- Messages
- 1,215
- Reaction score
- 3,608
- Points
- 113
நெஞ்சம் – 56 
வட்டமாய் தேய்க்க முயன்று முடியாது போன சப்பாத்தி சற்றே முக்கோணமாய் வந்திருந்தது. அதை என்ன செய்வது என யோசித்து அருகில் குருமாவிற்கு வெட்டி வைத்த கேரட்டை எடுத்தாள் ஆதிரை. அதை இரண்டு கண்கள் போல அதில் ஒட்டினாள். ஒரு அரை தக்காளியை எடுத்து வாயை ஒட்டிவிட்டுப் பார்க்க, அவளுக்கே சிரிப்பு வந்தது.
அபி சின்ன பையனாக இருக்கும் போது அவனை சாப்பிட வைக்கவென இவள் பொம்மை சப்பாத்தி, கேரட் தோசை, பீட்ரூட் பூரியெல்லாம் செய்திருக்கிறாள். பின்னர் வளர வளர அவையெல்லாம் குறைந்து போயின. இப்போது அந்த நினைவு வரவும், சின்ன புன்னகையுடனே சப்பாத்தியை சுட்டு முடித்தாள்.
இன்னும் தேவாவும் அபியும் எழவில்லை. ஞாயிறு என்றாலும் கூட ஆதிரைக்கு விரைவிலே விழிப்பு வந்துவிட்டது. சும்மாவே இருப்பது வெறுப்பாய் இருக்க, அலைபேசியில் பாடலை ஒலிக்க விட்டுக்கொண்டே சமையலை செய்தாள்.
தேவாவின் மீது காலைத் தூக்கிப் போட்டு ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான் அபி. இரவு தேவா தாமதமாய் வந்ததால் காலை சற்றே சாவகாசமாக எழுந்தான். அரைக் கண்ணை திறந்ததும் அருகில் கையை வைத்து துழாவினான். மனைவி இல்லை.
மீண்டும் கண்ணை கசக்கி நன்றாய் விழித்தவன் மனைவி எழுந்துவிட்டாள் என உணர்ந்து அபியை நகர்த்திப் படுக்க வைத்துவிட்டு முகம் கழுவி வந்தான். வாயில் ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டே வேலை செய்யும் ஆதிரையைக் கண்டதும் இவனுள் பெரிய ஆசுவாசம் பரவிற்று.
அன்றைய நிகழ்வில் ஆதிரை நிறைய காயப்பட்டுப் போனாள். வெளியே சென்றிருந்த கோபால் வீட்டிற்கு வந்ததும் ஹரி நடந்ததை அவரிடம் ஒப்பித்திருந்தான். இல்லையில்லை, வீட்டின் மயான அமைதியில் அவருக்கே ஏதோ சரியில்லை எனத் தோன்றியது போல, சின்னவனை அழைத்து விசாரித்து தெரிந்து கொண்டார்.
மனைவியின் செயலில் அவருக்குத் தலை கிறுகிறுத்துப் போனது. வெளியே வேலை என்று இவர் சென்றிருக்கும் நேரத்தில் இப்படியா நடந்து கொள்வாள் என அவர் மீது கட்டுக்கடங்காத கோபம் பல்கி பெருகிற்று. நிதானமாய் சில நிமிடங்கள் யோசித்தவர், ஏதோ முடிவெடுத்தவராக மூத்த மகனை அழைத்தார்.
“உன் முடிவு சரியானது தேவா. இத்தனை நாள் எங்களுக்காகன்னு எல்லாத்தையும் நீதான் செஞ்ச. இப்போ உன் வாழ்க்கையை நீ பாரு டா. உங்கம்மாவோட இந்த வீட்ல இருந்தா உங்களால நிம்மதியா வாழ முடியாது. அவ வாய் சும்மா இருக்காது. பொண்டாட்டியை அடக்க எனக்குத் துப்பில்லை. எப்போ பார்த்தாலும் சண்டையும் சச்ரவுமா இருந்தா குடும்பம் கெட்டுப் போய்டும். நீ உன் பொண்டாட்டி புள்ளையோட நிம்மதியா இருக்க ஒரே வழி தனியா போறதுதான் டா. இந்த வீட்டைக் கட்டுனதுல உன் பங்கூதான் அதிகம். உன்னை வீட்டைவிட்டுப் போக சொல்றேன்னு நினைக்காத தேவா. வயசான காலத்துல என்னால எதுவும் பண்ண முடியாது. ரோஷப்பட்டு போனாலும் உங்ககிட்டே தான் வர வேண்டி இருக்கும்!” என அவர் பேசும் போதே குரல் அடைத்தது.
