• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,315
Reaction score
3,913
Points
113
நேரம் – 33 💜

“வாணி ப்ளீஸ்...” இத்தோடு காலையிலிருந்து பத்து ப்ளீஸ்களை ஏலம் விட்டுவிட்டான் பரிதி. இசைவாணி காதிலே வாங்காமல் அந்தப் பல்பொருள் அங்காடியில் வீட்டிற்குத் தேவையான பொருட்களைத் தேடியெடுத்தாள். அவள் ஒவ்வொன்றாக எடுத்துப் போட, பரிதி அந்த தள்ளும் வண்டியை நகர்த்தியபடியே அவளது நடைக்கு ஈடு கொடுத்தான்.

“சின்ன பையன் மாதிரி பிஹேவ் பண்ற பரிதி நீ. எனக்கென்ன தெரியும் மதியோட டேஸ்ட் பத்தி. ஒன்றரை வருஷம் அவளோட பழகியிருக்க. அவளுக்கு எது பிடிக்கும்னு நீதான் தெரிஞ்சு வச்சுக்கணும். என்கிட்டே கேட்டுத் தொல்லைப் பண்ணாத!” என்றாள் கண்டிப்பான குரலில். அவன் முகம் வாடியது.

கடந்த ஒன்றரை மாதமாக இளமதியிடம் தங்களது ஒப்பந்த திருமணத்தைப் பற்றி இன்றைக்கு சொல்லிவிடலாம், நாளைக்குத் தெரியப்படுத்தி விடலாம் என நாட்களைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தான் பரிதி. ஆனால் அவனுக்கு நல்லதொரு சந்தர்ப்பம் வாய்க்கவேயில்லை. அதோ இதவொன நாட்கள் உருண்டோடி அவள் பிறந்த நாளுக்கு இன்னும் ஓரிரண்டு நாட்கள் மட்டுமே இருந்தன.

இந்த விஷயத்தில் பதற்றத்தோடு இருந்தவனுக்கு அவளுக்குப் பரிசு வாங்க வேண்டும் என்பதே மறந்து போனது. இப்போதுதான் நினைவு வந்திருக்க, தன்னையே நிந்தித்துக் கொண்டவனுக்கு, பெண்களுக்கு எந்த வகை பரிசு பிடிக்கும் என்பதில் பெருங்குழப்பம் ஏற்பட்டது. உடை, நகைகள் என மனம் வரிசையாய் அடுக்க, அதிலும் அவளுக்குப் பிடித்த மாதிரி வாங்க வேண்டுமே என்ற கடுப்பு.

‘ஒரு பொண்ணை லவ் பண்ணிட்டு நான் படுற அவஸ்தை யாரும் படக்கூடாதுடா சாமி!’ என நொந்து கொண்டவன், இசைவாணியிடம் மதிக்குப் பரிசு தேர்வு செய்ய உதவி செய் எனக் கெஞ்சினான்.

இளநீரை இரும்பு போத்தலில் அடைத்து வைத்திருந்தனர். அதை எடுத்து உற்றுப் பார்த்து என்ன வகையான பதப்படுத்திகள் பயன்படுத்தியிருக்கின்றனர் என வாசித்தவள், திருப்தியாயிருக்கவும், அதைக் கூடையில் இட்டவளின் முகத்தைப் பார்க்காமல் பரிதி வேறுபுறம் திரும்பினான். அவன் கோபத்தை காண்பிக்கிறான் எனப் புரிந்ததும் இவளுக்கு சிரிப்பு வந்தது.

“பரிதி... பேசாம நான் சொல்ற ஐடியாவைக் கேளு. நான் பார்த்த வரைக்கும் ஷீ லவ்ஸ் ட்ரிங்க்ஸ். சோ, மார்க்கெட்ல இப்போ புதுசா எக்ஸ்பென்சீவா வந்திருக்க ட்ரீங்க் ஏதாவது வாங்கிக் கொடுத்து ப்ரபோஸ் பண்ணு. உடனே ஓகே சொல்லிடுவா!” என்றாள் கேலி என அறிய முடியாத பாவத்துடன்.
பரிதி அவளை முறைத்தான்.

“ப்ம்ச்... முறைக்காத பரிதி. சீரியஸா நீ என்ன வாங்கி கொடுத்தாலும் அவளுக்கு பிடிக்குமோ, பிடிக்காதோ? சரக்கு வாங்கி கொடுத்தா நல்ல ஜாலியா இருப்பா!” என்றவாறே மசாலாக்கள் இருந்தப் பகுதிக்குள் நுழைந்தாள் இசைவாணி.

