• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

பாதை - 1 - தொடக்கம்

Member
Messages
51
Reaction score
2
Points
8
"நான் சின்ன வயசுல இருந்தே யோசிச்சு இருக்கேன்... ஏன் எனக்கு மட்டும் இப்படி இருக்கு... வேற யாருக்கும் இப்படி இல்லை....எனக்கு அப்பொல்லாம் தோணும்...நான் நானாக இல்லாமல் வேற ஒருத்தராக இருந்தால்..."என மனதினுள் நினைத்து கொண்டே தன் எதிரே சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் மனிதர்களை சக்தி பார்த்து கொண்டே சிரிக்கிறான்.
"நான் நானாக இல்லாமல் வேற ஒருத்தராக நினைத்தால் நான் அந்த நபர் ஆவேன்...என்னால அவங்க உடம்புகுள்ள போய்ட்டு வர முடியும்... அவங்க உடம்பை என்னால கட்டுபடுத்த முடியும்...ஆனால் வெறும் அஞ்சு செகண்ட் மட்டும்தான்...அதுக்கு பின்னாடி அவங்க உடம்பில் என்னால இருக்க முடியாது...அந்த நேரம் என்னோட உடம்பு மயங்கி விழுந்த மாதிரி கிடக்கும்...அப்படி விழுந்து என் முகமெல்லாம் காயம் படும்...அதுவும் நான் என்னோட சக்தியை பயன்படுத்தும் பொழுது நான் யாரோட உடம்புக்குள்ள போகனும்ன்னு நினைக்கிறேனோ அவங்களை நான் பார்க்கணும்.... என் பார்வைக்கு எட்டாத இடத்தில் இருக்கும் மனிதர்களை கட்டுபடுத்த முடியாது....எனக்கு யாராச்சும் புடிக்கலைன்னா அவங்க உடம்புக்குள் புகுந்து பக்கத்தில் சண்டைய போடுவேன்... அப்புறம் வெளிய வந்திருவேன்....இந்த மாதிரிதான் நான் பழி வாங்குவேன்..."என மனதினுள் எண்ணி கொண்டே தன் முன்னே சென்று கொண்டு இருந்த ஒருவனின் உடலினுள் புகுந்து பக்கத்தில் இருந்த ஒரு முரட்டு மனிதனை ஓங்கி குத்தி அவரை கீழே தள்ளி விட்டு மீண்டும் சக்தி தன் உடம்பிற்கு திரும்ப,
"என்னடா ஆச்சு உனக்கு.... யார்ரா நீ..."என அந்த முரட்டு மனிதன் சக்திக்கு பிடிக்காத நபரை அடித்து துவம்சம் செய்கிறார்.
அதை பார்த்து சிரித்து கொண்டே,"ஆனால் இப்போ...நான் என்னோட சக்தியை நல்லா பயன்படுத்த வழி கண்டுபிடிச்சிட்டேன்...."என எண்ணி கொண்டே சக்தி தனது கல்லூரிக்கு செல்கிறான்.
சக்தியின் கல்லூரியில் தேர்வு நடந்து கொண்டு இருக்க," Five more minutes" என முன்னால் இருந்த ஆசிரியர் கூறுகிறார்.
சக்தி தன் பார்வையை திருப்பி பக்கத்தில் நன்றாக படிக்கும் ஒரு மாணவனை பார்க்க அவன் உடம்பிற்குள் புகுந்து அவன் எழுதி இருக்கும் விடைகளை படிக்கிறான்.
"நான் என்னோட வகுப்பில் நன்றாக படிக்கும் பசங்க பொண்ணுங்க உடம்புக்குள் புகுந்து அவங்க விடைகளை எல்லாம் பார்த்திட்டு அதை அப்படியே என்னோட தேர்வு தாளில் எழுதிடுவேன்...."என மனதினுள் நினைத்து அங்கு உள்ள நன்றாக படிக்கும் நபர்களின் உடலினுள் புகுந்து எல்லா வினாக்களுக்கும் சரியான விடையளிக்கிறான் சக்தி.
ஒரு வாரம் கழித்து topper என சக்தியின் பெயர் கல்லூரி பலகையில் தெரிய, அதை பார்த்து சிரிக்கிறான் சக்தி.