அவர் விருப்ப ஓய்வு பெறும்வரை இந்தக் குடும்பத்தில் ஆதி முதல் அந்தம் வரைப் பார்த்த மனிதராகிற்றே. பிள்ளைகள் தலையெடுக்கவும் அவர்கள் வற்புறுத்தலின் பேரில் ஐம்பத்து ஐந்து வயதிலே வேலையை விட்டுவிட்டார். எல்லாம் ஆரம்பத்தில் நன்றாய் சென்றது. ஆனால் இப்போது
மனைவியின் செயலை கிரகிக்கவே அவருக்கு நேரம் தேவைப்பட்டது.
தன் மகனுடைய வாழ்க்கையைப் பற்றி கூட யோசிக்காமல் வாணி இப்படி செய்ததை அவரால் ஏற்கவே முடியவில்லை. கோபம் கரையைக் கடந்தாலும் வீட்டிற்கு வந்த மருமகள்கள் முன்னே மனைவி தரம் தாழ்ந்திருக்க வேண்டாம் என ஆதங்கம் நிரம்பியது. தேவா போல அவர் சத்தம் போட்டுக் கோபமாய் பேசவில்லை. ஆனால் மனைவியின் முகத்தைக் கூடப் பார்க்காது தவிர்த்திருந்தார்.
“ப்பா...” என தேவா அவரைத் தவிப்புடன் தொட, “என்னையும் என் பொண்டாட்டியும் நான் பார்த்துக்குறேன் டா. ஹரி இருக்கான். இனிமே அவன் குடும்பத்தைப் பார்த்துப்பான். நீ கிளம்பிடு!” என்றார் வேதனையான குரலில்.
“ப்பா... என்னப்பா?” என தேவா வேதனையுடன் தந்தையை தோளணைக்க, “கோபமா சொல்லலை டா. நான் நல்லா யோசிச்சுப் பேசுறேன். இந்த குடும்பத்துக்கு நல்லது இதான். கொஞ்ச நாள் நீங்க தனியா இருங்க. வாணி இவ்வளோ தூரம் செஞ்சப்புறமும் அந்தப் பொண்ணை இங்க இருக்க கட்டாயப்படுத்துறது தப்பு டா. யாரா இருந்தாலும் கோபப்பட்றதுதான் நியாயம். உன் பொண்டாட்டிக்காக நீ பேசுனது சரி. இப்போ என் பொண்டாட்டியை சரி பண்றது என் வேலை. நிரந்தரமா இல்லை டா, கொஞ்ச நாள்தான். போய்ட்டு வாங்க!” என்றார் பெருமூச்சுடன். இவன் மௌனமாய் தலையை அசைத்தான்.
“என் பொண்டாட்டி நடந்துகிட்டது ரொம்ப தப்புத்தான் மா. அதுக்காக இந்தக் குடும்பத்தை வேணாம்னு உதறீடாத. தேவாதான் இந்த வீட்டோட தூண். பொறுப்பா எல்லாத்தையும் பார்த்தவன். எங்க காலத்துக்குப் பிறகு புள்ளைக மூனு பேரும் ஒத்துமையா இருந்தா அதுவே எனக்குப் போதும்!” அவர் ஆதிரையிடம் மெதுவாய் பேச,
“மாமா... நிஜமா உங்க புள்ளையை இந்த வீட்ல இருந்து பிரிச்சுக் கூட்டீட்டுப் போகணும்னு நான் நினைக்கலை. பட் சிட்சுவேஷன் அப்படி அமைஞ்சு போய்டுச்சு. நீங்க எல்லாரும் தானே மாமா என் குடும்பம். எப்படி மாமா நான் வேணாம்னு சொல்லுவேன்?” எனக் கேட்டவள், “அவரோட அம்மா என்னைக்கும் என்னையும் என் பையனையும் ஏத்துக்க மாட்டாங்க மாமா!” என்றாள் கசந்த முறுவலுடன்.
“காலம் எல்லாத்தையும் மாத்தும்மா...” என்றவர், “அவ பேசுனது தப்புதான்மா. இருந்தாலும் நீயும் கொஞ்சம் பொறுமையா போய்ருக்கலாம் மா. அவ வயசுக்கு மரியாதை கொடுத்து கையை ஓங்கியிருக்க வேணாம்!” என்றார் மனைவிக்காக யோசித்து.
