- Messages
- 1,194
- Reaction score
- 3,478
- Points
- 113
நெஞ்சம் – 45 
ஆதிரை திரும்பி படுத்ததும் மெதுவாய் விழிப்பு வர, கைகளால் படுக்கையைத் துழாவினாள். அபி அருகே இல்லை என்வும் உறக்கத்தை உதறி எழுந்து அமர்ந்து முடியைத் தூக்கி கட்டிவிட்டு அறையைத் திறக்க, அவன் கூடத்தில் அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான். தாயை கவனிக்கவில்லை.
இவள் கழிவறைக்குச் சென்று முகம் கழுவி பல் துலக்கிவிட்டு வெளியே வர, அபி எங்கேயோ கவனமாய் இருந்தான். இவள் அவன் பார்வை போகும் பக்கம் விழிகளைத் திருப்ப, பொன்வாணி அமர்ந்திருந்தார். அவர் மடியில் ராகினி அமர்ந்திருக்க, கிண்ணத்தில் எதையோ வைத்து அவனுக்கு ஊட்டிக் கொண்டிருந்தார். இவளுக்கு அவர் செய்கை சட்டென கோபத்தை வரவழைத்தது.
‘எப்படிபட்ட கீழ்த்தரமான செய்கை இது. குழந்தையிடம் போய் அவரது காழ்ப்புணர்ச்சியைக் காண்பிக்கலாமா? சின்ன புத்தி இவருக்கு!’ மனதிற்குள்ளே அவரை அர்ச்சித்தவள், “அபிம்மா. என் தங்கம் எழுந்துட்டீங்களா?” எனக் கேட்டபடியே மகனருகே சென்றாள். தாயைக் கண்டதும் முகம் மலர்ந்தவன் ஓடிச் சென்று அவளை அணைத்தான்.
“என் தங்கம், தூக்கம் கலைஞ்சுடுச்சுன்னா அம்மாவை எழுப்பலாம் இல்ல. ஏன் அபி தனியா உக்கார்ந்து இருக்க?” எனக் கேட்டுக் கொண்டே அவனைத் தூக்கி இடுப்பில் அமர வைத்து, அவன் உதட்டோரம் உறைந்து போயிருந்த எச்சிலை துடைத்துவிட்டாள்.
“நீ நல்லா தூங்கிட்டு இருந்தம்மா. அதான் நான் டிவி பார்க்க வந்துட்டேன்!” அபி கூறியதும் அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டவள், “இனிமே என் தங்கம் எழுந்துட்டா, அம்மாவை எழுப்பி விடணும். சரி, இப்போ அபிக்கு என்ன வேணும்? அம்மா பூஸ்ட் கலக்கித் தரேன்!” என அவனைத் தூக்கிக் கொண்டே சமையலறைக்குள் நுழைந்தாள்.
“ம்மா... எனக்குப் பனியாரம் வேணும்!” அவன் கூறவும், ராகினிக்கு பொன்வாணி பனியாரம் ஊட்டுகிறார் எனப் புரிந்தது. பாலை குளிர்சாதன பெட்டியிலிருந்து எடுக்கும் போதே பீட்ரூட் ஒன்றை வெளியில் எடுத்தாள்.
“ஹம்ம்... பனியாரமா? நான் அபிக்கு பிங்க் தோசை, சாக்லேட் தோசை எல்லாம் செஞ்சு தரலாம்னு நினைச்சேன்!” என்றவாறே மகன் முகத்தை சிரிப்புடன் பார்த்தாள்.
“ம்மா... பனியாரம் வேணாம்மா. பிங்க் தோசை, சாக்லேட் தோசை எல்லாம் வேணும்மா!” என்றான் ஆர்வத்துடன்.
“அப்போ ஓகே.. ஓடிப் போய் ப்ரஷ் பண்ணீட்டு பேஷ் வாஸ் பண்ணிட்டு வா டா. அம்மா பூஸ்ட் கலக்கித் தரேன். அதைக் குடிச்சிட்டு இரண்டு பேரும் சேர்ந்து கலர் தோசை சுடலாம்!” என அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே மகன் குடுகுடுவென அறைக்குள் ஓடினான்.
இவள் சின்ன சிரிப்புடன் பாலைக் கொதிக்க வைத்து அவனுக்கு சத்து மாவைக் கலக்கி கொடுத்துவிட்டு தனக்கொரு தேநீரைத் தயாரித்தாள். அபி வரவும் அவனுக்கு பாலைக் கொடுத்து சமையல் மேடையில் தூக்கி அமர வைத்தாள்.
