• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

பாதை - 4

Member
Messages
55
Reaction score
2
Points
8
"ச்சே ரொம்ப நேரம் தூங்கிட்டோம்... அதுனால பேசாமல் இன்னைக்கு அண்ணனுக்கு நூடுல்ஸ் செஞ்சு குடுத்திடுவோம்...."என மனதினுள் எண்ணி கொண்டே அம்மு உணவை சமைத்து சக்தியின் கையில் கொடுக்க நீட்ட,
"இனி நீ எனக்கு மதிய சாப்பாடு சமைத்து கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை அம்மு...எங்க காலேஜ்ல யாரும் மதிய சாப்பாடு கொண்டு வரதில்லை... எல்லாரும் கேண்டீன்ல சாப்பிட்டுகிறாங்க...அதுனால நானும் அப்படியே பண்ணிக்கறேன்..."என சக்தி கூற,
"சரி பரவா இல்லை....இன்னைக்கு சமைச்ச சாப்பாட்டு மட்டும் எடுத்துட்டு போ..."என அம்மு கூறி சக்தியின் கையில் டிஃபன் பாக்ஸ் கொடுக்க சக்தியும் அதை வாங்கி கொண்டு வீட்டில் இருந்து கல்லூரிக்கு புறப்படுகிறான்.
வெளியே வந்த அவன் அதை பிரித்து பார்க்க அதில் நூடுல்ஸ் இருக்க,"இன்னும் சின்ன பையனா நினைச்சிட்டு இருக்கா...இதை எடுத்திட்டு போனால் எல்லாரும் சிரிப்பாங்க...."என மனதினுள் நினைத்து கொண்டே பக்கத்தில் உள்ள குப்பை தொட்டியில் போட்டு விட்டு செல்கிறான்.
கல்லூரியை அடைந்த சக்தி தனது இருக்கையில் அமர, பக்கத்தில் வந்த சிவா,
"என்னாச்சு நீ பார்க்க ஒரு மாதிரி இருக்கே..."என கேட்க,
"இல்லை...நான் எப்போவும் போலதான் இருக்கேன்..."என சக்தி கூற,
"சரி இன்னைக்கு நம்ம கேண்டீன்ல ஸ்பெஷல் சாப்பாடு சாப்பிடலாம் நல்லாருக்கும்...."என சிவா கூற,
"ஸ்பெஷல் சாப்பாடா அது எப்படி நமக்கு கிடைக்கும் கூட்டமா இருக்கும்ல..."என சக்தி கேட்க,
"நீ யாரு கூட இருக்கே... எல்லாத்தையும் என்னால வேகமாக பண்ண முடியும் தெரிஞ்சுக்கோ..."என சிவா கூற,
"இன்னைக்கு எத்தனை இடத்தில விழுந்து வாற போறானோ..."என மனதினுள் நினைத்து கொண்டே சரி என கூறுகின்றான் சக்தி.
மதிய நேரம் கல்லூரி மணி அடிக்க, சுற்றும் முற்றும் பார்த்து விட்டு கதவின் அருகே சென்று நிற்க சக்தி அவனை பார்த்து கொண்டு இருக்க அதிவேகத்தில் ஓடுகிறான். அங்கு உள்ள நபர்கள் ஏதோ காற்று வீசுகிறது என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள். சக்தி அவன் சென்ற திசையை பார்த்து கொண்டு இருக்க அங்கு பொருட்கள் விழும் சப்தம் கேட்கிறது.
அங்கே இருந்து எழுந்து நடந்து கேண்டீன் சென்று சிவா எங்கே என்று சக்தி தேடி கொண்டு திரும்ப அங்கு ஒரு மேசையில் உணவுடன் முகத்தில் இரத்த காயங்களுடன் சிவா அமர்ந்து கொண்டு இருக்கிறான்.
"வந்துட்டாயா நண்பா..."என சிவா கேட்க,
"டேய்...எனக்கு தெரிஞ்சு நீ முதல்ல ஹாஸ்பிடல் போகனும்டா...."என சக்தி கூற,
"அட...என்னை பத்தி கவலைபடாதே...நான் எவ்ளோ வேகமாக ஓடுகிறேனோ அதே மாதிரி சீக்கிரம் எனக்கு காயம் எல்லாம் ஆறிடும்..."என சிவா கூறுகிறான்.