“ம்ப்ச்... வாணி, உன்கிட்டே ஐடியா கேட்டது என் தப்பு. அவ குடிப்பாதான். அதுக்காக அவளுக்கு அது மட்டும்தான் பிடிக்கும்னு இல்ல. அவ வாழ்ந்த சிட்சுவேஷன் அவளை இப்படி அடாப்ட் பண்ணி வச்சிருக்கு. மத்தபடி ஷீ இஸ் அ வெரி குட் கேர்ள். மேரேஜ்க்குப் பிறகு அவளை நான் எனக்கு ஏத்த மாதிரி மாத்திக்குவேன்!” என்றான் தீவிரக் குரலில்.
அவனை நிமிர்ந்து ஆச்சர்யமாகப் பார்த்தாள் வாணி.

“குட் டிஷிசன் பரிதி. நான் சொல்லலாம்னு நினைச்சாலும் தேர்ட் பெர்சன் லைஃப்ல மூக்கை நுழைக்கிறது அநாகரீகம். சோ, அதை செய்யாம விட்டுட்டேன். பட், உனக்கே புரிஞ்சிருக்கு. வெரி குட். ஆல் தி பெஸ்ட் ஃபார் யுவர் லைஃப்!” என்றாள் புன்னகையுடன். அவனுக்கும் சிரிப்பு மலர்ந்தது.

“தேங்க் யூ!” இளமுறுவலுடன் அவனும் ஏற்றுக் கொண்டான்.

இறைச்சி பகுதிக்குள் வந்ததும், “வாணி... நான் போய் வாலை மீன் இருக்கான்னு கேட்குறேன். எப்போ கேட்டாலும் இல்லைன்னு சொல்றானுங்க!” எனப் புலம்பிக் கொண்டே பரிதி அகல, இவள் சற்றே உயரமாய் இருந்த தேன் போத்தலை எட்டி எடுக்க முயன்றாள்.

“ஹே இசை!” திடுக்கென முதுகில் மோதிய குரலில் இவளுக்கு ஒரு நொடி இதயம் அதிர்ந்தது போல. தன்னை சரிபடுத்திக்கொண்டு நிதானமாகத் திரும்பியவள், எதிரிலிருந்தவனைப் பார்த்து சம்பிரதாய புன்னகை பூத்தாள்.

“வாட் அ சர்ப்ரைஸ். எப்படி இருக்க இசை, சாரி ஆன்ட்டி ப்யூனரல் அப்போ என்னால வர முடியலை. சாரி ஃபார் யுவர் லாஸ்!” வெறும் வாய் வார்த்தைகாக கரிசனமாய் பேசியவனிடம் பதிலுரைக்காதவள், வெறுமனே தலையை ஆட்டினாள்.

‘நீ வருவதும் வராததும் ஒன்றுதான்!’ என அவள் பார்வை உணர்த்திற்று.

“அஜூ... ஹூ இஸ் திஸ் கேர்ள்?” அவனுக்ருகே வந்து நின்ற பெண்ணின் கையில் இரண்டு வயது குழந்தை இவளைப் பார்த்து விழித்தது.

“இசை...மீட் மை லைஃப் லக்கி, தென் என் பேபி!” என அவர்கள் இருவரையும் தோளோடு அணைத்து அறிமுகப்படுத்தியவனிடம் ஒருவித பெருமை நிரம்பி வழிய, இவள் அவர்கள் மூவரையும் உணர்வுகளற்றுப் பார்த்துப் பின் அமைதியாய் புன்னகைத்தாள்.

“ஹாய் லக்கி... ஆச்சுவலி நீங்க ரொம்ப லக்கி அர்ஜூன் உங்க லைஃப்ல வர!” அவனைப் பார்த்து உதட்டை வளைத்து இவள் கேலியாக கூறியதும் அவன் முகம் கறுத்தது. அந்தப் பெண்ணுக்கு இவளது உள்ளார்த்தம் புரியவில்லை.

“தேங்க் யூ இசை!” அவள் மலர்ந்து சிரித்தாள்‌.

“நீ போ லக்கி... என்ன வேணும்னு பாரு. நான் டூ மினிட்ஸ்ல வரேன்!” என மனைவியை அனுப்பியவன்,

“என்ன இசை... இன்னும் நீ மேரேஜ் பண்ணலையா? என்னை மறக்க முடியாம மேரேஜ் வேணாம்னு தட்டிட்டே இருந்தன்னு நியூஸ் வந்துச்சு!” என அவன் நக்கலாக கூற, இவள் அவனை அழுத்தமாகப் பார்த்தாள்.

