• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,194
Reaction score
3,478
Points
113
நெஞ்சம் – 46 💖

“என்ன பண்றீங்கப்பா?” வினவிக் கொண்டே கோபாலின் அறைக்குள்ளே நுழைந்தான் தேவா.

“வா தேவா, இப்போதான் உன் சித்தப்பாவைப் பார்த்துட்டு வந்தேன். அவனுக்கு ரெண்டு நாளா காய்ச்சலாம். சரி, ஒரெட்டுப் போய் எப்படி இருக்கான்னு கேட்டுட்டு வந்தேன்!” என்றவர் அணிந்திருந்த வெள்ளை சட்டையை கழட்டி ஆணியில் மாட்டினார்.

“ஹம்ம்... சித்தப்பா எப்படி இருக்காருப்பா?” என விசாரித்தான் இவன்.

“நல்லா இருக்கான் தேவா. அந்தப் பக்கம் போனா நீயும் தலையைக் காட்டீட்டு வா. உடம்பு சரியில்லைனா மட்டும்தான் பார்க்க வருவீங்களான்னு கோவிச்சுக்கிறான்!” இவர் கூற, அந்நேரம் பொன்வாணி அறைக்குள் நுழைந்தார்.

அவர் கையிலிருந்த தட்டில் இரண்டு குவளைகளில் தேநீர் இருந்தது. மகன் வந்ததை அறிந்தவர் கணவனுக்கும் அவனுக்கும் சேர்த்தே தேநீர் தயாரித்தார்.

“டீ குடி தேவா!” என அவர் கொடுக்க, இவன் அமைதியாய் தேநீரை எடுத்துக் கொண்டான். கோபால் உழவர் துணையைப் பற்றி விசாரிக்க, இவன் பதிலளித்தான். பொன்வாணி அவ்விடத்தைவிட்டு அகல முயல, “ம்மா... உக்காருங்க. உங்ககிட்டேயும் அப்பாகிட்டேயும் கொஞ்சம் பேசணும்...” என அவர் கையைப் பிடித்து அருகே அமர்த்தினான்.

“என்னய்யா... என்ன பேசணும் ராசா?” நீண்ட நாட்கள் கழித்து தேவா அவனாகவே தாயின் கையைப் பிடித்திழுத்து அமர வைக்கவும், இவருக்கு வார்த்தைகள் இயல்பாய் வாஞ்சையுடன் வந்தன.

“நம்ப பிரது இருக்கா இல்ல? அவளுக்கொரு வரன் வந்திருக்கும்மா. ரொம்ப நல்ல பையன்மா. நீங்க என்ன நினைக்குறீங்க?” எனக் கேட்டவனை கோபால் யோசனையுடன் பார்க்க, தாயறியாமல் அவருக்கு கண்ணைக் காண்பித்தான். ஏதோ பேச வாயெடுத்தவர், அவனின் செய்கையில் அமைதியாய் நடப்பதை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினார்.

“டேய்... அவளுக்கு கல்யாணத்துக்கு இப்போ என்ன அவசரம்? இன்னும் அவ படிச்சே முடிக்கலைடா!” பொன்வாணி தடுத்தார்.

“ப்ம்ச்... ம்மா, இருபது வயசாச்சுல்ல. அதெல்லாம் கல்யாண வயசுதான். கல்யாணம் பண்ணிட்டுப் படிக்கட்டும்!” எனத் தாயைப் பேசவிடாது செய்தவன், “பையன் நல்லவன். ஆனால், அவங்கம்மாதான் சரியில்ல போல. எதுக்கெடுத்தாலும் மூத்த மருமகளை உப்பு சப்பில்லாத காரணத்துக்கு எல்லாம் திட்டுறாங்களாம். முத்தவன் லவ் மேரேஜாம். பொண்ணைப் பிடிக்கலை போல!” எனத் தாயின் முகம் பார்த்தான்.

“ஏன் தேவா, என்ன நல்ல பையனா இருந்தாலும் மாமியார் சரியில்லைன்னா எப்படிடா ஒரே குடும்பத்துல வாழ்றது. எம் புள்ளை எவ எவகிட்டயோ திட்டு வாங்கத்தான் நான் பெத்து வளத்திருக்கேனா? என் மகளை யாராவது ஒரு வார்த்தை சொன்னா, சந்தி சிரிக்கிற மாதிரி பேசிடுவேன் டா. இந்த மாதிரி நச்சு பிடிச்ச பொம்பளை இருக்க வீடு நமக்கு எதுக்கு? வேணாம் டா!” விருப்பமின்மையைத் தெரிவித்தார் வாணி.

