- Messages
- 1,194
- Reaction score
- 3,478
- Points
- 113
நெஞ்சம் - 42 
மணமக்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றதும் முறையாக பால் பழம் கொடுக்கப்பட்டது. ஆதிரை பூஜை அறையில் விளக்கேற்றி கடவுளை வணங்கினாள்.
எவ்வித சண்டை சச்சரவுகளும் அற்று வாழ்க்கை நன்றாய் செல்ல வேண்டும். தான் எல்லா விதத்திலும் இந்தக் குடும்பத்தில் பொருந்திப் போக வேண்டும் என்று மனதார வேண்டினாள். இந்த வேண்டுதல் இருவருக்காக மட்டும்தான்.
ஒன்று அபி, அவனை ஒரு குடும்ப அமைப்பில் வளரவில்லையே என்ற ஏக்கம் தீரத்தான் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாள்.
மற்றொன்று முழுக்க முழுக்க தேவாவிற்காகத்தான். இவள் அப்படியொன்றும் எவ்விதத்திலும் சிறந்தவள் இல்லை. ஆனாலும் என்னவோ அவனுக்கு தன் மேல் பிரியம் ஏற்ப்பட்டிருக்க, ஒருகட்டத்திற்கு மேல் அவளால் அவனை மறுக்க முடியவில்லை. தன் அன்பு வைத்த இருவருக்காக கொஞ்சம் வளைந்து கொடுத்து செல்ல வேண்டும், சுயகௌரவத்தை சில காலம் ஒதுக்கி வைக்கலாம் என ஏகமனதாய் முடிவெடுத்தாள்.
வீடு முழுவதும் உறவினர்கள் சலசலத்தனர். ஆதிரைக்கு அனைத்துமே புதிது. தனியாளாய் வளர்ந்தவளுக்கு, இது சுவாரஸ்யத்தைக் கொடுத்தது. தேவாவின் அருகில் அமர்ந்தபடியே அனைவரையும் வேடிக்கைப் பார்த்தாள். அங்காங்கே சிறு சிறு சலசலப்பு வேறு.
வயதில் மூத்தவர்கள் இது போல முறை செய்ய வேண்டும், அது போல செய்ய வேண்டும் என்று கூற, இந்த காலத்துப் பெண்கள் அதை ஏற்கவில்லை. அவர்கள் இஷ்டத்திற்கு செய்தனர் போல. ஒரு மாமியார் மருமகளை அதட்ட, இவள் புருவத்தை சுருக்கிப் பார்த்தாள். அந்தப் பெண்ணும் மாமியார் பேச்சிற்கு மறு வார்த்தை கூறாது அவர் இட்ட கட்டளைக்கு அடிபணிந்து போக, ஆதிரைக்குத் தன்னை அந்த இடத்தில் நினைத்ததும் சிரிப்பு வந்தது.
கண்டிப்பாக ஆதிரையால் இதைப் போல எல்லாம் பணிந்து போக முடியாதே. தேவாவைப் போலத்தான் அவள். வேலையிடத்தில் வேறு வழியின்றி அவனுக்குப் பணிந்து செல்கிறாள். மற்றபடி யாரிடமும் வளைந்து கொடுக்காதவள். பொன்வாணி வேறு இவள் வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்து முகத்தை திருப்புவதும், முறைப்பதுமாய் இருக்க, ஆதிரைக்குப் பெருமூச்சு எழுந்தது. அவருடைய கோபம் நியாயம்தான். அதற்கு இவள் எந்த வகையிலும் பொறுப்பாக முடியாது.
பொன்வாணியை தேவா பார்த்துக் கொள்ளட்டும். இவளுக்கு அவரை சமாளிக்க முடியும் என்று தோன்றவில்லை. ஏனென்றால் இவளிடம் பேசக் கூட அவள் விரும்பவில்லை. ஆனால் காலம் முழுக்க இருவரும் ஒரு வீட்டில்தானே வசிக்கப் போகிறோம். அப்போது என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம் என யோசித்தவள், “ம்மா... புது பொண்ணு, வா, வந்து குளிச்சிட்டு வேற புடவையைக் கட்டிக்கோ!” என்று ஒரு பெண்மணி அழைத்தார். இவள் அபியைத் தேடினாள்.
