• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,810
Points
93
நெஞ்சம் – 16 ❤️

“உண்மையை சொல்லவா? இல்லை பொய் சொல்லவா?” குறும்பாய்க் கேட்டவனின் பார்வையைக் கவனமாய் தவிர்த்துவிட்டாள் உமையாள். லேசாய் அவன் பார்வையில் உள்ளம் குறுகுறுத்தது. அது தந்த உணர்வு முகத்தில் பிரதிபலித்துத் தொலைத்தது.

“உள்ளதை சொல்லுங்க...” என்றவள், சில நொடிகளுக்கு முன்னே, ‘ஏன் கல்யாணம் பண்ணணும்னு விரும்புறீங்க?’ எனக் கேட்டிருந்தாள்.

“ம்ப்ச்... முதல்ல பொய் சொல்றேன்” என்றவன், “இந்த ப்யூட்டியைப் பார்த்ததும் லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்ல விழுந்துட்டேன்ங்க” என்றான் சிரிக்காமல். இப்போது பெண்ணிடம் லேசாய் முறைப்பு.

“சாரி...” இரண்டு கைகளையும் தூக்கிச் சரணடைவது போல கூறியவன் முகம் முழுவதும் புன்னகைதான்.

“உண்மையை சொல்லணும்னா, மேரேஜ் லைஃபை பத்தி எனக்கு ஐடியாவே இல்லை. அம்மா அந்தப் பேச்சை எடுத்தாங்க. சோ, ஓகே சொல்லிட்டேன்...” என்றான் தோள்களைக் குலுக்கி.

“ஓ...” என்ற உமையாள் அமைதியாய் இருக்கவும் இவன் தொடர்ந்தான்.

“பெருசா லைஃப்ல கமிட்மென்ட்ஸ் எதுவும் இல்லை. அம்மா, நான், கோகுல்னு இருந்துட்டோம். அவங்க கேட்டதும், மறுக்க என்கிட்ட எந்தக் காரணமும் இல்லை. ஹ்ம்ம்... எல்லா பெத்தவங்களுக்கும் பயம் இருக்குமே! தன்னோட காலத்துக்குப் பிறகு பிள்ளைக தனியா நின்ற கூடாதுன்னு அவங்களுக்கு ஒரு லைஃப் பார்ட்னரை தேர்ந்தெடுக்குறாங்க. அதே போலதான் அம்மாவும்...”

“அதுவும் இல்லாம, எனக்கும் என் வாழ்க்கைக்கு ஒரு துணை தேவைப்பட்டுச்சு. நான் துவண்டு போகும்போது, தலையைக் கோதிவிட்டு, உன்னால முடியும்னு ஆறுதல் சொல்ல ஒரு கரம் வேணும்னு தோணுச்சு. அந்தக் கரத்தோட கதகதப்புல காலம் முழுக்க வாழணும்னு ஆசை இல்லை, பேராசைன்னு கூடச் சொல்லலாம். வரப்போற பொண்ணுக்காக, பெத்தவங்களைவிட்டு, பிறந்த வீட்டைவிட்டு என்னயே நம்பி வரப்போற பொண்ணுக்காகன்னு மனசு முழுக்க ஆசையும் காதலும் இருக்கே. அதை என் ப்யூச்சர் வொய்ஃப் கிட்ட கொடுக்க வேணாமா? அதான் உங்ககிட்ட கொடுக்கலாம்னு ஐயா டிசைட் பண்ணிட்டேன்...” என்றவன் உதட்டைக் கடித்துப் புன்னகைத்தான். அவன் பதிலை சிறிய மென்னகையுடன் கேட்டு, தலையை மட்டும் அசைத்தாள் உமையாள்.