“ம்மா... மாமியார் எப்படி இருந்தா என்னம்மா? அந்தப் பையன் நல்லவன்மா. ஏன் பிரது அட்ஜஸ்ட் பண்ணிப் போக மாட்டாளா என்ன?” எனக் கேலியாய் கேட்டான்.

“டேய்... என்ன பேசுற நீ? எம் மக எதுக்கு அட்ஜஸ்ட் பண்ணி போகணும். காரணமே இல்லாம நொய் நொய்ன்னுட்டு இருக்க பொம்பளைகிட்டே என் பொண்ணு கஷ்டப்பட அவளுக்கு என்ன தலையெழுத்தா? பெத்தவங்க நாங்க அதை சும்மா பார்த்திட்டு இருப்போமா என்ன?” அவர் ஆத்திரத்துடன் கேட்டார்.

“ஹம்ம்... அப்போ அந்தப் பையனுக்கு நம்ப பிரதுவைக் கல்யாணம் பண்ணி வச்சு தனிக்குடித்தனம் அனுப்பிடலாமா மா? அந்தப் பையன் கை நிறைய சம்பாரிக்கிறான். சொந்தமா பிஸ்னஸ் எல்லாம் பண்றான்!” இவன் கூற, அவர் யோசனைக்கு சென்றார்.

“என்னம்மா... எதையும் சொல்ல மாட்றீங்க? இப்படியொரு மாமியார் கூட இருக்கதுக்குத் தனிக்குடித்தனம் பெட்டர் தானேம்மா?” என தேவா அழுத்திக் கேட்க, அவரும் வேகமாய் தலையை அசைத்தார்.

“ஹம்ம்... அப்போ நானும் என் பொண்டாட்டி புள்ளையோட தனிக்குடித்தனம் போறது தப்பில்லை தானேம்மா?” எனக் கேட்டவனை வாணி அதிர்ந்து போய் பார்த்தார். அவருக்கு மகனின் பேச்சு புரிபடவில்லை.

“புரியலையாம்மா... நல்லா யோசிங்க, புரியும். அப்படி இல்லைன்னா அப்பாவைக் கேளுங்க!” என்றவன் கோபத்தோடு எழுந்து செல்ல, “ஏங்க, என்னங்க சொல்லிட்டுப் போறான் உங்க மகன்?” என கணவனிடம் கேட்டார் வாணி.

“ஆ... அவன் இல்லாதப்ப அவன் பொண்டாட்டியை நீ எதாவது சொன்னா, தனிக்குடித்தனம் போக தயங்க மாட்டானாம். சோ, உன் திருவாயை அடகிக்கோக்குன்னு சொல்லாம சொல்லீட்டுப் போறான்!” கோபால் எள்ளலாக கூற, வாணியின் முகம் சிவந்தது.

“பாருங்க இவளை... வந்து ஒரு மாசம் கூட ஆகலை. அதுக்குள்ளே எம் புள்ளையைத் தனிக்குடித்தனம் போகுற அளவுக்கு மயக்கி வச்சிருக்கா!” வாணி ஆத்திரத்தில் கூற,

“ப்ம்ச்... என்ன பேசுற வாணி நீ? புள்ளை மேல இருக்க பாசத்துல புத்தி கெட்டு திரியாத. இப்படியே நீ வீட்டுக்கு வந்த பொண்ணைத் திட்டி சண்டை போட்டுட்டே இருந்தா, நானே யோசிக்காம அவனைத் தனிக்குடித்தனம் போக சொல்லிடுவேன். வாழ்க்கைல பொறுமையும் நிதானமும் ரொம்ப முக்கியம். வேலை செஞ்சு அலைஞ்சு திரிஞ்சு வர்ற மனுஷன் வீட்லதான் நிம்மதியா இருப்பான். நீ இங்கேயும் அவனை நிம்மதியா இருக்க விட மாட்ற. உன் புள்ளை உன் கூடவே இருக்கணும்னு நினைச்சா, வயசுக்குத் தகுந்த மாதிரி நடிந்துக்கோ. இல்ல, அவன் எடுக்குற முடிவை ஏத்துக்கிட்டுத்தான் ஆகணும்னு சொல்லாம சொல்லிட்டான்!” என்ற கோபால் மனைவியை முறைத்துவிட்டு சென்றார்.

