• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

பாதை - 7

Member
Messages
55
Reaction score
2
Points
8
"இந்த இடம்தான்..."என தன் கையில் இருந்த அந்த செய்தித்தாளில் உள்ள புகைப்படம் உள்ள இடத்தை பார்க்கிறாள் மலர்.
"சரி....அப்போ இந்த இடத்தில் நாம டென்ட் போட்டிடலாம் ...இது காடு சீக்கிரம் இருட்டிடும்..."என சிவா கூற,
"சரி..."என கூறி கொண்டே தன் கையில் உள்ள பைகளை கீழே இறக்கி வைக்கிறான் சக்தி.
சக்தியும் சிவாவும் பைகளை திறந்து பைகளில் உள்ள துணி எடுத்து கூடாரம் செய்கிறார்கள். மலரும் ஷாலினியின் அடுப்பு செய்து கொண்டு இருக்கிறார்கள்.
"ஹே...ஹே...பாத்து போ..."என மலர் கூற,
நடந்து கொண்டு இருந்த சக்தி அவளை பார்த்து கொண்டே பின்னாடி நடக்க திடீர் என ஒரு குழிக்குள் ஒரு காலை விட்டு விழுகிறான்.
"என்னதுடா இது..."என சக்தி பதற்றத்தில் கேட்க,
"ஏதோ ஒரு பழைய கிணறு போல..."என மலர் கூறுகிறாள்.
"எதுவா இரு்தாலும் கொஞ்சம் முன்னாடி சொல்லாமாட்டியா...."என சக்தி கேட்க,
"நீ கீழ விழுந்தா காமெடியா இருக்கும்ன்னு நினைச்சேன்..."என மலர் கூற,
"நல்ல வேளை உன்னோட காமெடி என்னை கொல்லல..."என சக்தி கோபத்துடன் கூறுகிறான்.
"சரி அப்போ இங்கேயே இருப்போம்..."என சிவா கூற,
"சரி..."என கூறிவிட்டு அனைவரும் ஏற்பாடுகளை செய்கின்றனர்.
ஷாலினி உடலில் இருந்து வெளியே வந்த நிஷா தன் கைகளை நீட்டி அடுப்பின் மேல் காட்டி நெருப்பு மூட்டுகிறாள்.
"இதுதான் என்னோட camping ஸ்டைல்..."என்று நிஷா கூற, அந்த அடுப்பின் மீது சோளகருதை கம்பியில் குத்தி நெருப்பில் வாட்டுகிறாள் மலர்.
புகை மேலே பறக்க அதை பார்த்து கொண்டு இருந்த சிவா, ஷாலினியின் உடலில் இருந்து நிஷா போனதும் உடனே ஒரு கருதை எடுத்து,"ஷாலினி இது உங்களுக்குதான்..."என நீட்டுகிறான்.
"தேங்க்ஸ்..."என ஷாலினி அதை வாங்கி உண்கிறாள்.
அனைவரும் அங்கு சமைக்க ஆரம்பிக்க புகை நன்றாக வருகிறது.
அங்கு இருட்ட ஆரம்பிக்க அனைவரும் அமர்ந்து உணவு உண்டு கொண்டு இருக்கிறார்கள்.
"ஷாலினி உன் சகோதரி பத்தி நீ என்ன நினைக்கறே..."என சக்தி கேட்க,
"அவ எனக்கு நேர் எதிர்...பையன் மாதிரி இருப்பா....சண்டை போடுவா...ஆனால் என்கிட்ட எப்போவும் நல்லா பேசுவா...எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும்....அவ எங்க போனாலும் நானும் அவ பின்னாடியே போவேன்..."என ஷாலினி கூற,
"புரியுது...உன்னோட ஃபீலிங்..."என சக்தி கூறுகிறான்.
"சரி...நீங்க பொண்ணுங்க இங்க தனியா இருங்க....நான் வரேன்...."என சக்தி கூறிவிட்டு சிவாவை தேடி போக,
சிவா ஒரு இடத்தில் அமர்ந்து வானத்தை பார்த்து கொண்டே தன் காதில் earphones மாட்டி கொண்டு கேட்டு கொண்டு இருக்கிறான். சக்தி வருவதை அறிந்த சிவா,"என்னாச்சு...?"என கேட்க,
"ஒன்னுமில்ல...இங்க என்ன பண்ணிட்டு இருக்கே...பாட்டு கேட்டுட்டு இருக்கியா...."என சக்தி கேட்கிறான்.
"இது பாட்டு இல்லை....இதோ பாரு...."என தன் கைபேசியில் உள்ள திரையை காட்ட அதில் ஒரு நபர் தன் கைகளை அசைத்து சைகைகளை காட்டி கொண்டு இருக்கிறார்.