“என்னை ஏன் கல்யாணம் பண்ணிக்கணும்னு உங்களுக்குத் தோணுச்சு?” இந்தக் கேள்வியைக் கேட்கபதற்குள் லேசாய்த் திணறிப் போனாள் பெண். அவளது திணறலை மென்னகையுடன் ரசனையாய்ப் பார்த்திருந்தான் பிரபஞ்சன்.

“ஹம்ம்... லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்னு ரொம்ப ட்ரமாட்டீக்கா எல்லா எனக்குப் பேச வராதுங்க. உங்களையும் பாப்பாவையும் ஃபர்ஸ்ட் டைம் ட்ரெய்ன்ல பார்த்தேன். நீங்களும் அவளும் உங்களுக்கான ஒரு உலகத்துல இருந்தீங்க. ரெண்டு பேரும் சிரிக்கிற சத்தம்தான் என்னை உங்களை கவனிக்க வச்சது. ஹம்ம்... தென் போகும் போது ஜஸ்ட் நம்ம லைஃப்ல மீட் பண்ற பாசிங் க்ளவுட்னு நினைச்சேன். பட், லைஃப் பாட்னர்னு எக்ஸ்பெக்ட் பண்ணலைங்க...” என்றவன் முகம் அன்றைய நாள் நினைவில் கனிந்து போயிருந்தது.

‘அன்றே இவர் தன்னைப் பார்த்திருக்கிறாரா?’ ஆச்சரியம் பொதிந்த பார்வைப் பார்த்தவள், இறுதி கூற்றில் சுதாரித்து, “நான் இன்னும் உங்களுக்கு ஓகே சொல்லலை...” என்றாள் கறரான குரலில்.

“அஹம்ம்... அது, அதை விடுங்க. தென் நம்ம கார்மெண்ட்ஸ்ல நெக்ஸ்ட் டைம் உங்களை மீட் பண்ணேன். ஹானெஸ்ட்லி ஃபர்ஸ்ட் மீட் பண்ணும்போது அழகா தெரிஞ்சீங்கன்னு சொல்ல மாட்டேன். எனக்கு நிறைய கேர்ள் ப்ரெண்ட்ஸ் உண்டு. அழகா இருந்தா பார்ப்பேன், ரொம்ப அழகா இருந்தா சைட் அடிப்பேன். அதுக்கும் மேல லவ்... ஹம்ம் அந்த வார்த்தையை யோசிச்சதே இல்லை. பட், நீங்க... எப்படி, எப்போன்னு சரியா தெரியலை. அன்னைக்கு நீங்க மணிகிட்ட தைரியமா பேசிட்டு, தென் அழுதீங்களே! அப்போ ஏதோ ஒரு உணர்வு சொல்லத் தெரியலை...” என்றவன் லேசாய் வெட்கம் கொண்டு தன் மீதான அவளது உணர்வுகளை முகத்தில் பிரதிபலிக்க, காது மடல்கள் எல்லாம் சிவந்து போயின. அவன் வெட்கப்படுவதை ஆசையாய், ரசனையாய்ப் பார்த்திருந்தாள் உமையாள். இவனுக்கு வெட்கப்படத் தெரியுமா? என பார்வையில் ரசனை கூடிப் போனது பெண்ணுக்கு.

‘பெண்கள் வெட்கம் கொண்டாள் அழகு. ஆண்கள் வெட்கப்பட்டால் பேரழகு’ அவளைப் பொறுத்தவரை.

