• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,810
Points
93
நெஞ்சம் – 13 ❤️

பிரபஞ்சன் உள்ளே நுழைய, “பிரபா, உன்கிட்ட கொஞ்சம் பேசணும். இங்க வந்து உட்காரு...” என்று சாரதா கூற, “வந்து உட்காரு டா நல்லவனே!” என்றான் கோகுலும்.

அவர்களுக்கு அருகிலிருந்த இருக்கையை ஆக்கிரமித்தப் பிரபஞ்சன் முழுக்கை சட்டையை சற்றே தளர்த்தி மேலேற்றிவிட்டவாறே, கையிலிருந்தக் கடிகாரத்தை அகற்றினான். “சொல்லுங்க, என்ன வேணும் உங்க செல்ல மகனுக்கும், உங்களுக்கும்?” என வினவியவனின் முகத்தில் அப்படியொரு புன்னகை. தலையை நிமிர்த்தவே இல்லை.

“டேய்! ஏன் டா, இவன் ஏதோ உனக்கு ஹெல்ப் பண்றேன்னு சொன்னதுக்கு நீ வேண்டாம்னு சொன்னதும் இல்லாம, கிண்டல் வேற செஞ்சிருக்க? என் மகனைப் பார்த்தா, உனக்கு எப்படி தெரியுது?” கையில் குச்சி மட்டும்தான் இல்லை. மற்றபடி ஆசிரியை மாணவனை விசாரிக்கும் தொனிதான் சாரதாவிடம். இதழ்களுக்குள் புன்னகையை அதக்கிவிட்டான் மகன்.

“ஹம்ம்...” என்றவன் கோகுலை மேலிருந்து கீழாகப் பார்த்துவிட்டு, “வால் மட்டும் இருந்தா, ஹனுமான் தான்...” என சிரிக்காமல் கூறியபடியே அறைக்குள் நுழைய, “ம்மா...” என்று காலை தரையில் உதைத்தான் கோகுல்.

“டேய் பிரபா, வளர்ற புள்ளையை ஏன் டா குரங்குன்னு சொல்ற?” சாரதா கடிய, “மம்மி, அவன் இன்டேரக்டா சொன்னா, நீ டேரக்டா சொல்லு...” எனக் கோபமான கோகுல் பிரபஞ்சன் அறைக்குள் நுழைந்தான்.

பிரபஞ்சன் உடை மாற்றி வரவும், “மச்சான், நீ என்ன நினைச்சுட்டு இருக்க? நம்மளோட அடுத்த மூவ் என்ன? எல்லா விஷயத்துலயும் உனக்கு சப்போர்டாதான் நான் இருந்திருக்கேன். இதுலயும் என்னோட முழு ஆதரவு உனக்கு உண்டு. சோ நெக்ஸ்ட் என்ன பண்ண போறோம்?” கோகுல் தீவிர பாவனையுடன் கேட்க, தன் கையிலிருந்தத் துண்டை அவன் மீதெறிந்தான் பிரபஞ்சன். எதிரிலிருப்பவன் முகத்திலிருந்த பாவனை துளிகூட உரியவனிடத்தில் இல்லை. உதட்டோரம் மென்னகை மட்டும் படர்ந்திருந்தது.

“நெக்ஸ்ட் ரெஸ்ட் டா. ஹியர் ஆஃப்டர் ஐ வோன்ட் டிஸ்டர்ப் ஹெர் டா”

“டேய்! டிஸ்டர்ப் பண்ணலைன்னா எப்படி டா உன் மேல பீலிங்க்ஸ் வரும். நல்ல அபிப்பிராயம் வரும்? நீ சீரியஸா இல்லையோ?” கோகுல் கேள்வியில் புன்னகைத்தவன்,

“சீரியஸ்னா எப்படி, டெய்லி அவங்க பின்னாடி ஃபாலோ பண்றது, லவ் பண்றேன்ற பேர்ல இண்டீசன்டா பிகேவ் பண்றதா?” என்றவன் தலையை இல்லை என்பது போல இடம் வலமாக அசைத்து, “என்னோட விருப்பத்தைச் சொன்னேன். அவங்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அதுக்குப் பிறகும் டிஸ்டர்ப் பண்றது தப்புடா” என்றான்.

“அப்போ அந்தப் பொண்ணு வேணாம்னு முடிவெடுத்துடீயா?”

“அந்தப் பொண்ணு மட்டும்தான் டா வேணும்...”

“என்னை ரொம்பக் குழப்புற மேன் நீ...” தலையைப் பிய்த்துக் கொள்ளாத குறையாகக் கேட்டான் கோகுல்.