“அவன் வந்ததும் வராததுமா என்னைப் பத்தி குறை சொல்லி வச்சிருக்கா. உள்ள வந்ததுமே குடும்பத்தை பிரிக்கப் பார்க்குறா. இப்படியொரு குணம் கெட்டவ நம்ப குடும்பத்துக்கு அவசியமா? அப்பவே நான் தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன். இப்போ யோசிச்சு என்ன பிரயோஜனம்? எம் புள்ளை எனக்கில்லை?” அவர் உதடுகள் புலம்ப, மனம் குமுறியது‌.

“ஜானு... ரொம்ப பசிக்குது டீ. சீக்கிரம் வா, ரொம்ப நேரமா கிச்சன்லயே உருட்டீட்டு இருக்க?” ஹரி உணவு மேஜையில் கைகளால் தாளமிட்டுக் கொண்டிருந்தான். வாணி தேவா மீது கோபம் கொண்டு சமையலறை பக்கம் செல்லவே இல்லை. ஜனனி மாமியார் பார்த்துக் கொள்வார் என அறையிலே இருந்துவிட, இரவு உணவு தாமதமானது.

ஆதிரை சமைக்கலாம் என யோசித்தாலும் வாணி எதாவது பேசுவார் என அபியையும் ராகினியையும் வீட்டுப் பாடம் எழுத வைத்தவள், அவர்களுக்கு வரகு பாஸ்தா செய்து கொடுத்து இரவு உணவாக உண்ண வைத்துவிட்டாள்.

“ப்ம்ச்... எனக்கென்ன பத்து கையாங்க இருக்கு? நான் மாவைத் தேய்க்க, அக்காதான் பூரி போட்றாங்க. கொஞ்சம் பொறு டா!” கடைசி வரியை அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் முணுமுணுத்து முறைத்தவளை சட்டை செய்யாது தட்டிலிருந்த பூரியை காலி செய்யத் தொடங்கினான் ஹரி.

தேவா இவர்களைப் பார்த்துக் கொண்டேதான் அறையிலிருந்து வெளியே வந்தான். ஜனனியின் பேச்சை கேட்டவனுக்கு உதட்டோரம் முறுவல் படர்ந்தது.

“வா ப்ரோ, சாப்பிடு!” ஹரி அழைத்ததும், அவன் தலையை அசைத்தான்.

“பூரி காலியாகிடுச்சு டீ. இன்னும் ரெண்டு எடுத்துட்டு வா ஜானு!” ஹரி கத்த, ஜனனி நான்கைந்து பூரிகளை அவன் தட்டில் கொட்டி முறைத்துவிட்டுப் போனாள்.

தேவாவிற்கும் ஆதிரையை டீ போட்டு அழைக்கும் எண்ணம் வந்தது. இருவருமாக இருக்கும் நேரங்களில் சரளமாக டீ என்று அழைத்து உரிமை பாராட்டினாலும் அனைவரின் முன்பும் ஏதோ ஒரு கூச்சம், சங்கடம் அவனைத் தடுத்திருந்தது.

இப்போது அவளை அழைக்கலாம் என எண்ணியவன், “ஆதி!” என அதட்டலாக அழைக்க, பூரி போட்டிருந்த கரண்டியோடு வெளியே வந்தவள், “என்னங்க?” என்றாள் கண்களால் அவனை எரித்தபடியே. முத்தம் கொடுத்ததற்குத்தான் இந்த கோபம் என அவனுக்குப் புரிந்தது. சட்டென சங்கடத்துடன் தலையைக் குனிந்தான்.

‘பூரி எடுத்துட்டு வா டீ!’ என அதட்டலாய் அழைக்கச் சென்றவன், “பசிக்குது!” என்றான் முணுமுணுப்பாக அவள் பார்வையைத் தாங்கி. ஆதிரை, “வரேன் இருங்க!” என்றுவிட்டுப் போனாள். குரலிலே சூடு அப்பிக் கிடந்தது.

