• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,194
Reaction score
3,478
Points
113
நெஞ்சம் – 43 💖

ஆறு மணியானதும் தேவாதான் முதலில் கண் விழித்தான். ஆதிரை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவளை சில நொடிகள் பார்த்துவிட்டு எழுந்து சென்று குளித்து வந்தான்.

அவள் அசையாது உறங்க, “ஆதி, வேக் அப்... டைம் சிக்ஸ் தேர்டியாச்சு!” என மெல்லிய குரலில் கூறினான். ஆதிரைக்கு உறக்கம் கலைந்தது. நீண்ட நேரம் சென்று உறங்கியதால் இன்னும் தூக்கம் கண்களில் மிச்சம் இருந்தது.

“குட் மார்னிங் தேவா சார்!” என சோபையான புன்னகையுடன் கொட்டாவி விட்டவாறே புன்னகைத்தாள். இவன் தலையை அசைத்தான். அமர்ந்த இடத்திலே உடலை அங்குமிங்கும் அசைத்தாள். அவனுடைய உடைதான், அவள் உடலோடு ஒட்டிக் கிடந்தது. இவனுக்குப் பெருமூச்சு எழுந்தது.

“குளிச்சிட்டு வா, வெளிய எல்லாரும் வெயிட் பண்ணுவாங்க!” என்றான் அவன்.

“ஹம்ம்... என்னோட ட்ரெஸ் எதுவும் இங்க இல்ல. பேக் ஜனனி ரூம்ல இருக்கு. இப்படியே வெளிய போக சங்கடமா இருக்கு. ஜனனியை வர சொல்லுங்க!” என்றவாறே கலைந்து கிடந்த கூந்தலை சீராக்கி தூக்கி கொண்டையிட்டாள்‌. அவன் கட்டிய தாலி உடைக்கு வெளியே தொங்கியது‌.

“ஓகே, நான் அவளை வர சொல்றேன்.‌..” தேவா வெளியேறினான்.

‘நைட்டு சொல்லிட்டுத்தான் படுத்தேன், சிரிக்கணும் சிரிக்கணும்னு. எப்படித்தான் எனி டைம் முகத்தை சிடுசிடுன்னு சீரியஸாவே வச்சுக்க முடியுதோ!’ என இவள் நொடித்தாள்.

‘அபி எழுந்திருப்பானா? அவனுக்குப் பசிக்குமே!’ ஆதிரை யோசிக்க, ஜனனி வந்துவிட்டாள். ஆதிரை அவளைப் பார்த்து புன்னகைக்க, “உங்களோட ட்ரெஸ், புதுசா ப்ரஷ், பேஸ்ட், சோப் எல்லாம் இருக்கு. யூஸ் பண்ணிக்கோங்க கா!” என்றாள் அவள்.

“தேங்க்ஸ் ஜனனி... நான் ஆல்ரெடி எல்லாமே புதுசா எடுத்துட்டு வந்தேன். வேணும்னா யூஸ் பண்டிக்கிறேன்!” என்ற ஆதிரை அவளது பையின் பக்கவாட்டிலிருந்து புதிய பற்பசை, வழலைக் கட்டியை எடுத்துக் கட்டில் மேலே போட்டுவிட்டு, தங்க நிற ஜரிகை வைத்தப் புடவையை எடுத்து அதற்கு தோதான மேல்சட்டையை உருவினாள்‌.

“எல்லாம் ப்ரிபேர்டா வந்திருக்கீங்க போல கா?” ஜனனி கேட்க, ஆதிரைக்கு முறுவல் பிறந்தது.

“ஹம்ம்... யெஸ், யெஸ்... இங்க எல்லாம் புதுசா வாங்கி வைப்பீங்களோன்னு டவுட். மேரேஜ் வொர்க்ல எல்லாரும் பிஸியா இருப்பீங்களே, இதெல்லாம் ஞாபகம் வச்சுக்க முடியுமான்னு யோசிச்சுத்தான் வாங்கிட்டு வந்தேன்!” என்றாள்.

“சரிதான் கா, நான் மறந்துட்டேன். இப்போதான் ஹரியை எழுப்பி வாங்கிட்டு வரச் சொன்னேன்!” ஜனனி அசட்டு சிரிப்புடன் பதிலளிக்க,

“ஏன் ஜனனி, அவரே ரொம்ப டயர்ட்ல தூங்கி இருப்பாரு. ஏன் எழுப்பி விட்டீங்க?” இவள் அதட்டலாய்க் கேட்டாள்.