"யப்பா.... இருக்கிறதுலயே..உனக்குத்தான் பெரிய ஓட்டை பவர்..."என சக்தி கூறி கொண்டே அமர்ந்து சிவா வாங்கி வைத்த உணவை சாப்பிடுகிறான்.
அப்பொழுது சிவாவின் கைபேசிக்கு அழைப்பு வர, அதை எடுத்து தன் காதில் சிவா வைத்து,
"சரி...புரிஞ்சுது..."என கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டு,
"அடுத்த ஆள் கண்டுபிச்சாச்சு... லேப் போகலாம் வா..."என சிவா கூறுகிறான்.
சிவாவும் சக்தியும் கிளம்பி யாருக்கும் தெரியாமல் ஆய்வகத்தில் உள்ளே நுழைந்து காத்து கொண்டு இருக்கிறார்கள்.
சக்தி அன்று சந்தித்த அதே மாணவன் உடம்பில் உள்ள துணிகள் நனைந்தபடி மீண்டும் அந்த அறையின் உள்ளே நுழைந்து அவர்களை நோக்கி வந்து மேசையின் மீது உள்ள வரைபடத்தை நோக்கி செல்கிறான்.
"ஆமா...இவன் எதுக்கு எப்போவும் தண்ணில நனைந்து கொண்டு வர்றான்...?"என சக்தி கேட்க,
"அவன் அப்படி நனைந்து இருந்தால் மட்டும்தான் அவனால அவன் பவர் பயன்படுத்த முடியும்..."என சிவா கூற,
"அடேங்கப்பா...இவனுக்கும் ஓட்டை பவர் போல..."என சக்தி மனதினுள் நினைத்து கொண்டே அவனை பார்க்கிறான்.
வரைபடத்தின் பக்கம் சென்ற அவன் தன் கையில் உள்ள ஒரு துளி நீரை அதில் விட்டு இடத்தை காட்டுகிறான்.
"அவங்க பவர் சேனலிங்..."என அவன் கூற,
"சேனலிங்...?"என சிவா கேட்க,
"இறந்து போன ஆண்மாக்களுடன் பேசுவது..."என அங்கே வந்த மலர் கூற,
"நம்மள மாதிரி ஓட்டை பவர் இருக்க இடத்தில் இப்படி ஒரு நல்ல பவர்...சூப்பர்..."என சக்தி கூற,
"அப்புறம் pyrokinesis..."என அந்த மாணவன் கூறிவிட்டு அங்கே இருந்து செல்ல,
அங்கே இருந்த மலர் சிவா மற்றும் சக்தி மூவரும் அதிர்ந்து பார்க்கிறார்கள்.
"ரெண்டு பவர் வச்சு இருக்க ஒரு ஆளா...?"என மலர் கேட்க,
"அப்போ சீக்கிரம் அவங்கள கண்டுபிடிக்கனும்..."என கூறி கொண்டே சிவா வரைபடத்தை பார்க்க,
"இது என்ன சாதாரண ரோடு மாதிரி இருக்கு..."என சிவா கூற,
"அதுனால என்ன..."என சக்தி கேட்க,
"ஒருவேளை அவங்க மூவிங்ல இருக்கலாம்..."என மலர் கூற,
"அருமை அப்போ இன்னைக்கும் கிளாஸ் கட் அடிக்கணுமா.."என சக்தி கேட்க,
"வேற வழி இல்லை... நாம்மதான் போயாகனும்...சரி வாங்க போகலாம்..."என சிவா கூறிவிட்டு செல்ல மலர் மற்றும் சக்தி அவனின் பின்னால் நடந்து செல்கிறார்கள்.
வரைபடத்தில் காட்டிய அந்த இடத்தை அடைந்து அங்கு பார்க்க வெறும் சாலையாக இருக்கிறது.
"இந்த இடந்த்தானே...."என சக்தி கேட்க,
"ஆமாம்.."என மலர் கூறுகிறாள்.
சிவா முன்னே செல்ல மலர் தன் கையில் கேமராவை பிடித்தபடி பின்னால் செல்ல அவள் பின்னால் சக்தி செல்கிறான்.
திடீர் என நின்ற சிவா கீழே குனிந்து பார்க்கிறான்.
"என்னாச்சு..."என சக்தி கேட்க,
"யாரோ இந்த இடத்தில் நடந்து போயிருக்காங்க..."என சிவா கூறுகிறான்.