"இது மட்டும் இல்லை....இந்த காலேஜ் என்ட்ரன்ஸ் எக்ஸாம்கும் இப்படி copy பண்ணித்தான் பாஸ் ஆனேன்...இப்போ நான் இந்த பணக்காரங்க படிக்கிற காலேஜில் நானும் படிக்கிறேன்.... எல்லாரும் என்னை பார்த்து பொறாமைபட்டாங்க... எப்படி எல்லா பாடத்திலும் இவனால் நல்ல மார்க் எடுக்க முடியுதுன்னு..."என நினைத்து கொண்டு நிற்க, அவன் பக்கத்தில் உள்ள இரண்டு பெண்கள் பேசி கொண்டு இருக்கின்றார்கள்.
"ஹே...அவன் அழகாக இருக்கிறான்ல...."என பேசி கொண்டு இருக்க அவர்களை பார்க்கிறான் சக்தி.
சக்தி அங்கு நின்று அந்த பெண்களை பார்த்து கொண்டு இருப்பதை யாரோ ஒருவர் வீடியோ எடுக்கிறார்கள்.
"ச்சே.... அழகாக இருந்தாலே இதே பிரச்சினைதான்...."என சக்தி மனதினுள் எண்ணி கொண்டு சக்தி தனது வகுப்பில் அமர்ந்து இருக்க,
"ஹலோ...."என அவன் வகுப்பில் படிக்கும் ஒரு பெண் பேச,
"என்ன..."என சக்தி கேட்க,
"அது...வந்து....எப்படி சொல்லறதுன்னு தெரியலை...."என அவள் கூற,
"எல்லாம் எனக்கு தெரியும்....நான் இங்க படிக்கிறதுக்குதான் வந்து இருக்கேன்...எனக்கு படிப்புதான் முக்கியம்...இந்த காதல் கத்திரிக்காய்க்கு எல்லாம் நேரம் இல்லை...என்னை மன்னித்துவிடு...."என சக்தி கூறி எழுந்து நடக்க,
"என்ன உலறிட்டு போறான்..."என அந்த பெண் பார்க்கிறாள்.
"உன்னை மாதிரி ஒரு சாதாரண பெண்ணை லவ் பண்ணுவேன்னு நினைச்சியா...நான் என்னோட திவ்யாக்கு காத்திருக்கேன்..."என கல்லூரி முடித்துவிட்டு திவ்யா வருவதை கல்லூரியில் பார்க்கிறான் சக்தி.
"காலேஜ் பியூட்டி....திவ்யா....உன்னை என்னவள் ஆக்கி காட்டறேன்...."என அவள் நடந்து வருவதை ஓரமாக பார்க்கிறான் சக்தி.
"எனக்கு ஒரு வாய்ப்பு வரும்...அந்த அஞ்சு செகண்ட்ல என்னென்ன பண்ண போறேன்னு பாரு..."என நினைத்து திவ்யாவை வெறித்து பார்த்து கொண்டு இருக்கிறான் சக்தி.
"ஆஹா வந்திருச்சு...."என சாலையில் வந்து கொண்டு இருக்கும் லாரியை பார்க்கிறான்.
திவ்யாவின் பக்கத்தில் பேசி கொண்டு இருக்கும் அவளது தோழியை பார்த்து அவளின் உடலினுள் புகுந்து திவ்யாவை விட்டு வேகமாக ஓடுகிறான் சக்தி. மீண்டும் தனது உடம்பினுள் புகுந்து லாரி ஓட்டுனரை பார்த்து அவரின் உடலினுள் புகுந்து லாரியை திவ்யாவை நோக்கி செலுத்தி ப்ரேக் போட மீண்டும் தனது உடலிற்கு திரும்ப வந்து வேகமாக ஹீரோ போல திவ்யாவை நோக்கி ஓடுகிறான் சக்தி. ஓடி வந்து அவளை தன் பக்கம் இழுக்க அவளின் மீதி மோத வந்த லாரி வேறு பக்கம் சென்று சுவற்றில் மோதுகிறது. சுற்றி இருந்த மக்கள் அனைவரும் கூடி வர, சக்தி எழுந்து திவ்யாவை பார்க்கிறான்.