“ப்ம்ச்... அதெல்லாம் ஒருநாள் தூக்கம் கெட்டா பரவாயில்லை கா‌. தேவா மாமாவுக்காக செய்யலாம். எங்க கல்யாணத்துக்கு ஏ டூ இசட் அவர்தான் பார்த்து செஞ்சாரு. இப்போ அவங்க அண்ணனுக்கு ஹரி செய்றான். அவ்வளோதான் கா!” அவள் பளிச்சென்று புன்னகைக்க, ஆதிரை உதட்டோரம் புன்னகை துளிர்த்தது.

“நைட்டு தான் சொல்லிட்டு இருந்தான்... இன்னைக்கு நான் நிம்மதியா தூங்குவேன்னு... தூக்கத்தை கெடுத்து விட்டுட்டேன்!” அவள் கேலியாய் கூற, ஆதிரை யோசனையுடன் பார்த்தாள்.

“அது... தேவா மாமாவுக்கு நல்லபடியா மேரேஜ் முடிஞ்சது. இந்த ஒரு விஷயம்தான் எல்லாருக்கும் கவலையா இருந்துச்சு. இப்போ ஆல் ஆர் ஹேப்பி. ஸ்டில் எனக்கு ஒரு ஷாக் மட்டும் குறையலை. தேவா மாமா எப்படி உங்களை லவ் பண்ணாரு... அது எப்படி ப்ரபோஸ் பண்ணாரு, எக்ஸ்பிரஸ் பண்ணாரு‌. அவரு ரொம்ப ரொம்ப ரிசர்வ்ட், ஸ்ட்ரிக்ட் ஆபிசர். அவர் லவ் ப்ணணாருன்னு இன்னும் நம்ப முடியலை. உங்ககிட்ட ஏதோ வசியம் இருக்கு போல!” அவள் வெகு தீவிரமாக கூற, ஆதிரை சிரித்து விட்டாள்.

“சரிதான்... அது என்னென்னு உங்க மாமா கிட்டயே கேட்டுக்கோங்க!” இவள் கேலியாய் கூறினாள்.

“ஹக்கும்... அவர்கிட்டே ஒரு வார்த்தை வாங்க முடியுமா கா? போங்க... போங்க!” ஜனனி அலுத்துக் கொண்டே அகல, இவள் குளித்துவிட்டு வந்தாள். நேரே அலமாரிக்கு வந்தவள், வளையலை எடுத்து அணிந்து பின்னர், ஒரே ஒரு கழுத்தணியே மட்டும் போட்டுக் கொண்டாள். மீதவற்றை தேவாவின் நிலைபேழையில் வைத்துப் பூட்டினாள்.

அவள் வெளியே செல்ல, சின்னவர்கள் இருவரும் தட்டில் வைத்து எதையோ கொறித்துக் கொண்டிருந்தனர். பிரதன்யா அவர்களுக்கு அருகே அமர்ந்திருந்தாள்.

“அண்ணி, வாங்க.‌‌..” அவள் அழைக்க, “வாம்மா... சூடா வடை சாப்பிடு!” என ஜனனியின் அம்மா கூறிக் கொண்டே ஒரு தட்டு நிறைய சுடசுட வடையை மேஜை மீது வைத்து விட்டுப் போனார். தேவா வீட்டில் இல்லை, வெளியே எங்கேயோ சென்றிருந்தான்.

“அண்ணி, காபியா? டீயா? வடையை சாப்பிட்டுட்டு இருங்க. நான் போய் வாங்கிட்டு வரேன்!” என சின்னவள் எழ, “இல்ல, பரவாயில்லை பிரதன்யா. எதுவும் வேணாம்!” இவள் தயங்கினாள்.

“ப்ம்ச்... புது பொண்ணுன்னு ரெண்டு நாள் உபசரிப்போம் அண்ணி. என்ஜாய் பண்ணிக்கோங்க. அடுத்த வாரம் எல்லாம் யாரும் உங்களை கண்டுக்க கூட மாட்டாங்க!” அவள் கேலி செய்துவிட்டு செல்ல, இவள் மென்மையாய் முறைத்தாள்.

“ம்மா... நான் அத்தையோட குட் பாயா தூங்கி எழுந்துட்டேன் மா. நான் பிக் பாய் தானே?” என அபி அவளை ஒட்டி அமர்ந்தான்.

