• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,215
Reaction score
3,604
Points
113
நெஞ்சம் – 55 💖

அனைவரும் கூடத்தில் நின்றிருந்தனர். தேவா ஆதிரையின் கையை விடவேயில்லை. அபியும் தாயோடு ஒன்றி நின்றான்.

வாணி கோபத்தோடு தலை முடியை தூக்கிக் கொண்டையிட்டார். ஏனோ மகன் வந்ததும் தன்னிடம் எதுவும் கேட்காது மனைவியிடம் சென்றதில் இவருக்கு இன்னுமின்னும் கோபம் பொங்கியது.

“ஏன் தேவா, பொண்டாட்டி வந்ததும் பெத்த அம்மா ரெண்டாபட்சமா போய்ட்டேனா டா? வந்ததும் அவகிட்டே போய் என்னாச்சுன்னு கேட்குற? ஹம்ம்... உன்னைப் பத்து மாசம் பெத்து ஆளாக்குனவடா நான். ஆனால் நான் உன் கண்ணுக்குத் தெரியலை இல்ல? புள்ளைங்க புள்ளைங்கன்னு உங்களுக்காக வாழ்ந்த என்னை ஒரு வார்த்தையில செருப்பால அடிச்சுட்ட டா!” ஆற்றாமையில் வார்த்தை வெடித்து வர, அவர் கண்களில் இப்போது நீர் தேங்கி நின்றது. தேவா இறுகிப் போய் தாயைப் பார்த்தான்.

“ஏன்ம்மா இப்படி நடந்துக்குறீங்க? எங்க சந்தோஷம்தான் முக்கியம்னு சொல்வீங்களே. பெத்த புள்ளை நல்லா வாழணும்னு உங்களுக்குத் தோணலையாம்மா? என்னைக்கு தாலி கட்டி கூட்டீட்டு வந்தேனோ அன்னைல இருந்து நானும் அவளும் வேற வேற இல்லை. அபியை நான் முழு மனசோட என் பையனா ஏத்துக்கிட்டுத்தான் கல்யாணம் பண்ணேன். அப்படி இருக்கப்போ அவங்க ரெண்டு பேரையும் நீங்க அனாதைன்னு சொல்றது என்னை சொல்ற மாதிரி. வீட்டைவிட்டு அவளை வெளிய போகச் சொல்றீங்க? ஹம்ம்... ஒன்னும் பிரச்சனை இல்லம்மா. நானும் என் பொண்டாட்டியும் தனியா போய்டுறோம். நீங்க இங்க சந்தோஷமா இருங்க!” என்றான் ஆத்திரத்தை அடக்கிய குரலில். மூன்றான் மனிதராய் இருந்திருந்திருந்தால் இந்நேரம் தேவாவின் நிதானம் தப்பி இருக்கும். ஆனால் தன் முன் குற்றம் சாட்டப்பட்டு நிற்பவர் தன்னைப் பெற்றவள் என்ற காரணமே அவனை பொறுமை காக்க சொல்லிற்று.

வாணி உதட்டைக் கோபமாய் வளைத்தார். “உன் பொண்டாட்டி என்னை வீட்டைவிட்டு வெளியப் போக சொல்றா. பெரிய மனுஷின்னு பார்க்காம கையை ஓங்கி அடிக்க வர்றா. அதெல்லாம் உனக்கு தப்பா தெரியலையா டா. நான் சொன்னது மட்டும்தான் பெருசா தெரியுதா?” என ஆத்திரத்தோடு கேட்டார்.

“அவ தப்பு பண்ணியிருக்க மாட்டாம்மா... அவ தப்பு பண்ணியிருக்க மாட்டா. என் பொண்டாட்டி நிச்சயமா தப்பு பண்ணிருக்க மாட்டா!” எனக் கோபத்தை அடக்கப் பிடரியைத் கோதி ஆங்காரமாய் அவன் கத்த, ஆதிரையின் விழிகள் வேகவேகமாக நனைந்தன. அமைதியாய் அவனைத்தான் பார்த்திருந்தாள்.