தாயும் மகனும் பேசிக் கொண்டே இன்னெட்டு தோசை, பீட்ரூட் தோசை சுட்டனர். “ம்மா... சாக்லேட் தோசை யம்மிமா. இன்னொரு தோசை வேணும்!” அபி சப்புக் கொட்டினான்.
இவள் மென்னகையுடன் மற்றொரு தோசையை சுட, ராகினி முயல் குட்டி போல இரண்டு குடுமியையும் ஆட்டியவாறே சமையலறை வாயிலை எட்டிப் பார்த்தாள். உள்ளே வரலாமா? வேண்டாமா? என அவள் யோசிக்க, ஆதிரை தற்செயலாக திரும்பி அவளைப் பார்த்துவிட்டாள்.
“ராகி குட்டிக்கு என்ன வேணும்? ஏன் அங்கேயே நிற்குறீங்க? உள்ள வாங்க!” என்றாள் சின்ன புன்னகையுடன் கையை அசைத்து.
குட்டிக் கால்களை எட்டி எட்டி வைத்து அவளருகே வந்தவள், “பெரிம்மா... எனக்கும் சாக்லேட் தோசை வேணும்!” என்றாள் ஆசையாய். அவள் முகத்திலிருந்த பாவனையில் இவளுக்குப் புன்னகை அரும்பிற்று.
“ஹம்ம்... தோசை வேணும்னா பெரியம்மாவுக்கு ஒரு முத்தா தரணுமே!” இவள் பேரம் பேச, ராகினி ஆர்வத்துடன் கையை அவளை நோக்கி நீட்டினாள்.
ஆதிரை அவளைத் தூக்கியதும் ராகினி அவள் கன்னத்தில் முத்தமிட, பதிலுக்கு முத்தமிட்டவள், அவளை இடுப்பில் வைத்துக் கொண்டே தோசையை ஊற்றினாள். அபிக்கும் ராகிக்கும் தோசையை சரிபாதியாய் பிரித்தவள், சின்னவளுக்கு தானே ஊட்டிவிட்டாள்.
கோபாலும் தேவாவும் வெளியே சென்றுவிட்டு அப்போதுதான் உள்ளே நுழைந்தனர். தேவா தன்னறைக்குச் செல்ல விழைந்தவன், அபி ராகினியின் சிரிப்பு சத்தத்தில் பின்னோக்கி நகர்ந்து சமையலறையை எட்டிப் பார்த்தான். ஆதிரை சிரித்தபடி இருவருக்கும் உணவைக் கொடுத்துக் கொண்டிருக்க, இவனது உதடுகளில் மிக மிக மெல்லியதாய் சிரிப்பு படர்ந்தது.
ஆதிரை அவன் வரவை உணர்ந்து, “காலைலயே எங்கப் போய்ருந்தீங்க?” கேள்வியாய் அவனைப் பார்த்தாள்.
“ஒரு சின்ன வேலை, அதான் அப்பாவோட வெளிய போய்ருந்தேன்!” தேவா பதிலளிக்க, “ஹம்ம்.. டீ போட்டுத் தரவாங்க?” எனக் கேட்டாள்.
“வேணாம் ஆதிரை, நான் மார்னிங்கே டீ குடிச்சுட்டேன்!” என்றான்.
“சரி, அப்போ தோசை சுடவா? சாப்பிட்றீங்களா?” அவன் முகத்தைப் பார்த்தாள்.
“டென் மினிட்ஸ், நான் ரெடியாகி வந்துட்றேன். அப்புறம் சாப்பிட்றேன்!” என அவன் அகல, ஆதிரை அருகே இருந்த பாத்திரத்தை திறந்து பார்த்தாள். அது நிறைய பனியாரமும் அருகே தேங்காய் சட்னியும் இருந்தது. சில நொடிகள் யோசித்தவள், ராகினிக்கு தோசையைத் தட்டில் போட்டுக் கொடுத்துவிட்டு, வெங்காயம் தக்காளியை நறுக்கி அவசர அவசரமாக கார சட்னியை அரைத்து முடித்தாள்.
அப்படியே மற்றொரு அடுப்பில் தோசையையும் ஊற்ற, தேவா வந்து உணவு மேஜையில் அமர்ந்தான். இவள் எட்டிப் பார்த்தவாறே, “டூ மினிட்ஸ்ங்க!” என்றுவிட்டு சுடசுட தோசையும் கார சட்னியும் எடுத்துச் சென்றாள்.