"என்ன இது..."என சக்தி கேட்க,
"இது sign language.... அதாவது சைகை மொழி..."என சிவா கூறுகிறான்.
"இது...எதுக்கு நீ கத்துக்கறே..."என சக்தி கேட்க,
"ஷாலினிக்காக..."என சிவா கூறுகிறான்.
"அவளுக்கு எதுக்கு..."
"இது நம்ம ஷாலினி இல்லை...."
"வேற எந்த ஷாலினி...ஒன்னு கேக்கவா இன்னைக்கு அவங்க உன்னை அடிச்சப்போ ஏதோ ஷாலினின்னு சொல்லிட்டு அடிச்சாங்க...அதுக்கும் இதுக்கும் ஏதாச்சும் சம்மந்தம் இருக்கா..."என சக்தி கேட்க,
"சரி என்னை பத்தி நீ என்ன நினைக்கரே..."என சிவா கேட்க,
"நீ ரொம்ப நல்ல பையன்....மத்தவங்களுக்கு உதவி பன்றே...நிறைய..."என சக்தி கூற,
"இல்லை....நான் அப்படி இல்லை...நான் சுயநலவாதி....நான் இப்போதான் இப்படி இருக்கேன்...முன்னாடி இப்படி இல்லை....நான் ஸ்கூல் படிக்கும் பொழுது வேற மாதிரி இருந்தேன்...நான் ஏழாவது படிக்கும் பொழுது ஷாலினின்னு ஒரு பொண்ணு எங்க கிளாஸ்ல சேர்ந்தா....பாவம் அவளுக்கு காது கேட்காது... காது கேட்காததால் சரியான அலைவரிசை தெரியாது....அதனால் அவளால் பேசவும் முடியாது...அவள் எங்க கிளாஸ்ல வந்து சேர்ந்ததும் நான் சும்மா நாலு பேரு முன்னாடி நம்ம பந்தாவா இருக்கணும்னு காட்ட அந்த பொண்ணை நான் கேலி பண்ணி கிண்டல் பண்ணி பேசிட்டு இருந்தேன்....அது ஒரு கட்டத்தில் ரொம்ப கொடுமையா மாறிடுச்சு....அவ மேல தண்ணி ஊத்தறது...அவ மேல குப்பையை வீசறது போய்...ஒரு கட்டத்தில் அவ காதில் போட்டு இருந்த hearing machine பிடிங்கி விளையாடி வீசிட்டேன்....அப்படி பிடுங்கும் போது அவ காது கிழிஞ்சு இரத்தம் வர ஆரம்பிச்சுருச்சு... இதனால் பெரிய பிரச்சினை ஆகி கிளாஸ் டீச்சர் கேட்கும் போது என்கூட சேர்ந்து கேலி பன்னவங்க எல்லாம் என்மேல பழியை தூக்கி போட்டுட்டாங்க....அவளும் எங்க ஸ்கூல்ல இருந்து வேற ஏதோ ஸ்கூல் மாறி போய்ட்டா...ஆனால் அவகிட்ட என்னால ஒரு சாரி கூட கேக்க முடியல...அவ போன பின்னாடி யோசிச்சு பாத்தேன்....நான் எவ்ளோ கேவலமான ஆளா இருந்திருக்கேன்னு...அவளை நான் எப்படி கேலி பண்ணி சிரிச்சேனோ அதே மாறி ஸ்கூல்ல மத்தவங்க என்னை கேலி பண்ணி பேச ஆரம்பிச்சாங்க...என்னை கொடுமைப்படுத்த ஆரம்பிச்சாங்க....என்னை அடிக்க ஆரம்பிச்சாங்க...எனக்கு மன அழுத்தம் அதிகமாக ஆச்சு.... யரோடயும் பேசமா இருந்தேன்.... யார் முகத்தையும் நிமிர்ந்து பார்க்காம இருந்தேன்...ஒரு நாள் முடியாம என்ன பண்ணேன் தெரியுமா...."என சிவா வருத்தத்தில் கூற,
"என்ன பண்ணினே...."என சக்தி கேட்க,
"எனக்கு எதுவும் வேண்டாம்....என முடிவு பண்ணி தற்கொலை பண்ண போய்ட்டேன்....நான் பண்ணுன பாவத்துக்கு எங்க போய் பிராய்சித்தம் தேட போறேன்னு நான் நினைக்காத நாளே இல்லை...இந்த முடிவிலா வேதனைக்கு முடிவு கொண்டு வரணும்னு தற்கொலை பண்ண போய்ட்டேன்...ஆனால் என்னால முடியல...அவகிட்ட எப்படியாச்சும் மன்னிப்பு கேட்கணும்...கேட்டுட்டு பண்ணிக்கலாம் என பண்ணல...இப்போ அவ எங்க இருக்கான்னு தெரியல....ஆனால் என்னைக்காவது ஒருநாள் அவகிட்ட மன்னிப்பு கேட்பேன்....என்னால வாழவும் முடியல....சாகவும் முடியல....காலைல பார்த்தேல்ல...என்னை அடிச்சவங்க என்னோட ஸ்கூல் படிச்சவங்க....அவங்க போர் அடிச்சா என்னை அடிக்க வருவாங்க...நானும் ஷாலினிக்கு பண்ணுணதுக்கு தண்டனையா நினச்சிக்கிட்டே..."என சிவா கூற,
"உனக்குள்ளே இப்படி ஒரு விஷயம் இருக்கும்ன்னு தெரியல..."என சக்தி கூற,
"அவளுக்காகதான் இப்போ நான் சைகை மொழி கத்துக்கறேன்..."என சிவா கூறுகிறான்.
