- Messages
- 1,205
- Reaction score
- 3,520
- Points
- 113
நெஞ்சம் – 50 
“ஏன்டா, நேத்துலருந்து நானும் பார்க்குறேன். மசக்கை காரியாட்டும் உன் பொண்டாட்டி அந்த ரூம்க்குள்ளயே அடைஞ்சு கிடக்குறா. நைட்டும் சமைக்கலை. இன்னைக்கு காலைலயும் சாவகாசமா தூங்கி எழுந்து வர்றா. வேலையெல்லாம் ஒத்த ஆளா என்னால செய்ய முடியாது டா. ஒழுங்கா அவளை சமைக்க சொல்லு!” வாணி பொரிந்தபடியே மகனிடம் தேநீரைக் கொடுத்தார்.
ஆதிரை நன்றாக உறங்கித் தாமதமாகத்தான் எழுந்தாள். பொன்வாணியின் பேச்சு காதில் விழுந்தாலும் அதையெல்லாம் அவள் பொருட்படுத்தாமல் மிக மிக மெதுவாய் தன் காலைக் கடன்களை முடித்துவிட்டு தேநீர் தயாரிக்க வந்தாள். அபியும் தாயோடுதான் எழுந்தான்.
“ம்ப்ச்... ம்மா, அவ என்ன இந்த வீட்டு வேலைக்காரியா? சமையலுக்கு ஆள் வேணா போட்டுக்கலாம். இனிமே அவ சமைக்க மாட்டா!” ஏற்கனவே மனைவி ஒருபுறம்படுத்த இவர் வேறா என அவனுக்கு எரிச்சலானது.
“ஓ... ரெண்டு வாரம் வேலை பார்த்ததும் அவளுக்கு ஏறிகிச்சோ? வேலைக்காரியான்னு கேட்குறாளா? அப்போ இத்தனை வருஷமா ஆக்கிப் போட்ட என்னை வேலைக்காரியாத்தான் நீ பார்த்துருக்கீயா? உன் பொண்டாட்டின்னா தங்கம், நாங்க எல்லாம் தகரமா டா?” அவர் வெகுண்டார். இதெல்லாம் ஆதிரைதான் இவனுக்குப் பேச சொல்லிக் கொடுத்திருப்பாள் என நொடியில் அவர் உள்ளம் கணக்கிட்டது.
“ம்மா... நீங்களா எதாவது பேசாதீங்க. அவ வேலைக்குப் போறதால வீட்ல குக் பண்ண முடியலை. உங்களுக்கும் உடம்பு சரியில்லை. அதான் நான் ஆள் அரேஞ்ச் பண்றேன்!” என்றான் பொறுமையை இழுத்துப் பிடித்து.
“ஆமா டா... இங்க என்ன முப்பது நாப்பது பேர் இருக்கோமா வேலைக்காரங்க வைக்க. எம் புருஷன் உன்னை மாதிரி என்னைப் பார்த்துக்கலை டா. வீட்ல எல்லா வேலையும் பொண்டாட்டிதான் செய்யணும்னு விட்டுட்டாரு. நீயும் நான் கஷ்டப்பட்டு சமைச்சப்பலாம் சும்மா இருந்துட்டு, உன் பொண்டாட்டின்னு வந்ததும் வேலைக்காரி வைக்கிறீயோ? அப்போ நான் எல்லாருக்கும் கிள்ளுக் கீரையா போய்ட்டேன் இல்ல!” எனப் பொறுமியவர், உன்னை சொல்லக் கூடாது டா, தோ உள்ள இருந்து உன்னைப் பேச வைக்கிறா இல்ல, அவளை சொல்லணும் டா!” என்றார் ஆத்திரத்துடன்.
“வாணி, காலைலயே என்ன பஞ்சாயத்தைக் கூட்டுற நீ?” கோபால் மனைவியை அதட்டிக் கொண்டே உள்ளே வந்தார்.
“வாங்க... வாங்க என்னைக் கட்டுன மகாராஜா. நான் பேசுனா மட்டும்தான் உங்களுக்கு சண்டை போட்ற மாதிரி இருக்கும். இத்தனை வருஷம் உங்க எல்லாருக்கும் பார்த்து பார்த்து வடிச்சுப் போட்டேன் இல்ல, அதுக்குத் தக்க சன்மானம் கிடைச்சுடுச்சு. பொண்டாட்டின்னு வந்துட்டா புள்ளை கைமீறிப் போய்டுவான்னு எல்லாரும் சொன்னப்ப, எம்மவன் அப்படி இல்லைன்னு நான் பெருமை பேசுனேன் இல்ல. அதுக்குத்தான் என் மகன் என் முகத்துலயே அடிக்கிற மாதிரி பேசுறான்!” வாணி ஆதங்கத்தில் பேசினார்.