தூரத்திலிருந்தே வாணியின் முகத்தைப் பார்த்திருந்த பரிதிக்கு எதுவோ சரியில்லை என உணர்த்த, விறுவிறுவென அவளருகே சென்றவன், “வானு... என்னாச்சு?” எனக் கேட்டு அவள் தோளில் கை வைக்கவும், அனிச்சையாக அவனருகே நகர்ந்து நின்றாள் அவள். உடனே அவன் கைகள் இவள் தோளைச் சுற்றி வளைத்தன. பரிதியைப் பார்த்ததும் அர்ஜூன் முகம் சிறுத்தது.

“இவரா... இவர்தான் அர்ஜூன். நான் உங்ககிட்டே ஏற்கனவே சொல்லிருக்கேன்லங்க?” பரிதியின் முகத்தைப் பார்த்து அவள் கேட்கவும், அவனுக்கு மண்டைக்குள் மடித்தது.

“ஹே அர்ஜூன்! நீங்களா? நானே உங்களை ஒரு தடவையாவது மீட் ப்ணணணும்னு நினைச்சேன். யூ க் நோ, நான் உங்களுக்கு பெரிய தேங்க்ஸ் சொல்லணும். நீங்க வேணாம்னு அன்னைக்கு விட்டுட்டுப் போகலைன்னா வானு மாதிரி ஒரு அருமையான பொண்ணு எனக்கு கிடைச்சிருப்பாளா? ஷீ இஸ் மை ஏஞ்சல், மை பிலவ்ட் வைஃப், லைஃப் எல்லாமே அவதான். நான்தான் இந்த உலகத்துலேயே லக்கியான பெர்சனா ஃபீல் பண்றேன்!” என்ற பரிதி அர்ஜூனை அணைத்து விடுவிக்க, அவன் முகத்தில் இப்போது ஒருவித ஒவ்வாமை என்னவோ ஒன்று வந்தமர்ந்தது. வாணி அதை திருப்தியாகப் பார்த்திருந்தாள்.

“கண்டிப்பா நீங்க ஒருநாள் வீட்டுக்கு வரணும். என் வைஃப் கையால உங்களுக்கு லஞ்ச் ரெடி பண்ணி நானே சர்வ் பண்றேன்!” என்ற பரிதி வாணியின் கரத்தோடு தன் கைகளை வெகு இயல்பாக கோர்த்து அருகே இழுத்துக்கொள்ள, அர்ஜூனுக்கு முகம் செத்துப் போனது.

“என் வைஃப் வெயிட் பண்றா. நான் வரேன்...” என அவன் விரைந்து அகல, வாணி அவனையே பார்த்திருந்தாள்.

“எக்ஸைப் பார்த்ததும் ஃபீலிங்கா வாணி?” பரிதி அவள் தோளை இடிக்கவும், “சீ...” என இவள் முகத்தை சுளித்தாள்.

“உண்மைலயே சீ தான்.. சீசீசீ... இவனுக்காகவா நாலு வருஷம் மூக்கை சிந்திருக்க நீ? இவன் என்னமோ ஸ்டாண்ட் அப் காமொடி ஷோல வர்ற ஜோக்கர் மாதிரி இருக்கான். ஆளும் மூஞ்சியும் ட்ரெஸூம்!” பரிதி முகம் போன போக்கைப் பார்த்த அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“தட்ஸ் குட் வாணி... உன் முகத்தைப் பார்த்தப்பவே ஏதோ சரியில்லைன்னு தோணுச்சு.
எனக்கு வந்தக் கோபத்துக்கு அவன் மூக்கை உடைச்சு விடலாம்னு பார்த்தேன். பட், பப்ளிக் ப்ளேஸ்ல ப்ராப்ளம் வேணாம்னு விட்டுட்டேன். இவனையெல்லாம் பார்த்தா யார்ரா கோமாளின்னு க்ராஸ் பண்ணிடணும் வாணி. பதிலே பேசாம இர்ரிடேட் பண்ணணும்‌. இக்னோர் திஸ் தவளை வாயன்!” என பரிதி இவள் சிரிப்பதை திருப்தியாய் பார்த்துவிட்டு அறிவுறுத்தினான்.

வாணி அவனையே சில நொடிகள் பார்த்திருந்தாள். அவள் முகத்தில் ஒருவித நிம்மதி படர்ந்தது. “தேங்க்ஸ் பரிதி!” என்றாள் அழகாய் புன்னகைத்து. அவன் தோளை குலுக்கினான்.