"எப்படி சொல்றே..."என சக்தி கேட்க,
"இங்க பாரு...இங்க இருக்க கம்பிகளில் எல்லாம் தூசி படிந்து இருக்கு...ஆனால் இந்த இடம் பாரு தூசியை காணோம்...இப்படி அவங்க நடந்து போய் இருக்கும் போது இல்ல ஓடும் போது அவங்க துணி இல்லை என்றால் அவங்க கை கால் எதுவும் அவங்களுக்கு தெரியாம பட்டிருக்கும்..."என சிவா கூற,
"ஓடி இருக்காங்களா அப்படின்னா யாரோ அவங்களை துரத்தி இருப்பாங்க..."என மலர் கூற,
"இருக்கலாம் ...சரி வாங்க இன்னும் போய் பார்ப்போம்..."என சிவா எழுந்து முன்னோக்கி நடக்கிறான்.
முன்னே நடந்து சென்று பார்க்க அங்கு நிறைய கால்தடங்கள் தெரிகிறது.
"சந்தேகமே இல்லை...சில பேர் ஒரு பொண்ணை துரத்திட்டு போய் இருக்காங்க...அந்த ஒரு கால்தடம் மட்டும் பெண் போல இருக்கு...வாங்க போகலாம் சீக்கிரம்..."என கூறி சிவா செல்ல,
முன்னே செல்லும் இன்னொரு சாலையை அடைகிறார்கள்.அங்கே ஒரு ஓரத்தில் ஒரு நபர் நின்று கொண்டு இருக்க அவரை சக்தி பார்க்க,
"நீங்களும் அவர்களை தேடி போறீங்களா..."என அவர் கேட்க,
"யாரை..."என சக்தி கேட்க,
"ஒரு பாடகியை யாரோ துறத்திட்டு போனாங்க..."என அவர் கூற,
"பாடகி...?"என சிவா கேட்க,
"ஆமா...ஷாலினி...."என அவர் கூற,
"இந்த பெயரை நான் எங்கேயோ கேட்டு இருக்கிறேன்..."என மலர் கூற,
"நானும்தான்..."என சக்தி யோசிக்க,
சிவா மட்டும் வாயடைத்து போய் நிற்கிறான்.
"ஷாலினியா....அவங்களா...."என சிவா முகத்தில் புன்னகையுடன் கேட்க,
"அட ஆமா அம்மு சொன்ன பாடகி..."என மனதினுள் சக்தி நினைக்கிறான்.
"உனக்கு அவங்களை தெரியுமா..."என மலர் கேட்க,
"தெரியுமாவா அவங்களோட பெரிய fan நான்... சும்மா அவங்க பாட ஆரம்பித்தால் எப்படி இருக்கும் தெரியுமா...அவங்க எவ்ளோ அழகு தெரியுமா..."என வாயெல்லாம் பல்லாக சிவா கூற,
"நீ இவளோ பெரிய fan தெரியாம போச்சு...அமைதியா இரு..."என சக்தி கூற,.
"அவங்கதான் நான் பார்த்ததுல அழகான பொண்ணு...அவங்க குரல்தான் நான் கேட்டதுல இனிமையான குரல்..."என சிவா கூற,
"போதும் போதும்....அவளும் அவளோட பவரும்...அவளுக்கு பிரச்சினையை கொண்டு வந்து இருக்கும்...அதுனால அவளை துரத்துட்டு இருக்காங்க...சரியா..."என சக்தி கேட்க,
"தெரியலை...கண்டுபிடிப்போம்..."என கூறி கொண்டே மலர் திரும்ப, அங்கு ஏதோ ஒரு நபர் ஓடுவது போல் தெரிய,
"சந்தேகப்படும்படி ஒருத்தர் ஓடுறார்..."என மலர் கூற,
மூவரும் அவனை நோக்கி ஓடுகிறார்கள். அங்கே நின்று கொண்டு இருந்த அவன் மலரின் முகத்தில் குத்துகிறான்.
"மலர்..."என சக்தி கத்தி கொண்டே,"சிவா ஓடு சிவா"என சக்தி கூற,
சிவா தனது பவர் உபயோகப்படுத்தி வேகமாக அவனை நோக்கி ஓட, சக்தி நேராக அவனை பார்த்து அவனின் உடலினுள் செல்கிறான்.