“டேய்! அவங்களுக்கான ஸ்பேஸை நான் கொடுத்து இருக்கேன். நான் போய் அப்ரோச் பண்ணதும் அவங்க அக்செப்ட் பண்ணுவாங்கன்னு எக்ஸ்பெக்ட் பண்ணலை டா. என்னை, என் குடும்பத்தை, என் குணத்தை நான் யாரு, எப்படிப்பட்டவன்னு அவங்களுக்குப் புரிஞ்சுக்க டைம் வேணும் டா. என்னை நானா புரிஞ்சுக்க, தெரிஞ்சுக்க அக்செப்ட் பண்ண அவங்களுக்கு நேரம் கொடுத்து இருக்கேன்.
கண்டிப்பா ஷி வில் அக்செப்ட் மீ. பட், டைம் எடுக்கலாம்...” என்றான்.

“கடைசிவரை அவங்க அக்செப்ட் பண்ணலைன்னா, என்ன டா பண்ணுவ?” கோகுல் வினவினான்.

“ஹம்ம்...” என இழுத்த பிரபா, “அப்போ கூட உன்னோட மொக்கை ஐடியா எனக்கு வேணாம் டா...” என்றான் உதட்டைக் கடித்துப் புன்னகையை இதழ்களுக்குள் அதக்கியபடி.

“மூட்றா... எப்படி நீ லவ் பண்ணி கல்யாணம் பண்றேன்னு நானும் பார்க்குறேன்...” கோழியாய் சிலிர்த்துக்கொண்டு கோகுல் வெளியேற, அவன் கேட்டக் கேள்விக்குக் கேலியாய் பதில் இயம்பினாலும், பிரபஞ்சன் மனதின் ஓரத்திலும் அந்தக் கேள்வித் தொக்கி நின்றது.
கண்டிப்பாக உமையாள் தன்னைப் புரிந்து கொள்வாள் என உள்மனம் அடித்துக் கூறியது.

அவளைக் கட்டாயப்படுத்தும் எண்ணம் துளியும் இல்லை ஆடவனுக்கு. விட்டுவிடும் எண்ணமும் இல்லை. பெண் வாழ்க்கையில் கண்ட காயங்கள் பெரிது. அதுதான் உமையாள் ஆண்களிடமிருந்து விலகிச் செல்லக் காரணம். இப்போது நினைத்தால் கூட, மதுரையிலிருக்கும் தன் நண்பர்கள் மூலமாக நடந்ததை அறிந்து கொள்ள முடியும் அவனால். ஆனால், அப்படி செய்ய மனம் வரவில்லை பிரபாவிற்கு.

அவளாக என்றாவது மனம் திறந்து கூறினால், கண்டிப்பாக அவள் கண்ணீர் துடைத்து கண்ணம் வருடி தலைக் கோதி தோளில் சாய்த்துக் கொள்வான். நடந்த எதையும் அவனால் மாற்ற முடியாது. ஆனால், அவளுக்கான ஆறுதலையும், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையையும் அளித்திட இயலும். காலம் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளும் என்ற எண்ணத்துடனும் அவளைத் தன்னால் மாற்ற முடியும் என்ற உறுதியுடனும் அப்போதைக்கு தன் மனதை சமாதானம் செய்துகொண்டான்.

நாட்கள் அதன்போக்கில் மெதுவாக ஊர்ந்து
சென்றுகொண்டிருந்தன. உமையாள் பிரபஞ்சன் தன்னிடம் விருப்பத்தை உரைத்ததைத் தற்காலிகமாக மறந்துவிட்டிருந்தாள். தேவைக்கு மேல் அவனிடம் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை பெண். அவளுண்டு அவள் வேலை உண்டு என இருந்து கொண்டாள். பிரபஞ்சனும் பெரிதாய் அவளிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை. அவள் அவளாக இருப்பதுதான் மகிழ்ச்சி என நினைத்து தன் விருப்பத்தை அவளிடம் எந்த விதத்திலும் திணிக்க முயற்சிக்கவில்லை.

எப்போதும் போல ஆடைத் தயாரிப்பகம் நன்றாக இயங்கிக்கொண்டிருந்தது. அயல்நாட்டு ஏற்றுமதிக்காக புதுமையான உடைகள் தயாரிக்கப்பட்டு கொடுத்த தேதிக்குள் அனுப்ப வேண்டும் என வேலைகள் துரித கதியில் நடந்துகொண்டிருந்தன. பிரபஞ்சனும் கோகுலும் அந்த வேலையில் மூழ்கிவிட்டிருந்தனர்.

