5
அந்த வார இறுதி முழுதும் ஜெரமியும் நேயாவும் பேசிக்கொள்ளவே இல்லை.. ஒரு மாதிரி மனதை அடைத்துக்கொண்ட உணர்வுடன் தான் திங்கள் அன்று காலையில் அவள் ருத்ரா வீட்டுக்கு வந்தாள்.
காலை உணவாக அவனுக்கு ஒரு வகை ப்ரோட்டீன் தோசை, காரச்சட்னி போல செய்திருந்தாள். ருத்ரன் சாப்பாட்டு மேசையில் டாப்பை வைத்து வீடியோ காலில் பேசிக்கொண்டே சாப்பிட்டு கொண்டிருந்தான். மறுபக்கம் ஆதவன் இருந்து லாப்டாப்பில் ஏதோ செய்து கொண்டிருந்தான்.
போனில் மறுமுனையில் இருந்தவன் இவளுக்கும் பரிச்சயமான பிரபலமான பெயர் கொண்ட கிரிக்கெட் வீரன் தான்.
அவர்களின் பேச்சை கேட்க கூடாது என்று நினைத்தாலும் ஸ்பீக்கரில் போட்டிருந்த காரணத்தால் கேட்கத்தான் வேண்டியிருந்தது,
“நேத்து கோச் சொன்னார்.. உன்னுடைய ரிப்போர்ட்டில் சரியாகும் என்று இன்னும் டாக்டர்கள் நம்பிக்கை கொடுக்கவில்லையாமே.. என்னடா இது? ஏன்டா இப்படி இருக்க..” மற்றவன் கேட்டான்
அவனே இதை நினைத்து ஒழுங்காக சிகிச்சைக்கு கூட ஒத்துழைக்காமல் மன அழுத்தத்தில் இருக்கிறான்.. சுகம் விசாரித்து பேசும் போது இதை நினைவு படுத்தலைன்னா தான் என்ன? சென்ஸ் இல்லையா இதுங்களுக்கு என்று நேயா எரிச்சலாய் நினைத்துக்கொள்ள
“என்ன செய்யணும்?” ருத்ரேஷ்வர் அமர்த்தலாய் திருப்பி கேட்டான்.
“டாக்டர் சொல்றதை கேட்டு நடக்க வேண்டியது தானே..டாக்டரையே வேணாம் சொல்லிட்டியாம்” அவன் என்ன சொல்வது என்று தெரியாமல் சமாளித்து வைத்தான்
ப்ச் என்ற ருத்ரன் மாட்ச் எப்படி போச்சு? என்று கேட்டான்
நீ பார்க்கலையா..? மற்றவன் குரலில் பெரிய ஆச்சர்யம்.. இப்போது நினைக்கும் போது நேயாவுக்குமே அது ஞாபகம் வந்தது.. இவள் இங்கே பணி புரிய ஆரம்பித்து இத்தனை நாளில் ருத்ரேஷ்வர் கிரிக்கட் பார்த்ததாய் ஞாபகமே இல்லை.
“பார்க்கலை.. தூங்கிட்டேன்..”
இதை விட ஏன்டா போன் பண்ண..போனை வைன்னு எடுத்ததுமே திட்டியிருக்கலாம்! என்று இவள் நினைத்து கொள்ள மறுமுனையில் இருந்தவனுக்கும் அது புரிந்ததோ என்னமோ
“சரிடா நீ ரெஸ்ட் எடு..சீக்கிரம் டீமுக்கு திரும்பி வர்ற வழியை பார். டீ சீரிஸில் நீ இருக்கணும்” என்றான்
“பார்க்கலாம்.. “
அவன் ஒரு வழியாய் வைத்து விட அவ்வளவு நேரமும் லாப்பே கவனமாய் இருந்த ஆதவன் நிமிர்ந்து “உனக்கு சரியாயிடக்கூடாதுன்னு ஆசைப்படற ஆட்கள்ல இவனும் ஒருத்தன்” என்றான் அயர்வு மிகு குரலில்
ஒருத்தன் போக இன்னொருத்தன் ஆரம்பிச்சிட்டான் என்று இங்கே நேயா நினைத்துக்கொள்ள ஆதவன் பேச்சில் ருத்ரனின் இதழ்கள் வளைந்தன..அவன் ஏதும் சொல்லவில்லை.. இயந்திரமாய் சாப்பிட்டு கொண்டிருந்தான்.
