• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

புன்னகை 10

Administrator
Staff member
Messages
466
Reaction score
795
Points
93
புன்னகை 10:

மொழிகளின்றி

விழிகளால்
பரிபாஷை
பேசுவதெல்லாம்
நேசம் கொண்ட
நெஞ்சங்களுக்கு மட்டுமே
சொந்தம் போலும்…!


நீல வண்ண வானம் மெது மெதுவாக ஆழ் கருமையை பூசி கொள்ள விழைய பாரியவன் கதிர்களை சுருக்கி கொண்டு மறைந்து கொண்டிருந்தான்.

சாரளத்தின் வழியே ஊடுருவி வந்த தென்றல் காற்று மேனியை பட்டும் படாமல் தழுவி செல்ல நாற்காலியில் சற்று சாய்வாக அமர்ந்து ஒரு கையை மேஜை மேல் ஊன்றி மறு கையால் புத்தகத்தின் பக்கத்தை சோம்பலாக திருப்பிய செல்வாவின் மூளை மட்டும் அத்தனை விரைவாக தொடர்வண்டி போல எண்ணங்களை சுமந்து ஓடியது.

அவள் சுமந்து செல்லும் எண்ணங்களின் சொந்தக்காரன் சந்தேகமே இன்றி வல்லபன் சக்கரவர்த்தி.

வேறு யாரை பற்றி அவள் சிந்திக்க முடியும் இல்லை அவன் சிந்திக்க விடுவான். எதாவது ஒன்றை செய்து அவளை எப்போதும் அவனது நினைவிலே வைத்திருந்தான்.

காலையில் கூட கல்லூரிக்கு வந்ததுமே அவனுடைய வகுப்பு தான். நன்றாக தான் புரியும்படி தெளிவாக வகுப்பை எடுத்தான்.

ஆனால் இறுதியில் வழக்கம் போல அவளை கேள்விகேட்டு பதில் கூறாதபடி எதாவது வம்பிழுத்து உறைய வைத்து பின் தானே காப்பாற்றவும் செய்தான்.

அத்தனை பேர் முன்னிலையில் அவளால் முறையோ முறை என முறைப்பதை தவிர‌‌ என்ன செய்ய முடியும்.

இப்போது அவன் வம்பிழுப்பது எல்லாம் பெரியதாக தெரியவில்லை.‌ அவளுடைய சிந்தை முழுவதும் அவனது செல்வ நிலையில் தான்.

அது அது மட்டும் தான் அவளுடைய‌ எண்ணம் ஆன்மா என அனைத்தையும் அபகரித்து நின்றிருந்தது.

கல்லூரி‌‌ ஆண்டு விழா முடிந்து கிட்ட தட்ட இரண்டு வாரங்கள் சென்றிருந்தது.

விழாவில் வந்து சென்ற வல்லபனின் தந்தை அபிஷேக் சக்கரவர்த்தியிடம் தான் மனது நின்றது.

ஏதோ பணக்கார வீட்டு பிள்ளை என்று மட்டும் தான் வல்லபனை நினைத்திருந்தாள்.

ஆனால் அபிஷேக்கிற்கு கல்லூரியில் கொடுக்கப்பட்ட மரியாதை வரவேற்பிலே அவர் எத்தனை தூரம் உயர்ந்த இடத்தில் இருக்கிறார் என்று புரிந்தது.

அதுவும் அவர் வந்து சென்ற பிறகு அவரை பற்றிய பேச்சுக்கள் தான் விழாவில். அவர் இந்த கல்லூரிக்காக நிறைய நிறைய செய்திருக்கிறாராம்.

முக்கியமாக விழா நடந்த கலையரங்கத்தை பல லட்சம் தானமாக கொடுத்து கட்டி கொடுத்தவரே அவர் தானாம். காரணம் அவர் இந்த கல்லூரியின் முன்னாள் மாணவனாம்.

பல லட்ச ரூபாய் தானமாக கொடுத்திருக்கிறார் என்றால் அவர்களது செல்வநிலையை எண்ணி பார்க்கவே மலைப்பாக இருந்தது.

அன்று இரவே அலைபேசியின் தேடு பொறியில் சக்கரவர்த்தி குழுமத்தின் பெயரை தேட நிறைய புகைப்படங்களுடன் வந்து நின்றது அந்த நிறுவனத்தின் தகவல்கள்.

