- Messages
- 1,194
- Reaction score
- 3,478
- Points
- 113
நெஞ்சம் – 40 
மொத்த ஊழியர்களும் ஓரிடத்தில் நிற்கவும், கூட்டமே சலசலத்தது. தர்ஷினி சுபாஷிடம் ஏதோ கதையளந்து கொண்டிருந்தாள்.
ஆதிரையின் தோளில் கையைப் போட்டு அழைத்துச் சென்ற தேவா இயந்திரப் பகுதிக்குள் நுழையும் முன்னே அவளிடமிருந்து தள்ளி நகர்ந்து சென்றான். அவளை வம்பிழுப்பதற்காகத்தான் அப்படி நடந்து கொண்டான்.
மற்றபடி அவனைப் பொறுத்தவரை இங்கு வேலை பார்க்கும் அனைவரும் சமம்தான். அதில் ஆதிரையும் அடக்கம். என்னதான் கணவன் மனைவி என்றாலும் கூட தங்களது தனிப்பட்ட வாழ்க்கையை இங்கே காண்பித்துக் கொள்ள விரும்பவில்லை. அதுவும் இல்லாமல் அவனுக்கு அவனுடைய பிம்பத்தை, மதிப்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டி இருந்தது.
தேவா இத்தனை கெடுபிடியாய் இருக்கவும்தான் வேலைகள் எல்லாம் சரியாய் நடக்கிறது. இவனும் ஹரி போல எளிதாய் அணுகக் கூடிய வகையில் இருந்தால், அவன் பாடுபடுவதைப் போல இவனும் கஷ்டப்பட நேரிடும். இவனுக்கு இரண்டு வார்த்தைக்கு அதிகமாய் பேச பிடிக்காது. எங்கேயும் மரியாதை எதிர்பார்ப்பவன்.
ஆதிரை மெதுவாய் நடந்து வந்தவள், கூட்டத்தோடு சென்று நின்று கொண்டாள். தேவா அவளை ஒருமுறை முறைத்துவிட்டு, “சாரி, உங்களோட ப்ரேக் டைமை நான் டிஸ்டர்ப் பண்ணிட்டேன்!” என்றான் மெல்லிய முறுவலுடன். அனைவரும் இல்லை என்பது போல தலையை அசைத்தனர்.
“உங்க எல்லாரையும் இங்க அசெம்பிள் பண்ணதுக்கு காரணம், என்னோட மேரேஜ்க்கு இன்வைட் பண்ணதான். நெக்ஸ்ட் சண்டே என்னோட மேரேஜ். கண்டிப்பா எல்லாரும் வந்துடுங்க. பங்க்சன் எங்க, எப்போன்னு எல்லா டீடெயில்ஸூம் சுபாஷ் சொல்லுவாரு!” என சுபாஷின் முகத்தைப் பார்த்தான் தேவா. இதைக் கூறும் போது சம்பிரதாயமாக புன்னகைத்தான். ஆதிரை அவனைத்தான் பார்த்திருந்தாள்.
'மேரேஜ் இன்விடேஷனைக் கூட இப்படி ரோபோ மாதிரிதான் வைக்கணுமா?' என அவளுக்குத் தோன்றிற்று.
“ஓகே சார், நான் பார்த்துக்குறேன்!” என தேவா தலையை அசைக்க, இரண்டொரு பத்திரிகைகளை எடுத்து தேவா முன்னிருந்த கூட்டத்திடம் நீட்ட, “கசங்கிராட்ஸ் சார்!” எனப் புன்னகைத்து பெற்றுக் கொண்டனர்.
“அப்புறம் பொண்ணு யாருன்னு கேட்கவே இல்லையே நீங்க எல்லாரும்?” என அவன் கேட்கவும், ஆதிரை அவனை முறைத்தாள். எப்படியும் அவள்தான் மணப்பெண் எனத் தெரியப் போகிறதுதான். இருந்தும் இப்போது அவன் வேண்டுமென்ற அவளை வெறுப்பேற்ற சொல்கிறான் எனப் புரிந்தே இருந்தது.
