• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,205
Reaction score
3,520
Points
113
நெஞ்சம் – 53 💖

“என்னைக் கேட்கணும். என் பெர்மிஷன் இல்லாம ஏன் என் ஹேண்ட் பேக் எடுத்தீங்க?” எனக் காரமாய்க் கேட்டவள், அவன் கையிலிருந்த புகைபடத் தொகுப்பை வெடுக்கென பிடுங்கினாள். தேவா அவளுக்கு வெகு அருகே வந்து நின்ற போதும் ஆதிரை அதிரவில்லை. அவனை அலட்சியம் செய்தாள்.

“ஓஹோ... உன்னோட திங்க்ஸா ஆதி?” அவன் கேலியாய்க் கேட்க, “ஆமா...” என்றவள் கட்டிலிலிருந்த கைப்பையை எடுத்து அந்தப் புகைப்பட சட்டகத்தை அதில் வைத்து அலமாரியில் பத்திரப்படுத்தினாள்.

“ரைட்டு... உன்னோட திங்க்ஸ். பட் அதுல இருக்கது என் ஃபோட்டோவாச்சே டீ பொண்டாட்டி!” என்றவன் அவள் கையைப் பிடித்திழுத்தான்.

“கையை விடுங்க!” அவன் கேள்விக்குப் பதிலளிக்காது அவன் முகம் பார்க்கத் தயங்கி ஆதிரை தப்பிச் செல்ல முயன்றாள்.

“தப்பு பண்ணாதான் பதில் சொல்லாம ஓடணும் ஆதி. நீ எதுவும் தப்பு பண்ணீயா?” அவன் கேலியாய் கேட்டதும் ஆதிரை அவனை நிமிர்ந்து முறைத்தாள்.

“நான் எந்த தப்பும் பண்ணலை!” அவள் அழுத்தமாய்க் கூற,

“ரைட், அப்புறம் ஏன் எஸ்ஸாகுற?” எனக் கேலி இழையோட கேட்டவன் கட்டிலில் அமர்ந்தான்.

“ஹம்ம்...” என்றவன் தனக்குத் எதிரே இருந்த கண்ணாடியில் முகம் பார்த்து தாடையைத் தடவியவன், “அவ்வளோ நல்லாவா இருக்கு?” எனக் கேட்டான். ஆதிரை அவனைப் புரியாது பார்த்தாள்.

“இல்ல, சொத்தே எழுதி தர்ற அளவுக்கா என் சிரிப்பு நல்லா இருக்கு? அவ்வளோ வொர்த்தா டீ?” என்ன முயன்றும் தேவாவின் குரலிலிருந்த குறும்பை மறைக்க முடியவில்லை. ஆதிரையின் முகம் சிவக்க, அவனைப் பார்க்காது சுவரை வெறித்தாள்.

‘எல்லாத்தையும் படிச்சுட்டான்!’ இவள் மனம் சிணுங்கியது. உள்ளே வேறு ஏதேதோ கிறுக்கி வைத்திருந்தாள். கடைசி பக்கத்தையும் படித்திருப்பானோ என மனம் பதற்றப்பட்டது.

“சுவத்தையே பார்க்காம என் முகத்தையும் கொஞ்சம் பார்க்குறதுங்க பொண்டாட்டி! ஹம்ம்... புருஷன் வேலையைக் கரெக்டா பார்க்கலைன்னா பனிஷ்மெண்ட்னு போட்டிருதீங்களா... ஓஹோ... இப்படி பேசாம முகத்தை திருப்பிட்டு போறதுதான் உங்க பனிஷ்மெண்டா?” தேவா கேட்டதும், ஆதிரை அவனை முறைத்தாள்.

“என்ன... என்ன டீ முறைப்பு? போட்டோல என்னென்னவோ கிறுக்கி இருந்தீயே!” என உதட்டை வளைத்தவனை அவள் முறைத்துப் பார்த்தாள்.

“போட்டோவோட குடும்பம் நடத்துறதுக்கு எதுக்கு டீ என்னைக் கல்யாணம் பண்ண? பேசாம அதையே கல்யாணம் பண்ணி இருக்க வேண்டியது தானே?” மேலும் அவன் பேசும் முன்னே இடையிட்டாள் ஆதிரை.

“இப்போ என்ன வேணும் உங்களுக்கு?” சூடாய் கேட்டாள்.

“என்ன கேட்டாலும் கிடைக்குமா?” உதட்டோரம் நெளிந்த புன்னகையுடன் கேட்டவனை வெட்டவா குத்தவா எனப் பார்த்தாள் ஆதிரை.

“எப்போ பார்த்தாலும் முறைச்சுட்டே இருக்காத டீ. கல்யாணத்துக்கு முன்னாடி தான் பாடாப்படுத்துன. இப்பவும் என்னை வச்சு செஞ்சுட்டு இருக்க டீ. என்னதான் உன் பிரச்சனை. வாயைத் தொறந்து சொல்லித் தொலையேன் டீ. பொண்ணுங்க விஷயத்துல அவ்வளோ பெரிய அப்பாடக்கர் எல்லாம் இல்லை நான். ஒரு கல்யாணம் பண்ணவே எனக்கு முப்பத்து மூனு வயசாச்சு. அப்படி இருக்கப்போ உனக்கே என்னைப் பத்தி தெரிய வேணாமா? உன் புருஷன் ரிலேஷன்ஷிப் மெயிண்டெய்ன் பண்றதுல சரியான இடியட். இப்போ கூட நான் என்ன பண்ணேன்னு எனக்குத் தெரியலை. புருஷன்னு ஃபோட்டோல எழுதுனா மட்டும் போதாது டீ. சட்டையைப் பிடிச்சு ஏன் டா இப்படி பண்ணன்னு கேட்கணும்?” என்றான் ஆதங்கத்துடன். ஆதிரை அவன் பேசுவதை அமைதியாய் கேட்டாள். ஆனால் பதிலுரைக்கவில்லை.