“ஓ... அப்போ நான்தான் தப்பு. ஹம்ம்? உன் பொண்டாட்டி சரியா இருக்கா அப்படித்தானே?” எனக் கண்ணீரைத் துடைத்தபடி கேட்டார் வாணி.

அவரை அழுத்தமாய்ப் பார்த்தான், “ஆமா மா... நீங்கதான் தப்பு பண்ணீங்க. அபியை அடிச்சது முதல் தப்பு. என்னைக்காவது ராகினியை கை நீட்டி இருக்கீங்களா? ஹம்ம்... அப்போ என் புள்ளைன்னது உங்களுக்கு இளக்காரமா போச்சா?” எனக் காரமாய்க் கேட்டான்.

“வாயை மூடு தேவா... அவன் ஒன்னும் உன் புள்ளை இல்ல. அவ யாருக்குப் பெத்தாளோ? நீ உன் புள்ளைன்னு சொல்ல சொல்ல எனக்கு வயிறு எரியுது டா!” அவர் இரையவும்,

அவரை நிதானமாகப் பார்த்தவன், “அபி என் பையன், அவனுக்கு கார்டியன், அப்பா எல்லாமே நான்தான். அவனை நீங்க கை நீட்டி அடிச்சது தப்புதான். அவனை எப்போவாது உங்கப் பேரனா பாருங்கன்னு நான் சொல்லி இருக்கேனா? ஹம்ம்... உங்களை வற்புறுத்திருக்கேனா? இல்லை தானே? நான்தானே அவன் பொறுப்பை ஏத்துக்கிட்டேன். அப்படி இருக்கப்போ அவன் மேல கை வைக்க உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது?” எனக் கேட்டவனின் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக பறந்தது.

“நான் அவனை அடிச்சது மட்டும்தான் உனக்கு தப்பா தெரியுது. அவன் ஜனனி மேல விழுந்து அவக் குழந்தைக்கு எதாவது ஆகியிருந்தா என்ன டா பண்ண? ஹம்ம்... என் வீட்டு வாரிசு எனக்கு முக்கியம். அதனால்தான் அடிச்சேன்!” அவர் குரலில் வெகுவாய் அலட்சியம். ஆதிரை அவரைக் கோபத்தோடு பார்த்தாள்.

“சின்ன பையன் மா அவன். தெரியாம பண்ணதுக்கு அநாதைன்னு சொல்லி அடிச்சுருக்கீங்க? ஏன்மா இப்படி உங்களை நீங்களே தரம் தாழ்த்திக்குறீங்க?” தேவாவின் குரலில் தன் தாயா இப்படி என்ற ஆதங்கம் நிரம்பியிருந்தது.

“எனக்குப் புடிக்கலை. அவளையே என் வீட்டு மருமகளா என்னால ஏத்துக்க முடியலை டா. அதுல அவளுக்குத் துடுப்பா இன்னொருத்தனும். என்ன ஜாதியோ! மதமோ... இவளைத்தானே கல்யாணம் பண்ண? எனக்கு அவனை சுத்தமா பிடிக்கலை. அவனை ஒரு ஹாஸ்டலா பார்த்து சேர்த்துவிட்ரு டா. அவன் தரித்திரியம். அவன் வந்ததுல இருந்து நம்ப வீட்டுல நிம்மதியே இல்லாம போச்சு!” என அவர் பேசி முடிக்கும் முன்னே,

“வாயை மூடுங்க முதல்ல... என் பையனைத் தரித்திரியம்னு இன்னொரு தடவை சொன்னீங்க. நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்!” ஆதிரையின் வார்த்தைகள் உச்சபட்ச வெறுப்போடு வந்து விழுந்தன.

'சீ... என்ன பெண்மணி இவர்?' என அவரை அருவருப்பாய் பார்த்தாள்.

