• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,215
Reaction score
3,608
Points
113
ஹாய் டியர்ஸ், எழுத்தாளர் நேத்ராவின் என் இசைச் சாரலே மற்றும் ராக மோக செந்தேனே கதையை நம்ப யூட்யூப் சேனல்ல ஆடியோவா போட்டிருக்கோம். ரெண்டு குரலுமே உங்களை மயக்குற குரல். மறக்காம நம்ப சேனலை சப்ஸ்க்ரைப் பண்ணுங்க, ஆடியோ நாவல் கேட்டு மகிழுங்கள் 💖🫶 ஓடிப் போய் சப்ஸ்க்ரைப் பண்ணுங்க டியர்ஸ் ✨

ராக மோக செந்தேனே - ஆர்.ஜே ரெபேகா

என் இசைச் சாரலே - ஆர்.ஜே பிரியா மோகன்



நெஞ்சம் – 58 💖

தேவா தலையில் கைவைத்தவாறே மனைவி முன்னே முட்டிப் போட்டு அமர்ந்தான். “சொதப்பிட்டேனா ஆதி?” எனத் தயங்கி கேட்டு பிடரியைக் கோதினான் அவள் முகம் பார்க்க சங்கடப்பட்டு. ஆதிரை எழுந்தமர்ந்து அவனை முறைத்தாள்.

“சாரி டீ... சாரி. நான்... நான் இந்த மாதிரி கேர்ள்ஸ் விஷயத்துல மக்கு டீ!” என்றான் அவள் முகம் பார்க்காது. ஆதிரை அவனை முறைத்தாலும் குறுகுறுவென பார்த்தாள். அப்பார்வை என்னவோ சட்டென்று அவன்
மனத்தில் நாணத்தையும் ஒருவித அவஸ்தை உணர்வையும் ஏற்படுத்தியது.

அவன் வேறு ஏதோ பேசும் முன்னே, “ஐயா பெட்ல தானே படுப்பீங்க. போங்க.‌.. போய் படுங்க. இன்னைக்கு மட்டும் இல்ல, இனிமே பில்லோவைதான் நீங்க கட்டிப் பிடிச்சுப் படுக்கணும்!” என்றாள் முறைப்பும் கேலியுமாய்.

“ஹே.. அநியாயம் டீ!” எனத் தொட வந்தவனை கை நீட்டித் தடுத்தவள், “டோன்ட் டச் மீ!” என்றாள் கறாரான குரலில்.

“நோ வே டீ பொண்டாட்டி!” என்றவன் படக்கென்று அவளைக் கைகளில் அள்ளினான்.

இதை எதிர்பாராதவள் அதிர்ந்து, “யோவ் தேவா.‌..” என்றாள் உள்ளே சென்ற குரலில்.

“ம்ப்ச்... அபியை எழுப்பி விட்றாத டீ. அப்புறம் மொத்தமும் சொதப்பிடும்!” என அவள் செவியருகே முணுமுணுத்துவிட்டு அவளைத் தூக்கிச் சென்று கூடத்தில் இறக்கிவிட்டவன் பாயையும், தலையணையும் எடுத்து வந்து போட்டான். திரும்பி பார்க்க, மனைவியைக் காணவில்லை.

‘எங்கப் போனா இவ?’ என அவன் யோசித்த நொடி வெட்கம் கொண்ட முகத்தை அவனுக்கு காண்பிக்காது தலையைக் குனிந்தவாறே வந்தவளை ஏற இறங்க கேலியாய் பார்த்தான் கணவன்.

“என்ன... என்ன பார்வை இது? மக்குப் புருஷனை வச்சிருந்தா இப்படித்தான் நானே பூவெல்லாம் வாங்கிட்டு வரணும்!” என வெட்கமாய் முணுமுணுத்தாள். இவன் பாயை விரித்த போது ஆதிரை குளிர்சாதன பெட்டியில் தான் முன்பே வாங்கி வைத்திருந்த பூவை எடுத்து தலையில் வைத்திருந்தாள். இரண்டு பக்க தோளிலும் குண்டு மல்லிகைப் பூச்சரம் தொங்கியது.

அவன் பார்வை இன்னுமே மாறாதிருக்க, “என்னங்க?” என சிணுங்கி அவன் மார்பில் ஒண்டினாள் மனைவி. தேவாவிற்கு முறுவல் படர்ந்தது.

“வெல் ப்ரிபேர்டா இருந்திருக்கா என் பொண்டாட்டி. ப்ம்ச்... நான்தான் மட்டி போல!” என்றான் கேலியாக.

“சொன்னாலும் சொல்லலைனாலும் மக்கு மட்டிதான் நீங்க!” அவன் அணைப்பிலிருந்தே நிமிர்ந்து கணவனை முறைத்தாள் பெண்.