“இப்போ இதை நான் சொன்னா கூட உனக்கு கோபம் வரும். சீரியஸா ஒரு பெர்த் டே விஷ் பண்ணாதது எல்லாம் இவ்வளோ பெரிய இஷ்ஷூவாகும்னு இப்பத்தான் எனக்குத் தெரியுது ஆதிரை. அது தான் உன் பிரச்சனைன்னா ஐ யம் ரியலி சாரி. இனிமே வருஷா வருஷம் மறக்காம விஷ் பண்ணிட்றேன் டீ. சண்டையை முடிச்சுக்கலாம். எனக்கு உன்னை இப்படி பார்க்க பிடிக்கலை. நீ என் கூடவே இருக்க ஆதி. பட் ஐ மிஸ் யூ. ஒரே ரூம்ல முகத்தை தூக்கிட்டு இருக்க வீ ஆர் நாட் ரூம் மேட்ஸ். சோ, கொஞ்சம் இறங்கி வர்றது தப்பில்லை ஆதி!” என்றான் ஆயாசத்துடன்.

“ப்ம்ச்... நீங்க எந்த தப்பும் பண்ணலைங்க. யூ ஆர் ரைட். ஒரு சின்ன விஷ் பண்ணாததுக்கு நான்தான் ஓவர் ரியாக்ட் பண்ணிட்டேன். நான்தான் சாரி கேட்கணும். உங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும். என் பெர்த் டே ஞாபகம் வச்சு விஷ் பண்ணணும்னு அவசியம் என்ன இருக்கு. எனக்கு கோபம் எல்லாம் இல்லங்க!” என்றாள் அமைதியான குரலில். உதட்டோரம் சின்னதாய் அவள் முயன்று தருவித்த முறுவல் படர்ந்தது.

“ப்ம்ச்...” அவன் முறைக்க,

“அட நிஜமாங்க... நான்தான் லூசு... எனக்கு... ம்ப்ச் வேணாம் விடுங்க. பிரச்சனையை முடிச்சுக்கலாம்!” என்றாள் சம்பிரதாய புன்னகையுடன். தேவா அவளைத்தான் பார்த்தான். என்னவோ அவனுக்கு பழைய ஆதிரை வேண்டும் என மனம் ஏங்கிற்று.

எழுந்து வந்து மனைவியை இறுக அணைத்துக் கொண்டான். “கோபம் வந்தா திட்டு டீ. சண்டை போடு. உரிமையா எல்லாத்தையும் கேளு. உனக்கு என்கிட்ட எல்லா உரிமையும் இருக்கு. பட் யாரோ மாதிரி பேசாத. எனக்கு ஹர்ட் ஆகுது‌. நீயும் கஷ்டப்பட்டு என்னையும் கஷ்டப்படுத்தாத ஆதி. நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன். நீ என்னை ரொம்ப ஏங்க வைக்கிற டீ!” என ஆற்றாமையுடன் அவள் தலையில் நாடியைப் பதித்தான். ஆதிரை அமைதியாய் நின்றாள்.

“வாயைத் தொறந்து பேசு ஆதி. நீ என்ன நினைக்கிறேன்னு நீயா வாயைத் தொறந்து சொல்லாத வரை என்னால கண்டு பிடிக்க முடியாது. எனக்கு கேர்ள்ஸ்ல ஃப்ரெண்ட்ஸ் கூட கிடையாது டீ. எனக்குப் பிடிச்ச, என்னைத் தெரிஞ்சுக்கிட்டே முதலும் கடைசியுமான பொண்ணு நீதான். எனக்குப் பொறுப்பா இருக்கத்தான் தெரியும் ஆதி. சின்ன வயசுல இருந்தே மூத்த பையன்னு ரெஸ்பான்சிபிலிட்டி, வொர்க்னு அது பின்னாடியே போய்ட்டேன். எனக்கு எப்படி கேர் பண்றதுன்னு தெரியாது ஆதி. என்னோட அன்பெல்லாம் அபிக்கு எந்தக் குறையும் வச்சிடக் கூடாதுன்ற வகையிலதான் இருக்கு. உன்னை நல்லா பார்த்துக்கணும்னு தான் இந்த மேரேஜ் பண்ணேன். பட் நான் எங்க மிஸ் பண்றேன்னு தெரியலை ஆதி. என்கிட்ட குறைகள் நிறையா இருக்கும். முன்ன பின்னே இருந்தா அட்ஜஸ்ட் பண்ணிக்கோ ஆதி. பட் இப்படி பிஹேவ் பண்ணாத. அது நம்ப ரிலேஷன்ஷிப்பை உடைச்சுடும் ஆதி!” தேவா உணர்ந்து கூறவும், ஆதிரை கடந்த பத்து நிமிடத்தில் அவன் முகத்தை ஆழ்ந்து பார்த்தாள்.

“அப்புறம் ஏன் மேரேஜ் முன்னாடி அவுட்டிங் கூட்டீட்டுப் போறேன்னு அக்கறையா நடந்துகிட்டீங்க? இப்படித்தான் நான்னு அப்பவே சொல்லி இருந்தா நான் உங்ககிட்டே எதையும் எக்ஸ்பெக்ட் பண்ணி இருக்க மாட்டேனே!” என்றாள் ஆற்றாமையான குரலில். தேவா பதிலளிக்காது மீண்டும் அவள் கையைப் பிடித்து அணைத்துக் கொள்ள முயல ஆதிரை தள்ளி நின்றாள்.

“உங்ககிட்டே ஒருநாள் நான் சொன்னேன் ஞாபகம் இருக்கா? நான் பெருசா யாரோடவும் எமோஷனலா அட்டாச் ஆக மாட்டேன்னு?” அவள் கேட்கவும், தேவா மெதுவாய் தலையை அசைத்தான். ஆனால் எப்போது கூறினாள், என்ன கூறினாள் என அவனுக்கு எதுவுமே நினைவில் இல்லை. அவன் ஏதோ பேச வந்தான்.