வலது கை மேஜை மீது தாளம் போட, இடதுகை கணினியில் உள்ள விசைப்பலகையை தட்டிக்கொண்டிருந்தது. அந்த மாதத்தின் வரவு செலவுகளை சரிபார்த்து முடித்த பிரபஞ்சன் கைகளைத் தலைக்கு மேலே தூக்கி, கழுத்தை நெட்டி முறித்தான். குனிந்தே நீண்ட நேரம் கணினியைப் பார்த்தது கழுத்தில் லேசாய் வலி வேறு. எழுந்து நின்று கையையும் காலையும் ஆட்டியவன், அப்படியே ஒவ்வொரு பகுதியாகச் சுற்றி வரலாம் என காலார மெதுவாய் நடைபோட்டான்.

ஆங்காங்கே சிலர் வணக்கம் வைப்பதும் தலையசைப்பதும் புன்னகையை உதிர்ப்பதுமாய் அவனைக் கடக்க, ஒவ்வொரு பகுதியாகச் சுற்றி வர ஆரம்பித்தான். பெண்களுக்கென ஓய்வெடுக்கும் பெரிய அறை ஒன்று தனியாக ஒதுக்கியிருந்தார் சாரதா. அதைக் கடக்கும்போது யாரோ ஒருவர் தேம்பி அழும் சத்தம் செவியை அடைந்தது. கால்கள் அவ்விடத்திலே நிலைகுத்தி நிற்க, என்னவென அறியாது பிரபஞ்சனுக்கு மனதில் லேசான பதற்றம்.

ஒரு நொடித் தயங்கியவன், பின் கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான். ஆடைத் தயாரிப்பகத்தில் வேலை பார்க்கும் பெண்மணி ஒருவரும், அவர் அருகே பன்னிரெண்டு அல்லது பதிமூன்று வயது நிரம்பிய சிறுமி ஒருத்தி தேம்பிக்கொண்டே நிற்க, என்ன சமாதானம் செய்வது எனத் தெரியாது தடுமாறினார் அந்தப் பெண்மணி.

பிரபஞ்சனைக் கண்டதும், “சார், அது... வேலை நேரம்...” என்றவர் அவன் வேலை நேரத்தில் இங்கு வந்ததற்குத் திட்டுவானோ எனப் பயந்து அவர் குரல் தடுமாறியது. அந்தப் பெண் தாயின் பின்னால் ஒளிந்தாள்.

“அக்கா, என்னாச்சு, ஏன் பாப்பா அழறா...?” என நேரடியாய் விஷயத்திற்கு வந்தான் பிரபஞ்சன்.

“அது தம்பி, என் பொண்ணுதான். இன்னைக்கு காலைல இருந்தே வயித்த வலின்னு சொல்லீட்டு இருந்தா. ஸ்கூலுக்கு அனுப்பாம இங்க கூட்டீட்டு வந்தேன். இப்போ திடீர்னு...” என்றவர் ஒரு நொடி தயங்கிப் பின், “பெரிய மனுஷியாகிட்டா. அதான் பயந்து அழறா. எனக்கும் பதட்டத்துல என்னப் பண்றதுன்னு தெரியலை. அவங்க அப்பாவுக்குப் போன் பண்ணியிருக்கேன். அவர் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாரு...” என்றார். அவர் கூறியதைக் கேட்டவன் சற்றே ஆசுவாசமானான்.

“அக்கா, பாப்பா பேரென்ன?” என வினவினான்.

“ஸ்வாதி...” அந்தப் பெண்மணி பதிலுரைக்கவும்,

“ஸ்வாதி, குட் கேர்ள் இல்ல? அம்மா பின்னாடி ஒளிஞ்சு நிக்காம இங்க அண்ணன் முன்னாடி வந்து நில்லுங்க...” என்றான். அவன் முன்னே வந்து நின்றவளுக்கு அழுகை நிற்கவில்லை. அழுது முகம் விழிகள் என எல்லாம் சிவந்திருந்தது. பிரபஞ்சனை பார்க்க சங்கடப்பட்டுக்கொண்டே குனிந்து நின்றாள் ஸ்வாதி.

“ஸ்வாதி ஏன் அழறீங்க? இதுல அழறதுக்கு என்ன இருக்கு?” பிரபஞ்சன் பரிவாய் வினவ,

“அது... பயமா இருக்கு அண்ணா!” என ஸ்வாதி தேம்பினாள்.