ராகினி மற்றும் இரண்டு சிறுமிகளுடன் ஜனனியின் அறையில் அமர்ந்திருந்தான். இவள் பார்க்கவும், “நான் பார்த்துக்கிறேன் கா!” என்றாள் ஜனனி.
ஆதிரை சரியென சின்ன புன்னகையுடன் அறைக்குள் நுழைந்தாள். பிரதன்யாவின் புகைப்படம் அறையை நிறைத்திருந்தது. அறை அப்படியொன்றும் சுத்தமாய் இல்லை. இயன்றவரை அவள் சுத்தப்படுத்த முயற்சி செய்திருப்பதை ஆங்காங்கே பரவிக் கடந்த புத்தகங்கள், காகிதங்கள், துப்பட்டாக்கள் பறை சாற்றின.
“இரும்மா, நான் ஹெல்ப் பண்றேன். முந்தியைக் கழட்டு நீ!” என அப்பெண்மணி இவளது உடையில் கை வைக்க, “ஐயோ, பரவாயில்லை கா. நானே கழட்டிக்கிறேன்!” என்றாள் கூச்சத்துடன். சுற்றி நான்கைந்து மத்திம வயது பெண்கள் நின்றிருந்தனர். அவர்கள் எல்லாம் வெளியில் சென்றால் நன்றாக இருக்குமென தோன்றியது.
“அட, எல்லாரும் பொம்பளைங்க தானேம்மா!” என ஒருவர் கூற, இவள் சங்கடத்தோடு நின்றிருந்தாள்.
“சரிம்மா... உனக்கு சேலை கட்டத் தெரியுமா? அப்படின்னா குளிச்சிட்டு சேலையைக் கட்டிட்டு எங்களைக் கூப்பிடு!” என அவர்கள் அகல, இவள் அறையை நன்றாய் தாழிட்டு குளித்துவிட்டு வந்தாள். ஊதா நிறப்புடவையில் ஆங்காங்கே மெல்லிய அரக்கு வண்ணப் பூ பூத்திருக்க, இதுவும் தேவாதான் தேர்வு செய்திருப்பான் என்ற எண்ணத்தோடு அணிந்தாள். மீண்டும் ஒருமுறை சாமியை தரிசிக்க செய்தார்கள். இரவு உணவு மாப்பிள்ளையும் பொண்ணும் அமர்ந்து உண்ண, இவள் மகனை அருகே அமர்த்தி ஊட்டிவிட்டாள். அதைப் பார்த்த ஒருசிலர் ஏதோ கிசுகிசுத்தனர். ஆதிரை பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை.
அறைக்குள் அமர வைத்து ஆதிரைக்கு அலங்காரத்தை தொடங்கினர். ஜனனியும் சின்னவர்களும் அங்குதான் இருந்தனர்.
“அண்ணி, ஐ லைனர் போட்டு விட்றேன்!” என பிரதன்யா மையைக் கையில் எடுக்க, “இல்ல, எனக்கு கண்ல அலர்ஜியாகிடும்மா, வேணாம்!” என இவள் மறுத்துவிட்டாள்.
“ஓ... அப்படியா அண்ணி? அப்போ வேணாம்!” பிரதன்யாவின் முகத்தில் மெல்லிய வாட்டம் வந்தது.
“ஹம்ம்... ஐ டெக்ஸ் மை இருந்தா கண்ணுக்கு கீழ போட்டு விடு பிரதன்யா...” ஆதிரை அவள் முகத்தைப் பார்த்து உரைத்தாள்.
“இல்லண்ணி, அலர்ஜியாகும்னு தெரிஞ்சும் போட வேணாம். நான் உங்களுக்கு லிப் க்ளாஸ் போட்டு விட்றேன்!” என ஒரு பெட்டியைத் திறந்தாள். அ முதல் ஃ வரையிலான அழகு சாதனப் பொருட்கள் அதில் இருந்தனர். அதில் ஆதிரை மலைத்துப் போனாள்.