மென்பொருள் தொழில்நுட்பத்தில் மட்டுமின்றி இன்னும் பல துறைகளில் கால்பதித்து வெற்றியை கண்டு எண்ணிலடங்கா சொத்திற்கு உரிமையாளர் என்று அறிவிக்க, அதனை கண்டவள் சற்று நொந்து தான் போனாள்.

தன்னுடைய நிலை என்ன அவனுடைய நிலை என்ன ஏணி என்ன ஏரோபிளேனே வைத்தாலும் எட்டாது என்று தெரிந்தது.

அந்த கணமே வேண்டாம் இது சரி வராது படங்களில் மட்டுமே இது போன்ற காதல் திருமணங்கள் சுபத்தில் முடியும்.

எதார்த்தத்தில் இது சுத்தமாக சாத்தியம் கிடையாது. இவனை காதலித்து திருமணம் வரை சென்றாலும் இருவரது செல்வ நிலையில் உள்ள வேறுபாடு பெரியதாக வந்து நிற்கும்.

என்னதான் வல்லபனின் தந்தை நன்றாக பேசினாலும் சம்மதம் கூறியிருந்தாலும் அவ்வீட்டில் உள்ள மற்றவர்கள் அப்படியே இருக்க வேண்டும் என்று என்ன அவசியம்.

சரி எல்லாரையும் சரிக்கட்டி இருவரும் திருமணம் செய்து கொண்டாலும் அதன் பிறகு பிரச்சனை வராது யாரும் எழுப்ப மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்

இதில் யாராவது தனது பெற்றோரை எதாவது கூறிவிட்டால் தன்னால் சத்தியமாக தாங்க இயலாது.

தன்னால் தன் பெற்றோருக்கு எந்த சமயத்திலும் எந்தவித துன்பமும் நேரக் கூடாது என்று நினைத்து கொண்டாள்.

இறுதியில் மாத சம்பளத்திற்கு அரசு அலுவலகத்தில் வேலை செய்யும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த தனக்கும் செல்வ செழிப்பின் உச்சத்தில் பிறந்து வளர்ந்தவனுக்கும் எந்த விதத்திலும் எப்போதுமே ஒத்து வராது என்று முடிவு செய்தவள் அவனை தன் வாழ்வில் இருந்து நினைவில் இருந்து நீக்க முடிவு செய்திருந்தாள்.

ஆனால் அது அத்தனை சுலபமான காரியமல்ல என்று அவளுக்கு தெரிந்தது.

அவனுடைய ஒரு வார்த்தை தனக்கு எத்தனை பெரிய யானை பலத்தை கொடுக்கிறது.‌ அவனுடைய கண்ணசைவில் மனது குளிர்கிறது என்றால் தான் எத்தனை தூரம் அவனில் ஆழ்ந்து போயிருக்கிறோம்.

அவன் எவ்வளவு தூரம் தன்னில் ஊடுருவி இருக்கிறான்.

சுலபத்தில் வேண்டாம் போ என்று அவனது நினைவுகளை துரத்த முடியவில்லை.

கல்லூரிக்குள் நுழைந்ததுமே அவளை பார்த்து பேசி வம்பு வளர்த்து என்று எதாவது ஒரு வகையில் தனது இருப்பை நினைவுறுத்துகிறான்.

அவளுள் தனக்கான இடத்தை நினைவு படுத்திவிடுகிறான்.

அவளுக்கு என்ன செய்வது என தெரியவில்லை. வேண்டாம் இது சரி வராது என்று நினைத்த பிறகு தான் அவனது நினைவு அடிக்கடி எழுகிறது.

தன்னை பார்த்ததும் ஏறி இறங்கும் புருவங்கள் கண்ணோரம் சிறிதாய் சுருங்க இதழ்கடையில் சிரிப்பை மறைக்கும் அவனது பாங்கு அவளுக்குள் ஆழ்ந்துவிடுவது போல பார்க்கும் அவனது பார்வை எல்லாம் நூறு முறை நினைவு வந்து கொன்றது.

விலகி சென்றாலும் தன் முன்னே மீண்டும் மீண்டும் வந்து நிற்பவனை ஒதுக்கவும் இயலாது ஏற்கவும் இயலாது தவிக்கிறாள்.

என்னவோ ஒரு தவிப்பு நிலையில்லாது வந்து அவளை கொல்லாமல் கொன்று தின்றது.