“இப்போ என்னாகிப் போச்சுன்னு இப்படி பேசுறீங்கம்மா நீங்க?” காலையிலே தூக்கம் கெட்டுப் போனதில் கடுப்பாகி ஹரி வெளியே வந்தான்.
“எல்லாரும் என்னையே கேள்வி கேளுங்க டா. நான்தானே இளிச்சவாய் இந்த வீட்ல?” மகனிடம் காய்ந்தார் பெண்மணி.
“நீங்கதானேம்மா நடு வீட்ல உக்கார்ந்து கத்தீட்டு இருக்கீங்க. அப்போ உங்ககிட்டே தானே கேட்க முடியும். சொல்லுங்க, எதுக்கு இப்போ சண்டைக்கு ரெடியா இருக்கீங்க?” என அவன் எரிச்சலாய்க் கேட்டான்.
“ஏங்க, நீங்களே இந்த நியாயத்தைக் கேளுங்க. ரெண்டு வாரம் சமைச்சதும் இவன் பொண்டாட்டியால சமைக்க முடியாதாம், வேலைக்கு ஆள் வைக்கணும்னு சொல்லி என்கிட்ட சண்டை போட்றான். நான் என்னமோ அவளைக் கொடுமைபடுத்துற மாதிரி. வீடுன்னா நாலு வேலை இருக்கத்தானே செய்யும். அதை செய்றதுக்கு எதுக்கு ஆள்னு கேட்டேன். என்னமோ இவன் ஊர்ல இல்லாத அழகியைக் கட்டிட்டு வந்துட்டேன். அவ கால் தரையில படக்கூடாதுன்ற மாதிரி பேசுறான்!” என்றார் மகனை முறைத்து. கோபால் அவனைப் பார்த்தார். தேவா பதிலுரைக்கும் முன்னே அறைக்குள்ளிருந்து விறுவிறுவென வெளியே வந்தாள் ஆதிரை.
“மாமா... என் மேலதான் உங்க பொண்டாட்டி கம்ப்ளைண்ட் பண்றாங்க. நானே பதில் சொல்றேன். அங்க பண்ணைலயே தலைக்கு மேல வேலை இருக்கு. இங்கேயும் குக் பண்ணி, ஹவுஸ் ஹோல்ட் வொர்க் எல்லாம் பார்த்துட்டு ரெண்டையும் என்னால மேனேஜ் பண்ண முடியலை.
அதனாலதான் நான் நேத்தும் இன்னைக்கு குக் பண்ணலை. என்னால ரெண்டு இடத்துலயும் வேலை பார்க்க முடியலை. ஜனனியை ஹெல்ப்க்கு கூப்பிட முடியாது. அவங்களுக்கு டேட் ரொம்ப பக்கமா இருக்கு. பிரது காலேஜ் படிக்கிறா. அவளையும் வேலை வாங்க முடியாது. கிட்டத்தட்ட பத்து பேருக்கு மார்னிங் குக் பண்ணிட்டு, வேலைக்குப் போய்ட்டு வந்து ஈவ்னிங் குக் பண்றது ரொம்ப கஷ்டமா இருக்கு. அதான் வேலைக்கு ஆள் வைக்கலாம்னு நான்தான் அவர்கிட்ட சொன்னேன். இதுல எதுவும் தப்பு இருக்கதா எனக்குத் தெரியலை. நீங்களே சொல்லுங்க மாமா!” கோபால் முகத்தைப் பார்த்து பொறுமையாய் கூறினாள். அவள் பேச்சில் தவறு இருப்பதாய் பெரியவருக்குத் தெரியவில்லை போல.