“ஹக்கும்... சரி, சரி. ஸ்டார்ட் பண்ணலாமா?” எனக் கேட்டவன், “ஆதி...” என அழைக்க, இவள் முகத்தை அவன் மார்பில் வைத்து தலையை மட்டும் அசைத்தாள்.

“சரி... நீ பாய்ல போய் உட்காரு டீ!” என்றவனை அவள் கேள்வியாகப் பார்த்தாள்.

“உட்காரு டீ...” தேவா அழுத்திக் கூறவும் அவனை முறைத்துவிட்டு அமர்ந்தாள். படக்கென மனைவி மடியில் தலை சாய்த்துப் படுத்துக் கொண்டான். அவன் செய்கையில் ஆதிரைக்கு சிரிப்பு பொங்கியது.

“தேவா!” என்றாள் உதட்டோர சிரிப்பை மென்றபடி.

“ஹம்ம்... சின்ன புள்ளைத் தனமா இருந்தாலும் ரொம்ப நாள் ஆசை டீ. கல்யாணம் பண்ணி இப்படி தலைநிறைய மல்லிப் பூவோட என் பொண்டாட்டி சிரிச்ச முகமா இருக்க, நான் அவ மடியில படுத்துக் கதை பேசணும்னு!” என்றவன் அவள் கையை எடுத்து தன் தலையைக் கோத வைத்தான். அவள் சிரிப்பு மாறாது அவன் சிகையை அளந்தாள்.

“அப்படியே அள்ளுறீயே ஆதி இந்த காஸ்ட்யூம்ல. நைட்டில கூட அழகா இருக்கா என் பொண்டாட்டி!” என அவள் மேவாயைத் தொட்டவன் கையைத் தட்டிவிட்டவள், “இந்த மாதிரி பொய்யெல்லாம் நம்புறதுக்கு நான் டீனேஜ் கேர்ள் இல்ல மிஸ்டர் தேவநந்தன்!” என்றாள் குறும்பாய்.

“ச்சு... பெர்பாமென்ஸ் பண்ண விடுடீ. கல்யாணமாகி இத்தனை நாள் கழிச்சு என் பொண்டாட்டி கிட்ட விட்டிருக்கா!” குறையாய் கூறியவனை ஆசையாய் பார்த்தாள் மனைவி.

“ரொம்ப வெயிட் பண்ண வச்சுட்டேனா தேவா?” என வாஞ்சையாய் கேட்டாள்.

“ஆமா... கொஞ்சம் லாங் தான் லைக் சீரியல் மாதிரி!” என அவன் உதட்டை பிதுக்க முறைத்துக் கொண்டே அவன் முன்முடியை ஒதுக்கி நெற்றியில் ஈரம்படர முத்தமிட்டாள்.

மூச்சை இழுத்துவிட்டவன், “மல்லிகைப் பூவோட மயக்குறீயே டீ!” என எழுந்து அமர்ந்தான்.

“ஆதி... அது...‌ நான்!” என தயங்கியவனை இவள் சுவாரஸ்யமாகப் பார்த்தாள். அவள் பார்வை தந்த குறுகுறுப்பில் தேவாவின் காது முகமெல்லாம் சிவந்தது.

“யூ ஆர் ப்ளஷிங் தேவா!” என அவன் காதை மென்மையாய் தொட்டவள், “வெக்கப்படாம என்னென்னு சொல்லுங்க!” என்றாள் உதட்டோரம் அரும்பிய புன்னகையுடன்.

“ப்ம்ச்... நான் எதுவும் சொதப்பிட்டா!” வேறு ஏதோ சொல்ல வந்தவனின் சட்டை நுனியைப் பிடித்திழுத்து தன் முகத்தருகே கொண்டு வந்தாள் ஆதிரை. இரு உதடுகளுக்கும் இடையே நூலிழை இடைவெளி இருந்தது.

“நோ மோர் டாக்ஸ்!” என்றவள் இடைவெளியை மொத்தமாய்க் குறைத்திருக்க, நான்கு உதடுகளும் ஒட்டிக் கொண்டன. தேவா மெதுவாய் கண்களை மூடினான். கை மனைவியின் இடையைப் பிடித்திழுத்து தன்னோடு அணைத்தது.

மனைவித் தொடங்கி வைக்க, தன் தயக்கத்தை எல்லாம் உதறித் தள்ளித் தன்னை இழுத்துச் செல்லுபவளுடன் சேர்ந்து செல்ல முடிவெடுத்தான். முத்தம் மோட்சம் பெற்ற போது இருவரும் தன்னிலை இழந்து போயிருந்தனர்.