இதோ இரண்டு வாரங்கள் குழப்பத்தின் மொத்த உருவமாக சுற்றி கொண்டிருக்கிறாள்.

இருதலை கொள்ளி எறும்பின் நிலையில் பரிதவிப்பவளுக்கு இரு வாரங்களாக உண்ண பிடிக்கவில்லை படிக்க பிடிக்கவில்லை.

வீட்டில் இருப்பவர்களிடம் அவ்வபோது எரிந்து வேறு விழுந்தாள்.

தான் ஏன் இப்படி ஆகி போனோம். வெறும் மூன்று மாதங்களே தெரிந்த‌ ஒருவருக்காக ஏன் இத்தனை குழப்பம் இத்தனை போராட்டம்.

இவ்வளவு குறுகிய காலத்தில் உன் வாழ்விற்குள் வந்துவிட்ட ஒருவரை உன்னால் விலக்க இயலவில்லையா? அவ்வளவு தானா உன் கட்டுப்பாடு என்று சுயபட்சாதாபம் தோன்றி அலைக்கழித்தது.

இதோ இப்போது இந்த நொடியும் அதே குழப்பத்தின் பிடியில் தான் சிக்கி கொண்டிருந்தாள்.

விழிகள் புத்தகத்தின் மேல் இருந்தாலும் அதிலிருந்த ஒரு எழுத்து கூட மனதில் பதியவில்லை.

"ப்ச்…" என்று வெறுத்து போனவளாய் புத்தகத்தினை மூடி தலையை கவிழ்த்து கொள்ள அவள் முன் நிழலாடியது.

நிமிர்ந்து பார்க்க எதிரில் மூச்சு வாங்க பானு நின்றிருந்தாள்.

அருகே இருந்த தண்ணீர் பொத்தலை எடுத்து மடமடவென அருந்திய பானு, "செல்வா சீக்கிரமா வா?" என்று அழைக்க,

"எங்கடி?" என்று சுரத்தே இல்லாது குரல் வந்தது செல்வாவிடம்.

"ப்ச் நீ வா நான் சொல்றேன்" என்றவள் கிசுகிசுப்பாக கூறிய கையை பிடித்து இழுக்க,

நூலகத்தில் இருந்த சிலரது பார்வை இவர்கள் மேல் விழுந்தது.

மற்றவர் கவனத்தினை கவர கூடாது என்று எண்ணி, "வர்றேன் இரு" என்று தனது உடமைகளை எடுத்து கொண்டு வெளியேறினாள்.

வெளியே வந்தும் பானு கூறாததில் சிறிது கடுப்பானவள், "எங்கன்னு சொல்லிட்டு கூட்டிட்டு போடி" என்று எரிச்சல் மண்டிய குரலில் இயம்ப,

"உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வந்தா தெரிஞ்சிடும்" என்று கல்லூரி பின்புற வாயிற் கதவை தாண்டி வெளியே அழைத்துச் சென்றாள்.

கல்லூரியின் பின்புறம் சிறிது தூரம் காடுகள் அடர்ந்த பகுதி அதனை தொடர்ந்து தார் சாலையும் நீண்டு கொண்டிருக்கும்.

பானு தார் சாலை தொடங்கும் இடத்தில் அழைத்து செல்ல அங்கே ஏற்கனவே நிறைய நபர்கள் சாலையின் இருபுறமும் நின்றிருந்தனர்.

அருகில் சில ஆண்கள் மேஜை முன் அமர்ந்திருக்க சில பெண்கள் பணத்தை எண்ணி கொடுத்தவாறு இருந்தனர்.

பார்த்தவுடனே செல்வாவிற்கு புரிந்துவிட்டது இங்கே இரண்டு சக்கர வாகனம் பந்தயம் நடக்கவிருக்கிறது என்று.

சடுதியில் வல்லபனின் முகமும் வந்து மறைந்தது.

