறகு வல்லபனும் அவளுக்கு சமையலில் உதவினான்.

அவளுக்கு சமைக்க கற்று கொடுத்தான். இயல்பான தோழன் போல அவனது பேச்சில் அவளும் ஓரளவு இயல்பாக இருந்தாள்.

நிறைய கேள்விகள் கேட்டு அவளை பேச வைத்தான் நிறைய சொல்லி கொடுத்தான்.

செல்வாவும் வீட்டினரது அவ்வபோது பேசினாள். அத்தையிடம் நடந்த நிகழ்வை பற்றி தினமும் பகிர்ந்து கொண்டாள்.

மொத்தத்தில் வாழ்க்கை அவள் பயந்தது போல் அல்லாமல் நன்றாகத்தான் சென்றது.

"கோடி சுகம் வாராதோ
நீயெனை தீண்டினால்…" என்று உருகி விழி மூடி பாடலில் லயித்தவள் எதையோ எடுக்கத் திரும்பி சுவற்றில் சாய்ந்து ஒரு காலை நிலத்தில் ஊன்றியபடி கைக்கட்டி நின்றிருந்த வல்லபனை கண்டதும் ஆடாது அசையாது திகைத்து நின்றுவிட்டாள்.

அந்நொடி நிச்சயமாக செல்வா வல்லபனை எதிர்ப்பார்க்கவில்லை.

எப்போதும் கதவை தட்டிவிட்டு அவள் திறந்ததும் உள்ளே வருபவன் இன்று தன்னிடமுள்ள சாவியால் கதவை திறந்து வந்ததால் அவன் வரவை அவள் அறியவில்லை.

முகத்தில் பூத்த முறுவலுடன், "ஏன் நிறுத்திட்ட செல்வா பாடு. ரொம்ப நல்லாயிருந்தது" என்று கூற,

திகைப்பிலிருந்து மீண்டவள், "ஆங்" என்று விழித்துவிட்டு,

"நீ…நீங்க எப்போ வந்திங்க?" என்று வினவ,

"நீ வாய் மொழிந்த வார்த்தை யாவும்னு ஆரம்பிச்சயே அப்போவே வந்துட்டேன்" என்று சிரிப்புடன் கூற,

இவளுக்கு கூச்சத்தில் லேசான கன்னம் சிவந்துவிட்டது.

ஒரு கையால் கன்னத்தை தேய்த்தபடி,

"நான் கதவை லாக் பண்ணிதானே இருந்தேன் எ..எப்பிடி வந்திங்க?" என்று தயங்கி வினா தொடுக்க,

"இல்லையே டோர் ஓபன்லதானே இருந்தது" என்று கூற,

"ஓபன்லயா நான் லாக் பண்ணிட்டு தானே வந்தேன்" என்று தீவிரமாக சிந்தித்தவள் அவனது முகத்தில் மின்னிய குறுச்சிரிப்பிலும் கையில் ஆடிய சாவியாலும் பொய் கூறுகிறான் என்று தெரிந்து முறைத்தாள்.

அதில் சத்தமாக சிரித்துவிட்டவன் அவள் செய்து வைத்திருந்ததை பார்வையிட்டபடியே,

"இன்னைக்கு குக்கிங்க சீக்கிரமா ஸ்டார்ட் பண்ணியாச்சு போல?" என வினவ,

"ஆமா கொஞ்சம் போரடிச்சது அதான்" என்று பதில் மொழிந்தாள்.

"என்ன குக் பண்ணப் போற?" என வினா எழுப்ப,

"சப்பாத்தி வச்சு சென்னா செய்யப் போறேன்" என்றாள்.

"எப்படி சப்பாத்திய ரவுண்டா தேய்ச்சிடுவியா? இல்லை அன்னைக்கு மாதிரி மேப் மாதிரி வரைவியா?" என்று மந்தகாச சிரிப்புடன் வினவ,

"இல்லை கரெக்டா தேய்ச்சிடுவேன்" என்றவள் லேசாக அவனை முறைத்தாலும் கூச்சத்தில் வார்த்தை முனங்கலாத்தான் வந்தது.