அவன் உடலில் புகுந்த சக்தி ஓடுவதை நிறுத்தி திரும்பி நிற்க நேராக ஓடி வந்த சிவா வேகமாக அவன் மீது மோதுகிறான்.
மீண்டும் தனது உடலிற்கு திரும்பிய சக்தி,"டேய் நீ அடிச்ச அடி எனக்குத்தான் வலிச்சது..."என வலித்தபடி எழுந்து நிற்க,
"நான் அடிக்கவே இல்லை... சும்மா மோதினேன்..."என சிவா கூற,
"அடப்பாவி...அப்போ வேகமாக வந்து அடிச்சா என்ன ஆகும்..."என மனதினுள் எண்ணி கொண்டே அவனை நோக்கி நடக்கிறான்.
"நல்லா வேளை கேமரா ஒண்ணும் ஆகலை..."என எழுந்த மலர் தன் கையில் உள்ள கேமரா எடுத்து பார்க்கிறாள்.
"எழுந்திரிடா...யாருடா நீ..."என சிவா கேட்க,
"அதை எதுக்கு உங்ககிட்ட சொல்லணும்..."என அவன் கூற,
"இப்போ நீ சொன்னால் நாங்க ஆம்புலன்ஸ் கூப்பிடுவோம்... இல்லைன்னா இங்கேயே இரத்தம் எல்லாம் போய் நீ செத்து போயிருவே..."என சிவா கூற,
"நான் என்னோட ஆர்டர் மட்டும்தான் செஞ்சேன்..."என அவன் கூற,
"ஆர்டர் அப்படின்னா..."என சிவா கேட்க,
"சொல்ல முடியாது"என அவன் கூறுகின்றான்.
கீழே குனிந்து அவன் சட்டையை பிடித்து"சரி அப்போ ரகசியத்தோட செத்து போறியா..."என சிவா கேட்க,
"ஷாலினியை வேவு பார்க்க..."என அவன் கூறுகிறான்.
"யாருக்கு..."என சிவா கேட்க,
"மார்ஸ் டிவி..."என அவன் கூறுகின்றான்.
"குறிப்பா யாரு...அவன் பேர் சொல்லு..."என சிவா கோபத்துடன் கேட்க,
"தெரியாது...நான் உண்மையைதான் சொல்லறேன்.."என அவன் கூற,
"சரி..."என எழுந்து தன் கையில் உள்ள கைபேசியில் மருத்துவ ஊர்தியை அழைக்கிறான் சிவா.
மருத்துவ ஊர்தி அவனை அழைத்து செல்ல அதை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த மூவரை பார்த்து,
"ஹே....யார் நீங்க எல்லாம்..."என அங்கே வந்த ஒரு நபர் கேட்கிறார்.
"ஷாலினி எங்க இருக்காங்க அவங்களை பார்க்க வந்தோம்..."என சிவா கூற,
"எதுக்கு..."என அவன் கேட்கிறான்.
"தெரியலை...அவங்களை யாரோ target பண்ணராங்க அவங்களை காப்பாத்த வந்து இருக்கோம்..."என சக்தி கூறுகிறான்.
"ஷாலினியை உங்களுக்கு தெரியுமா..."என அவன் கேட்க,
"நான் அவங்களோட fan..."என சிவா கூற,
"நான் எல்லாத்தையும் பார்த்து கொண்டுதான் இருந்தேன்... ஆனால் நீங்க எப்படி அவனை அடிச்சீங்கன்னு புரியல..."என அவன் கூற,
"எங்களோட பவர் வச்சுத்தான்... ஷாலினிக்கு பவர் இருக்க மாதிரி..."என சிவா கூற,
"உங்களுக்கு எப்படி அது தெரியும்..."என அவன் அதிர்ச்சியில் கேட்க,
"இப்போ புரியுதா...எங்களால அவங்களை காப்பாத்த முடியும்னு..."என சிவா கூற,
அவன் சிறிது யோசித்து விட்டு,"சரி அப்போ நிருபிச்சு காட்டுங்க.. உங்களோட பவர் காட்டுங்க..."என அவன் கூறுகின்றான்.
"சரி..."என கூறிய மலர் சட்டென மறைந்து மீண்டும் தோன்றுகிறாள்.