வரையற்ற வரைமுறைகளை எல்லாம் மெதுவாய் உடைத்தான் தேவா. என்னதான் ஆதிரை முன்னெடுத்தாலும் அவன் தொடும்போது கூசி சிலிர்த்தது பெண்மை. அவன் கையை விலக்கிவிட முயன்றாள். ஆனால் தேவா அவளைக் கவனிக்கும் நிலையிலே இல்லை. பாகம் பாகமாக அவளைப் பிய்த்து தின்றுவிட்டுத்தான் ஓய்வான் என்பது போலிருந்தது அவனது செயல்கள்.

“தேவா... யோவ்...” என்றவள் என்னென்னவோ முனங்கி அவன் முகத்தை தன்னை நோக்கித் திருப்ப, அவளது முயற்சியைத் தடுத்து தன்னோடு இறுக அணைத்துக் கொண்டவன் அவள் கூந்தலில் முகம் புதைத்து, “ஆதி...” என்றான் ஆழ்ந்து அனுபவித்த குரலில். இவளுக்கு வெட்கமாய் போனது.

“கொஞ்ச நேரம் அமைதியா இரு டீ!” என அதட்டி அவள் கையைத் தலைக்கு மேலே தூக்கினான்.

“உன் பொண்டாட்டியை யாரும் தூக்கிட்டாயா போய்டப் போறாங்க?” அவள் மெல்லியதாய் அதட்ட முயன்று முடியாது சிணுங்க, இவனிடம் நிதானம் மொத்தமாய் தொலைந்திருந்தது. அவளில் முழ்கியவனுக்கு இது என்ன மாதிரியான உணர்வென்ற ஆராய்ச்சியில் மூளைத் தடுமாற, உடல் முழுதும் ஊடுருவும் சிலிர்ப்பை இதயம் இதமாய் ஏற்றுப் பத்திரப்படுத்தியது. அவள் சிணுங்கல், கெஞ்சல் எல்லாம் தேவா மொத்தமாய் உள்வாங்கினான்‌. பெயரளவில் கணவன் மனைவியாய் மனமொத்து வாழ்ந்தவர்கள் இன்று முழுமை அடைந்திருந்தனர்.

ஆதிரையை அணைத்துப் படுத்த தேவாவின் கைகளில் மெல்லிய நடுக்கம். கைவிரல்கள் இடையில் வியர்த்துப் பிசுபிசுத்துப் போனது. மனைவி கொடுத்த உணர்வு இன்னுமே அவனை நிலையாய் இருக்கவிடவில்லை. கண்ணை மூடி சில நொடிகள் அமைதியாய் படுத்து வெடவெடக்கும் உடலையும் தடதடக்கும் மனதையும் ஆசுவாசம் செய்தான். ஆதிரை அவன் செயல்களைத்தான் உதட்டோரம் முறுவல் படர பார்த்திருந்தாள்‌.

மெதுவாய் கண்களைத் திறந்தவன், “என்ன டீ... என்ன பார்வை இது?” அவள் பார்வை கொடுத்த சங்கடத்தை முகத்தில் காண்பிக்காது அதட்டலாய் கேட்டான்.

“இல்ல... தர்ஷினி சொன்னா... சிரிக்கவே காசு கேட்குற மனுஷனோட எப்படி வாழ்க்கையை ஓட்டப் போறீங்கன்னு. பட் தேவா... ம்கூம்... நீங்களா இது? உங்களுக்கு இப்படியெல்லாம் பேச தெரியுமா?” என வெட்கத்துடன் அவனோடு ஒண்டினாள் மனைவி. தேவாவிற்கும் அவள் கேள்வியில் சட்டென ஒரு அவஸ்தை தோன்றிற்று.

“ஏன் டீ... நானும் மனுஷன் தானே. ம்யூசியம் பீஸ் மாதிரி பார்க்காத டீ!” என அதட்டியவன், “அங்க நான் பாஸ் டீ. பட் இங்க என் பொண்டாட்டியோட புருஷன். இது அவளுக்கு மட்டுமே தெரிஞ்ச என பக்கம்!” என்றான் கிசுகிசுப்பாய்.

“ஆமா... ஆமா... இது எனக்கு மட்டும்தான். என் தேவா என் புருஷன்!” என அவனை அணைத்துப் பூனை போல அவனுக்கு அருகே சுருண்டு கணவன் உடல் சூட்டில் தணிந்தாள் ஆதிரை.

“ஆமா... ஆமா! என் பொண்டாட்டிக்கு மட்டும்தான் இந்த தேவா!” என அவள் மூக்கோடு மூக்கை உரசியவன் அவள் உதட்டில் மெல்லிய முத்தமிட்டான்.

“ஆதிரை... டயர்டா இருக்கா உனக்கு?” அவள் செவியில் முத்தமிட்டு கிறங்கிய குரலில் கணவன் கேட்டதும், இவள் முகம் சிவந்தது.