“கிவ் மீ டூ மினிட்ஸ். நான் பேசி முடிச்சிட்றேன்ங்க...” என்றவள், “ஏன்னா யார்கிட்டேயாவது எமோஷனலா அட்டாச்சாகிட்டா சின்ன சின்ன உதாசீனத்தைக் கூட என்னால அக்செப்ட் பண்ண முடியாது. என் கேரக்டர் அப்படித்தான். இதுவே எனக்கு நீங்க பாஸா மட்டும் இருந்திருந்தா நான் இப்படியெல்லாம் பிஹேவ் பண்ணி இருக்க மாட்டேன். நமக்கு மேரேஜாவும் எங்க இருந்து இப்படிலாம் ஆசை வருதுன்னே தெரியலை!”


“ஒவ்வொரு வருஷமும் பெர்த் டே விஷ் பண்றதுக்குன்னு யாருமே என் கூட இருந்தது இல்லங்க. நான் மட்டுமே தனியா கொண்டாட்றதுக்குப் பேர் பெர்த் டேவான்னு நினைச்சு சிரிச்சுக் கூட இருக்கேன். அபி வந்தப்புறம் அவனும் நானும் ஊர் சுத்துவோம். என்னோட ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் விஷ் என் பையன்கிட்டே இருந்து மட்டும்தான் வரும். மத்தபடி தர்ஷினி, கோமதிக்கான்னு அவங்களுக்கு கூட தெரியாது. நான் விஷ்ஷெல்லாம் பெருசா எக்ஸ்பெக்ட் பண்ண மாட்டேன்ங்க.”

“ஆனால் இந்த டைம் நீங்க கூட இருக்கவும் சின்னதா ஒரு ஆசை. ஒரே ஒரு விஷ் உங்ககிட்டே இருந்து வாங்கணும் நைட் வரை வெயிட் பண்ணேன். உங்களோட சேர்ந்து கோவிலுக்குப் போகணும்னு ஆசையா இருந்துச்சுன்னு கிளம்பி நின்னா வேலைக்குப் போன்னு தொரத்தி விட்டுட்டீங்க. என்னமோ என்னால அதையெல்லாம் அக்செப்ட் பண்ண முடியலை. கொஞ்ச நாள்னாலும் உங்களோட நான் எமோஷனலா அட்டாச்சாகிட்டேன். சோ, இந்த மாதிரி சின்னப் புள்ளைத் தனமா நடந்துக்குறேன்ங்க” என்றவள் குனிந்து விரல் நகத்திலிருந்த நகப்பூச்சைப் பார்த்தடியே தொடர்ந்தாள். என்னவோ அவன் முகம் பார்க்கும் போது சட்டென உணர்வுகள் கட்டவிழ்வதாய் ஓர் எண்ணம். அது அவளுக்குப் பிடிக்கவில்லை. பேசப் பேச கண் கலங்கின. சிமிட்டி அதை சரி செய்து கொண்டாள். தேவா என்ற மனிதன் முன் அவள் தடுமாறினாள். அரிதாரம் எல்லாம் மெதுவாய் உதிர்ந்தன.


“சரி, பெர்த் டே ஞாபகம் இல்ல. அதை ஞாபக வச்சுக்குற அளவுக்கு ஒன்னும் நான் பெருசா இல்லைதான். பட், மறந்துட்டேன்ன்னு சொல்லி ஒரு சாரியோட விஷ் பண்ணிருந்தீங்கன்னா, எனக்கு எதுவும் தெரிஞ்சு இருக்காது. நீ மெச்சூர்டான ஆளு, குழந்தை தனமா நடந்துக்க மாட்டேன்னு நீங்க சொல்லும் போது ஹர்ட் ஆகிடுச்சு.”

“உண்மையிலே நான் ஸ்ட்ராங்க் பெர்சன், மெச்சூர்ட் எல்லாம் இல்லங்க. என்னோட சிட்சுவேஷன் என்னை அப்படி மாத்திடுச்சு. வேற வழியே இல்லை, உன்னை நீதான் பார்த்துக்கணும்னு ஒரு சூழ்நிலை வந்ததா எல்லாரும் என்னை மாதிரிதானே இருப்பாங்க? இல்ல நான்தான் சின்ன விஷயத்தைப் பெருசாக்கி சைல்டிஷ்ஷா நடந்துக்குறேனா தேவா? நான்தான் தப்பா இருக்கேனா?” விழிகளை சிமிட்டி அணைபோட முயன்றாலும் சிவந்த நாசியும் சிமிட்டிய கண்களும் அவளது உள்ளத்தைக் காண்பித்துக் கொடுத்தன. இடறிய குரலை சரி செய்து அவனைப் பார்த்து முறுவலித்தாள். தேவாவிற்கு அந்த முகமும் அதிலிருந்த வேதனையும் பலமாய் தாக்கிற்று. பெண்கள் இத்தனை மெல்லிய உணர்வுகள் உடையவர்கள் என அவனுக்கு எங்கே தெரிந்திருக்கப் போகிறது. அவன் சின்னது என்றெண்ணி தட்டிவிட்ட விஷயத்தை மனைவி பெரிதாய் எண்ணுகிறாள். அவன் எதாவது பெரிதாய் எண்ணி எதிர்வினையாற்றினால் அவள் சர்வசாதாரணமாக தோளைக் குலுக்கிக் கொண்டு அதைக் கடக்கிறாள். ஒரு பெண்ணைப் புரிந்து கொள்வதற்கு யுகங்கள் தேவைப்படும் போல என எண்ணினான்.