"அப்பாடா பிளான் பண்ணுன மாதிரி யாருக்கும் அடி படல...."என எண்ணி கொள்ள,
"திவ்யா உனக்கு ஒன்னும் ஆகலையே...."என அவள் தோழி ஓடி வர,
"ஒண்ணும் இல்லை... நான் காப்பாத்திட்டேன்..."என சக்தி கூறுகிறான்.
"ரொம்ப தேங்க்ஸ்...."என திவ்யா கூற, எழுந்து நின்று தன் கைகளை நீட்ட சக்தியின் கைகளை பிடித்து கொண்டு எழுகிறாள் திவ்யா.
எழுந்து நின்று பார்க்க சக்திக்கு திவ்யாவை பிடித்து இருப்பதை தெரிந்து கொண்ட திவ்யாவின் தோழி,"இப்போதான் நியாபாகம் வருது....என் மாமா ஊருல இருந்து வந்து இருக்காரு...நான் போய் பார்க்கிறேன்...."என கூறி தோழி அங்கு இருந்து செல்ல,
"எவ்வளவு கேவலமான நடிப்பு....இருந்தாலும்..nice assistance.... வெறித்தனம்..."என மனதினுள் எண்ணி கொண்டே நிற்க, சக்தியை யாரோ வீடியோ எடுக்கிறார்கள்.
மறுநாள் கல்லூரியில் சக்தி தனது வகுப்பிற்குள் நுழைய திவ்யாவும் மற்றொரு மாணவனும் அங்கு நின்று கொண்டு இருக்கிறார்கள்.
"அச்சோ...இப்போ என்னாச்சு தெரியலை..யாரு இவன் இவளோட அண்ணனா இருப்பானோ...."என எண்ணி கொண்டே அருகே வர,
"ப்ரோ....ரொம்ப தேங்க்ஸ்...என் லவ்வர காப்பாத்தினதுக்கு..."என அந்த நபர் கூற,
"என்னது.... லவ்வரா...அடிப்பாவி இது எப்போ நடந்துச்சு...உன்னை சிங்கிள்ன்னு நினைச்சிட்டு இருந்தேனே...."என மனதினுள் எண்ணி கொண்டே,"ச்சே... யாரா இருந்தாலும் நான் காப்பாத்தி இருப்பேன்..."என கூறி அங்கே இருந்து உள்ளே சென்று வகுப்பில் அமர்கிரான் சக்தி.
"சக்தி ஃபர்ஸ்ட் இயர்..... ஸ்டாப்ஸ் ரூம்க்கு வாங்க...."என வகுப்பறையில் ஒலிப்பான் கூற,
"என்னாச்சு..."என எண்ணி கொண்டே அருகே உள்ள ஆசிரியர் அறைக்கு செல்கிறான் சக்தி.
"எதுக்கு என்னை கூப்பிட்டீங்க...."என சக்தி கேட்க,
"ஒண்ணும் இல்லை...இப்போ கடைசியாக வச்ச டெஸ்ட்ல உன்னோட அன்ஸ்வர் ஷீட் நான் பார்த்தேன்...நீ முழு மார்க் வாங்கி இருக்கே..."என அங்கு உள்ள நபர் கூற,
தன் கைகளை நீட்டி ஒரு மேசையை காட்ட,"அதே தேர்வு இப்போ வைக்கறேன்...அதே கேள்விதான்..இப்போ உன்னால என் கண்ணு முன்னாடி எழுத முடியுமா...."என அந்த நபர் கேட்க,
"என்னது..."என சக்தி கூறுகிறான்.
"நீ ஏமாத்தி exam எழுதறேன்னு தோணுச்சு...இப்போ வைக்கர தேர்வுல இதே மார்க் நீ எடு.... அப்போ நான் ஒத்துக்கறேன் நீ ஏமாற்றி மார்க் எடுக்கல என்று...."என அவர் கூற,
"என்னங்க சார் சொல்றீங்க..."என சக்தி பார்க்க,
"இப்போ நீ முடியாதுன்னு சொன்னால்....நீ ஏமாற்றி தேர்வு எழுதி இருக்கேன்னு இந்த காலேஜ் விட்டு அனுப்பிருவேன்.."என அவர் கூற, வேறு வழி இல்லாமல் தேர்வு எழுத அமர்கிறான் சக்தி.