கனிவாய் அவளைப் பார்த்தவன், “இந்த மாதிரி நேரத்துல பயப்பட எல்லாம் கூடாது டா. இது ஒரு நேச்சுரல் ப்ராசஸ். கேர்ள்ஸ் எல்லாருமே இந்த ஸ்டேஜை கிராஸ் பண்ணி வந்து இருப்பாங்க. இதுல அசிங்கப்படவோ, பயப்படவோ ஒன்னும் இல்லை. இது தீட்டோ, தீண்டதாக விஷயமோ, அருவருப்பான விஷமோ இல்லை.உங்க உடம்புல வயசுக்கு ஏத்தமாதிரி சில சேஞ்சஸ் நடக்கும். அதுதான் இப்போ உங்களுக்கு நடந்து இருக்கு. இதை பத்தி ஸ்கூல்ல டீச்சர்ஸ் சொல்லி இருப்பாங்களே! இந்த மாதிரி நேரத்துல என்ன பண்ணணும் பண்ணக் கூடாதுன்னு அம்மாவும், டீச்சரும் சொல்லித் தருவாங்க டா. அதனால நீங்களும் அழுது அம்மாவைப் பதட்டப்பட வைக்கக் கூடாது. குட் கேர்ளா கண்ணைத் துடைச்சுக்கோங்க.‌‌..” எனப் பிரபஞ்சன் கூறவும், ஸ்வாதியின் அழுகை நின்றது.

“ஸ்வாதி முதல்ல சின்ன புள்ளையா இருந்தீங்க. ஆனால், இப்போ ரொம்ப பிக் பிக் கேர்ளா மாறிட்டீங்க. இனிமே நோ அழுகை. இதுக்கு பிறகுதான் நீங்க ரொம்ப தைரியமா இருக்கணும். நல்லா சாப்பிடணும். வயித்த வலி ஆர் வேற எந்த விதமான பிராப்ளம்னாலும் அம்மாகிட்ட சொல்லிடணும்.
நீங்க நல்லா ஹெல்த்தியா இருக்கணும்...” என மேலும் சில நிமிடங்கள் பேசி ஒருவாறு சிறுமியின் அழுகையை நிறுத்தியிருந்தான்.
(கீழே படிக்கவும் தொடர்ந்து)
 
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,810
Points
93


திடீரென உடலில் ஏற்ப்பட்ட மாற்றத்தை என்னவென அறியாது பதகளிப்பிலும், ஏற்கனவே காதில் கேட்ட விஷயங்களை வைத்து பயந்து போய்விட்டிருந்தாள் ஸ்வாதி. என்னதான் மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு பள்ளியிலும் கல்லூரியிலும் போதித்தாலும், அது எல்லாருக்கும் சரிவர சென்று சேருவதில்லையே. சில குழந்தைகள் அதை சரியாய் புரிந்து கொள்வதும் இல்லை. அதனாலே அவர்களால் இந்த திடீர் உடல் மாற்றத்தை அத்தனை எளிதாய் கடந்து விட முடிவதில்லை. அவர்கள் மனதளவில் அதை ஏற்க தயாராகும்போது தான் மாதவிடாய் பற்றிய புரிதல் அவர்களுக்கு அகப்படும்.

“அக்கா, நீங்கதான் பாப்பாவுக்கு சொல்லணும். நீங்களே இப்படி பதட்டமா நிற்கலாமா?” என அவரைக் கடிந்து, அவர் கையில் சில நூறு ரூபாய் தாள்களைத் திணித்தான்.

“இப்போ ஆட்டோ பிடிச்சு பாப்பாவோட நீங்க வீட்டுக்கு கிளம்புங்க. அவங்க அப்பாவை நேரா வீட்டுக்கு வர சொல்லிடுங்க. நான் வாட்ச்மேன்கிட்டே சொல்லி ஆட்டோ வர வைக்கிறேன்...” என்ற பிரபஞ்சனை நன்றியுடன் பார்த்தார் அந்தப் பெண்மணி. அவருக்கும் விழிகள் லேசாய் பனித்திருந்தன.

விறுவிறுவென்று பிரபஞ்சன் அறையிலிருந்து வெளியேறினான். அவனிடம் சில சந்தேகங்கள் கேட்க நினைத்த உமையாள் தன் பகுதியிலிருந்து வெளியே வந்தாள். அப்போது ஏதேச்சையாக அவன் பெண்கள் ஓய்வெடுக்கும் பகுதிக்குள் செல்ல, தானும் சென்று வாயிலருகே நின்றுவிட்டாள். அவன் பேசிய அனைத்தும் ஒன்றுவிடாது பாவையின் செவியை நிறைத்து தொலைத்தது. அவன் பேச்சில், அதன் சாரம்சத்தில், அவன் சிறுமியை அணுகிய விதம் என எல்லாம் ஆணியடித்தது போல ஆழமாய் அழுத்தமாய் மனதில் பதிந்துபோனது.