“ஓகே வா... உன் ஆளுக்கு பெர்த் டே கிஃப்ட் வாங்க போகலாம்!” என்றாள். பரிதியிடம் இன்ப அதிர்வு.

“நிஜமாவா வாணி? இப்படின்னு தெரிஞ்சிருந்தா அவனுக்கு இன்னும் நாலு டோஸ் கொடுத்திருப்பேன்!” என அவன் சிரிப்புடன் கூற, இருவரும் முதலில் ஒரு நகை கடைக்குள் நுழைந்தனர்.

“கப்பிள் ரிங் காட்டுங்க!” என்ற வாணி நிறைய மோதிரங்களைப் பார்த்து வேண்டாமென்றாள்.

“மேம், உங்க ஹஸ்பண்ட் அண்ட் உங்க நேமோட ஃபர்ஸ்ட் லெட்டர் என்னன்னு சொல்லுங்க. ஹார்ட் போட்டு அதுக்குள்ள லெட்டர்ஸ் வச்சு க்ஸடமைஸ் பண்ணித் தருவோம். ஆல்ரெடி எல்லா லெட்டர்ஸூக்கும் மாடல் வச்சிருக்கோம். பார்க்குறீங்களா?” கடை சிப்பந்தி ஆங்கிலத்தில் கேட்டதும், இவள் சரியென தலையை அசைத்து இளமதி, இளம்பரிதி என முணுமுணுத்து ஆங்கில எழுத்து ஐ என்றாள். அதற்கேற்ப மோதிரங்கள் காண்பிக்கப்பட்டன.

“வி கேன் கஸ்டமைஸ் ஆஸ் பெர் யூவர் விஷ் மேம்!” அவர் ஏதோ கூற வர, இசைவாணி ஒரு ஜோடி மோதிரத்தைக் கையில் எழுத்தாள். இரண்டு ஆங்கில எழுத்து ஐ சேர, அதன் மேலே ஒரு கிரீடம் இருந்தது. உள்ளே வெள்ளைக் கற்கள் மின்ன அதை எடுத்துப் பார்த்தாள். பரிதியும் அவளருகே வந்து அமர்ந்தான்.

“அந்த செக்ஷன்ல ஒன்னுமே கிடைக்கலை வாணி!” என அலுத்தவன், அவள் கையிலிருந்த மோதிரத்தை ஆர்வத்தோடு பார்த்தான்.

“ஹே... இது நல்லா இருக்கு. இதுவே ஓகே தானே? நம்ப வந்து டூ ஹவர்ஸாகப் போகுது வாணி!” என அவன் கூற, கடையில் வேலை பார்த்த தமிழ் பெண்ணொருவர் சிரித்துவிட்டார். வாணிக்கும் சிரிப்பு வந்தது. இவன் அவர்களைப் புரியாமல் பார்த்து அவள் காதைக் கடித்தான்.

“ம்ப்ச்... ஒரு பொண்ணோட ஷாப்பிங் வந்தா ஹாஃப் டேவே அவங்களுக்குப் பத்தாது பரிதி. அதுவும் உன் இளமதிக்கு பத்துமா?” என்றவள், அந்த மோதிரத்தை அவனிடம் கொடுத்தாள். அவனுக்கும் இளமதியோடு வெளியே சென்ற தருணங்கள் நினைவு வந்தன. இவனைக் கடை பொம்மை போல ஒரு ஓரமாய் அமர்த்திவிட்டு வாங்கிய பொருட்கள் மட்டுமல்லாமல், சுற்றியிருக்கும் அனைத்தையும் காணொளியாய் பதிவு செய்து நேரத்தைக் கடத்தி சலிப்பேற்றுவாள்.

“அப்படியா... மதி விஷயத்துல நீ சொல்றது கரெக்ட். பட் நீ அதுல எக்ஸெப்ட். உன் கூட நிறைய தடவை ஷாப்பிங் வந்திருக்கேனே. நீ என்னை ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சதில்லையே வாணி?” அவள் முகம் பார்த்தான் பரிதி.

“நான் மதி இல்ல பரிதி, வாணி. அவளுக்கும் எனக்கும் டிப்ரென்ஸ் உண்டு தானே?” எனக் கேட்டுவிட்டு, “சைஸ் ஓகேவானு போட்டு பாரு...” என மோதிரத்தை அவனிடம் நீட்டினாள். அதை வாங்கி விரலில் அணிந்தவனுக்கு நிரம்ப பிடித்திருந்தது.