“ போன சீரீஸ்ல உன்னோட இடத்துல இவன் தான் இறங்கினான்”
“ஹ்ம்ம்
சாப்பிடும் நேரம் இந்த ஆதவனுக்கு இது தேவையா..நேயாவுக்கு கடும் கோபம் முளைத்தது..அவளே கஷ்டப்பட்டு சமைத்து அவனை சாப்பிட வைக்க போராடும் போது நடுவில் புகுந்து எல்லாரையும் டென்ஷன் பண்ணி ஆட்டையை கலைத்து விட்டால் கோபம் வராதா?
“என்னடா சம்பந்தமே இல்லாத போல் பதில் சொல்ற.. சீக்கிரமா குணமாகனும்டா.. கொஞ்சம் குவாப்பரேட் பண்ணு..நான் யார்டா? சம்பந்தமே இல்லாம நான் ஏன் ஓடிட்டு இருக்கேன்.. சொல்லு?” என்று அவன் உணர்சிவசமாய் கேட்க
அதை தான் நானும் கேட்கிறேன் என்று அவள் போக்கில் நினைத்து விட்ட நேயாவுக்கு உண்மையிலேயே சிரிபை அடக்க முடியவில்லை வெடித்து சிரிது விட்டாள்.. ச்சே க்ளையன்டின் தனிப்பட்ட விஷயங்களை கேட்பதே தவறு இதுல சிரிக்க வேற செஞ்சுட்டோமே என்று முகம் சிவந்து அவள் பின் வாசல் வழி வெளியேறி ஒடுவந்தற்குள் ஆதவன் வாசலுக்கு வந்து விட்டான்..
“இப்போ எதுக்கு நீங்க சிரிச்சீங்க..” அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக்கொண்டிருந்தது.
“அ,,,அது வேற..” என்று இவள் சமாளிப்பதற்குள்
“எனக்கு தெரியாதுன்னு நினைக்கறயா? உனக்கு என்னை பார்த்தாலே நக்கல்! பாதர் சொல்லிட்டார்னு இவன் உன்னை வீட்டுக்குள்ள விட்டிருக்கான்.. சுத்த வேஸ்ட் நேத்து டாக்டர் அவனுக்கு தோள் காயத்தில் கொஞ்சம் கூட முன்னேற்றம் இல்லைன்னு சொல்லிட்டார்.. அதுக்கு சரியான போஷாக்கு கொடுக்கலைன்னு தானே அர்த்தம்? பண்ண வந்ததை பண்ணாம இப்படி மத்தவங்க விஷயத்தை கேட்டு சிரிக்க இங்க வந்தயா?” எத்தனை நாள் சலிப்போ அதை காட்ட ஒருத்தி கிடைத்து விட்டாள் என்று நினைத்தானோ என்னமோ விடாமல் முழங்க
ஆமாம் அவன் சாப்பிடாததற்கு நான் தான் காராணம் என்று நொடித்துக்கொண்டு மௌனமாய் ஆதவனை நிமிர்ந்து பார்த்தாள் நேயா..
“என்ன பார்க்கற.. தப்பை சொன்னா முறைக்க வேண்டியது.. பாதரை பிடிச்சு அவங்களை பிடிச்சு உள்ளே வர தெரியுதுல்ல..வேலையையும் கொஞ்சம் செய்யணும்னு தெரியாதா?” என்று அவன் பொங்க இழுத்துபிடித்த பொறுமை பறந்தே விட்டது அவளுக்கு
“சார்.. அதுக்கு நான் காரணம் இல்லை.. தேவை இல்லாமல் என்னையும் என் வேலையையும் பேசற வேலை வச்சுக்க வேணாம்” என்று அவள் இறுக்கமாய் சொல்ல
“அப்போ யார் காரணம் நானா?” என்று எகிறினான் ஆதவன்
நீரே கூறிவீட்டீர்.. அவள் மௌனமாய் ஆதவனையே பார்க்க
பேசும்மா..” என்று நக்கலாய் அவளுக்கு மேடை போட்டே கொடுத்து விட்டான் ஆதவன்
“இங்க பாருங்க சார்..என் கிளையன்ட்டின் தனிப்பட்ட விவகாரங்கள்ள நான் அபிப்ராயம் சொல்லக்கூடாது.. ஆனாலும் என்னை குற்றவாளி ஆக்குனதாலேயும் என் வேலை இந்த பிரச்சனையால் பாதிக்கபடுறதாலயும் நான் இதை சொல்றேன்.. எல்லாரையும் வீட்டுக்கு வர வேண்டாம்னு விலக்கி வச்ச அதே சட்டத்தை உங்களுக்கும் போட்டிருந்தா நல்லா இருந்திருக்கும்” மனதில் அடக்கி வைத்ததை அவள் கொட்டியே விட
அவள் அப்படி சொல்வாள் என்று எதிர்பார்க்காத ஆதவன் முகத்தில் அதிர்ச்சி.. திரும்பி ருத்ரனை பார்த்தால் அவன் எனக்கு உங்கள் ரெண்டு பேரையும் யாரென்றே தெரியாது என்பது போல அந்த பன்னீர் தோசையை சாப்பிட்டு கொண்டிருந்தான். அதில் இன்னும் முகம் கறுக்க பேசக்கூட வாய் வராமல் ஆதவன் நின்றதை பார்க்க கொஞ்சம் பாவமாகவும் இருந்தது.