அவன் உண்ணத் தொடங்க, இவ்வளவு நேரம் அறைக்குள் இருந்த வாணி விறுவிறுவென சமையல் கூடத்திற்குள் நுழைந்தவர் ஆதிரையை முறைத்தவாறே நங்கென்று பனியாரத்தையும் சட்னியையும் எடுத்துச் சென்றார்.
“ஏன் டா... வேலை மெனக்கெட்டு காலைல எழுந்து பனியாரம் சுட்டு வச்சா, நீ தோசை சாப்பிட்டுட்டு இருக்க?” எனக் கடுகடுத்துக் கொண்டே தேவா என்னவென யோசிக்கும் முன்பு அவன் தட்டில் ஏழெட்டு பனியாரங்களை வைத்துவிட்டார். அவன் திகைத்துப் போனான்.
“ம்மா.... ஏன் இத்தனைய வைக்குறீங்க?” என அவரை முறைத்தவன், “நீங்க பனியாரம் சுட்டதே எனக்குத் தெரியாது!” என்றான் மெல்லிய கடுப்புடன். பின்னே தட்டு நிறைய பனியாரத்தை நிரப்பியிருந்தார் பெண்மணி.
“ஏன்... உன் பொண்டாட்டி கிச்சன்லதானே இருக்கா. என்ன இருக்கு, ஏது இருக்குன்னு பார்க்க மாட்டாளோ?” என அங்கலாய்த்தார் இவர். தேவா அவரைப் பார்த்தான் ஒழிய பதிலளிக்கவில்லை. பெருமூச்சுடன் குனிந்து உண்ணத் தொடங்க, படக்கென அவன் தட்டில் ஒரு தோசையை வைத்தாள் ஆதிரை.
“ஹே... போதும் டீ. இது வயிறா இல்ல வேற எதுவுமா?” மனைவியிடம் அவன் சிடுசிடுக்க, “ப்ம்ச்... பொடி தோசை உங்களுக்காகத்தான் நெய் போட்டு சுட்டேன். சாப்பிடுங்க!” எனக் காண்ணாலே மிரட்டிவிட்டுப் போனவளை இவனால் முறைக்க மட்டும்தான் முடிந்தது.
ஆதிரை வாணியை நக்கலாகப் பார்த்துவிட்டு செல்ல, அதில் கடுப்பானவர், “உன் பொண்டாட்டி சுடுற தோசையை சாப்பிட உன் வயித்துல இடம் இருக்கும். பனியாரத்துக்கு இடம் இல்லையோ?” எனக் கேட்டவர் மீண்டும் ரெண்டு பனியாரத்தோடு அவனை நெருங்கினார்.
“ப்ம்ச்... ம்மா, நான் சாப்பிடணும்னு நினைக்குறீங்க இல்லையா? இப்படியே எழுந்திரிச்சு போய்டவா?” அவன் கோபத்தில் இரைய, “பொண்டாட்டி வந்தப் பிறகு பெத்தவ சுட்ட பனியாரம் கூட கசக்கத்தான் செய்யும்!” என்ற முனங்கலோடு கோபமாய் கையிலிருந்த பணியாரத்தை சட்டியிலே மீண்டும் போட்டார். ஆதிரைக்கு இவர்களது உரையாடல் நன்றாய் காதில் விழ, திருப்தியாய் புன்னகைத்தாள்.
வாணி பனியாரம் சுட்டதைத் தெரிந்து கொண்டே வேண்டும் என்றுதான் சட்னி அரைத்து தோசை ஊற்றினாள். காலையில் வாணியின் செயல் அவளை இப்படி செய்ய வைத்திருந்தது. சிறுவன் என்று கூடப் பாராமல் அபியைப் பார்க்க வைத்துக் கொண்டே ராகினிக்கு ஊட்டியிருக்கிறார் அவர் மனது எத்தனை அழுக்காய் இருக்க வேண்டும். அபி அவரை ஏக்கமாய் பார்த்தது கண்ணுக்குள்ளே வந்து நின்றது. தாமதமாய் எழுந்த தன்னையே நிந்தித்துக் கொண்டாள்.
வெளியே வாணி எதையோ முணுமுணுப்பது கேட்க, “மொறு மொறுன்னு முட்டை தோசை ஒன்னு ஊத்தி தரவாங்க?” எனப் போலி பவ்யத்துடன் தேவாவிடம் கேட்டாள் ஆதிரை.