“பாரு டா... உன் பொண்டாட்டியோட லட்சணத்தை நல்லா பாரு. உன் முன்னாடியே எப்படி பேசுறான்னு. இப்படி ஒருத்திக்குத்தான் நீ சப்போர்ட் பண்ணி என்கிட்ட பேசுற? இவளெல்லாம் உனக்குப் பொறுத்தமானவளா டா? நல்ல குடும்பத்து பொண்ணா பார்க்கலாம்னு சொன்னேனே... கேட்டீயா நீ? இப்படி தீர்ந்து விட்டவளை கட்டி உன் வாழ்க்கையை நீயே சீரழிச்சுட்ட!” அவர் ஆத்திரத்துடன் பேசினார்.

“ஏன் மா? உனக்கு அண்ணன் என்ன பாவம் பண்ணான்? நீ பேசுறது எல்லாம் நியாயமா இருக்கா? நீ பார்த்த ரெண்டு பொண்ணும் அமையலை. அவனா ஒரு வாழ்க்கையைத் தேடிகிட்டான். அதுக்காக ஒவ்வொரு தடவையும் இப்படி வெறுப்பை கக்குவீயாம்மா. எனக்கு இது எங்க அம்மாவான்னு சந்தேகமாக இருக்கு. நீயும் ஒரு பொண்ணைப் பெத்து வச்சிருக்க. அதை ஞாபகம் வச்சுக்க!” ஹரி அழுத்திக் கூறினான்.

“வாயை மூடு ஹரி... எல்லாம் உன்னால வந்தது. நீயும் இவளும் காதல் கல்யாணம்னு பண்ணித் தொலைக்காம இருந்தா அப்பவே உங்க அண்ணனுக்கு நான் கல்யாணம் பண்ணி வச்சிருப்பேன். எல்லாம் நீ பண்ண வேலைதான். அதனாலதான் இவ எல்லாம் வீட்டுக்குள்ள வந்து ராஜியம் பண்றா!” என்றார் கொதித்து. ஹரி அவரை அற்பமாய் பார்த்தான்.

“நானும் என் பொண்டாட்டி புள்ளையும் இந்த வீட்ல இனிமே இருக்க மாட்டோம்மா. நீங்க ஒரு ஆளே உங்க ராஜியத்தைக் கட்டி ஆளுங்க. எங்க வாழ்க்கையை நாங்க பார்த்துக்கிறோம். இதுக்கும் மேல என்னை நம்பி வந்த பாவத்துக்காக உங்ககிட்டே அவ அசிங்கப்பட முடியாது!” தேவா அழுத்தமாய் உரைத்தான்.

“அதானே டா பார்த்தேன். எல்லாம் உன் பொண்டாட்டி சொல்லிக் கொடுத்தது தானே? எம் புள்ளையை என்கிட்ட இருந்து பிரிச்சுட்டுப் போறதுதானே அவ ப்ளான். வந்ததும் அதை நடத்தி காட்டீட்டா!” ஆதிரையை முறைத்தவர், “அவ ஆட்ற ஆட்டாத்துக்கு நீயும் சேர்ந்து ஆடாத தேவா!” மகனை எச்சரித்தார்.

அவரை வெறுப்பாய் பார்த்தவன், “இந்த வீட்டுக்கு வந்த நாள்ல இருந்து ஒரு தடவை கூட அவ உங்களைப் பத்தி தப்பா பேசுனது இல்லம்மா. நீங்க என்ன பண்ணாலும் என்கிட்ட அதை ஷேர் கூட பண்ணாம அட்ஜஸ்ட் பண்ணிப் போய்டுவாம்மா. எனக்காகத்தான் அவ உங்ககிட்டே பொறுமையா இருந்தா. பட், நீங்க உங்க லிமிட்டை க்ராஸ் பண்ணிட்டீங்க. ரொம்ப சீப்பா நடந்துருக்கீங்க மா. உங்களை நான் இப்படியெல்லாம் யோசிச்சு கூடப் பார்த்தது இல்லை!” எனக் கூறியவன்,