எழுதி கொண்டு இருக்க தன் முன்னால் அமர்ந்து இருக்கும் அந்த நபர் கையில் ஒரு காகிதத்தை வைத்து பார்த்து கொண்டு இருக்க,"கண்டிப்பா அது விடைத்தாளா இருக்கணும்..."என எண்ணி கொண்டே அவர் உடம்பினுள் புகுந்து கையில் உள்ள காகிதத்தை பார்க்க, "ஒரு பிரியாணி வாங்கினால் இன்னொரு பிரியாணி இலவசம்..."என காகிதத்தில் இருக்கிறது.
"யார்ரா இவன்...."என கத்தி கொண்டே அந்த காகிதத்தை கிழித்து வீசி விட்டு தன் உடம்பிற்குள் திரும்புகிறான் சக்தி.
"என்னாச்சு...."என அந்த நபர் என்ன நடந்தது என்று தெரியாமல் கேட்க,
"ஒண்ணும் ஆகலை...நீங்கதான் உங்க கைல இருக்க பேப்பர் கிழிச்சு போட்டீங்க...."என சக்தி கூறுகிறான்.
"மாட்டிகிட்டாயா..."என தன் முன்னே கையில் வீடியோ கேமரா வைத்து கொண்டு நிற்கும் பெண் கேட்க,
"ஆ.....யாருங்க நீங்க....எப்படி உள்ள வந்தீங்க...."என சக்தி அலற,
"ஹை....என் பெயர் மலர்....நான் வேற காலேஜ்ல படிக்கிறேன்....அப்புறம் நான் உன்னை வீடியோ எடுத்தேன்...பாரு நான் என்ன எடுத்தேன் என்று..."கூறி காட்ட, சக்தியின் உடல் அவன் வேறு உடலினுள் செல்லும் பொழுது விழுந்து கிடப்பதை காட்டுகிறாள்.
"இது மட்டும் இல்லை...நிறைய வீடியோ இருக்கு.... உன்னை பத்தி....உனக்கு ஒரு பவர் இருக்குதானே... மத்தவங்க உடம்புக்குள் புகுந்து அவங்களை கட்டுப்படுத்தும் சக்தி.... அதைத்தானே நீ examல use பண்ற....சரியா..."என கேட்க,
"இல்லை...."என சக்தி கத்தி கொண்டே அங்கே இருந்து எழுந்து,"எனக்கு tired.... அதுனால கீழ விழுந்தேன்...நீங்க சொல்லுற மாதிரி இல்லை...."என சக்தி கூற,
"ஓ நீ அப்படி வர்றியா...சரி அப்போ அந்த தேர்வுல கேட்ட விடையை சொல்லு பார்ப்போம்...."என மலர் கேட்க,
"என்ன....என்னை வச்சு விலையாடறீங்களா..."என கத்தி கொண்டே அந்த அறையை விட்டு வெளியே சென்று ஓடி கல்லூரியின் மைதானத்திற்கு செல்ல,
"எனக்கான நேரம் வந்திருச்சு..."என அந்த அறையில் இருந்த நபர் கூறுகிறார்.
கல்லூரி நேரம் முடிய அனைவரும் வெளியேற அவர்களுடன் வெளியேறி ஆடி மூச்சு வாங்க ஒரு இடத்தில் சக்தி நிற்க, திடீர் என புயல் அடிப்பது போல காற்று வீசுகிறது.அதிவேகத்தில் அவன் அருகே உள்ள பொருட்கள் நொறுங்கி விழ பயத்தில் சக்தி ஓடுகிறான் மீண்டும். அவன் ஓட ஓட அவனை ஏதோ ஒரு நிழல் நெருங்க, "என்ன நடக்குது இங்க..."என கத்தி கொண்டே சக்தி ஓடுகிறான்.
சக்தி ஓடி ஓடி ஊரின் எல்லையை அடைந்து திரும்பி பார்க்க ஆசிரியர் அறையில் இருந்த நபர் அங்கு நின்று கொண்டு இருக்கிறார்.அவர் தன் கண்ணாடியை சரி செய்ய அவர் பின்னால் காற்று புழுதியுடன் வீசுகிறது.