தேவா அவளைத் தீயாய் முறைத்தான். இவளின் உதட்டோரம் கேலி புன்னகை நெளிந்தது. இவள் வாணியின் முகத்தைக் கூடப் பார்க்கவில்லை. ஆனாலும் அவரது முக பாவனையை இவளால் ஊகிக்க முடிந்தது. அவர் இவளைக் கடுகடுவென பார்த்திருந்தார்.
காலையில் எழுந்ததும் தலைச்சுற்றுகிறது என மீண்டும் படுத்துவிட்ட ஜனனி அப்போதுதான் எழுந்து வந்தாள். ஆதிரையைப் பார்த்து அவள் புன்னகைக்க, “என்ன ஜனனி, ஏன் ஒருமாதிரி இருக்கீங்க?” எனக் கேட்டாள் ஆதி.
“லைட்டா தலை சுத்துதுக்கா!” அவள் சோபையாய் புன்னகைக்க, “நான் லெமன் பிழிஞ்சு எடுத்துட்டு வரேன். உக்காருங்க...” என ஆதிரை சமையலறை நோக்கி அகன்றாள்.
“பரவாயில்லைக்கா...” ஜானுவும் அவள் பின்னே சென்றாள்.
ஹரி குளித்து முடித்து பண்ணைக்கு செல்ல கிளம்பி வந்தான். “என்ன டிபன் ப்ரோ?” கேட்டுக் கொண்டே தேவா அருகே அமர்ந்தான்.
“பொடி தோசை வித் கார சட்னயா? செம்ம காம்பினேஷன். அண்ணி ப்ரிபரேஷனா?” எனக் கேட்டவன், அவன் பதிலளிக்கும் முன்னே, “அண்ணி, எனக்கு முட்டை போட்டு பொடி தோசை!” எனக் குரல் கொடுத்தான்.
“டூ மினிட்ஸ் ஹரி!” அவள் கண்ணை சுருக்கி கையைக் காண்பிக்க, “நோ ப்ராப்ளம் அண்ணி, பொறுமையா வாங்க!” இவன் புன்னகையுடன் கூறினான்.
பொன்வாணி பத்ரகாளியாய் மகனை முறைத்தவர் அவன் முன்னே தட்டை வைத்து அளவில்லாமல் பனியாரத்தை இட்டு, “இன்னைக்கு பனியாரம்தான் டிபன். சாப்ட்டு வேலைக்கு கிளம்பு!” என்றார் காட்டமாய்.
“ம்மா... ஸ்வீட்டா சாப்பிட பிடிக்கலை. எனக்கு முட்டை பொடி தோசை வேணும்!” அவன் முகத்தைக் கோணினான்.
“ஏன்டா... இத்தனை நாள் நான் என்ன சமைச்சு வைக்கிறேனோ அதைதானே சாப்பிடுவ. இன்னைக்கு என்ன புதுசா பொடி தோசை வேணும் உனக்கு. ஒழுங்கா பனியாரத்தை சாப்பிடு!” என அவர் அதட்ட, அவன் புரியாது முழித்துப் பின்னர் மூளையில் விளக்கெரிந்ததும் திரும்பி தேவாவை அதிர்ந்து பார்க்க, அவனும் தலையை மட்டும் அசைத்தான்.
“இந்தம்மாவோட!” என முணுமுணுத்தவன், “ம்மா... பனியாரம் சாப்பிட்றேன். அதுக்காக இவ்வளோ சாப்பிட முடியுமா?” எனக் கடுப்புடன் நான்கை மட்டும் தட்டில் வைத்துவிட்டு மீதவற்றை சட்டியில் எடுத்துப் போட, ஆதிரை தோசையுடன் வந்துவிட்டாள்.
“தேங்க்ஸ் அண்ணி!” என உற்சாகத்துடன் கூறியவன் மேலும் ஒரு தோசையை உண்டுவிட்டே தேவாவுடனே கிளம்பினான்.
கோபால் சாப்பிட அமர, “வாங்க மாமா, சாப்பிட்றீங்களா? தோசை சுடுறேன்...” என அவரிடம் கேட்டாள் ஆதிரை.