“நான் ஏன் அப்படி சொல்றேன்னு உங்களுக்கு சொல்லணும்ல.. ருத்ரன் சார் காலைல நல்லா தான் சாப்பிடுவார்..பத்து மணிக்கு மேல் நீங்க வந்து அவரை டென்ஷன் பண்ணி நீங்களும் டென்ஷனாகி போனதும் மதிய உணவு சாப்பிடாமலே கிடக்கும்.. அதன் பிறகு ஜூஸ் ஸ்நாக் எதுவும் சாப்பிடமாட்டார்..இது தான் வழக்கமா நடந்துட்டு வருது..”
“எப்படி? நா.. நான் நான் நான் அவனை டென்ஷன் பண்றேனா..அவன் எனக்கு எத்தனை வருஷ பிரன்ட் தெரியுமா? ஆதவனின் வார்த்தைகள் துண்டு துண்டாய் வந்தன.
“நான் வெளியாள் சார்.. நான் பார்த்த வரை நீங்க டீமோட முகாமையாளர்களோட பிரதிநிதியா தான் தெரிஞ்சீங்க..ருத்ரன் சாருக்கு பிரன்ட்டா எனக்கு தெரியவே இல்லை.. எனக்கு புரியுது நீங்க நல்லதுக்கு தான் சொல்றீங்க..ஆனா அது அப்படி வரலை சார்.. உங்களால அவர் மட்டுமில்லை..நான் வேலு அண்ணா, சுபாக்கா எல்லாருக்கும் ப்ரெஷர் ஆகுது.. என் வேலையை தவிர எதையும் நான் பேச மாட்டேன் ஆனா பிரச்சனை என்னன்னு தெரிஞ்சும் அதை தீர்க்காம அரை குறையா வேலை செய்ய மனசு வரல...ருத்ரன் சார் குணமாக வேண்டிய நிலைல இல்லைன்னா நான் இதை பேசியே இருக்க மாட்டேன்.. என்னை கேட்டா ஒரு வாரம் ப்ரேக் எடுங்க. அது எல்லாருக்குமே நல்லது.. சும்மா என்மேல உங்க கோபத்தை காட்டுற வேலை வச்சுக்காதிங்க..”
அடிபட்ட முகபாவனையோடு நின்றவனை பார்க்க பாவமாய் தான் இருந்தது..ஆனால் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு இல்லையா..சிரிச்சது தப்பு.. ஆனா மீதியெல்லாம் அவரே கேட்டு வாங்கிக்கிட்டார் என்று தோளை குலுக்கி விட்டு அவள் போய்விட்டாள்.
இவ்வளவு நடந்தும் ருத்ரன் நேயாவை கண்டிக்காமல் மௌனமாய் சாப்பிட்டு கொண்டிருப்பதிலேயே இன்னும் காயப்பட்டவன் “நான் நான் தே..தேவைன்னா போன்ல பேசறேன்” என்று சொல்லி விட்டு கதவை சாத்திக்கொண்டு போய்விட்டான்..
பேசியதெல்லாம் பேசி சண்டை போட்டாயிற்று..ஆதவன் போனதும் தான் பகீரென்றது..ருத்ரன் இதை எப்படி எடுத்து கொள்ளப்போகிறான்? என்று பயந்தபடியே வெளியே வந்து பார்த்தால் அவன் யாரிடமோ போன் பேசிக்கொண்டிருந்தான் இவளை கண்டு கொண்டதாக கூட காண்பித்து கொள்ளவில்லை..
அவன் எதுவுமே சொல்லாவிட்டாலும் இத்தனை நாளும் வேலைக்கு போகும் இடத்தில வேலையோடு மட்டும் நின்று விடுவதை தவம் போல செய்தவள் இன்றைக்கு இப்படி அவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைத்து விட்டோமே என்று குற்ற உணர்ச்சியோடேயே தான் சுற்றிக்கொண்டிருந்தாள்.