“மேரேஜ்க்கு வரும்போது பார்ப்போமே சார்! அப்போதானே அவங்களை நாங்க மீட் பண்ண முடியும்?” தர்ஷினி இரண்டெட்டு முன்னே வந்து யோசனையுடன் கேட்டாள்.
“ஹம்ம்... சொல்லுங்க தர்ஷினி, ரொம்ப ஆர்வமா இருக்கீங்க போல. சரி, பொண்ணை இப்பவே மீட் பண்றீங்களா?” எனக் கேட்டான் கேலியாய். அவள் திருதிருவென விழித்து என்ன சொல்கிறான் இவன் எனப் புரியாது பார்த்தாள்.
“பொண்ணு வேற யாரும் இல்ல, உங்களோட லேப் ஹெட் மிஸ் ஆதிரையாழ்தான்!” என்று அவளைப் பார்த்து அருகில் வருமாறு தலையை அசைத்தான். அவள் யாரையும் நிமிர்ந்து பார்க்காது குனிந்த தலையோடு அவனுக்கு அருகே சென்று நின்றாள்.
“மீட் மிஸஸ் ஆதிரையாழ் தேவநந்தன்!” அவள் தோளில் பட்டும்படாமலும் கையைப் போட்டு அணைத்து விடுவித்தான் தேவா. என்னவோ அவன் பெயருடன் தன் பெயர் சேர்ந்து வந்ததில் இவளுக்கு ஏதோ ஒரு சொல்ல முடியாத உணர்வு பிறந்தது.
“அண்ணே... சுபாஷ்ண்ணே! எனக்கு மயக்கம் வர்ற மாதிரி இருக்கு. என் கையைப் புடிச்சுக்கோங்கண்ணே!” தர்ஷினி அதிர்ச்சி தாங்காது சுபாஷ் மீது சாய, “ஐயோ... தர்ஷூ! எனக்கே ரொம்ப ஷாக்கா இருக்கு இது!” என்றான் வியப்பை விழுங்கியபடி. இத்தனை நேரம் அமைதியாய் இருந்தக் கூட்டம் அத்தனையும் இப்போது ஆதிரையை அதிர்ச்சியுடன் பார்க்க, அவள் சங்கடப்பட்டுப் போனாள்.
“ஓகே... டென் மினிட்ஸ் கழிச்சு எல்லாரும் கோ பேக் டு யுவர் வொர்க்!” என்ற தேவா அகல, ஆதிரைக்கு அனைவரையும் எதிர்கொள்ள அவஸ்தையாய் இருக்க, விறுவிறுவென ஆய்வு கூடத்திற்குள் ஓடிவிட்டாள். அவள் சென்ற நிமிடத்திற்கு மூச்சு வாங்க வந்து நின்றாள் தர்ஷினி.
“அக்கா... அக்கா... ப்ளீஸ், இது எல்லாம் கனவுன்னு சொல்லிடுங்க கா. எனக்கு படபடன்னு வருதே! கோமுக்கா அந்த ஃபேனை போடுங்க. நெஞ்சு வலி வர்ற மாதிரி இருக்கே!” என அவள் மேஜை மீது சரிய, ஆதிரையால் கோபம் கூட கொள்ள முடியவில்லை. அவஸ்தையாய் உணர்ந்தவள், “தர்ஷினி, என்ன இது?” என்றாள் அதட்டலாய்.
“என்ன... என்ன ஆதி? அவளை நீ மிரட்டுற... எங்களுக்கு இவ்வளோ பெரிய ஷாக். என் வயசுக்கு என் ஹார்ட் தாங்குமா மா?” கோமதி கேலியாய் பேசவும், “அக்கா... நீங்களுமா?” என்றாள் இவள் மெல்லிய அவஸ்தையுடன்.