"சென்னா" என்றவன் தொடங்குகையிலே இடை நுழைந்தவள்,

"யூ ட்யூப் பார்த்துட்டேன் கரெக்டா செஞ்சிடுவேன்" அவசர அவசரமாக கூற, அவன் சத்தமாக சிரித்துவிட்டான்.

அவளுக்குமே தனது அவசரத்தில் சிறிது சிரிப்பு வந்துவிட முகத்தை அவனுக்கு காட்டாது திருப்பிவிட்டாள்.

போதும் வம்பிழுத்தது என்று நினைத்தவன்,

"ஓகே எதாவது ஹெல்ப்னா என்ன கூப்பிடு. எனக்கு கொஞ்சம் ஒர்க் இருக்கு அதை பார்த்திட்டு இருக்கேன்" என்றுவிட்டு அறைக்குள் நுழைந்துவிட,

இவள் மீண்டும் சமையலை தொடர்ந்தாள்.

ஏதோ சமையலில் கொஞ்சமாக அறிவு இருக்க அதனை வைத்து இரு வாரங்களாக சமைக்க வல்லபனது உதவியுடன் நன்றாக தான் வந்தது.

இன்று தானே செய்கிறேன் என்று எதையோ செய்துமுடித்தவளுக்கு மனமெங்கும் ஒரு விடயம் அரித்தது.

காரணம் அவளது காதல் கதை தான்‌. காதலே பிடிக்காத தனக்கு எப்படி இவர் மீது காதல் வந்தது என்பது தான்.

இத்தனை நாட்களாக மனதில் ஓரமாக இருந்த விடயம் இப்போது தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்று தோன்ற கேட்டுவிட முடிவு செய்தவள் சமைத்து முடித்துவிட்டு அவனை தேடி சென்றாள்.

நீள்விருக்கையில் சாய்ந்தபடி அமர்ந்திருந்து மடியில் மடிக்கணினியை வைத்து வேலை செய்து கொண்டிருந்தான்.

அமைதியாக பூனை போல நடந்து சென்றவள் அவன் முன்னே தயங்கியவாறு நின்றாள்.

தன் வரவை உணர்ந்து அவனே நிமிர்வான் என்று எதிர்பார்த்து அவள் நிற்க,

அவனோ தனது வேலையில் மூழ்கிவிட்டான் போலும் இவள் அரவத்தை சற்றும் உணரவில்லை.

இவளோ நின்று நின்று பார்த்து பின்னர் பொறுமை இழந்து தானே அழைத்துவிடுவோம் என்று நினைத்த நொடி எப்படி அழைப்பதென தெரியவில்லை.

இப்போது எவ்வாறு அவனை அழைப்பது என்று சந்தேகம் எழ அப்படியே நின்றுவிட்டாள்.

இத்தனை நாட்களாக இப்படி ஒரு சூழ்நிலையும் கேள்வியும் அவளிடம் எழவில்லை.

சரி அவனிடமே கேட்டுவிடுவோம் என்று எண்ணி தொண்டையை கணைத்தாள்.

இது அவனது சிந்தையை கலைக்க நிமிர்ந்து பார்த்தவன்,

"என்னடா?" என்க,

"எனக்கு ரெண்டு டவுட்?" என்று இரு விரலை அவன் முன் காண்பிக்க,

அவளது செயலில் புன்னகை எழ மடிக்கணினியை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு,

"என்ன டவுட்? சொல்லு க்ளியர் பண்ணிடலாம்" என்று கேட்க,

"நான் உங்களை எப்படி கூப்பிட்றது" என்றவள்,

"ஐ மீன் நான் இதுவரைக்கும் முன்னாடி எப்படி கூப்பிடுவேன்" என்று கேட்க,

அவன் சிரிப்புடன், "எதை சொல்ல நீ மூடுக்கு ஏத்த மாதிரி கூப்பிடுவ. கோபம் வந்தா போடா வாடான்னு கூட சொல்லுவ" என்க,
அவள் விழிகள் வியப்பில் விரிந்தது.