அவள் பார்வையை உணர்ந்த பிரதன்யா, “சும்மா என்னைக்காவது போடுவேன் அண்ணி. என்னோட பாக்கெட் மணியை சேர்த்து வச்சு வாங்குனேன்!” என பதிலளித்தவாறே உதட்டுச் சாயம் பூசினாள்.
ஜனனியின் தாய் கையில் பூவோடு வந்தார். “ஜானு, ஏன் டி சரியா சாப்பிடவே இல்ல, பால் காய்ச்சி தரேன். குடிச்சிட்டு படு, இல்லைன்னா நைட்டுப் பசிக்கும்!” என மகளை முறைத்தவர், ஆதிரையின் தலையில் பூவை வைத்தார். முதலில் ஏனோ தானோவென திருமணத்திற்கு வந்திருந்தாலும், ஆதிரையைப் பார்த்த பிறகு அவரது பேச்சு கொஞ்சம் குறைந்திருந்தது. பார்க்க நன்றாக இருக்கிறாள், அதுவும் இல்லாது அவள் அணிந்திருந்த நகைகள் வேறு ஓரளவிற்கு அவரது வாயை அடைத்திருந்தது.
“ஏம்மா... நல்லா லட்சணமா இருக்க? முதல் புருஷன் ஏன்மா உன்னை விட்டுட்டுப் போனான்?” திடீரென்று அவர் கேட்கவும், ஆதிரையின் முகம் மாறிப் போனது. ஜனனி குழந்தைகளிடம் கவனத்தை வைத்திருந்தவள், தாயின் பேச்சில் பதறிப் போனாள்.
“ம்மா... என்னம்மா நீ? எப்போ வந்து என்ன கேட்கணும்னு உனக்கு விவஸ்தையே இல்ல. போ, போ எனக்கு பாலைக் காய்ச்சு!” அவள் தாயைக் கண்டனத்துடன் வெளியே அனுப்ப முயன்றாள்.
“ஏன்டி... நான் என்ன இல்லாததையா கேட்டுட்டேன். இப்போ எதுக்கு என்னை முறைக்கிற நீ?” அவர் மகளை அதட்டிவிட்டு அகன்றார். ஜனனி ஆதிரை அருகே எழுந்து வந்தாள்.
“நீங்க எதுவும் நினைச்சுக்காதீங்க அக்கா, அவங்க அப்படித்தான். எதை எங்க பேசணும்னு தெரியாது!” என்றாள் தவிப்பான குரலில். இத்தனை நேரம் மலர்ந்திருந்த ஆதிரையின் முகம் அவர் பேசியதும் வாடிவிட்டது.
“பரவாயில்லை ஜனனி, விடுங்க. நான் எதுவும் நினைக்கலை. நீங்க உட்காருங்க!” என்றாள் அருகிலிருந்த நாற்காலியை இழுத்து. ஜனனி எதுவும் பேசாது அமர, அங்கே அசாத்திய அமைதி படர்ந்தது. இன்னும் சற்று நேரத்தில் தன்னைத் தேவாவின் அறைக்கு அழைத்துச் சென்று விடுவார்கள் என்றுணர்ந்த ஆதிரை அபியைப் பார்த்தாள்.
“தங்கப்புள்ளை அபிம்மா, அம்மாகிட்டே வா!” என அவனை அழைத்தாள். காலையிலிருந்து அவன் தாயிடம் பேசவே இல்லை. அவளுமே இன்று ஒருநாளிலே மகனைத் தேடியிருந்தாள். எப்போதும் எதையாவது செய்து கொண்டு கண்பார்வையிலே இருக்கும் மகனை இன்று அருகில் வைத்துக் கொள்ள முடியவில்லை.
“ம்மா...” என அருகே வந்தவனின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டவள், “என் செல்லம் இன்னைக்கு அம்மா சொன்ன மாதிரி சமத்தா இருந்துட்டானே!” என்றாள் தன்னை இயல்பாக்கி. அவனுக்கு முகம் மலர்ந்தது.