"இங்க எதுக்குடி கூட்டிட்டு வந்த?" என வினவ,

"என்னடி இப்படி கேக்குற. இன்னும் கொஞ்ச நேரத்தில பைக் ரேஸ் ஸ்டார்ட் ஆக போகுது. அங்க பார் எத்தனை பேர் ஆர்வமா பெட் கட்டிட்டு இருக்காங்க. வல்லண்ணா மேல தான் பெட் குவியுது. அண்ணா ஜெயிக்கிறதை நீ பார்க்க வேணாமா? அதுக்கு தான் அழைச்சிட்டு வந்தேன்" என்க,

'ஊஃப் இவ வேற என் நிலைமை தெரியாம மேல மேல படுத்துறாளே' என்று மனதிற்குள் நொந்தவள்,

"எனக்கு இதுலலாம் இன்ட்ரெஸ்ட் இல்லைடி. நான் போறேன்" என்று திரும்ப,

"அடியே இன்னும் ரெண்டு நிமிஷத்துல ஸ்டார்ட் ஆகிடும் வந்தது வந்த உன் ஆள் வின் பண்றதை பார்த்திட்டு போ" என்று கையை பிடித்து கொண்டாள்.

அவர்கள் நின்றிருந்த தார் சாலையின் இறுதியில் இருந்து அவர்களை நோக்கி இரண்டு சக்கர வாகனங்கள் அசுற வேகத்தில் சீறிப்பாய்ந்து வரும். எந்த வாகனம் முதலில் இலக்கை அடைகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்கள் என அறிவிக்கப்படுவார்கள்.

கது கல்லூரிக்கு தெரியாமல் முறையற்று நடத்தபடுகிறது.

"ரேஸ் ஸ்டார்டட்…" என்று ஒரு பெண் கத்த,

"ஹே…" என்ற கூச்சல் அவ்விடத்தை நிறைத்தது.

ஐந்து நிமிடத்தில் தூரத்தில் ஐந்து வாகனங்கள் அசுர வேகத்தில் சீறிப்பாய்ந்து வந்தது.

அதில் முதல் வருவது வல்லபனது ராயல் என்ஃபீல்டு தான்.

வல்லபனை முதலில் கண்டதும்,

"வல்லா வல்லா வல்லா…" என்று எல்லாபுறமும் குரல் எகிறியது.

செல்வாவின் விழிகளும் அவனை தான் ஆழ்ந்து பார்த்தது.

அந்நொடியும் உள்ளுக்குள் உனக்கும் அவனுக்கும் ஒத்து வராது என்று ஒரு குரல் கூச்சலிட நிச்சயமாக நொந்துவிட்டவளது விழிகள் அவனை வெறித்து பார்த்தது.

முதலாவதாக முன்னேறி வருபவனை திடீரென பின்னால் வந்தவன் முந்தி அருகில் வந்து வேண்டுமென்ற வாகனத்தால் இடித்துவிட, சடுதியில் வல்லபன் நிலைதடுமாறிவிட்டான்.

அதனை கண்ட செல்வாவின் இதயம் ஒரு விநாடி துடிப்பை நிறுத்திட சர்வமும் சமைந்து போனது.

கால்கள் நிற்க இயலாது தடுமாற பட்டென்று அருகில் இருந்த பானுவை பிடித்து கொண்டாள்.

நிலைதடுமாறி கவிழ சென்றவன் இறுதி கணத்தில் சுதாரித்து காலை ஊன்றி நின்று பின்னர் வேகமெடுத்து முன்னே வர, இங்கு இவள் அந்த நொடி உடைந்தே போயிருந்தாள்.

விழிகள் குளமாய் நிரம்பியிருந்தது. அந்த நிகழ்வு அவனில்லாது தானில்லை என்று ஆணியடித்தது போல உரைக்க செய்திட்டது.

வல்லபன் வந்த வேகத்தில் எல்லையை அடைந்து வாகனத்தை நிறுத்த,

"வல்லா வல்லா" என்று அவனை கூட்டம் சூழ்ந்து கொண்டது.

வல்லபன் எல்லோருக்கும் நன்றியை புன்னகையுடன் கூற,

இங்கோ செல்வா கண நேரத்தில் நடந்துவிட்ட நிகழ்வில் அவனுக்கு ஏதாவது ஆகியிருந்தால் தான் என்ன ஆவது என்று நினைந்து நிமிடத்திற்கு நிமிடம் சிதறி கொண்டிருந்தாள்.

எல்லோருடனும் பேசி முடித்தவனது பார்வை தன்னவளின் மீது விழ மின்னும் புன்னகையுடன் வாகனத்தை நிறுத்திவிட்டு அவளை நோக்கி வந்தான்.

நிறைந்துவிட்ட விழிகளால் அவனது பிம்பம் மங்கலாக தெரிய இமை சிமிட்டினாள்.