ஆதிரை பதிலே பேசவில்லை. அவரது வயதைக் கணக்கிட்டால் அவள் செய்தது தவறுதான். ஆனால் அவர் வார்த்தைகள் முழுவதும் அத்தனையும் வன்மமும் வெறுப்பையும் சுமந்து வந்தவை. எத்தனை தூரம்தான் தானும் பொறுமையாய் இருப்பது? அபியை அவர் அடித்தார் எனக் கேட்கும் போதே அவளது பொறுமை கரைந்திருந்தது.
மறுநாளே தேவாவும் ஆதிரையும் அவளுடைய பழைய வீட்டிற்கே வந்துவிட்டனர். ஆதிரை இன்னுமே அந்த வீட்டிலிருந்த பொருட்களை இடம் மாற்றவில்லை. இங்கு தேவா வீட்டில் அவற்றை வைக்க போதிய இடமில்லை. அதனால் அவற்றை விற்கலாம் என ஆட்களிடம் சொல்லி வைத்திருந்தாள். ஆனால் இப்போது நடந்த நிகழ்வு அதை அவசியமற்றதாக மாற்றிவிட்டது.
இங்கு வந்த இரண்டு மூன்று நாட்களாக ஆதிரை முகத்தில் துளியும் சிரிப்பில்லை. அபி நடந்த நிகழ்வில் நிறைய பாதிக்கப்பட்டிருந்தான். அவனைத் தேற்றுவதிலே அவளுக்கு கவனம் சென்றது. தேவா ஆதிரையை அரவணைத்துக் கொண்டான். ஒருவாறாக நடந்த நிகழ்விலிருந்து மீண்டிருந்தனர்.
ஆனாலும் அவளிடம் மெல்லிய இறுக்கம் ஒட்டிக் கிடந்தது. இன்றைக்குத்தான் மொத்த தளைகளும் அகன்றது போல அவள் முகத்தில் கொஞ்சம் சிரிப்பைக் காண்கிறான். என்னவோ அவனுக்கு நிம்மதி அடர்ந்தது.
என்னதான் தேவா வீட்டைவிட்டு வந்திருந்தாலும் மனம் முழுவதும் குடும்பத்தைச் சுற்றித்தான் நகர்ந்தது. முப்பத்து மூன்று வருடங்கள் வாழ்ந்த வீட்டையும் குடும்பத்தையும் விட்டு பிரிவது அவனுக்கு அத்தனை எளிதாய் இல்லை. தினமும் ஹரிக்கு அழைத்து வீட்டு நிலவரம் என்னவெனக் கேட்டுத் தெரிந்து கொண்டான். அவனை இனிமேல் பொறுப்பாய் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினான். உண்மையில் தேவா இல்லாமல் அந்தக் குடும்பம் நகராது என அவன் எண்ணியிருந்ததை நினைத்து இப்போது கேலியாய் சிரிப்பு வந்தது. அவன் இல்லையெனும் போதுதான் ஹரியின் விளையாட்டுத் தனங்கள் மறைந்திருப்பதைக் கண் கூடாகப் பார்த்தான். யார் இல்லையென்றாலும் கூட நடக்க வேண்டியது நடந்து கொண்டேதான் இருக்கும் எனத் தெளிவாய் புரிந்தது.
யோசனையுடனே வந்தவன் தொண்டையை கனைத்துக் கொண்டே சமையலறைக்குள் நுழைய, அவனைப் பார்த்ததும் ஆதிரையின் முகம் பூவாய் மலர்ந்தது.
“எழுந்துட்டீங்களா தேவா? காஃபி குடிக்குறீங்களா?” எனக் கேட்டவள் அவனுக்கு குளம்பியை கலக்கினாள்.
“என்ன நீயே தனியா சிரிச்சுட்டே சப்பாத்தியை தேய்க்குற?” எனக் கேட்டு பாத்திரத்தை எட்டிப் பார்த்தான் கணவன்.
“இல்ல, ரவுண்டா தேய்க்கலாம் நினைச்சா வரலை. சோ, கேரட் தக்காளியை வச்சு பொம்மை சப்பாத்தி சுட்டேன்ங்க. அபி சின்ன வயசா இருக்கும்போது இந்த மாதிரி செஞ்சு குடுத்தாதான் சாப்பிடுவானா, சோ அதை நினைச்சு சிரிச்சேன்!” என்றவள் பேசிக் கொண்டே அவனுக்கு சர்க்கரையைக் கலந்து குளம்பியை ஆற்றிக் கொடுத்தாள்.
அதை வாங்கி ஒரு மிடறு பருகியவன், “ஆதி...” என்று மென்குரலில் அழைத்தான்.