"இப்போ நம்புகிறாயா..."என சிவா கேட்க,
"சரி என்கூட வாங்க...all the best... அவளை காப்பாத்துங்க..."என அவன் கூற,
"என்ன சொல்றே..."என சிவா கேட்க,
"நிலைமை மோசமாகி இருக்கு.. நீங்களே வந்து பாருங்க...."என அவன் கூறுகின்றான்.
நான்கு பேரும் ஒரு இடத்திற்கு செல்கிறார்கள்.
"இது என்ன கிளப்பா..."என சக்தி கேட்டுக்கொண்டே அந்த இடத்தின் உள்ளே நுழைய, முன் சென்ற அவன் அங்கு உள்ள படிக்கட்டுகளில் இறங்கி செல்கிறான்.
"நான் வந்துட்டேன்.."என உள்ள சென்ற அவன் கூற,
"வெளிய நிலமை எப்படி இருக்கு..."என உள்ளே இருந்த ஒரு ஆண் அவனை பார்த்து கேட்க அவன் பக்கத்தில் ஷாலினி அமர்ந்து கொண்டு இருக்கிறாள்.
"ஷாலினி...நான் உங்க பெரிய fan... உங்களோட பாட்டு எல்லாம் நான் கேட்டு இருக்கேன்...உங்களை நான் பார்ப்பேன் என நினைச்சு கூட பார்க்கல..."என சிவா ஆர்வத்தில் கத்த,
"டேய்...என்னடா பண்ற..."என சக்தி கேட்க,
"அப்படியா...thanks..."என கூறி ஷாலினி சிரிக்கிறாள்.
"இவதான் நம்ம டிவில பார்த்த பொண்ணு.."என சக்தி மனதினுள் நினைக்கிறான்.
"டேய்...யாருடா இவங்க எல்லாம்..."என உள்ளே இருந்த நபர் கேட்க,
"நிஷாக்கு இருக்க மாதிரியே இவங்களுக்கும் பவர் இருக்கு..."என அவன் கூற,
"நிஷா...? இவங்க பேர் ஷாலினிதானே ..."என மலர் கேட்க,
"இதை எப்படி சொல்றது உங்களுக்கு..."என அவன் கூற,
"டேய்...இவங்களை நீ நம்பரையா..."என உள்ளே இருந்தவன் கேட்க,
"அவங்க பவர் பயன்படுத்தி ஒருத்தன அடிச்சாங்க..."என அவன் கூற,
"சரி நான் ஷாலினிகிட்ட என்ன நடக்குதுன்னு கேட்கவா..."என சிவா கேட்க,
"சரி பேசுங்க...ஆனால் தப்பா ஏதாச்சும் பேசுனா வீடு போய் சேரமாட்டீங்க..."என உள்ளே இருந்தவன் கூறுகிறான்.
"சிவா...உன் fan சமாச்சாரம் எல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு பேசுடா..."என சக்தி கூற,
"சரி...சரி..."என கூறிவிட்டு உள்ளே சென்ற சிவா,
"ஹாய்...நான் சிவா... நைஸ் டூ மீட் யூ..."என சிவா கூற,
"நைட்ஸ் டூ மீட் யூ....நான் ஷாலினி..."என அவள் கூற,
"நான் celebrity இதுக்கு முன்னாடி பார்த்தது இல்லை...நீங்க பார்க்க பொம்மை மாதிரி அழகாக இருக்கீங்க...எனக்கு உங்களோட பேசி பழகனும்னு ஆசையா இருக்கு...உங்களோட உண்மையான பேர் என்ன..."என சிவா கேட்க,
"என்ன கண்டதை பேசிட்டு இருக்கே சீக்கிரம் விஷயத்துக்கு போ..."என மலர் கூற,
"இரும்மா..."என கூறி கொண்டே"உங்களுக்கு ஏதாச்சும் பிரச்சினை இருக்கா..."என சிவா கேட்க,
"ஆமா...நான் திடீர்ன்னு தூங்கிறேன் இப்போல்லாம்...எழுந்து பார்த்தா நான் வேற எங்கயோ இருக்கேன்...நான் அதுக்கு டாக்டர்கிட்ட போனேன்...அவங்க எனக்கு split personality இருக்கும் என சொல்றாங்க..."என ஷாலினி கூறுகிறாள்.

(தொடரும்....)
 
Top