"போடா வாடாவா?" என்று விழிகளை விரிக்க,

"ஹ்ம்ம் ஆமா" என்று சிரித்தவனது மனம் அந்த விரிந்த விழிகளுக்குள் விழுந்திருந்தது.

அவள் நம்பாது, "உண்மைக்கேவா?" என்று நம்பாது பார்க்க,

"உண்மைக்கே தான்" என்றவன் பின்னர்,

"நம்பலைன்னா சரி விடு. உன்னோட செகெண்ட் டவுட் என்ன?" என்று வினவினான்.

"அது…" என்று இழுத்தவள்,

"நாம லவ் மேரேஜ்னு சொன்னிங்களே" என்று நிறுத்த,

"ஆமா சொன்னேன்" என்றவன் கேள்வியாக பார்க்க,

"எனக்கு லவ் மேல எந்த இன்ட்ரெஸ்ட்டும் இல்லை. தென் எப்படி உங்க மேல லவ் வந்திச்சு" என்றாள்.

"ஹ்ம்ம் என் மேல இன்ட்ரெஸ்ட் வந்ததும் லவ் மேல இன்ட்ரெஸ்ட் தானா வந்திடுச்சு" என்று சிரிக்க,
அவள் முறைத்தாள்.

"ஹே ஐ ஆம் ஜெஸ்ட் சீரியஸ்" என்க,

"அப்போ அந்த லவ் ஸ்டோரிய சொல்லுங்க" என்று கேட்டாள்.

"ஹ்ம்ம் இப்போவா? அது கொஞ்சம் லென்த்தி ஸ்டோரி" என்று இழுக்க,

"பரவாயில்லை எவ்ளோ லென்தியா இருந்தாலும் நான் கேக்குறேன். இப்போவே சொல்லுங்க" என்று கூற,

"ஹ்ம்ம் யுவர் விஷ். வா இங்க வந்து உட்காரு" என்று இருக்கையை காண்பிக்க,

சடுதியில் அவனருகே அமர்ந்தவள் ஆர்வமாக அவன் முகம் நோக்க, அவன் ஆரம்பிக்கும் நொடி அழைப்பு மணி ஒலித்தது.

அதில் அவன் சிரித்து, "இட்ஸ் நாட் மை பால்ட்" என்று இருகையையும் தூக்க,

"ப்ச்" என்று சிணுங்கியவள்,

"நான் யாருன்னு பார்த்திட்டு வர்றேன். நீங்க சொல்லணும்" என்று அவனை செல்லமாக முறைத்து விட்டு செல்ல,

வல்வபனது முகம் முழுவதும் புன்னகை முகிழ்ந்தது.

ஒரு காதல் ஒரு நேசம் இரு

உயிர் கூட்டில் ஒரு சுவாசம்
புது வானம் பல தேசம்
செல்வோமே அன்பே வா…



இங்கோ செல்வா கதவை திறந்ததும் அவள் முன்பு துப்பாக்கி நீட்டப்பட்டது…?


















 
Active member
Messages
205
Reaction score
116
Points
43
செல்வாவின் கல்லூரி காதலை விட இப்போ இருக்குற அறியா காதல் சூப்பர் ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Ethey thuppaki ah oru vela ava kita prank panna vandhu irupagalo ava arvama ah ippo than love story kekalam.nu decide panna athukula ivanga panrathu la irukarathum marandhu da poguthu
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Feel pannatha selva life fulla vallapan kuda tha Iruka pora enn don't feel 🤗🤗🥳epathaan selva ku love marriage ya epadi pannom kekka vantha❤️❤️❤️ athukula yaru da thuppaki oda vanthathu 🙄🙄selva va Evan nalla kindal pandran 😁😁😁
 
Well-known member
Messages
859
Reaction score
630
Points
93
Superrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr
Ippo yaaru antha gun party
 
Top