“என்னங்க?” எனக் கேட்டவள் அவன்புறம் திரும்பாது காமைக் காலத்தை அடுப்பிலிருந்து இறக்கி விசில் அடங்கி விட்டதா எனப் பார்த்தாள்.
“நீ ஓகேவா இப்போ?” எனக் கேட்டவனை திரும்பி மென்மையாய் முறைத்தவள், “இதோட எத்தனை தடவை கேட்பீங்க? நான் நல்லா இருக்கேன் தேவா. என் முகத்தையே பார்த்துட்டு இருக்காதீங்க!” என்றாள் அதட்டலாய். ஒரு வாரமாய் அவளிடம் அவன் தினமும் கேட்கும் கேள்வி இது. அவள் முகம் பார்ப்பதும் தயங்கியபடியே கேட்பதுமாய் இருந்தான் கணவன்.
“ஹம்ம்...” எனத் தலையை அசைத்தவன், “லஞ்ச் எதுவும் ப்ரிபேர் பண்ணாத ஆதி. நான் வெளிய பார்த்துக்கிறேன்!” என்றான்.
“ஏன் வேணாம், நான் ஆல்ரெடி வெஜிடபிள் ரைஸ் வச்சிட்டேனே!” என்றாள் காமைக் கலத்தை எட்டிப் பார்த்து. அவன் முகம் அஷ்டக் கோணலாக மாறிற்று.
“சண்டே அதுமா வெஜ் ரைஸ் மனுஷன் சாப்பிடுவானா டீ?” அவன் குரல் கடுப்பாய் வந்தது.
அவனைக் கீழ் கண்ணால் முறைத்தவள், “இன்னைக்கு சஷ்டி, நான் கோவிலுக்குப் போறேன் தேவா. நான்வெஜ் சமைக்க கூடாது!” என்றாள் கண்டிப்புடன்.
அவளை முறைத்தவன், “பரவாயில்லை, நான் வெளிய சாப்பிட்டுக்குறேன். வெஜ் ரைஸை நீயே சாப்பிட்டுக்கோ!” என்றான் தேவா.
“நோவே... இன்னைக்கு ஒருநாள் நீங்க நான்வெஜ் வெளிலயும் சாப்பிடக் கூடாது. வெஜ்னா, வெஜ்தான். ஒழுங்கா நான் பேக் பண்றதை சாப்பிடுங்க!” இவள் கண்டிப்புடன் கூற, “ரொம்ப அநியாயம் பண்ற ஆதி!” என அவன் முகத்தைச் சுருக்கி முனங்கினான்.
ஆதிரை முகத்தில் மெல்ல முறுவல் படர்ந்தது. எப்படியும் தனக்காகவேனும் தேவா அசைவம் உண்ண மாட்டான் என அவன் முனங்கலான குரலில் கண்டு கொண்டவள், “இன்னைக்கு ஒருநாள் தானே தேவா, நாளைக்கு கண்டிப்பா நான்வெஜ் செஞ்சு தரேன்!” என அவன் முகவாயைப் பிடித்துக் கொஞ்சினாள் மனைவி. முறைக்க முயன்றாலும் தேவாவின் உதடுகளிலும் சிரிப்பு ஏறியது.
“ஹம்ம்...” என்றவன் அவள் தோளில் கைப்போட்டு இழுத்து அணைக்க, “நாளைக்கு மார்னிங்கே உங்களுக்குப் பிடிச்ச பெப்பர் சிக்கன் கிரேவியும், மொறுமொறுன்னு தோசையும் ஊத்தி தருவேனாம். சோ, இன்னைக்கு சமத்தா வெஜ் ரைஸ் சாப்பிடுவீங்களாம்!” அபியிடம் கூறுவது போல பேசினாள் மனைவி.
“சின்ன புள்ளையைகிட்டே பேசுற மாதிரி என்னை ட்ரீட் பண்ற டீ!” சலுகையாக தேவா அலுத்துக் கொண்டான். ஆதிரைக்கு அவன் குரலில் முகம் மலர்ந்தது. என்னவோ இந்த ஒருவாரத்திலே அவனிடம் மனதளவில் நிறைய நெருங்கிப் போனாள் பெண். அவன் தன்னுடைய கணவன் என பலமுறை மனதில் சொல்லிப் பதிய வைத்த காலம் எல்லாம் கரைந்து தேவா ஆதிரையின் மனதில் ஆழப் பதிந்து போனான். இதுவரை பாலை வனமாய் இருந்த வாழ்க்கையை மலர்கள் நிறைந்த சோலை போல இவனோடு வாழ வேண்டும் என்றொரு ஆசை துளிர்த்தது.