“தென் உங்ககிட்ட ப்ரபோஸ் பண்ணேன். எவ்வளோ கஷ்டத்தை கடந்து வந்தாலும், தன்னம்பிக்கையோட அது தந்த தைரியம், பொலிவோட அழகா, இப்போ என் முன்னாடி இருக்க பொண்ணு ரொம்ப பேரழகு. சோ, இந்த எக்ஸஸ் ப்யூட்டியை கரெக்ட் பண்ணலாம்னு ப்ரபோஸ் பண்ணிட்டேன். மேடம்தான் அக்செப்ட் பண்ணலை. அதனால நான் வெயிட்டிங் மோட்ல இருக்கேன்...” என்றவனைப் பார்த்து உமையாள் இதழ்கள் புன்னகை பூத்தது. எந்த வித பொய்யும் பூச்சும் இன்றி மனதில் உள்ளதை உள்ளபடியே உரைத்தவனை இன்னுமின்னும் பிடித்தது. அவன் நினைத்தால் மயக்கும் வார்த்தைகளை, இல்லை அவன் கூறியது போல பொய்யாய் ஆயிரம் கூறியிருக்கலாம். அப்படி பேசியிருந்தால் கூட, உமையாள் உள்ளத்தை இந்தளவு தொட்டிருக்காதோ என்னவோ?

தனக்குத் துணையாய் வருபவரிடம் மனம் முதலில் உண்மையைத் தானே எதிர்பார்க்கும்? அடுத்து தானே நேசம், காதல் என்ற அத்தியாயம் எல்லாம்.

“நான் கடைசி வரை உங்களை ஏத்துக்கலைன்னா, என்ன பண்ணுவீங்க?” உமையாள் அவன் விழிகளைப் பார்த்து வினவ, உதட்டைப் பிதுக்கினான்.

“ரொம்ப டிபிகல் கொஸ்டீனாச்சே. இதுக்கு நான் ஆன்சர் பண்ண விரும்பலைங்க...” என்றவனுக்கு மூளையில் அப்போதுதான் உரைத்தது. உமையாள் கடந்த பதினைந்து நிமிடமாக அவனிடம் நின்று நிதானமாய் பேசிக்கொண்டிருக்கிறாள். யாரும் தங்கள் இருவரையும் தவறாய் எண்ணி விடுவார்களோ? என்ற சுய எச்சரிக்கை எதுவுமின்றி நின்றிருந்தவளின் முகம் முழுவதும் புன்னகை.
‘முதன் முதலில் தங்களுக்கு இடையேயான நீண்ட உரையாடல் இதுவாகத்தான் இருக்கும்’

பின் அவளது முகம் லேசாய் மாறியது. “நான் டிவோர்ஸி, குழந்தை கூட இருக்கா...” என்றவளைப் புருவம் சுருக்கிப் பார்த்த பிரபஞ்சன்,

“புரியலைங்க...” என்றான்.

“ஹம்ம்... என்னைக் கல்யாணம் பண்ணிக்க விருப்பம்னு சொன்னீங்க இல்லை. நான் டிவோர்ஸி, செகண்ட் ஹேண்ட் அண்ட் குழந்தை கூட இருக்கு. என் கடந்த கால வாழ்க்கை ரொம்ப மோசமானது...” என உமையாள் அழுத்தமாகக் கூற, அவள் கூற்றின் சாராம்சத்தை உணர்ந்தவனின் அகமும் முகமும் கனிந்து போனது.

“ஏங்க, நான் என்ன டூத் பிரஷ்ஷாங்க வாங்குறேன். புதுசா இல்ல செகண்ட் ஹேண்டான்னுப் பார்த்து வாங்க? நான் காலம் முழுக்க வாழப்போற, உயிரும் உடலும், அதை விட அழகான மனசுள்ள பெண்ணுங்க... என் வாழ்க்கைக்கு என் மனசுக்குப் பிடிச்ச பொண்ணு போதும். புதுசா, பழசான்னு ஆராய்ச்சியே வேணாம்...” என சின்ன சிரிப்புடன் கூறியவன், “எனக்கு உங்களை விட க்யூட்டா இருக்க ஆராதனாவை... சாரி, சாரி அம்முவை ரொம்ப பிடிக்கும்...” என்றான். அவன் பதிலில் உமையாளின் விழிகள் எதிரிலிருப்பவனை ஆசையாய்த் தழுவின.