“நிஜமா இதுக்கும் மேல இந்த வீட்ல என் பொண்டாட்டி நிம்மதியா இருப்பான்னு தோணலை. உங்களுக்கு கோபம் மட்டும்தான் இருக்கும்னு நினைச்சேன். பட் இது அப்பட்டமான வெறுப்பு. இதுவரைக்கும் உங்க மேல நான் அம்மான்னு ரொம்ப மரியாதை வச்சிருந்தேன். நீங்களே அதை கீழ இறக்கிட்டீங்க. இதுக்கும் மேல நம்ப ஒரே வீட்ல இருக்க முடியாது. உங்களுக்கு ஒரு ஹரி ஒருத்தன்தான் புள்ளைன்னு நினைச்சுக்கோங்க!” அவன் விரக்தியாகப் பேச,

“மாமா... என்ன பேசுறீங்க நீங்க? அத்தைதான் புரியாம பண்றாங்க. அவர்களுக்கு நீங்கதான் சொல்லிப் புரிய வைக்கணும். தனியா போறேன்னு எல்லாம் சொல்லாதீங்க!” ஜனனி படபடத்தாள். அவன் இதழ்களில் கசந்த முறுவல் படர்ந்தது.

“அவங்களுக்கு அவங்களோட வரட்டுப் பிடிவாதம், கோபம் வெறுப்பு இதான் முக்கியமா போச்சு ஜானு. நான் முக்கியம்னு நினைச்சிருந்தா இப்படி பண்ணி இருக்க மாட்டாங்க. சொல்லிப் புரிய வைக்கிற ஸ்டேஜை தாண்டிட்டாங்க. அவங்களுக்கா புரியணும். ஒவ்வொரு டைமும் எனக்காகன்னு ஆதிரையை கஷ்டப்படுத்த எனக்கு விருப்பம் இல்ல. என் பொண்டாட்டி புள்ளையை நான் பார்த்துக்குறேன்!” என்றான் ஒருவித அழுத்தம் நிறைந்த குரலில்.

உண்மையில் வாணியை மிரட்டத்தான் தனிக்குடித்தனம் போய் விடுவேன் எனக் கூறுவான். ஆனால் அது இன்றைக்கு உண்மையாகும் என எதிர்பார்த்திருக்கவில்லை. ஜனனி அவனுக்கு அழைத்துப் பேசும்போது வாணியின் ஆங்காரமான குரலை அவன் கேட்டபோதே முடிவெடுத்துவிட்டான். அவள் நடந்ததை அரைகுறையாக விவரித்த போதே இவனுக்கு வெறுத்துப் போனது. இதில் அபியை அடித்தது, ஆதிரையையும் அபியையும் வீட்டைவிட்டு வெளியே தள்ளியதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. பொன்வாணிதான் இப்படி நடந்து கொண்டாரா என அவனுக்குத் தலையே சுற்றியது. என்ன பேசுவது எப்படி எதிர்வினையாற்ற என அவனே அதிர்ந்து போயிருந்தான். இதில் உள்ளே நுழைந்ததும் ஆதிரை நின்றிருந்த கோலம் அவனை மொத்தமாக உலுக்கிப் போட்டிருந்தது.

திருமணம் முடிந்த நாளிலிருந்தே அவர்கள் இருவரும் தன் பொறுப்பு என எண்ணியிருந்தான். வேண்டாம் என அடம்பிடித்தவளை இவன்தானே கட்டாயப்படுத்தி மணந்தது. அப்படி இருக்கையில் தன்னை நம்பி வந்தப் பெண்ணை இப்படி வீட்டு வாசலில் யாரோ போல நிற்க வைத்து விட்டோமே என குற்றவுணர்வில் குறுகிப் போனான். அவனால் ஒருகட்டத்திற்கு மேலே வாணியிடம் பேச முடியவில்லை. பேசினாலும் அவர் புரிந்து கொள்வார் என கிஞ்சிற்றும் நம்பிக்கை இல்லை.