“ஏய்! சீ, அறிவுருக்கா டி உனக்கு? எத்தனை தடவை சொல்றது. அந்த இடத்தைவிட்டு நகராதன்னு. கையை வேற தொடுற... கருமம், கருமம், தீட்டு வேற!” எதற்கு தன் உடன் பிறந்தவன் திட்டுகிறான் எனத் தெரியாது பதிமூன்று வயது உமையாள் கண்ணை கசக்கிக்கொண்டே கையில் அவனது புத்தகத்தை வைத்திருந்தாள். அவசரத்தில் அண்ணன்விட்டுச் சென்ற புத்தகத்தைக் கொடுக்க வந்தவளைத்தான் முகத்தில் அடித்தது போல திட்டியிருந்தான் வேலன், உமையாளின் அண்ணன்.

“மறுபடியும் நான் போய்க் குளிக்கணும்...” என அவன் தாயை முறைத்தவாறே அறைக்குள் நுழைய, “அடியேய்! அறிவுருக்கா உனக்கு. எத்தனை தடவை அந்த இடத்தைவிட்டு அசையாதன்னு சொல்லி இருக்கேன். ஆம்பளை புள்ளை வெளிய போறப்போ, இப்படித்தான் தீட்டோட போய் அவனைத் தொட்டு நிக்கிறதா?” என மாதவிடாய் நேரத்தில் தாய் கடிந்ததும், விழிகளில் சரசரவென நீர் இறங்க அறைக்குள்ளே முடங்கிப் போனாள் பதிமூன்று வயது உமையாள். அப்போது அவளுக்கு போதிக்கப்பட்டது மாதவிடாய் என்றால் தீட்டு, அருவருக்கத்தக்க விஷயம் என்றுதான். எதற்காகத் திட்டுகிறார்கள் என அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. புரியும் வயதில் அதை ஏற்றுக்கொள்ளவும் பிடிக்கவில்லை என்பதே உண்மை.

“ஹே கேர்ள், இங்க என்ன பண்றீங்க?” ஸ்வாதியையும் அவளது தாயையும் தானியில் ஏற்றிவிட்டு உள்ளே நுழைந்தப் பிரபஞ்சன் வினவவும், நினைவிலிருந்து மீண்டு சுய உணர்வை அடைந்தாள் உமையாள்.

சில நிமிடங்கள் ஆழமாய் அழுத்தமாய் அவனது முகத்தைப் பார்த்தாள். மனம் அந்த நொடி அவனை, அவன் பாவனைகளை மனதில் பத்திரப்படுத்தி சுருட்டிக்கொண்டது. ‘இவன் ஏன் என்னுடைய வாழ்வில் முன்பே வரவில்லை?’ என மனதினோரம் ஏக்கம் விருட்சமாய் வளர்ந்து நெஞ்சைப் போட்டு அழுத்தித் தொலைத்தது. தன் எண்ணத்திலிருந்த கணவன் என்ற பிம்பத்தின் பிரதிபிம்பமாய் நிற்பவனை கண்டு ஏதோ உணர்வொன்று மனதில் முகிழ்த்தது. துக்கமா? சந்தோஷமா? இல்லை இது நடக்காதோ என்ற பரிதவிப்பா? என்னவென்று வரையறுக்க இயலாத உணர்வொன்று குபுகுபுவென தொண்டை வரை மெதுவாய் மேலெழும்பியது. இமையை லேசாய் சிமிட்டி அவனைப் பார்த்தாள். எந்த வித அலட்டலும் இல்லாத இயல்பான பாவனைதான் ஆடவனிடம்.

என்னுடைய விருப்பத்திற்கு மதிப்பளித்து இன்றுவரை ஒரு வார்த்தைக் கூட அதிகமாய் பேசாத, பேச முயற்சிக்காத அதைவிட ஆண் பெண் என்ற எந்தவித பாலின வேறுபாடுமின்றி, எல்லோருடைய கருத்துக்கும் மதிப்பளிக்கும் இந்த பிரபஞ்சனை கொஞ்சம் பிடித்தது. ஈர்த்தான், எந்த சிரத்தையும் இன்றி பிரபஞ்சன் உமையாளை ஈர்த்தான். கொஞ்சம் கஷ்டமும் அதிக இஷ்டமுமாக அவனை அவனாக அவதானிக்க முயன்றாள் பெண். முதல் முறையாக முயன்றாள். உள்ளுக்குள்ளே ஒரு நடுக்கம், பயம் அனைத்தும் சேர்ந்து இதயத்தின் வேகத்தை அதிகரிப்பதை அவளால் உணர முடிந்தது. தன் இதயம் தொண்டைக்குழியில் துடிப்பது போன்றொரு பிரம்மை பெண்ணுக்கு.