“நிஜமாவாம்மா?” அவன் கேட்கவும், “நிஜம்மா... ப்ராமிஸா என் அபிம்மா சமத்தா இருந்தான். அவன் வெரி குட் பாய்!” என்றாள் இரண்டு கன்னத்தையும் கிள்ளி மகனை மடியில் தூக்கி அமர்த்தினாள். அவன் பற்கள் தெரிய சிரித்தான்.
“ஹம்ம்... அபி ஸ்மால் பாயா? இல்லை பிக் பாயா?” என மகன் தலையைக் கோதியவாறே கேட்டாள் இவள்.
“அபி இஸ் பிக் பாய்மா!” என்றான் அவன் கையை உயர்த்திக் காண்பித்து.
“அதானே... அபி ரொம்ப பெரிய பையன். இன்னைக்கு அபி பிரதன்யா அத்தையோட தூங்கப் போவியாம். அப்போதான் எல்லாரும் அபி பிக் பாய்னு நம்புவாங்களாம். அத்தை என்கிட்ட கேட்டாங்க. நான் அபி பிக் பாய்னு சொல்லிட்டேன்!” என்றாள்.
அபி பிரதன்யாவைப் பார்த்தான். முதலில் ஜனனி மற்றும் ஹரியுடன்தான் அவனை தூங்க வைக்கலாம் என்று எண்ணி இருந்தாள். ஆனால் அபி ஜனனி வயிற்றின் மீது காலைப் போட்டு அமுக்கி விடுவான் என யோசித்து பிரதன்யாவிடம் கேட்க, அவள், “அண்ணி, நானே கேட்கலாம்னு நினைச்சேன். அபி என்கூடவே தூங்கட்டும்!” என்றுவிட்டாள் அவள்.
“அண்ணி, அபி சின்ன பையன். என்கூட தூங்க மாட்டான். அம்மா கூட மட்டும்தான் படுப்பான்!” பிரதன்யா சின்னவனை கேலி செய்யும் குரலில் கூறினாள்.
“நோ... அத்தை அபி பெரிய பையன். அம்மா, இன்னைக்கு நான் அத்தையோட தூங்குறேன்!” என்றான் ரோஷத்துடன். ஆதிரை உதட்டில் முறுவல் பிறந்தது.
“என் தங்கம் சமத்து, அத்தையை டிஸ்டர்ப் பண்ண கூடாது. அமைதியா தூங்கணும். போன் கேட்க கூடாது. பாத்ரூம் போகணும்னா, அத்தையை எழுப்பி கூட்டீட்டுப் போகணும்!” மேலும் அவள் ஏதோ சொல்ல வர,
“அண்ணி... போதும், என் அண்ணனுக்கு மேல இருக்கீங்க நீங்க. அதெல்லாம் அவனை நான் பார்த்துப்பேன். அவன் குட் பாய்!” என பிரதன்யா அபியின் தோளில் கையைப் போட்டு தன்னருகே இழுத்தாள். அவன் நெளிந்து கொண்டே பற்கள் தெரிய சிரித்தான்.
“அண்ணா...வா!” ராகினி அபியை அழைக்கவும், அவன் கட்டிலில் ஏறிச் சென்று ராகினி அருகே அமர்ந்தான். அவள் ஹரியின் அலைபேசியை வைத்திருந்தாள். இருவரும் அதில் ஏதோவொரு விளையாட்டை விளையாடினர். ஆதிரை அவர்களை மென் புன்னகையுடன் பார்த்தாள். அபி ஒருநாளிலே அனைவருடனும் நன்கு பொருந்திவிட்டான். அத்தை, சித்தி, ராகி என அவர்கள் அனைவரையும் வெகு சரளமாக அழைக்கப் பழகிவிட்டான்.