அவளிடம் முறைப்பை எதிர்பார்த்து ஏமாந்தவன், “ஹம்ம்... உங்க பாஸ்ட் லைஃப் பத்தி எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லைங்க. ஏன்னா, நீங்க சொன்ன மாதிரி அது கடந்து போனது. திரும்பி எல்லாம் வராது. இனிமே, நீங்க, நான், ஆரதனா, அம்மான்னு எல்லாரும் சேர்ந்து வாழப்போற வாழ்க்கையைப் பத்தின அக்கறை மட்டும் நம்ம வாழ்க்கைக்குப் போதும்னு நினைக்கிறேன்...” என்றவனை அமைதியாய்ப் பார்த்திருந்தாள்.

“உங்க அம்மாவுக்கு என்னைப் பிடிக்கலைன்னா என்ன பண்ணுவீங்க?” அவள் கேள்வியில் சிரித்தான் பிரபஞ்சன்.

“ஹம்ம்... அம்மா, அக்செப்ட் ப்ளீஸ்ன்னு கால்ல விழுந்துட வேண்டியதுதான்ங்க...” சன்னமான சிரிப்புடன் கூறியவனை ஆச்சரியமாய்ப் பார்த்தாள் உமையாள். அதிர்ந்த அந்த விழிகளில் இதழைப் பதித்து, அருகிலிருப்பவளை அன்பாய் ஆசையாய் அணைத்துக் கொள்ள சொல்லி டோபமைனும்,
டெஸ்டோஸ்டீரானும் பாடாய்ப் படுத்தியது பிரபஞ்சனை.

தொண்டையைக் கணைத்தவனின் பார்வை காதலாய், கொஞ்சமல்ல அதிகமாய் கள்ளத்தனத்துடன் எதிரில் இருப்பவளை விழுங்கியது. “மேடம், இன்டர்வியூ ஓவரா? நான் பாஸாகிட்டேனா?” குறும்பு பொங்கும் குரலில் கூறியவனை விழியகலாதுப் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு அவன் கேள்வியில் லேசாய் முகம் சிவந்து போனது. முகத்தைப் பக்கவாட்டாய்த் திருப்பியவளின் சிவந்த கன்னங்களில் ஆடவன் பார்வை அதீத ரசனையாய்த் தழுவின.

“இதுவரைக்கும் வாழ்க்கையில நான் சம்பந்தப்பட்ட முடிவை நானா எடுத்ததே இல்லை. அம்மா, அப்பா, குடும்பம்னு அவங்கதான் எனக்கான முடிவை எடுப்பாங்க. பிடிச்சாலும், பிடிக்கலைனாலும் அதை ஏத்துட்டே வாழ்ந்து பழகுனதாலதான், ஒரு நச்சான உறவுல அடிமையாய் வாழ்ந்துட்டு இருக்கேன்னு ரொம்ப ரொம்ப தாமதமாதான் உணர்ந்து, முதல்முறையாக எனக்கான முடிவை எடுத்து அந்த உறவை வேண்டாம்னு உதறிட்டு வந்துட்டேன். அடுத்து ஒரு கல்யாணம்னு எல்லாம் நான் யோசிச்சுப் பார்க்கவே விரும்பாத சப்ஜெக்ட். ஆனால், என் விருப்பமே இல்லாம, மனசு உங்க மேல, உங்க விருப்பது மேல நம்பிக்கை வச்சுடுச்சு. ஆனாலும் பயமா இருக்கு. ஏற்கனவே பட்ட அடி ரொம்ப பெருசு. இதுக்கும் மேலயும் என்னால அப்படியொரு சூழ்நிலையை பேஸ் பண்ண முடியாது. பிடித்ததுக்கும், நம்பிக்கைக்கும் பயத்துக்கும் இடையில மனசு தவிச்சுட்டு இருக்கு...” என்றவள் பேசிவிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள். விழிகள் முழுவதும் கலக்கத்துடன் தன் விருப்பத்தை அழகாய் எடுத்துரைத்தவளைப் பார்த்தவன் முகம் முழுவதும் அவளுக்கான நேசம் மட்டும்தான்.