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏன் இத்தனை முரண்பாடுகள் என அவனால் வியக்காமல் இருக்க முடியவில்லை. அதிலும் ஆதிரை என்ற பெண்ணுக்கு அவன் கொடுத்த வடிவமும் வரைமுறையும் வேறு. ஆனால் இப்போது அவள் வேடங்கள் எல்லாம் கலைந்து தன் மனைவியாக தன்னிடம்‌ அன்பும் அரவணைப்பும் தேவைப்படுகிற சாதாரண பெண்ணாக தெரிந்தாள். திடமான பெண் என அவன் எண்ணியிருந்த ஆதிரை அல்ல இவள். இவள் முற்றிலும் அன்பிற்காக ஏங்கும் பெண் என இந்நொடி அவனுக்கு நன்று விளங்கிற்று.

இத்தனை நாட்கள் அவளாக தனிமையைத் தேடிச் செல்லவில்லை. அவளை அணைத்துக் கொண்ட தனிமைக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறாள் போல என்றெண்ணி பெருமூச்சு விட்டவனுக்குள்ளும் வருத்தம் படர்ந்தது.

“ப்ம்ச்... நீ தப்பு இல்ல ஆதி. நான் அதை வெறும் பெர்த் டே விஷ்ஷா பார்த்தேன். பட், நீ அதை உனக்கு கொடுக்குற இம்பார்டென்ஸா பார்த்திருக்க? அதுல எந்த தப்பும் இல்லைம்மா. நான்... நான் கொஞ்சம் எமோஷன்லெஸ். என்னால வொர்க்கையும் ரிலேஷன்ஷிப்பையும் பேலன்ஸ் பண்ண முடியலை ஆதி. இப்பதானே மேரேஜாகி இருக்கு. போகப் போக பழகிக்கிறேன்ம்மா. இப்போ சாரி ஃபார் எவ்ரிதிங்க்!” தேவா வருத்தக் குரலில் உரைத்தான்.

“பரவாயில்லங்க, என் மேலயும் தப்பி இருக்கு. நானும் சாரி!”
என்றாள் கண்களை எட்டாத புன்னகையுடன்.

“வாயைத் தொறந்து கேட்டிருக்கலாம்ல ஆதி. பொண்ணுங்க இவ்வளோ சென்சிடீவ்னு எனக்குத் தெரியாது டீ!” அவன் கூறவும், ஆதிரை உதட்டோரம் கசப்பான முறுவல் உதிர்ந்தது‌.

“எனக்கு யார்கிட்டேயும் எதையும் கேட்டுப் பழக்கம் இல்லங்க. கேட்குறதுக்கு கூட யாரும் இருந்ததும் இல்லையா, சோ எல்லாமே செல்ஃப் கேர்தான்!” என்றாள் இலகுவான குரலில். ஆனாலும் என்னவோ தாயிடம் குறைக் கூறி அவளிடமே தஞ்சம் புகும் குழந்தை போல மனம் கணவன் தோளில் சாய்ந்து கொள்ள உந்தியது. சட்டென உரிமை எடுக்க முயலாது அவனைப் பார்த்து உதட்டை விரித்துப் புன்னகைத்தாள். மிக மிக மெல்லியதாய் கண்களில் உவர் நீர் கசிந்தது.

“ப்ம்ச்... இப்போதான் நான் வந்துட்டேன்ல ஆதி. ஹண்ட்ரட் பெர்சன்ட் உன்னை நல்லா பார்த்துக்க முடியுமான்னு தெரியலை. பட் என்னால முடிஞ்ச அளவுக்கு உன்னை நல்லா பார்த்துப்பேன் ஆதி. நிஜமா சாரி, நான்... நான் இந்த மாதிரி ஆங்கிள்ல எல்லாம் யோசிக்கலை. ட்ரஸ்ட் மீ. இனிமே உன் விஷயம் எதையும் மிஸ் பண்ணாம இருக்க ட்ரை பண்றேன். நைண்டீஸ்ல பொறந்தால இப்படி இருக்கேன் போல. இனிமே தப்பு பண்ண மாட்டேன் டீ. என்னை நம்பி கிவ் மீ ஒன் மோர் சான்ஸ்!" முகத்தை சுருக்கி என்னை நம்பேன் என்ற பாவனையில் கூறியவனை ஆதுரமாய்ப் பார்த்தாள் ஆதிரை. இருந்த கொஞ்சமே கொஞ்சம் கோபமும் கணவனின் இத்தனை நேரப் பேச்சில் கரைந்து போயிருந்தது. வருத்தம் மட்டும் எஞ்சி நின்றது.

“உங்களை நம்பாம நான் இந்த மேரேஜ்க்கு ஓகே சொல்லி இருக்க மாட்டேன் தேவா!” என்றாள் புன்னகையுடன். கண்களில் கண்ணீர் வடிந்து கன்னத்தை தொட்டது. ஆனாலும் உதட்டில் சிரிப்பு மலர்ந்தது. நீண்ட நாட்கள் கழித்தான அவளது தேவாவில் அவன் மனம் நிறைந்தது.

கழுத்தோடு கையைப் போட்டு பக்கவாட்டாய் மனைவியை அணைத்தவன், “ஐ மிஸ் யுவர் தேவா ஆதி!” என்றான்‌ அடர்ந்தக் குரலில். அவனை நிமிர்ந்து பார்த்தவள் முகத்தில் இப்போது புன்னகை பெரிதானது. அந்தக் குரலின் பின்னிருந்த உணர்வை சுகமாய் உணர்ந்தாள்.

என்னவோ இத்தனை நாட்கள் இருவருக்கும் இடையே இருந்த வேலி தகர்ந்ததை உணர்ந்தவளுக்கு மனம் ஆசுவாசமானது. கோபம் என்றாலும் கூட தேவாவை அவள் தேடினாள். சண்டையிடாமல் எப்போதும் போல பேசியிருந்தால் கூட மனம் அவன் அண்மைக்கு ஏங்கி இருக்காதோ என்னவோ? தூரம் அ
வர்களைப் பிரித்துப் போடுபவதற்கு பதில் இன்னும் இறுக்கி கட்டிப் போட்டது.
 