‘பேச கூட விட மாட்டா. அப்படியே பார்வையிலே அடக்குறது. ஐஞ்சு வருஷமா என்னைக் கண்டா பயந்தவ? இப்போ நான் பயப்பட வேண்டியதா இருக்கு. எல்லாம் பொண்டாட்டின்ற ஸ்தானம்!’ மனதிற்குள் அவன் கடுகடுவென இருந்தான்.

‘பவர் ஆஃப் அண்ணி டா. எத்தனை நாள் எங்களை மிரட்டி இருப்ப தேவாண்ணா. இன்னைக்கு உன்னை மிரட்டுறாங்க அண்ணி. என்ன ஒரு கண்கொள்ளா காட்சி. நெக்ஸ்ட் டைம் வீடியோ எடுத்து வச்சுக்கணும். ஸ்கூல் படிக்கும் போது படி படின்னு என்ன டார்ச்சர் பண்ணான்!’ பிரதன்யா மனதிற்குள் குதுகலித்தாள். அவளது பார்வை அண்ணனையும் அண்ணியையும் வட்டமிட்டது.

ஆதிரை வைத்த நான்கு பூரிகளோடு தேவா எழுந்திருக்க முயல, இன்னும் இரண்டு பூரிகளை அவன் தட்டில் வைத்த ஆதிரை, “சாப்பிடுங்க!” என்றாள் மிரட்டலாய். தேவா அவளை முறைத்துக் கொண்டே உண்டு முடித்தான்.

ஆதிரை ஜனனியை அனுப்பிவிட்டு எல்லோரும் உண்டு முடித்ததும் பாத்திரங்களை கழுவி சமையலறையை சுத்தம் செய்துவிட்டு அறைக்குள் நுழைந்தாள். அபி தூங்காது அலைபேசியை பார்த்திருந்தான். இவள் வந்ததும் அவன் அலைபேசியை படக்கென அணைத்துப் போட, “அபிம்மா... இன்னும் தூங்கலையா?” என அறைக் கதவை பூட்டாமல் சாற்றி வைத்துவிட்டு மகனுக்கு அருகே படுத்தாள்.

அபி தாயருகே நெருங்கி படுக்க, இவள் தட்டிக் கொடுத்ததும் அவன் உறங்கிப் போனான். ஆதிரையின் கையில் தலை வைத்து அவள் மீது கையைக் காலைப் போட்டு இறுக்கி அணைத்துக்கொண்டு படுத்தான். தேவா அன்றைய செய்தியைப் பார்த்தவன், நேரமானதை உணர்ந்து தொலைக்காட்சியை அணைத்துவிட்டு அறைக்குள் நுழைந்தான்.

ஆதிரை அருகே அபி படுத்திருப்பது தெரிய, இவனக்கு சொந்தமான இடமாகிற்றே என மனம் கூற, அதைத் தட்டி அடக்கிவிட்டான். அவளருகே படுத்து இறுக்கி அணைக்க வேண்டும் எனத் தோன்றிற்று. கிட்ட விட மாட்டேன் என்கிறாளே என்ற கடுப்பும் இருந்தது.
அவள் உறங்கிவிட்டாள் என நினைத்தவன், விளக்கணைத்துவிட்டுப் படுத்தான்.

சில நொடிகள் கடக்க, “ஏன் கிஸ் பண்ணீங்க தேவா?” மெல்லிய குரலில் ஆதிரை சற்றே கோபத்துடன் கேட்டாள். அவள் உறங்கட்டும் என்றுதான் இவன் தாமதமாய் வந்ததே. ஆனாலும் விழித்துக் கிடக்கிறாளே என இவன் மனம் அலுத்தது.

சில நொடிகள் யோசித்தவன், “தெரியலை... அந்த செகண்ட் தோணுச்சு. சோ, கிஸ் பண்ணிட்டேன்!” இவனும் மெல்லிய குரலில் பேசினான்.

“தோணும்... தோணும். இனிமே கிஸ் பண்றேன்னு வாங்க . அப்புறம் இருக்கு உங்களுக்கு!” அவள் சிடுசிடுக்க, “ஏன்... இப்போ நான் உன்னைக் கிஸ் பண்ணதுல என்ன தப்பு?” அவன் கோபமாய்க் கேட்டான்.

“ஹம்ம்... கிஸ் பண்றேன்னு பக்கத்துல வந்து பயப்பட வைக்குறீங்க நீங்க. எனக்கு ஒரு நிமிஷம் பக்குன்னு ஆகிடுச்சு!” ஆதிரை இரைந்தாள்.