“என் பொண்டாட்டி பனியாரம் சுட்டு வச்சிருக்காளேம்மா... நெய் பனியாரம் வாசனை தூக்குது. சரி, ஒரு தோசை மட்டும் குடு. உன் கையால் நான் சாப்பிட்டது இல்லைல?” என மனைவியை சமாதானம் செய்து மருமகளின் மனம் நோகாதவாறு பேசினார் கோபால். பொன்வாணி கொஞ்சம் தணிந்திருந்தார்.
அன்றைக்கு மகாவீரர் ஜெயந்தியை என்பதால் பள்ளிக் கல்லுரிகளுக்கு விடுமுறை. பிரதன்யா ஒன்பது மணிக்குத்தான் எழுந்தே வந்தாள். “என்னம்மா... ஸ்மெல் ரூம் வரை வருது. பனியாரமா? செம்ம மா!” என ஆர்வத்துடன் எடுத்து உண்டாள்.
“சூப்பரா இருக்கும்மா!” என சிலாகித்தவள் பக்கத்திலிருந்த காரச் சட்னியில் பனியாரத்தை தோய்த்து வாயில் வைத்தாள்.
“ஆஹா... சட்னி அருமையா இருக்கும்மா. பனியாரம் டேஸ்டா சட்னி டேஸ்டான்னு கண்டே பிடிக்க முடியலை. ஒன்றுக்கொன்னு சளைச்சது இல்ல!” என அவள் ரசித்து ருசித்து கூறவும், வாணி மகளை முறைத்துவிட்டு அறைக்குள் எழுந்து சென்றார்.
“ஏன்பா... நல்லா இருக்குனு தானே சொன்னேன். எதுக்கு இந்த அம்மா முறைச்சுட்டுப் போறாங்க?” அவள் புரியாது தந்தையைப் பார்த்தாள்.
“அவ அப்படித்தான் மா. நீ சாப்பிடு!” கோபால் கூற, பிரது உண்பதில் கவனமானான்.
***
“உன் பைக் என்னாச்சு ஹரி, ஏன் என்னை ட்ராப் பண்ண சொல்ற?” எனக் கேட்டவாறே தேவா உழவர் துணையின் மற்றொரு கிளையை நோக்கி மகிழுந்தை செலுத்தினான்.
“ஹம்ம்... சும்மா ப்ரோ!” ஹரி வேடிக்கைப் பார்த்தபடி பதிலளித்தான்.
அவனைத் திரும்பிப் பார்த்த தேவா, “பொய் சொல்லாத. என்ன பேசணும் என்கிட்ட?” என அழுத்திக் கேட்டான்.
“ஹம்ம்... அது ஜானு நேத்து நைட்டு ஒரு விஷயம் சொன்னா!” எனப் பீடிகையோடு ஆரம்பித்தான். தேவா அவன் பேசட்டும் என அமைதி காத்தான்.
“இல்ல... அம்மா அண்ணியை இரண்டு தடவை பேசும்போது அனாதை அது இதுன்னு சொல்லி ஹர்ட் பண்ணிட்டாங்களாம். பாவம் அண்ணி முகமே மாறிடுச்சு போல!” என தமையன் முகத்தைப் பார்க்க, அவன் முகத்தில் மெல்லிய அதிர்வு. அவனுக்கு விஷயம் தெரியவில்லை என்று புரிந்தது.
ஹரி இரண்டு நாட்களும் நடந்ததை சுருக்கமாய் விவரித்தான்.
“அம்மா பண்றது சரியில்ல தேவா, புதுசா வந்த அண்ணிகிட்ட இப்படியெல்லாம் பேசலாமா? நான் கேட்டா என்னைத் திட்டுவாங்க. நீ அவங்ககிட்டே சண்டை போடுன்னு நான் சொல்லலை. பட் அவங்களுக்கு சொல்லி புரிய வை. எத்தனை நாள் இப்படியே எடுத்தெறிஞ்சு பேசுவாங்க. அண்ணி குடும்பத்துப் பிரச்சனை வரக் கூடாதுன்னு அமைதியா இருக்காங்க போல. அதான் உன்கிட்டேயும் அவங்க ஷேர் பண்ணலை!” என்றான் பெருமூச்சுடன்.
தேவாவிற்கு தாயின் வார்த்தைகள் அதிர்வை கிளப்பியிருந்தது. ஏன் எத்தனையோ வார்த்தைகள் உள்ளன. அனாதை என்ற வார்த்தை ஆதிரையை எத்தனை தூரம் காயப்படுத்தி இருக்க கூடுமென யோசித்தவனுக்கு பொன்வாணியின் மீது கோப ஊற்றுப் பெருகிற்று. தனது தாய்தான் என்றாலும் கூட ஒருவரை இப்படியெல்லாம் பேசுவது பெரும் தவறு என மனம் இடிந்துரைத்தது.