ஆனால் அன்றில் இருந்து ஆதவன் அங்கே வராமல் எல்லாம் இருக்கவில்லை..வருவான். இறுகிய முகத்துடன் கொலைகாரியிடம் பேசுவது போல பக்கப்புற வாசல் வழி வந்து “சாப்பிட்டானா???” என்று நேயாவிடம் கேட்பான்.
அவள் ஆம் என்று தலையசைத்ததும் அதே இறுக்கத்துடன் விடு விடுவென போய்விடுவான்..
இன்றைக்கு காலை ருத்ரனுக்கு புது தெரப்பிஸ்ட்டை புக் செய்திருப்பதாகவும் ஏதும் உதவி ருத்ரன் கேட்டால் செய்யும்படியும் கூடுதல் செய்தியை சுவரை பார்த்து சொல்லி விட்டு போனான்.
“அச்சோ இந்த மனுஷன் நண்பன் மேல ரொம்ப பாசக்காரரா இருந்திருக்கார் போலயே நம்ம தான் தேவையில்லாமல் பொங்கி அவர் மனசை உடைச்சிட்டோமோ என்று நேயா தான் கடுமையான குற்ற உணர்ச்சிக்கு ஆளானாள்.
ஆனால் அவனுடைய பாசத்துக்கு உரியவன் மௌனமாக தானே இருக்கிறான். அவன் ஏதும் சமாதானம் செய்யவோ நேயாவை கண்டிக்கவோ இல்லையே..அப்போ அவனும் அதை ஆமோதிக்கிறான் என்று தானே அர்த்தம்.
ஆதவன் வந்து ப்ரெஷர் ஏற்றாததாலோ என்னமோ பெரும்பாலும் கீழேயே சுற்றிக்கொண்டிருந்தான் ருத்ரன்.. அன்றைக்கு காலை முழுக்க யூடியூப் வீடியோஒன்றை வைத்துக்கொண்டு கிட்டார் கற்று கொள்ள முயற்சி செய்து கிச்சனில் இருந்த நேயாவுக்கு காதே கேட்காமல் ஆக்கி விட்டான்.
அந்த கிட்டார் சிவனே என்று மேலே தானே இருந்தது..நீ தான் வேண்டாத வேலை பார்த்த.. தேவையா உனக்கு? இனிமே இப்படி அதிகப்பிரசங்கி வேலை பார்ப்பியா? காது போச்சே.. என்று தன்னை தானே திட்டிக்கொண்டே வேலை பார்த்துகொண்டிருந்தாள் நேயா..
இப்போதெல்லாம் மதிய உணவு அவள் கொடுத்ததை சாப்பிடுவான்.. காய்கறிகளை தான் குழந்தைகளுக்கு செய்வது போல மாறுவேஷத்தில் கொடுக்க வேண்டியிருந்ததே தவிர நேயாவுக்கு வேறேதும் பிரச்சனை அவனால் வரவில்லை..
மாலை இரண்டு மணியிருக்கும்.. மேலே ரெஸ்ட் எடுக்கிறான் என்று நினைத்துக்கொண்டிருக்க நேயா என்ற சத்தம் வந்தது. ரெண்டு நாளாய் ஒரு வார்த்தை கூட பேசியிராதவன் அழைக்கவே கொஞ்சம் பதட்டமாகவே தான் படியேறிப்போனாள் நேயா.. ட்ரின்க் ஏதும் வேணுமோ? கேட்டால் என்ன கொடுக்கலாம்? என்று யோசித்துக்கொண்டே மேலே போனாள்.
நெற்றிச்சுருக்கத்தோடு தன்னுடைய பிரமாண்டமான வாக் இன் க்ளாசெட் முன்னே நின்று கொண்டிருந்தான் ருத்ரேஷ்வர்.
சார்..என்றபடி தயக்கமாய் திறந்திருந்த கதவை தட்டி தலையை உள்ளே நீட்டினாள் நேயா
உள்ளே வா. “ அதே கடுமையான குரல்
கேட்க தயங்குவானோ என்று எண்ணி அவளே “என்ன சார் ஏதாவது குடிக்க வேணுமா? சாப்பிட்டு இரண்டு மணி நேரம் ஆயிடுச்சு தானே..ஸ்நாக்ஸ் மாதிரி ஏதாவது வேணுமா” என்று கேட்டு விட்டாள்
“அதெல்லாம் வேணாம்..என்னோட ப்ளூ ஷர்ட்டை காணோம்” என்றானே பார்க்கலாம்
காதை தேய்த்து விட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானாள் நேயா..அதை எதுக்கு என் கிட்ட சொல்றான்?