“அக்கா... வெட்கப்படுறீங்களா? ஐயோ! என்னைக் கனவுல இருந்து யாராவது எழுப்பி விடுங்களேன். கனவா கூட இப்படியோரு இன்சிடென்ட்ல என் ஆதிக்காவை நான் சிக்க வைக்க மாட்டேன். தண்ணியை தெளிங்க, அண்ணா... சுபாஷ் அண்ணா! இங்க என்ன எக்சிபிஷனா நடக்குது. என் முகத்துல தண்ணியை ஊத்தி கனவை கலைச்சு விடுங்க!” என்றாள் தர்ஷினி பதற்றத்துடன்.
“தர்ஷினி... இதெல்லாம் உண்மைதான். நான் முன்னாடியே உன்கிட்ட சொன்னேன். பட், நீதான் நம்பலை!” ஆதிரை அதட்டலிட்டாள்.
“அதான் கா... அதான். அப்ப நான் நம்பலை. இப்ப என்னால நம்பாம இருக்கவும் முடியலை. ஏன் கா காலைல வீட்ல இருந்து கிளம்பி இங்க வர்ற வரைக்கும் எத்தனையோ பசங்களை க்ராஸ் பண்ணி இருப்பீங்களே. அதுல யாரையாவது பார்த்து லவ் பண்ணி மேரேஜ் பண்ணி இருக்கலாமே...”
“ஏன்? ஏன் இவரை. ஏற்கனவே இங்க வச்சே வண்ண வண்ணமா திட்டுவாரு. ஐஞ்சு வருஷமா அவர் கூட குப்பைக் கொட்டியும் இப்படியொரு டிசிஷனை எடுத்திருக்கீங்க நீங்க. எனக்கெல்லாம் கனவுல கூட அந்த மனுஷன் திட்டுற மாதிரித்தானே கனவு வரும். அவர் கூட நீங்க எப்படி ரொமான்ஸ் பண்ணி கலர் கலர் கனவு கண்டீங்க. எப்போ நடந்தது இது? கூடவேதானே இருந்தோம் நாங்க?” அவளுக்கு மனதே கேட்கவில்லை. என்னவோ ஆதிரையை எதிலிருந்தோ காப்பாற்றுபவள் போல பேசினாள்.
“ஆதி... என்கிட்ட கூட நீ சொல்லலை. நான் மட்டும்தான் என் லவ்வுக்கு ஹெல்ப்னு உன்கிட்ட எல்லாத்தையும் ஓபனா சொல்லிட்டு இருந்திருக்கேன்ல?” சுபாஷ் ஆதங்கத்துடன் கேட்க, தர்ஷினி இப்போது அதிர்ச்சியாய் அவனைப் பார்த்தாள்.
“அண்ணே... யோவ் சுபாஷூ! ஒருநாள்ல ஒரு அதிர்ச்சி மட்டும் கொடுங்கயா. எனக்கு நிஜமாவே நெஞ்சு வலிக்குது!” என்றாள் கடுப்புடன்.
“ப்ம்ச்... என் விஷயத்தை அப்புறம் பார்த்துக்கலாம் தர்ஷூ. முதல்ல நீ ஆதியைப் பாரு!” தர்ஷினியின் கவனத்தை மற்றவளின் புறம் திருப்பினான். சுபாஷை ஆதிரை முறைத்தாள்.
“அக்கா... நீங்க இருக்க கலருக்கு அழகுக்கு எத்தனையோ பேர் ப்ரபோஸ் பண்ணி இருப்பாங்களே. ஏன் கா இப்படி போய் விழுந்தீங்க? சரி, அவர் உங்களை மிரட்டி எதுவும் சம்மதம் வாங்குனாரா? நீங்க வாங்க, வேலையே போனாலும் பரவாயில்லை. சண்டை போட்டு நோ சொல்லிட்டு வரலாம். உங்க வாழ்க்கையைக் காப்பாத்துறதை தவிர எனக்கு வேறென்ன வேலை!” என ஆதிரை கையை தர்ஷினி இழுக்கவும், “என்ன தர்ஷூ நீ!” என அவளது கையை வலுக்கட்டாயமாக பிரித்த ஆதிரை அவளைப் பார்த்து முடியாது என தலையை அசைத்தாள்.
“ஏன்?” இவள் கேட்க, ஆதிரை பதில் சொல்ல தயங்கினாள்.
இத்தனை நேரப் பேச்சுக்களை வேடிக்கை மட்டுமே பாத்த ஆதிலா, “தர்ஷினி, நீங்க ஷாக்காகுறதுல நியாயம். பட், ஒருத்தவங்களோட லைஃப் டிசிஷனை மாத்த நமக்கு உரிமை இல்லை. தே லைக்ட் ஈச் அதர். ஒரு கோ வொர்க்கரா, ப்ரெண்டா மேரேஜ்க்கு போய் விஷ் பண்ணிட்டு வர்றதுதான் முறை. சோ, அவங்களை எம்பாரசிங்கா ஃபீல் பண்ண வைக்காதீங்க. தட்ஸ் நாட் குட் பிஹேவியர்...”
“மேபீ உங்களுக்குத் தெரிஞ்ச தேவா சார் வேறயா இருக்கலாம். அவங்களுக்குத் தெரிஞ்சவர் வேறயா இருக்கலாம். உங்களுக்கு அவர் பாஸ் மட்டும்தான். பட் அவங்களுக்கு ப்யூச்சர் ஹஸ்பண்ட். ஆதிக்கா எதையும் யோசிக்காம இவ்வளோ பெரிய முடிவை எடுத்திருக்க மாட்டாங்க. சோ, ரெஸ்பெக்ட் ஹெர் டிசிஷன்!” என்றாள் அவளுக்குப் புரியும் நோக்கில்.
“என்னவோ... போங்கய்யா!” சிறு பிள்ளை போல தர்ஷினி முறுக்கிக் கொண்டு தனியே சென்று அமர, ஆதிரை உதட்டில் புன்னகை மலர்ந்தது. ஆதிலாவை நன்றியுடன் பார்த்தாள். ஆதிலா பேசவும், சுபாஷ் அவளை ஆச்சர்யமாய்ப் பார்த்தான்.
உண்மையில் அவள் சொல்வது போல இவர்களுக்கான தேவா முற்றிலும் வேறானவன். ஆனால், அவளுக்கான தேவாவின் பரிணாமம் வேறு. தன்முனைப்பு கோபம், கடுப்பு என அனைத்தையும் தூக்கியெறிந்து அவளிடம் மண்டியிட துடிப்பவனின் மற்றொரு முகம் இவர்களுக்கு எல்லாம் தெரிய வாய்ப்பே இல்லை. அவளுக்கும் தங்களது தனிப்பட்ட விஷயத்தை பொதுவில் பகிர விருப்பமில்லை. தேவாவின் மீதான மதிப்பு எங்கேயும் குறைவதில் உடன்பாடற்று, வாயை இறுகப் பூட்டிக் கொண்டாள். அன்றைக்கு வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் போது கூட தர்ஷினி புலம்பிவிட்டே சென்றாள்.
அடுத்தடுத்து நாட்கள் கடகடவென ஓடின. தினமும் இரண்டு முறையாவது தர்ஷினி இவளிடம் வந்து இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய சொல்லி அறிவுறுத்த, ஆதிரை அவளை அதட்டுவாள். ஆனாலும் அவளது வாயை மூட முடியவில்லை.
ஆதிரை கடந்து சென்ற ஞாயிறுதான் அவளிடமிருந்த பத்து பத்திரிகைகளை யார் யாருக்கு கொடுக்க வேண்டும் என்று யோசித்து முறையாய் சென்று அழைத்தாள். ருக்குவிற்கும் மகேசன் தாத்தாவிற்கும்தான் முதல் பத்திரிக்கையைக் கொடுத்தாள்.
ருக்குவிற்கு அதிர்ச்சிதான். அவர் என்ன ஏதென விசாரிக்க, தன்னுடைய கணவனிடமிருந்து சில வருடங்களுக்கு முன்பே விவாகரத்து பெற்று விட்டதாகவும், அவன் வேறு திருமணம் செய்து குழந்தையோடு வாழ்வதாகவும் கூறினாள்.
“சே... என்ன மனுஷனோ அவன். அவனெல்லாம் நல்லா இருப்பானா?” என அவர் புலம்ப, “ஐயோ... ருக்குமா. அப்படிலாம் சொல்லாதீங்க!” என இவள் பதறித் தடுத்தாள். என்ன இருந்தாலும் அப்புவிற்கு அவர் இப்படி சாபம் கொடுப்பதில் அவளுக்கு விருப்பம் இல்லை. அவளாகத்தானே அந்த வாழ்க்கையை சரியாய் அமைத்துக் கொள்ளவில்லை.
“விட்டுட்டுப் போனவன் நல்லா இருக்கணும்னு நினைக்கிற உன் நல்ல மனசு அவனுக்குப் புரியாம போச்சே ஆதி. சரி, நீ எதுக்கும் கவலைப்படாதே. உன்னோட முடிவு ரொம்ப சரி. காலம் முழுக்க குழந்தையோட எப்படி டீ தனியா இருப்ப. இரண்டாவது கல்யாணம் எல்லாம் இப்போ ரொம்ப சாதாரணமாகிடுச்சு!” என அவர் இவளுக்கு ஆதரவாகப் பேச, புன்னகைத்தாள். தாய் தந்தை ஸ்தானத்தில் அவர்கள்தான் நிற்க வேண்டும் என்று இவள் சங்கடத்தோடு கேட்டாள். வேறு யாரும் இங்கே அவளுக்கு உறவினர்கள் இல்லை.
“இதென்ன ஆதிரை கேள்வி. நானும் அவளும்தான் உனக்குப் பெத்தவங்க இடத்துல நிற்போம்!” என மகேசன் தாத்தா கூறவும், இவள் மனதரா நன்றியுரைத்தாள்.
அந்த தெருவில் நன்கு பழகிய நான்கைந்து பேரை அழைத்தாள். அதில் ஒரு பெண் அலங்கார நிபுணராக இருக்க, “உங்க கல்யாணத்துக்கு நான்தான் கா மேக்கப் போடுவேன். வேற யாரையும் புக் பண்ணிடாதீங்க!” என்றாள் ஆர்வமாய்.
“இல்ல மது, ப்யூட்டிஷியன் எல்லாம் நான் யோசிக்கவே இல்ல!” இவள் சங்கடத்துடன் மறுத்தாள்.
“ப்ம்ச்...என்னக்கா நீங்க? ரொம்ப யோசிக்காதீங்க. இது உங்க மேரேஜ். சோ, நான் தான் மேக்கப் போடுவேன். காசைப் பத்தி கவலைப்படாதீங்க. கம்மியான பேக்கேஜ்ல பண்ணிக்கலாம். நீங்க குடுக்கறதைக் குடுங்க!” என அப்பெண் கூறவும், இவளும் சரியென்றுவிட்டாள்.
தனியாய் கிளம்பிவிடுவாள்
தான். இருந்தும் உடன் இந்தப் பெண் இருந்தால் நன்றாய் இருக்குமென மனம் கூற, ஒப்புக் கொண்டாள். அவளது பள்ளித் தோழி சுவாதிக்கு மட்டும் அலைபேசியில் அழைத்து விவரத்தைப் பகிர்ந்தாள். இவளுக்கென்று இருக்கும் நெருங்கிய தோழி அவள் மட்டும்தான்.
ஆதிரை சுவாதியிடம் கூட எல்லையோடுதான் பழகினாள். ஆனால் அவளுக்கு இவளை நிரம்ப பிடிக்கும். அதனாலே ஆதி ஆதி என பள்ளியில் இவளுடனே சுற்றுவாள். கல்லூரியில் கூட இருவரும் வேதியியல் பிரிவைத் தேர்ந்தெடுத்து படித்தனர். சுவாதிக்கு ஏழெட்டு வருடங்களுக்கு முன்பே திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தையோடு ரிஷிவந்தியத்தில் வசிக்கிறாள். ஆதிரையின் சொந்த ஊர் கூட கள்ளக்குறிச்சி மாவட்டம்தான்.