தன் கால்களை பின்னோக்கி நீட்டி அவர் புயல் வேகத்தில் ஓடி கண் மூடி கண் திறப்பதற்குள் சக்தியை நோக்கி அருகே ஓடி வந்து சக்தியை பிடித்து கொள்ள வந்த வேகத்தில் இருவரும் தூரம் சென்று தண்ணீரில் விழுகிறார்கள். ஆனால் அதிவேகத்தில் வந்த அந்த நபர் வேகமாக ஓட சக்தியை தூக்கி கொண்டு தண்ணீர் மீது ஓடி வந்து விழுகிறார்கள்.

சக்தி தன் கண்களை அகல விரித்து ,"இப்போ என்ன பண்ணுனே...."என கேட்க,
"ஃபிளாஷ் moment..."என அந்த நபர் கூற,
"என்னது..."என சக்தி கேட்க,
"ஆமாம்....என் பெயர் சிவா....எனக்கு ஒரு பவர் இருக்கு.... என்னால அதிவேகத்தில் ஓட முடியும்...ஆனால் என்னால ஓடினா நிறுத்த முடியாது....அதுனால நிறைய தடவை விழுந்து வாரிருக்கேன்...."என அந்த நபர் கூற,
"என்னை எதுக்கு இப்போ டார்ச்சர் பண்ணறீங்க..."என சக்தி கேட்க,
அங்கு வந்த மலர்,"நீ என்னோட காலேஜில் படிக்க போறே..."என கூற,
"உன் காலேஜா...."என சக்தி கேட்க,
"ஆமா....இந்த உலகத்தில் உன்னை மாதிரியே சூப்பர் பவர் இருக்க நிறைய பேர் இருக்காங்க....ஆனால் அந்த பவர் எல்லாம் ஒரு நோய் மாதிரி நீ பெரியவனாகிவிட்டால் அது உன்னை விட்டு போய்விடும்...அந்த பவர் உன்னை விட்டு போகும் வரை நீ எங்களோட காலேஜ் ஸ்டார் இன்ஸ்டிடியூட்ல சேரனும்...நாங்க ஏற்கனவே உன்னோட கார்டியன் அப்ரூவல் வாங்கிட்டோம்...."என மலர் கூற,
"முடியாது.... "என சக்தி கூற,
"ஓஹோ....அப்போ இப்படித்தான் இப்படி எல்லார்கிட்டயும் நல்லா படிக்கிற பையன் மாதிரி ஏமாற்றிட்டு இருக்க போறியா...."என மலர் கூறி கொண்டே தனது வீடியோ கேமராவில் சக்தியை வீடியோ எடுக்க,
"அதை முதல்ல என்கிட்ட குடு...."என சக்தி எழுந்து தன் கைகளை நீட்ட எதிரில் நின்று கொண்டு இருந்த மலர் திடீர் என காணாமல் போகிறாள்.
அவள் எங்கே என சுற்றும் முற்றும் திரும்பி பார்க்க, யாரோ அவனது முகத்தில் குத்துகிறார்கள். அவன் நெஞ்சில் மற்றும் வயிற்றில் அடி விழுகிறது. திடீர் என யாரோ தாடையில் அடிக்க சக்தி கீழே விழுகிறான். கீழே விழுந்த சக்தி நிமிர்ந்து பார்க்க,"என்ன இது....இவ எப்படி காணாமல் போனாள்..."என பார்க்க,
"இதுதான் இவளோட பவர்..."என சிவா கூற,
"பவர்.... யார் கண்ணுக்கும் தெரியாம காணாமல் போறதா...."என வயிற்றை பிடித்து கொண்டு சக்தி கேட்க,
"இல்லை....என்னால அவளை தெளிவா பார்க்க முடிந்தது..."என சிவா கூற,
"என்னது...என்னால மட்டும்தான் அவளை பார்க்க முடியலையா...."என சக்தி கேட்க,
"ஆமாம்....அவளோட பவர் யாராவது ஒருத்தர் கண்ணுக்கு மட்டும் அவளை தெரியாத மாதிரி மறைவது.... மத்த எல்லார் கண்ணுக்கும் அவள் தெளிவாக தெரிவாள்...."என சிவா கூற,
"இன்னொரு ஓட்டை பவர்...இவளுக்கும் முழுசா பவர் வராது....இவனுக்கும் முழுசா பவர் வராது போல..."என மனதினுள் எண்ணி கொண்டே சக்தி எழ,
"சரி....எங்க காலேஜ்ல சேர்ந்து கொள்வாயா.... உன்னோட பவர் மத்தவங்களுக்கு உதவி பண்ண உபயோகமாய் இருக்கும்...."என மலர் கூற,
"எந்த விதத்தில்...."என சக்தி கேட்க,
"உன்னை மாதிரி பவர் இருக்கும் நபர்களை அவங்க பவர்களை தப்பா பயன்படுத்தாமல் தடுக்க....இதுதான் நம்ம mission...."என மலர் கூற,
"சரி...."என கூறி அங்கே இருந்து செல்கிறான் சக்தி.