"இப்போ புரியுது....உனக்கு நம்ம ஷாலினி மேல அக்கறை ஏன்ன்னு.... ஃபீல் பண்ணத....நீ அதை நினைச்சு பெருமை ஒண்ணும் படல....இப்போ அதை நினைச்சு வருத்தம் மட்டும்தான் பட்டுட்டு இருக்கே...கண்டிப்பா ஒருநாள் நீ அவளை கண்டுபிடிப்பே....அவ உன்னோட மன்னிப்பை ஏத்துக்குவா..."என சக்தி கூறி கொண்டு இருக்க,
"Come to place..."என அலைபேசியில் குறுஞ்செய்தி மலரிடம் இருந்து சிவாவிற்கு வருகிறது.
"கூப்பிட்ராங்க...வா போகலாம்.."என சிவா கூறிவிட்டு அங்கே இருந்து சக்தியும் சிவாவும் செல்கிறார்கள்.
"என்னாச்சு....எதுக்கு கூப்பிட்டே..."என சக்தி கேட்க,
"அப்படியே எங்க வலது பக்கம் மரத்து அடில பாரு..."என மலர் கூற,
திரும்பி பார்க்க ஒரு நபர் அவர்களை பார்த்து கொண்டு இருக்கின்றான்.
"வந்துட்டானா..."என சிவா அவனை பார்க்க,
"நீங்க யாரு....இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க..."என அவன் கேட்க,
"ஒண்ணும் இல்லை...நாங்க எல்லாம் வீட்டை விட்டு ஓடி வந்துட்டோம்..."என சக்தி கூற,
"ஓ...அப்போ இங்க இருந்து நீங்க போகமாட்டீங்களா..."என அவன் கேட்க,
"ஆமா....நாங்க இங்கேயே இருக்க போறோம்..."என சக்தி கூறுகிறான்.
"இப்போ நான் பார்த்துக்கறேன்...நீங்க பாருங்க..."என சக்தி மற்றவர்களிடம் கூறுகிறான்.
"அப்படியா..சரி நான் அப்போ போலீஸ் கூப்பிடறேன்...."என கூறி கொண்டே அவன் தன் கையில் உள்ள அலைபேசியை எடுக்க,
"பண்ணு...பண்ணு...அவங்க உன்னையும் அரெஸ்ட் பண்ணுவாங்க...இது பிரைவேட் property.... அதுமட்டுமில்லாமல்...."என கூறி கொண்டே சக்தி தன் கையில் அந்த செய்தி தாளை எடுத்து காட்டி,
"இது நீதானே..."என கேட்க,
"என்ன உளர்றே...."என அவன் கூறுகிறான்.
"நீ பறக்கும் பொழுது அவங்க உன்னை படம் பிடித்து நியூஸ் பேப்பர்ல போட்டுட்டாங்க..."என சக்தி கூறுகிறான்.
"பறக்கறதா..."என சிரித்தபடி அவன் கேட்க,
"ஆமா....இது ஊரை விட்டு தள்ளி இருக்குல்ல....அதான் நீ பயிற்சி பண்ணிட்டு இருக்கே...இப்போ நீ பயிற்சி பண்ண வந்திருக்கே....நாங்க அதுக்கு இடைஞ்சலாக இருக்கோம்...அதுனால இங்க வந்தே..."என சக்தி கூற,
"என்னால பறக்க முடியாது..."என அவன் கூற,
"அப்படியா....அப்போ தனியா இங்க நீ என்ன பண்ணிட்டு இருக்கே..."என கேட்க,
"நான் பழங்கள் பறிக்க வந்தேன்..."