“மதியோட சைஸ்க்கு இது சரியா இருக்குமா வாணி?” அவளிடம் சந்தேகம் கேட்டவனை யோசனையுடன் பார்த்தாள்.

“ஹம்ம்... கரெக்டாதான் இருக்கும்!” வாணி பதிலளிக்க, அதை வாங்கி படக்கென அவள் கையிலே அணிவித்திருந்தான் பரிதி.

“உன் சைஸ்தானே அவளுக்கும் இருக்கும். சோ, இது ஓகே தானே?” எனக் கேட்டவன், தங்கள் இருவரின் விரலையும் அருகருகே வைத்துப் பார்த்தான்.

“செம்மையா இருக்குல்ல வாணி?” எனக் கேட்டவன் நிமிர, இத்தனை நேரம் அவன் முகத்தையும் தன் விரலையும் மாற்றி மாற்றிப் பார்த்தவள், பின்னர் பார்வையை அவனிடமிருந்து விலக்கிவிட்டு, “ஹம்ம்... பில் போடு!” என உடனே அதைக் கழற்றிக் கொடுத்துவிட்டாள்‌. பணம் செலுத்துமிடம் சென்றவன், மோதிரத்தின் விலையைக் கேட்டு அதிர்ந்தான்.

“ஒரு லவ் ப்ரபோசலுக்கு இவ்ளோ செலவு பண்ணணுமா வாணி?” என புலம்பலோடுதான் அடுத்து என்னவென அவள் முகம் பார்த்தான்.

“எனக்கு ரிங் மட்டும்தான் தோணுச்சு. ரொமான்டிக்கா ஏதாவது நீயே யோசி பரிதி!” என்றவளின் பார்வை எதிரேயிருந்த கடையில் நிலைத்தது. கைத்தறி புடவைகள் விற்கும் ஸ்தாபனம் அது. அவள் உடன் வேலை பார்க்கும் தெலுங்கு பெண்ணிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் திருமணம் என்பதால் இவளால் செல்ல முடியாது. எனவே ஏதாவது வாங்கி கொடுக்கலாம் என யோசித்திருந்தாள்.

“பரிதி... எனக்கு கொஞ்சம் பர்ச்சேஸ் பண்ணணும். டைமாகும். நீ வீட்டுக்கு கிளம்பு!” இவள் கூற, மறுத்தவன் அவளோடு கடைக்குள் நுழைந்தான். இவள் புடவைகளைத் தேர்வு செய்ய, அவன் கடையை வேடிக்கைப் பார்த்தான்.

“இந்த சேரி நல்லாருக்கு வாணி. இது கூட ஓகே!” அவள் வேண்டாமென ஒதுக்கியதையெல்லாம் எடுத்து வந்து காண்பித்தான்.

அவனை முறைத்தவள், “அரைமணி நேரம் என்னை டிஸ்டர்ப் பண்ணாம இருந்தா நம்ப கிளம்பிடலாம் பரிதி...” என அவனை அதட்டிவிட்டு, அடுத்த பத்து நிமிடத்தில் மெல்லிய பச்சை நிறத்தில் ஒரு புடவையைத் தேர்வு செய்தாள்.

“ஆமா... யாருக்கு இந்த சேரி? உன் கலருக்கு இதெல்லாம் செட்டே ஆகாது வாணி!” பரிதி அவள் நிறத்தை வைத்துக் கூறினான்.

“ஓஹோ... அப்போ என் கலருக்கு என்ன செட்டாகும்னு ஐயாவுக்கு தெரியுமோ?” கேலியாக கேட்டாள் வாணி.

“ஏன் இல்ல... ஒன் மினிட்!” என்றவன் எங்கோ சென்று கையில் ஒரு புடவையோடு வந்தான். மயிலைப் போல நீலமும் பச்சையும் கலந்த புடவைக் கண்ணைக் கவர்ந்தது.

“எப்படி என் செலக்ஷன்?” இவன் புருவம் தூக்க,

“நாட் பேட். பட் என் ஸ்கின் டோனுக்கு இதெல்லாம் ஒத்து வராது. லைட் கலர்ஸ்தான் ஒத்து வரும்!” அவள் கூற, இவன் மறுத்து தலையசைத்தான்.

“உன்னோட ப்ரௌன் ஸ்கின் டோனுக்கு இது ஆப்டா இருக்கும். இந்த சேரி இன்னும் உன்னை அழகா காட்டும் வாணி. ஐ யம் ஷ்யூர்!” என்றவன், “இதை தனியா பில் போடுங்க!” என்றான் ஊழியரிடம். அவனைக் கேள்வியாகப் பார்த்தாள் இவள்.