விழி நீர் கன்னத்தை நனைந்திருந்தது. இருந்த குழப்பத்தில் அதிர்ச்சியும் சேர்ந்து கொண்டதில் தொய்ந்து அப்படியே சரிந்திருந்தாள் செல்வ மீனாட்சி.




*********************

விழி மூடி அவன் கட்டிய மாங்கல்யத்தை பெற்று கொண்டவளுக்கு மனதிற்குள் என்னவோ உணர்வு இனி இவன் தான் என்ற எண்ணம்.

மாங்கல்யத்தை அணிவித்தவனுக்கு உள்ளமெங்கும் விளக்க முடியாத நிறைவு.

என்னவோ வெகுநாட்கள் தங்களுக்குள் இருந்த மாயத்திரை விலகிய எண்ணம் தோன்ற இதழ்கள் விரியாத புன்னகையில் நெளிந்தது.

பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதத்தை பெற்று கொண்டனர்.

பின்னர் கோவிலை சுற்றி வந்த அனைத்து கடவுளையும் வேண்டி கொண்டனர்.

அதன் பிறகு அருகில் உள்ள உணவகத்தில் காலை உணவை முடித்து கொண்டு வீட்டை நோக்கி புறப்பட்டனர்.

இப்போதும் அதியை நடுவில் இருத்தி கொண்டு இருவரும் ஓரத்தில் அமர்ந்திருந்தனர்.

சாரளத்தின் புறம் முகத்தை திருப்பி வைத்திருந்தவளுக்கு இனி இவனுடன் தான் என் வாழ்க்கை


இது நான் என் பாதை இவனுடைய கரங்களை பிடித்து கொண்டு தான் செல்ல வேண்டுமா?

பெற்றோரை குடும்பத்தை விட்டு செல்ல வேண்டுமா? என ஆயிரம் ஆயிரம் விடை தெரியாத கேள்விகள் முட்டி நிற்க,

மற்றொரு கேள்வியும் அவள் முன் வந்து நின்றது.

அது வேறொன்றுமில்லை தனக்கு தன்னுடைய குடும்பம் இங்கே இருக்கிறது.

வல்லபனுக்கு அவனுடைய குடும்பம் எங்கே. ஏன் அவரது குடும்பத்தில் இருந்து யாரும் எங்களை என்னை பார்க்க வரவில்லை.

ஒருவேளை அவனுக்கு குடும்பம் இல்லையா? என்ற கேள்வியே நடுக்கத்தை ஜனிக்க செய்தது.

கோவிலில் அவளது பெற்றோர் காலில் விழுந்து ஆசிர்வாதம் சமயம் தான் செல்வாவிற்கு வல்லபனுடைய பெற்றோரை பற்றிய நினைவு எழுந்தது.

இப்போது அவனுடன் செல்ல வேண்டும் என்பதையெல்லாம் தாண்டி அவனுடைய குடும்பத்தை பற்றி தெரிந்து கொள்வதில் தான் அவளுடைய மனது பரபரத்தது.

அவனிடம் கேட்டுவிடலாமா? என்று ஒரு மனம் நினைக்க, மற்றொரு மனம் ஒருவேளை அவனுக்கு குடும்பம் என யாரும் இல்லாமல் இருந்து நீ அதனை கேட்டு காயப்படுத்திவிட்டால் என்ன செய்வாய் என வினா தொடுத்தது.

அதுவும் சரிதான் ஏற்கனவே இந்த இரண்டு நாட்களில் பலமுறை அவனை காயப்படுத்திவிட்டோம்.

இப்போதும் அவனை காயப்படுத்த வேண்டுமா என்று எண்ணி அமைதியாகியிருந்தாள்.

இருந்தும் மனம் அவனை பற்றி தெரிந்து கொள்ள பரபரத்தது.

திரும்பி அவனையே சிந்தனையுடன் பார்க்க சாரளத்தின் வழியே பார்த்திருந்தவன் அவள் பார்வையை உணர்ந்தானோ என்னவோ சடுதியில் திரும்பிவிட்டான்.

இப்படி திரும்புவான் என எதிர்பாராதவள் அதிர்ந்து முகத்தை திருப்பி கொண்டாள்.

மனது வேறு படபடவென அடித்து கொண்டது.