எந்த ப்ளூஷர்ட் சார்? சொல்லுங்க..நான் சுபாக்கா வரும் போது கேட்கிறேன்” என்று அலுவலக தொனியிலேயே சமாளிக்க முயல
“நேத்து காலைல போட்டிருந்தேன். அதை காணோம்..எனக்கு இப்போவே ஷர்ட் மாத்தணும்” என அவனும் விடாமல் சொல்லவே
அரை அறை அளவில் பரந்து கிடந்த க்ளாசெட் நிறைந்த உடைகளையும் அவனையும் ஒரு பார்வை பார்த்தாள் நேயா..
அவனோ அதை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் “சீக்கிரம் தேடி எடுத்து கொடு..”
நான் இங்கே எதுக்கு வந்திருக்கேன்? விட்டால் என்னை அடிமையாவே மாத்திடுவான் போல!
“சாரி சார்...என் வேலை உங்களுக்கு உணவு தயாரிப்பது.. மேற்பார்வை பார்ப்பது அவ்வளவு தான்.. நான் வேணும்னா சுபாக்கா கிட்ட தேடி எடுத்து மாலையே உங்க கிட்ட கொடுக்க சொல்றேன்”
“உன் வேலை இல்லை தான்.. ஆனா ஆதவனை விரட்டி விட்டேல்ல... அப்போ நீ தான பண்ணணும்” என்று சர்வசாதாரணமாய் சொல்லி விட்டு அவன் எதையோ எடுக்கப்போக
அயர்ந்து நின்றவள் “ஆதவன் சார் ஷர்ட் தேடி எடுத்து கொடுக்கற வேலை எல்லாமா பார்த்தார்?” என்று வாய் விட்டே கேட்டு விட்டாள்
ஆமாம்..” அதிலென்ன சந்தேகம் என்ற தொனியில் பதில் பட்டென்று வந்தது..
ஐயோ ஐயோ..அவனை பிரஷருக்கு பிறந்தவன் என்று திட்டினோமே அவனுடைய பிரஷருக்கு காரணமே இங்கே தான் கல்லுக்குண்டு மாதிரி நின்னுட்டிருக்குன்னு தெரியாம அந்த அப்பாவியை திட்டி அனுப்பிட்டோமே.. இவன் சைலன்ட்டா சாப்பிடும் போதே நான் சந்தேகப்பட்டிருந்திருக்கணும்.. அவள் காலம் கடந்த ஞானநிலையில் மனதுக்குள் புலம்ப
சீக்கிரம் தேடிக்கொடு” என்றபடி அவன் வெளியே நடக்க ஆரம்பித்தான்
அவன் பின்னாலேயே ஓடியவள் “ஏன் சார். வேற ஏதாவது போட்டுக்கோங்களேன்..” என்று கேட்க
“அது தான் கைக்கு கம்பர்ட்டபிள்..” என்று விட்டு இறங்கி போயே விட்டான்
இவன் வேணும்னே செய்றானா இல்லை இவன் காரக்டரே இப்படி கோக்குமாக்கா தான் இருக்குதா? ஒண்ணுமே புரியலையே..
நான் ஒரு செப்டா..அழுக்கு ஷர்ட்டை தேட வச்சிட்டியே என்று நொந்து கொண்டே சிங்கம் சூர்யா போல அந்த ஷர்ட்டை எப்போ போட்டிங்க. வாஷ் பண்ண பின்ல போட்டீங்களா என்று பல கேள்விகளை கேட்டு துப்பறிந்ததில் ஒரு வழியாய் தோய்த்து மடிக்காமல் இருந்த உடைகளின் நடுவில் அதை கண்டு பிடித்தாள்.
இதை மட்டும் ஜெரமி கேள்விப்பட்டான் என்றால் என்ன ஆகும் என்று டென்ஷனாகியபடியே திரும்ப சமையலறைக்கு போனவளுக்கு அது ஆரம்பம் தான் என்று அப்போது புரியவில்லை.