“இனிமே கிஸ் பண்ணா அனவுண்ஸ்மெண்ட் கொடுக்குறேன் டீ!” அவன் கேலியாய் கூறினான்.

“அதெதுக்கு... இனிமே முத்தம் கொடுக்க வந்தீங்கன்னா சொல்லிடுங்க, நான் ப்ரிபேர் ஆகிக்கிறேன்!” அவள் முனங்கினாள்.

“ஆமா...எக்ஸாம்க்குப் போறா. ப்ரிபேர் பண்ணிட்டுப் போக!” அவன் எள்ளலாய்க் கூற,

“ப்ம்ச்... உங்க முகத்தைப் பார்த்து ரொமான்ஸ் பண்ணணும்னா ப்ரிபரேஷன் வேணாமா? ட்வென்டி போர் இன்ட் செவன் முகத்தை உர்ருன்னு வச்சுக்கிறது. முப்பது செகண்ட்க்கு மேல சிரிக்க தெரியாது இவருக்கு. இதுல ரொமான்ஸ் பண்றாராம். கிஸ் பண்ண தெரியுதா உங்களுக்கு? வேலைன்னு வரும்போது மட்டும் உனக்கு அது தெரியலை, இது தெரியலைன்னு அசிங்கப்படுத்துவாரு. ஆனால் இவர் மட்டும் அறை குறையா ஐஞ்சு செகண்ட்ல அவசர முத்தம் கொடுப்பாரு!” வேண்டுமென்றே அவனைக் கடுப்படித்தாள் ஆதிரை. தேவாவிற்கு கோபத்திற்குப் பதில் சிரிப்பு வந்தது.

அவள் காதருகே சென்றவன், “நீ வேணா எப்படி கிஸ் பண்றதுன்னு சொல்லிக் கொடு டீ!” என்றான் கிசுகிசுப்பான குரலில். ஆதிரைக்கு குப்பென அடிவயிற்றில் ஏதோ செய்தது. முட்டியால் அவன் வயிற்றில் இடித்தவள், “அதெல்லாம் முடியாது! முடியாது!” என்றாள் சிரிப்பை அடக்கிய குரலில்.

“ஏன்டி... ஆரம்பத்துல லேப்ல மக்கு மாதிரி இருந்த. நான் தானே எல்லாம் சொல்லிக் கொடுத்தேன்!” அவன் கேலியாய் கூற, ஆதிரைக்குப் புசுபுசுவென கோபம் வந்தது.

“ஓ... அப்போ அறிவாளியா பார்த்து வேலைக்கு வைக்கிறது. நான் இனிமே உங்ககிட்டே வேலை பார்க்க மாட்டேன்!” என சிலிர்த்தாள்.

“ம்க்கும்.‌.. நல்லது, நான் வேற ஆளா பார்த்து செட் பண்ணிக்கிறேன்!” என்றான் கேலியாய். ஆதிரை நொடியில் பொங்கிக் கேலியாய் சிரித்தாள்.

“என்னைக் கரெக்ட் பண்ணவே இந்த மனுஷனக்கு நாலு மாசம் ஆச்சு. அங்கிள் கேட்டகிரில இருக்க உங்களை யாரும் பார்க்க மாட்டாங்க தேவா. நானே ஏதோ பாவமான நைன்டீஸ் கிட்னு போனா போகுதுன்னு ஓகே சொன்னேன்!” என்றாள் கலகலவென சிரித்தபடி.

“போதும்...போதும்!” அவன் கடுப்புடன் கூற, இவளுக்கு சிரிப்பு நிற்கவில்லை.

“சரி விடுங்க, இன்னைக்கு உங்களுக்கு நான் சொல்லித் தரேன்!” என்றவள் அவன் தாடியடர்ந்த கன்னத்தை ஒரு கரத்தில் அடக்கி அவன் விழிப் பார்த்தாள். தேவா என்ன சொல்கிறாள் இவள் எனப் புருவம் சுருங்க பார்த்தான். விளக்கொளியில் இருவரது கண்கள் மட்டுமே மின்னின.