என்ன செய்வது என யோசித்து கொண்டே சக்தி தனது வீட்டிற்கு செல்கிறான். நன்றாக இருட்டி மணி ஏழு தொட,
"நான் வந்துட்டேன்..."என சக்தி தனது வீட்டினுள் நுழைய,
"அண்ணா.... என்னாச்சு உன் முகத்துக்கு..."என சக்தியின் தங்கை அம்மு கேட்க,
"இது...இது ஒண்ணும் இல்லை... விளையாடும் பொழுது கீழ விழுந்துட்டேன்...."என மலரும் சிவாவும் தன்னை சந்தித்தது நினைத்து கொள்கிறான் சக்தி.
"சரி....உனக்கு ஒரு சந்தோசமான செய்தி இருக்கு...நம்ம ரெண்டு பேருக்கும் ஸ்டார் இன்ஸ்டிட்யூட்ல ஸ்காலர்ஷிப் கிடைச்சு இருக்கு...எனக்கு ஸ்கூல்க்கு உனக்கு காலேஜ்க்கு..."என அம்மு கூற,
"அதுக்குள்ளயா...."என மனதினுள் எண்ணி கொண்டே, "சரிம்மா...."என கூறுகிறான் சக்தி.
"சரி.... அப்படின்னா உன்னோட இந்த ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் நீ மிஸ் பண்ணமாட்டியா...."என சக்தி கேட்க,
"ஸ்மார்ட் போன் இருக்குல்ல.... வீடியோ கால் பேசிக்குவேன்...நீ போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வா....இன்னைக்கு ஸ்பெஷல் சாப்பாடு இருக்கு...."என அம்மு கூறி கொண்டே செல்ல,
சக்தி சென்று தனது உடைகளை மாற்றி கொண்டு முகம் கழுவி முகத்தில் உள்ள சிறு காயங்களுக்கு மருந்து போட்டு கொண்டு வருகிறான்.
"இதோ.... உன்னோட விருப்பமான சாப்பாடு.... நூடுல்ஸ்...."என அம்மு கொடுக்க,
"மறுபடியுமா.....இது எனக்கு இப்போ பிடிக்காது சின்ன பையனை இருந்தப்போ பிடிச்சதுன்னு சொல்லிருக்கேன்.....ஆனால் இவ கேக்கல...."என மனதினுள் நினைத்து கொண்டே அதை சாப்பிடுகிறான்.
"அண்ணா.... எப்படி இருக்கு...."என அம்மு கேட்க,
"நல்லாருக்கு அம்மு...."என சக்தி கூறுகிறான்.
"அம்மா நூடுல்ஸ் செய்வதை நான் ரொம்ப மிஸ் பண்ணறேன்...."என அம்மு கூற,
"அம்மா....அவங்களை பத்தி பேசாத..."என சக்தி கூற,
"இன்னும் அவங்க மேல் கோபமாய் இருக்கியா...."என அம்மு கேட்க,
"ஆமா...இப்போ நம்ம இப்படி தனியா இருக்க அவங்கதான் காரணம்...அவங்க டிவோர்ஸ் பண்ணிட்டு சந்தோசமா இருக்காங்க..."என சக்தி கூற,
"தப்பா நினைக்காதே... நீ அவங்க கூட பேசி பாரு..."என அம்மு கூற,
"நமக்கு அப்பா அம்மா இல்லை அம்மு.... நம்மாதான் குடும்பம்...நீயும் நானும் மட்டும்...."என சக்தி கூற,
"ஆனால் எனக்கு அப்பப்போ ஒன்னு தோணும்...நம்ம குடும்பத்தில் இன்னொருத்தர் இருக்க மாதிரி...."என அம்மு கூற,
"நமக்கு கூட பொறந்தவங்க வேற யாரும் இல்லை.... கனவு ஏதாச்சும் கண்டிருப்பே..."என சக்தி சாப்பிட்டு கொண்டே கூறுகிறான்.