“போயா... போய் கிளம்புங்க!” என அவனைத் துரத்தியவள் காய்கறி சாதத்திற்கு தொட்டுக் கொள்ள உருளைக்கிழங்கைப் பொரித்தாள். அவளை முறைத்துக் கொண்டே தேவா காலை உணவை முடித்து வேலைக்குச் சென்றான்.
இவள் அபி எழுவதற்குள் குளித்து முடித்து எளிமையாய் பருத்திப் புடவையை உடுத்தினாள். மகன் எழவும் அவனையும் கிளப்பினாள். ருக்குதான் ஆதிரையைக் கோவிலுக்கு வற்புறுத்தி அழைத்தது. இவள் சில வருடங்கள் சஷ்டி விரதம் இருந்திருக்கிறாள். அதுவும் ருக்குவின் உபயம்தான். சீக்கிரம் அவளது வாழ்க்கை சரியாக வேண்டும் என கடவுளிடம் வேண்டிக் கொள்ள சொல்லி விரதம் இருக்க கூறுவார். அவளும் அவர் நம்பிக்கைக்காக மறுக்காது செய்தாள்.
இந்த ஆண்டு அவள் பெரிதாய் விரதம் இருப்பதற்கு மெனக்கெடவில்லை. ஆனாலும் சரியாய் சஷ்டி நேரத்தில் இங்கே வந்துவிட்டாள். வந்த நாளிலே அவள் முகம் சரியில்லை என உணர்ந்த பெரியவர் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. அவள் சரியாகட்டும் எனக் காத்திருந்தார். நேற்றைக்கு இவள் அவரிடம் ஓரிரு நிமிடங்கள் நின்று பேச, கண்டிப்பாய் நாளைக்கு முருகன் திருக்கல்யாணத்தைக் காண வரவேண்டும் என அழைத்தார். சரி விடுமுறை தினம்தானே என்று இவள் ஒப்புக் கொண்டாள்.
எப்படியும் சாமியை தரிசித்து முடித்ததும் வீட்டில் என்ன நடந்தது என ருக்கு அவளிடம் ஒரு குறுக்கு விசாரணையை நடத்துவார் எனத் தெரியும். அதற்கு எப்படி பதிலுரைப்பது என யோசித்துக் கொண்டே மகனோடு கோவிலுக்குச் சென்றாள்.
அவள் நினைத்தது போலவே அவர் ஆதிரையைக் கேள்விகளால் குடைய, ஒருவாறு நடந்ததை கொஞ்சம் மறைத்து ரத்தின சுருக்கமாக தெரிய வேண்டியதை மட்டும் அவிடம் உரைத்தாள்.
ருக்கு வாணியை வாயில் போட்டு அரைத்தவர், “விடு ஆதிரை, இதுவும் உன் நல்லதுக்குத்தான். உன் புருஷனைக் கைக்குள்ள போட்டு நீ நிம்மதியா வாழப் பாரு. சட்டுபுட்டுன்னு ஒரு குழந்தையைப் பெத்துக்கோ நீ. அப்போதான் அந்தக் குடும்பத்துல இன்னும் ஸ்ட்ராங்கா நீ பேச முடியும்!” என அவர் ஏதோதோ அறிவுரை கூற, இவள் வெறுமனே தலையை மட்டும் அசைத்து வைத்தாள்.
திருக்கல்யாணம் முடிந்ததும் பிரசாதம் வாங்கி விரதத்தை முடித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தனர். அபிக்கு அன்றைக்கு நீச்சல் வகுப்பும் இல்லை. அதனாலே தாயும் மகனும் ஏதோ பேசி சிரித்து எனப் பொழுதைக் கழித்தனர்.
மாலை தேநீர் குடித்து முடித்த ஆதிரைக்கு வயிறும் இடுப்பும் வலித்தது. என்னவென அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே மாதவிடாய் வந்துவிட்டது எனப் புரிந்தது.
‘நல்லவேளை, காலைல கோவிலுக்குப் போய்ட்டு வந்துட்டேன்!’ என நிம்மதி பெருமூச்சுவிட்டாள். காலையிலே குளித்தாலும் இப்போதும் மீண்டும் குளிக்கத் தோன்றியது.
சுடுதண்ணீர் வைத்து நன்றாய் தேய்த்துக் குளித்து முடித்தாள். இரவுக்கு என்ன சமைப்பது என யோசித்தாள்.