“ம்கூம்...” என்றாள் சின்ன குரலில். மனைவியை அள்ளிக் கொண்டான் கணவன். முன்பு போல அவனிடம் வேகமில்லை. மிக மென்மையாய் லாவகமாய் அவளைக் கையாண்டான். ஆதிரை அவன் கையில் தன்னை ஒப்புக் கொடுத்துவிட்டு கண்ணை மூடிக் கொண்டாள்.


அவளை இறுக அணைத்தவன், “இந்த ஃபீலிங் ரொம்ப நல்லா இருக்கு ஆதி!” என்றான் முணுமுணுத்து. அவள் முகத்தில் சின்னதாய் வெட்கப் புன்னகை. கணவன் கையைப் பிடித்துக் கொண்டாள். சிறிது நேரம் பேச்சில்லை.

தேவாவின் மூச்சு சீராய் ஏறியிறங்க திரும்பிப் பார்த்தாள். கணவன் ஆழ்ந்து உறக்கத்திற்குச் சென்றிருந்தான். இவள் சிரிப்பும் முறைப்புமாய் அவனைப் பார்த்தவள் எழுந்து கழிவறைச் சென்றுவிட்டு, மகன் என்ன செய்கிறான் எனப் பார்த்தாள். அவன் அசையாது தூங்கினான். சில நொடிகள் அவனைப் பார்த்துவிட்டு சமையலறைக்குச் சென்று நீரைப் பருகிவிட்டு வந்து தேவாவிற்கு அருகே அமர்ந்தாள்.

சில நொடிகள் உதட்டோடு ஒட்டிக் கொண்ட முறுவலுடன் அவனையே பார்த்திருந்தாள். தேவா அவள் எழுந்து சென்ற போதே விழித்துவிட்டான்.

“என்ன டீ... தூக்கம் வரலையா? என் முகத்துல என்ன ஷோவா ஓடுது?” எனக் கேலி செய்தான்.

“தூங்கலையா நீங்க?” மனைவி கேட்டதும்,

“நீ எழுந்து போனதுமே எனக்கு முழிப்பு வந்துடுச்சு. சரி, வந்து படுக்காம ஏன் உக்காந்தே இருக்க?” கேள்வி கேட்ட தேவா அவள்புறமாய் திரும்பி படுத்தான்.

“தூக்கமே வரலை தேவா...” என இழுத்தவள், “ரொம்ப சந்தோஷமா இருக்கேன் போல!” என்றாள் உதட்டைப் பிதுக்கி.

அந்தக் குரலில் ஒற்றைக் கண்ணைத் திறந்தவன், “அப்போ இனிமே டெய்லி என் பொண்டாட்டியை சந்தோஷப்படுத்த வேண்டியதுதான்!” என்றான் குறும்பாய். அதில் ஆதிரையின் முகம் சிவந்தது. அவன் தோளில் நறுக்கென்று கிள்ளினாள்.

அந்தக் கையை அப்படியே பிடித்திழுத்து தன்னருகே அவளைப் படுக்க வைத்து அணைத்துக் கொண்டான் தேவா. இன்னுமே அவள் வாசம் அவனை கிறங்க வைத்தது.

“எப்படித்தான் இத்தனை நாள் உன்னை பக்கத்துல வச்சிட்டு சும்மா இருந்தேன்னு தெரியலை டீ!” என்றான் பெருமூச்சுடன். ஆதிரை அவனை முறைக்க முயன்றாலும் சிரிப்பு வந்தது.

“உனக்கு உள்ள போய் படுக்கணும்னா படு ஆதி. நான் இங்கேயே தூங்குறேன்!” என்றான் அவளுக்காகப் பார்த்து.

“வேணாம்... வேணாம் தேவா. அபி மோஸ்ட்லி எழ மாட்டான். அப்படி எழுந்தாலும் நான் கான்ஷியஸாதான் இருப்பேன். உடனே எழுந்து போய்டுவேன்!” மறுப்பாய் தலையை அசைத்தாள் அவள்.

“எப்பவுமே எப்படி கன்ஷியஸா இருக்க முடியும் ஆதி?” அவன் மனைவியின் முகம் பார்க்க,

“கூட துணைக்கு யாருமே இல்லாம புள்ளையை வச்சிட்டு தனியா இருந்தா தானா அட்டென்டீவ் ஸ்லீப் பழகிடும்!” எனக் கூறி முறுவலித்தாள் ஆதிரை.

அவளைத் ஆதுரமாய்ப் பார்த்தவன், “ரைட்டு... இனிமேதான் நான் இருக்கேனே. நீ நல்லா தூங்கு!” என்றான்.

“ஹம்ம்... கரெக்ட்தான். நல்லா தூங்கணும். தூக்கம் வந்தா தூங்குவேன் தேவா!” என்றாள் அவன்புறம் திரும்பி கணவன் முகம் பார்த்து.