அன்று மாலை ஆறு மணி வரை நோட்பாடை காணோம், நெட்பிளிக்சில் எல்லாமே மொக்கை ஷோவா இருக்கு... நல்ல க்ரைம் திரில்லர் போடு, ஜூஸ் வேணும், போடவேண்டிய மருந்துகளை பிரித்து கொடு, என்று எடுபிடி போல எல்லாவற்றுக்கும் நேயாவின் பெயரை அவன் ஏலம் விட்டுக்கொண்டே இருக்க நொந்தே போனாள் அவள்..
ஆதவனோடு சண்டை போட்டதற்கு இப்படி என்னை பழி வாங்குகிறானோ என்று ஒரு எண்ணம் ஓடி மறைந்தது..ஆனால் அவன் முகத்தில் கோபமோ பழி உணர்ச்சியோ இல்லை..ஏன் அவனுக்கு நேயாவை கூப்பிட்டு இதையெல்லாம் செய்ய வைக்கிறோம் என்று கூட புரியுமோ தெரியாது..அனிச்சையாய் தானியங்கி பட்டனை அழுத்துவது போல அவளை அழைத்து வேலை கொடுத்து விட்டு தனக்குள் ஏதோ சிந்தனையிலேயே தான் இருந்தான்.
எங்காவது இந்த ஊடகவியலாளர்கள் எல்லாம் வராத ரகசிய இடத்துக்கு போனால் சுதந்திரமாய் நடமாடித்திரிவானே..பாவம் ஒரு நிமிஷம் நில்லாமல் ஓடிக்கொண்டிருந்தவனை வீட்டிற்குள்ளேயே உட்கார்ந்திரு என்றால் எப்படி முடியும்? என்று மனம் இன்னும் அவளுக்கு பாவம் பார்த்தது..
“நேயா.. “
இப்போ என்னடா.. ஷூவை காணோமா நான் சத்தியமா ஓடிருவேன் என்று அழுதுகொண்டே போனால் தெரப்பிஸ்டுடன் ஆன்லைன் செசனாம்.. அவனுக்கு பிரவுசரில் காலை கனக்ட் செய்ய தெரியவில்லை..
திரும்ப திரும்ப பாஸ்வோர்ட் கேட்குது என்று எரிச்சலாய் லாப்பை அவள் புறம் திருப்பினான்.
உங்களுக்கு பாஸ்வோர்ட் கொடுத்திருப்பாங்களே சார்..
அதை தான் போட்டேன்..என்னை என்ன ஒண்ணும் தெரியாதவன்னு நினைச்சியா..என்று அவன் எரிந்து விழவும்..
எதுவம் சொல்லாமல் மீண்டும் முயற்சித்து பார்த்தபோது தான் அவன் விருந்தினர் கணக்கில் நுழைய முயற்சி செய்திருக்கிறான் என்று புரிந்தது..இவன் VIP கிளையன்ட் அதற்கு தனியான ஆக்சஸ் இருந்தது.
அட டைனோசரே..கிரிக்கட்டை தவிர எதுவுமே தெரியாதா இவனுக்கு? என்று தான் தோன்றியது நேயாவுக்கு..
அன்றிரவு உணவை எல்லாம் எடுத்து வைத்து விட்டு அவள் வீட்டுக்கு கிளம்பிய போதும் ருத்ரனின் கவுன்சலிங் கால் முடிந்திருக்கவில்லை..
லேசான இருளில் இவள் போவதை கூட கவனத்தில் கொள்ளாமல் காதில் ஹெட்போனோடு சோபாவில் முடங்கிக்கிடந்தவன் மீது அவளையுமறியாமல் ஒரு தடவை பார்வை படிந்தது..
இனி இரவு முழுதும் அவனுக்கு இதே தனிமைதானே.. என்று சம்பந்தமே இல்லாமல் அவள் மனதும் சோகமாக அதிர்ந்து போய் தன்னையே பின்னந்தலையில் தட்டிக்கொண்டாள் நேயா..
அவன் எனக்கு வேலை செய்ய உனக்கு தகுதி இருக்கிறதா என்று கேட்ட நல்லவன்
இத்தனை நாள் உயிரை கொடுத்து சமைத்திருக்கிறாள். அவனுக்கு இனிப்பு பிடிக்கும் என்று ஏதேதோ பரிசோதனை முயற்சிகளெல்லாம் செய்து அவனுக்கு பிடித்த உணவுகளை மெனுவில் சேர்த்திருக்கிறாள்..ஒரு நாள் ஒரு வேளையாவது நன்றாய் இருந்தது என்று சொல்லியிருக்கிறானா?
உணவு கிண்ணங்களில் இல்லாததை வைத்து தான் அதை ஊகிக்கவே வேண்டும்..