ஆதிரையைத் தனியே அழைத்துப் போவதுதான் அவளுக்கு அவன் கொடுக்கப் போகும் குறைந்தபட்ச நிம்மதி என புத்திக்கு உறைத்தது.

“தேவா... நீ சொல்றது சரிதான். பேசமா அண்ணியோட நீ தனிக்குடித்தனம் போய்டு‌. நானும் என் பொண்டாட்டியைக் கூட்டீட்டு தனியா போய்டுறேன். அம்மா மட்டும் இந்த வீட்ல சந்தோஷமா இருக்கட்டும்!” ஹரி கடுப்புடன் கூறினான். தேவா இடம் வலமாக தலையை அசைத்தான்.

“நான் இல்லாத இடத்தை நீதான் ரீப்ளேஸ் பண்ணணும் டா. நீதான் இனிமே குடும்ப பொறுப்பை பார்த்துக்குற. உங்களுக்காகன்னு பார்த்துப் பார்த்து செஞ்சு கடைசியில என் பொண்டாட்டியும் புள்ளையும் அநாதை பட்டம் வாங்குனதுதான் மிச்சம். இனிமே நான் சுயநலமா இருக்க போறேன். பொறுப்பா இருந்து என்னத்தைக் கிழிச்சேன்?” என ஆற்றாமையுடன் கேட்டான். அவனுக்கும் வலித்ததுதான். குடும்பம் பொறுப்பு என எங்கேயும் அவன் தவறியிருக்கவில்லை.

அப்படி இருக்கும்போது வாணியின் செய்கையில் மனம் வெகுவாய் அடிவாங்கிப் போனது. என்னவோ விரக்தியாய் நிமிர்ந்து தாயைப் பார்த்துவிட்டு ஆதிரையை நோக்க, அடைகாக்கும் குஞ்சு போல அபியை இவர்களிடமிருந்து காத்து அவனை பிடித்திருந்தாள். இப்போது அவளது கண்களில் கண்ணீர் வற்றி இருந்தது. ஆனால் பார்வை எங்கோ வெறித்திருந்தன.

“அண்ணா... அப்பா இல்லாதப்போ நீ இவ்வளோ பெரிய டிஷிசன் எடுக்கறது ரொம்ப தப்பு. அப்பா வரட்டும், அப்புறம் பேசிக்கலாம். நீ முதல்ல அண்ணியைக் கூட்டீட்டுப் போய் சமாதானப்படுத்து!” ஹரி அழுத்தமாய் கூறினான். தேவா அசையாது நின்றிருக்க, இவன் மீண்டும் அழுத்திக் கூறியதும் ஆதிரையைப் பார்த்தான். அவள் எதுவுமே பேசவில்லை.
அவள் கையைப் பிடித்திழுத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தான். அபியும் அவர்களோடு உள்ளே வந்தான்.


அபிக்கு கொஞ்சமாய் புரிந்தது. ஆனாலும் பாட்டி ஏன் தன்னை திட்டுகிறார்? வெறுக்கிறார் என அவனுக்கு மனம் ஏங்கியது. ராகினியை அவர் தூக்கிக் கொஞ்சும் போது அவரையேத்தான் பார்த்திருந்தான். யாருமே இல்லை என்று தாயும் மகனுமாய் இருந்தக் காலத்தில் எல்லாம் அபி யாருடைய அண்மைக்கும் ஏங்கியது இல்லை. ஆனால் இங்கே தன் வயதையொத்த குழந்தைக்கு கிடைக்கும் நியாயமான அன்பு தனக்கு ஏன் கிடைக்கவில்லை என சின்னவனுக்குப் புரியவில்லை. தாய் அழுதது வேறு அவனை வெகுவாய் பாதித்தது. தாயையும் தந்தையையும் பார்த்திருந்தான். அநாதை என்ற வார்த்தை அவன் மனதிலே தங்கிப் போனது.

“ஆதி...” தேவா குரலில் குற்றவுணர்வு மண்டிக் கிடக்க, அவளை அழைத்தான். நிமிர்ந்து அவனைப் பார்த்து புன்னகைக்க முயன்ற உதடுகளில் கசந்த முறுவல் பிறந்தது.

விழிகள் மெலிதாய் கலங்க, “இங்க நிக்கவே கூசுது தேவா!” என்றாள் கண்ணில் நீர் நிரம்ப.

“ப்ம்ச்... என்ன டீ நீ?” அவன் அதட்ட, “நிஜமா தேவா, அருவருப்பா இருக்கு. வேண்டான்னு சொல்ற இடத்துல நானும் எம்புள்ளையும் இருக்கோம்னு நினைக்க நினைக்க அழுகை வருது‌. அனாதை அனாதை சொல்றாங்க. சின்ன வயசுல இருந்தே அப்படித்தான் வளர்ந்தேன். சரி இப்போவாது குடும்பமா வாழலாம்னு ஆசைப்பட்டுத்தான் வந்தேன். பட், நான் நினைச்சது ஒன்னு. நடந்தது ஒன்னா இருக்கு. உங்கம்மா பேசும்போது பதில் பேசுனாலும் அவங்க பேசுன வார்த்தை என்னைக் குத்திட்டே இருக்கு. இப்போ இங்க இந்த ரூம்ல இருக்க நிமிஷத்தை நான் வெறுக்குறேன். யாருமே இல்லாம கூட நான் நல்லா இருந்தேன்!” என்றாள் கேவிய அழுகையை அடக்க முயன்று தோற்றக் குரலில்.

“ஏன்டீ இப்படிலாம் பேசுற. அம்மா பேசுனது தப்புதான். என்னால அவங்களை எதுவும் பண்ண முடியாது டீ. அம்மாவா போய்ட்டாங்க!” வேதனையுடன் அவன் பேச,

இவள் சில நொடிகள் கைவிரல் நகங்களை ஆராய்ந்துவிட்டு, “நான் ஒன்னு சொல்லுவேன். கோபப்படாம கேளுங்க!” என்றாள் மூச்சை வெளிவிட்டு. அவன் எதுவும் கூறாது அவளைப் பார்த்தான்.

“நீங்க என்கூட வர வேணாம். உங்க... உங்க குடும்பம் உங்களுக்கு எவ்வளோ முக்கியம்னு எனக்குத் தெரியும். நான் பிறந்தப்பவும் சரி, இப்பவும் சரி என் குடும்பம்னா அது நானும் என் புள்ளையும்தான். என்னவோ நீங்க கல்யாணம் பண்ண கேட்டதும் ஒரு ஆசை, சரி ஒரு ஃபேமிலில போய் வாழலாம்னு. பட் என் விதி ஒண்டிக் கட்டையாவே சாகணும்னு இருக்கு. என்னால உங்களுக்கு கஷ்டம் வேணாம். நாங்க ரெண்டு பேரும் கிளம்பிட்டா, உங்கம்மா சொன்ன மாதிரி இந்த வீட்ல நிம்மதி வந்துடும்!” என்றாள் அவன் முகம் பாராது. என்னவோ சற்று நேரத்திற்கு முன்னே அவன் தன்னிடம் காட்டிய பரிவும், அன்பும், அவள் மீது அவன் வைத்திருந்த நம்பிக்கையும் அவனுக்குள்ளே புதைந்து போகச் சொல்லியது. ஆனாலும் தன்னுடைய சுயநலத்திற்காக அவனைக் குடும்பத்தில் இருந்து பிரிப்பது தவறு என மூளை அனத்தியது.

“ஆதி!” அதட்டலாய் அழைத்தக் குரலுக்கு நிமிர்ந்தாள்.

“அங்க காட்ட முடியாத கோபமும் அப்படியேதான் டீ இருக்கு. மொத்தத்தையும் உன்கிட்ட காட்டீடப் போறேன் டீ!” என்றான் பல்லைக் கடித்து‌. ஆதிரை அவனை நிமிர்ந்து பாவமாய் பார்த்தாள். கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்து முன்னே நின்றது.

“எப்போ பார்த்தாலும் நான் வேணாம், பிரிஞ்சுடலாம்னுதான் உனக்குத் தோணுமா? வெளிய அத்தனை பேர் முன்னாடி என் பொண்டாட்டி தப்பு பண்ணி இருக்க மாட்டான்னு உனக்குத்தானே டீ சப்போர்ட் பண்ணேன். நான் உன்மேல நம்பிக்கை வச்சிருக்கேன். ஆனால் நீ என்னை எப்பவுமே நம்ப மாட்டீயா?” ஆதங்கமாய் அவன் கேட்டதும்,

ஆதிரை அவன் சட்டையின் இரண்டு நுனியைப் பிடித்திழுத்தவள், “உங்களை ரொம்ப ரொம்ப நம்புறேன் தேவா. வெளிய எனக்காக நீங்க பேசும்போது தோணுச்சு, இந்த மனுஷன் என்னைக்கும் என்னை விட்ற மாட்டாருன்னு நம்பிக்கை வந்தது. எனக்கு நீங்க வேணும் தேவா!” என்றவள் தேம்பிக் கொண்டே அவன் மார்பில் முகத்தை அழுத்தினாள். தேவா அவள் வார்த்தையிலிருந்த அழுத்ததில் இடறிய குரலில் தடுமாறி அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான்.

“இதுவரைக்கும் எனக்காகன்னு யாருமே பேசுனது இல்லை தேவா... வெளிய... வெளிய நீங்க வந்து என்னாச்சு ஆதின்னு கேட்டப்போ எப்படி இருந்துச்சு தெரியுமா?” என அவன் முகம் பார்த்து தேம்பியழுதவள்,

“யாருமே இல்லாம அநாதையா வாழ்ந்த எங்களுக்குன்னு நீங்க இருப்பீங்கன்னு தோணுச்சு. எனக்கு நீங்க வாழ்க்கை முழுசும் வேணும் தேவா. ஒருவேளை வந்ததும் உங்கம்மா சொல்றதை நம்பியோ இல்லை உங்கம்மாகிட்டே போய்ருந்தீங்கன்னா நான் உங்களை விட்டிருப்பேனோ என்னவோ? ஆனால் இனி சாகும்வரைக்கும் விட மாட்டேன்.
என்னால உங்க குடும்பம் பிரிய வேணாம்னு தோணுது!” என்றாள். அவனை விடவும் முடியாது இறுக்கிப் பிடிக்கவும் முடியாது விசும்பினாள்.

தேவா அவள் நெற்றியில் முத்தமிட்டவன், “என் குடும்பம் இல்ல ஆதி... நம்ப குடும்பம் டீ இது. என் அம்மா அப்படி பேசுனாங்கன்றதுக்காக மத்தவங்களை ஒதுக்கீடாத நீ. அம்மா மாறுவாங்களான்னு எனக்குத் தெரியலை. பட் நான் எப்பவுமே உன்கூட உனக்காக நிப்பேன்னு நம்பு டீ!” என்றான் அவளை தன்னோடு புதைத்து.

தலையை அசைத்தவள், “கண்டிப்பா இங்க இருந்து போய்டலாம் தேவா. என்னால ஒவ்வொரு நாளும் உங்கம்மா என் பையனை மெண்டல் டார்ச்சர் பண்றதை அலோவ் பண்ண முடியாது. அவங்க பேசுன எல்லாமே அவனை ரொம்ப பாதிக்கும். அவன் கண்ணு முன்னாடியே வேணும்னே ராகினியைக் கொஞ்சுறது, அவளுக்கு ஊட்டிவிட்றதுன்னு. இத்தனை நாள் எல்லாத்தையும் நான் அட்ஜஸ்ட் பண்ணேன். பட் இப்போ அவங்க செஞ்சதை என்னால அக்செப்ட் பண்ணவே முடியலை தேவா. தனியா கூட்டீட்டுப் போவீங்க தானே?” எனத் தவிப்பும் கவலையுமாய்க் கேட்டாள் ஆதிரை.

“போகலாம் ஆதி... கண்டிப்பா போகலாம். அப்பா வரட்டும், பேசிட்டு நம்ப கிளம்பலாம்!” என்றான் மூச்சை வெளியிட்டு.
அபி அவர்களையே பார்த்திருந்தான். தேவா அவனை அருகே அழைத்தான்.

“அபி, பாட்டீ அடிச்சதுக்காக நான் சாரி கேட்டுக்குறேன். இனிமே யாரும் உன்னை அடிக்காம நான் பார்த்துக்குறேன்!” என அவன் கன்னத்தில் காய்ந்து போயிருந்த கண்ணீரைத் தடவினான் தேவா. தாயை சில நொடிகள் பார்த்துவிட்டு இவன்புறம் திருப்பினான் அபினவ்.

“பரவாயில்லை அங்கிள், பாட்டீ ஏதோ கோபத்துல தானே பண்ணாங்க!” என அவன் தாயிற்காகப் பார்த்து அவள் அழக் கூடாது என யோசித்துக் கூறவும், தேவாவின் முகம் கசங்கியது. சின்னவனை அணைத்துக் கொண்டான். இந்த பிஞ்சிற்கு இருக்கும் பக்குவம் கூட தன் தாய்க்கு இல்லையே என அவனுக்கு வருத்தமாகிற்று.

தொடரும்...

சாரி!!! அழுகாச்சி எபிசோட். கதையோட போறேன் நான். இது எங்கப் போய் நிக்கும்னு தெரியலை. இந்த எபிசோட்ல வைக்கலாம், அடுத்த எபிசோட்ல வைக்கலாம்னு நினைக்கிறேன். சிட்சுவேஷன் அமையலை.... என்னன்னு கேட்பீங்க தானே? அதான் இல்லாத ரொமான்ஸ் 😂😂😂😂😂 it's all deva's fate

 
Well-known member
Messages
1,020
Reaction score
753
Points
113
Athan illa nu sollittiye maa, apram epdi varum😆😆😆😆😆😆😆. 😆
Irunthalum inthamma ivlo pesum nu ethirpaakkave illa, too bad

Paavam abi kutty
 
Well-known member
Messages
471
Reaction score
342
Points
63
Romance enna sis periya romance it's just a part in life avolo than but innaiku deva oda seyal enga manasula avan peak la kondu poi vachiduthu.
Even janu Enna than solli irundhalum abi yum athi yum ninnutu irundha thotratha vachi avanga kita poi enna nadanthu chi nu kettathu ennoda pondati thappu panna mata nu sonnathu nu avaluku onnu na nan eppo vum irupen nu sonnathu ellammae it's more than that romance nu nan solluven sis .deva may not be romantic husband but he is definitely a lovable husband than enga yum endha situation la yum avan wife ah avan vittudula ne kalakita deva .

Aana deva unnoda per vachan evano indha janu ma rombha kaduppu yethi irukaga pola athu than unnoda vazhkai la ipadi round katti vilayadura indha pillai .athuvum unnaku romance illa evolo jolly ah sollura paren enna oru villathanam janu unnaku .
 
Last edited:
Well-known member
Messages
524
Reaction score
389
Points
63
அதான் அழுவாச்சி காவியத்துக்கே டைம் சரியா இருக்கு இதுல என்னத்த ரொமான்ஸு 🤪🤪🤪🤪
 
Active member
Messages
133
Reaction score
103
Points
43
Nice super interesting 👌 👌 👌 👌 👌 👌
 
Top