Administrator
Staff member
Messages
1,205
Reaction score
3,520
Points
113
“நானும் இந்த தேவாவை மிஸ் பண்ணேன். இந்த முசுட்டு மூஞ்சியை, அதிகாரமான பேச்சை, அப்போ அப்போ உங்களுக்கே தெரியாம வர்ற அந்தக் க்யூட் ஸ்மைலைன்னு எல்லாத்தையும் மனசு தேடுச்சுங்க!” என்றாள் அவன் முகம் பார்த்து. தேவாவின் உதடுகளில் புன்னகை ஏறின.

“ஹம்ம்... பேசாம இந்த கோல்கேட் ஆட் மாதிரி எதுக்கும் போகவா ஆதி? அய்யா ஸ்மைல் ரொம்ப வொர்த் போல?” குறும்பாய்க் கேட்டான். மனைவியின் பேச்சில் மனம் குளிர்ந்து போனது.


“ரொம்பத்தான்...” என்றாள் அவன் இடையில் முழங்கையால் இடித்து சிரிப்புடன்.

“ப்ம்ச்... நான் கூட உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன் ஆதி. இதோ இப்படி உன் பேச்சு, நமக்காக ஸ்பெண்ட் பண்ற டைம்னு எல்லாமே மனசு தேடுச்சு. இந்த தேவாவுக்கும் ஃபீலிங்க்ஸ் இருக்குன்னு உன்னைப் பார்த்துதான் டீ தெரிஞ்சது!” என்றான் அவளை வளைத்துப் பிடித்து.


“ஹம்ம்...” என்றவள் அவன் கழுத்தில் முகத்தை புதைத்து கணவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள். இதுவரை தேவா மட்டுமே அவளை அணைத்திருக்கிறான். ஆனால் மனைவி அவளாக இன்றைக்கு அணைக்கவும் என்னவோ அவன் உடல் தளர்ந்தது.

“ஆதி...” என்றவன் குரல் இளகிக் கிடக்க, அவளை தானும் அணைத்துக் கொண்டான்.


“சாரி...” என்றவளின் கைகள் மெதுவாய் உயர்ந்து அவனது சட்டையைப் பிடித்தன. என்னவோ அவள் செய்கையில் தேவாவிடம் ஆசுவாசமும் நிம்மதியும் படர்ந்தது.



“போதும் ஆதி... இந்த சாரி கேட்குற போட்டியை முடிச்சுக்கலாம். பட் இனிமே நீ எதுவா இருந்தாலும் வாயைத் தொறந்து சொல்லணும். சும்மா முகத்தை திருப்பிட்டு போக கூடாது!” என்றான் அழுத்தமாய்.
எதுவும் பேசாது தலையை மட்டும் அசைத்தாள் ஆதிரை.

“ஹம்ம்... நான் கோபமா இருந்தாலும் நீங்களா வந்து பேசணும். அப்பப்போ சில்லியா பிஹேவ் பண்ணுவேன். நான்தான் வேணும்னு கல்யாணம் பண்ணீங்க இல்ல. அட்ஜஸ்ட் பண்ணித்தான் ஆகணும். எப்பவும் உர்ருன்னு முகத்தை வச்சிருக்க கூடாது. அப்போ அப்போ சிரிக்கணும், என்னைக் கொஞ்சணும், கெஞ்சணும்...” என அவள் இழுக்கவும், தேவாவின் புருவம் உயர்ந்தது.

“கெஞ்ச தானே டீ விட்ற. எங்க கொஞ்ச விட்ற? ஹம்ம்... ஆசையாகிட்டே வந்தாலே முறைச்சுப் பார்க்குறது. இதுல எங்க டீ கொஞ்ச?” தேவா குறையாய்க் கூறவும், வெடுக்கென ஆதிரை அவன் கையைத் தட்டிவிட்டு நிமிர்ந்து முறைத்தாள்.

“என் பெர்த் டே அப்போ என்ன கலர் சேரி கட்டி இருந்தேன் நான்?” அவள் கடுப்புடன் கேட்க, தேவா என்னவெனத் தெரியாது விழித்தவன், “பேசிக்கா எனக்கு மெமரி பவர் கம்மி டீ!” என முணுமுணுத்து பிடரியைக் கோதினான்.

“ம்ப்ச்... அப்படியாங்க? ஆனால் வேலைன்னு வந்துட்டா எப்படி ரோபோட்க்கு டஃப் கொடுக்குறீங்க?” என எள்ளலாய் கேட்டாள்.

“அது வேலை டீ. கரெக்டா இருக்கணும். பட் நீ என் பொண்டாட்டி. சோ, அப்போ அப்போ தப்பு பண்ணிக்கலாம். தப்பில்ல!” அசட்டுச் சிரிப்பை உதிர்த்தான் கணவன்.

“பொண்டாட்டி தானேன்னு இளக்காரம் இல்ல மிஸ்டர் தேவ நந்தன்?” எனக் கடுகடுத்தவள், “அன்னைக்கு நான் மெரூன் கலர் சேரி கட்டி இருந்தேன். சரி புருஷன் பார்க்கட்டும்மேன்னு ஆசை ஆசையா கிளம்புனா வேலையைப் பாருன்னு தொரத்தி விட்டுட்டீங்க? ஹம்ம்... இதுல கொஞ்சல் கேட்குதோ ஐய்யாவுக்கு? அன்னைக்கு மட்டும் ஒரு விஷ் பண்ணி இருந்தீங்கன்னா...” என கடகடவென கூறியவள் பின் நாக்கை கடித்து, “அது... இவ்வளோ சண்டை வந்திருக்காது!” என்றாள் தடுமாறி சமாளித்து. ஆனால் அவள் பேச்சில் தேவாவிற்கு என்னக் கூற வந்தால் எனப் புரிந்து போனது.

“சே... நான்தான் சொதப்பிட்டேனா ஆதி? என் பொண்டாட்டி சர்ப்ரைஸா ஏதோ வச்சிருந்திருக்கா போல!” என அவன் அருகே வர, இவள் முறைத்துக் கொண்டு மறுபுறம் திரும்பி நின்றாள். தேவா அவளைப் பின்னிருந்து வயிற்றில் கைக்கோர்த்து அணைத்துக் கொண்டான்.