நான் சம்பளம் கொடுக்கும் ஊழியை ஆக அது அவள் கடமை என்ற எல்லையில் தான் அவன் நேயாவை வைத்திருக்கிறான்.. என்னமோ அவனை உன்னிடம் பகல் நேர பராமரிப்புக்கு கொடுத்தது போல நீ இப்படி உருகி வழிவது சுத்தமாய் நன்றாயில்லை.
அவனது மனநிலை சரியாகி சிகிச்சைக்கு ஒத்துழைக்கும் வரை தான் உனக்கிங்கே வேலை..உன் இடத்தில் நின்று கொள் என்று மனம் இடித்துரைக்க காரில் நன்றாக சாய்ந்து கொண்டாள் நேயா..
சட்டென்று மேகம் கறுத்து எங்கிருந்தோ மழை பிடித்துக்கொண்டு கொட்ட ஆரம்பிக்க வெளியே போக்குவரத்து நெரிசல் உருவாக்கி வண்டி மெது மெதுவாய் சென்று கொண்டிருந்தது.
இந்த வாரம் முழுக்க மழை இப்படித்தான் இருக்குமாம்மா.. காலைல நம்ம பிரச்சனையே இல்லாம வந்துடலாம்..திரும்பி போகும் போது தான் உங்களுக்கு கொஞ்சம் லேட் ஆகலாம் என்ற டிரைவர் அண்ணாவின் குரல் அவளது சிந்தனையில் எங்கோ தொலைவில் தான் கேட்டது.
மறுநாள் காலையும் மழை சிறிதாய் பெய்து கொண்டிருக்க காலை சமையலுக்காய் கீன்வாவை எடுத்துக்கொண்டிருந்தவள் கிச்சனில் அரவம் கேட்க திரும்பி பார்த்தாள்..
அதே இறுகிய முகத்துடன் பக்க கதவை திறந்து கொண்டு ஆதவன் வந்து கொண்டிருந்தான்.
“நேத்து எல்லாம் ஓகேவா..”
“பிரச்சனையில்லை சார்..” இப்போது நேயாவுக்கு அவன் மேல் அவ்வளவு கோபமில்லை..
ஹ்ம்ம் என்று விட்டு கடந்த இரண்டு நாட்களாய் செய்வது போல திரும்பி போய்விடுவான் என்று பார்த்தால் அவன் போகவில்லை.. கிச்சனுக்குள்ளேயே கவுன்டர் டாப் முன்னே இருந்த முக்காலிகளில் ஒன்றில் தொற்றிக்கொண்டான்.
சற்று நேரம் மௌனமாய் இருக்கவும் நேயாவும் மறுபக்கம் காய்கறிகளை வெட்டி தயார் செய்ய ஆரம்பித்திருந்தாள்
“நேத்து புது தெரப்பிஸ்ட் கூட நல்லா கார்ப்பரேட் பண்ணினானாம்.. சொன்னார்.”
என்னிடமா சொன்னார்? என்று சின்னதாய் ஒரு மகிழ்ச்சி மின்னல் அவள் மனதில் அடித்து போக
“ஒ. நல்லது சார்..சீக்கிரமே பிசியோவும் அவரே பண்ண ஆரம்பிச்சு சரியாயிடுவார் பாருங்க” என்றாள் நம்பிக்கை கொடுப்பது போல..
பார்க்கலாம்” என்று அவனும் தலையைசைத்தபடி மௌனமாய் இருக்க.. சட்டென்று காபி தயாரித்து அவன் பக்கமாய் தள்ளினாள் நேயாவும்..
தாங்க்ஸ் என்றவன் மறுப்பு சொல்லாமல் அருந்த ஆரம்பிக்க லேசான புன்னகையோடேயே தன் வேலையை பார்த்துக்கொண்டிருந்தாள் நேயா.
“இன்னிக்கு முழுக்க மழை தான் இருக்கும்.. வேலு பேச்சை கேட்காம ருத்ரன் பாட்டுக்கு மழையில் இறங்கி எதையாவது இழுத்து விட்டுக்க போறான். அப்படி ஏதும் நடந்து பிரச்சனை ஆனது என்றால் என்னை கூப்பிடு..”
“சரி சார்” என்று சொல்லிக்கொண்டே இருக்கும் போதே ஒரு வளர்ந்த உருவம் தலை முதல் கால் வரை கறுப்பு ரெயின் கோர்ட்டில் தன்னை மூடியபடி ரோஜாச்செடிகளை வெட்ட பெரிய கத்தரிக்கோலோடு போனது
ஐயோ சார்! என்று நேயாவும்
ருத்ரா! வேலு எங்கே போனான்..என்று ஆதவனும் பதற
ஆதவனை ஒரு மூச்சு எடுத்து விடும்படி சைகை சட்டென முடிவெடுத்து வாசலில் சுபாக்கா வைத்திருந்த குடையோடு வெளியே போனாள்..