“அம்மா... மேகி வேணும்மா!” என அபி கேட்டான். சிறுதானியத்தில் செய்த மேகியை சமைக்கலாம் என யோசித்தவள் காய்கறி, பன்னீர் எல்லாம் சேர்த்து சுவையாய் சமைத்தாள். அவளுக்கும் அபிக்கும் மட்டும் என்றால் ஏனோ தானோவென செய்திருப்பாள். தேவாவிற்கு பிடிக்க வேண்டுமே என மெனக்கெட்டு செய்தாள்.
இன்னும் தலை ஈரமாய் இருந்தது. அப்படியே படுத்தால் தலைவலி வந்து விடுமெனத் தோன்ற தலையை நன்றாய் உலர்த்தி ஒரு சிறிய கவ்வியில் அடக்கினாள். தேவா எட்டு மணிக்கு வந்தான்.
உள்ளே வந்ததும் கண்ணை நிறைத்தாள் மனைவி. கை இருக்கிறதா? இல்லையா எனத் தெரியாத வகையில் ஒரு மேல் சட்டையும் முட்டிக்கு கீழே வரையுள்ள கால் சராயும் அணிந்திருந்தாள். அபியும் அவளும் கூடத்தில் பாயை விரித்து அமர்ந்திருந்தனர். அவனுக்கு வீட்டுப் பாடம் சொல்லிக் கொடுத்திருப்பாள் போல எண்ணியவன் இருக்கையில் வந்து அமர்ந்தான்.
அவனை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தவள், “இன்னைக்கு ஸ்பெஷலா உங்களுக்காக மேகி குக் பண்ணி இருக்கேன் தேவா!” என்றாள் சிரிப்புடன். அப்போதுதான் குளித்து வந்ததால் முகம் பளிச்சென்று இருந்தது. குட்டி குட்டியாய் இருந்த பூனை முடிகள் முன்னெற்றியில் பறக்க, அவன் பார்வை அவளில் மெல்ல ஊர்ந்தது.
“தேவா... குளிச்சிட்டு வாங்க, சேர்ந்து சாப்பிடலாம்!” மனைவி கூற்றில் ஸ்மரணை வரப் பெற்றவன், “ஹம்ம்...” எனத் தலையை அசைத்துக் குளித்து வந்தான்.
ஆதிரை ஆர்வத்தோடு தான் சமைத்தவற்றை இருவருக்கும் பரிமாறி தானும் சாப்பிட அமர்ந்தாள். தன் முகத்தையே மனைவி பார்ப்பது தெரிய, “நல்லா இருக்கு ஆதி. டேஸ்ட் இஸ் குட்!” என்றான் முயன்று ஒவ்வொரு கவளமாய் விழுங்கி. அவனுக்குப் பெரிதாய் இந்த துரித உணவில் எல்லாம் விருப்பம் இல்லை. இட்லி, சப்பாத்தி, பூரி, பொங்கல் என உண்டு வளந்தவனுக்கு இந்த மேகி பிடிக்கவில்லை. ஆனாலும் மனைவிக்காக உண்டான். அவன் கூற்றில் ஆதிரையின் முகம் மலர்ந்தது.
இன்னும் கொஞ்சம் அவன் தட்டில் நிரப்ப சென்றாள். “நோ... நோ, வரும்போது ஃப்ரெண்டை மீட் பண்ணேன். அப்படியே ஜூஸ் குடிச்சிட்டு வந்தேன் டீ. வயிறு ஆல்ரெடி ஃபுல்!” என்றவனை அவள் நம்பவில்லை. தேவா விட்டால் போதுமென்று ஓடிவிட்டான்.
அபி பொறுமையாய் சாப்பிட, ஆதி அவனுக்கு அருகே அமர்ந்து இருந்தாள். அவன் உண்டு முடித்ததும் இவள் கழுவாமல் போட்டிருந்த பாத்திரங்களை எல்லாம் கழுவி வைக்க, கூடத்தில் அமர்ந்திருந்த அபி தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே தூங்கி வழிந்தான்.
“அபி... தூக்கம் வருதா?” என தேவா கேட்க, “ஆமா அங்கிள்!” எனக் கண்ணை கசக்கினான் அவன்.
“சரி வா, நீ வந்து தூங்கு!” என அறைக்கு அழைத்துச் சென்று அவனைப் படுக்க வைத்தான். பத்து நிமிடத்திலே அபினவ் தூங்கிவிட, இவன் அறை விளக்கை அணைத்துவிட்டு இரவு விளக்கை ஒளிரவிட்டான்.
அலைபேசியை எடுத்து ஹரிக்கு அழைத்துப் பேசினான். தந்தையிடமும் பேசிவிட்டு வைத்தான். இன்னமும் ஆதிரை சமையலறையிலிருந்து வரவில்லை.