அவள் முகத்தில் விழுந்த முடிக்கற்றையை ஒதுக்கியவன், “கண்ணை மூடி தௌசண்ட் வரை கவுண்ட் பண்ணு ஆதி. தூக்கம் வந்துடும்!” என்றான் தேவா. அவனை முறைத்தாள் மனைவி.

“ட்ரை பண்ணிப் பார்க்கணும் டீ!” என அதட்டியவன் சொல்லுக்கு இணங்கி ஆதிரை ஆயிரம் வரை எண்ண முயன்று சிந்தனை எங்கெங்கோ சென்று சிறிது நேரத்திலே தூங்கிப் போனாள். தேவாவும் அவளது அண்மையில் சுகமாய்க் கண்ணை மூடினான்.

காலில் ஜிவ்வென்று குளிர் பரவ ஆதிரைக்கு உறக்கம் கலைந்தது. தரையிலிருந்த குளிர் அவளது காலிற்கு கடத்தப்பட, எழுந்து அமர்ந்துவிட்டாள். தேவா மறுபுறம் உறங்கிக் கொண்டிருந்தான். இவள்தான் பாயிலிருந்து உருண்டு தரைக்கு வந்துவிட்டாள் போல. நேரத்தைப் பார்க்க அது ஆறு முப்பதானது. திரைச்சீலையைத் தாண்டி சூரிய வெளிச்சம்‌ உள்ளே படர்ந்தது.

மீண்டும் உறங்கத் தோன்றவில்லை. எழுந்து குளிக்கலாம் என அறைக்குள் நுழைந்தாள். அபி கட்டிலின் விளிம்பில் தூங்கிக் கொண்டிருந்தான். இவள் சென்று அவனைத் தள்ளிப் படுக்க வைத்தாள். கொட்டாவி வர கண்ணை சிமிட்டி உறக்கத்தை விரட்டிவிட்டு உடுத்துவதற்கு உடையை எடுத்தாள்.

சேலையையும் ஒரு நைட்டியையும் உருவினாள். சமைக்கும் போது சேலை பாழாகி விடக் கூடாது என குளித்து முடித்து நைட்டியை அணிந்து வெளியே வந்தாள். ஈரம் சொட்டிய கூந்தலை விரித்து விட்டவள் துண்டை நீள்விருக்கையில் காயப்போட்டாள். மெல்லமாய் நடந்தாள்‌. இருவரின் உறக்கமும் கெட்டு விடக் கூடாதென வெகு கவனமாய் அனைத்தையும் சப்தமிடாது செய்தாள்.

பாலை அடுப்பில் ஏற்றி காய்ச்சியவள் ஏதோ சிந்தனையிலிருக்க தேவா அவளுக்கு அருகே வந்து நின்றான். குளித்து முடித்து பளிச்சென்று இருந்தாள் மனைவி.

“இவ்வளோ சீக்கிரம் எழணுமா ஆதி? லேட்டாதானே தூங்குனோம்?” என அவன் கேட்டதும், சுயம் பெற்றவளின் முகம் மலர்ந்தது.

“குட் மார்னிங் தேவா, சாரி சத்தம் கேட்டு எழுந்துட்டீங்களா?” என்றாள் உதட்டைக் குவித்து. அங்குதான் இவன் பார்வையும் சென்றது.

தொண்டையைச் செருமியவன், “ஹம்ம்..‌. இல்ல யூஸ்வலா எழுந்திருக்க டைம் தானே. அதான் முழிப்பு வந்துடுச்சு!” என்றான் அவன்.

“ஹம்ம்...” என்றவள் அவனுக்கு குளம்பியைக் கலக்கி கொடுத்து தானும் ஒன்றை எடுத்துக் கொண்டாள். அவள் கூந்தலில் வழிந்த நீரில் படர்ந்த பார்வை குளம்பி சூட்டில் ஊறிச் சிவந்திருந்த உதட்டில் நிலைத்தது. என்னவோ எப்போதும் கட்டுப்பாடாய் இருப்பவனின் கண்கள் இன்றைக்கு அலை பாய்ந்தன.

“தேவா...” என அவனை அழைத்தவள், “என்ன பலமான யோசனை? என்ன குக் பண்ணன்னு கேட்டேன் நான்?” என்றாள் ஆதிரை அவன் தோளை இடித்து.

“உன் இஷ்டம்... எது ஈஸியோ அதையே குக் பண்ணு!” பதிலளித்தான் தேவா.

“ஹம்ம்... அப்போ தோசை வித் தேங்காய் சட்னி பண்ணிடலாம்!” என்றவள் இருவர் குடித்த குவளையும் கழுவினாள். அவள் பின்னே வந்து நின்றவன் அவள் கழுத்தோடு தன் புறங்கையைக் கொண்டு சென்று மனைவியை அணைத்தவன், “இன்னைக்கு எனக்கு எந்த வேலையும் ஓடாது போல டீ!” என சன்னமாய் முணுமுணுத்து அவள் தோளில் நாடியைக் குற்றினான்.

அவன் பேச்சின் அர்த்தம் புரிந்த ஆதிரையின் இதழில் சிரிப்பு ஏறியது. பக்கவாட்டில் திரும்பி அவன் முகம் பார்த்தவள், “ஹக்கும்... யாருப்பா அது வெர்க்கஹாலிக் தேவநந்தனா இது? அதெல்லாம் உழவர் துணைக்குள்ள நுழைஞ்சதும் கஞ்சிப் போட்ட சட்டை மாதிரி விரைப்பா மாறிடுவீங்களே!” என அவன் மேவாயைப் பிடித்து ஆட்டினாள். அவன் முகம் சிவந்தது. பட்டென மனைவி கையைத் தட்டிவிட்டு முறைத்தான்.

“என்ன என்ன பார்வை மிஸ்டர்? எங்க பாஸ் ரொம்ப ஸ்ட்ரிக்ட். போய் கிளம்புற வழியைப் பாருங்க. பர்சனல் வேற, வொர்க் வேற. டோன்ட் டேக் எனி அட்வாண்டேஜ் இன் வொர்க். கோ மேன்!” என அவன் தோளைப் பிடித்து தள்ளிய ஆதிரையிடம் குறும்பான புன்னகை குமிழிட்டது.

“வாய் டீ உனக்கு... என் டயலாக் எனக்கேவா?” எனக் கேட்டு அவளைத் தோளோடு அணைத்தான்.

“எப்படி... எப்படி இந்த மூஞ்சிதானே தேவா சொன்னது!” என அவன் மூக்கில் ஒற்றை விரலை வைத்துக் காண்பித்தவள், “வொர்க் வேற... பெர்சனல் வேற... அட்வாண்டேஜ் எடுக்க கூடாதாம்!” எனக் கையை ஆட்டி பாவனையாய் பேசியவளிடம் கோபம் சுத்தமாய் வரவில்லை. மாறாய் உதட்டோரம் தாராளமாக புன்னகை அரும்பிற்று.

இந்தக் காலை பொழுது அவனுக்கு சுகமாய் இருந்தது. அழகாய் குளித்து முடித்த மனைவி அண்மையில் அவள் கையிலே சூடான குளம்பி, இப்படி அன்யோன்யமான பேச்சுக்கள் என மனம் இச்சூழ்நிலையை ரசித்தது.

“அம்மா...” என அபி அழைக்கும் சப்தம் கேட்க, “அபிம்மா... அம்மா கிச்சன்ல இருக்கேன் டா!” எனக் குரல் கொடுத்தாள் இவள்.

அவன் வருவது தெரிந்ததும் தேவா ஆதிரையிடமிருந்து விலகி நின்றான். கண்ணைக் கசக்கியபடியே வந்தவன் தாயை இடையோடு கட்டிக் கொள்ள, அவர்களை மென்னகையுடன் பார்த்தா தேவா கிளம்ப சென்றான்.

ஆதிரை சமைத்து முடிய தேவா அபியைக் கிளப்பினான். மூவரும் உண்டு முடித்ததும் அன்று சனிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால் ஆதிரை ருக்குவிடம் அபியை ஒப்படத்தைவிட்டு கணவனுடன் பணிக்குச் சென்றாள்.

இவள் சென்று கணினியை உயிர்ப்பிக்க கோமதி வந்தார். இவளைப் பார்த்ததும் அவர் புன்னகைக்க, அவர் ஏதோ கேட்க பதிலளித்தாள். பத்து நிமிடத்தில் அரக்கபறக்க வந்த தர்ஷினி மூச்சு வாங்கியபடியே தண்ணீரை அருந்தி பொத்தென இருக்கையில் அமர்ந்தாள்.

“மெதுவா குடி தர்ஷூ!” கோமதி கூற, தன்னை ஆசுவாசம் செய்தாள்.

மெதுவாய் வேலை தொடங்க, “ஏன் கோமுக்கா... டால்லடிக்குதா? இல்லை மின்னுதா?” எனக் குறும்பாய் கேட்டாள். ஆதிரை ஓரக்கண்ணால் அவளைப் புரியாது பார்த்தாள்.

“ரெண்டுமே தான் போல தர்ஷூ!” அவர் சிரிக்க, ஆதிரைப் பார்த்தாள்.

“ப்ம்ச்... உங்க முகத்தைதான் சொல்றோம் கா. டால்லடிக்குதா? இல்லை மின்னுதான்னு கூடத் தெரியலை. லுக்கிங் லைக் அ வாவ்! வாவ்!” என உதட்டை சுழித்து அவள் உரைத்ததும் ஆதிரை முறைப்போடு திரும்பினாள்.

“ஏன் ஆதி, நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீயே?” கோமதி யோசனையுடன் கேட்க,

“சொல்லுங்க கா...” என அவர் முகம் பார்த்தாள்.

“நேத்துல இருந்து உன் முகம் ரொம்ப ப்ரைட்டா இருக்கு. ப்ரக்னென்டா எதுவும் இருக்கீயா என்ன?” என அவர் கேட்டதும், நொடியில் மறுப்பாய் தலையை அசைத்தாள்.

“இல்ல... அப்படிலாம் எதுவும் இல்லக்கா!” என்றாள் மெல்லிய குரலில். அந்தக் கேள்வி அவளைத் தடுமாற செய்தது.

“சரி... சரி. உன் முகம் பிரகாசமா இருக்கவும் கேட்டேன்!” என்றவர் பேச்சை முடித்துக் கொண்டார்.

ஆதிரையை ஒற்றைக் கண்ணால் பாரத்த தர்ஷினி, “அக்கா... அப்போ பெர்ஃப்யூம் மிங்கிள் பண்ணலையா?” எனக் குறும்பாய் கேட்டாள்.

அப்பேச்சு ஆதிரைக்கு உவப்பாய் இல்லை. தங்கள் அந்தரங்கத்தில் அவள் நுழைவது பிடிக்காது போய்விட, “வேலையைப் பாரு தர்ஷினி!” என்றாள் கண்டிப்பான குரலில்.

‘டவுட் கேட்டா கூட குத்தம்பா!’ என அவள் முனங்கினாள்.

மாலை வேலை முடிந்ததும் ஆதிரை தானியிலேறி சென்றுவிட்டாள். தேவா வர நேரமெடுக்கும் என முன்பே கிளம்பிவிட்டாள். அவளுக்காகத்தான் காத்திருந்தான் அபி.

மாலை வந்ததும் அவனுக்கு ஜெல்லி மிட்டாய் செய்து தருவதாக கூறியிருந்தாள். அதனாலே தாய் வந்ததும் அவள் பின்னே குட்டிப் போட்ட பூனை போல சுற்றினான் அபினவ். ஆதிரை உடைமாற்றி முகம் கழுவி வந்தவள் கேரட் மற்றும் பீட்ரூட்டை சாறு பிழிந்து எடுத்து அவனுக்கு ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிற ஜெல்லி செய்து கொடுத்தாள்‌.

“அம்மா... தேங்க்ஸ் மா. சூப்பரா இருக்கு மா!” என அவன் சப்புக் கொட்டி உண்ண, இவள் அவனை வாஞ்சையுடன் பார்த்தாள்.

இரவு உணவை சமைத்து இருவரும் உண்டு முடித்தனர். தேவா அன்றைக்கு தாமதமாக வருவதாய் முன்பே உரைத்துவிட்டான்.

“அம்மா... அங்கிள் எங்கம்மா?” என அபி தேவாவைக் காணாது கேட்க, “அவர் வர லேட்டாகும் அபி. காலைல அங்கிளோட பேசிக்கலாம். இப்போ தூக்கம் வந்தா தூங்கு. இல்லைன்னா டீவி பாரு, அம்மா கார்டூன் வைக்கிறேன்!” என ஆதிரை பதிலளித்தாள்.‌

அபி நீள்விருக்கையில் தாயின் மடியில் படுத்துக் கொண்டே சிறிது நேரம் பொம்மைப் படத்தைப் பார்த்தான். இவள் ஒற்றைக் கையில் அலைபேசியை வைத்து அதில் ஏதோ துழாவினாள். அவளது தொடையிலிருந்த அபினவின் முகம் சரியப் போக, படக்கென்று அவனை நகர்த்திப் போட்டாள். சின்னவன் தூங்கிப் போயிருந்தான். அவனைத் தூக்கி அறையில் படுக்க வைத்துவிட்டு வர, தேவா வந்துவிட்டான்.

“வாங்க...” என ஆதிரை முறுவலுடன் அவனை வரவேற்க, தலையை அசைத்து ஏற்றவன் உடை மாற்றி வந்தான்.
ஆதிரை அவனுக்கு சூடாய் தோசை ஊற்றிக் கொடுத்தாள். மூன்று தோசையோடு போதும் என்றுவிட்டான் தேவா.

“ஏன்ங்க... பத்தாதே மூனு தோசை உங்களுக்கு? பால் எதுவும் காய்ச்சி தரவா?” அவன் முகம் பார்த்தாள் மனைவி.

“லேட் நைட்டாகிடுச்சுல்ல. சோ பசி போய்டுச்சு டீ!” என்றான்.

“சரி... சரி, இருங்க, நான் பால் காய்ச்சி தரேன்!” அவன் வேண்டாமென மறுத்தும் ஒரு குவளையில் பால் அருந்தக் கொடுத்தாள் ஆதிரை.

தேவா பாலைக் குடித்து முடித்து அறைக்குள் வர ஆதிரை அவனை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே பாயை எடுத்து தரையில் விரித்தாள். கணவன் இப்போது அவளை முறைத்தான்.

“என்ன தேவா... போய் பெட்ல ஜம்முன்னு படுங்க!” என்றாள் நக்கலாய் உதட்டை வளைத்து. அவள் குரலில் குறும்பிருந்தது.

அவளைப் பின்னிருந்து இறுக்கி அணைத்தவன், “இனிமே தனியான்ற பேச்சுக்கே இடமில்ல டீ என் பொண்டாட்டி...” என கரகரப்பாய் கூறி அவள் செவியில் மென் முத்தமிட்டான். ஆதிரை காதிலிருந்த மென்னரம்புகள் எல்லாம் அதிர்ந்தன. சட்டென அவள் உடல் இளகியது. அவன் உடல் சூட்டை ஜில்லென்றிருந்த உடல் மிக மிக மெதுவாய் ஏற்றது போல. பூனைக் குட்டிப் போல அவளை சுற்றி வளைத்தான் கணவன்.

“சே... பூ மட்டும் மிஸ்ஸிங். நேத்து மாதிரி பூ இருந்தா இன்னும் நல்லா இருக்கும்!” குரல் தேய சொன்னவனின் முகம் அவள் கழுத்தை உரசியது.

ஆதிரை சட்டென அவனிடமிருந்து பிரிந்து இடுப்பில் கையைக் குற்றியவள், “அப்போ நீங்க பூ வாங்கிட்டு வரலையா?” என்றாள் முறைப்புடன். தேவா திருதிருவென விழித்தான்.

“பூ எல்லாம் வாங்கிட்டு வரணுமா டீ? எனக்குத் தெரியாதே!” என மெல்லிய குரலில் முணுமுணுத்து அவன் பிடரியைக் கோத, அருகே இருந்த தலையணையை எடுத்து அவனை இரண்டு அடி அடித்தவள், அந்த தலையணையை அறை வாசலைத் தாண்டி எறிந்தாள்.

“போயா... போ. இன்னைக்கு ரூம்க்குள்ள கூட உனக்கு இடமில்லை. போய் ஹால்ல பில்லோவை கட்டிப் பிடிச்சுட்டு தூங்கு!” என கடுப்போடு அவள் கூறி முடிக்கும் முன்னே தேவா அவளைத் தூக்கி ஒரு சுற்றுச் சுற்றினான். அதற்கு மேலும் ஆதிரையால் கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியவில்லை.

“மக்குப் புருஷா... மக்குப் புருஷா!” என அவன் தலையில் வலிக்காது கொட்டினாள்.

“கொஞ்சம் மக்குதான் டீ உன் புருஷன். நீதான் எல்லாத்தையும் பக்குவமா சொல்லித்
தரணும்!” என தாபமேறிய குரலில் முணுமுணுத்து அவள் மார்பில் தேவா புதையவும் ஆதிரையின் முகம் குப்பென்று சிவந்தது.

“தேவா...” என்றாள் சிணுங்கலாய். மனைவியை அள்ளிக் கொண்டாடித் தீர்த்திருந்தான் தேவநந்தன்.

தொடரும்...







 
Active member
Messages
217
Reaction score
169
Points
43
Deva unn nilami innum 2 epila story ah mudichiduvanaga jaanu sis
Andha thought dhan unnaku romance topic ah open panniruku
Idhulla ivalo tube light ah irundha yeppadi pa🤣🤣🤣🤣
 
Well-known member
Messages
524
Reaction score
389
Points
63
அப்பாடா, ஒரு வழியா தேவா வாழ்க்கைல விளக்கேத்தி வைச்சிட்டாங்க ரைட்டரம்மா
 
Well-known member
Messages
1,020
Reaction score
753
Points
113
Appada oru vazhiya tube light eriya aarambichiduchu, superrrrrrrrr superrrrrrrrr
 
Well-known member
Messages
471
Reaction score
342
Points
63
Adei yeppa deva unnaku romance nu oru part yae illa ellarum indha janu kita fight pannitu irukom yetho janu ma pona poguthu nu unnoda vazhkai la light potu vittu iruku ah aana ne ipadi poo vangurathuku kooda vanga num ah nu kekuriyae unna enna sollurathu 🤭🤭🤭🤭
 
Active member
Messages
133
Reaction score
103
Points
43
Nice super interesting super 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌
 
Top