வேணும்னே பண்றானா இவன்..கை சரியாகணும்..திரும்ப விளையாடணும் என்றெல்லாம் அக்கறையே இல்லையா.. தன்னை தானே அழித்துக்கொள்ளும் மனநிலைக்கு வந்து விட்டானா? இவன் என்ன சின்ன குழந்தையா? என்று கோபமாய் வந்தது அவளுக்கு .
“சார்.. என்ன பண்றீங்க?” மெல்ல தைரியத்தை வரவழைத்து நேயா கேட்க
“பார்த்தா தெரியல..வழியை விடு” என்று எரிச்சலாய் மொழிந்தவன் அவளை பார்க்கவே இல்லை..
“தோளுக்குள்ள பிடிச்சுக்கும்..விடுங்க சார்..வேலு அண்ணா வந்து பண்ணுவார்” என்று அவள் சமாளிக்க போக
ப்ச்.. என்றபடி அவன் தொடர்ந்து கையை உயர்த்தி வலியை காண்பிக்காமல் முகத்தை சுருக்கியபடி ஒரு கிளையை வெட்ட
அவனை சுற்றிக்கொண்டு வந்து நின்றாள் நேயா “ஏன் சார் வேணும்னே பண்றீங்களா இப்படியெல்லாம்? ஒரு மனுஷன் சரியாகணும்னு ஆசைப்பட்டா என் நேரத்தை இங்கே செலவு பண்றதுல அர்த்தம் இருக்கு..உங்களுக்கு சரியாகணும்னு ஆசையே இல்லை.. நான் நீங்க வேற செப்பை தேடிக்கோங்க..நான்கிளம்பறேன்”
கொஞ்ச நேரம் இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்து நின்றனர்.. நேயா பார்வையை விலக்கி கொள்ளவே இல்லை.. அவன் தான் விடுவிடுவென கத்தரிக்கோலை எறிந்து விட்டு உள்ளே போய்விட்டான்.
பெரிய ஆசுவாச மூச்சு விட்டபடி அதை எடுத்து ஓரமாய் வைத்து விட்டு உள்ளே வந்தவளை பார்த்து முதன் முறையாய் லேசாய் புன்னகைத்தான் ஆதவன்
இந்தளவுக்கு ஒருவன் தன் நண்பனை நேசிக்க முடியுமா என்று ஆதவனை பார்க்க நேயாவுக்குத்தான் அதிசயமாய் இருந்தது.. இதை ருத்ரன் புரிந்து தான் இருக்கிறானா?
“ஏன் சார்.. இவர் என்ன சின்னப்பையனா? குணமாகணும்னு அவர் நினைச்சா தானே எல்லாம் சரியாகும். ஒரு சர்வதேச லெவல் கிரிக்கட் ப்ளேயர்..திரும்ப விளையாட போகணும்னு அவருக்கு நினைப்பிருக்காதா?” என்று அயர்வாய் கேட்டாள்.
வெறுமையாய் சிரித்த ஆதவன் “ அது தான் பிரச்சனை..அவனுக்கு திரும்ப டீமுக்கு போக இஷ்டமில்லை..ரிட்டயர் ஆக நினைக்கிறான்..” என்று வேதனையாய் சொல்ல
அதிர்ந்து விட்டாள் நேயா.. “ஆனா..ஆனா அவர் அப்படி முடிவு பண்ணினா நீங்க அதுக்கும் ஆதரவா தானே இருக்கணும்?” என்று மெல்லிய குரலில் கேட்டாள். எத்தனை ஆதரவாளர்கள் ரசிகர்கள்..எல்லாவற்றையும் காரியரின் உச்சிப்புள்ளியில் இருக்கும் போது விட்டு விட்டு போகும் அளவுக்கு என்ன ஆனது?
“அவன் என்ன முடிவெடுத்தாலும் நான் அவன் பக்கம் நிப்பேன்.. ஆனா அவன் வெளியே போறதுன்னா வெற்றியோட போகணும்.. இப்படி இல்லை.. அதுக்கு நான் அனுமதிக்கவே மாட்டேன்.” என்று சொன்னவனும் விடு விடுவென வெளியேறி போய்விட்டான்.