“இல்ல... இதுவரைக்கும் நான் உனக்குன்னு எதுவுமே வாங்கிக் கொடுத்தது இல்லைல வாணி. அதான் இதைப் பார்த்ததும் வாங்கிக் கொடுக்க தோணுச்சு!” அவன் விளக்க, இவள் வேண்டாமென தலையசைத்தாள்.

“நீ எதுக்கு மேன் எனக்கு வாங்கித் தரணும்.‌ என்கிட்டே காசிருக்கு. நானே பே பண்ணிக்கிறேன்!” என இவள் பணம் கொடுக்க, பரிதி விடவில்லை.

“இப்போ நீ பே பண்ணா இந்த சேரியை நான் கட்ட மட்டேன். இதை எடுத்துட்டுப் போய் உன் மதிகிட்டே நீயே கொடுத்துடு!” அவள் கண்டிப்புடன் கூற, அவன் முகம் வாடியது.

“ஏன்...நான் வாங்கி கொடுத்தா நீ வாங்கிக்க மாட்டீயா வாணி? திஸ் இஸ் டூ மச்!” அவன் ஆதங்கப்பட,

“முதல்ல எனக்கு சேரி வாங்கி கொடுக்க நீ யாரு? நீ கொடுத்ததை எதுக்கு நான் வாங்கிக்கணும்?” என சூடாய் கேட்டவள், பணத்தை செலுத்திவிட்டு வெளியே நடந்தாள். பரிதி அவள் பின்னே சென்றான்.

“நான் உனக்கு ஒரு நல்ல ஃப்ரெண்ட் இல்லையா வாணி?” முதலில் தம்பி எனக் கேட்க வந்து பின்னே மாற்றினான்.

“இல்லவே இல்ல. நான் உன்னை என்னைக்கும் ப்ரெண்டாலாம் பார்த்தது இல்ல பரிதி. அக்ரீமெண்ட் முடிஞ்சதோட நம்ப ரிலேஷன்ஷிப் ஓவர். உனக்கும் எனக்கும் அதுக்கப்புறம் என்ன காண்டாக்ட் இருக்கப் போகுது?” அவள் இரக்கம் இல்லாமல் பேசுவது போல தோன்றிற்று இவனுக்கு. ஒரு மகிழுந்தில் இருவரும் வீட்டை நோக்கிப் பயணமாகினர். காலையிலிருந்த இயல்பு இருவரிடமும் தொலைந்து போயிற்று.

மறுநாள் பரிதியே வழிய சென்று அவளிடம் பேச, வாணியும் இயல்பாக பதிலளிக்க, அந்த இறுக்கம் தொலைந்து போனது. மதியிடம் எப்படி பேச வேண்டுமென ஒருமுறை வாணியிடம் ஒத்திகைப் பார்த்தான் பரிதி.

“ரொம்ப இம்மெச்சூர்டா இருக்கு பரிதி. பெட்டரா ட்ரை பண்ணு!” அவள் அவனிடம் உள்ள நிறைகுறைகளைத் திருத்தினாள்.

“ஒரு டைம் உன்கிட்ட ப்ரபோஸ் பண்ணிக்கவா வாணி. ப்ளீஸ்!” அவன் கெஞ்ச, வாணி அவனுடைய அலைபேசியிலிருந்த இளமதியின் புகைப்படத்தை எடுத்து மேஜை மீது வைத்தாள்.

“ஃபோட்டோ பார்த்து கான்பிடன்டா பேசு பரிதி. அவ உன்னை ரிஜெக்ட் பண்ண மாட்டா. நம்ப மேரேஜ் விஷயத்தை மட்டும் நெவர்ஸாகாம சொல்லிடு. பெருசா ப்ராப்ளம் வராதுன்னு நம்பு. அப்போதான் நீ ரிலாக்ஸா இருக்க முடியும்!” என அவன் தோள் தட்டினாள் வாணி.