‘என்ன பண்றா இவ?’ என யோசித்துக்கொண்டே இவன் அங்கே செல்ல, ஆதிரை பாலை காய்ச்சிக் கொண்டிருந்தாள்.
இவன் வரவை உணர்ந்தவள், “வாங்க, உங்களுக்குத்தான் பால் காய்ச்சுறேன்!” என்றாள். கணவன் அவளை முறைத்தான்.
“எனக்கெதுக்கு டீ பால்? எனக்கு நைட் பால் குடிக்கிற பழக்கம் இல்ல. என்னை கெஸ்ட் மாதிரி ட்ரீட் பண்ணாத!” மென்குரலில் கடிந்தான்.
அவளிடம் மெல்லிய முறுவல் அரும்பிற்று. “ப்ம்ச்... உங்க முகத்தைப் பார்த்தாலே தெரியுது தேவா. நீங்க சரியா சாப்பிடலை இல்ல. சரி, நைட்டு பசிக்குமேன்னு பாலைக் காய்ச்சுறேன்...” என்றாள்.
“இல்லையே! நான் நல்லாதான் சாப்பிட்டேன்!” அவன் மழுப்பினான்.
“ஹக்கும்...” அவன் புஜத்தில் குத்தியவள், “ஐயா சோறு, தோசைன்னு சாப்பிட்டவரு. மேகி பிடிக்கலைன்னு மூஞ்சிய பார்த்தே தெரியுது. எப்படியாவது உங்களுக்குப் பிடிக்கணும்னு நினைச்சு பன்னீரெல்லாம் போட்டு செஞ்சாலும் பிடிக்கலை போல!” உதட்டைப் பிதுக்கினாள். அவனிடம் மெல்லிய புன்னகை.
பேச்சோடு அவனுக்கு பாலை மென்சூட்டில் ஆற்றியவளைப் பார்த்து மூச்சை வெளிவிட்டவன், “இப்போலாம் ரொம்ப டிப்ரெண்டா தெரியுறீயே டீ. மெனக்கெட்டு எனக்காக ஏன் இதெல்லாம்?” எனக் கேட்டு நிறுத்தினான். அவனைப் பார்த்து முறுவலித்தாள் மனைவி. ஆனாலும் பதில் இல்லை.
“வாயைத் தொறந்து சொல்லு டீ!” என மென்மையாய் அதட்டியவன் அவள் கொடுத்த பாலை குடிக்க, “சும்மாதான்... நான் எப்பவும் போலதான் இருக்கேன். உங்களுக்கு வித்யாசமா தெரிஞ்சா நான் எதுவும் பண்ண முடியாது!” என உதட்டை வளைத்தாள் இவள்.
“இல்லையே! நீ என்கிட்ட சண்டையே போடலை. இப்போலாம் கோவிச்சுக்கவே மாட்ற. எதுக்கெடுத்தாலும் சிரிச்சிட்டே இருக்க!” என்றவன் பாலைக் குடித்துவிட்டு குவளையை கீழே வைத்தான். ஆதிரை பதில் சொல்லாமல் அந்தக் குவளையைக் கழுவி கவிழ்த்தினாள்.
இவன் அவள் பின்னே சென்று அவள் வயிற்றோடு அணைத்து கழுத்தில் முகம் புதைத்தான். அவள் அப்பயிருந்த முகப்பூச்சின் வாசனை நாசியை நிரடியது. ஆதிரைக்கு சட்டென கூச்சம் வந்து ஒட்டிக் கொண்டது.
“வீட்ல இருக்கும்போது கூட என்னத்தை டீ பூசிருக்க?” எனக் கேட்டவனை பக்கவாட்டாய் முறைத்தவள், அவன் கையை விலக்க முயன்றாள்.
“இன்னும் எத்தனை நாள் தான்டி தள்ளித் தள்ளிப் போவ?” எனக் கேட்டவன் அவளைத் தன்புறம் திருப்ப, இவள் அவஸ்தையுடன் தலைக் குனிந்தாள்.
‘ஐயோ... பாவம் என் புருஷன்!’ அவள் மனதிற்குள் முணுமுணுத்தாள். தேவாவின் விரல்கள் அவளது இடையிலிருந்த உடையைத் தளர்த்தி அவள் வயிற்றை வருடவும், படக்கென்று வயிற்றை உள்ளிழுத்தவள், “தேவா...” என நிமிர்ந்து ஏதோ கூற வந்தவளின் வார்த்தையை அவன் விழுங்கி இருந்தான்.