என்னவோ ஆதிரைக்கு அவன் முகத்தை, விழிகளைப் பார்க்கவே முடியவில்லை. இத்தனை நாட்கள் திட்டி, முசுட்டு முகத்துடன் கடுகடுத்த குரலுடன் இருந்த முதலாளி தேவாதான் இப்போதும் கண்ணுக்கு முன்னே வந்தான். வெகு அரிதாக அவளுக்காகவென வெட்கம், ரோஷம் கெட்டு வீட்டு வாயில் வரை வந்து நின்ற தேவா நினைவிற்கு வர, மூச்சை இழுத்தவள், அதை அவன் உதட்டில் புதைந்து அவனுக்கு கொடுத்தாள்.

தேவாவிடம் அதிர்வு தோன்றிற்று. அவளைப் போல அவசரம் முத்தம் அல்லாது
ஆதிரை நிறுத்தி நிதானமாக முத்தமிட்டாள். இவனது மொத்த உடலும் சிலிர்த்துப் போனது. அன்னிச்சையாய் அவளது இடையை வளைத்தான்.

ஆழ்ந்து அனுபவித்து அவனை முத்தமிட்டவள் அவன் கழுத்தில் முகம்‌ புதைத்து, “தேங்க்ஸ் தேவா!” என்றாள் மூச்சு வாங்கியபடியே. இத்தனை நேரப் பதற்றத்திலும் டோபமைன் டெஸ்டோஸ்டீரான் கொடுத்த மயக்கத்திலும் இருந்தவனின் உடல் தளர்ந்தது.

“ஸ்டே அவே ப்ரம் மீ ஆதிரை. தள்ளிப் போய்டு டீ! ரொம்ப டெம்ப்ட் பண்ற!” என்றான் அவளைத் தன்னோடு இறுக்கி அணைத்து. ஆதிரைக்கு இத்தனை நேரமில்லாது இப்போது வெட்கமாய் போய்விட்டது. அவன் கையைத் தட்டிவிட்டு எழுந்து வந்து அபிக்கு மறுபுறம் படுத்துக் கொண்டாள்.

‘தேவைதான் எனக்கு!’ தேவாவிற்கு உச்சபட்ச கடுப்பு. இன்னும் அவள் உடல் சூடு இவனது உடலில் தேங்கி நின்றது. தலையணையில் முகம்‌ புதைத்து கண்ணை இறுக மூடித் தூங்க முயன்றான்.

ம்கூம்... சத்தியமாய் உறக்கம் வருமென்று தோன்றவில்லை. என்ன முத்தம் இது? மொத்தத்தையும் மறக்கச் செய்திருந்தது. பின்னந்தலையை வருடிய விரல்களின் ஸ்பரிசம் அங்கேயே தங்கிப் போயிருந்தது. இறுக்கி அணைத்தக் கைகளின் மென்மை அவனை உசுப்பியது. உண்மையில் அவளைக் கேலி செய்யவே முத்தம் கேட்டான். ஆனால், ஆதிரையின் இந்த அதிரடி முத்தத்தில் உடல் என்னவோ செய்தது.

முப்பத்து மூன்று வருட வாழ்க்கையில் இதுதான் முத்தம் என அவனுக்கு மனைவி சொல்லிக் கொடுத்திருக்கிறாள். அதிலே இவனுக்கு வெட்கமும் அவஸ்தையுமாய் போய்விட்டது. நெளிந்து கொண்டே படுத்தான்.

“தேவா!” அவள் அழைக்க, “என்ன டீ?” அவன் குரல் கடுப்பாய் வந்தது. ஒரு பேச்சிற்கு தள்ளிப் போ என்றதும் ஓடிப் போய்‌ மறுபுறம் படுத்துக் கொண்டாளே பாவி என மனதிற்குள் புழுங்கினான். அவள் அருகே வேண்டும் என உடலும் உள்ளமும் பரபரத்தது.

“இந்த தேங்க்ஸ் எதுக்குன்னு கேட்கலையே நீங்க?” அவள் தலையைத் தூக்கி எட்டிப் பார்த்தாள்.

“ரொம்ப முக்கியம். பேசாம படுடீ. நான் மார்னிங் சீக்கிரம் கிளம்பணும்!” அவன் அதட்ட, இவளது வாய் பூட்டுப் போட்டுக் கொண்டது.