மேலும் ஓரிரு நாட்கள் ஓடிவிட, மதியின் இருபத்து ஐந்தாவது பிறந்தநாள் என்பதால் அவளுடைய அத்தை, மாமாவின் வீட்டிலே சிறிய விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். மதியின் பெற்றோர்கள் இந்தியாவில் வசிக்கின்றனர். அவளது அத்தைக்கு குழந்தை இல்லை என்பதால் அவளுடைய பதினைந்து வயதில் அவர்களுக்கு தத்துப் பிள்ளையாக இங்கே புலம்பெயர்ந்திருந்தாள்‌.‌

படிப்பு முடிந்து வேலை, இங்கிருக்கும் வாழ்க்கை முறை என அவளுக்கு வெகுவாகப் பிடித்துவிட, வருடத்திற்கு ஒருமுறை இந்தியா சென்று வருவாள். அவள் வேலை பார்க்கும் இடம் அத்தை, மாமா வீட்டிலிருந்து சற்றே தூரம் என்பதால் தோழிகளுடன் அறையெடுத்து தங்கியிருக்கிறாள். வாரத்திற்கு ஒருமுறையாவது அவர்களைச் சென்று பார்த்துவிட்டு வருவாள்.

பரிதி காலையிலே எழுந்து குளித்து இசை வாணி தேர்வு செய்த உடையை உடுத்திக் கிளம்பினான். தலையை இரண்டு முறை கலைத்துவிட்டு வாரி, முகத்திற்கு ஏதேதோ பூசி, வாசனை திரவியத்தை தலை முதல் கால் வரை தெளித்துவிட்டு வந்தான் பரிதி.

“ஆல் தி பெஸ்ட் பரிதி!” வாணி கூறவும், அதை சிரிப்போடு என்றவன் முருகன் படம் முன்பிருந்த விபூதியை எடுத்துப் நெற்றியில் பட்டையடிக்க முனைய, அதை தட்டிவிட்டாள் வாணி.

“ப்ம்ச்... நீ போட்டிருக்க காஸ்ட்யூமுக்கு இந்த பட்டை நல்லாருக்காது பரிதி. இப்படியே அழாகாத்தான் இருக்க. கிளம்பு!” என விரட்டிவிட்டாள் வாணி.

மாலை அவள் வேலை முடிந்து வரும்போது பரிதி நடு கூடத்தில் நீள்விருக்கையில் படுத்துறங்கிக் கொண்டிருந்தான். இவளுக்கு ஆச்சர்யம் தாளவில்லை‌. எப்படியும் இன்றைக்கு இரவு ஊரைச் சுற்றி குடித்து கும்மாளம் போட்டுவிட்டு தாமதமாய் வருவான் என அவள் எண்ணியிருக்க, இவன் என்னவென்றால் இப்படி தூங்குகிறானே என யோசனையுடன் உடை மாற்றி குளம்பியைத் தயாரித்தாள்‌.‌

அதன் வாசனை நாசியை நிரட, ஒரு கையால் முகத்தை தேய்த்து கொட்டாவி விட்டபடியே அவனும் சமையலறைக்குள் நுழைந்து, “எனக்கொரு காஃபி ப்ளீஸ் வாணி!” என்றான்.

“ஹம்ம்...” என்றவள், “என்னாச்சு?” எனக் கேட்டாள்.

“ஊத்திக்கிச்சு!” என கட்டை விரலை தலைகீழாய் காண்பித்தவன், இவள் செல்லும் போதே இளமதி அழைத்து இவனை வர வேண்டாமென தடுத்துவிட்டவள், அவளுடைய மாமாவிற்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டுவிட்டது எனப் பகிர்ந்ததை இவளிடம் கூறினான் பரிதி.

“சரி விடு.‌.. இன்னொரு நாள் சொல்லிக்கலாம்!” என்றுவிட்டு அவனுக்கொரு கோப்பையில் குளம்பியைக் கொடுத்தாள். அவன் முகம் சோர்ந்து தெரிந்தது.

“லஞ்ச் சாப்பிடலையா நீ?” இவள் கேட்டதும், அவன் உதட்டைப் பிதுக்க, ரொட்டி பாக்கெட் ஒன்றைப் பிரித்து தட்டிலிட்டுக் கொடுத்தாள். குளிர்சாதன பெட்டியிலிருந்த அணிச்சலையும் எடுத்து வந்து வைத்தாள்‌. பரிதி அவளை சில நொடிகள் உற்றுப் பார்த்துவிட்டு அமைதியாய் உண்டான்.

“போதுமா? இளநீர் இருக்கு பாரு. இதையும் குடி!” என்றவள் அவன் முகம் பார்த்து பரிமாறினாள்.

அவன் உண்டு முடியட்டும் எனக் காத்திருந்தவள், “நாளான்னைக்கு சீக்கிரமா எழுந்திரிச்சு பரிதி‌. என்னை டென்ஷன் பண்ணக் கூடாது. ஃபைனல் ஹியரிங். அட்டென் பண்ணாதான் டைவர்ஸ் கிடைக்கும்!” கண்டிப்புடன் இவள் கூறியதும், அவன் தலையசைத்து ஏற்றான்‌.