“என் பையன் பிக் பாய், சமத்து பாய்!” என்றாள் அவன் கன்னம் கிள்ளி முத்தமிட்டு.

அவனுக்கு அருகே அமர்ந்திருந்த ராகினி, “வடை சாப்பிடுங்க பெரிம்மா...” என இவளிடம் ஒரு வடையைக் கொடுக்க, ஆதிரைக்கு முகம் மலர்ந்தது.

“தேங்க்ஸ் டா குட்டி!” என அவள் கன்னத்தில் முத்தமிட்டவள், அந்த வடையை பிய்த்து வாயில் போட்டாள். அப்போதுதான் பசி தெரிந்தது. முதலில் கரங்கள் தயங்கின, பின்னர் எப்படியும் இங்கு தானே வாழப் போகிறோம் என தயக்கத்தை உதறி மேலும் ஒரு வடையை எடுத்து உண்ணத் தொடங்கினாள்.

“ஏன் டி... இப்போதானே ஒரு டீ குடிச்சு? மறுபடியும் டீயா? அடுபடிக்குள்ள வந்து வேலை செய்ய விடாம கை காலுக்குள்ள ஓடீட்டு கிடக்க!” பொன்வாணி மகளைத் திட்டினார். இன்றைக்கு கறி விருந்து சமைக்க வேண்டும். அவரது இரண்டு அண்ணன் குடும்பமும் கோபாலின் சகோதரி குடும்பமும் இங்குதான் தங்கி இருந்தனர். ஜனனியால் இந்த சூழ்நிலையில் எதையும் ஒற்றை ஆளாய் செய்ய முடியாது.
அதனாலே நாத்தனார்களுடன் இவரும் சேர்ந்து சமைத்துக் கொண்டிருந்தார்.

“ப்ம்ச்... ம்மா, எனக்கு இல்ல டீ. அண்ணிக்கு!” அவள் கூற, “ஏன் மகாராணி எழுந்து வர மாட்டாங்களோ? நீ ஏன்டி அவளுக்கு சேவகம் பண்ற?” என சிடுசிடுத்தார்.

“ஏன்மா... அண்ணிக்கு நம்ப வீடு புதுசு. அவங்க எழுந்து வந்ததும் பார்த்துக்க சொல்லி அண்ணன் சொல்லீட்டு போச்சு!” இவள் முணுமுணுத்தவாறே தேநீருடன் கூடத்திற்குச் சென்றாள்.

“காலைல எழுந்து சாமி கும்பிடாம இவன் எங்கப் போனான். ஏன் பொண்டாட்டிகாரிக்கு தெரியாதா? குளிச்சிட்டு விளக்கேத்துனாதானே புகுந்த வீடு விளங்கும்?” என கோபத்தோடு அவர் வெளியே வர, ஆதிரை சிறுவர்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டே வடையை சாப்பிட்டாள். அதில் இவருக்கு கோபம் பெருகிற்று.

“ஏன்டி பிரதன்யா... அறிவில்ல உனக்கு? காலைல எழுந்திரிச்சதும் குளிச்சிட்டு சாமி கும்பிடணும்னு கூட தெரியாதா உனக்கு?” அவர் குரலை உயர்த்தவும், அத்தனை பேரும் திரும்பி பார்த்தனர். ஆதிரையின் கரம் அப்படியே நின்று போக, ஒரு நொடி அதிர்ந்தாள்.

“ம்மா... நான் இன்னும் குளிக்கவே இல்ல? இப்போ விளக்கை ஏத்தணும்னு என்ன அவசியம்?” அவள் புரியாது கேட்டாள்.

“நெத்தில குங்குமம் கூட வைக்க மாட்டீயா? ஒன்னு ஒன்னையும் நான் சொல்லணுமா? அப்பன் ஆத்தா இருந்து வளர்த்திருந்தா சொல்லிக் குடுத்திருப்பாங்க. அநாதையா வளர்ந்தவகிட்டே இதெல்லாம் எதிர்பார்க்க முடியுமா?” அவர் கடைசி வார்த்தையை முணுமுணுக்க, பிரதன்யா அதிர்ந்தாள்.