ஆதிரை தன்னிடம் இதை ஏன் பகிரவில்லை என கேள்வி எழுந்தது.
ஹரியை இறக்கிவிட்டவன், “நான் பார்த்துக்கிறேன் டா!” என அகன்றான். வேலைக்குச் சென்றாலுமே ஹரி பேசியதே மனதில் ஓடியது. கண்டிப்பாக மாலை வாணியிடம் பேச வேண்டும். அவர் கோபத்திற்கு ஆதிரையோ அபியோ ஆளாவதில் அவனுக்குத் துளியும் விருப்பம் இல்லை. அவன்தான் அவளைக் கட்டாயப்படுத்தி மணந்தது. அப்படி இருக்கையில் அவளை மட்டுமே வாணி குற்றம் சொல்வது எவ்விதத்திலும் நியாயம் இல்லை. கோபாலிடமும் இதைப் பற்றி பேச வேண்டும் என்ற எண்ணத்தோடு அன்றைய நாள் கழித்தான்.
மாலை வேலை முடிந்ததும் வீட்டிற்குள்ளே நுழைந்தவனின் வழிகள் தாயைத் தேடின. அவர் அகப்படாது போனதில் குளித்துவிட்டு வரலாம் என அறைக்குள் சென்றான். கூடத்தில் ரிங்கா ரிங்கா ரோசஸ் என அபியும் ராகினியும் விளையாட, பிரதன்யா அவர்களுக்கு பாட்டை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
அபி இவனைப் பார்த்ததும் கையிலிருந்த இன்னெட்டை இருவரும் பிரித்துப் பகிர்ந்து கொள்ளுமாறு கூற, “ண்ணா... என்கிட்ட குடு, நான் ஈக்வலா பிரிச்சு தரேன்!” எனப் பற்களை காண்பித்த பிரதன்யாவை சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டே அவளிடம் இன்னெட்டைக் கொடுத்தான்.
இவன் அறைக்குள் நுழைய, ஆதிரை யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே பாடலை அலைபேசியில் ஒலிக்க விட்டு அதை முணுமுணுத்துக் கொண்டே அவளுடைய துணியையும் அபியினுடையதையும் மடித்து கட்டிலில் பரப்பி வைத்திருந்தாள்.
ஒரு பக்கமாய் சாய்ந்து அமர்ந்திருந்ததில் அப்போதுதான் குளித்து வந்திருந்த முடிக் கற்றைகள் கன்னத்தில் விழுந்தன. பாதியை சிறிய கவ்வியில் அடக்கி இருந்தாள். முழு நீள இரவு உடையை(நைட்டி) அணிந்திருந்தாள். அது புதியது என்று பார்த்தவுடனே அடையாளம் தெரிந்தது.
நெற்றியில் கண்ணுக்கே தெரியாத அளவுக்கு குங்குமம் வைத்திருந்தாள். இவன் வந்ததைக் கூட உணராது பாடலோடு ஐயக்கிமயாகிப் போயிருந்தவள், இவன் தொண்டையைக் கனைக்கவும் உதடுகள் பாடல் வரிக்குத் தடை போட, “வந்துட்டீங்களா?” நிமிர்ந்து அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.
சட்டையின் பொத்தான்களை கழற்றியவன் தலையை அசைத்து அவள் உடையின் வெளியே தொங்கிக் கொண்டிருந் தாலியைப் பார்த்தான். பின்னர் அவள் கையிலிருந்த வளையலில் பட்டு விழிகள் மீண்டன.
“ஃபைவ் மினிட்ஸ், மடிச்சதை மட்டும் எடுத்து அடுக்கிட்டு காஃபி கொண்டு வரேன். குளிச்சிட்டு தானே காஃபி குடிப்பீங்க?” அவன் முகம் பாராது கேட்டுக் கொண்டே மடித்த துணிகளை நிலைபேழையில் அடுக்கினாள்.
ஆதிரை அவன் சென்று ஐந்து நிமிடங்கள் கழித்து சமயலறைக்கு செல்ல, பொன்வாணி தேநீரை வடிகட்டிக் கொண்டிருந்தார். தேவாவிற்காகத்தான் இருக்குமென இவள் யோசனையுடன் கையிலிருந்த பாலை அடுப்பில் ஏற்றவில்லை.