என்னவோ அவளைப் பாகம் பாகமாக மென்று தின்றுவிடும் வேகத்தில் ஆழ்ந்து அனுபவித்து அவன் முத்தமிட, இவளுக்கு ஐயோவென்றானது. ஆனாலும் கண்ணை மூடி கணவன் முதன் முதலில் கொடுக்கும் முத்தத்தில் ஆழ்ந்து அவன் கைகளில் துவளும் உடலை இழுத்துப் பிடிக்த முயன்றாள். நான்கு உதடுகளும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கிடந்தன. உதட்டைப் பிரித்தெடுக்க மனமில்லாது எடுத்தவன் அவள் முன்புறமாய் கழுத்தில் புதைந்தான்.
ஆதிரை வேக மூச்சை வெளியிட்டவள், “தேவா... ப்ளீஸ்!” என்றாள் மெல்லிய குரலில்.
“இன்னும் என்ன டீ?” தாபத்தில் தவழ்ந்து வந்தது அவன் குரல். இடையை வருடிய கரம் அழுத்திப் பிடிக்க, “தேவா...” என அழுத்தி அவனைக் கூப்பிட்டவள் சங்கடத்துடன் எதையோ கூறவும், படக்கென அவன் விலகியிருந்தான். சட்டென அவனிடம் மொத்தமாய் உணர்வுகள் வடிந்து போயின.
“சாரி தேவா!” என அவள் பேசும் முன்னே, “இட்ஸ் ஓகே, நீ போய் படு...” என அவள் முன்னே கையை நீட்டித் தடுத்தவன், ஒரு குவளை நிறைய நீரை மடமடவென குடித்து தன்னை நிதானப்படுத்த, இவளுக்கு அவனைக் காண சங்கடமாகிற்று.
எதுவும் பேசாது அறைக்குள் நுழைந்து பாயை கீழே விரித்தாள். உள்ளே வந்தவன் அவளைத் தீயாய் முறைக்க, “ஸ்டமக் பெய்னா இருக்குங்க. மேல இடிச்சுட்டுப் படுக்க வேணாம்னு கீழே ஃப்ரியா படுக்கப் போறேன்!” என்றாள் அவனை சமாதானம் செய்யும் குரலில். ஆனாலும் அவன் அவளை முறைத்துவிட்டு சென்று படுத்தான். ஆதிரை பெருமூச்சுடன் பாயில் படுத்தாள். புரண்டு படுத்தும் அவளுக்கு உறக்கமே வரவில்லை. எட்டிப் பார்த்தாள். தேவா உறங்குவது தெரிய, எழுந்து அபியைத் தள்ளிப் படுக்க வைத்துவிட்டு அவனுக்கு அருகே நெருங்கி படுத்தாள். அவளது அரவத்தில் விழித்தவன், “என்னடீ?” என்றான் முறைப்புடன்.
“ப்ம்ச்... எதுக்கு முறைக்குறீங்க?” என சிணுங்களாய் கேட்டு அவன் புஜத்தில் தலை வைத்தாள்.
“ஒன்னு வேணாம்...போய் கீழயே படு!” அவன் இரைய, “எனக்கு இப்படி படுக்கத்தான் புடிச்சிருக்கு இடிச்சுட்டு, பிடிச்சுட்டு!” என அவனை அணைத்தாள். முறைக்க முயன்றாலும் அவன் முகத்தில் சின்ன புன்னகை வந்து அமர்ந்தது.
“சாரி!” என அவனை ஒண்டிப் படுத்தாள் ஆதிரை.
“ப்ம்ச்... விடேன் டீ!” என்றவன் மெதுவாய் அவள் மீது கையைப் போட, அபி தூக்கத்திலே எழுந்தமர்ந்து, “அம்மா...” எனக் கண்ணை கசக்கினான் வலப்புறம் பார்த்து தாய் இல்லையென.
“அபிம்மா... அம்மா இங்கதான் இருக்கேன்!” ஆதிரை அவன் கையைப் பிடித்து சமாதானம் செய்து படுக்க வைக்க, அவன் அவளின் தோளில் தலை வைத்து கையைப் போட்டு இறுக அணைத்துக் கொண்டான். இவள் பாவமாய் திரும்பி கணவனைப் பார்க்க, அவன் பார்வையிலே கடுகடுத்துவிட்டுத் திரும்பி படுத்தான். அவன் செய்கையில் சிரிப்பு வேறு
வந்தது இவளுக்கு. தன் காலால் அவன் காலை சுரண்டினாள்.
“அமைதியா படுடீ!” தேவா அதட்டலிட்டதும், “ரொம்பத்தான்...” என ஆதிரை தூங்கிப் போனாள்.
தொடரும்....