இரவு உறங்க செல்லும் முன்பு இளமதியிடம் பேசி அவள் மாமாவின் உடல்நிலையைப் பற்றித் தெரிந்து கொண்டான். அவளைப் பார்க்காதது வருத்தமாயிருக்கிறது என இவன் கூற, அவளுக்கு உருகிப் போனது.

“விடு இளா... மாமா வீட்டுக்கு போனதும் நம்ப மீட் பண்ணலாம், பார்டி பண்ணலாம்!” என்று அவள் தேற்றினாள்.

மறுநாள் முடிந்து அதற்கடுத்த நாள் காலை ஏழுமணிக்கு முன்பே எழுந்து தயாராகி உட்கார்ந்தான் பரிதி. இசைவாணி கூட குளித்துவிட்டு அமர்ந்தாள். வழக்கறிஞர் இவர்களுக்கு அழைத்துப் பேசினார். இந்திய நேரம் பன்னிரெண்டு மணிக்கு இவர்கள் காணொளி அழைப்பில் இணைய வேண்டும். ஐந்து நிமிடத்திற்கு முன்பே இசைவாணி மடிக்கணினியுடன் தன்னறை கட்டிலில் அமர்ந்திருந்தாள். பரிதியும் அவளுடன்தான் இருந்தான்.

நீதபதி அழைப்பில் இணைய பத்து நிமிடங்கள் எடுத்தது. பின்னர் இறுதியாக இருவரிடமும் விவாகரத்து செய்து கொள்ள சம்மதமா என அவர் கேட்க, “சம்மதம் மேடம்!” என்றாள் இசைவாணி.

பின்னர் அவளுக்கு ஜீவனாம்சம் எதுவும் வேண்டுமா என அவர் கேட்க, இவள் மறுத்தாள். அடுத்து பரிதியிடம் சில கேள்விகள் கேட்டார். அவன் பதிலளிக்கும் நேரம் சரியாய், “இளா...” என்ற மதியின் குரலில் இருவரும் திடுக்கிட்டுத் திரும்பினர். இளமதி உக்கிரமாக அவர்களைப் பார்த்திருந்தாள்.

பரிதியை வாணியின் அறையில் அவளோடு பார்க்கவும் இவளுக்கு கண்மண் தெரியாத கோபம் பொங்கிற்று. “அவ ரூம்ல என்னடா பண்ற நீ?” இவள் மீண்டும் கத்த,

நீதிபதி அங்கே ஏதோ பேச, “மதி ப்ளீஸ்... ரொம்ப இம்பார்டென்ட் கால். ஒரு ஃபைவ் மினிட்ஸ் வெளிய வெயிட் பண்ணு!” என்றான் அவளைக் கண்டனத்துடன் பார்த்து.

அவளுக்கு சினம் பெருக, அவர்களருகே வந்து மடிக்கணினியை இழுத்து கீழே தள்ளிவிட்டிருந்தாள். அவளது செயலில் வாணி பதறிப் போய் அதைக் காப்பாற்ற,

“அறிவிருக்கா மதி உனக்கு? டீசென்சி தெரியாதா? ஏன் இப்படி பிஹேவ் பண்ற? ஃபைவ் மினிட்ஸ் உன்னால வெயிட் பண்ண முடியாதா?” எனக் கேட்டவன் தரதரவென அவளை இழுத்துச் சென்று கூடத்தில் விட்டுவிட்டு, “பத்து நிமிஷம் சத்தம் போடாம உக்கார்ந்திருக்கணும்!” என உறுமி அறைக் கதவை அறைந்து சாற்ற, இவளது கண்கள் சிவந்து போயின. பிறந்தநாள் அன்று தன்னைப் பார்க்க முடியவில்லை என ஏங்கியவனுக்
கு இன்ப அதிர்ச்சி கொடுக்க எண்ணி வந்தவளுக்கு சினம் தலைக்கேற, அடைத்தக் கதவை வெறுப்போடு பார்த்துவிட்டு விறுவிறுவென வெளியேறினாள் இளமதி.

தொடரும்...























 
Well-known member
Messages
525
Reaction score
380
Points
63
Vani parithi ah love panralo nu enna ku thonuthu sis just ava couple ring select pannathu ah vachi sollala ava avan kita rombha strict ah irukirathathum avan oda varthai hurt aagi kanneer vidurathu yen na nesam nu onnu irundha than avanga varthai nama ku kaneer ah kudukum.
 
Top