இரவு இருவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு சக்தி தூங்க செல்ல,"காலையில் தயாராக இரு... நாம புது வீட்டுக்கு போக போறோம்..."என கூறுகிறான்.
"முன்னாடியே சொல்லமாட்டியா...."என நட்சத்திரங்களை ஜன்னல் வழியாக பார்த்து கொண்டு இருந்த அம்மு கேட்க,
"நட்சத்திரம் மேல நீ ஆர்வம் அதிகமாக காட்டறே...."என சக்தி கூற,
"ஆமா...நம்ம கைக்கு எட்டாது ஆனால் பார்க்க முடியுது.... பார்க்கவே அழகாக இருக்கு...."என அம்மு கூற,
"இப்படியே பைத்தியம் மாதிரி பேசிட்டு இருந்தால் உனக்கு போக போற ஸ்கூல்ல ஒரு ஃப்ரெண்ட்ஸ் கூட கிடைக்கமாட்டாங்க...."என சக்தி கூறி கொண்டே தூங்குகிறான்.
மறுநாள் காலை சக்தி மற்றும் அம்மு தனது பொருட்களை எடுத்து கொண்டு வீட்டை காலி செய்து தனது புது வீட்டிற்கு செல்கிறார்கள்.ஸ்டார் இன்ஸ்டிட்யூட் தூரமாக இருப்பதால் புது வீடு தனக்கும் தங்கைக்கும் பக்கம் என்பதால் அங்கு வந்திருக்கிறான் சக்தி.
தனது புதிய அபார்ட்மென்ட் உள்ளே நுழைந்து பார்த்த அம்மு மற்றும் சக்திக்கு வீடு மிகவும் பிடித்து போகிறது.
"இருங்க நானும் போய் பொருள் எல்லாம் எடுத்து வைக்கிறேன்...."என அம்மு கூற,
"இது நான் பாத்துக்கிறேன்...நீ போய் ரெஸ்ட் எடு...."என சக்தி கூறுகிறான்.
அப்பொழுது,"வணக்கம்.... உள்ள வரலாமா...."என கேட்டு கொண்டே சிவா மற்றும் மலர் உள்ளே வர,
"என்ன வேண்டும் உங்களுக்கு...."என சக்தி கேட்க,
"ரெண்டு பேர் வச்சுட்டு பொருள் இருக்கறது கஷ்டம் அதான் வந்தோம்"என சிவா கூற,
"நீங்க ரெண்டு பேரும் அண்ணாவோட புது காலேஜ் ஃப்ரெண்ட்ஸ்ஸா...."என அம்மு கேட்க,
"ஆமாம்....நாங்க உங்க அண்ணன் படிக்க போற கிளாஸ்மேட்ஸ்...என் பெயர் மலர்..
இவன் பெயர் சிவா.... இன்னைக்கி காலேஜ் லீவ் அதான் உங்களுக்கு உதவி பண்ண வந்தோம்...."என மலர் கூற,
"யாராச்சும் இப்போ உங்களை உதவி பண்ண கூப்பிட்டாங்களா...."என சக்தி சற்று கோபத்துடன் கேட்க,
"அப்போ எங்க உதவி வேண்டாமா..."என மலர் கேட்க,
"வேண்டும்....ரொம்ப தேங்க்ஸ்...."என அம்மு கூற,
சக்தியை வெறுப்பேற்றும்படி சிரிக்கிறாள் மலர்.