பிரதன்யாவும் ஜனனியும் எளிதில் அணுக கூடிய வகையில் இருந்தனர். ஹரியைப் பற்றி அவளுக்கு முன்பே தெரியும். எப்போதுமே அவன் புன்னகை முகத்துடன் கலகலவென்று இருப்பான். தேவாவை எப்படி சமாளிப்பது என்று இவளுக்குத் தெரியும். கோபால் இவளைப் பார்த்ததும் புன்னகைத்தார். அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி, அவரது அணுகுமுறையில் தவறில்லை. ஜனனியைப் போலவே இவளையும் நடத்த நினைக்கிறார் என ஊகித்தாள். பொன்வாணியை மட்டும்தான் இந்த வீட்டில் அவள் சமாளிக்க வேண்டி வரும் என யோசித்தாள்.
“ஜானு, இங்க வா!” என ஹரி அறையை எட்டிப் பார்த்து அழைத்தான். காலையிலிருந்து வேலை செய்ததில் அவன் வெகுவாய் களைத்துப் போயிருந்தான். ஆதிரை அவனைப் பார்த்ததும், புன்னகைத்தான்.
மனைவி அருகே வர, “உன்கிட்ட எக்ஸ்ட்ரா பணம் கொடுத்திருந்தேன்ல,அதை எடுத்துக்குடு. மண்டபத்துல கரண்ட், தண்ணின்னு நிறையா பில்லைப் போட்றாங்க!”” என்றான் அவன் கொஞ்சம் கடுப்புடன். மண்டபம் பதிவு செய்யும் போது கேட்ட பணத்தை விட அது இதுவென இறுதியில் ஒரு தொகையை மண்டப உரிமையாளர் கேட்க, இவனால் ஓரளவிற்கு மேல் பேச முடியவில்லை.
“ஹரி... விடு, கேக்குற பணத்தைக் குடுத்துடு. உங்கம்மாகிட்டே நான் பணம் கொடுத்திருக்கேன். அதை வாங்கிட்டு வா!” என்றார் கோபால்.
“ப்பா... என்கிட்டயே இருக்குப்பா. யூஸ் ஆகுமேன்னு எக்ஸ்ட்ராவா எடுத்து வச்சேன்பா!” என்றவன் மனைவியிடமிருந்த பணத்தை வாங்கிச் சென்று மண்டப உரிமையாளரிடம் கொடுத்துவிட்டு வந்தான்.
“சாப்பிடு ஹரி, மணி பத்தாகப் போகுது!” ஜனனி அவனைக் கடிந்து உணவைப் பரிமாறினாள்.
“இன்னைக்கு நான் நிம்மதியா தூங்குவேன் ஜானு. தேவா லைஃப் செட்டிலாகிடுச்சு!” என்றவனை இவள் சின்ன சிரிப்புடன் பார்த்திருந்தாள். இரண்டாவது குழந்தைக்கு வளைகாப்பு வேண்டாமென இவள் நினைத்திருக்க, ஆனால் ஜனனியின் அப்பா வளைகாப்பு வைக்கலாம் என்று கூறிவிட்டார். தேவாவின் திருமணம் திடீரென ஏற்பாடாகியிருந்தது. ஜனனி தாய், தந்தையிடம் வளைகாப்பை ஒன்பதாம் மாதம் வைத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டாள். தேவாவின் திருமணம்தான் இப்போது அவளுக்கு முக்கியமாகப் பட்டது.
அனைத்தும் கூடி வரும்போது இவளால் தடைபடக் கூடாது என்று எண்ணினாள். ஏனென்றால் இன்னும் ஓரிரு மாதத்தில் தேவாவிற்கு முப்பத்து நான்கு வயதாகப் போகிறது. இரட்டைப் படையில் திருமணம் வைக்க கூடாது அது இதுவென எதாவது பிரச்சனையாகி வந்துவிடுமோ என யோசித்து ஜனனி செயல்பட, அதில் ஹரிக்கு வெகு திருப்தி. மனைவியைப் பற்றி நன்கு தெரியும். இருந்தாலும் இந்த விஷயத்தில் அவன் கூறும் முன்னே ஜனனி எது சரியாய் இருக்குமென செயல்பட்டுவிட்டாள். அதிலே அவன் மனம் நிறைந்து போனது.