“ம்மா... என்ன நீ?” அவள் கோபமாய் கேட்க, “ஏய் வாணி, என்ன பேச்சு இது? வீட்டுக்கு வந்தப் புள்ளைகிட்டே இப்படித்தான் பேசுவீயா?” என மூத்தவர் ஒருவர் அதட்ட, அவர் பேசும் போதே ஆதிரை இருக்கையிலிருந்து எழுந்து விட்டாள். அத்தனை பேரின் பார்வையும் தன்னிடம்தான் உள்ளது என்பதால் முகத்தில் எதையும் காண்பிக்கவில்லை. பொன்வாணியை அழுத்தமாய்ப் பார்த்தாள். உங்கள் பேச்சு என்னை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்பது போல அலட்சியமாய் அவரைப் பார்த்து விட்டு பூஜை அறைக்குள் நுழைந்தாள். பொன்வாணி முகத்தில் சிடுசிடுப்பை தேக்கி, மீண்டும் வேலையைத் தொடர சென்றார்.

“ம்மா...நீ பண்றது எல்லாம் சரியில்ல. அண்ணிகிட்டே ஏன் மா அப்படி பேசுன?” பிரதன்யா ஆதங்கத்துடன் கேட்டாள்.

“போய் வேலையைப் பாரு பிரது, காலைலயே என்கிட்ட வாங்கி கட்டிக்காத!” அவர் பொரிய, “என்னாச்சு பிரது?” என ஜனனி அவளைத் தனியே அழைத்துச் சென்று விசாரிக்க, இவள் நடந்ததை ஒப்புவித்தாள்.

ஜனனிக்கு வாணியின் மீது ஏக வருத்தம். இப்படி நான்கு பேர் இருக்கும் இடத்தில் முகத்தில் அடித்தது போல பேசினால் ஆதிரை வருந்தக் கூடுமே என கவலையாய் இருந்தது.

ஆதிரை பூஜை அறைக்குள் நுழைந்தாள். விளக்கில் எண்ணெய் இல்லை. அதில் எண்ணெயை ஊற்றி புதிய திரியைப் போட்டு தூண்டிவிட்டு தீப்பெட்டியை பற்ற வைக்கச் செல்லும் போது கை நடுங்கியது. மூச்சை இழுத்துவிட்டாள். அத்தனை பேரின் முன்பும் வாணி பேசியதில் மனம் அதிர்ந்து போனது‌. அவரைக் கோபப்படுத்ததான் அலட்சியமாய் கடந்தாள்.

வாய் வரை வார்த்தைகள் வந்தப் போதும் தேவாவிற்காக பொறுத்துக் கொண்டாள். ஒன்றிற்கு இரண்டாக திருப்பிக் கொடுக்க கோப மனம் பரபரத்தது. அதை வெளியே காண்பிக்காமல் வந்ததும் மெலிதாய் விழிகள் கலங்கப் பார்த்தன. அதை சிமிட்டி விரட்டியவள் விளக்கை ஏற்றி கையைக் கூப்பினாள். எதுவுமே வேண்ட தோன்றவில்லை. மனம் வெறுமையாய் உணர்ந்தது.

பொன்வாணியின் பேச்சு மீண்டும் மீண்டும் முகத்தில் வந்து அறைந்தது. உதட்டைக் கடித்து முயன்று தன்னை சமன் செய்து கண்ணைத் திறக்க, தேவா அவளுக்கு எதிரே வந்து நின்று கண்ணை நிறைத்தான்.

அவள் அவனைப் பார்க்கவும், “சித்தப்பா கூட வெளிய போய்ட்டேன்...” என்றவாறே குங்குமத்தை எடுத்து அவளது நெற்றியில் வைத்தான். அவன் முகத்தையே சில நொடிகள் பார்த்தவள் வெளியேறினாள்.

அபியின் அருகே சென்று அமர்ந்த ஆதிரையின் முகத்தில் இயல்பு தொலைந்திருந்தது. கடமைக்கென அமர்ந்து மகன் கேட்கும் கேள்விக்குப் பதிலளித்தாள். பிரதன்யா தமையன் அருகே இருக்கவும், ஆதிரையிடம் எதுவும் பேச முடியாது அவளின் அருகே அமர்ந்து கையைப் பிடித்தாள்.

“ஐ யம் ஓகே பிரது!” அவள் முயன்று முறுவலிக்க, “அம்மாகாக நான் சாரி கேட்டுக்குறேன்...” சின்னவள்
கிசுகிசுத்தாள். ஆதிரை தலையை அசைத்தாள். ஆனாலும் அவள் முகம் முன்பு போல இயல்பாகவில்லை.

தேவா உறவுக்கார பெரியவர்களிடம் அமர்ந்து அவர்கள் கேட்பதற்கு பதிலுரைத்துக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் பொண்ணும் மாப்பிள்ளையும் ஒன்றாய் அமர வைக்கப்பட, ஆதிரை மகனை அருகில் இருத்திக் கொண்டாள். அவனுக்கு உணவை ஊட்டிவிட்டு, பெயரளவில் உண்டாள். என்னவோ உணவு தொண்டைக் குழியில் இறங்கவில்லை. வாணி பேசியதில் மனம் காயம்பட்டிருக்க, அவர் சமைத்த உணவை உண்ண ஒப்பவில்லை. தேவாவிற்காக என மனதில் ஜெபம் செய்து கால் வயிற்றை மட்டும் நிரப்பினாள்.

மதிய உணவும் தடபுடலாக தயாரானது. “ஜனனி, நான் எதுவும் ஹெல்ப் பண்ணவா?” என இவள் சென்று நிற்க, “வேணாம்மா...புது பொண்ணு... போ போய் உன் புருஷனோட பேசிட்டு இரு. இல்லைன்னா டீவில எதாவது பாரு!” என ஒரு பெண்மணி கூற, இவள் அறைக்குள் வந்தாள்.

அபியையும் உடன் அழைத்துவந்து விட்டாள். ராகினியும் வர, குழந்தைகளுடன் சிறிது நேரம் பேசினாள். அலைபேசியை நேற்றிலிருந்து எடுக்காதது நினைவு வர, எடுத்து இணையத்தை இணைத்ததும் நிறைய வாழ்த்துச் செய்திகள் வந்து விழுந்தன.

ஒவ்வொன்றாய் திறந்து பதிலளித்தவள் அப்புவின் எண்ணிலிருந்து வந்த செய்தியை திறக்க, அவளுக்குத் திடுக்கிட்டுப் போனது.

“ஹேப்பி மேரீட் லைஃப் ஆதி, தேவா உனக்கு ரொம்ப மேட்சிங்கான பெர்சன். அபியை நல்லா பார்த்துக்கோ. சாரி ஃபார் எவ்ரிதிங்க்!” என அவன் அனுப்பி இருக்க, இவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. எப்போது அவனுக்கு உண்மை தெரிந்தது. தான் கூறவில்லை. தேவா, நிச்சயம் கூறியிருக்க மாட்டான் என அவள் யோசிக்க, மீண்டும் ஒரு செய்தி அவனிடம் வந்து விழுந்தது.

“உங்க வீட்டுக்கு வந்த அன்னைக்கே எனக்கு உண்மை தெரியும் ஆதி. ஐ பெல்ட் வெரி பேட். நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் இல்ல?” அவன் கேட்க, “ப்ம்ச்... அப்பு!” என இவள் அவனை அதட்டும் தொனியில் செய்தியை அனுப்பினாள்.

“எத்தனை சாரி கேட்டாலும் என் மேல தப்பு இருக்கு ஆதி...” என்றவன் சில நொடிகள் இடைவெளிவிட்டு, “வொர்க் இருக்கு, நீ ப்ரியாகு. ஒரு நாள் கால் பேசலாம்!” என்று அவன் சென்றுவிட, இவள் அலைபேசியை அணைத்து தூரப் போட்டுவிட்டு முகத்தை கைகளில் தாங்கி மூச்சை ஆழ்ந்து சுவாசித்து வெளி விட்டாள்.

அப்புவிற்கு உண்மை தெரிந்து விட்டதா? என மனம் அதிர்ந்தாலும் இந்த நொடி மனம் முழுவதும் பரவும் ஆசுவாசம் அவளது இத்தனை நாள் குற்றவுணர்வை மெல்ல விடுவித்தது. அப்பு திருமணத்தில் செய்து வேறு பெண்ணுடன் வாழும் போது அவனைத் தொந்தரவு செய்ய விருப்பமில்லாதுதான் அபியை பற்றி அவனிடம் ஒரு வார்த்தைக் கூட இவள் கூறவில்லை. ஆனாலும் மனதினோரம் மெல்லிய குற்றவுணர்வு ஒன்று அவளை வதைத்தது என்னவோ உண்மை.

அப்புவிற்கு அபியைப் பற்றித் தெரிந்தால் அவன் சொந்தம் கொண்டாடுவான், பிரித்து விடுவான் என்றெல்லாம் இவள் யோசிக்கவில்லை. ஏனென்றால் அவன் அப்படியெல்லாம் செய்யும் ரகமில்லை. ஒருநாளும் இவளைக் காயப்படுத்த மாட்டான் அவன். இவளுக்குத்தான் அவனிடம் பொய் கூறியிருக்கறோம் என்ற எண்ணம் அரித்தது. அதுவும் இல்லாது அப்புவிற்கு தந்தை என்ற ஸ்தானத்தை முற்றிலுமாக இவளே நிரப்பும் போது மகனுக்கு நியாயம் செய்யவில்லை எனத் தோன்றும். இரண்டிற்கும் இப்போது முடிவு வந்திருந்தது.
ஒரு மாதிரி நிம்மதியாய் உணர்ந்தாள்‌. பொன்வாணியின் பேச்சு பின்னகர்ந்திருந்தது.

அப்புவிற்கு எப்படி உண்மை தெரியும் என மனம் அதிலே உழல, மதியமும் அதே யோசனையுடன் சரியாய் உண்ணவில்லை. மாலை உறவினர்கள் அவரவர் இருப்பிடம் செல்ல தயாராக, தேவாவும் ஹரியும் பேருந்து நிலையம் வரைச் சென்று அவர்களை வழியனுப்பி வைத்தனர்.

இரவு உணவை முடித்துக் கொண்டு ஆதிரை மகனை தன்னுடனே உறங்க வைக்க அழைத்துச் சென்றாள். யார் என்ன நினைத்தால் எனக்கென்ன என எதைப் பற்றியும் அவள் அலட்டிக் கொள்ளவில்லை. தேவா தாமதமாய் வந்தான். ஆதிரை உறங்காது அலைபேசியைக் கையில் வைத்திருந்தாள்.

“ஏன் தூங்கலை நீ? காலைல இருந்து என்ன யோசனை? சரியாவே சாப்பிடலை?” அவன் கேட்டதும் இவளிடம் நோடி நேர திகைப்பு.

“ஹம்ம்... அது, ஒன்னும் இல்ல!” எனத் தலையை அசைத்தாள். அவன் முறைத்துவிட்டு வந்து படுத்தான்.

மறுநாள் தேவா உழவர் துணைக்கு கிளம்பினான். ஆதிரை அபியைப் பள்ளிக்கு கிளப்பிக் கொண்டிருந்தாள்.
“மண்டேல இருந்து வேலைக்கு வந்துடு ஆதிரை!” என்றான் அவன்.

“இல்ல, இன்னும் ரெண்டு நாளாகட்டும்!” அவள் பதிலளிக்க, இவன் நெற்றியை சுருக்கினான்.

“ஏன்... ரெண்டு நாள் என்ன பண்ணப் போற?” அவன் கேட்க, கீழ்கண்ணால் அவனை முறைத்தாள்.

“நான் என்ன பண்ணா உங்களுக்கு என்ன? ரெண்டு நாள் லீவ் ரெய்ஸ் பண்ணி இருக்கேன். அப்ரூவ் பண்ணி விடுங்க!” என்றாள் அதட்டலாய்.

அவளை முறைத்தவன், “ரீசன் தெரியாம லீவ் தர முடியாது!” முதலாளியாய் மறுத்தான் தேவா.

“ஓஹோ... எனக்கு இப்போதானே மேரேஜ் ஆகியிருக்கு. ஒரு நாலு நாள் லீவ் தாங்க!” பதிலுக்கு இவள் சிடுசிடுத்தாள்.

“வீட்ல இருந்தா உனக்குத்தான் டீ போரடிக்கும்!” அவன் நெற்றியை சுருக்கினான்.

“யார் சொன்னா போரடிக்கும்னு. நான் ரெண்டு நாள் நல்லா தூங்கி ரெஸ்ட் எடுப்பேன். சும்மா இருப்பேன், புக்ஸ் ரீட் பண்ணுவேன். ஜனனி, ராகினி, அபியோட டைம் ஸ்பெண்ட் பண்ணுவேன். நான் இல்லைன்னா உங்க பண்ணையே ரன் ஆகாத மாதிரி பேசாதீங்க!” இவள் உதட்டை வளைத்தாள்.

அவளுக்கு ஒரு சில வேலைகள் இருந்தன. இப்போதே அலுவலகம் செல்ல வேண்டுமா என்ற சோம்பேறித்தனம் வேறு.‌ ஆற அமர பொறுமையாய் தன்னுடைய பொருட்களை எடுத்து வந்து இங்கே அடுக்க வேண்டும். இவனிடம் வேலைக்குச் சேர்ந்த நாளில் இருந்து இரண்டு நாட்களுக்கு மேல் விடுப்பு எடுக்க விடவில்லை. இதுதான் சமயம் என்று நான்கு நாட்கள் சேர்த்து விடுமுறை எடுத்தாள்.

“சொன்னாலும் சொல்லலைனாலும் அதான் டீ உண்மை. லேப்ல ஒரு வேலையும் ஓடாது!” அவன் கடுகடுத்துவிட்டுப் போனான்.

“ஆஃபிஸ்ல தான் நீங்க பாஸ், இங்க நான்தான் உங்களுக்கு பாஸ்!” என அவனை அதட்டினாள் ஆதி. அவன் முறைத்து விட்டு அபியை அழைத்துக்கொண்டு பள்ளியில் விட்டுவிட்டு உழவர் துணை நோக்கிச் சென்றான்.

ஆதிரை எழுந்ததும் அபியை பல் துலக்க பணித்துவிட்டு சமையலறைக்குள் சென்றாள். ஜனனி எழுந்து தேநீர் தயாரித்துக் கொண்டிருக்க, அவளிடம் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு மகனுக்கு பாலைக் காய்ச்சி கொடுத்துவிட்டு தேவாவிற்கும் தனக்கும் தேநீர் எடுத்துச் சென்றாள்.

பொன்வாணி சமையலறையில் இருந்தார். அவரை இவள் கண்டு கொள்ளவில்லை. காலையில் என்ன சமையல் என ஜனனியிடம் கேட்டாள். அவள் சப்பாத்தி எனவும், இவள் அதற்கு தொட்டுக் கொள்ள காய்கறி குருமா வைத்தாள். மதியத்திற்கு எலும்பிச்சை சாதம் செய்தவள், உருளைக் கிழங்கை பொறித்து முட்டையை அவித்து மூன்று டப்புவில் அடைத்தாள். கணவன், மகன், ராகினிக்கு என்று மதிய உணவை அவர்களுக்கு எடுத்து வைத்தாள். இரண்டு பேருக்கு மட்டுமே சமைத்துப் பழகியவளுக்கு இத்தனை பேருக்கு சமைக்க அளவு தெரியவில்லை. யாருக்கும் உணவு பற்றாமல் போய்விடக் கூடாது என கொஞ்சம் அதிகமாகவே சமைத்தாள். உப்பு, காரம் என அனைத்தும் அளவு மாறின. கொஞ்சம் தடுமாறினாலும் சமாளித்தாள்.

“அண்ணி, எனக்கு டிபன்!” பிரதன்யா வந்து நிற்க, அவளுக்கும் ஒரு டப்பாவில் அடைத்துக் கொடுத்தாள்.

“அக்கா, நீங்க ஏன் தனியாளா செய்றீங்க? நான் ஹெல்ப் பண்ண மாட்டேனா?” என ஜனனி கடிந்தாள்.

“ப்ம்ச்... ஜனனி, நீங்க போய் ரெஸ்ட் எடுங்க. எனக்கு என்ன வேலை இருக்கு. சும்மா இருக்கேன், சோ இதெல்லாம் பண்றேன். உங்களுக்கு இந்த மாதிரி டைம்ல ரெஸ்ட் அவசியம்!” என இவள் அதட்டினாள். பொன்வாணிக்கு ஆதிரை சமையலறையில் தன் இடத்தைப் பிடித்துக் கொண்டதாய் ஓர் எண்ணம். அவர் முகம் கோபத்தில் சிவந்தது.

மகள் மருமகளில் இருந்து பேத்தி வரை அவளுடன் சேர்ந்து கொண்டு தன்னை தனியே விட்டு விட்டதாய் நினைப்பு வந்தது அவருக்கு. தான் சமையல் செய்து அவளும் அவள் மகனும் உட்கார்ந்து உண்பதா என்ற எண்ணத்தில் தான் பொன்வாணி காலையில் எதுவும் சமைக்கவில்லை. ஆனால் இப்போது அவள் சமைக்கவும், முப்பத்து நான்கு வருடங்கள் அவர் நிர்வகித்த சமையல் கூடம் கைவிட்டுப் போனதை போல மனம் உணர்ந்தது. அவளையே முறைத்துப் பார்த்தார்.

ஆதிரை அவர் எண்ணியது போல எதுவும் நினைக்கவில்லை. பொன்வாணி கோபத்தில் இருப்பதால் தங்களுக்கும் சேர்த்து அவர் சமைப்பாரா இல்லையா என இவளுக்கு சந்தேகமாய் இருந்தது. ஒருவேளை அவர் சமைத்ததை எடுத்து மகனுக்கு மதிய உணவிற்கு டப்பாவில் வைத்தால் அதற்கும் அவர் எதாவது சொல்வாரோ என்று எண்ணித்தான் மொத்தமாய் அனைவருக்கும் சேர்த்து சமைத்துவிட்டாள்.

தேவாவும் அபியும் கிளம்பியதும் ஆதிரையும் ஒரு சுரிதாரை எடுத்துப் போட்டுக்கொண்டு வெளியே கிளம்பினாள். கழுத்தில் தாலியோடு மெல்லிய சங்கிலி ஒன்றை மட்டும் நிரந்தரமாகப் போட்டுக் கொண்டவள், வளையல் அனைத்தையும் அவிழ்த்துவிட்டு ஒரு கையில் கைக்கடிகாரத்தை அணிந்து கொண்டாள்.

நகைகளை எல்லாம் எடுத்து அட்டைப் பெட்டியில் வைத்தவள், அதைக் கைப்பையில் எடுத்துக் கொண்டாள்.

பொன்வாணி அவளையே பார்த்திருந்தவர், “ஏய்... நில்லு!” என்றார் அதிகாரமாக.‌ ஆதிரைக்கு அவரது அழைப்பு எரிச்சலை உண்டு பண்ணியது.

நின்று அவரைப் பார்த்தவள், “என் பேர் ஆதிரையாழ்!” என்றாள் அழுத்தமாக.

“அது எனக்குத் தேவையில்ல. கல்யாணமாகி மூனு நாள் தானே ஆகுது? கைல ஒன்னுமில்லாம இருக்க? பொன் வளையல் அதுவா உடைஞ்சாதான் தூக்கிப் போடணும். உன் இஷ்டத்துக்கு நீ கழட்டி வைப்பீயா? ஏன் முதல் கல்யாணம் பண்ணும் போது உன் மாமியார் சொல்லித் தரலையா? கூறு கெட்ட மாமியாரா என்ன?” எனக் கேலியாய்க் கேட்டார்.

அவரை நிதானமாய் பார்த்த ஆதிரை, “நீங்க சொல்றது சரிதான். அவங்களும் உங்களை மாதிரித்தான்!” என எள்ளலாய்க் கூறி அகல, அவள் பேச்சின் சாராம்சம் புரிந்த வாணி மேலும் கடுப்பானார்.

“அத்தை, சொல்றேன்னு கோச்சுக்காதீங்க. உங்களுக்கு ஆதிரை அக்காவைப் பிடிக்கலைதான். அதுக்காக எப்பவுமே கொட்டீட்டே இருக்கணுமா? அவங்க தேவா மாமாவோட வெய்ஃப். அதையும் ஞாபகம் வச்சுக்கோங்க!” என ஜனனி அகல, கோபாலும் மனைவியை அதட்டியிருந்தார்.

“ஏன் வாணி இப்படி பண்ற? வயசுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோ‌. இதெல்லாம் உன் மகனுக்கு தெரிஞ்சா உன் மேல இருக்க மரியாதை தான் குறையும்‌. இனிமே அந்தப் புள்ளைகிட்டே இப்படிலாம் பேசாத!” எனக் காய்ந்தார். பொன்வா
ணிக்கு இன்னுமே ஆதிரையின் மீது காழ்ப்புணர்ச்சி தோன்றியது. வந்த மூன்று நாட்களிலே மொத்த குடும்பத்தையும் அவள் வசியம் செய்து விட்டதாக எண்ணிக் குமைந்தார்.



தொடரும்...
 
Well-known member
Messages
510
Reaction score
383
Points
63
என்னிக்கு தேவா கிட்ட வாங்கி கட்டப் போகுதோ
 
New member
Messages
7
Reaction score
5
Points
3
அருமை 👌👌👌👌👌, அப்புவுக்கு உண்மை எப்படி தெரிந்தது 🤔🤔🤔🤔🌺🌺🌺🌺
 
Well-known member
Messages
993
Reaction score
735
Points
93
Irunthalum inthamma over ah thaan pesuraanga, paavam aadhirai

Deva ku therinja thaan irukku

Appu ku epdi unmai therinjirukkum 🤔🤔🤔🤔🤔🤔🤔
 
Top