அவளருகே விரைந்தவன், “வித் யுவர் பெர்மிஷன், உங்க கையைப் பிடிச்சுக்கலாமா?” எனக் கேட்டான்

லேசாய் நீர் திரையிட்ட விழிகளுடன் பதிலின்றி நின்றிருந்தவளின் வலக்கரத்தை எடுத்து தன் இரண்டு கரங்களுக்குள் பொதிந்தவன், “மொளனம் சம்மதத்துக்கு சமம்னு சொல்லுவாங்க. அதான் உங்க கையைப் பிடிச்சுட்டேன்ங்க. இனி அதை விட்ற எண்ணம் இல்லை...” என்றவனின் உடல் உமையாள் கரத்தின் மென்மையில், முதல் தொடுகையில் முற்றிலும் சிலிர்த்துப் போனது.

“நான் ராணி மாதிரி பார்த்துப்பேன், பிரின்சசஸ் மாதிரி பார்த்துப்பேன்னு பொயெல்லாம் சொல்ல மாட்டேன். என் ப்ரபோஸல் கூட முன்ன பின்ன இருந்தா, அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க. எப்பவுமே சந்தோஷமா வச்சுப்பேன்னு அஷ்ஷூரன்ஸ் எல்லாம் தர முடியாதுங்க. வாழ்க்கையை அது போக்குல வாழலாம். கோ வித் த ஃப்ளோ தான். பட், ஐயம் ஷ்யர் தட், எல்லா அப்ஸ் அண்ட் டவுன்ஸ்லயும் உங்ககூட நிற்பேன்.‌ உங்களுக்காக நிற்பேன்னு நம்பிக்கையைக் கொடுக்க முடியும். உங்களோட விருப்பத்தையும் என்னோட விருப்பத்தையும் சேர்த்து நமக்கான வாழ்க்கையை அழகா வடிவமைக்கலாம். என் வாழ்க்கைக்குள்ள வாங்க, என் அன்பு மொத்தமும் அன் அம்மாவுக்குப் பின்னாடி, உங்களுக்கும் நம்மளோட குழந்தை அம்முவுக்கும்தான்...” என்றவனைக் காதலாய்ப் பார்த்திருந்தாள் உமையாள். அவள் விழிகளிலிருந்து ரெண்டு சொட்டு கண்ணீர் உருண்டு கன்னத்தை நனைத்து அவர்களது இணைந்த கரத்தில் மோட்சம் பெற்றது.

“இனிமே நோ மோர் டியர்ஸ் கேர்ள்...” என்றவன், அவளது கன்னத்தில் வழிந்த நீரை துடைத்துவிட்டான்.

“கல்யாணம் பண்ணிக்கலாமாங்க?”
நேசத்துடன் கேட்டவனை நெஞ்சு முழுக்க நிறைத்துக்கொண்டாள்.‌ தலையை அசைத்தவளுக்கு இத்தனை நேரம் அவன் கரங்களுக்குள் தன் கைகள் பொதிந்து இருந்ததை உணர்ந்து அதை மெதுவாய் இழுத்துக்கொண்டாள். பிரபஞ்சனுக்கு அந்த நொடியை எப்படி கையாள்வது என்றுகூடத் தெரியவில்லை. மனம் முழுவதும் மகிழ்ச்சி பொங்கியது.

“ஐ யம் சாரி டு டூ திஸ், ஐ டோன்ட் நோ ஹவ் டூ எக்ஸ்பிரஸ் மை பீலிங்க்ஸ்...” என்றவன் நொடியில் பட்டும்படாமலும் தொட்டும் தொடாமலும் அவளை அணைத்து விடுவித்துவிட்டு நகர, உமையாள் உடல் ஒரு நொடி நடுங்கியது.

“சாரி கேர்ள், சாரி...” குழந்தை போல தன் முன்னே காதில் இரண்டு கரத்தையும் வைத்து கெஞ்சுபவனைப் பார்த்தவளுக்கு அவனிடம் கோபம் கொள்ள முடியும் என்று தோன்றவில்லை. மெதுவாய் உமையாள் புன்னகைக்கவும், பிரபஞ்சன் உதடுகளும் சிரிப்பை உதிர்த்தன.

“அந்தக் குருவி கூடு மாதிரி நமக்கே நமக்கான உலகம், கண்டிப்பா அழகா இருக்கும்ங்க. உங்களை எந்த விதத்திலும் நான் கட்டாயப்படுத்தவோ, கட்டுப்படுத்தவோ மாட்டேன். நான் உங்களோட வாழ்க்கையை பகிர்ந்துக்கத்தான் ஆசைபட்றேனே தவிர, உங்க சுதந்திரத்தைப் பறிக்கிறதுக்கு இல்லை. இப்போவே நம்பிக்கை வரணும்னு அவசியம் இல்லை. என் வாழ்க்கைக்குள்ள வந்து, வாழ்ந்து பாருங்க, நம்பிக்கை தானா வரும்...” என்றவன், உமையாள் முன்னே கையை நீட்டினான். அவன் முகத்தையும் விழிகளையும் ஆசையும் தயக்கமுமாய்ப் பார்த்தவள், மெதுவாக அவன் கரத்தில் தன் கைகளை இணைத்தாள். இப்போது இவன் முகத்தில் மென்னகை. சில நொடிகள் மெதுவாக கழிய,

“அஹெம்... ஹக்கும் உள்ளே வரலாமா?” கோகுல் கேட்டுக்கொண்டே உள்ளே நுழைய, “என்ன மச்சான் பூஜை வேலைல கரடி மாதிரி வந்து நிக்கிற?” என்று பிரபஞ்சன் குறும்பாய் வினவ, அவன் முன்னே தங்கள் இணைந்திருந்த கரத்தைப் பார்த்து சங்கடப்பட்டு பின்னே இழுத்தாள் உமையாள்.

“சொல்லுவ டா சொல்லுவ. காதல் பட பரத் லூசு மாதிரி மூஞ்சியை வச்சிட்டு இருந்த என் நண்பனை யாரும் பார்த்தீங்களா?” என்றவன், “சிஸ்டர், நீங்கப் பார்த்தீங்களா?” என உமையாளிடமும் கேட்க, அவள் என்ன சொல்வது எனத் தெரியாது தயக்கமாய் இருவரையும் பார்த்தாள்.

அவன் கேள்வியில் அசடு வழிந்த பிரபஞ்சன், “டேய்...” என்று நண்பனை இழுத்து அணைக்க, “கங்கிராட்ஸ்டா மச்சான், ஹேப்பி ஃபார் போத் ஆஃப் யூ” என்றான் கோகுல். உமையாள் சின்ன சிரிப்புடன் அவர்களைப் பார்த்திருந்தாள்.

“ஏங்க அந்தக் குருவியைப் பாருங்க...” என்ற பிரபஞ்சன், உமையாளைத் திசை திருப்பிவிட்டு, சந்தோஷத்தில் கோகுல் கன்னத்தில் முத்தமிட்டான்.

“சீ... கருமம். கருமம்...” என கன்னத்தை தேய்த்துக்கொண்டே அவனிடமிருந்த கோகுல் விலக, உமையாள் இருவரையும் புரியாது பார்த்தாள்.

“ஏங்க, எவ்ளவோ நல்ல பசங்க இருக்கும்போது எதுக்குங்க இவனை செலக்ட் பண்ணீங்க. கெட்டப் பையன் இவன். எதுக்கெடுத்தாலும் கன்னத்தை எச்சிப் பண்றான்...” என்ற கோகுலின் பாவனையில் உமையாள் சிரித்துவிட்டாள்.
சிரிக்கும் அவள் முகத்தை ஆசையாய்ப் பார்த்தப் பிரபஞ்சன் இதழோரம் புன்னகையில் மிளிர்ந்தது.

இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்து அவர்களை முறைத்த கோகுல், “உங்களுக்கு என்னைப் பார்த்தா ஜோக்கர் மாதிரி தெரியுதா? நான் அம்மாகிட்ட உங்களைப் போட்டுக் கொடுக்கிறேன்...” என்று சின்னக் குழந்தை போல அவன் நகர,

“அச்சச்சோ, அவர் கோபமாப் போறாரு...” உமையாள் பதற,

“ஹக்கும்... அவனுக்கு அவ்வளோ சீன் எல்லாம் இல்லை. பதறாதீங்க...” என்றான் பிரபஞ்சன். உமையாள் தலையை அசைத்தவள், வேலையைக் கவனிக்க நகர்ந்துவிட்டாள். பிரபஞ்சனுக்கு அன்றைய பொழுது அத்தனை துள்ளலுடன் கழிந்தது.

வீட்டிற்கும் அதே மனநிலையுடன் தான் சென்றான். மகன் முகம் எப்போதும் விட அதீத பொலிவுடன் இருப்பதை தாயின் மனம் குறித்துக்கொண்டது.

தன்னை சுத்தம் செய்துகொண்டு வெளியே வந்த பிரபஞ்சன், சாரதாவிற்கு அருகே அமர்ந்தான்.
“என் செல்ல அம்மா...” என அவரது இரண்டு கன்னத்தையும் பிடித்துக்கொஞ்சினான். சிறுவயதிலிருந்தே தனக்கு ஏதாவது காரியமாக வேண்டும் என்றால், இப்படித்தான் தாயைக் கொஞ்சுவான் பிரபஞ்சன்.

“என்ன வேணும் என் பிரபாவுக்கு?” சாரதா சிரிப்புடன் கேட்க, அவரது கையை எடுத்து தன் கன்னத்தில் வைத்துக்கொண்டான்.

“ம்மா, இந்த லவ்வைப் பத்தி என்ன நினைக்குறீங்க?” என வினவினான்.

“என்ன டா மகனே, புதுசா லவ்வைப் பத்தியெல்லாம் கேட்குற?” சாரதா ஆச்சரியப்பட,

“அதை அப்புறம் சொல்றேன். நீங்க என் கேள்விக்குப் பதில் சொல்லுங்க. காதலைப் பத்தி என்ன நினைக்குறீங்க?”

“காதல்... ம்ம் காதல்னா லவ்வுடா மகனே!” சாரதா குறும்பாய்க் கூற, “மம்மி, நான் சீரியஸா பேசுறேன். ஐ வாண்ட் ஆன்சர்...” என்று கறாராய்க் கூறியவன், “அப்பாவும் நீங்களும் எப்படிமா லவ் பண்ணீங்க. அதை சொல்லுங்க” என வினவினான். மகனை சின்ன சிரிப்புடன் பார்த்த சாரதா,

“என்ன டா, யாரையும் லவ் பண்றீயா என்ன?” என வினா தொடுத்தார்.

“ம்ப்ச்... ம்மா, எதிர்க் கேள்வி கேட்காம, முதல்ல என்னோட கொஸ்டீனுக்கு ஆன்சர் பண்ணுங்க...” என பிரபஞ்சன் சிணுங்க, சாரதா பெரிதாய் நகைத்தார்.