“ஏன் வாணி, ஆதிரை சொல்றதும் சரிதானே. உனக்கும் முடியலை. போக போக வீட்ல ஆளுங்க எண்ணிக்கை கூட்டீட்டேதான் போகும். ஒத்த ஆளா எப்படி அவ சமாளிப்பா. வேலைக்கு ஆள் வைக்கிறதுதான் சரி. நீ இந்த விஷயத்துக்கு எதுக்கு சண்டை போட்ற மாதிரி காலைலயே வீட்ல அத்தனை பேரையும் கூப்பிட்டு வச்சு பேசுற?” என மனைவியைக் கடிந்தவர், “தேவா, நீ மருமக சொல்ற மாதிரி வீட்டு வேலைக்கு, சமைக்கன்னு ஒரு நல்ல ஆளா பாருடா!” என்றார் மகனிடமும்.
“சரிப்பா... நான் ஏற்கனவே சொல்லி வச்சிருக்கேன். ஆள் கிடைச்சதும் வர சொல்றேன்!” தேவா தலையை அசைத்தான்.
“அதுவரைக்கும் யார் சமைப்பா? என்னால முடியாதுங்க!” வாணி முகத்தை வெட்டினார்.
“நான் சமைக்கிறேன் வாணி. உனக்குப் புருஷனா போய்ட்டேன் இல்ல. நானே செய்றேன்!” கோபால் பொறுமை இழந்து கூற, “ப்பா... என்ன பேச்சு இது?” என அவரை தேவா அதட்டினான்.
“மாமா, ஆள் கிடைக்கிற வரை நானே சமைக்கிறேன்!” ஆதிரை கூற, “ப்பா... நான் அண்ணிக்கு ஹெல்ப் பண்றேன்!” என பிரதன்யா முன்வந்தாள்.
“மாமா... வீட்ல எல்லா வேலையும் செஞ்சாதான் புள்ளை சுகப்பிரசவத்துல பிறக்கும்னு டாக்டர் சொல்லி அனுப்புனாங்க. அதனாலே நானும் அக்காவோட சேர்ந்து குக் பண்றேன். மூனு பேரும் சேர்ந்து வேலை செஞ்சா ஈஸியா முடிஞ்சிடும்!” ஜனனி கூறவும், கோபால் மனைவியைப் பார்த்தார்.
“வயசுல சின்னப் புள்ளைங்க கூட பக்குவமா நடந்துக்குறாங்க வாணி. ஆனால் நீதான் வயசாக வயசாக புத்தி மழுங்கிப் போய் திரியுற. நீ பேசுறது நடந்துக்கிறது எதுவும் சரியில்லை. இது யாரு குடும்பமோ இல்ல. நம்ப புள்ளைங்க நல்லா வாழணும்னா நீயும் விட்டுக் கொடுத்துப் போகணும்!” அவர் மனைவியை சாட, அதற்கும் ஆதிரையை முறைத்துவிட்டுப் போனார் வாணி.
“பிடிக்காத மருமக கைப்பட்டாலும் குத்தம், கால் பட்டாலும் குத்தம் மாதிரிதான் அத்தை நடந்துக்குறாங்க!” ஜனனி முணுமுணுத்தாள்.
ஆதிரை சமைக்கலாம் என செல்ல, ஜனனி அவளுக்கு உதவினாள். பிரதன்யா துணிகளை இயந்திரத்தில் துவைக்கப் போட்டுவிட்டு வேறு என்ன செய்ய என இரண்டு அண்ணிகளிடமும் வந்து நின்றாள்.
“நாளைக்கு எக்ஸாம் வச்சுக்கிட்டு இன்னைக்கு நீ வேலை செய்ய வேணாம் பிரது. போய் படி!” ஆதிரை அவளை வேலை செய்ய விடவில்லை.
“ம்ப்ச்... சாரி அண்ணி, எனக்கா தோணி இருக்கணும். நீங்க கஷ்டப்பட்டு இத்தனை பேருக்கு சமைக்குறீங்க. ஆனால் யாருமே உங்களுக்கு ஹெல்ப் பண்ணலை இன்க்ளூடிங் மீ டூ. அம்மா குக் பண்ணா எதாவது வேலை கூப்பிட்டு சொல்லுவாங்க. ஆனால் நீங்க யாரையும் எந்த வேலையும் வாங்கலை!” என்றாள் மெல்லிய குரலில். ஆதிரை புன்னகைத்தாள்.
“என்னால செய்ய முடிஞ்சது அதனால நான் செஞ்சேன் பிரது. பட் இப்போ மேனேஜ் பண்ண முடியலை. அதான் மா மெய்ட் வைக்கலாம்னு சொன்னேன்!” என்றாள்.