சரியா? தவறா? என முதல் போராட்டத்தின் ஆணிவேர் மனதில் அந்தக் கணம் வேரூன்றியது. அதற்கு பதில் சொல்லத் தெரியவில்லை உமையாளுக்கு. அதைவிட பதிலியம்ப விருப்பமும் இல்லை.

“ஹலோ மேடம்...” என்று பிரபஞ்சன் இரண்டாவது முறை அழைத்ததும், எதுவும் பதிலளிக்காமல் அவனது கண், காது, முகம் என எல்லாவற்றையும் ஆராய்ந்து முடித்தவள், “இந்த ஃபைலை உங்ககிட்ட காட்ட எடுத்துட்டு வந்தேன் சார்...” என்றாள்.

அவளது பார்வையும் குரலையும் ஆராய்ந்த பிரபஞ்சன் நெற்றியை சுருக்கி ஒருநொடி யோசித்துவிட்டு, “ஓகே, கேபின் போகலாம்...” என முன்னே நடந்தான். அறைக்குள் நுழைந்தவள், அலுவல் சம்பந்தமான பேச்சுக்கு மாறிவிட்டிருந்தாள். தற்காலிகமாக தனது எண்ணத்திற்கு தடை விதித்திருந்தாள்.

பேசி முடித்ததும், “உமையா, எதாவது ப்ராப்ளமா?” என நெற்றியைச் சுருக்கி வினா தொடுத்தான் பிரபஞ்சன். அவளது முகத்தை வைத்தே அகத்தை கணித்தவனை காண்கையில் ஏதோ தனக்கான இடம், தனக்கான பாதை இதுதானோ? என முதன்முதலில் தோன்றியது அவளுக்கு. இந்தப் புரிதல் ஏன்? எதற்கு? என்னிடம் மட்டுமா? தெரியவில்லையே! உள்ளமும் விழிகளும் சட்டென்று கலங்கிப் போக, பார்வையை அவனிடமிருந்து நொடியில் அகற்றி சுற்றுப்புறத்தில் பதித்தாள்.

கலங்கிய விழிகளை அவனிடம் காட்டாது மறைத்தவள், “ஒன்னும் இல்லை சார்...” என பதிலளித்துவிட்டு விறுவிறுவென வெளியேறிவிட்டாள்.

அவன் முன்னே அழக்கூடாது, தன் பலம், பலவீனம் உணர்வுகள் என எதையும் அவனிடம் வெளிப்படுத்திவிடக் கூடாது என நொடியில் அந்த சூழ்நிலையிலிருந்து தப்பித்து இருந்தாள்.

‘என்னாச்சு இவங்களுக்கு?’ எனப் பிரபஞ்சன்தான் யோசனையாய்ப் பார்த்தான். அவள் முகத்திலிருந்தக் கலக்கம் இவனை இம்சித்து தொலைத்தது.

‘ச்சு...’ என நெற்றியைத் தட்டினான். என்னவாய் இருக்கும் என மூளையும் மனதும் அலசி ஆராய, விடை என்னவோ சுழியம்தான். மாலை வீட்டிற்க்கு செல்லும்போது உமையாளைப் பார்த்தான். அவன் தன்னைப் பார்க்கிறான் எனத் தெரிந்தும் அவன் புறம் திரும்பாமலே சென்றுவிட்டாள். எங்கே அவன் முகத்தைப் பார்த்தாள், அகம் வெளிப்பட்டுவிடுமோ? என பயமாய் இருந்தது பெண்ணுக்கு.

புதிதாய் முளைத்த உணர்வுக்கும் மனதின் கேள்விக் கணைகளுக்கும் இடையில் போராடித் தவித்தது பாவையின் மனது.

“ம்மா, அம்முவுக்கு பசிக்குது மா...” குழந்தை அவளின் கையை சுரண்டவும்தான் புறத்தூண்டல் உரைத்தது உமையாளுக்கு.

‘கடவுளே!’ என தன்னைக் கடிந்தவள், தன் கைப்பையிலிருந்து ரொட்டிகளை எடுத்து குழந்தைக்குக் கொடுத்தாள். அடுத்து எப்படி பேருந்திலேறி வீடு வந்து சேர்ந்தாள் என்பது அவளே அறியாத ஒன்று.