'சே இப்படி ஆவென பார்த்திருந்தோமே என்னை பற்றி என்ன நினைத்திருப்பார்' என்று நொந்து கொண்டவள் பார்வையை முயன்று வெளியே வைத்து கொண்டாள்.

ஐந்து நிமிடங்கள் கடந்திருக்க அவன் பார்வையை நிச்சயமாக திருப்பியிருப்பான் என்று நினைத்து அவனை பார்க்க இமை ஆடாது அவளை தான் பார்த்திருந்தான்.

இம்முறை அதிர்ந்து பார்வையை திருப்ப இயலவில்லை. அவன் தான் அசையாது பார்த்திருக்கிறானே? என்ன செய்வதென்று தெரியாமல் ஒரு நொடி மலங்க மலங்க விழித்தாள்.

அவளது செயலில் தொற்றி கொண்ட மென் சிரிப்புடன், "என்ன…?" என்று ஒற்றை புருவத்தை உச்சி மேட்டிற்கு ஏற்றி இறக்க,

"ஒன்றுமில்லை" என்பதாய் தலையசைத்தவள் பட்டென்று பார்வையை திருப்பிக் கொண்டாள்.

அசாத்திய அமைதி கோலோச்சிய அவ்விடத்தில்,

"ம்மா தூங்க வருது" என்ற அதியின் குரல் கலைத்தது.

அதில் அதியை நோக்கிய செல்வா, "தூக்கம் வருதா? வா இங்க படுத்துக்கோ" என்று புன்னகையுடன் தன் மடியினை காண்பிக்க,

"ஹ்ம்ம்" என்று தலையசைத்த அதி தாயின் மடியில் தலையை வைத்து தந்தையின் மடியில் காலை நீட்டி வாகாய் படுத்து கொண்டாள்.

அவளது ஒய்யாரத்தில் செல்வாவின் புன்னகை பெரியதாக விரிந்தது.

வல்லபனுக்கும் மகளது செயலில் மென்னகை கீற்று தான்.

வல்லபன் மெதுவாக அதியை தட்டி கொடுக்க, தந்தையின் தாலாட்டிலும் தாயின் உடல் சூட்டிலும் நன்றாய் உறங்கி போனாள்.

நன்றாக சாய்ந்து அமர்ந்த செல்வா அதியை வாகாய் படுக்க வைத்து கொண்டாள்.

மகள் உறங்கவும் மீண்டும் வேதாளமாக மனம் முருங்கை மரம் எறிக் கொள்ள முகத்தில் தேங்கிய கேள்வியுடன் அவனை கண்டாள்.

உறங்கும் மகளை ரசித்து பார்த்தவன் தலையை நிமிர்த்தும் போது தான் மனைவியின் முகத்தை கண்டான்.

அதிலிருந்து என்ன கண்டானோ, "செல்வா என்ன உன் ப்ராப்ளம். என்கிட்ட எதாவது சொல்லணுமா இல்லை கேக்கணுமா?" என்று அவளை பார்த்து மென்மையாக வினவ,

அதில் தைரியம் வர பெற்றவள், 'ஆமாம்' எனும் விதமாக தலையசைத்தாள்.

"என்ன. என்கிட்ட கேக்க என்ன உனக்கு தயக்கம்?" என்றவன் கேள்வியாக அவளை பார்க்க,

"அது…அது…" என்று இழுத்தவள்,

"உங்க பேமிலி மெம்பர்ஸ் யாரையும் நான் பார்க்கலையே. அவங்க கோவிலுக்கு கூட வரலையே?" என்று தயங்கி நிறுத்த,

அவனது முகத்தில் மெலிதான் கீற்று புன்னகை. காரணம் மனைவி தன்னை பற்றி சிந்திக்கிறாள் என்பது தான்.

"இப்போ தான் உனக்கு என் குடும்பத்தை பத்தி தெரிஞ்சுக்க தோணுச்சா?" என்று மாறாத புன்னகையுடன் நேற்று கேட்ட அதே வினாவை தொடுக்க,

"அது கோவில்ல அம்மா அப்பா கால்ல ஆசிர்வாதம் வாங்கும் போது தான் உங்க அம்மா அப்பா எங்கேன்னு எண்ணம் வந்துச்சு. அங்க கேக்க முடியலை அதான்" என்று என்னை புரிந்து கொள்ளேன் என அவனை பார்த்தாள்.