“போயா...” இவள் அவன் கையைத் தட்டிவிட முயன்றாலும் தேவா இறுக்கி அணைத்தான். இருவரும் ஏதோ பேசும் முன்னே, “ஒரு ஃபோனை எடுத்துட்டு வர இவ்வளோ நேரமாக்கா உங்களுக்கு?” என லேசாய் சாற்றி இருந்த கதவைத் தள்ளி ஜனனி உள்ளே வரவும், இவர்கள் சட்டென பிரிந்தனர்.

‘ராங்க் டைமிங் போல... ஐயோ!’ எனத் தலையில் தட்டிய ஜனனி விறுவிறுவென வந்தப் பாதையிலே ஓடிவிட்டாள்.

“கதவை சாத்தலையா நீங்க?” ஆதிரை கடிய, “ஏய்... நான் உன்கிட்ட சண்டை போடலாம்னு வந்தேன் டீ. ஆனால் நீதான் ஏதேதோ பேசி என்னை மயக்கிட்ட!” என அவன் முணுமுணுக்க, ஆதிரை முறைக்க முயன்றாலும் சிரிப்பு வந்தது.

“நான் போறேன்...” என்றவள் அலைபேசியை எடுத்துக் கொண்டு ஜனனி அறைக்குச் செல்ல, “சாரிக்கா... சாரி. கரடி மாதிரி வந்துட்டேன் போல!” என அவள் நாக்கை கடிக்க, ஆதிரைக்கும் சங்கடம்தான். அந்தப் பேச்சை அப்படியே விட்டுவிட்டவள் அலைபேசியில் தாங்கள் எடுத்தப் புகைப்படத்தைக் காண்பித்தாள்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்க விளையாண்ட களைப்பில் ராகினி ஜானுவின் மடியிலே படுத்துறங்கிவிட, அபியும் கண்ணைக் கசக்கினான்.

“சரி, நாளைக்குப் பேசுவோம் ஜானு. புள்ளைங்களுக்குத் தூக்கம் வந்துடுச்சு!” என ஆதிரை எழ, அபியும் தாயின் கையைப் பிடித்துக்கொண்டு பின்னூடே வந்தான்.

“அபிம்மா... தூக்கம் வந்தா தூங்கு டா!” என அவனைக் கட்டிலில் படுக்க வைத்தாள். தேவாவை அறையில் காணவில்லை. தமையன் அல்லது தந்தையுடன் பேசிக் கொண்டிருப்பான் என நினைத்தவள் பாயை எடுத்துக் கீழே விரிக்க, கணவன் உள்ளே வந்தான்.

“ப்ம்ச்... இப்போ எதுக்கு நீ பாயை கீழ விரிக்குற ஆதி? மேலயே அட்ஜஸ்ட் பண்ணிப் படுத்துக்கலாம். கீழே படுக்காத!” என்றவனைக் கேலியாய் பார்த்தவள், “இது எனக்கில்லை மிஸ்டர் தேவநந்தன். உங்களுக்குத்தான், போய் இன்னைக்கு பில்லோவைக் கட்டிப் பிடிச்சு தூங்குங்க!” என்றாள் உதட்டை வளைத்து.

“நான் ஏன் டீ கீழப் படுக்கணும்?” அவன் முறைக்க,

“பனிஷ்மெண்ட்ங்க... பனிஷ்மெண்ட். நீங்கதானே சொன்னீங்க, எதுனாலும் கேளு, சண்டை போடுன்னு. இனிமே யார் தப்பு பண்ணாலும் தண்டனை உண்டு. சோ ஒரு ரெண்டு நாள் தரையில படுங்க, தப்பில்லை!” என்றுவிட்டு தலையணையையும் போர்வையையும் கீழே எறிந்தாள்.

“இதெல்லாம் அநியாயம் டீ!” அவன் கடுப்பாக கூறினான்.

“போயா...‌போய் படு!” உதட்டை வளைத்துவிட்டு ஆதிரை கதவை பூட்டினாள். விளக்கணைக்கச் சென்றவள் திரும்பி பார்க்க, கணவன் பாயில் படுத்திருந்தான்.

‘சும்மா சொன்னா... உடனே படுத்துட்டாரே... சே பாவம்!’ மனதிற்குள் உச்சுக் கொட்டியவள் அவனைப் பார்த்தவாறே கட்டிலின் விளிம்பை ஒட்டிப் படுத்தாள்.

“தேவா...” மெல்லிய குரலில் மகன் எழுந்து விடாதவாறு கிசுகிசுத்தாள். அவன் அசையாது படுத்திருந்தான். மீண்டும் அழைக்க, வேண்டுமென்றே கணவன் பதிலளிக்கவில்லை.

“யோவ் தேவா!” என அவன் மீது தலையணையை எறிந்தாள்.

நிமிர்ந்து அவளை முறைத்தவன், “என்ன டீ?” எனக் கடுப்புடன் கேட்டான். சமாதானமாகி விட்டோமே என அவன் ஏதேதோ கற்பனையில் அறைக்குள் நுழைய, தலையணையைக் கட்டிக் கொண்டு தரையில் படுக்க வைத்துவிட்டாளே என்ற கடுப்பு அவனுக்கு.

“சும்மாதான் சொன்னேன். மேல வந்து படுங்க!” என அவனை அழைத்தாள்.

“ஒன்னும் வேணாம் போடீ. பனிஷ்மெண்ட்னு கீழே படுக்க சொல்லுவாளாம். அப்புறம் அவளே மறுபடியும் கூப்பிடுவாளாம். நான் என்ன பொம்மையா” அவன் முகத்தை திருப்பி முனங்கினான்.