"சரி....வேலையை ஆரம்பிப்போம்...."என சிவா கூற,
அங்கு உள்ள அனைவரும் பொருட்களை இறக்கி வீட்டினுள் கொண்டு செல்கன்றனர். அப்பொழுது சக்தி ஒரு பெட்டியை பார்க்க, "இதுதான் அம்மு சொன்ன ஸ்பெஷல் சாப்பாடு பெட்டி....உள்ள என்ன இருக்குன்னு பார்ப்போம்..."என மனதினுள் எண்ணி கொண்டே அந்த பெட்டியை சக்தி திறக்க உள்ளே நூடுல்ஸ் பாக்கெட்டுகள் இருப்பதை பார்த்து,
"அய்யோ...நூடுல்ஸ் சாபம் இங்கேயும் தொடர போகுதா...."என எண்ணி கொண்டே பார்க்கிறான்.
"அம்மு....உனக்கு ஒரு மேஜிக் நான் காட்டவா...."என மலர் கேட்க,
"மேஜிக் எல்லாம் தெரியுமா உங்களுக்கு.... காட்டுங்க...."என அம்மு கூற,
"அப்படியே என்னை பாத்திட்டே இரு...."என மலர் கூறி கொண்டே தனது பவர் உபயோகப்படுத்தி அம்முவின் கண்ணுக்கு தெரியாமல் மறைய, அம்மு மலர் இங்கே இருக்கிறாள் என திரு திருவென பார்க்கிறாள். மறைந்து போன மலர் அம்முவின் பின்னால் நின்று தனது பவர் செயல்படுவதை நிறுத்தி அம்முவின் தோள்களை தொட, அம்மு திரும்பி பார்த்து அதிர்ச்சியில்,"சூப்பரா பண்ணறீங்க.... டிவில காட்டுவதை விட அருமையா பண்ணறீங்க..."என கூற,
"உனக்கு இது பிடிச்சு இருக்கா...."என மலர் கேட்க,
ஆமாம்....ரொம்ப...."என அம்மு கூறுகிறாள்.
"என்ன நடக்குது இங்க....இப்படித்தான் இவ பொறுப்பு இல்லாம பவர் use பண்ணுவாளா..."என பொருட்களை கைகளில் ஏந்தியபடி சக்தி பார்த்து கொண்டே,
"நீ இங்க விளையாட வந்து இருக்கேன்னா உங்க வீட்டுக்கு போய் விளையாடு..."என சக்தி கூற,
"சரி...சரி...."என கூறி கொண்டே வேலைகளை செய்து முடித்து விட்டு சிவா மற்றும் மலர் அங்கே இருந்து கிளம்புகிறார்கள்.
அன்று இரவு இருவரும் தனது புது வீட்டில் அமர்ந்து இரவு உணவு சாப்பிட்டு கொண்டு இருக்க தொலைக்காட்சியில் ஒரு பாடல் ஒலித்து கொண்டு இருக்கிறது.
"Wow.... ஷாலினி....."என தொலைகாட்சியில் பாடி கொண்டு இருக்கும் பெண்ணை பார்த்து அம்மு கூற,
"நல்லா பாடுறாங்க..."என சக்தி கூறுகிறான்.
"ஆமாம்....எனக்கு அவங்க வாய்ஸ் ரொம்ப பிடிக்கும்... பார்க்கவும் அழகாக இருக்காங்க.... நான் அவங்க fan..."என அம்மு கூறுகின்றாள்.
"அண்ணா என் ஸ்கூல் உன் காலேஜ் பக்கத்தில்தான்...நம்ம ஒண்ணா நடந்தே போலாம்....ஆனால் ஸ்டார் இன்ஸ்டிடியூட்....பேர் நல்லா இருக்குல்ல..."என அம்மு கூற,
"ஸ்டார் பேர் இருந்தால் போதும்..."என கூறி சக்தி சாப்பிட்டு முடித்து விட்டு தனது அறைக்கு சென்று துங்குகிறான்.
அம்மு சொன்னது போல் தனக்கும் அம்முவுக்கும் ஒரு அண்ணன் இருப்பது போல் சக்திக்கு கனவு வருகிறது.
"யார் இவர்...."என கனவில் இருந்து எழுந்து தன்னை தானே கேட்கிறான் சக்தி.

(தொடரும்........)
IMG-20241110-WA0009.jpg
IMG-20241030-WA0004.jpg
1000196207.jpg
1000196138.jpg
 
Top