நடந்ததை மறக்க, இல்லையில்லை நினைவுகளிலிருந்து தற்காலிகமாக விடைபெற எண்ணித் தவித்தது உமையாளின் உள்ளம். தன் மனதை திசை திருப்ப குழந்தைக்கு எதாவது செய்து கொடுக்கலாம் என சமைத்தாள். இருந்தும் மனம் சமன்படவில்லை. அமுதாவைப் பார்த்துவிட்டு வரலாம் என குழந்தையுடன் அவள் வீட்டிற்கு சென்றாள்.

“வா உமா...” அமுதா அவளை வரவேற்க, “கொழுக்கட்டை செஞ்சேன் அமுதா. அதான் உனக்கும் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்னு வந்தேன்...” என்று தான் சமைத்ததை அவளிடம் கொடுத்த உமா, சிறிது நேரம் தோழியிடம் உரையாட ஆரம்பித்தாள். மனது சற்றே ஆசுவாசம்கொண்டது.

வீட்டிற்கு சென்றாலும் பிரப்ஞசனின் மனம் முழுவதும் உமையாளைத்தான் சுற்றி வந்தது. கையில் அலைபேசியை வைத்திருந்தவன், அவள் எண்ணிற்கு அழைக்கலாமா? வேண்டாமா? என பட்டிமன்றம் ஒன்றை நிகழ்த்தி கடைசியில் அழைத்திருந்தான்.

ஆராதனாதான் உமையாளின் கைப்பேசியை வைத்திருந்தாள். அழைப்பு வந்ததும் அதை ஏற்றவள், “ஹலோ... நான் அம்மு பேசுறேன்...” என்றாள் மழலை குரலில். அதில் பிரபஞ்சனுக்கு புன்னகை ஜனித்தது.

“அம்மு பேசுறீங்களா? சரி, சரி. அம்மாகிட்ட போனைக் கொடுக்குறீங்களா?” பிரபஞ்சன் வினவ,

“ஹ்ம்ம்... அம்மு குட் கேர்ள். அம்மாகிட்ட கொடுத்துடுவா. அம்மா சொன்னா...” என்றவாறே உமையாளிடம் சென்றவள், “ம்மா...” என அலைபேசியை அவளிடம் நீட்டிருந்தாள்.

“என்ன அம்மு?” என்ற உமையாள் அலைபேசியைப் பார்த்தாள். புதிய எண்ணிலிருந்து அழைப்பு வரவும், அவளுக்கு யாரென தெரியவில்லை. பிரபஞ்சனின் தனிப்பட்ட எண் அது. கோகுல், சாரதா மற்றும் நெருங்கியவர்களிடம் மட்டும்தான் அந்த இலக்கத்தைப் பகிர்ந்திருந்தான்.

“ஹலோ...” உமையாள் குரல் கேட்டதும் உதட்டை குவித்து மூச்சை வெளிவிட்டவனுக்கு அவளுடைய குரல் இதயத்தின் அடியாழம் தொட்டு மீண்டது.
“ஹலோ, உமையா...” என்றான் கரகரத்தக் குரலைச் சரிசெய்து.

அவன் குரலை நொடியில் மனதும் மூளையும் இனம் கண்டறிய, அசாத்திய மெளனம் அவளிடம்.
அந்தக் குரல் பெண்ணை ஏதோ செய்ய, விழிகள் கலங்கி கண்ணீர் வெளிவரத் துடித்தது. உதட்டைக் கடித்து அதை உள்ளிழுத்தவள், “ஒரு நிமிஷம் அமுதா, பேசிட்டு வரேன்...” என தனியே சென்றுவிட்டாள்.

தன்னை சமாளிக்க முயன்றவளுக்கு கரங்களில் மெலிதான நடுக்கம். உள்ளமும் சேர்த்து நடுங்கி தவித்துப் போனது. மெல்லிய குரலில்
“சொல்லுங்க சார்...” என்றாள். ஏனோ அந்தக் குரல் முழுவதும் அவனுக்கான தவிப்புதான் நிரம்பி ததும்பியது. தன்னை, தன் குரலை நொடியில் அடையாளம் கண்டுவிட்டாள் என்ற நினைப்பே தித்தித்தது பிரபஞ்சனுக்கு. அவள் பேச்சிலிருந்த தடுமாற்றத்தையும் மனம் குறித்துக்கொண்டது. ஆனால், அதற்கு பெயரிட தெரியவில்லை ஆடவனுக்கு.