“ஆமாக்கா... நானும் முன்னாடி அத்தைகிட்டே சொல்லிருக்கேன். பட் அவங்க வீட்டு வேலையெல்லாம் என்னம்மா பெரிய வேலைன்னு அதைக் கன்சிடர் பண்ணவே இல்ல!” என்றாள் ஜானு. சிறிது நேரம் நின்றதிலே அவளுக்கு மேல் மூச்சு கீழ் வாங்கியது.
“ஜானு... நீங்க போய் ரெஸ்ட் எடுங்க. அவ்வளோதான், குக்கிங் முடியப் போகுது!” என இருவரையும் அனுப்பிவிட்டு ஆதிரை சமையலை முடித்துவிட்டுத் தானும் தயாராகச் சென்றாள்.
அபி சமத்துப் பையனாக குளித்து உடைமாற்ற, மகனின் கன்னத்தில் முத்தமிட்டவள் உடை எடுத்துக்கொண்டு குளிக்கச் சென்றாள். தேவா அவர்கள் இருவரைத்தான் பார்த்திருந்தான். ஆதிரை எத்தனை எளிதாக தன்னை அவர்களிடமிருந்து அந்நியப்படுத்திவிடுகிறாள் என அவனுக்கு ஆதங்கம் கோபம் என எல்லாம் உச்சிக்கு ஏறியது.
அவள் அவனை சட்டை செய்யவில்லை. குளித்துவிட்டு தலையை மட்டும் நீட்டி அவன் இருக்கிறானா எனப் பார்த்தாள். தேவா அறைக்குள்ளேதான் இருந்தான். தலையை உள்ளிழுத்தவள், புடவையை ஈரத்தோடு அணிந்துகொண்டு வெளியே வந்தாள்.
“ஏன், சேரியை வெளிய வந்து கட்ட மாட்டீயா ஆதி? ஈரத்தோட உள்ளயே கட்டணுமா?” தேவா காட்டத்தோடு கேட்க, அவன் யாரிடமோ பேசுவது போல ஆதிரை பதிலளிக்கவில்லை.
ஜனனி வந்து அபியை அழைத்துச் செல்ல, இவன் அறையைப் பூட்டிவிட்டு அவள் முன்னே வந்து நின்றான்.
“உன் மனசுல என்ன தான் டீ நினைச்சிட்டு இருக்க? ஒன்னுமில்லாத விஷயத்துக்கு கோபப்பட்ட. பெர்த் டே விஷ் பண்ணாததை எல்லாம் பெரிய இஷ்ஷூவாக்குன? என் மேலே தப்பே இல்லைன்னாலும் இறங்கி வந்து நானே சாரி கேட்டுட்டேனே. அப்புறம் என்ன வேணும் உனக்கு?
இப்போ கூட நீ கஷ்டப்பட்டு சமைக்க வேணாம்னுதான் நான் அம்மாகிட்டே பேசுனேன். நான் உனக்காக உனக்காகன்னு பார்க்குறேன் ஆதி. ஆனால் நீ என் முகத்தைப் பார்த்துக் கூடப் பேச மாட்ற. இட்ஸ் ஹேர்டிங் ஆதி. ஆரம்பத்துல இருந்து நான்தான் நீ வேணும்னு சொன்னேன். அதுக்காக நானே எல்லாத்துலயும் இறங்கிப் போகணும், விட்டுக் கொடுத்துப் போகணுமா? கடுப்பாகுது டீ எனக்கு. இப்படி நீயொரு பக்கம், நான் ஒரு பக்கம் இருக்குறதுக்கு எதுக்கு இந்த மேரேஜ்?” ஆதங்கத்துடன் கேட்டவனை பொறுமையாய்ப் பார்த்தாள் ஆதிரை. அந்தப் பார்வையில் நிதானமும் ஒரு வகை அமைதியும் இருந்தது. தேவாவிற்கு அதைப் பார்க்க இன்னுமின்னும் சினம் பொங்கிற்று.
“வாயைத் தொறந்து பேசு டீ. எவ்வளோ தூரம் போகலாம்னு இருக்க நீ? என்ன நினைச்சிட்டு இருக்க?” என குரலை உயர்த்தினான். தேவா என்றாலே ஒரு நிதானம், எதிரிலிருப்பவரை பார்வையாலே எட்ட நிறுத்திவிடும் குணமுடையவன் என்பதே அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் ஆதிரையிடம் மட்டும் நிதானம் தப்பியது, பொறுமை பறந்தது.

Last edited: