- Messages
- 1,194
- Reaction score
- 3,478
- Points
- 113
நெஞ்சம் – 41 
“அக்கா, பாருங்க... இதுக்கும் மேல இந்தக் கேள்வியை என்னால உங்கிட்ட கேட்க கூட முடியாது? அவர்தான் வேணுமா? ஃபைனல் சான்ஸ்?” எனக் கேட்ட தர்ஷினி ஆதிரையின் நெற்றி சுட்டியை சரி செய்துவிட்டாள்.
“ப்ம்ச்... தர்ஷூ... தர்ஷூ!” என்ற ஆதிரைக்கு சிரிப்பு வந்தது.
“நீ நினைக்கிற அளவுக்கு அவர் டெரர் இல்ல!” என்றாள் மென் முறுவலுடன்.
“என்னமோ போங்க!” என்றவள் மதியுடன் சேர்ந்து ஆதிரையை அலங்கரித்தாள்.
நேற்று இரவு தேவாவிடம் பேசிவிட்டு ஆதிரை பெரும் குழப்பத்துடனும் கடுப்புடனும் அமர்ந்திருக்க, தர்ஷினி அவளது தந்தையுடன் வந்திருந்தாள். இரவு ஆதிரை வீட்டிலே தங்கிக் கொள்ள வந்திருப்பதாக அவள் கூறவும், இவள் திகைத்தாலும் அவர்களை உபசரித்தாள்.
தர்ஷியின் தந்தை சில பல நிமிடங்களில் விடை பெற, “இந்த நேரத்துல ஏன் அப்பாவையும் டிஸ்டர்ப் பண்ற தர்ஸூ. மார்னிங் வந்திருக்கலாம் இல்ல?” என ஆதிரை அவளைக் கடிந்தாள்.
“ப்ம்ச்... நீங்க தனியா இருப்பீங்கன்னு தோணுச்சுக்கா. சரின்னு அப்பாகிட்ட பெர்மிஷன் வாங்கிட்டு வந்துட்டேன். நைட் டைம் எங்கேயும் தனியா அனுப்ப மாட்டாரு. அதான் வந்து சேஃப்டியான ப்ளேஸான்னு பார்த்து விட்டுட்டுப் போறாரு கா. அதை விடுங்க, வெட்டிங் சேரி ஜ்வல்ஸ் எல்லாம் காட்டுங்க. நான் பார்க்கணும்!” என ஆதிரையின் தனிமையை மொத்தமாய் விரட்டியிருந்தாள்.
பேசிக் கொண்டிருந்த தர்ஷினி அபினவைப் பார்த்ததும் யாரென கேட்க, “என் பையன்தான் தர்ஷூ!” என்ற ஆதிரையின் பதிலில் அவளிடம் நொடி நேர அதிர்ச்சி. இருந்தாலும் தன்னை சமாளித்துக்கொண்டு சின்னவனை அருகில் அழைத்து அமர்த்தி அவனிடம் பேச்சுக் கொடுத்தாள்.
அபியை ஆதிரையின் அலைபேசியில் வெகு அரிதாக தர்ஷினி கண்டிருக்கிறாள். உறவினர் வீட்டுப் பையனாக இருக்கும் என அவள் எண்ணியிருக்க, ஆதிரையின் மகன் என நினைக்கவில்லை. ஆதிரைக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து அது முறிந்திருக்கிறது போல என தானே எண்ணிக் கொண்டாள். இப்போது அவள் இரண்டாம் திருமணத்தில் நுழையும் நேரம் கடந்த காலத்தை கேட்டு அவளை சங்கபடப்படுத்த விரும்பாது விட்டுவிட்டாள்.
காலையில் நான்கு மணிக்கே பெண்கள் இருவரும் எழுந்துவிட்டனர். ஆதிரை முதலில் குளித்து வர, மதி வந்துவிட்டாள். அவள் மண்ப்பெண்ணுக்கு அலங்காரம் செய்ய, தர்ஷினியும் குளித்து முடித்து, எடுத்து வந்த புடவையை உடுத்தி தன்னை அழகுப்படுத்தியவள், ஆதிரைக்கு உதவினாள்.
அபி எழுந்துவிட்டான். நேற்றே ஆதி அவனுக்கு அறிவுறுத்தி இருந்தாள். அவனே எழுந்து குளித்து உடை மாற்றிக் கொள்ள வேண்டும். நிறைய பேர் கோவிலிலும் மண்டபத்திலும் இருப்பார்கள் என்பதால், சேட்டை செய்ய கூடாது. பசித்தால் ஜனனி சித்தியிடம் கூற வேண்டும். ராகினியுடன் சமத்தாய் அமர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறி அவனை இன்றைய நாளுக்காக தயார்படுத்தி இருந்தாள்.
அவன் எழுந்து குளித்து உடை மாற்றி வர, தர்ஷினி அவனுக்கு தலைவாரி முகப்பூச்சிட்டாள். நெற்றியில் விபூதியை வைத்தவள், “அபி இஸ் க்யூட்!” எனவும், அவன் வெட்கம் கொண்டு தாயைப் பார்த்தான். ஆதிரைக்கு புன்னகை மலர்ந்தது.
“அபி, பசிக்குதா? அம்மா பூஸ்ட் கலக்கித் தரேன்...” என்றவள் எழ, “க்கா... இப்போதான் மேக்கப் போட்டு முடிஞ்சிருக்கு. கல்யாண பொண்ணு மாதிரி நடந்துக்கோங்க. நான் அவனுக்கு பூஸ்ட் போட்டு தரேன்!” தர்ஷினி கடிந்தாள்.
“அதெல்லாம் மேக்கப் கலையாது தர்ஷினி. டூ மினிட்ஸ், நான் மார்னிங் பாலைக் காய்ச்சி வச்சுட்டேன். லைட்டா சூடு பண்ணா போதும்...” என்ற ஆதிரை பேசிக் கொண்டே சமையலறைக்குள் சென்று பாலை சூடு செய்தாள்.
“பூஸ்ட் எங்க கா?” எனக் கேட்டு ஆதிரைக் கைக் காண்பித்த டப்பாவை துழாவி எடுத்து அதை திறந்த தர்ஷினி முகத்தைக் கோணினாள்.
“என்னக்கா பூஸ்ட் இந்தக் கலர்ல இருக்கு?” அவள் சந்தேகமாகக் பார்க்க, “இது ஹோம் மேட் பூஸ்ட் தர்ஷூ...” என ஆதிரை பதிலுரைக்கவும், “ஹக்கும்... சின்ன பையனை ஏமாத்துறீங்களா?” என சிரிப்புடன் மற்றவள் கேட்டாள்.
மகனுக்கு பாலை ஆற்றிக் கொடுத்த ஆதிரை அப்படியே மூன்று பேருக்கும் குளம்பியைத் தயாரித்தாள். மது குளம்பியோடு விடை பெற, மூன்று பேர்தான் எஞ்சினர்.
“அபி, பிஸ்கட் சாப்பிட்றீயா? கடலை மிட்டாய் எடுத்துக்கோ. அங்க போய் எப்போ சாப்பிட டைம் கிடைக்கும்னு தெரியாது. நீ இதை சாப்பிடு. பசிக்காம இருக்கும்!” என அவனை அருகே அமர்த்தி ரொட்டியை உண்ண வைத்த ஆதிரையைப் பார்த்திருந்தாள் தர்ஷினி. அவள் உதட்டில் புன்னகை மலர்ந்தது.
“ஏன்கா ஒருதடவை கூட அபியை நீங்க பர்ம்க்கு கூட்டீட்டே வரலை?” என கேட்டாள்.
மெதுவாய் நிமிர்ந்து அவளைப் பார்த்து புன்னகைத்த ஆதிரை, “தெரியலையே... எனக்குத் தோணவே இல்ல தர்ஷூ. ஹம்ம்... தோணியிருந்தாக் கூட்டீட்டு வந்திருப்பேன்!” அலட்டிக்காது பதிலளித்தாள்.
“ஹம்ம்... அது சரி. இனிமே சர்டடே அவனைக் கூட்டீட்டு வாங்க கா. நமக்கும் பொழுது போகும். எனக்கு அபியை ரொம்ப பிடிச்சிருக்கு!” என அவன் கன்னத்தை நிமிண்டினாள் தர்ஷினி. இரவு இருவரும் சேர்ந்து தொலைவியக்கியால் இயங்கும் ஜே.சி.பியை வைத்து விளையாடி நட்பாகியிருந்தனர்.
“ஹக்கும்... இவனைக் கூட்டீட்டு வந்தா வேலையெல்லாம் பார்க்க முடியாது. அப்புறம் உன் பிலவ்ட் தேவா சார் வந்து நம்பளை கடிச்சு வச்சிடுவாரு. பரவாயில்லையா?” கேலியாய் சிரித்தாள் ஆதிரை.
“அட... இதுக்கப்பறம் நீங்க ஏன் அந்த மனுஷனுக்குப் பயப்பட போறீங்க. அவர்தான் உங்களைப் பார்த்து பயப்படணும். அதுதானே உலக நியதிக்கா. எத்தனை தடவை நம்பளை திட்டியிருப்பாரு. பதிலுக்கு ரிவெஞ்ச் எடுங்க கா!” என்றாள் வில்லி போல. ஆதிரைக்கு சிரிப்பு பொங்கியது.
“அப்போ அவரை ரிவெஞ்ச் எடுக்கத்தான் நான் கல்யாணம் பண்றேனா தர்ஷினி?” என பற்கள் தெரிய புன்னகைத்தாள்.
“ச்சு... அதுக்கும் சேர்த்துதானே கா?” தர்ஷினி அசட்டு சிரிப்பை உதிர்த்தாள். ஹரி ஆதிரைக்கு அழைத்துவிட்டான்.
“அண்ணி, ரெடியாகிட்டீங்களா? இன்னும் பத்து நிமிஷத்துல கார் வந்துடும். ஏழு பேர் அதுல உக்காரலாம். போதுமா? இல்லை இன்னொரு கார் அரேஞ்ச் பண்ணவா அண்ணி?” எனக் கேட்டான் அவன்.
“இல்ல ஹரி, மொத்தமே ஐஞ்சு பேர்தான். சோ, அந்தக் காரே போதும்!” என்றாள் இவள்.
“சரிங்க அண்ணி, வேற எதுவும் வேணும்னா, யோசிக்காம எனக்கு கால் பண்ணுங்க!” என அவன் அழைப்பைத் துண்டித்தான். ஆதிரை ருக்குவிற்கு அழைத்து அவரும் மகேசன் தாத்தாவும் கிளம்பி விட்டார்களா என உறுதி செய்து கொண்டாள். மகிழுந்து வரவும், ஐவரும் அதில் கிளம்பினர்.
“ருக்குமா... இந்தாங்க, பூ வச்சுக்கோங்க. உங்களுக்கும் சேர்த்துதான் வாங்குனேன்!” என ஆதிரை அவரிடம் மல்லிகை பூவை நீட்டினாள்.
“கல்யாண பொண்ணுதான் தலை நிறைய பூ வைக்கணும் டீ. எனக்கென்ன, கிழவி நான் எப்படி வந்தா என்ன?” எனக் கேட்டு ருக்கு பூவை பின்னலில் சொருகினார்.
“கிழவியா இருந்தாலும் என் பொண்டாட்டி அழகுதான். பூ வைச்சா நல்லா இருக்கு ருக்கு!” மகேசன் கூறவும், தர்ஷினி பக்கென சிரித்துவிட்டு முன்புறம் திரும்பி அமர்ந்துவிட்டாள். ருக்கு கணவனை முறைக்க, அவர்களை ஆதிரை முறுவலுடன் பார்த்தாள்.
திருமணமாகி முப்பது வருடங்களைக் கடந்தப் பின்னரும் எப்படி இத்தனை அன்பும் அன்னோன்யமுமாக அவர்கள் இருக்கிறார்கள் என ஆதிரைக்கு ஆச்சர்யம்தான். நிறைய முறை இவர்களைப் பார்த்து இப்படியொரு வாழ்க்கை துணை அமைந்தால் எப்படி இருக்குமென கற்பனை செய்திருக்கிறாள்.
மகிழுந்து புக்கத்துறை கூட்டு சாலையில் இருந்த மதன கோபாலன் கோவிலின் முன்பு சென்று நின்றது. அனைவரும் கீழே இறங்கினர். கோவில் வாயில் வரை கூட்டம் நிரம்பி இருந்தது. ஆட்கள் வருவதும் போவதுமாய் இருந்தனர். இன்றைக்கு முகூர்த்த நாள் என்பதால் மூன்று திருமணங்கள் இந்தக் கோவிலில் நடைபெறவுள்ளது. அதன் பொருட்டே ஜனத்திரள் அதிகம் காணப்பட்டது.
“அபி... அம்மா கையைப் பிடிச்சுக்கோ!” என ஆதிரை அவனிடம் கூற, “அக்கா... அந்த ஹேண்ட் பேக்கை என்கிட்ட கொடுங்க. நீங்க போட்டிருக்க காஸ்ட்யூம்க்கு இது செட்டே ஆகலை. தங்கமா? வைரமா? என்ன வச்சிருக்கீங்க. கையை விட்டு நகர்த்தவே மாட்றீங்க?” என அங்கலாய்த்தாள்.
ஆதிரை மென்முறைப்புடன்
அவளிடம் பையைக் கொடுத்தாள்.
“அவனுக்குப் பசிக்குமேன்னு ஸ்நாக்ஸ் வச்சிருக்கேன் தர்ஷூ!” என்றாள்.
“நீங்கதான் கல்யாண பொண்ணு. இப்போதைக்கு அம்மா போஸ்டிங்க்கு லீவ் கொடுங்க. அபியை நான் பார்த்துக்குறேன். நீங்க ரிலாக்ஸ்டா இருங்க!” என்றாள் அபியின் கையைப் பிடித்தவாறே. இவள் புன்னகையுடன் சரியென தலையை அசைத்தாள்.
ஹரி இவர்களை கண்டுவிட்டு அருகே வந்தான். “வாங்க அண்ணி, வாங்க!” என அனைவரையும் உள்ளே அழைத்துச் சென்றான். சிறிய பந்தல் அமைத்து உறவினர்கள் நாற்காலிகளிட்டு அமர்ந்திருந்தனர். ஆதிரையும் ஜனனி அருகே சென்று அமர்ந்தாள்.
பழச்சாற்றைக் குடித்து முடித்த ஜனனி, “வாங்க கா, உங்களுக்கு ஜூஸ் எதுவும் வாங்கிட்டு வர சொல்லவா?” எனக் கேட்டாள்.
“இல்ல, வரும் போதுதான் காஃபி குடிச்சிட்டு வந்தேன் ஜனனி!” என இவள் புன்னகையுடன் மறுத்தாள். ராகினி அவளுக்கு அருகே அமர்ந்து ஆதிரையையே பார்த்திருக்க, “ராகி குட்டி, பெரியம்மாகிட்டே வாங்க!” என அவளை தன்னருகே அழைத்து கன்னத்தில் முத்தமிட்டாள். ஜனனி ஆதிரையின் உடையையும் அலங்காரத்தையும் பார்த்தாள். அந்த அரக்கு நிறப்புடவை பாந்தமாக அவளுக்குப் பொருந்தி இருந்தது. எளிமையான அலங்காரம்தான். ஆனால் அவள் அணிந்திருந்த நகைகள் அத்தனையும் அழகாய் இருந்தன.
‘மாமா செலக்ஷன் தப்பா போகலை!’ என்றெண்ணி புன்னகைத்தாள். ஆதிரை அந்தப் புடவையின் நிறத்தைப் பார்த்ததும் தேவாதான் தேர்ந்தெடுத்திருக்க கூடுமென யூகித்துவிட்டாள்.
“ஜனனி, மேரேஜ் அன்னிக்கு மட்டும் அபியைப் பார்த்துக்குறீங்களா? ராகினியோட அவன் இருக்கட்டும். என்னால அவனை பார்த்துட்டு இருக்க முடியாது!” என ஆதிரை முன்பே ஜனனியிடம் கேட்டிருந்தாள்.
“இதைக் கேட்கணுமா அக்கா, நான் பார்த்துக்குறேன். நீங்க அவனைப் பத்திக் கவலைப்படாதீங்க!” என்று ஜனனி கூறியிருக்க, ஆதிரை நிம்மதியுற்றாள். ஜனனி வெறும் வாய் வார்த்தையாக உரைக்காது வந்ததுமே அபிக்கு பழச்சாறு, ரொட்டி கொடுத்து அருகிலே அமர்த்திக் கொண்டாள்.
“ஏன்கா... உங்காளை தவிர வீட்ல எல்லாரும் சாஃப்ட் தான் போல. உங்க ஓரகத்தி நல்லவங்களா இருக்காங்களே. தட்ஸ் குட்?” என தர்ஷினி இவளிடம் கிசுகிசுத்தாள். ஆதிரை அவ்வப்போது சுற்றுப்புறத்தை ஆராய்ந்தாள். தேவாவை இன்னும் அவள் பார்க்கவே இல்லை. நேற்று தான் பேசிய பேச்சிற்கு கோபமாய் இருப்பான் என அவளுக்குப் புரிந்தது. அதனாலே அவன் முகத்தைப் பார்க்க வேண்டும் என்றொரு எண்ணம். அவள் கண்கள் அலை பாய்ந்ததை பார்த்த ஹரி அருகில் வந்தான்.
“அண்ணி, அண்ணா கோவில் ஆஃபிஸ் ரூம்ல சைன் பண்ண போய்ருக்கான். ஃபைவ் மினிட்ஸ்ல வந்துடுவான். அடுத்தது நம்பதான் உள்ள போகணும். நமக்கு முன்னாடி ஒரு மேரேஜ் நடக்குது!” என்றான் அவள் பார்வை உணர்ந்து. ஆதிரை தலையை அசைத்தாள்.
ஹரி கூறியது போல தேவா வந்தான். பட்டு வேட்டி சட்டை நெற்றியில் கீற்றாய் சந்தனம் என பார்க்கவே ஆள் முழுதாய் மாறி இருந்தான். எப்போதும் அலுவலக உடையிலே அவனைக் கண்டவர்களுக்கு இது கொஞ்சம் வித்யாசமாய் இருந்தது.
அவன் ஆதிரையின் முகத்தை கூடப் பார்க்கவில்லை. ஹரியிடம் வந்து ஏதோ பேசினான். வந்தவர்களை உபசரித்தான். அவனது நண்பர்கள் நால்வர் சுற்றி நின்றனர். அடுத்ததாய் இவர்களை உள்ளே அழைக்கவும், ஆதிரை எழுந்து கொள்ள, தேவா அப்போதுதான் அவளை நொடி நேரப் பார்வையில் பார்த்துவிட்டு உள்ளே நடந்தான். இவளும் அவனுடன் நடந்தாள்.
“ஏன் வாணி, நீ சொல்றதைப் பார்த்து நான் கூட பொண்ணு அப்படி இப்படி இருக்கும்னு நினைச்சேன். பார்த்தா லட்சணமா இருக்காளே. உம்மவன் தான் அவ பக்கத்துல நின்னா கருத்தவனா தெரிவான் போல?” உறவினர் ஒருவர் கூறவும், பொன்வாணி அவரை முறைத்தார்.
“ப்ம்ச்... பொண்ணு அழகா இருந்து என்ன பிரயோஜனம் வள்ளி? ரெண்டாம்தாரமா கட்டுனாலும் பரவாயில்லை. நல்ல பசையுள்ள பொண்ணா பார்த்திருக்கலாம். சரி, அது கூட இல்லைன்னா பரவாயில்லை. நாலு மனுச மக்க இருக்க இடமா பார்த்திருக்க கூடாது. இப்படி ஒத்தையா இருக்கவளைக் கட்டியிருக்கானே, நாளைக்கு தாய் மாமான் சீர் யாரு செய்வா? கல்யாணத்துக்கு சீர் யார் இவளுக்கு செய்வா? இன்னையோட முடியுற சமாச்சாரமா இது?”
“ஹம்ம், நாளைக்கு சீமந்தம், வளைகாப்பு, புள்ளைக்கு காது குத்துன்னு எம்புட்டு கிடக்கு. இதையெல்லாம் யார் எடுத்து செய்வா வாணி? நீயாவது உன் புள்ளைக்கு எடுத்து சொல்லிருக்க கூடாது?” என மற்றொறு பெண்மணி கேட்கவும், ஏற்கனவே கோபத்தில் இருந்த பொன்வாணிக்கு முகமே மாறிவிட்டது. இப்படி உறவினர்கள் பேச்சை கேட்க கூடாது என்று தானே மகனை மாற்ற முயற்சி செய்தார். ஆனால் அது முடியாமல் போயிற்று. அந்த இயலாமை இன்னுமே கோபமாய் உருமாறிற்று. அவர் விறுவிறுவென கோவிலின் பிராகரத்திற்குள்ளே சென்றார்.
“அண்ணே... கரெக்டா ஐயர் தாலி எடுக்குறதுல இருந்து தேவா அண்ணி கழுத்துல கட்டுற வரை வீடியோல கவர் பண்ணிடுங்க. போட்டோவும் நல்ல க்ளியாரா இருக்கணும். சொதப்பிடாதீங்க. உங்களைத்தான் முன்னாடி நிக்க வைச்சிருக்கேன்!” என்ற ஹரி புகைப்படக்காரரிடம் அறிவுறுத்திவிட்டு திரும்ப, உறவினர்கள் உள்ளே வந்து கொண்டிருந்தனர். இவன் ஜனனியை பாதுகாப்பாக முன்பே உள்ளே அழைத்து வந்துவிட்டான். அவளுடன் ராகினியும், அபியும் இருந்தனர்.
ஆதிரை முன்னே நடந்து வந்தாள். சற்றே கூட்டமாய் இருக்க, யாருமே முன்னே நகரவில்லை. இவள் சற்று தடுமாறி கிடைத்த இடைவெளியில் நகர, தேவா பின்னிருந்து அவள் தோளைப் பிடித்து முன்னே நகர்த்தினான்.
தங்களுக்கு முன்னிருப்பவர்களை வழிவிடக் கூறினான். ஆதிரை திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு கடவுள் சன்னிதானத்திற்குள் காலெடுத்து வைத்தாள்.
முந்தைய திருமணத்திற்கு வந்தவர்கள் வெளியேறவும், கொஞ்சம் மூச்சு விட இடம் கிடைத்து போலிருந்தது. நடு கூடத்தில் மட்டுமே ஒரு மின்விசிறி இருக்க, ஆதிரைக்கு வியர்த்து வழியத் தொடங்கியது. தர்ஷினி அவளுக்கு அருகே வந்து நெற்றியை துடைத்தாள்.
“பொண்ணும் மாப்பிள்ளையும் வந்தாச்சா? மாலையை மாத்திக்கோங்க!” என ஐயர் கூறவும், தேவா பக்கவாட்டில் பார்த்தான். தாய், தந்தை, தமக்கை நின்றிருக்க, எதிர்புறத்தில் ஹரி மனைவி மக்கள் சகிதமாக நின்றிருந்தான். தன் குடும்பத்து உறுப்பினர்கள் அருகில் இருப்பதை உறுதி செய்து செய்தவன், மாலையை வாங்கி ஆதிரையின் கழுத்தில் இட்டான். அவள் இவன் முகத்தைதான் பார்த்திருந்தாள். அவள் கையில் மாலை கொடுக்கப்பட்டதும் கடவுளை ஒரு நொடி வேண்டிவிட்டு அவனுக்கு அணிவித்தாள்.
தேவா அவள் முகத்தைப் பார்த்தானா? இல்லையா என்பது தெரியவில்லை. நொடி நேரப் பார்வைதான். அதற்கு மேலே இவளிடம் கவனத்தை அவன் குவிக்கவில்லை. ஐயர் மந்திரங்களைக் கூற, “சாமியை வேண்டிக்கோ ஆதி. இந்த வாழ்க்கை உனக்கு நல்லா அமையும்!” என அவளுக்கு வலதுபுறம் நின்றிருந்த ருக்கு கூறவும், தலையை அசைத்தாள் ஆதிரை.
“சாமியை கும்பிட்டுட்டு பொண்ணு கழுத்துல முடிச்சை போடுங்க தம்பி!” என ஐயர் கொடுத்த தாலியை வாங்கிய தேவா இப்போதுதான் ஆதிரை முகத்தை முழுதாய்ப் பார்த்தான். ஆதிரையும் அவனைக் காண, “குனி டீ!” என முணுமுணுத்தான்.
அவள் படக்கென குனியவும், இரண்டு முடிச்சை அவன் இட்டு முடித்ததும் பிரதன்யா மூன்றாவது முடிச்சை போட்டாள். சாமி சன்னிதானத்தில் ஆதிரை தேவாவின் திருமதியாகி இருந்தாள்.
அனைவரும் கையிலிருந்த அட்சதையை தூவி வாழ்த்தினர். ஹரிக்கு திருமணம் நல்லவிதமாக நடந்ததில் நிம்மதி படர்ந்தது. இனிமேல் எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று மூச்சை வெளிவிட்டான்.
கோபால் மனம் நிறைந்துப் போய் மகனைப் பார்த்தார். அவனைப் பற்றிய கவலை இந்நொடி அற்றுப் போனது. பொன்வாணி இறுகிப் போய் நின்றிருந்தார்.
“குங்குமத்தை வைங்க...” என தன்னிடம் நீட்டப்பட்ட குங்குமத்தை ஆதிரையின் நெற்றி வகுட்டில் வைத்தவன், குனிந்து மெட்டியையும் அணிவித்தான். சம்பிரதாயங்கள் முடிய, பெற்றவர்களின் காலில் விழுந்தான் தேவா.
“நல்லா இருப்பா... சந்தோஷமா இரு!” என கோபால் ஆசிர்வாதம் செய்ய, “நல்லா இருங்க!” என்றதோடு நிறுத்திக் கொண்டார் பொன்வாணி.
“சரி... சரி. மண்டபத்துல எல்லாரும் வெயிட் பண்றாங்க. பொண்ணு மாப்பிள்ளை கார்ல வாங்கப்பா. மத்தவங்க வேன்ல வாங்க!” உறவுக்கார பெரியவர் கூற, ஆதிரை தேவாவின் கையைப் பிடித்திழுத்தாள். அவன் என்னவென்பதாய் பார்க்க, “ருக்குமா, அப்பா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கணும் தேவா!” என்றாள் சார் என்ற விளிப்பை உடைத்து. அவன் தலையை அசைத்தான்.
“எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க ருக்குமா... அப்பா நீங்களும்!” என ஆதிரையும் தேவாவும் அவர்கள் காலில விழ, “ஆதி... என்ன டீ இது? நல்ல இரு. உன் மனசு போலத்தான் வாழ்க்கை அமைஞ்சு இருக்கு. நல்லா இருப்ப டீ நீ!” என்ற ருக்கு முகம் கொள்ளா புன்னகையுடன் அவளிடம் ஒரு தட்டை நீட்டினார். அதில் மணமக்களுக்கு உடை, தேங்காய், பழம் என இத்யாதிகள் இருந்தன.
“தம்பி... இந்தாங்க... எங்களோட அன்பளிப்பு!” என்ற மகேசன் தேவாவின் விரலில் ஒரு தங்க மோதிரத்தை அணிவித்துவிட, ஆதிரை வியந்து, “ப்பா... என்னப்பா இது?” என்றாள் கண்டிப்புடன்.
“ப்ம்ச்... சும்மா இருடீ நீ. அம்மா, அப்பான்னு சும்மா சொல்றோம்னு நினைச்சீயா நீ?” ருக்கு அதட்டவும், இவளுக்குப் பேச்சு வரவில்லை. அவர்களை அன்பாய் பார்த்தாள். விழிகள் மெல்ல கலங்கின.
“தேங்க்ஸ் அங்கிள்!” தேவா புன்னகையுடன் அதைப் பெற்றுக் கொண்டான். அவன் கைக்கு அது பெரிதாக இருந்தது. பெருவிரலால் அதை தள்ளி சரியாய் பொருத்தினான். பொண்ணும் மாப்பிள்ளையும் ஒரு மகிழுந்தில் ஏறினர்.
அபி தாயையே பார்த்திருந்தான். என்னதான் நேற்று அவள் சொல்லியிருந்தாலும் சிறிது நேரத்திற்கு மேலே யாருடனும் அவனால் இருக்க முடியவில்லை. ஆதிரையைத் தவிர ஒருவரும் அவனுக்குப் பரிட்சயம் இல்லை. அதானலே மனம் தாயைத் தேடிற்று.
ஆதிரையும் மகனைத்தான் பார்த்திருந்தாள். அவன் முகத்தை வைத்தே தன்னை தேடுகிறான் என்று உணர்ந்தாலும் அவனை மட்டும் அருகே அழைத்துக் கொள்ள சங்கடமாய் இருந்தது. அவள் பார்வை உணர்ந்த தேவா, ஹரியை அழைத்து அவனிடம் ஏதோ கூற, மகிழுந்து புறப்படும் முன்னே ராகினியையும் அபியையும் அதே வாகனத்தில் ஏற்றிவிட்டான்.
“தேவாப்பா...” என ராகினி அவன் மடியில் அமர்ந்து கொண்டாள். அபியைக் கண்டதும் அவளுள் மெல்லிய பொறாமை ஊற்றுப் பெருகிற்று. ஆதிரை அபியை இருவருக்கும் இடையில் அமர்த்தினாள். மகிழுந்து புறப்பட்டது.
“தேவாப்பா... இனிமே அபியும் அவங்கம்மாவும் நம்ப வீட்லதான் இருக்கப் போறாங்களா? அம்மா சொன்னா?” என ராகினி கேட்டாள்.
“ஆமா ராகினி... அபி உனக்கு அண்ணன். அவனை நீ அண்ணான்னு கூப்பிட்டு பழகு. அபிம்மா உனக்கு பெரியம்மா டா!” என்றான் அவளிடம் புன்னகைத்து.
“அங்கிள்!” அபி அழைக்கவும், தேவாவின் கவனம் அவனிடம் குவிந்தது.
“அங்கிள், இனிமே நீங்கதான் எனக்கு அப்பாவாம். இத்தனை நாள் காட் என் அப்பாவை என்கிட்ட அனுப்பாம இருந்தாங்களாம். இப்போதான் உங்களை எனக்காக அனுப்பி இருக்கார்னு அம்மா சொன்னாங்க. உண்மையா?” என ஆர்வத்துடன் தாயைப் பார்த்தான். ஆதிரை ஜன்னல்புறம் பார்வையைப் பதித்திருந்தாள். அவளது விரல்கள் மாலையிலிருந்த பூவின் இதழை மெல்ல பிய்த்தன. இவர்கள் பேச்சு காதில் விழுந்தாலும் திரும்பவில்லை.
“ஆமா அபி... காட்தான் என்னை அனுப்பி விட்டாரு. இனிமே அபிக்கு நான்தான் அப்பா!” எனப் புன்னகைத்து அவன் கன்னத்தைக் கிள்ளினான்.
“ஐ... ஜாலி, அப்போ இனிமே நான் உங்களை அப்பான்னு கூப்பிடட்டுமா? இல்லை அங்கிள்னு கூப்பிடட்டுமா அங்கிள்?” எனக் கேட்டான்.
“உன்னோட இஷ்டம் தான் அபி. உனக்கு எப்படி கூப்பிட பிடிச்சிருக்கோ, அப்படியே கூப்பிடு. இனி நீயும் அம்மாவும் நம்ப வீட்டுக்கு வந்துடுவீங்க. அங்க உங்களுக்கு, தாத்தா, பாட்டீ, அத்தை, சித்தி, சித்தப்பா, குட்டி தங்கச்சின்னு எல்லாரும் இருக்கோம். ஜாலியா இருக்கலாம்!” என்றான் அவன் முகத்தருகே குனிந்து.
“செம்ம... அப்போ நம்ப வீக்கெண்ட் எல்லாரும் அவுட்டிங் போகலாமா அங்கிள்? ராகி குட்டியையும் கூட்டீட்டுப் போலாம்!” என்றான் ஆர்வமாய். தேவா அபியுடன் பேசிக் கொண்டே வர, மண்டபம் வந்துவிட்டது.
ஜனனி வந்து சிறுவர்களை அழைத்துக் கொள்ள, மணமக்கள் மேடையேறினர். அதற்கிடையில் தேவா மோதிரத்தை ஹரியின் கையில் கொடுத்து பத்திரப்படுத்தக் கூறினான். கண்டிப்பாக எங்காவது அது கழன்று விழுந்துவிடும். இந்தக் கூட்டத்தில் தேட முடியாது என கழற்றி வைத்தான்.
உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து வாழ்த்து தெரிவித்து பரிசை வழங்கினர். ஆதிரையின் பார்வை அபியை வட்டமிட்டது. அவன் என்ன செய்கிறான் என அவ்வப்போது பார்த்தாள். தர்ஷினியை அழைத்து அபியை உணவுண்ண அழைத்துச் செல்ல பணித்தாள். ஆனால் ஜனனி அதற்கு முன்னே அபிக்கும் ராகினிக்கும் உணவு கொடுத்துவிட்டாள்.
சிறிது நேரத்தில் மணமக்களுக்கும் சாப்பிட்டுவிட்டு வந்தனர். புகைப்படக்காரர் கிடைக்கும் இடைவெளியில் இருவரையும் நிற்க வைத்துப் புகைக்கபடம் எடுத்தார். ருக்குவும் மகேசனும் உண்டு மணமக்களை வாழ்த்திவிட்டு சென்றனர்.
சுபாஷ் கோமதி ஆதிலா என மூவரும் ஒன்றாய் வந்து வாழ்த்தினர். பின்னர் தர்ஷினியோடு நால்வரும் கடைசி இருக்கையில் தஞ்சமடைந்து கதை பேசத் துவங்கினர். கோபாலும் ஹரியும்தான் அனைத்தையும் பார்த்துக் கொண்டனர். பொன்வாணி அகத்தில் இருப்பதை முகத்தில் காட்டவில்லை என்றாலும் சொன்ன சொல் மாறாமல் ஒரு ஓரமாய் அமர்ந்து கொண்டார்.
பிரதன்யாவின் கல்லூரி நண்பர்கள் வரவும், அவர்களை உபசரித்து பார்த்துக் கொள்ள அவள் அகன்றுவிட்டாள். ஆளாளுக்கு ஒவ்வொரு வேலையில் கவனமாகினர்.
ஆதிரைக்கு கால் வலித்தது. அவ்வப்போது பெரியவர்களிடம் காலில் விழுந்து எழுந்ததில் முதுகும் வலித்தது. தாகமாய் இருக்க, யாரிடம் கேட்பது என அவள் தவித்திருக்க, தர்ஷினி வந்து இருவருக்கும் பழச்சாற்றை கொடுத்துவிட்டு, “மிஸஸ் ஹிட்லருக்கு தாகமா இருக்கா?” எனக் கண்ணடித்துவிட்டுப் போனாள். இவள் அவளை முறைத்து வைத்தாள்.
நேர
ம் செல்ல செல்ல உறவினர்கள் வருகை குறையத் தொடங்க, வந்தவர்கள் கலையத் தொடங்கினர். மதிய உணவு முடிந்ததும் மணமக்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தொடரும்...