அவள் நினைத்தது போலவே வாணி தேநீரில் சர்க்கரையைக் கலந்ததும் இவர்கள் அறை நோக்கி செல்ல, ‘வேலை மிச்சம்!’ என ஆதிரை தோளைக் குலுக்கி விட்டு அவர் பின்னே சென்றாள்.
“தேவா, டீ சூடா இருக்கு. குடி டா!” என பெரியவர் மேஜை மீது குவளையை வைக்க, “ஓகேம்மா...” என அவன் குளியலறையிலிருந்து குரல் கொடுத்ததும் ஆதிரையைப் பார்த்து முகத்தைக் கோணி சென்றார் அவர். அவள் அதையெல்லாம் பொருட்படுத்தாது துணி மடிக்கும் வேலையைத் தொடர்ந்தாள்.
தேவா குளித்து முடித்து துவட்டிய துண்டை ஜன்னலில் காயப்போட்டுவிட்டு தேநீரை எடுத்துக்கொண்டு அவளுக்கு சற்று தொலைவில் அமர்ந்தான். ஆதிரை பாட்டை ஒலிக்க விட்டிருக்க, இசை அறையை நிறைத்தது.
இரண்டு மிடறு தேநீரை சுவைத்தவன், ஆதிரையைப் பார்த்துவிட்டு தயங்கி மீண்டும் பார்த்து, “சாரி ஆதிரை!” என்றான். அவளுக்கு இவன் பேசுகிறான் எனப் புரிய, அலைபேசியை அணைத்தாள்.
“என்னங்க?” அவள் கேட்க, “ஐ செட் சாரி!” என்றான் முணுமுணுத்து அவள் முகம் பார்க்காது.
“சாரியா? எதுக்கு தேவா?” அவள் புரியாது நெற்றியைச் சுருக்கினாள்.
“ஹம்ம்... அம்மா பேசுனதுக்குத்தான்!” என்றான் மெதுவாக.
“ப்ம்ச்... அவங்க பேசுனதுக்கு நீங்க ஏன் தேவா சாரி கேட்கணும். அவங்கதானே கேட்கணும்!” என்றாள் கேலியாய்.
“அவங்க தப்புன்னு ரியலைஸ் பண்ணலை. சோ, கேட்க மாட்டாங்க!” இவன் பதிலளித்தான்.
“தப்புன்னு தெரிஞ்சா கூட அவங்க இந்த ஜென்மத்துல என்கிட்ட சாரிலாம் கேட்க வாய்ப்பே இல்லை. அவங்களுக்கு நான் வேண்டாத மருமக. சோ, அப்போ அப்போ என்னைப் போட்டுப் பார்த்துட்டே இருக்காங்க!” என்றாள் சேலையை மடித்து வலப்புறமாய் நகர்த்தி.
“நீ ஏன் அமைதியா இருந்த ஆதி. என் அம்மாவாவே இருந்தாலும் அவங்க பேசுன வார்த்தை ரொம்ப தப்பு. நீ பதிலுக்குப் பேசி இருக்கலாம். இல்ல, என்கிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல?” ஆதங்கத்துடன் கேட்டான்.
அவனை நிமிர்ந்து பார்த்தவளின் உதட்டில் மெல்லிய புன்னகை. “எதிர்த்துப் பேசியிருக்கலாம். ஹம்ம்... தோணலையே தேவா!” என்றாள் தோளைக் குலுக்கி.
“ஏன்... நீ அப்படியொன்னும் சைலண்டா போற ஆள் இல்லையே!” சந்தேகத்துடன் அவளைப் பார்த்தான்.
“கரெக்ட்டுத்தான்... நான் இப்படிலாம் யாரையும் பேசிவிட்டு வேடிக்கைப் பார்க்க மாட்டேன்தான். பட், இப்போ நான் பேசினா பதிலுக்கு அவங்களும் பேசன்னு பிரச்சனை பெருசாதான் ஆகுமே தவிர அதுக்கு செல்யூஷன் கிடைக்காது. அப்படி நான் சண்டை போட்டாலும் இடையில உங்க தலைதான் உருளும். பொண்டாட்டியா? அம்மாவான்னு நீங்கதான் அல்லாடணும். ஹம்ம்... உங்களைப் பத்தி யோசிச்சுதான் கோபத்தை மூட்டைக் கட்டி வச்சிருக்கேன். ஏன்னா, ஏற்கனவே இரண்டு பக்கமும் போராடி இந்தக் கல்யாணத்தைப் பண்ணி இருக்கீங்க. சரி, மனுஷன் கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கட்டுமேன்னு விட்டுட்டேன்!” என்றாள் கேலியாக.
உனக்காக என்னும் ஒரு வார்த்தையே தேவாவின் மனநிலை மொத்தமாய் மாற்றிப் போட்டிருந்தது. கண்டிப்பாக தனக்காக என்ற வார்த்தை அவள் வாயிலிருந்து சர்வ நிச்சயமாக வராது என எண்ணியிருந்தவனுக்கு இந்த நொடி இந்தப் பெண்ணை இறுக்கி அணைக்க வேண்டும் என்றொரு பேரவா எழுந்தது.
லாவகமாய் துணியை மடித்துக் கொண்டிருக்கும் கையைப் பிரித்து அப்படியே அவள் மார்பில் முகம் புதைத்து அவளுள் புதையும் எண்ணம் வர, மூச்சை இழுத்துவிட்டான்.
“சோ, எனக்காகத்தான் பொறுமையா இருந்தீயா?” எனக் கேட்டான்.
அவனைக் கேலியாக பார்த்தவளின் உதட்டோரம் புன்னகை நெளிய, “சே... சே, எனக்கு என் மெண்டல் பீஸ் ரொம்ப முக்கியம் தேவா!” என்றாள் அசட்டையாக.
“சோ... நீ ஒத்துக்க மாட்ட?” அவன் அழுத்திக் கேட்டான்.
மெல்லிய சிரிப்புடன் பார்த்தவள், “உங்க மனசுக்கு சந்தோஷமா இருக்குன்னா அப்படியே வச்சுக்கோங்க!” உதட்டைக் கோணினாள். பற்கள் தெரிய சிரித்து அவனைப் பார்த்தாள். தேவாவிற்கு அவளை என்னென்னவோ செய்ய வேண்டும் என்று மனம் கண்டமேனிக்கு அலை பாய்ந்தது. அந்த சிரிப்பை தன் உதட்டால் களவாடும் எண்ணம் குபுகுபுவென மேலெழுந்தது.
“என்ன... எதுக்கு இப்படி பார்க்குறீங்க?” அதட்டலிட்டவள் கட்டிலிலிருந்து இறங்கி மடித்த துணியை நிலைபேழையில் அடுக்க, தேவா திரும்பி பார்த்தான். கதவு முக்கால்வாசி மூடியிருக்க, ஆதிரைக்கு வெகு அருகே சென்று நின்றான்.
துணியை வைத்துவிட்டு திரும்ப சென்றவளின் முதுகோடு அவன் மூச்சுக் காற்று உரசவும், நாசி உணர்ந்த வாசத்தில் அவளுள் பெரும் அதிர்வு உண்டாகிற்று. படக்கென திரும்பியவள், “என்ன? எதுக்கு இப்படி வந்து நிக்கிறீங்க?” பயப்படாது அதட்டலாய் அவன் மார்பில் கையை வைத்து அவள் பின்னே தள்ள சென்ற நேரம் அனாயசமாக அவளது முயற்சியைத் தடுத்து அவசரமாய் அவளுயரத்திற்கு குணிந்து மிக மிக அவசர முத்தம் ஒன்றை அவள் உதட்டில் பதித்திருந்தான்.
சில நொடிகள் கூட கடந்திருக்காது. அவள் சுதாரித்து உணரும் முன்னே படக்கென்று கதவருகே சென்று நின்றான். ஆதிரை சுதாரிப்பதற்குள் முத்தம் கொடுத்திருந்தான் தேவா. அவள் அதிர்ந்து திகைத்துப் பின்னர் அவனை முறைக்க, “சாரி டீ!” மெல்லிய குரலில் முணுமுணுத்து தலையைக் கோதியபடியே அவன் வெளியேற, ஆதிரை கண்களை மூடி நிலைபேழையில் சாய்ந்தாள். இதயம் அதிவேகமாய் துடித்தது.
இந்த நான்கு நாட்களில் இப்போதுதான் தேவா
தன்னுடைய கணவன் என மனம் உணர்ந்தது. கூசி சிலிர்த்த சருமத்தில் இன்னுமே அவன் உடல் சூடு விரவிக் கிடந்தது. ‘தேவா... யோவ்!’ இவள் கடுப்பாய் சிணுங்கலாய் முணுமுணுத்தாள்.
தொடரும்...