புரிந்தது எனும் பாவனையில் தலை அசைத்தவன்,

"ஹ்ம்ம் இருக்காங்க ஹைத்ரபாத்ல இருக்காங்க. அம்மா அப்பா அண்ணா அண்ணி தங்கச்சினு எல்லாருமே இருக்காங்க" என்று கூற,

"அவங்க எல்லாம் ஏன் கோவிலுக்கு வரலை?" என்று செல்வா வினா எழுப்ப,

"அவங்களுக்கு என்மேல கோபம். அப்பாவுக்கு எந்த கோபமும் இல்லை. ஆனால் அவர் இப்போ பிஸ்னஸ் மீட்டிங்க்காக ஆஸ்திரேலியா போயிருக்காரு அதனால வரலை. இல்லைன்னா வந்திருப்பாரு" என்க,

"ஓ…" என்றவள்,

தயக்கத்துடன், "அவங்களுக்கு உங்க மேல என்ன கோபம்?" என்று அவன் முகம் பார்க்க,

"என் மேல மட்டும் இல்லை நம்ம மேல. நம்ம கல்யாணத்துல அவங்களுக்கு இஷ்டமில்லை" என்று தோளை குலுக்கினான்.

'இஷ்டமில்லையா?' என்று மனதிற்குள் நினைத்தவள் ஆர்வம் தாங்காது,

"ஏன்?" என்று கேட்விட்டாள்.

அவளது ஆர்வத்தில் புன்னகையுடன்,

"அவங்க நம்ம லவ்வ அக்செப்ட் பண்ணிக்கலை" என்க,

"வாட் லவ்வா?" என்றவள் அதிர்ந்தேவிட்டாள்.

அதில் புன்னகை இமை நீண்ட சிரிப்பாக, "ஆமாம்" என்று தலையசைத்தான்.

"உண்மையாவா? நம்ம லவ் மேரேஜா பண்ணிக்கிட்டோம்?" என்று நம்பாத குரலில் கேட்க,

கண்ணோரம் சுருங்கிய சிரிப்புடன்,

"ஆமா நாம காதலிச்சு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்" என்றவனது வார்த்தையில் நிச்சயமாக உறைந்து தான் போயிருந்தாள்.

தன்னையே இமைக்காமல் அதிர்ந்து விழிகளை பெரிதாய் விரித்து பார்த்தவளின் பார்வையில் தொலைந்து போகாமல் இருக்க பிரயத்தனப்பட்டவனது வதனத்தில் மந்காச புன்னகை ஜனிக்க பார்வை ரசனையாய் அவள் முகத்தில் படிந்தது.

நெற்றி வகுட்டில் புதிதாய் இட்ட குங்குமம் மின்ன அதற்கு கீழாக சிறிதாக சந்தன கீற்றை அடுத்து சிறிதாய் சிவப்பு நிற பொட்டு. அவனை ஆழியாய் உள்ளிழுக்கும் விழிகளில் வழிந்த பார்வை நாசியை தொட்டு இதழில் தவழ்ந்து அவளது தாடையில் இருந்த மச்சத்தில் பதிய மொத்தமாக வீழ்ந்து போனான்.

அவனது இமைக்காது ரசனை பார்வையில் முகத்தை சடுதியில் தழைத்து கொண்டாள் செல்வா.



தேனாழியில் நீராடுதே

மனமே…
ஓ பூவாளியில் நீ தூக்க
வா தினமே…
 
Well-known member
Messages
860
Reaction score
631
Points
93
Superrrrrrrr superrrrrrrrr
Semmmmmmmaaaaa ya irukku ma
Rendu perum avlo azhaghu
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
 
Active member
Messages
205
Reaction score
116
Points
43
சூப்பரோ சூப்பர் 😄😄😄😄😄😄செல்வாவுக்கு லவ் மேரேஜ்னா ஷாக் ஆகதானே செய்யும் 😁😁😁😁😁😁
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Selva enna confusion unaku vallapan ya ne accept pannigalam 😍selva love marriage nu sonnathum shock agida irugatha super super nalla irugadum 💖
 
Administrator
Staff member
Messages
466
Reaction score
795
Points
93
சூப்பரோ சூப்பர் 😄😄😄😄😄😄செல்வாவுக்கு லவ் மேரேஜ்னா ஷாக் ஆகதானே செய்யும் 😁😁😁😁😁😁
Thank you so much dear 🥰❤️❤️🥳❤️
 
Top