"இந்த ராத்திரியிலே எந்த பழம் பறிக்க வந்தே... அச்சச்சோ பாவம்....இங்க நிக்கிறா பாரு இந்த பொண்ணு...இவ சும்மாவே கேமரா வச்சு வீடியோ எடுப்பா...உன்னை இந்நேரம் கண்டிப்பா எடுத்து இருப்பா..."என மலரை கை காட்ட,
மலர் திருதிருவென விழிக்கிறாள்."என்னாச்சு..."என சக்தி தாழ்ந்த குரலில் கேட்க,
"வீடியோ எடுக்கல..."என மலர் கூற,
"சும்மா நேரம் மட்டும் கேமரா வச்சிட்டு சுத்திட்டு இருப்பே...இப்போ என்ன...சரி கைல இருக்குல்ல அது போதும்..."என கூறிவிட்டு,
"இதை நாங்க போய் நியூஸ் ல குடுக்கறோம்..."என சக்தி கூற,
"அந்த கேமரா குடு என்கிட்ட..."என அவன் கூறி கொண்டே முன்னோக்கி நடந்து வர சட்டென ஒரு குழிக்குள் விழுகிறான்.
"எஸ்..."என சக்தி கத்த,
"என்னது இது..."என ஷாலினி கேட்கிறாள்.
"முன்னாடி நான் விழுந்த பழைய கிணறுல மேல இலை சருகு எல்லாம் போட்டு வச்சேன்...இப்போ தெரியும் பாரு அவனுக்கு பவர் இருக்கா இல்லையான்னு..."என சக்தி கூற, அந்த குழிக்குள் இருந்து அவன் பறந்து மேலே வருகிறான்.
"மலர்...இப்போ எடு..."என சிவா கூற,
தன் கையில் உள்ள கேமராவை எடுத்து மலர் வீடியோ எடுக்கிறாள்.
"எனக்கு தெரியும்... உன்னால பறக்க முடியும்னு..."என சக்தி கூற அவன் பறந்து வந்து அவர்கள் முன் நிற்கிறான்.
"அந்த கேமரா குடு..."என அவன் மலரிடம் ஓடி வர, மலர் மறைய ஆனால் கேமரா அவளை காட்டி கொடுக்கிறது. அவன் கேமராவை தன் கையில் பிடுங்கி எடுத்து திரும்பி பார்க்க நிஷா ஷாலினியின் உடலை ஆட்கொண்டு தன் கையை நீட்ட அவன் மேல் நெருப்பு பற்றி எரிய வேகமாக ஓடி வந்த சிவா அவனை தூக்கி வீசுகுறான். அவன் மீது இருந்த நெருப்பு அணைய காற்றில் வீசப்பட்ட அவன் அங்கே இருந்து பறக்க,
மேலே சென்ற அவன் உடலினுள் புகுகிறான் சக்தி.கண்ணை திறந்து பார்த்த சக்தி மேலே இருந்து கீழே பார்க்கிறான் அவனின் உடலின் வழியே.
அப்படியே பறப்பதை நிறுத்தி கீழே வர, சிவா வேகமாக ஓடி வந்து அவனை பிடித்து கீழே இறங்குகிறான்.
தன் உடலிற்கு திரும்பிய சக்தி,"ஒரு நிமிஷம் பயந்துட்டேன் சாமி...."என எழுந்து கூறுகிறான்.
ஓடி சென்ற மலர் அவன் கையில் இருந்த கேமரா எடுக்கிறாள்.
"யார் நீங்க எல்லாம்..."என அவன் கேட்க,
"உன்னை மாறியே எங்களுக்கும் பவர் இருக்கு...நீ வளர்ந்த பின்னாடி உனக்கு இந்த பவர் போய்டும்...இப்போ உன்னை scientists பாத்தாங்கன்னா..."என விவரங்கள் சிவா கூற,
"எனக்கு மட்டும்தான் பவர் இருக்குன்னு நினைச்சிட்டு இருந்தேன்...என்ன மாதிரி நிறய பேர் இருக்காங்க போல...என் பேர் பீட்டர்... உங்க காலேஜ்ல சேர்ந்துக்கறேன்..."என அவன் கூறுகிறான்.
அங்கே இருந்து கிளம்பிய அனைவரும் அவரவர் வீட்டிற்கு செல்கின்றனர்.
"எனக்கு புரியுது...நீ கோவமா இருக்கேன்னு...சாரி..."என சக்தி அம்முவிடம் கூறுகின்றான்.
"சரி வா உனக்கு இன்னைக்கு veg நூடுல்ஸ் பண்ணிருக்கேன்..."என அம்மு கூற,
"மறுபடியுமா..."என நினைத்து கொண்டே சக்தி அதை சாப்பிடுகிறான்.
"எனக்கு உடம்பு சரியில்லை....அதான் நூடுல்ஸ்..."என அம்மு கூறுகிறாள்.
"என்னாச்சு..."என சக்தி கேட்க, "சும்மா இருமல்..."என அம்மு கூறுகிறாள்.
"சரிம்மா....நீ போய் படு..."என சக்தி கூற,
அவளும் தூங்க செல்கிறாள்.
(தொடரும்....)
1000210862.jpg
 
Top