'சே... பாவம் மனுஷன். முத்தம் கொடுத்துட்டு எஸ்ஸாகிட்டேன்!' இவளுக்கே அவனைப் பார்த்துப் பாவமாய் போய்விட்டது. உண்மையில் தேவா சற்று முன்னர் கொடுத்த முத்தத்தில் இவளுக்குப் பயங்கர கடுப்புதான். சொல்லாமல் கொள்ளாமல் திடுதிப்பென்று அவன் கொடுத்த முத்தத்தில் இவளுக்கு ஒருமாதிரி போயிற்று. அதானலே முகத்தைக் கோபமாய் வைத்திருந்தாள்.

ஆனால் வாணியிடம் தேவா பேசிய பேச்சு எதார்த்தமாய் காதுகளை எட்டியது. முழுதாய் கேட்கவில்லை எனினும் அவன் பேச்சின் சாராம்சம் புரிந்து போனது. தேவா பொறுப்பானவன், பொறுமையானவன்தான். ஆனால், தன் மீது இவனுக்கு ஏன் இத்தனை அன்பு என முதல்முறையாக மனம் அதில் குளிர்ந்து நனைந்து போயிருந்தது.

மறைமுகமாக வாணியை அவன் மிரட்டியதும் இவளுக்கு சிரிப்பு வேறு வந்தது. தாயைக் கூட இவன் விட்டு வைக்கவில்லை போல. எல்லோரிடமும் இவனது முகமும் குணமும் ஒன்றென எண்ணியதும், தனக்கென்று அவனது மெனக்கெடல்களில் மனம் இதமாய் உணர்ந்தது. இந்த திருமணம் சரியா? தவறா? எனக் குழப்பத்தில் உழன்ற மனம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தெளிந்தது. அதனாலே யோசிக்காது அவனை முத்தமிட்டிருந்தாள்.

இவளுக்குமே உறக்கம் காத தூரம் சென்றிருந்தது. எட்டி தேவாவைப் பார்க்க, அவன் உறங்கிப் போயிருந்தான். இவளது உதட்டில் முறுவல் அரும்பிற்று.

இந்த ஐந்து வருடங்களில் ஒருநாள் கூட தேவாவை இப்படியெல்லாம் அவன் எண்ணவில்லை. ம்கூம்... யாரையுமே அவள் பெரிதாய் கண்டு கொள்ளவில்லை. அப்படி இருக்கையில் இவனை இப்படி... வாய்ப்பே இல்லை. மனதிற்குள் சிரிப்பு வந்தது.

தேவாவுடன் அவனது அறையில் அவன் கட்டிலில் படுத்திருக்கிறாள். சற்று முன்னர் அவனை இறுக்கி அணைத்து முத்தமிட்டிருக்கிறாள். இப்படியெல்லாம் நடக்கும் என யாராவது கூறியிருந்தால் ஆதிரை கேலியாய் அவர்களைக் கடந்திருக்க கூடும்.

விதி ஏன் தன்னை இவனுடன் இணைத்தது என யோசித்து அவன்புறம் திரும்பி அவனது முகத்தையே பார்த்தாள். 'கருவாயா!' உதடுகள் முணுமுணுக்க, அவன் முகத்தை இப்போதுதான் ஊன்றிக் கவனித்தாள். சிந்தனை அங்கு இங்கே என அசைய, அப்படியே கண்ணயர்ந்து போனாள்.

தொடரும்...

 
New member
Messages
7
Reaction score
5
Points
3
அருமையான பதிவு 👌👌👌👌👌👌 தேவா அவன் அம்மவிடம் தன் மனைவிக்காக பேசியது அருமை👌👌👌👌👏👏👏👏🌺🌺🌺🌺
 
Well-known member
Messages
993
Reaction score
735
Points
93
Aadhi Superrrrrrrrr
Deva semmmmmmmaaaaa ya miratti vittuttan Amma va😆😆😆😆😆😆😆
Chinna ud ya irukku maa
Next ud eppo
 
Well-known member
Messages
445
Reaction score
323
Points
63
Vani madam nega ipadi yae pesitu irundhiga next time warning ellam illa straight ah deva action than .

Yemma athi oru kiss la yae avan ah ipadi flat aakitiyae acho so cute musudu deva ne
 
Active member
Messages
117
Reaction score
100
Points
43
Nice super interesting super interesting super interesting super 👌 👌 👌 👌 👌 👌 👌
 
Well-known member
Messages
510
Reaction score
383
Points
63
தேவா அம்மாவிடம் மனைவிக்காக பேசியது சூப்பர்👌👌👌
 
Top