“ரொம்ப பண்ணாதீங்க. அப்படியே பொண்டாட்டி பேச்சை தட்டாத மாதிரியே சீன் போட்றது. மேல வந்து படுங்க!” என அவள் அதட்ட, “முடியாது டீ!” என அவன் உறுதியாக மறுத்துவிட்டான்.

“போயா...” என இவளும் கண்ணை மூடி உறங்கிப் போனாள்.

காலையில் கண் விழிக்கும் போது தலை முதல் கால் வரை போர்வையைப் போர்த்தி படுத்திருக்கும் கணவன்தான் கண்ணை நிறைத்தான். நேரம் ஆறாகியிருந்தது. இன்னும் சற்று நேரம் உறங்கு என உடல் கூற, கொட்டாவி வந்தது அவளுக்கு. ஆனால் தூங்கும் எண்ணமில்லை. எழுந்து சென்று கீழே படுத்தவள், போர்வையோடு தேவாவை அணைத்துக் கொண்டாள். அவனுக்கு மெதுவாய் விழிப்பு வந்தது.

“ஹம்ம்...” என்றவாறே இவள் புறம் திரும்பி படுத்து அணைத்துக் கொண்டான்.
அவன் முகத்தையே பார்த்திருந்தவள் அவன் கண்ணை விரல் கொண்டு குத்தினாள். தேவா கையைத் தட்டிவிட்டான்.

அவன் மூக்கைப் பிடித்து ஆட்டியவள் உதட்டை கைகளால் அளந்தாள். கணவன் உச்சு கொட்டினாலும் உறக்கத்தை தொடர்ந்தான். அவன் தாடியடர்ந்த கன்னத்திலிருந்த முடியை வெடுக்கென இவள் பிடித்திழுத்துவிட, தேவா கோபத்தோடு எழுந்துவிட்டான்.

“என்ன டீ... ஏன் காலையிலயே உயிரை வாங்குற?” என எரிச்சலானவன் நேரத்தைப் பார்த்தான். அவன் முகத்தை சுளித்ததும் ஆதிரையின் முகம் வாடிப் போனது.

“சும்மா விளையாட்டுக்கு செஞ்சேன்!” என்றவள் ரோஷத்துடன் எழுந்து நின்றாள்.

“காலங்காத்தால தூங்குறவன்கிட்டே இப்படித்தான் விளையாடுவாங்களா?” என அவன் கடுகடுத்துவிட்டு செல்ல, ‘சிடுமூஞ்சி!’ என முணுமுணுத்தாள்.

அபி எழவும் அவனைக் குளிக்க வைத்து பள்ளிக்கு கிளப்பியவள் ஜானுவிடம்‌ அனுப்பிவிட்டாள். ஜானு ராகினியையும் அபியையும் உண்ண வைத்து பள்ளி வாகனத்தில் ஏற்றிவிட்டாள்.

ஆதிரை குளித்து முடித்து அரக்கு வண்ண சேலையை எடுக்க சென்று பின்னர் மூக்கை சுருக்கி பச்சை நிறத்தை எடுத்து உடுத்தினாள். தேவா அனைத்தையும் கவனித்தான். இவள் முன்பே அவன் உடைமாற்ற, முகத்தை திருப்பினாள்.

வேண்டுமென்றே கையிலிருந்த சீப்பை நங்கென வைத்தாள். அவன் கண்டு கொண்டானில்லை. கண்ணாடி வழியே அவனை முறைத்துக் கொண்டே பொட்டை வைத்தாள். தேவாவிற்கு அவளது செய்கையில் சிரிப்பு வந்தது.

“ஏன் டீ?” எனக் கேட்டவாறே அவளுக்கு அருகே சென்றான்.

“என் பொட்டு... நான் எப்படியும் வைப்பேன். காலைலயே சிடுசிடுத்துட்டுப் போனவரோட எனக்கென்ன பேச்சு!” முகத்தை ஒடித்து திருப்பினாள்.

“இயர்லி மார்னிங், அது ஒரு பனிப்பிரதேசம். எக்ஸாக்டா எங்கேன்னு தெரியலை ஆதி. நீயும் நானும் மட்டும் ரூம்ல... ரொமான்ஸ் பண்ணிட்டு இருந்தோம். சரியா கரடி மாதிரி வந்து எழுப்பிவிட்டுட்ட. நிஜத்துலதான் ஒன்னும் இல்ல. சரி கனவுலயாவது கலர் கலரா ரொமான்ஸ் பண்ணலாம்னா அதையும் கெடுத்து விட்டுட்டீயேன்னு கத்திட்டேன்!” என்றான் அவளின் முந்தானையைப் பிடித்து சமாதானக் குரலில். அவன் சொன்ன தோரணையில் பாவனையில் ஆதிரைக்கு சிரிப்பு வந்தது.

“சிரிச்சா தப்பில்ல டீ. அழகா இருக்க முகத்துக்கு எதுக்கு இத்தனை க்ரீம் லோஷன் எல்லாம்?” எனக் கண்டித்தான்.

“சன் ஸ்க்ரீன், மாய்ச்சரைசர் மட்டும்தான் போட்றேன். எத்தனையைப் போட்டதை பார்த்தீங்க?” கீழ்கண்ணால் அவனை முறைத்தாள்.

“அதெல்லாம் இல்லாமலே நீ அழகு டீ!” என்றவன் அவள் முகத்தைக் கண்ணாடியை நோக்கித் திருப்பி பின்னே வந்து நின்றான். ஆதிரை அவனை முறைக்க முயன்றாலும் சின்னதாய் சிரிப்பு உதட்டோடு ஒட்டிக் கொண்டது. கணவனும் பின்னிருந்து ஒட்டிக் கொண்டான்.

“இனிமே நமக்குள்ள சண்டையே வராது தேவா. பிழைச்சுப்பீங்க!” என்றாள் உதட்டை வளைத்து. கணவன் முறைத்தான். பின்னர் கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தான்.