“நான் அப்போ ஸ்கூல் படிச்சுட்டு இருந்தேன் டா. உங்க அப்பா காலேஜ்ஜூக்கு எங்க ஸ்கூல் வழியாதான் போவாரு, வருவாரு. தினமும் நான் வர்ற வரைக்கும் வெயிட் பண்ணி பார்த்துட்டு போவாரு... என்னமோ தெரியலை நல்ல மனுஷன், என்னை மட்டும்தான் பார்ப்பாரு. வேற எந்தப் பொண்ணு வந்தாலும், தலையை குனிஞ்சுப்பார். அவ்வளோ கூச்ச சுபாவம் அவருக்கு. எனக்கும் அவரைப் பிடிக்கும் டா... ஏதோ ஒரு நம்பிக்கை, அது உங்க அப்பா மேல அதிகமா வச்சு, ரெண்டு பேரும் வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அவருக்கு நான்னா, ரொம்ப இஷ்டம்... ஆனால், கடைசி வரை அவரா என்கிட்ட பேச முயற்சிக்கலை. நான் தான் அவர்கிட்ட பேசுனேன் முதல் தடவை...” சாரதாவிற்கு அன்றைய நினைவில் முகம் மலர்ந்துவிட்டது.

“ஏன் மா அப்பா மேல மட்டும் அவ்வளோ நம்பிக்கை வச்சீங்க?”

“காதல்னா என்ன பிரபா? அதுவும் ஒரு வகை நம்பிக்கை தான். கடைசிவரை எனக்கு அவர் உண்மையா இருப்பார்னு அவரை நம்புனேன். அதான் காதலா மாறி, அவர்கூட வாழ்க்கையை அமைச்சுக்க துணிய வச்சது டா!” என்ற தாயின் கரத்தை தன் கரங்களுடன் கோர்த்தவன்,

“ம்மா, இதே மாதிரிதான். என் மேல நம்பிக்கை வச்சு, என் வாழ்க்கைக்குள்ள ஒரு பொண்ணு வராங்க. உங்களால அவங்களை ஏத்துக்க முடியும்தானே மா? என் மனசுக்கு ரொம்ப பிடிச்சப் பொண்ணு மா. என் வாழ்க்கை அவங்களோட வாழ்ந்தா, முழுமை அடையும் மா. உங்களுக்கும் அவங்களைப் பிடிக்கும். நாளைக்கு அவங்களை நம்ம மீட் பண்றோம். நீங்க பேசுங்க. பட் ஒன் திங்க்,
அவங்க அழகோ, அழகு இல்லையோ? கருப்பு, சிவப்பு, ஒல்லி இல்ல, எதுவா இருந்தாலும், அவங்களை நான் இன்ட்ரோ பண்ணும்போது உங்களோட முகத்துல எந்த மாற்றமும் வரக்கூடாது மா. ஈவன் அவங்க டிவோர்சியா இருந்தாக்கூட...” என்றவன் மெதுவாய் அவரின் முகத்தை ஏறிட்டான். சாரதா பிரபஞ்சனைத்தான் பார்த்திருந்தார். அவன் வார்த்தைகளை அவதானிக்க முயன்றுகொண்டிருந்தார்.


தொடரும்...




 
Well-known member
Messages
409
Reaction score
303
Points
63
சூப்பர்👌👌👌 உமாதான்னு அம்மா கிட்ட நேர சொல்ல வேண்டியது தானே
 
Active member
Messages
131
Reaction score
89
Points
28
ஆஹ்ஹா! உமையாள் கிட்டயும் சரி, சாரதா அம்மாகிட்டயும் சரி.. பிரபஞ்சன் சூப்பராக பேசிட்டான். இனி ரெண்டு பேரும் என்ன சொல்லப் போறாங்கன்னுப் பார்ப்போம் ❤️
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Uma prabha propose accept pannida so cute prabha semma ya pesuna ❤️❤️❤️❤️saratha Amma ok solliduvaga uma tha avaluku pidukum la 😍😍
 
Active member
Messages
113
Reaction score
59
Points
28
ஸோ ஹாப்பி... 🥳🥳🥳🥳 பிரபா லவ் சக்ஸஸ் ஆயிடுச்சு..... 😊
 
Top