“அது... அது உமையா, ஆர் யூ ஓகே? ஐ திங்க், நீங்க சரியில்லை. ஐ மீன் உங்களுக்கு என்ன பிராப்ளம்? ஒரு ப்ரெண்டா என்கிட்ட ஷேர் பண்ணிக்கலாம்...” திக்கித் திணறி ஒருவழியாய் கேட்டுவிட்டான். ஒரு பெண்ணிடம் பேச இத்தனை தயக்கம் ஏன்? மனது கேலி செய்தது. அதில் லேசாய் முகமும் காது மடல்களும் கூட சிவந்து போனது.

உமையாளிடம் பேச்சே இல்லை. என்ன சொல்வாள்? நீதான் பிரச்சனை என்றா? உன் மீது துளிர்விட்டிருக்கும் புதிதான உணர்வுக்கு என்ன பெயர் வைப்பது எனத் தெரியாது தடுமாறுகிறேன் என்றா? உன்னிடம் மட்டும் மனம் மீண்டும் எதிர்பார்ப்பை விதைக்கிறது என்றா? முற்றுப்புள்ளி வைத்த வாழ்க்கையில் நீ வைத்த காற்புள்ளி என்னை அதிகமாய் பாதித்தது என்றா? எதைக் கூறுவாள். அமைதி, அசாத்திய அமைதி இருவருக்கும் இடையில் கோலோச்சியது.

“ஹே கேர்ள்...” என்றான் பிரபஞ்சன். அவனுக்கும் மனதிற்குள் பெண்ணின் அமைதி ஏதோ செய்தது. இந்தக் குரலை, இந்த அழைப்பை உமையாளால் தாங்கிக் கொள்ள முடியும், அவனை சமாளிக்க முடியும் எனத் தோன்றவில்லை.

அவனின் அழைப்பில் தொக்கிநின்ற விழிநீர் இமை முழுவதும் படர்ந்து சொட்டு சொட்டாய்க் கன்னத்தில் இறங்க, ‘அப்படி கூப்பிடாதீங்க. எனக்குப் பிடிக்கலை. என்னால உங்களை சமாளிக்க முடியும்னு தோணலை...’ கத்த வேண்டும் என பெண் மனம் உந்தித் தள்ளியது. குரல் அடைத்து சதி செய்ய, சத்தியமாய் அவனிடம் பேச முடியாது என எண்ணம் தோன்ற, அழைப்பைத் துண்டித்துவிட்டாள். மூச்சை அடைத்துக்கொண்டு நின்ற ஏதோ ஒன்றிலிருந்து விடுபட்டது போலொரு உணர்வு. பெரிதாய் மூச்சை வெளிவிட்டவளின் வலக்கரம் உயர்ந்து இமையில் சிலிப்பிக்கொண்டிருந்த நீரை துடைத்தது. இடது கரத்திலிருந்த தொலைபேசியில் பிரபஞ்சனது இலக்கத்தையே பார்த்தாள் உமையாள்.

சில நொடிகளில் அழைப்பு துண்டானதை உணர்ந்தவன், அலைபேசியை தூக்கி தூர எறிந்தான். அத்தனை பொறுமையாய் இருப்பவனுக்கும் ஏனோ அன்று என்னவென சொல்லமுடியாத உணர்வு, கோபமா? வருத்தமா? இந்தப் பெண்ணை தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே என்ற ஆற்றாமையா? ஏதோ ஒன்று மனதை அழுத்த, நெற்றியை தேய்த்துவிட்டவன், அப்படியே இருக்கையில் பொத்தென அமர்ந்துவிட்டான்.

‘ஹௌ டிபிகல் டூ அண்டர்ஸ்டாண்ட் கேர்ள்ஸ்...’ மனம் அந்த நேரத்தில் மொத்தப் பெண்கள் வர்க்கத்திற்கும் சேர்த்து குறைபட, அவனை இன்னுமே படுத்தத் தயாராகியிருந்தாள் உமையாள்.

தொடரும்...





 
Active member
Messages
131
Reaction score
89
Points
28
Me be like : nangale engala purinjuka mudiyama suthurom.. neenga vera yen prabanjan??? 🤪 Cute ud da 🤩❤️
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Prabha sikirama uma unnoda entha confusion answer solluva don't feel man😄😄😄uma ku ippo unaya face panna kojam time agum wait pannu prabhajan💝💝
 
Active member
Messages
113
Reaction score
59
Points
28
உமாவோட தடுமாற்றம் தப்பில்ல... யாருக்கு தான் ப்ரபஞ்சனை பிடிக்காது.... அவ்ளோ சாப்ட் டு & ஸ்வீட் டு.... 😘😘😘🥰🥰🥰🥰
 
Top