“ஹம்ம்... சொல்லுங்க... சொல்லுங்க. வேலைக்கு டைமாச்சு. என்ன அலப்பிட்டு இருக்க. சீக்கிரம் கிளம்பு...‌ இதானே?” எனக் கேட்டவள் அருகேயிருந்த சின்ன கத்தியைக் கையில் எடுத்தாள்.

‘நீ சொல்லித்தான் பாரேன்!’ என்று பார்த்தாள்.

“ஹக்கும்...” தொண்டையைச் செருமியவன், “எனக்கு நேரமாகிடுச்சு டீ. பாஸ் நான் கரெக்ட் டைம்க்கு வேலைக்குப் போகணும் இல்ல?” எனக் கேட்டுத் தலையைக் கோதியபடியே அகன்றான்.

‘வீட்ல இருக்க அத்தனைப் பேரையும் விடாம மிரட்டுன இல்ல. அதுக்குத்தான் என்னை கத்தியை வச்சு மிரட்டுறா... ரொம்ப மிரட்டுறாப்பா இப்பல்லாம்!’ என முனங்கிக் கொண்டே அவன் சாப்பிட, ஆதிரை தோளை குலுக்கி கொண்டாள்.

“ஆதி, இனிமே நீயும் என் கூட கார்லயே வா. பெட்ரோல் செலவு மிச்சம்!” என்றவனை யோசனையாக பார்த்தவள், “ஈவ்னிங் வரும்போது பறந்தா வர முடியும் மிஸ்டர் தேவா?” எனக் கேட்டாள்.

“அது... ஹம்ம்... உனக்காக காலைல இப்போலாம் ஒன் ஹவர் நான் சீக்கிரம் வரேன் இல்ல நான். சோ...” என அவன் இழுக்க, “சோ...” என இவள் முறைத்தாள்.

“சோ... ஈவ்னிங் நீ என்னோட ஒன் ஹவர் எக்ஸ்ட்ரா வொர்க் பண்ணிட்டு லேட்டா வரலாமே?” எனக் கேட்டவனை வெட்டவா? குத்தவா எனப் பார்த்தவள்,

“யப்பா சாமி... டெய்லி ஒன் ஹவர் அதிகமா வேலை பார்க்குறேன்னு இவரு எனக்கு அப்படியே அவார்ட் கொடுத்து தள்ளிடுவாரு. சிடுமூஞ்சி சிதம்பரம். ஆஃபிஸ் போனதும் ஆவி எதுவும் பிடிச்சுடுமோ என்னவோ? போயா...” என முணுமுணுத்து அவள் வாகனத்தைக் கிளப்பிக் கொண்டு போக, தேவா முகத்தில் சிடுசிடுப்புக்கு பதில் சிரிப்பு வந்தது. உண்மையில் அவளை வம்பிழுப்பதற்காகத்தான் அழைத்தான்.

ஆதிரை உள்ளே நுழைந்ததும் அடுத்த பத்து நிமிடத்தில் தர்ஷினியும் வந்துவிட்டாள். சில பல நாட்களாக ஆதிரையின் முகத்தில் கண்ணுக்குத் தெரியாத சோகம் ஒன்று அப்பிக் கிடந்ததை சின்னவள் கண்டும் அதைப் பற்றி கேட்கவில்லை. ஆனால் இப்போது அவள் முகத்தில் தெளிவு இருந்ததைப் பார்த்ததுமே அறிந்து கொள்ள முடிந்தது.

“அக்கா... அக்கா எனக்கொரு டவுட். கேட்டா திட்ட மாட்டீங்களே!” என்று பீடிகையோடு ஆரம்பித்தாள் சின்னவள்.

“என்ன டவுட் தர்ஷூ? நான் ஏன் திட்டப் போறேன்?” எனக் கேட்டவாறே ஆதிரை தண்ணீர் பொத்தலை எடுத்து நீரை வாயில் சரித்தாள். ஆனால் நொடியில் தர்ஷினியின் சந்தேகத்தில் அவள் வாயிலிருந்த நீர் புரையேறி வெளியே வந்திருக்க, அவளை முறைத்துப் பார்த்தாள்.

தொடரும்...

என்ன டவுட்னு கரெக்டா சொல்றவங்களுக்கு குச்சி மிட்டாய் மக்களே. ஒன் வீக்கா எனக்கு மைண்ட் அப்செட், தலைக்கு மேல வேலை ஒன்னு இருந்துச்சு. இன்னும் முடியாம என்னைப் பாடா படுத்துது. சரி அப்டேட் டைப் பண்ணா மனசை ரிலாக்ஸ் பண்ணலாம்னு வந்தேன் 🙊 கவுண்ட் பண்ணுங்க, இன்னும் ஏழு அப்டேட்தான். ஆதி தேவாவுக்கு டாடா சொல்லிடலாம். ரொமான்ஸ் எங்கன்னு கேக்குறவங்களுக்கு கடல்லே இல்லையாம் மக்களே! ஒரு சில மூஞ்
சிக்கெல்லாம் கடவுள் ரொமான்ஸ் பக்கத்தை டெலிட் பண்ணிட்டாராம். வேற யாரும் இல்ல, நம்ப தேவாவுக்குத்தான். துயரத்தை 😂


















 
Well-known member
Messages
461
Reaction score
333
Points
63
Enna pregnant ah irukaga la nu ethuvum kettu irupu illa na athi indha alavu ku shock aagi iruku ah mata iva reaction ah partha apadi than thonuthu.

Kadavul sathi panraro illayo aana deva ku ne nalla panra janu ma .aana ipadi oru master piece ah engayum partha thu illa nerula iruku ah pondati kita ozhunga love panna vazhi illa ithula kanavula duet paduran ah 🤦🏻‍♀️kastam da ivan kooda
 
Active member
Messages
209
Reaction score
163
Points
43
Jaanu sis velaidhan idhu devaku yenn romance illa pavam
Avaneh 33years la kalyanam pannitu adhuvum poradi kalyanam pannaan pavam pa

Honeymoon pathi ketturupalo oh dharshini
 
Top